Thursday, September 29, 2005

76. ஒரு மதுர சேதி...




எல்லோருக்கும் மதுர எப்படியோ, எங்க வைகை நதின்னாலே ஒரு இளக்காரம். அதில் தண்ணியே ஓடாது என்கிற மாதிரி ஒரு நினப்பு. ஆனா கடந்த நாலஞ்சு நாளா வெள்ளம் எப்படி போகுது தெரியுமா? பாக்கிறதுக்கே எப்படி இருக்குது தெரியுமா?

எவ்வளவு தண்ணி போகுதுன்னு கேக்றீங்களா? நல்ல வெள்ளம். அநேகமா ஆளு உள்ள இறங்கினா கழுத்து இல்ல..இல்ல... கண் புருவம் மறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.


ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...உள்ளே இறங்கி தலைகீழா நிக்கணும்; அவ்வளவுதான்!!

75. கா.நூ.தா.நி. கவிதை...5

சித்தாளாக இருந்த போது
துறைத் தலைவரிடம் எடுத்ததெற்கெல்லாம்
'வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்தில் எழுதியது...




முன்னால் வந்தால் முட்டி
பின்னால் போனால் உதைத்து
அருகில் வந்தால் குரைத்து
செக்குக்குள் போட்டு ஆட்டாதீரும், செட்டியாரே*!


* just rhyme-க்காக போட்ட வார்த்தை. உண்மைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை

Monday, September 26, 2005

74. THIS IS TOO MUCH.!

Let me first tell that I am a cricket-hater. Still..........

அதுக்காக நான் ஒண்ணும் யார்கூடயும் போய் சண்டையெல்லாம் போடுறதில்ல. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். என்ன, காலையில தினசரிகளைப் பார்க்கும்போது, சன் டி.வி. செய்தி பார்க்கும்போது எரிச்சல் வரும். இப்போ அது கூட இல்லை. ஏன்னா, இந்து செய்தித் தாளில் கிரிக்கெட் செய்தி எங்கேயிருக்கோ அத திரும்பிக்கூட பாக்காம போய்க்கிட்ட இருக்கிற மாதிரி மனச வளத்துகிட்டேன்; சன் டி.வி,யில் அந்தப் பகுதி வந்ததும் எழுந்து போய்டுவேன். எதுக்கு டென்ஷன்; பாத்தா கடுப்பாகும். என்ன, தெருவில அசிங்கம் கிடந்தா ஒதுங்கிப் போறதில்லையா; அது மாதிரி.

ஏம்பா, இப்படி கிரிக்கெட்..கிரிக்கெட்டுன்னு அலைறீங்க அப்டீன்னு ரொம்ப நாளைக்கு முந்தி நண்பன் ஒருவனிடம் கேட்டேன்; Oh! What a game! It is filled so much with uncertainities; can you ever say what would happen in the next ball?-ன்னு கேட்டான். அதுக்கு, நான் கூட சின்னப்பிள்ளையில் கிராமத்தில் விளையாண்ட தாயக்கட்டத்தில கூட செம uncertainity இருக்குமே, எப்ப தாயம் விழுகும், யார் காய்க்கு எப்ப வெட்டு விழும்னு தெரியாம ஒரே டென்ஷனா இருக்குமே என்றேன். அதுக்கு அவன் பாத்த பார்வையே சரியாயில்லை. இன்னொரு ஒற்றுமையும் தாய விளையாட்டோடு உண்டு. வியர்க்க விறுவிறுக்க விளையாடவேண்டாம். மற்ற field games பாத்திருக்கீங்களா? உதாரணமா, கால்பந்து விளையாடும்போது அந்த அம்பயர்கூட சட்டை, கால்சட்டை எல்லாம் தொப்பு தொப்புன்னு நனஞ்சி இருப்பார். ஆனா, இங்க நாள் முழுவதும், இல்ல வாரக்கணக்கில கூட விளையாடுவாங்க..அக்குள்ல கூட வியர்வையின் அடையாளம் தெரியாது. அஞ்சு நாள் மாங்கு மாங்குன்னு விளையாடுவாங்க..ஆனா முதல் நாளே அல்லது இரண்டாம் நாளே சொல்லிடுவாங்க இது டிரா ஆகும்னு. கேட்டா 'nail biting finish'!

சரி, அது உங்க விளையாட்டு; எனக்குப் பிடிக்கலைன்னா நான் ஒதுங்கிப் போறதுதான் மரியாதை; அத குத்தம் குறை சொல்லக்கூடாதுதான். ஏன்னா, tastes differ, இல்லீங்களா? பிறகு ஏன் இப்படி ஒரேடியா 'இது'ன்ற அப்டீங்கிறிங்களா?

கடந்த ஒரு வாரத்து The Hindu பாத்தா அப்படி கேக்க மாட்டீங்க. இந்த நாட்கள்ல பூராவும் முதல் பக்கத்து செய்திகளில் கண்டிப்பா கிரிக்கெட் செய்தி உண்டு; ஒண்ணு B.C.C.I. ELECTION சேதிகள்; இல்ல, சாப்பல்-கங்குலி தகராறு. வயத்தெரிச்சல் என்னன்னா, ஏதோ யுத்தச் செய்திகள் மாதிரி பாவர் படம் எல்லாம் போட்டு, அவர் 'மதியாலோசனை' பற்றி எழுதிய அன்று, சானியாவின் முதல் சுற்று வெற்றி முதல்பக்க மூலையில் சிறிதாக (அதாவது போட்டார்களே!)வந்தது. அப்படி என்னப்பா வந்திச்சு, ஏதோ வெளியூர்ல போய் விளையாடினாங்க, ஜெயிச்சாங்க தோத்தாங்க - சரி, நியூஸ் போடுறீங்க; போட்டுத் தொலைங்க..அவங்க குடுமிபிடி சண்டைக்குமா இந்த முக்கியத்துவம்? அதான் கடைசியில விளையாட்டுக்களுக்குன்னு இடம் விட்டுருக்கே; அங்கேயாவது போட்டுத் தொலைக்கக்கூடாதா?

சன் டி.வி. கேட்க வேணாம்.
'மற்ற விளையாட்டெல்லாம் விளையாட்டல்ல; கிரிக்கெட் விளையாட்டே விளையாட்டு'

கிரிக்கெட் விளையாடுபவரே விளையாடுபவர்; மற்றெல்லார்
அவரடி போற்றுவார் காண்' - என்ற தத்துவத்தில் கரைகண்டு, மற்ற விளையாட்டுச் செய்திகள் கூறுவது பாவம் என்றுள்ளனர். 'விளையாட்டுச் செய்திகள்' என்ற பெயரையாவது 'கிரிக் கெட்(ட) செய்திகள்' என்றாவது மாற்றலாம்.

இதல்லாம் போகுது. ஒலிம்பிக்ஸில் நம் வீரர்கள் வெறும் கையோடு (இம்முறை ரத்தோருக்கு நன்றி!) வரும் ஒவ்வொரு முறையும்,'கிரிக்கெட்டுக்கு மீடியாக்களில் கொடுக்கப்படும் அதிதீவிர இடமே மற்ற விளையாட்டுக்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது; அதனால்தான் இந்தப் பின்னடைவு' என்று பிலாக்கணம் பாடுவது இதே மீடியாக்கள்தான் என்பதே irony!

என்ன சொல்லுங்கள், எவ்வளவு சொல்லுங்கள், நல்லதனமாகச் சொல்லுங்கள், லாஜிக்கோடு எடுத்துச் சொல்லுங்கள் ....ஹுஹும்... பப்பு வேகாது; யார் சொல்லி யார் கேட்பது...?

Thursday, September 22, 2005

73. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை..4

ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றைக் கனவில் காண்கிறார். பின்பு, "நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?", என்று கேட்கிறார்.

எனக்கே என்னைப் பற்றிய ஆச்சரியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மேலே சொன்னது ஒரு பெரிய zen தத்துவ ஞானி. ஆனால் நான் எனது 8-12 வயதுகளில் இதைப்போன்று யோசித்திருக்கிறேனே; அது எப்படி? காலையில 5 மணிக்கே எழுப்பி கோயிலுக்கு விரட்டி விடுவார்கள். 'பூசை' பாத்துட்டு, அதன் பிறகு அங்கே பக்கத்திலேயே சாமியார்கள் நடத்தும் பால் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிட்டு வரணும். அப்படி காலங் கார்த்தால தனியா அந்த அரை இருட்டில ஒண்ணு எதையாவது எத்திக்கிட்டே நடந்து போகணும்; இல்லாட்டி எதையாவது நினச்சுகிட்டு - சில பேரு அதை 'கொசுவத்திச் சுருளு'ம்பாங்க; நம்ம parlance-ல 'குதிர ஓட்டுறது'ன்னு பேரு; ஏன்னா, அந்தக் கால கதையில எல்லாம் 'அவன் மனம் என்னும் குதிரையில் ஏறி...' அப்டின்னுதான எழுதுவாங்க - நடந்து போகணும். இது Frost கவிதையில வர்ர மாதிரி..

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. - before I sleep அப்டிங்கிறதுக்குப் பதிலா, before i go home அப்டின்னு வச்சுக்க வேண்டியதுதான். அப்போ, நம்ம 'குதிர' அதுபாட்டுக்கு வாயு வேகத்தில, மனோ வேகத்தில பாஞ்சு பாஞ்சு போகும்.

அப்போ, அடிக்கடி வர்ர ஞாபகம் என்னன்னா, ' இப்போ இருக்கிற வாழ்க்கை, நடக்கிற நடப்புகள் எல்லாமே ஒரு கனவுதான்; முழிச்சி எழுந்திரிச்சா அம்மாவை நிஜமாவே பார்க்க முடியும்; அதுவரை கொஞ்சம் adjust பண்ணித்தான் ஆகணும்; அதுதான் உண்மையான வாழ்க்கையா இருக்கும். ' அப்டின்னு அடிக்கடி நினைப்பேன்.


All that we see or seem
Is but a dream within a dream. .....................அப்டீங்கிற Alan Poe-வின் கவிதையும் நினைவுக்கு வருகிறது.


zen master நினச்சதுக்கும், நான் நினச்சதுக்கும் என்ன பெரிய வேறுபாடு சொல்லுங்க.

ஆனா, பாருங்க இப்ப என்னய. எப்படியிருந்த நான் . . . இப்படி ஆயிட்டேன்...

இதுக்கும், கீழே வர்ர கவிதைக்கும் என்ன தொடர்புன்னு கேக்காதீங்க; சரியா...?



கரும்பெடுத்து ஆலையிட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

கனியெடுத்துப் பிழிந்திட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

இப்பிறவியெடுத்து
வாழ்ந்து களித்தேன்;
வாழ்ந்து கழித்தேன்.

என்னதான் மிஞ்சியது ?


no...no...கை தட்றதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்ல...!

Wednesday, September 21, 2005

72. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...3

அடி ராக்கம்மா!

இல்லாதவைகள்
இருந்தவைகளாக ஆனபோது
இருந்தவைகள் இனித்தன.

இருந்தவைகள்
இல்லாதனவாக ஆனபோது
இருந்தவைகள் எரிக்கின்றன.






பி.கு: நிச்சயமாக இம்முறை பதவுரை, பொழிப்புரை தருவதாயில்லை.

Monday, September 19, 2005

71. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...2

அடி ராக்கம்மா!

என்ன ஆரம்பம் இது என்று யோசிக்கிறீர்களா? 'கண்ணம்மா' என்ற பெயர் பிடிக்கும். ஆனால் அந்த 'முண்டாசுக்கவிஞன்' எனக்கு முன்பே பிறந்த ஒரே காரணத்தால் அதை லவட்டிக்கொண்டு போய்விட்டான். என்ன செய்யலாமென யோசிச்சுக்கொண்டிருந்த போது ' பட்டிக்காடா பட்டணமா?'ன்னு ஒரு படம் வந்தது - என்னடி ராக்கம்மா என்றொரு பாட்டோடு. இதில் இன்னொரு விதயம் சொல்லணுமே! சிவாஜி கணேசனுக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா? படம்; அவர் மகன் பிரபுவுக்கோ 'சின்னத்தம்பி'ன்னு ஒண்ணு. இந்த இரண்டு படமும் ஏன் இப்படி பிச்சுக்கிட்டு ஓடிச்சின்னு இன்னைக்கு வரை யாருக்கும் பதில் தெரியாது.

எந்த சிறப்பம்சமும் இல்லாமல் - வழக்கமா சிவாஜிக்கின்னாவது இரண்டு மூன்று சீன்கள் இருக்கும் நடிக்கிறதுக்காகவே' அப்படியும் ஏதும் இல்லாமல் - காரணம் தெரியாமலே ஓடிய படம். அதைப்போலவே இந்த 'சின்னத்தம்பி'யும். கதவிடுக்கில மாட்டின எலி கத்துமே அதுமாதிரி பாடுமே ஒரு பொண்ணு, அதாங்க, ஸ்வர்ணலதா- ஆஹா, கருத்தம்மா பாட்டு கேட்டதில்லையான்னு சண்டைக்கு வராதீங்க, ஏதோ அது மாதிரி ஒண்ணு இரண்டு தேரும்; இல்லைன்னு சொல்லலை - அந்தப் பொண்ணு பாடின பாட்டு 'போவோமா?..' அதுவும், 'தூளியிலே..' பாட்டும் தேறும். வேற என்ன இருந்திச்சு அந்தப் படத்தில. வேணும்னா இன்னொண்ணு சொல்லலாம்; குஷ்பூ கடைசி சீன்ல சாமான் செட்டு எல்லாம் போட்டு உடைச்சு ரகளை பண்ணுமே, அப்போ காமிக்கிற அந்த வீட்டுத் தரை ரொம்ப நல்லா இருக்கும் பள பளன்னு. அதென்னமோ ஒரு ராசிங்க இந்த பி. வாசுவுக்கு. அவரு குப்பை நிறைய நல்லா ஓடிருக்கு; நான் ஒண்ணும் 'சந்திரமுகி' பற்றிச் சொல்லலை. பாருங்களேன்; சந்தான பாரதிகூட சேர்ந்து 'பன்னீர்ப் புஷ்பங்கள்'ன்னு ஒரு படம் -நல்ல matured movie ' வந்திச்சு. இரண்டு பேரும் பிரிஞ்சாங்க. அவரு பாவம் அவுட்டு; இவருக்கு ஒரே வெற்றிக் குப்பைதான்.

