Thursday, September 29, 2005

76. ஒரு மதுர சேதி...




எல்லோருக்கும் மதுர எப்படியோ, எங்க வைகை நதின்னாலே ஒரு இளக்காரம். அதில் தண்ணியே ஓடாது என்கிற மாதிரி ஒரு நினப்பு. ஆனா கடந்த நாலஞ்சு நாளா வெள்ளம் எப்படி போகுது தெரியுமா? பாக்கிறதுக்கே எப்படி இருக்குது தெரியுமா?

எவ்வளவு தண்ணி போகுதுன்னு கேக்றீங்களா? நல்ல வெள்ளம். அநேகமா ஆளு உள்ள இறங்கினா கழுத்து இல்ல..இல்ல... கண் புருவம் மறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.


ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...உள்ளே இறங்கி தலைகீழா நிக்கணும்; அவ்வளவுதான்!!

11 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
rv said...

என்ன தருமி,
இதுக்கே வெள்ளம் அப்டி இப்டின்னு பில்டப் கொடுத்திட்டீங்க.. அப்ப, காவிரிக்காரங்க நாங்க என்ன சொல்லணும்?

ஆமா, உங்க ஊர்ல தான் சிம்மக்கல் இருக்குதே.. முன்னாடி செஞ்ச மாதிரி அத திசை மாத்தி வெச்சு வருண பகவான எரிச்சல் மூட்ட டரை பண்ணலாமே! :)

Unknown said...

உள்ள (சுத்தியும் தான்) இருக்கிற குப்பை., கூளத்தையும் படத்துல காட்டிட்டு., தலைகீழா நிக்கணுமா?

தருமி said...

அவ்வை,
சரியா சொன்ன'ப்பா!

ராமனாதன்,
"காவிரிக்காரங்க நாங்க என்ன சொல்லணும்"--அது வைகைக்காரங்களுக்குத் தெரியாது; நீங்க எதுக்கும் பக்கத்து கர்நாடகா ஆளுககிட்ட கேளுங்க!

அப்டிப்போடு, 'ஆழம்' பாக்கணும்னா அப்டி இப்டிதான்..!

erode soms said...

தருமி சார் வணக்கம்..
ம்மன்னிக்கனும்
2 பின்னூட்டமும் ஒன்னா
கொடுத்ததுக்கு..

1. மன்மதன் கரும்பும்
மாம்பழ விருந்தும்
சுவைத்தது அனுபவம்
அனுபவம் வாழ்க்கை
வாழ்வினில் எச்சம்
திருப்தியே மிச்சம்
2.கவலையே படாதீங்க
அடுத்த நூத்தாண்டுல
கங்கைவந்தா எல்லா
சரியாபூடும்.

Ganesh Gopalasubramanian said...

ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே...
எப்படியோ தலை நனைஞ்சா சரி

தருமி said...

சித்தன்,
"அடுத்த நூத்தாண்டுல
கங்கைவந்தா // --அப்ப அதுவும் எங்க வைகை மாதிரிதான் இருக்கும்!!

கணேசு,
என்ன'ய்யா ரொம்ப நாளா ஆளக்காணோம்?
"ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே"சும்மாவா, வைகையாத்தில தல நனையணும்னா..?
ஒரு உதவி வேணும், கணேசு. தனி மடல் அனுப்பறேன், சரியா?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//ஆமா, உங்க ஊர்ல தான் சிம்மக்கல் இருக்குதே.. முன்னாடி செஞ்ச மாதிரி அத திசை மாத்தி வெச்சு வருண பகவான எரிச்சல் மூட்ட டரை பண்ணலாமே! :) //

இதென்ன கதை? ஏன் தருமி அப்பிடியெல்லாம் செய்தீங்க? ;O)

Anonymous said...

"இதென்ன கதை? "
ஷ்ரேயா,
எங்க ஊர்ல வைகை ஆத்தை ஒட்டியிருக்கிற பழைய கல்பாலத்தின் -causeway - முகப்பில ஒரு சிங்க சிலை ஆத்தப்பாத்துக்கிட்டு - வடக்கை நோக்கி- இருக்கும். அத மட்டும் தெக்குப் பாத்து, அதாவது எங்க ஊரைப்பாத்து திருப்பி வச்சீங்கன்னு வைங்க...அம்புடுதன். ஆத்தில வெள்ளம் வந்து, ஊரே நாசமாயிடுமில்லா...

Anonymous said...

yenna kathaiye maaruthu! yaanaiya singama?

யாத்ரீகன் said...

என்னங்க தருமி... என்னதான் வைகைல வெள்ளம்னாலும்.. நாமலே இப்படி தற்பெருமையா.. சொல்லலாமா.... ;-)

Post a Comment