சரி..சரி... இப்ப என்ன சொல்லவந்தேன். ஆங்...என்னடி ராக்கம்மா பத்தியில்ல. ஆமாங்க...அப்பல்லாம் நான் "கவிதை" எழுதினப்போ (அதையெல்லாம் 'வாக்கியங்களை உடைச்சுப் போட்டுட்டா கவிதையான்னு' ஒருத்தங்க பின்னூட்டத்தில் பின்னிர்ராங்க..என்ன பண்றது. இப்படிதான் பெரிய கவிஞர்களை அவங்க life time-ல் பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை..போனாப் போகட்டும், விட்டிருவோம் அவங்களை - பொறாமையில் பேசுறாங்கன்னு!) பட். பட். படத்திற்குப் பிறகு ராக்கம்மாதன் நம்ம standard கதாநாயகி..இல்ல..இல்ல..கவிதாநாயகி. ஆச்சா, புரிஞ்சு போச்சுங்களா. இனிமே கவிதைக்கு வருவோமா?



அடியே ராக்கம்மா!

நம் கண்களுக்கு
மட்டுமே தெரியும்
வண்ணங்களில்
நான் வரைந்த சித்திரங்கள்
இன்று
உன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன ?

Saturday, September 17, 2005

70. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...

எல்லாரும் கவிதை எழுதுறீங்க; நாங்களும் அந்தக் காலத்தில் எழுதியிருக்க மாட்டோமா; பழைய குப்பையைக் கிளறும்போது அது தற்செயலாகக் கையில் சிக்காதா; தொட்டால் ஒடியறது மாதிரி இருந்ததில் உள்ள அந்தக் கவிதைக்கு வயசு 25-30 வயசுன்னா, அப்போ அந்தக் கவிதை கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கிற கவிதைதானே ?

அரங்கேற்றத்திற்கு நம்ம ஏரியா (அதாங்க, மீனாட்சி கோவில் மண்டபம்) பக்கத்தில இருக்கிற பொற்றாமரைக் குளம் பக்கம் போகலாமாவென நினச்சேன்...சரி, அங்க தண்ணில்லாம் அவ்வளவு நல்லா இல்ல...ஒரே பாசி. அதனால, நம்ம தமிழ்மணத்திற்குப் போய்விடுவோமின்னு வந்திட்டேன். ஏதோ..பாத்து...



ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.

ஞானிக்கு
இது கண்டு
மனமெல்லாம் வேதனை.
வேதனையில் வதங்கி
உள்ளம் உருகி
ஊசிமேல் ஒற்றைக்கால் தவமிருந்து
கடவுளைக் கண்முன் கொணர்ந்த ஞானி
மனமுருகிக் கேட்டார் கடவுளிடம்:
மனித வாழ்விலிருந்து போலித்தனங்கள்
மறைவதெப்போ?

வந்த இறைவன்
பதில் சொல்லாது
சிரித்து நழுவினான்.

காடுவிட்டு நாடு ஏகிய ஞானி
தண்டோரா போட்டுச் சொன்னான்:
கடவுளைக் கண்டேன்;
கேட்டதெல்லாம் பெற்றேன்;
சித்தியும் அடைந்தேன்;
முக்திக்கு அச்சாரமும் பெற்றேன், என்று.

ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.


யார் கண்டது; அடுத்த பதிவுகளில் ரொமாண்டிக் கவிதைகள் கூட வரலாம்!

69. மதுரயே குலிங்கிடிச்சில்ல...




ஒரு பெரிய மாநாடே நடந்து முடிஞ்சிருக்கு; ஒரு 'would-be-கொ.ப.செ.' அதப்பத்தி எழுதலாட்டா, அது எப்படி நல்லாவா இருக்கும். அது என்ன..'would-be-கொ.ப.செ.' அப்டீங்கறீங்களா? அது என்னென்னன்னா..அன்னைக்கு மச்சான் வந்து சொல்லிட்டு போனார்ல.... அதுக்குப் பிறகு, மறுபடி ஒரு கமிட்டி மீட்டிங் போட்டோம்; நானும் இருந்தேன்ல..அப்போ, நாந்தான் சும்மா இல்லாமா, கொ.ப.செ. எல்லாம் சரி; ஆனா எந்தக் கொள்கையைப் பரப்புறது'ன்னு ஒரு கேள்வியை எக்குத்தப்பா கேட்டுட்டேன்; உடனே எல்லாருமா பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டோம்ல. அது என்னென்னனா, முதல்ல கொள்கைகளை முடிவு பண்ணினதும் அண்ணனை - அதாங்க, நாந்தான் அந்த அண்ணன் - அ.உ.கொ.ப.செ.-வா போட்டுடுவோம்னு நாங்க எல்லாருமா முடிவு பண்ணிட்டோம்.


இருந்தாலும் இப்பவே வேலைய ஆரம்பிச்சா நல்லது இல்லையா..அதுதான் இந்தப் படங்கள் எல்லாம்.

Thursday, September 15, 2005

49. நான் ஏன் மதம் மாறினேன்...? - 1

*

தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முதலில் பதித்த நாள்: 16.08.05


'மிஸ்ஸியம்மா" படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, 'வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை' என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் - கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'சிடி சினிமா' தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: 'அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?'.


பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பது
நிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை 'மூளைச் சலவை'யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் 'பைபிள்' பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் - அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு...


மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று - with an OBJECTIVE VIEWING - பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து 'அவைகளை' யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.

அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது - பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு - புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு - கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை - மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற - அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு - நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் - விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் - ஈமான் - Fidelity.

நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, - இந்துக்கள் சொல்வதுபோல், 'க்ரஹஸ்தன்'' என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் - மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே - பலத்த தயக்கங்களுக்குப் பிறகே - கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution - a very slow 'blossoming'! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, 'Why I am not a Chrisitian?" என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

'சுயம்பு' என்று வைத்துக்கொள்வோமே!!

இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்... தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை - ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்...



*
அடுத்த பதிவுக்குச் செல்ல: 2ம் பதிவுக்கு.


*

53. நான் ஏன் மதம் மாறினேன்...? - 2

*

*


தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.



முதலில் பதிந்த நாள்: 18.08.05



இரண்டு விஷயங்கள்:
ஒன்று - இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .

இரண்டு - நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.

எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம். பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் - என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். 'கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு' என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? "கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்" என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே - அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

'கடவுள்' இருந்தால் - 'அது' முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். - omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் 'முக்காலமும்' உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது - என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை - PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை...) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே 'அவன்' திட்டப்படி நடப்பதாக இருந்தால் - மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், 'கடவுளின்' முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, 'முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்' என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் - predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் 'ஜெபமே ஜெயம்' என்ற கூற்று என்னாவது?


இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? - தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! - என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து - எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு "பத்துக்கட்டளைகள்" ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் - என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் - என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி...மெல்ல..மெல்ல...மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த 'ஆட்டை'யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் ... ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். 'எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்' - என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. "என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim - இங்கே, rationality என்பதற்கு ' பகுத்தறிவு' என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து - தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.



*

அடுத்த பதிவுக்கு: 3ம் பதிவுக்கு.


*

55. நான் ஏன் மதம் மாறினேன்...? 3

*

*

தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முதலில் பதிந்த நாள்: 23.08.05



சில வேண்டுகோள்கள்:

என் வயது தெரிந்துவிட்டதால் என் வயதுக்கு மட்டுமாவது மரியாதையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உங்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன் போலும். வலைஞர்களுக்குள் வயதென்ன வயது? என் அப்பா சொல்வதுபோல் கழுதைக்குக் கூடத்தான் வயதாகிறது! ஆனாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம்தான்; அதற்குத்தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த சார், அய்யா எல்லாம் இல்லாமல் 'தருமி' என்றுமட்டும் எல்லோரும் என்னை அழைத்தால் நானும் கொஞ்சம் 'நார்மலாக' இருக்கமுடியும். So, it is a deal, okay!

இந்தத் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை ஒரு தொடராக 4 - 5 பகுதிகளாக எழுதுவதாக ஒரு திட்டம். இந்த கட்டுரையின் ஆங்கில ஆக்கம் ஆரம்பித்து ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எங்கள் கல்லூரியில் open house ஒன்றை நண்பர்கள் சிலருடன் நடத்தும்போது அதில் பேசுவதற்காக என்று தயாரிக்க ஆரம்பித்து வளர்ந்துகொண்டே வந்த கட்டுரை அது. 'இங்கு' வந்தபின் 'இந்தக் கருத்துக்களையும்' எழுதக்கூடிய இட்ம் என்பதறிந்து எழுதலானேன். ஏதோ நல்லடியாருக்காகவே நான் எழுதுவதுபோல் யாரும் நினைத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல இது எந்த ஒரு மதத்தையும் தாக்குவதற்காக அல்ல - எல்லா மதத்தையுமே முடிந்தவரை, எனக்குத் தெரிந்தவரை அலசுவதற்காகவே எழுதப்படுகிறது. கிறித்துவனாகப் பிறந்ததால் முதலில் அந்த மதமும், அதை ஒட்டியே வந்த மதம் என்பதால் அடுத்ததாக இஸ்லாமும் என் பார்வையில் முக்கிய இடம் பெறும். தவறுகள் - factual mistakes - சுட்டிக்காட்டப்பட்டால் உடனே திருத்திக் கொள்கிறேன். கருத்துக்கள் தவறு என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள்; அது உங்கள் உரிமை. உங்களின் அந்தக் கருத்துக்களை ஏற்பதும், ஏற்காதிருப்பதும் என் உரிமை.

எழுதப்படும் கட்டுரைகளில் நான் அவ்வப்போது எழுதி வரும் விஷயங்களை மட்டும் வைத்து, ஆதரவாகவோ, எதிராகவோ உங்கள் கருத்துக்களைப் பதிவிட அழைக்கிறேன். நான் எழுதாத கருத்துக்களைப் பற்றி கட்டுரையின் முடிவில் எல்லோருமாக பொதுவாக விவாதிப்போமே. அப்போதுதான், உடனுக்குடன் பதில் சொல்லவேண்டிய கருத்துக்கள் தவறாது இடம்பெரும்; விவாதங்கள் 'சுடச்சுட'வும் இருக்கும்! சுடச்சுட இருப்பது 'சூடாகவும்' இருக்க வேண்டியதில்லையே!


ஞானபீடம் அவர்களின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

'யோபு' கதையைப் படிக்கச்சொல்லியிருந்தீர்கள்; தெரிந்த கதைதான்; இருந்தும் படித்தேன். இப்போது படித்தபோது மனதில் எழுந்த கேள்வி: இந்தக்கதை அப்படியே நம்ம ஊரு அரிச்சந்திரன் கதைதானே. இரண்டுக்கும் நடுவே 6 வித்தியாசங்கள் கூட கிடையாது, இல்லையா? அரிச்சந்திரன் கதையில் at least, moral of the story என்று ஒன்று இருக்கிறது. எல்லாம் interesting ஆன கதைகள்.

யோனாவின் கதை - திமிங்கிலத்தின் வயிற்றில் மூன்று நாட்கள் - இதுபோல் எந்த மதத்தில்தான் கதைகள் இல்லை? இந்தக் கதையை அடுத்த மதத்தினர் நம்புவார்களா? இது உங்கள் மதக் கதை; நீங்கள் நம்புவீர்கள். நரி பரியான இந்துக்கதையை நீங்கள் நம்புவீர்களா?

உன்னதப்பாட்டு, பிரசங்கியும் நமக்கு இங்கு தேவையில்லையென்று நினைக்கின்றேன்.

நல்லடியாரின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

நான் ஒரு கேள்வி என் கட்டுரையில் கேட்டிருந்தேனே -
"ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one?" -
இதற்கு உங்கள் பதில் என்ன?(1)

//நல்லவை நடந்தால் அதற்கு 'தானே' காரணமென்றும், கெட்டவை நடந்தால் பிறர் (இளிச்சவாயர்?)மீதோ அல்லது யாரும் கிடைக்காவிட்டால் கடவுள் மீதோ போடுவது மனிதனின் இயல்பு.//

அப்படியே மாற்றிச்சொல்கிறீர்கள். கிறித்துவ மதத்தைப் பொருத்தவரை உலகில் நடக்கும் நல்லவை எல்லாவற்றிற்கும் தூய ஆவி காரணம்; மற்றவற்றிற்கு சாத்தான் காரணம். நிச்சயம் உங்கள் மத நம்பிக்கைப்படி நல்லவை அல்லாவிடமிருந்து வருவதாகத்தானே நம்புகிறீர்கள்? மறுபடியும் தயவு செய்து என் முதல் கட்டுரையில் நான் சொல்லியுள்ள predeterminism பற்றி படித்தால் உங்கள் கேள்வியில் உள்ள கருத்து தவறெனப் புரியும்.

"நல்லதும் கெட்டதும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, வேதமும் தூதரும் அனுப்பப்பட்டு, சிந்திக்க மூளையும் கொடுத்து, நல்லது செய்தால் சுவர்க்கமென்றும், தீயது செய்தால் நரகம் என்றும் போதித்து, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மட்டுமே பொறுப்பு எனச்சொல்வது பாரபட்சமாக இல்லையா?"
predeterminism vs omnipotence - பற்றிய எனது விவாதம் இதற்குப் பதிலாக அமையவில்லையா? இந்தக் கருத்துக்கும் உங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன் (2)

"எல்லா மதங்களும், தத்துவங்களும் நல்ல நோக்கத்தில்தான் போதிக்கப்பட்டன. அதனை பிரயோகப்படுத்தும் முறையில்தான் மனிதன் வேறுபடுகிறான்."
இதற்குரிய பதிலுக்கு நீங்கள் என் முடிவுரை வரை பொறுக்கவேண்டும்.

"கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்ற முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் இல்லை." யார் சொன்னது கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்று??!!
உங்கள் ப்ளாக்கின் முகவரியாக உங்கள் குரான் வாசகம் ஒன்று கொடுத்திருக்கிறீர்களே, அதேபோல, பைபிளில் 'உனக்கு உன் அயலான் என்ன செய்யவேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அதை நீ அவனுக்குச் செய்துவிடு" என்று சொல்லியுள்ளது. எனக்கு பைபிளில் மிக மிக பிடித்த வாசகம் இது.
மனிதநேயம் மட்டுமே ஒரு மனிதனை, மனிதனாக, நல்லவனாக வைத்திருக்க முடியும்; மதங்களல்ல - எம்மதமாயினும்! (இந்த இடத்தில் எனது 10 / 9 கட்டளைகளில் முதலாவது கட்டளையைச் சொல்வது நன்கிருக்கும் என்று எண்ணுவதால் அதைத் தருகிறேன்: Dont try to become a god in vain; be a man - fist and last

"தருமி சார், உங்கள் முந்தைய மத நம்பிக்கை தவறு என்ற முடிவுக்கு வர சுமார் 45 வருடங்கள் எடுத்துக் கொண்ட நீங்கள், கடவுள் மறுப்பே சரியென்று எப்படி உடனே முடிவுக்கு வந்தீர்கள்?" -
- கொஞ்சம் சரியாக வாசித்துவிடுங்கள்: 40-43 வருடம் நம்பிக்கையோடானது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளில் மன மாற்றம். இதுதான் என் பரிணாமம் என்று எழுதியிருந்தேனே!

"வெவ்வேறான மனிதர்களை கடவுள்தான் படைத்தான் (அல்லது குரங்கிலிருந்து வந்தான் என்றாலும்) ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் கெட்டவனாகவும் இருப்பது ஏன்?"
- ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பண்க்காரனாகவும், ஒருவன் மொடாக்காகவும், இன்னொருவன் புத்திசாலியாகவும் இருப்பது ஏன்? கடவுள் ஏன் இப்படி படைத்தார் ? - என்று இன்னும் நிறைய கேட்கலாமே! ஆனால், இது எல்லாம் நல்லடியார் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள். விஞ்ஞானக் கேள்வியாகக் கேட்டால் genome, genes, D.N.A. எல்லாம்தான் இந்த variations-க்குக் காரணம் என்று என்னைப்போன்ற infidels சொல்லுவோம்; உங்களைப்போன்ற நம்பிக்கைவாதிகள் இந்த வேறுபாடுகளுக்கு என்ன பதில் கொடுப்பீர்கள். கடவுள் ஏன் இந்த வேறுபாடுகளோடு மனிதர்களைப் படைத்தார்? தருமி இப்படி infidel-ஆக இருப்பதற்கும், நல்லடியார் ஆழ்ந்த இஸ்லாமியராக இருப்பதற்கும் யார் / எது காரணம். "எல்லாம் அவன் செயல்" (predeterminism) என்பது உண்மையென்றால்....?


"தேடல்களின் தொடர்ச்சி பகுத்தறிவா? தேடியதில் முடிவுக்கு வருவது பகுத்தறிவா?"
- இல்லாமல் வேறென்ன, சொல்லுங்கள். எனது தேடல், தொடர் தேடல் என்று சொல்லியுள்ளேன். like science. Science never puts a 'full stop'; it always ends with a comma . தொடர் தேடல் - இலக்கணக் குறிப்பு: வினைத்தொகை தானே !!

ஞானபீடம், நல்லடியார் - உங்கள் பின்னூட்டத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்க முயற்சி செய்துள்ளேன்; பழிக்குப் பழி...அதாவது, வாதத்திற்கு வாதம்..?

over to chennai !

59. நான் ஏன் மதம் மாறினேன்...? .. 4

*

*

தொடர்பான மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முந்திய பதிவுக்குரிய பின்னூட்டங்களை முடித்துக் கொள்ளலாமென நினக்கிறேன். அதோடு, இத்தலைப்பில் இனி எழுதப்பபோகும் பதிவுகளில் தற்காலிகமாகவேனும் பின்னூட்டங்களைத் தடை செய்ய நினைத்துள்ளேன்.

காரணங்கள்: நான் ஏற்கெனவே கேட்டிருந்தபடி என் பதிவுகளில் வரும் கருத்துக்களை மட்டும் வைத்துப் பின்னூட்டங்கள் வந்தால் அதைப் பற்றி விவாதிக்க எளிதாயிருக்குமென நினைத்தேன். ஆனாலும், வரும் பின்னூட்டங்கள் அந்த LOC-யைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அது இயல்பும் கூட. அதோடு, நான் சொல்லவரும் விதயங்களுக்கு முன்பே அதைப்பற்றிய கேள்விகள் வந்து விழுந்து விடுகின்றன. எஞ்சுவது சிறிது குழப்பமும், குழப்பத்தில் "மீன் பிடித்தலுமே'.

ஆகவே, நான் எழுத நினைத்துள்ள பகுதிகளை எழுதி முடித்ததும் I hope to have a refined discussion covering all aspects. ஒருவேளை அப்போது கருத்துக் கலந்துரையாடல் எளிதாகலாம். ஏனெனில், என் பதிவுகள் நான் ஏற்கெனவே கூறியபடி என் பல ஆண்டுகளின் தொடர் தேடலால் வந்த கருத்துக்கள். எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் அல்லது தனி மனிதனுக்கும் குறிவைத்து எழுதப்பட்டதல்ல.அப்படியான கருத்துக்களை முழுவதுமாகத் தந்த பிறகு மதத்தைப்பற்றிய என் முழு முகமும் உங்களுக்குத் தெரியவரும். அப்போது வரும் கேள்விகள் பொருளோடும், மிகச்சரியாகவும் வரும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆகவே, இந்தப் பதிவில் ஆர்வம் காட்டி வரும் அனைவரையும் சிறிது பொறுமை காக்கக் கேட்டுக்கொள்கிறேன். எனது பதிவுகள் ஓரளவுக்கு முடிந்ததும் 'அணைக்கதவுகளைத்' திறக்கிறேன். அப்போது உங்கள் கருத்து வெள்ளம் பொங்கிப்பிரவாகமாய் வருமென நம்புகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.


***********************



இதுவரை முதல் ஐயம் விதையாய் மனத்தில் விழுந்த விதத்தையும், அதை நான் வளர்த்த விதத்தையும் எழுதினேன். முதலில் நம் மதத்தைப்பற்றி ஐயம் எழுப்புகிறோமே என்ற குற்ற உணர்வு; அதனால் 'ஜெபம்'; அது தோற்றதால் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது என்ற மனச்சமாதானமும், தைரியமும் வர மேலும் மேலும் கேள்விகளை எனக்கு நானே கேட்க ஆரம்பித்தேன். அதனால் 'விசுவாசம் என்று கிறித்துவர்கள் சொல்லும் 'மத நம்பிக்கை' படிப்படியாகக் குறைந்தது. இந்த நிகழ்வுகளை மூன்று நிலைகளாகப்(Phases) பிரித்துத் தருகிறேன்.


PHASE: I

பள்ளியில் பயிலும்போது வருடத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியின் கத்தோலிக்கக் கிறித்துவ மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்கு 'தியானம்' கொடுப்பார்கள். இந்த நாட்களில் நாங்கள் கடவுளைப் பற்றியும், மதக்கருத்துக்களைப் பற்றியும் தியானிக்கவேண்டும். ஆனால், எங்களுக்கு ஒத்த வயதினரோடு ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி நாட்களைக் கழிப்பதில் தனி மகிழ்ச்சி. குதித்து கும்மாளத்தோடு வருவோம். ஆனால், முதல் நாள் முதல் 'பிரசங்கத்திலேயே' தியானம் கொடுக்க வரும் குரு (சாமியார்) , 'பாவம்' (sin) என்பது பற்றியும், இந்தப் பாவத்தின் சம்பளமான சாவு பற்றியும், சாவுக்குப்பிறகு கிடைக்கக் கூடிய 'மோட்சம்-நரகம்' (heaven & hell) பற்றிக் கூறுவார். இதில் மோட்சம் பற்றிக் கூறுவதை விடவும், நரகம், அதன் கொடுந்தண்டனைகள் பற்றியும், அது எப்படி 'நித்தியம் (eternal) , என்பது பற்றியும் சொல்லுவார். நன்கு நினைவில் இருக்கிறது; அந்தச் சின்ன வயதில் இந்த சேதிகள் எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்று. எல்லோருமே பயந்து நடுங்கியிருப்போம். அன்று இரவு தூக்கத்தில் அவனவன் பயந்து உளறுவது சர்வ சாதாரணம். ஆட்டமெல்லாம் இரண்டாம் நாளிலிருந்துதான் !

1 *** பைபிளில் என்னவோ ஒரே ஒரு 'வசனம்' மட்டுமே வருகிறது (Math. 14:50). ஆனால் அது போதும் - பயங்கரமான ஒரு oral and visual effect கொடுப்பதற்கு!! ஒரு மனிதன் மிஞ்சிப்போனால் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருப்பான். நூறு ஆண்டுகள்? அதில் அவன் என்ன தவறு செய்தாலும் 'நித்தியத்திற்கும்' அவனுக்குத் தண்டனை என்பது எனக்கு ஒரு பெரிய முரண்பாடாகத் தோன்றியது. கடவுள் கருணை நிரம்பியவர் என்று ஒரு புறம்; ஆனால், மறுபுறமோ eternal punishment! ஒத்து வரவில்லை. இப்படித் தண்டனை அனுபவிப்பதற்கு என்னைப்பொறுத்தவரை மூன்றே மூன்று மனிதர்களுக்கு மட்டுமே தகுதியுள்ளதாகப் பட்டது: ஹிட்லர், போல்பாட், இடி அமின் ! ஆனால், இந்தத் தண்டனை எனக்கும், உனக்கும் என்பது பொருந்தியதாகத் தெரியவில்லை. இதைப் பார்க்கும்போது நீ செய்த 'கர்ம வினை'களுக்கு ஏற்றாற்போல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறுதியில் 'முக்தி' பெறு என்று சொல்லும் இந்து மதக் கோட்பாடில் 'மனித தர்மம்; மனித நீதி' இருப்பதாகப் பட்டது. (அதற்காக அம்மதக் கோட்பாடுகள் அனைத்தும் எனக்கு உடன்பாடு என்று பொருள் கொள்ள வேண்டாம்.) கடவுளின் தர்மமும், நீதியும் நம் தர்மத்தையும், நீதியையும்விட மேலானதாக இருக்கவேண்டாமோ?

2 *** அடுத்ததாக, நாம் நம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து கற்பிக்கப்பட்ட காரியங்களை எந்தவித ஐயமும் இன்றி, தொட்டிலில் தொடங்கியதைக் கடைசிவரை முழுமையாக நம்புகிறோம். அது ஒரு முழுமையான உண்மைதானா என்று நமக்கு நாமே எப்போதாவது கேள்வி கேட்பதுண்டா; இல்லவே இல்லை. பைபிளில் யேசுவால் சொல்லப்பட்ட பல சிறுநீதிக்கதைகள் (parables) மிகவும் பிரசித்தம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பகுதிகள். இப்போது இவைகளில் எனக்கு ஐயம். எல்லோருக்கும் தெரிந்த 'ஊதாரிப்பிள்ளை" (prodigal son) கதையில் தறுதலையாகச் சுற்றி, சொத்தையெல்லாம் அழித்து வந்த சின்ன மகன் திரும்பிவந்து மன்னிப்பு கேட்டதும் தடபுடல் விருந்து - கொளுத்த ஆட்டை அடித்து விருந்து; அப்பாவோடேயே இருந்து கஷ்டப்பட்டு உழைத்த மகன் தன் நண்பர்களோடு விருந்துண்ண தடை. இது கதை. நம் வாழ்க்கையில் இது போல் நடந்தால் பெரியவன் புதிதாகக் கெட்டுப் போவான்; சின்னவன் மீண்டும் கெட்டுப்போவான். தந்தை இருவரையுமே இழப்பதே நடக்கும். நடப்புக்குச் சரியாக வருமா இந்தக்கதை?

3 *** அடுத்து - இன்னொரு கதை. (Math: 20: 1-16) காலையில் வேலை கேட்டுவரும் ஒருவனுக்கு முழுநாள் வேலைக்கு ஒரு பணம் என்று பேசி வேலை பார்க்கச் சொல்லுகிறார் ஒரு முதலாளி. நேரம் கழித்து வேறு சிலரை தாமே அழைத்து வந்து வேலை தருகிறார். அதன் பின்னும் வேறு சிலருக்கு; மதியம் இன்னும் சிலருக்கு; கடைசியாக வேலை முடியப்போகும் மாலையில் வருபவனுக்கும் வேலை. எல்லாம் சரி. வேலை முடிந்ததும் எல்லோருக்கும்ஒரே கூலி! இது நியாயப் படுத்தப்படுகிறது ! முதலில் வந்து வேலை செய்து முறுமுறுப்பவனுக்குக் கொடுக்கப்படும் பதில்: "என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?" மிக மோசமாக தேர்வு எழுதிய என் மாணவன் ஒருவனையும், நன்கு எழுதிய மாணவன் ஒருவனையும் நான் ஒரேமாதிரியாக மதிப்பிடலாமா? இருவருக்குமே பத்துக்குப் பத்து என்று மதிப்பெண் அளித்தால் என்ன நியாயம்? தொழிலாளி - முதலாளி என்ற உறவை வைத்தே பார்த்தாலும், அந்த முதலாளிக்கு நல்ல தொழிலாளிகளே கிடைக்காதுதான் போகும்! பைபிளில் சொல்லப்பட்டதாலே இக்கருத்துக்கள் சரியாகுமா?

4 *** அடுத்ததாக வந்த ஐயம் ஆழ்ந்த கிறித்துவர்களுக்குக் கோபம் வரவைக்கும் ஐயம்' ஆனால், நானென்ன செய்வது? யேசு இரண்டே இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்.
Math 10;5, 6:"....பிற இனத்தாரின்எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்....மாறாக, வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்
John 17;6 "நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
John 17;9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். ...
இந்த வசனங்கள் தரும் செய்தி என்ன? அவர் தன்னை ஒரு சாதியினரோடு - இஸ்ரயேலரோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையா?

இதைவிட, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று பேய் பிடித்த தன் மகளைக் காப்பாற்ற வேண்டி,தன் முன்னே வந்து நின்ற கானானியப் பெண்ணிடம்(வேற்று ஜாதியைச் சேர்ந்தவள்) "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று சொல்ல (Math 15:25) அந்தப் பாவப்பட்ட பெண் மேலும் இரந்து நிற்க, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" (Math 15:26)(Mark 7:26)என்று ஒன்றல்ல இரண்டு இடங்களில் தேவகுமாரன் சொன்னதாகச் சொல்கிறது விவிலியம். இந்தப்பகுதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் விளக்கம் இன்னமும் வேதனையாக இருக்கும். கடவுள் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்கவே அப்படிப் பேசினாராம். எனக்கு இதில் எந்தவித நியாயமோ, லாஜிக்கோ தெரியவில்லை. 'விசுவாசம்' என்ற 'கறுப்புக் கண்ணாடி'யைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் எனக்குத் தெரிவது "ஜாதித் துவேஷமே".

மேலும், வேற்று ஜாதியினரை ஒதுக்கிவைக்கும் யேசு, தன் உறவினர்களான மார்த்தா, மரியாவின் சகோதரனான லாசர் இறந்தது அறிந்து
...யேசு உள்ளங்குமுறிக் கலங்கி...அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்...யேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்." John 11:33, 35, 38

Rev: 7:4
-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.


மொத்தத்தில், ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார். அவ்ர் நல்லவர் என்பதையோ, சொன்ன கருத்துக்களில் பல கருத்துக்கள் நல்லவை என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.


5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு kid stuffபோலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180

7. யேசுவின் வாழ்க்கையில் 12 வயதிலேயே ஆலயத்தில் உள்ள பெரிய குருமார்களிடம் தர்க்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தன் 33-வது வயதில் மறுபடி வெளி வாழ்க்கைக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 'மறைந்த ஜீவியம்' என்று சொல்லப்படும் காலத்தின் தேவை என்ன?

8. "கடவுளின்மேல் பயமே ஞானத்தின் ஆரம்பம்" (Prov. 1:9 )
"ஞானிகளின் ஞானத்தைஅழிப்பேன்;அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்"(Cor. 1:19 )
"ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என் ஆண்டவர் அறிவார்" (Cor. 3:20) இந்த மேற்கோள்கள் ஒரு வினாவை என்னுள் எழுப்புகின்றன: ஏன் (பொதுவாக எல்லா மதங்களுமே ) கிறித்துவம் 'ஞானத்தை', அறிவை (fruit of wisdom was forbidden) ஏன் புறந்தள்ளுகின்றன?

அன்பை மையப் புள்ளியாகவைத்தே கிறித்துவம் இயங்குவதாகக் கூறப்படுகிறது' ஆனால், அன்பு அல்ல கடவுளின் மேல் 'பயமே' ஞானத்தின் ஆரம்பம் என்று விவிலியத்தில் கூறப்படுகிறது. ஏனிந்த முரண்பாடு?


ஏற்கெனவே சொன்னது போல இந்த ஐயங்கள் வர வர ஜெபம் செய்தேன் - ஐயங்கள் விலகட்டும் அல்லது பதில் கிடைக்கட்டுமென்று. இரண்டும் நடக்கவில்லை. அதனல், அடுத்த நிலைக்குச் சென்றேன். அது - கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் உரசிப்பார்ப்பது என்ற நிலை.


அந்த இரண்டாம் நிலை இனி வரும்...


*

அடுத்த பதிவுக்குச் செல்ல: 5.


*

64. நான் ஏன் மதம் மாறினேன்...?..5

*

*

தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முதலில் பதிந்த நாள்: 07.09.05
இனி நான் சாராத மற்ற சில சமயங்களைப் பற்றி நானறிந்த வரை ஓர் அலசல்:


இந்து மதம்:
'இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி' - எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை. இந்த மதம் ஒரு 'அவியல்' என்று சொல்லலாம்; ஏனெனில், இங்கு, 'சக்தி'/ ஒளி (energy) வழிபாடு என்று இயற்கையை ஒட்டிய கருத்தும் உண்டு; முப்பது முக்கோடி தெய்வமும் உண்டு. எல்லா உயிரும் ஒன்றே என்ற கொள்கை ஒரு பக்கம்; ஆடு, கோழி பலி என்பது அதன் மறு பக்கம். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கருத்து ஒரு பக்கம்; கடவுள் மறுப்புக் கொள்கையோடு சார்வாகத் தத்துவம் இன்னொரு பக்கம். [It is a religion of conglomeration of different contrasting concepts. `Any attempt to describe Hinduism as one whole leads to startling contrasts. The same religion enjoins self-mortification and orgies; has more priest, rites and images....' (Intro to Asian Religions, Geoffrey Parrinder, pp31) ]


'நான் ஏன் ஒரு இந்து அல்ல?' என்ற காஞ்சா அய்லய்யாவின் நூலைப் படித்த பிறகோ நாம் சாதாரணமாகக் கருதும் இந்து மதம் இரண்டு பட்டுத் தெரிந்தது: ஒன்று, பிராமண(ர்களின்) இந்து மதம்(brahminic hinduism); இரண்டு, மற்றவர்களின் "இந்து" மதம். முதல் வகையில் வழிபடப்படும் கடவுளர்களும் "பெரிய கடவுள்கள்" (High gods). இரண்டாவது வகையில் "சின்னக் கடவுள்கள்" (small gods). அவர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள்கூட இந்த இருவகைப்படும். ஜாதி வேறுபாடுகள் அவர்களின் பெயரிலேயே தெரியும்படி இருக்கும். பெரிய கடவுள்களின் பெயர்கள் 'உயர்ந்த சாதி'க்கும், அடுத்த படியில் சின்னக் கடவுள்களின் பெயரும், மூன்றாவது நிலையில் 'தாழ்ந்த சாதிக்கு' உயிரற்ற பொருட்களின் பெயருமாய் இருந்து வருகிறது. சாதிப்படிகளில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு 'முன்னோர் வழிபாடு'தான் மதமாய், சம்பிரதாயங்களாய் (rituals) இருந்துவருவது கண்கூடு. இதைப் பார்க்கும்போது பிராமணர்களின் மதமான'இந்து'மதமும் ஒரு சிறுபான்மை மதமாகவே எனக்குத் தோன்றுகிறது.


சமய பழக்க வழக்கங்கள் எல்லாவிற்றிலுமே பெருத்த வேறுபாடுகளோடு இருப்பினும் இந்த 'இந்து' என்ற பெயர் மட்டுமே அவர்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்தி வருகின்றது. அவர்கள் ஒன்றுபட ஒருவழி உண்டு. அது, ஜாதியை இந்து மதத்திலிருந்து பிரித்தெடுப்பது. சாதிகள் போனபின் அவர்கள் நடுவே உள்ள சமய வேறுபாடுகள் மறையலாம். ஆனால், இது நடக்கக்கூடிய காரியமா? சாதியை இந்து மதத்திலிருந்து பிரிக்கவே முடியாது. இந்தச் சாதிகள் மக்களை என்றும் பிரித்தே வைத்திருக்கும். 'அவனன்றி அணுவும் அசையாது' என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஓர் இந்து, இந்த சாதிப்பிரிவினையும் கடவுளால் வந்தது; இவன் இன்ன சாதிக்காரனாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் திருவுள்ளம்; அதை மாற்ற நாம் யார் என்று கேட்டால் - அந்த நம்பிக்கையை யாரால் மாற்ற முடியும்? கடவுள்நம்பிக்கைகளுக்கும் 'பகுத்தறிவு'(rationality)-க்கும் எந்த மதத்தில்தான் தொடர்பிருக்கிறது?

வேதங்கள்: ஏறத்தாழ 1500 - 1200 B.C. என்ற கால கட்டத்தில் மேற்கிலிருந்து இந்தியாவின் வடக்கினில் நுழைந்து, பின் இந்தியாவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் காலூன்றிய ஆரியர்களின் சமய நூலாக எழுதப்பட்ட நான்கு வேதங்கள் brahminic hinduism-த்தின் அடிப்படை நூல்களாக உள்ளன. இந்தியாவின் கொடூரமான,வேதனையான சாதி வேறுபாடுகள் இந்த வேதங்கள் தந்த பரிசு. இந்த வேதங்களில் கூறப்படும் வருணன்,ருத்ரன், இந்திரன் போன்ற தெய்வங்களின் 'மவுசு' குறைந்து காலப்போக்கில் இந்தக்கடவுள்கள் இல்லாமலே போய்விட்டனர்; இதேபோல் வர்ணாசிரமக் கொள்கைகளான சாதி வேறுபாடுகளும் இல்லாதொழிந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.

உபநிஷத்துகள்:
வேதங்கள் பல கடவுளர்களைப் பற்றிப் பேச, உபநிஷத்துக்கள் ஒரே ஒரு 'பரம்பொருளை'ப் பற்றிப் பேசுகின்றன. உபநிஷத்துகள் 'வேதாந்தங்கள்' (வேதம் + அந்தம்) என அழைக்கப்பட்டன. வாய்வழிச் செய்திகளாக வந்த இவை 800 B.C.யில் எழுத்துருவுக்கு வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றன. "ஓம்" என்னும் அருட்சொல்லின் பெருமையும், தியானத்தின் அருமையும் உபநிஷத்துக்களின் கொடை. பரம்பொருளும், மனிதனும் இணைந்ததுவே இந்தப் பிரபஞ்சம்; இவ்வுலக வாழ்வு ஒரு 'மாயை'யே. 'கர்ம வினை'தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வினை அறுத்து,இறுதியில் பரம்பொருளோடு 'ஆத்மா' இணைந்து 'முக்தி' பெறவேண்டும். எல்லா உயிர்க்கும் இதுவே அளிக்கப்பட்ட 'விதி'. வேதங்கள் தந்த பல-கடவுள்-தத்துவம், உபநிஷத்துக்களின் மூலம் ஒரு-கடவுள்-தத்துவமாக மாறுகின்றது.

த்வைதம், அத்வைதம்
பின்வந்த ராமானுஜர், சங்கரர் போன்றவர்களால், இதில் சில திரிபுகள் ஏற்பட்டன. த்வைதம் - dualilty- இரட்டை நிலை பற்றிப் பேசுகிறது. உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரியும் ஒரே பிம்பம் போல், உயிர்களில் பரப்ப்ரும்மம் இருக்கிறது; ஆயினும், ஆத்மா ப்ரம்மத்திலிருந்து வேறுபட்டே இருக்கிறது; முக்தி அடையும்போதே 'இரண்டும்' ஒன்றாகிறது.
அத்வைதமோ, ஆத்மாவும், ப்ரம்மும் ஒன்றே; ஓர் அறையினுள் காற்று எங்கும் இருக்கிறது, ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பானைகளில் உள்ள காற்று தனித்தனி; இருப்பினும், அந்தப் 'பானை' உடைந்து அதில் உள்ள காற்று 'வெளிக்காற்'றோடு ஒன்றுகிறது - என்று சொல்வது அத்வைதம்.

இந்து மதம் என்றால் 'புராணங்களே' நமக்கு முக்கியமாகப் படுகின்றன. ஆனால், அவைகளயும் தாண்டி அதிலுள்ள பல விதயங்களை யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. எல்லா உயிரையும் ஒன்றாய் எண்ணுவது, semitic மதங்களான கிறித்துவம், இஸ்லாமில் சொல்வது போலன்றி, (eternal punishment) நித்திய தண்டனை என்று ஒன்றில்லாமல் பல பிறப்பு-பின் இறுதியில் முக்தி என்னும் உய்விப்பு, - இவைகள் எல்லாமே மனித நியாயங்களோடு இருப்பதாக எனக்குத் தெரிகிறது. இவைகள் நான் இந்து மதத்தில் பார்க்கும் சில பாசிட்டிவான் கருத்துக்கள். ஆனாலும் இந்து மதம் என்பது இது மட்டும்தான் என்றில்லையாதலால் இம்மதத்தோடும் எனக்கு ஒன்றுதல் இல்லை. அதுவுமின்றி, சாதியமைப்புக்குச் சமயச் சாயம் பூசி, இந்த வேறுபாடுகள் கடவுளிடமிருந்து வந்தவை என்று சனாதன தர்மம் பேசும்போது அந்த மதமே ஒரு எட்டிக்காயாக எனக்கு மாறிவிடுகிறது.


சீக்கியம்:
15-ம் நூற்றாண்டில் இந்து, இஸ்லாம் இரண்டு மதத்தில் உள்ள நல்ல விதயங்களை ஒன்றிணைக்கப் பலர் முயன்றனர். அதில் கபீர் (1440) என்னும் முஸ்லீம், நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு கவிஞராக வாழ்ந்தார். இறைவனின் மேல் காதலுற்று, அவன் முன்னிலையில் பரவசப்படுபவதாக அவர் எழுதிய கவிதைகள் இந்து சமயச் சாயலோடு அமைந்தன. இந்தக் கவிதைகளாலும், கபீரின் கருத்துக்களாலும் கவரப்பட்ட நானக் (1469-1538)என்பவர், இந்து மதத்தில் பிறந்தவராயினும் இஸ்லாமின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அவர் கடவுளின் 'தரிசனம்' கிடைத்து, அதில் கடவுளால் ஏவப்பட்டு புதிய மதமாக சீக்கிய மதத்தை உருவாக்கியதாக அம்மதத்தினரின் நம்பிக்கை. குரு நானக்கின் இந்த சீக்கியமதம் இந்து-இஸ்லாம் மதங்களுக்கும் பொதுவானதுவாகத் தோன்றிய புது மதம்.


ஜைன மதமும் புத்த மதமும்
ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இரு மதங்களில் பல ஒற்றுமைகள்: இரண்டுமே, கர்மம், ஆன்மா, மறுபிறவிகள், நிர்வாண நிலை - என்ற இந்து மதக்கொள்கைகள் பலவும் கொண்டிருந்தும் 'பரப் ப்ரும்மம்' என்ற கடவுள் கொள்கையில் மாறுபடுகின்றன. இரண்டுமே கடவுள் மறுப்பை சொல்லும் மதங்களாக ஆரம்பிக்கப் பட்டு, பின் அப்படி சொன்னவர்களையே கடவுளர்களாக மாற்றிய 'அற்புதம்' நடந்துள்ளது. இந்தியாவில் பிறந்த புத்தமதம் இங்கிருந்து விரட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்: இந்து மதத்தில் இருந்த பிராமணீய சாதியக் கொள்கைகளுக்கு எதிராக எழுந்தது புத்த மதம். அதன் காரணமாகவே, இங்கு வேறூன்றியிருந்த இந்து மதத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது புத்த மதம் அது பிறந்த மண்ணிலேயே காலூன்றமுடியாது போயிற்று.


புத்தம், கன்ஃபியூஷனிஸம், தாவோயிஸம்
இந்த மூன்றுமே 'சைனாவின் முக்கிய மூன்று மதங்கள்' (?) என்றே அழைக்கப்படுகின்றன. இந்த மூன்றுமே, 'ஒரே இடத்திற்கு செல்லும் மூன்று பாதைகள்' என்றே கருதப்படுகின்றன. பொதுவாகவே, எல்லா கீழ்த்திசை நாடுகளிலும் 'முன்னோர் வழிபாடு' என்பது நிலவிவருகிறது. அதிலும், சீன சமுதாயத்தில் இது எல்லா சமயங்களிலும் ஊடுறுவியுள்ளது.

குங் ஃபு ட்ஸூ (Kung Fu Tzu - Latinised as Confucius by Western missionaries) - இவரது கொள்கைகள் எல்லாமே சமூகச்சிந்தனை பற்றியதாகவே இருக்கின்றன. "அடுத்தவர்கள் எனக்கு எதைச் செய்யக்கூடாதென்று நான் நினைக்கிறேனோ, அதை நான் அவர்களுக்குச் செய்யக்கூடாது" ( பைபிள் ?)

தாவோயிஸம்: (Tao -என்ற சொல்லின் பொருள்: 'வழி'). தாவோஸித்தின் முக்கிய நோக்கம்: இறுதியில் இறையோடு இணைவது' ( அத்வைதம்?) இந்த மதக்கோட்பாட்டின் 'மூன்று தூயவர்கள்' தத்துவம் (Trinity of Christianity & Hinduism ?) கிறித்துவ, இந்து மதக்கோட்பாடுகளோடு ஒத்துள்ளன. ஜென்(Zen)தத்துவங்கள் இம்மதக் கோட்பாட்டிலிருந்து பிறந்தவையே. கருத்துக்கள் மறைமுகமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு உதாரணம்: ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றை கனவில் காண்கிறார். பின்பு, "நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?", என்று கேட்கிறார்.

இந்தக் கீழ்த்திசை சமயங்களைப் பற்றி மட்டும் போதும் என்றே
நினைக்கிறேன். கடைசியாக இஸ்லாம் பற்றி...



*

அடுத்த பதிவுக்குச் செல்ல: 6ம் பதிவுக்கு.


*

67. நான் ஏன் மதம் மாறினேன்...?..6

*

*

தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.http://dharumi.blogspot.in/2006/09/175-7.html
8.



முதலில் பதிந்த நாள்:13.09.05



நல்லவேளை...67-வது பதிவில் இந்த தொடர்பதிவின் 6-ம் பகுதி வந்துள்ளது. இது ஒரு தற்செயல்தான். ஆனால், இதே பதிவை நான் 66-ம் பதிவாக பதிந்திருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் இன்னொரு interesting-ஆன விதயம் நடந்திருக்கும். '666' என்ற எண் பைபிளில் 'அந்தி கிறிஸ்து' - anti-Christ என்ற 'பேய்' க்கு உரியது. இது வந்து என்னென்னவோ செய்யப்போகிறதாம். Omen படம் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அப்படி நான் 66 வரிசை எண்ணில் 6-வது பகுதியை எழுதியிருந்தால் தருமிதான்அந்த பேய் என்று சொல்லியிருக்கலாம் ! நான் நினக்காத ஒரு சிறு பதிவை 66-ல் போட்டதால் இது 667 ஆகிவிட்டது. எல்லாம் தற்செயல்தான். நல்ல வேளை 'பேய் ஆவதிலிருந்து' தப்பித்தேன் !!


ஒரு கிறித்துவ மதவாதி என்னிடம் ஒரு முறை சொன்னது: 666 ஒரு பேய் மனிதனாகவோ, மனிதப் பேயாகவோ இருக்கவேண்டியதில்ல; WWW என்பதுதான் வரப்போகும் அந்தப் பேயைக் குறிக்கிறது; அதாவது மனித குலத்தின் அழிவே வலையுலகத்தால்தான் (internet) என்றார் ! வலைஞர்களே, ஜாக்கிரதை! நம்பிக்கைகள்தான் எப்படியெப்படி எல்லாம் இருக்கின்றன !!


இப்போ... நம்ம விதயத்திற்கு வருவோம்...


இஸ்லாம்:

யூத மதத்திற்கு - பழைய ஏற்பாடும், டோராவும் (Torah); அதன் பின் வந்த கிறித்துவத்திற்கு பழைய ஏற்பாடும், பைபிளும்; அதன் பின் வந்த இஸ்லாமிற்கு பழைய ஏற்பாடும், குரானும். இந்த மூன்று மதங்களும் ஆபிரகாமிய மதங்கள் என்றோ, semitic religions என்றோ அழைக்கப்படுகின்றன. யூத மதம் மோசஸ் காலம் வரை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவைகளை உள்ளடைக்கியது. Ten Commandments படக் கதைதான். அவர்களைப்பொறுத்த வரை மனிதர்களை மீட்க 'மெஸையா' இன்னும் வரவேண்டும்; அதற்காகக் காத்திருக்கிறார்கள். கிறித்துவர்களுக்கோ மோசஸ் காலத்திலும் அதற்கு முன்பும் சொல்லப்பட்ட - கடவுளால் வாக்களிக்கப்பட்ட - 'மெஸையா'தான் ஏசு. ஏசுவின் வருகை வருமுன் உறைக்கும் 'தீர்க்க தரிசி'கள் (Prophets)பலரால் முன்மொழியப்பட்டதாகவும், அவை அப்படியே நிறைவேறின என்பதும் கிறித்துவர்களின் நம்பிக்கை. தந்தை (Holy Father), ஜெஹோவா என்றழைக்கப்படும் முதல் கடவுளின் ஒரே மகனே ஏசு என்பது கிறித்துவர்களின் நம்பிக்கை. மூன்றாவதாக, மேற்கூறிய Torah-வும், பைபிளும் மனிதர்களால் திரிக்கப்பட்டு விட்டதால் இறுதியாக கடவுளால் (அல்லாஹ்) முகமது நபிக்கு ஜிப்ரீல் (Gabriel) என்ற கடவுளின் தூதன்(arch-angel) மூலம் ஹீரா என்ற மலையிலுள்ள ஒரு குகையில் கொடுக்கப்பட்டதே 'இறுதி வேதமான' குரான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.

முகம்மது 570 கி.பி.-ல் க்வாரிஷ்(Quraish) என்ற அரேபிய குலத்தில் (Tribe) பிறந்து, கதீஜா என்ற பணக்காரப் பெண்ணின் கீழ் வேலை செய்து, பின் அவரையே திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் 610-ல் கடவுளின் தூதரால் 'கடவுளின் கட்டளைகள்' மனிதர்களுக்காக அருளப்பட்டது என்பதாகவும், தனக்கு எழுதப்படிக்கத் தெரியாத நிலயில் தான் எப்படி கடவுளின் வார்த்தைகளை எழுதிவைக்கமுடியும் என்ற அச்சத்தையும், ஐயத்தையும் ஜிப்ரீல் தீர்த்துவைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. அது எப்படியிருப்பினும் அதற்கு எவ்வித முக்கியத்துவம் தரவும் தேவையில்லை. முகமதே ஜிப்ரீலின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்ளத் தயங்கியபோது கதீஜா அவருக்குத் தைரியம் கூறியுள்ளார். 595 to 619 வரை கதீஜாவுடன் மட்டுமே திருமண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் முகமது. அவரது கூற்றுக்களில் முதன் முதல் நம்பிக்கைவைத்தவர் மனைவி கத்தீஜாதான். அதன் பிறகு 10 வயதான Ali ibn Abi Talib என்பவரும், அதன்பின் அவரது நெருங்கிய நண்பரான அபு பக்கரும் அவரைப் பின்பற்றினர். அதன்பின் முகமதின் பின்சென்ற மெதீனா முஸ்லீம்களுக்கும், மெக்காவிலிருந்தவர்களுக்கும் பலமுறை யுத்தம் நிகழ ஆரம்பிக்கின்றது. ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை வைத்து அவரது பிந்திய வாழ்க்கை வரலாறு அறியப்படுகிறது. அந்த வரலாறுகளைச் சுருக்கிச் சொல்லும் முகமாக ஒரு சிறு அட்டவணை:

618 Medinan Civil War
624 Battle of Badr
625 Battle of Uhud
627 Battle of the Trench
628 Conquest of the Jewish oasis
629 Attack on Byzantine empire fails
630 Attacks and bloodlessly captures Mecca
630 Battle of Hunayn
630 Siege of al-Ta'if
631 Subjugates Arabian peninsula tribes
632 Attacks the Ghassanids: Tabuk

ஆக, 40-வது வயதில் கடவுள் தூதனின் தரிசனம்; 48-வது வயதிலிருந்து போர்முனையில் வாழ்க்கை. . 15 ஆண்டுகள் போர்வீரனாகவும் வாழ்வு. இதில் சில போர்முனைகள் வெற்றியைத் தந்தன; சில தோல்விகளைத் தந்தன. (வெற்றிக்குக் காரணம் அல்லாஹ்வின் ஆசி என்றால், தோல்விகளுக்கு யார் காரணம் - இந்தக் கேள்வி Omniscience பற்றி நான் எழுதிய முதல் பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளவும்.)


இதன் பின் அவரது திருமண வாழ்க்கை:

இது பற்றி அதிகம் பேச விரும்ப வில்லையாயினும் சில முக்கிய சம்பவங்களைப் பற்றி மட்டும்: கத்தீஜாவிற்குப் பிறகு 9 அல்லது 10 மனைவியர் என்பது வரலாறு. அதில், மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்; பெண்ணுக்கோ 9. (இல்லை, 15 என்ற கருத்தும் உண்டு).(இராமாயண சீதாதேவி கதையின் சாயலில் ஒரு நிகழ்ச்சியும் உண்டு)Sahih Muslim Book 008, Number 3310: 'A'isha (Allah be pleased with her) reported: Allah's Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.'

2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!


முகமதின் மனைவிமார்கள்:
Hafsa bint Umar
Juwayriya bint al-Harith
Khadijah bint Khuwaylid
Maria al-Qibtiyya
Maymuna bint al-Harith
Ramlah bint Abu Sufyan
Safiyya bint Huyayy Sawada bint Zama
Umm Salama Hind bint Abi Umayya
Zaynab bint Jahsh
Zaynab bint Khuzayma



இனி என் ஐயங்கள்:


1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? (இக்கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது; ஆவா என்ற பெயர் அம்முதல் பெண்ணுக்கு. ஆகவே இக்கேள்வியைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.)

2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?

3.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான - 'இஸ்மயேலின்' சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் - என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் "நல்ல" வார்த்தைகள்...? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.

4.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே 'இறுதி' வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் 'இறுதி நிலை'தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் - அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.

5.)'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' (மத். 6: 38) என்பது பழைய ஏற்பாட்டின் விதிமுறை. இந்த வன்முறை புதிய ஏற்பாட்டில், :"...அப்போது ஏசு அவரிடம், "உனது வாளை அதன் உறையில் போடு. ஏனெனில், வாளை எடுப்பவன் வாளால் அழிந்து போவர்; ..." (மத். 26:52) என்றும், அதே போல, "...மாறாக, உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்" (மத். 6: 39) மிகவும் சாத்வீகமான ஒன்றாக மாறியுள்ளது. (இது சரியா, நம்மால் முடியுமா என்ற கேள்விகளுக்குள் இப்போது நுழையத்தேவையில்ல. ஏனென்றால், வேதங்கள் சொல்வதை எல்லாம் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா என்ன? 'எதைக் கொண்டு வந்தோம்; எதைக் கொண்டு போகப் போகிறோம் என்றா இருக்க முடியும்?) . பழைய ஏற்பாட்டின் வன்முறை மறைந்து புதிய ஏற்பாட்டில் சாத்வீகம் வந்த பின்பு மறுபடியும் இஸ்லாமில் ஏன் இந்த வன்முறை மீண்டும் புகுந்தது? மனிதனுக்கும் மனிதனுக்கும் இந்த வன்முறை வந்தால்கூட பரவாயில்லை; இஸ்லாமில் இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.

இந்த வசனத்தைப் பாருங்களேன்: ஹதீது: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." கடவுள் கருணையின் உருவாய் இருக்கவேண்டாமோ? இதென்ன கொடுமை? கடவுளின் வார்த்தைகளில் தேவையா இந்தக் கொடூரம்?

6.)ஏற்கெனவே கிறித்துவ மதம் பற்றி பேசும்போது கேட்ட கேள்வி இங்கும் பொருந்தும். நித்திய தண்டனையான நரகம் பற்றியது. அது போன்ற நித்திய தண்டனை சரிதானா என்று அங்கேயே கேட்டேன். இப்போது அதோடு சேர்ந்த மற்றொரு கேள்வி: கிறித்துவத்தில் 'மோட்சத்தில் கடவுளை முகம் முகமாய் கண்டு கொண்டிருப்பார்கள்' என்றிருக்கும்; கடவுளின் பிரசன்னமே பெரிய பாக்கியம் என்ற பொருளில். ஆனால், இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை!

7.) (Arch-angel, Gabriel)தேவதூதன் காப்ரியல் ஏசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் சொல்லியதாகவும், பிறக்கப்போகும் அந்தக் குழந்தையே மனிதர்களை உய்விக்க வந்த 'இம்மானுவேல்' என்றும் கூறியதாகவும் கிறித்துவம் சொல்கிறது. ஆனால், அதே தேவதூதன் (இஸ்லாமில், ஜிப்ரேல்) முகமதுவிற்கு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்லப் படுகிறது. இரண்டு தேவதூதரில் எது சரி? 'இதோ, கடவுள் உன்னிடம் குழந்தையாகப் பிறக்கப் போகிறார்' என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா, இல்லை, பயப்படாதே, நான் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்டேன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா, எது சரி? இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே கதையாக இருக்க வேண்டும். கடைசியாகச் சொன்னதே எனக்குச் சரியெனப் படுகிறது.


இனி நபியின் வாழ்க்கை வரலாறுக்கு வருவோம்:


8.)கிறித்துவத்தில் (St. Paul) பவுல் என்றொருவர் ஏசுவின் பக்தர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர்; பின் மனம் மாறி ஏசுவின் முக்கிய போதகராக மாறினார் என்று சொல்வார்கள். அதைக்கூட விடுங்க; நம் நாட்டின் தந்தை காந்தியடிகள் சின்ன வயதில் தவறுகள் பல செய்தும் பின் மனம் மாறி மகாத்மா ஆனார் என்பது வரலாறு. சாதாரண மனிதர்களே வாழ்வில் இது போல நடந்து கொண்ட போது, முகமது 40 வயது வரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் ஒரு பெரும் போர்வீரனாக, தளபதியாக மாறியது மட்டுமின்றி, அந்த நாட்டின், மக்களின் அன்றைய வழக்கப்படியே கொள்ளையில் ஆரம்பித்து (Much criticism has been leveled at Muhammad for engaging in caravan raids and wars of conquest. Critics say that his wars went well beyond self-defense. Muslim commentators, however, argue that he fought only to defend his community against the Meccans, and that he insisted on humane rules of warfare), பல போர்களை முன்னின்று நடத்தி, ஒரு திறமையான போர்த்தளபதியாக விளங்கி, அதோடு அங்குள்ள வழக்கப்படியே, தோற்றவர்களைக் (வயதுக்கு வந்த சிறுவர்களையும், பெண்களையும் கூட) கொன்று, அல்லது சிறைப்பிடித்து அடிமைகளாக்கி - எல்லாமே அந்த நாளில் இருந்திருக்கக்கூடிய ஒரு தளபதியாகவே முகமது இருந்திருக்கிறார். (After the battle, all the Banu Qurayza adult males (including boys who had reached puberty), as well as one woman, were beheaded by the order of Saad ibn Muadh, an arbiter chosen by the Banu Qurayza. The remaining women and children were taken as slaves or for ransom. All the property from the tribe was then divided among the Muslims).இது வரலாறு தரும் சேதி. இஸ்லாமிய ஹதீதுகள் தரும் சேதி. யாரும் மறுக்கவோ, மாற்றவோ முடியாதது. ஆனால், தனித் தனி அர்த்தங்கள் கற்பிக்கலாம். அது அவரவரது நம்பிக்கையையோ, நம்பிக்கையின்மையையோ பொருத்தது.

இங்கு ஏசுவின் போதனைகளை நினைவு கூறுவது நலம். (நான் கிறித்துவத்தை தூக்கி வைத்துப் பேசுகிறேன் என்று யாரும், அதுவும் என் முந்தைய பதிவுகளைப் படித்தவர்கள் கூற மாட்டீர்களென நம்புகிறேன்.) இஸ்லாமியர்கள் சொல்லுவது போலவே, ஏசுவின் வாழ்க்கையைத் திரித்து அப்படி அவரை ஜோடித்துவிட்டார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். ஒரு இறைதூதன் என்ற மரியாதைக்கேற்ப அவரது கதை'ஜோடிக்கப்பட்ட' விதயம் என்றுகூட கொள்வோம். ஒரு மரியாதை வரக்கூடிய அளவில் எசுவின் 'கதை' உள்ளது. ஆனால், முகமதின் வாழ்க்கை - அதுவும் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ள - வாழ்க்கை வரலாறு, கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதனின் வாழ்க்கை - அது எப்படி இருக்கவேண்டுமென சாதாரணமாக எதிர்பார்ப்போம். நிச்சயமாக எல்லாவிதத்திலும் வேறுபட்ட, என்னைவிட, உங்களை விட சிறந்த ஒரு மனிதனாக அவர் இருக்க வேண்டாமா? நாம்தான் அது வலைப்பதிவுகளாக இருக்கட்டும், கோத்ராவாக இருக்கட்டும்; காஷ்மீராக இருக்கட்டும்; ஈராக்காக இருக்கட்டும்; செர்ப்-ஸ்லோவாக்கியாவாக இருக்கட்டும் - எங்கேயும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அற்ப மனிதர்களாய் இருக்கிறோம். நம்மை வழிகாட்ட வந்த தெய்வமனிதர்களுமா அப்படி இருப்பார்கள்; கடவுள் அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனையா தேர்ந்தெடுப்பார் என்கிறீர்கள்? எந்த விதத்தில் முகமது நம் வாழ்க்கையில் நாம் நித்தம் நித்தம் காணும் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது? உண்மையிலேயே எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்கள். அவர் என்ன சொன்னார் என்பதைவிட (எனக்கும் உங்களுக்கும் முன்மாதிரியாக) அவர் எப்படி நடந்துகொண்டார் எனபதைத் தெளிவு படுத்துங்கள்.

9.) ஏசுவின் வாழ்க்கையில் அவரின் 'ஜாதித் துவேஷம்' என்று சில நிகழ்வுகளை வைத்துக் கூறியிருந்தேன். அதன் முடிவாக - என் முடிவாக - அவர் தன் ஜாதி (tribe)மக்களை முன்னேற்ற வந்த சமூகத் தலைவர் என்றே நான் கருதியதாகச் சொல்லியுள்ளேன். அவராவது, பல இடங்களில் தன் குலத்திற்காக மட்டுமே வந்ததாகக் கூறியிருந்தாலும், சில இடங்களிலாவது தான் எல்லா மானுடப் பிறவிகளுக்காகவும் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நான் காண்பித்தது எனக்கு வேண்டியிருந்த negative side மட்டும்தான்.

ஆனால், நபி முழுக்க முழுக்க தன் க்வாரஷி குல நன்மைக்காகப் போராடிய மாவீரன் என்பதைத் தவிர -உலக மக்களுக்காக, அனைத்து மனிதர்களுக்காக, அவர்தம் நன்மைக்காக வந்ததாக எங்கும் குரானிலோ, ஹத்தீஸிலோ கூறியுள்ளதாகக் காண்பித்தால் நன்று. ஏசு தன் குலம்பற்றியே பேசியது போலவே, முகமதுவும் தன் க்வாரஷி மக்களுக்கு என்று ஆரம்பித்து, முஸ்லீம்கள் என்ற தன்னைப் பின் பற்றிய அந்த நாளைய அரபி மக்களைப் பற்றி மட்டும்தானே பேசுகிறார்?

10.) முகமதுவின் மறைவிற்குப் பின் வந்த நான்கு கலிஃபாக்களுமே அவரோடு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் தான். (நாம் இன்று சொல்கிறோமே - குடும்ப அரசியல் அல்லது அரசியல் குடும்பம் என்று; அதேபோல் தான்.) இந்தக் கலிஃபா க்கள் முகமதின் மறைவுக்குப் பின் 'சில தத்துவங்கள்' பேசி, இறந்த முகமதின் விதவைகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்தில் ஏதும் பங்கு தராது விட்டது வரலாற்று உண்மை. ("We (Prophets) do not have any heirs; what we leave behind is (to be given in) charity" நபி உலக உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்; ஆகவே, அவருக்கு விதவைகள் என்று யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்ற தத்துவமே அது!) Might is right- இந்த இரண்டு வரலாற்று உண்மைகளைப் பார்க்கும்போது அன்றிருந்தது முழுக்க முழுக்க ஒரு tribal set up என்பதே இதிலிருந்து தெரிகிறது.


இனி அவர்தம் தனி வாழ்க்கை பற்றி :


11.) Less said about this is better. முகமதின் திருமணங்களைப்பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. இருப்பினும், அவைகளுக்குக் கற்பிக்கப்பட்ட சில நியாயங்கள் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். சில மேற்கோள்கள் தர ஆசை. தனக்குக் கற்பிக்கப் பட்டது எவ்வளவு தவறான ஒரு விதயமாக இருந்தாலும் ஏதோ ஒரு காரணம் காட்டி, அவைகளை நியாயப்படுத்தப் பார்க்கும் மனித மனங்களின் இயல்பு இங்கு தெளிவாகத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

Rather, they( இந்தத் திருமணங்கள்) had much higher purposes in the divine plan. These goals were mainly related to his mission of unifying Arabs, and also, not less importantly, intended to set standards (என்ன விதமான ஸ்டாண்டர்ட்ஸ்!!!) for reforming intractable customs that had caused so much misery and destruction for humanity."

12.) "By marrying them he was setting a precedent to reverse the taboo of widow marriage" (கைம்பெண்களுக்கு வாழ்வளிப்பதற்கு இதுதான் நல்ல வழியா? ஏன் தன் கீழுள்ள வாலிபர்களுக்குத் திருமணம் செய்வித்திருக்கலாமே!!!????). Secondly, he was paying back his due to some of the companions who had perished in battles leaving behind widows (நன்றிக்கடன்!)
இப்படியும் ஒரு காரணம்: The wisdom behind the Prophet (SAW)'s plural marriages is to show all possible types of marriage in Islam. (முன்மாதிரி? இந்த விளக்கங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறதா? ஆம், என்று சொல்வீர்களேயானால், அதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதில் எந்த பொருளுமில்லை - கால விரையம் மட்டுமே)

இதை விட, கீழ்வரும் பதிவு எனக்கு முக்கியமாகப் படுகிறது.The question of the Prophet’s multiple marriage should never pose a problem for the faithful when they heed the statement of Allah in the Qur’an concerning his marriages:
“(Hence) no blame whatever attaches to the Prophet for (having done) what God has ordained for him. (Al-Ahzab: 38).13.) எனது கேள்வி: கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் செயல்களை அல்லாவே இவ்வாறு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்வார் எனபதை நம்புவதா? அல்லது அப்படி அல்லாஹ் என்னிடம் சொன்னார் என்று சொல்வதை நம்புவதா? (குற்றம் சுமத்தப்பட்டவரே சாட்சி சொல்வதுபோல் அல்லவா இது இருக்கிறது!) Is it not strange to accept that God himslef would have come to give excuses to the excess of his disciple?

14.) இன்னொன்று. நம் ஊரில் இப்போதும் ஒன்று பார்க்க முடியும். Our law makers are the first law-breakers. நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் என்று மற்றவர்க்குச் சொன்ன நபி தான் மட்டும் எப்படி இப்படி...? "Those who regard him as the inventor of these Qur'anic rules see this as a case of a leader enjoying privileges he denied to his followers!"

15.)Dr Annie Besant(Dr Annie Besant in 'The Life and Teachings of Mohammad,' Madras, 1932)"But do you mean to tell me that the man who in the full flush of youthful vigour, a young man of four and twenty (24), married awoman much his senior, and remained faithful to her for six and twenty years (26), at fifty years of age when the passions are dying married for lust and sexual passion?" - இதற்குப் பதில் சொல்லவேண்டுமா? வயதிற்கும், பாலியல் உணர்வுகளுக்கும் தொடர்புண்டா என்ன? அதோடு 45-50 வயதிற்குப் பிறகே அவர் தன் இனத்தாருக்குத் தனிப்பெருந் தலைவராகிறார்; அது மட்டுமல்லாது, வாழ்வின் வசதிகள் கூடியாதாகவும், பெரும் செல்வந்தர் ஆனாரெனவும் ஹத்தீஸிலிருந்து தெரிகிறது. அதிலும், 50 வயதிற்குப் பிறகு இளம் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதால் அந்த பெண்களுக்கு வாழ்வா கிடைக்கும்; அது அவர்களுக்கு 'இரட்டை தண்டனை' அல்லவா?

16.) அன்றைய சமுதாயச் சூழலில் நான்கு மனைவியர் என்பது தேவையான ஒன்று; அதனாலேயே அவ்வாறு நபி சொன்னதாக நம் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது யாரும் அப்படி செய்வதுகொள்வதில்லை என்பதும் தெரியும். நபியைப் பின்பற்றும் நம் தற்காலத்து முஸ்லீம் நண்பர்கள் யாரும் அப்படி பலதாரக்காரர்கள் அல்ல; ஏனென்றால், இன்றைய வாழ்க்கைக்கு, சமூகத்துக்கு, வாழ்வியலுக்கு ஒத்து வராத காரியம். Simple logic: ஆகஅன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா?
பின் எப்படி என்றைக்கும், எல்லாருக்கும் அருளப்பட்டதாகக் குரானைச் சொல்ல முடியும்?

17.) இஸ்லாமியர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் உள்ளன; அவைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. முகமதால் அருளப்பட்ட இந்தக் கடமையை உலகில் உள்ள இஸ்லாமிய மக்கள் யாவரும் நிறைவேற்ற முடியுமா? ஏழை இஸ்லாமியருக்கு அது ஒரு கனவாகவே முடியும். பின் எப்படி இந்தக் கடமை கொடுக்கப்பட்டிருக்க முடியும். 90 விழுக்காடு முஸ்லீம்களுக்கு இந்தக் கடமையை ஒரு காலத்தில் நிறைவேற்ற முடியாது போகும் என்பது அல்லாஹுக்கு அன்றே தெரிந்திருக்காதா? அன்று, நபியால் இந்தக் கடமை கொடுக்கப் பட்ட போது இஸ்லாம் அன்றைய அரபு நாட்டில் மட்டுமே பரவியிருந்த மதம். அப்போது அந்தக் கடமையைச் செய்ய - குதிரைப் பயணமாகவோ, ஒட்டகப் பயணமாகவோ - சிறிது சிரமத்துடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். அதனால் அன்று அது சரி. ஆனால், இன்று எல்லா கண்டங்களிலும் பரவியிருக்கும் இஸ்லாம் மதத்தினர் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. அப்படியானால், ஏற்கெனவே கூறியபடி இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து வந்த மதமே - கிறித்துவம் போலவே - என்பது (எனக்குத்) தெளிவாகிறாது.

18.) என்னிடம் கடவுள் பேசினார்; நானே கடவுள்; - இப்படியெல்லாம் சொல்லி தனக்கென cult-களை உருவாக்குவது என்பது எல்லா மதங்களிலும் நடந்துவரும் ஒரு விதயமே. சான்றுகள்: நம்ம ஊர் கல்கி; அமெரிக்காவில் ஜோன்ஸ்;ஜப்பானில் ரயிலில் விஷ வாயு வைத்த கூட்டம்; இதுபோல் எண்ணற்றவர்கள் உண்டு - இவர்களின் சாயம் நாளாவட்டத்தில் வெளிறி விடுகிறது. இவர்கள் இப்படி சொல்வதற்கு அவரை நம்புவோர் யாரும் எந்தச் சான்றுகளும் கேட்பதில்லை. மதங்களில்தான் கேள்விகளே கிடையாதே! ஏசு பல அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டியதாகவும், இறுதியில் உயிர்த்தெழுந்தாரென்றும் - அவைகள் இட்டுக் கட்டப்பட்ட கதைகளாகவேகூட இருக்கட்டும் - சொல்லப்படும் காரியங்கள் அவரை நம்புவோர்க்குச் சான்றுகளாகத் தெரியும். ஆனால், முகமதுதான் கடவுளின் தூதன் என்று சொல்லியதை 'அன்று' அவர் கூட்டத்தினர் நம்பியது பெரிதல்ல; ஆனால் இன்றுவரை நம்புவதற்குரிய காரணங்கள் - ' ஊட்டப்பட்ட மத நம்பிக்கை என்பதைத் தவிர - ஏதாவது உண்டா? என் தாத்தா பாட்டியும் நம்பினார்கள்; , அப்பா அம்மாவும் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதா வளர்ந்தவர்களின் நம்பிக்கைகுரிய தூண்களாக இருக்கவேண்டும்? நமது நம்பிக்கைகளுக்கு ஏதாவது ஒரு சான்று வேண்டாமா? அது தேவையில்லையா? ஆத்மார்த்தமாக உணர்கிறேன் என்ற கிறித்துவர்களின் வழக்கமான பதிலில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், ஆத்மார்த்தமான உணர்வுகள் ஊட்டப்பட்டவை; simple brain-washing.

19.)தன் அம்மாவின் கைச்சமையலை அவ்வப்போது புகழ்ந்து பேசாதவர் யாரேனும் உண்டா? அதற்குக் காரணம் நம் அம்மாவின் உண்மையான சமையல் திறன் அல்ல. சிறு வயதிலிருந்தே our tastes are conditioned to her cooking - என்பதுதான் உண்மை. And it becomes the reference point. நம் மதங்களும் அப்படியே. We are conditioned to accept the beliefs and faiths as they were given to us from childhood. அதைவிட்டு கொஞ்சம் வெளியே எட்டிப் பார்த்தாலென்ன? அதில் என்ன தவறு? ஆனால், 'வெளியே' பார்த்து விடாதே என்பதில்தான் இந்த மூன்று ஆபிரஹாமிய மதங்களில்தான் என்ன ஒரு ஒற்றுமை! மூன்றிற்கும் உள்ள ஒற்றுமைகள் இதோடு முடிவடைவதில்லை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இன்னொரு முக்கிய ஒற்றுமை தெரியும் - இந்த மூன்று மதத்தினருமே தம் தம் மதமே, மார்க்கமே சரியான வழி என்ற நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள். யூத மதம் பிறப்பினால் வரும் ஒன்றாக இருப்பதால் அதை நாம் விட்டுவிடலாம்; அதோடு அவர்கள் மற்றவர்களைத் தம் மதத்தின் பக்கம் இழுக்க முயற்சிப்பதேயில்லை; ஆகவே, அவர்களைப்பற்றிய விவாதம் நமக்கு இங்கு தேவையில்லை. நானே ஒரு கிறித்துவனாக வளர்க்கப்பட்டாலும் எனக்கு புரியாததும், ஆச்சரியத்திற்குரிய விதயமாக இன்னும் இருப்பது இந்த இரு மதங்களிலும் உள்ளவர்களுக்கு மட்டும் மதத்தின் மேல் எப்படி இவ்வளவு ஆழமான நம்பிக்கையும், ஈடுபாடும், தீவிரமும் சிறு வயது முதற்கொண்டே வந்துவிடுகின்றன என்பதே. இதிலும் இஸ்லாம் ஒரு படி மேல்தான். இந்த மதத்தீவிரம் தீவிரவாதமாக மாறுவதும் தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. 'அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு' என்று பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், இவ்விரு மத நம்பிக்கையாளர்களுமே தன் மதமே உயர்ந்தது என்ற நம்பிக்கையால் ஒரு superiority complexயை ஏற்படுத்திக் கொண்டு, தம் கருத்துக்களைத் தவிர வேறு உண்மைகளே இருக்கமுடியாது என்ற தீவிர நம்பிக்கையால், தங்கள் மதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது; விமரிசிப்பவர்களின் விமர்சங்கள் எல்லாமே தேவ தூஷணம் (blaspehmy) என்ற முடிவுக்கே வருகிறார்கள். அவர்களின் மதங்கள் தரும் அறிவுரைகளைப் பார்ப்போமே: ஹல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி ....(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை அமல் படுத்தாமல் விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது இல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்துவிடுவான்...". ஏசுவோ என்னைத் தவிர உனக்கு வேறு கடவுளே இல்லை; நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன்' என்கிறார். இந்த மதத்தீவிரம் தேவைதானா? நானும், நீயும் நண்பனாயிருக்க மதம் தேவையா? 'மனிதம்' மட்டுமே போதாதா?

20) "இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது." அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.

"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?

இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?



21) என் சின்ன வயதில் மனிதன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அவன் கிறித்துவனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு மோட்சம் என்ற கருத்தைத்தான் சொல்லி வந்தார்கள். நாங்கள் சின்ன பசங்களாக இருந்த போது இதற்கு எதிர்க் கேள்வியாக காந்தி அல்லது அதுபோன்ற பெரிய, நல்ல, ஆனால், கிறித்துவரல்லாத மனிதர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் கூடவா மோட்சம் செல்ல முடியாது என்று கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர்களுக்கு மோட்சம் கிடைக்காது; வேறு என்ன என்பதை ஏசு முடிவு செய்வார் என்றுதான் கூறினார்கள் எங்களுக்கு வேதம் சொல்லித் தந்தவர்கள். ஆனால், பின்னால் இந்தக் கருத்து கிறித்துவத்தில் நன்றாகவே நீர்த்துப் போய் விட்டது; முன்பு போன்று 'வெட்டு ஒன்று; துண்டு இரண்டு' என்ற நிலை மாறிவிட்டது. ஆனால், இன்னமும் இஸ்லாம் அந்தக் கருத்தில்தான் வேரூன்றி நிற்கிறது. இது ஒரு பாஸிச கருத்தன்றி வேறல்ல.

22.) ஒரு பானைக்கு ஒரு சோறு: Satanic verses என்பது முகமது சாத்தானால் சோதிக்கப்பட்டு, அல்லாஹ் கூறாத ஒரு வசனத்தைக் குரானில் சேர்த்ததாகவும், பின்பு மனம் கசிந்து அதை எடுத்ததாகவும், இல்லை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் இரு தரப்பு வாதங்கள் உண்டு. முகமதின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுக்கு சர் வில்லியம் முய்ர் என்பவர் வைத்த பெயரே இது. இதை ஒரு நாவலுக்கு தலைப்பாக வைத்தார், சல்மான் ருஷ்டி. அதற்கு ஏன் இத்தனை வன்மம்? எந்த மதத்தின் மீதுதான் கிண்டல்களோ, விவாதங்களோ, எதிர்ப்புகளோ வரவில்லை. கீமாயணம் எழுதியதால், பிள்ளையார் சிலை உடைப்பால் இந்து மதம் நலிந்து விட்டதா? கடைசியாக எழுதப்பட்ட Da Vinci Code மாதிரி எத்தனை புத்தகங்கள், சினிமாக்கள் - கிறித்துவமதத்தைவிட்டு எல்லோரும் வெளியேறி விட்டார்களா? அதை விடுங்கள், கிறித்துவமதமும், இஸ்லாமும் எதிர் கொள்ளாத தடைகளா, இல்லை போர்களா; இந்த இரண்டு மதங்களுமே போடாத சண்டைகளா (பங்காளிகள் அல்லவா?) crusades, spanish inquisition - இதனாலென்ன, அந்த மதங்கள் மறைந்து விட்டனவா, என்ன? மதத்திற்கு எதிராக எழும் வாதங்களையோ, மற்ற விதயங்களையோ ஏன் மற்ற மதத்தினர்போல் இஸ்லாமியர்கள் எதிர் கொள்ளக் கூடாது? ஏனிந்த மதத்தீவிரம்? யாருக்குத்தான் அவரவர் மதங்கள் மேலும், கடவுள்கள் மேலும் பற்று இல்லை. பற்று சரி; தீவிரப் பற்று ஒரு 'மதக்காரனை' தன்னையே முதலில் காயப் படுத்திக் கொண்டு, பின் அடுத்தவனையும் காயப் படுத்த வைக்கிறது. அத்தகைய 'தீவிர மதப்பற்று' தேவைதானா?


Some references:


1. குரான் தர்ஜமா -திரீயெம் பிரிண்டர்ஸ், சென்னை
1. Revelation, Rationality, Knowledge and Truth -Mirza Tahir Ahmad
3. Introduction to Asian Religions - Geoffrey Parrinder, Oxford University Press

4. http://www.arches.uga.edu/~godlas/Sufism.html 5.http://www.islamonline.net/servlet/Satellite?id=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
6. http://answering-islam.org.uk/Hahn/Mawdudi/
7. http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_Faith
8.http://www.islamonline.net/servlet/Satellite?cid=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
9. http://www.islamicinstitute.ca/answers.php?id=362
10. http://www.themodernreligion.com/women/w_polyplural.htm
11. http://www.wefound.org/texts/Muhammad_files/Muhammad2.htm (Wisdom Behind Prophet Muhammad’s Plural Marriages Dr. Norlain Dindang Mababaya)

12.http://en.wikipedia.org/wiki/Islam 10.http://en.wikipedia.org/wiki/Pillars_of_Islam 13.http://en.wikipedia.org/wiki/Muhammad
14.http://en.wikipedia.org/wiki/Gabriel_%28archangel%29 15.http://en.wikipedia.org/wiki/Archangel
16.http://en.wikipedia.org/wiki/Fundamentalism
17.http://en.wikipedia.org/wiki/Ahmadiyya



கடைசிப் பதிவொன்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் தருகிறேன். அதன் பிறகு பின்னூட்டச் சாளரங்களைத் திறக்கிறேன். சரிதானே...?


*

அடுத்த பதிவுக்குச் செல்ல: 7ம் பதிவுக்கு.>


*

Wednesday, September 14, 2005

68. எனக்கு மதம் பிடிக்கவில்லை...8

தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.








"மதங்கள் எதுவும் எனக்குப் பிடிக்காது போயின; அதனால், எனக்கு மதம் பிடிக்கவில்லை."




பின்னூட்டமிட நினைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: எனக்கு சமயங்களில் ஏன் நம்பிக்கை இல்லாமல் போனதென்பதைப் பற்றி விலாவாரியாக எழுதியாயிற்று. அதனால், கடவுளின் உந்துதலால் எழுதப்பட்டதாகவோ, கடவுளே தந்ததாகவோ நம்பப் படும் சமய நூலகளின் மேலும் நம்பிக்கையில்லை. பின் ஏன் அவைகளை மேற்கோள் காட்டினாய் என கேட்டால், அவைகளில் என் பார்வையில் நான் கண்ட குழப்படிகளையோ, அல்லது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளுக்கு எதிர் வாதமாக அவர்களே நம்பும் 'வார்த்தைகளையே' பயன்படுத்தவோதான் அவைகளை மேற்கோளிட்டேன். ஆகவே, உங்கள் எதிர் வாதங்களில் நீங்கள் மேற்கோள்களோடு வந்தால் அவைகளை நான் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சமய நூல்களின் மேற்கோள்களின்றி சாதாரண மனித அறிவுக்கு எட்டும் (எனக்கு அவ்வளவே முடியும் என்பதால்..) காரணங்களையோ,விவாதங்களையோ முன் வைத்தால் என்னால் முடிந்த அளவு எதிர்வினையாற்ற (react) முயல்வேன்.


சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகள்:

சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகளால் எனக்கு நானே சமயங்கள், சமய நம்பிக்கைகள் மேல் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. முடிவு என்ன என்பதை பிறகு கடைசியில் காண்போம்; இப்போதைக்கு நான் கண்ட ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

1.) carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.

எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம்.

2.)"இரண்டாம் வருகை", "அந்தி நாள்", "தீர்ப்பின் நாள்" - போன்ற பல பெயர்களில் உள்ள கோட்பாடுகளும் பல சமயங்களில் காணப்படுகின்றன. தீர்ப்பின் நாள் - judgment day - கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஒன்றே. இந்து சமயத்தில் கடவுளின் பத்தாவது அவதாரமாக எதிர் பார்க்கப்படுவதும், இறுதிக் காலமான கலியுகத்தில் அழிக்கும் 'கல்கி' அவதாரமாக கடவுள் வருவாரென்பதும் உள்ளது. 'இறுதி எச்சரிக்கை' என்று ஏன் ஒன்று - கல்விச்சாலைகளில் நம்மைக் கலங்க வைக்கும் final exam மாதிரி - இருக்கவேண்டும்? யோசிப்போம்.

3.) "திரித்துவம்" - கடவுளின் மூன்று நிலைகள், அல்லது கடவுளர்களே மூன்றாக இருப்பது என்பதும் பல சமயங்களில் பரவிக்கிடக்கும் ஒரு கோட்பாடு. கிறித்துவத்தில் - பிதா, மகன், ஆவி என மூவர்; ஆனாலும் ஒரே கடவுள். இந்து சமயத்தில் - பிரம்மா (ஆக்கல்), விஷ்ணு (காத்தல்), சிவன் (அழித்தல்) என முக்கடவுள்கள். தாவோயிஸத்தில் 'the three pure ones'.

4.) ஆத்மா, ஆன்மா என ஏறத்தாழ எல்லா மதங்களுமே ஒரே மாதிரியாகவே பேசுகின்றன. இந்த ஆத்மா /ஆன்மா அழியாத ஒன்று என்ற நிலைப்பாடும் எல்லாரிடமும் உண்டு. ஆனால், ஆபிரஹாமிய மதங்கள், கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார் என்ற நம்பிக்கையால், மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டென்கிறார்கள். இந்து சமயமோ எல்லா உயிர்க்கும் ஆன்மா உண்டென்கிறது. மனிதன் இறந்த பிறகு அவனுக்குக் கிடைக்கும் (காரட்டோ, குச்சியோ) வெகுமதியோ, தண்டனையோ அந்த ஆத்மாவினால், ('நித்தியத்திற்கும்') அழிவின்றி காலா காலத்துக்கும் அனுபவிக்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது.

5.) ஓஷோ சொகிறார்: "All religions are very oppressive." உண்மைதானே. கடவுள் பெயரால் மக்கள்தான் எப்படியெல்லாம் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். பாத யாத்திரை, விரதம், உருளல், பிறழல், உடம்பெல்லாம் அலகு - இப்படி ஒரு பக்கம். தங்கள் கைகளில் ஆணிகளை அடித்துக் கொள்ளும் கூட்டம் இன்னொரு புறம். தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு உடம்பெல்லாம் ரத்த விளாராக ஆக்கிக்கொள்ளும் மதத்தினர் இன்னொரு புறம். எந்தக் கடவுளும் இப்படியெல்லாம் பண்ணிக்கொள் என்று கூறியதாகத் தெரியவில்லை.

அதேபோல, எல்லா மதங்களுமே ஏழ்மையை பெருமைக்குரிய விதயமாகவே பார்க்கின்றன. எதற்காக ஏழ்மை உயர்த்தப் படவேண்டும்? மக்களில் பலரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களைக் 'குழுமை'ப் படுத்தவா?
செக்ஸ் ஒரு தகாத விதயமாக, மறைக்கப் படவேண்டிய ஒரு விதயமாக, ஒடுக்கப்படவேண்டிய காரியமாக ஏன் கருதப்பட வேண்டும். பசி போல அதுவும் ஒரு அடிப்படை உணர்வு. பசி என்பதால் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுகிறோமா? அதே போல் செக்ஸ் சிந்தனைகளும் இருந்தால் போதுமே. celibacy ஏன் மதங்களால் தீவிரத் தன்மையோடு உயர்த்தப் படுகின்றன?

6.) நம்பிக்கையாளர்களிடம் அதிகமாகக் காணக் கிடைக்கும் இன்னொன்று - கடவுளர்கள் நடத்தும் அதிசயங்கள் மேலுள்ள நம்பிக்கைகள். எண்ணெயும், தண்ணீரும், தீச்சட்டிகளும், தாயத்தும்,விபூதியும், மந்திரித்தலும் - எல்லாம் எவ்வளவு நம்பிக்கைகளைத்தான் வளர்க்கின்றன! Miracles எனப்படும் சமய அதிசயங்கள் எந்த மதத்தில்தான் இல்லை. ஆனால், அதில் ஒரு வேடிக்கை: ஒரு மதத்தினரின் அதிசயம் மாற்று மதத்தினருக்கு வேடிக்கையாக இருப்பதுதான். நானே இதைச் சோதித்திருக்கிறேன். கிறித்தவர்களிடம் கர்ணன் குந்தவிக்கு சூரிய பகவானால் பிறந்த முறையைச் சொன்னால் 'ஐயோ, என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது' என்று சொல்வது வழக்கம். அவர்கள் மறந்து போகும் விதயம், ஏசு மரியாளுக்குப் பிறந்ததற்கும், அந்த இந்துக் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எல்லாமே நம்பிக்கையைப் பொருத்த விதயங்களே.ஏசு பலரைக் குணமாக்கினாரென்றால், பாண்டிய மன்னனுக்கு சிவனடியார் விபூதி கொடுத்து குணமாக்கினார்; கண்ணில் மண்ணை வைத்து குருடனுக்குக் கண் கொடுத்தாரென்றால், திருநாவுக்கரசருக்கு பேச்சு வந்தகதை நினைவுக்கு வருகிறதே. ஏசு துர்ஆவிகளை பன்றிக்குள் செலுத்தி கடலுக்குள் விரட்டினாரென்றால், இங்கே இந்து சமயத்தில், மதுரையில் நரிகள் பரிகளாயினவே. போதும்; சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்து,பக்தர்களுக்கு கடவுளர்கள் 'காட்சி'தருவது (apparitions). “ Many mystics have visions, and the envisioned objects almost inevitably reflect the cultural background of the mystic. Protestants never envision the Virgin Mary, but Catholics do; Jews never envision the resurrected Jesus, but Christians do; Buddhists and Hindus envision divine messengers quite different from those encountered by Western mystics'(Reason and religion” An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp306 ). இவர் சொல்வது போல, அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் அந்தந்தக் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்; மாறி வருவதில்லை! ஆனால், எனக்கும் இப்படி 'ஒரு காட்சி' கிடைத்தது. அது பற்றிய விபரம் அறிய அங்கே போகவேண்டும்.

7.) நம் உலகம் சூரியக் குடும்பத்தில் ஒரு சிறிய பகுதி; இந்தச் சூரிய குடும்பமோ 'பால் வீதி'யின் மிக மிகச் சிறிய பகுதி; இந்த பால் வீதியோ ஒரே ஒரு காலக்ஸி; இதுபோல் எண்ணிக்கையிலடங்கா காலக்ஸிகள். அப்படியென்றால், பரந்துபட்ட இந்த பிரபஞ்சத்தில் நம் உலகம் எவ்வளவு இத்தனூண்டு (insignificant)! ஆனால், பாருங்கள் எல்லா சமயங்களுமே anthropocentric-ஆக, மனித குலத்தை மட்டுமே கடவுள்கள் சுற்றி சுற்றி வந்ததாகப் பேசுவது,...அவர்களை மட்டுமே உய்விக்க அவதரித்தார்கள் என்பது...யோசித்துப் பாருங்களேன்..எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

8.) 'Making of pudding is in the eating' என்பார்கள். அம்மா செய்த சமையல் நல்லா இருக்கிற அன்னைக்கு சட்டி காலி. மாற்றியும் சொல்லலாம். சட்டி காலின்னா அன்னைக்கு அம்மா சமையல் டாப்! Process produces results; results prove the process. எல்லாம் வல்ல, நல்ல, கருணை நிறைந்த,அன்பே உருவான கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் உலகம் இப்படியா இருக்கும்? இல்லை..இல்லை..கடவுள் நல்லாதான் படைச்சார்; நானும், நீயும்தான் - அல்லது, உன்னமாதிரி ஆளுங்களாலதான் உலகம் கெட்டுப் போச்சுன்னா - அடிப்படை தப்பு இருக்கிறது அந்தக் கேள்வியில். "If this chaotic world is the creation of a god, it tells you that god had bungled! The theistic rationalists of the eighteenth century argued that when God created the world, he did either a perfect job or an imperfect job. If he did a perfect job, there was no need for him to interfere with the orderly workings of events within the world, since any deviation from perfection would be for the worse. If there was a need for him to suspend the laws of nature, this implied that he had bungled the job in the beginning. (Reason and Religion, pp 94)


9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. மூட நம்பிக்கையோ, என்னவோ!!
NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.
நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?

மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.(Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves - perhaps our actual selves, perhaps our ideal selves - on the universe as a whole....... The image of God as a divine father has strong Freudian overtones”.)Reason and religion" An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285. இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles. என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.

வாசிக்கும் நம்பிக்கயாளர்களுக்கு - அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் - கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த 'முடிவு'க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,..........

அப்படியே நீ சொல்வதுபோல மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்றால், அப்படித் தோன்றிய மதங்களின் நோக்கம் என்ன? அப்படிப் படைத்த நம் முன்னோருக்கு அதற்குரிய நோக்கம் என்ன? - என்பது உங்கள் கேள்வி.

பதில்: எனக்கும் தெரியாது. ஆயினும், இப்படி இருக்குமா?

1. Policing the society? ஒழுங்கா நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பார்கள். பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்றால்தான் ஒரு பயம் வரும். அந்த பயம் வரத்தான் புத்திசாலி முன்னோர்கள் சமயங்களை ஆரம்பித்திருப்பார்களோ? அதனால்தானோ எல்லா மதங்களும் கடவுளையும், தண்டனைகளையும் சேர்த்தே சொல்லி நம்மை மிரட்டி வைத்திருக்கின்றன?

2. Psychotherapy? இது என் வாழ்க்கையில் நானே அனுபவித்தது. யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?

வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம் முழுமையாகச் சரணடைய ஒரு 'இடம்' வேண்டும்.(கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இதோ அந்த வரிகள் - மனத்தின் வேதனையை அனுபவித்துச் சொல்லும் அந்தக் கவிதை வரிகள்:

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் - எவ்வளவு சரியான வரிகள். பல துயர நேரங்களில் இந்த மனித குலத்தின் மேல் வெறுப்பு வருவதில்லையா?

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே)

எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் - மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் - உடனடியாக.

இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?


மனிதம் போதுமே!

I REST MY CASE !




******************* ******************* *****************


பிடித்த சில மேற்கோள்கள்:

Some quotes:

NIETZCHE: Men would rather believe than know, have the void as purpose than be void of purpose.

E.O. WILSON (Sociobiologist): The enduring paradox of religion is that so much of its substance is demonstrably false, yet it remains a driving force in all societies.

RAPPAPORT (anthropologist): Sanctifications transform arbitrary into the necessary and regulatory mechanism which are arbitrary, are likely to be sanctified. The extent that the roles have been sanctified and mythologized, the majority of the people regard them as beyond question and disagreement is defined as blasphemy.

ALFRED J. AYER (philosopher) in “The Claims Of Theology” “If one thought of the world’s history been planned by its creator, a strong case could be made for inferring that he is malevolent; if he is unaware of what is happening here, then he cannot be omniscient and omnipotent and if does nothing about it, then he most definitely cannot be benevolent!”

  CHARLES DE MONTESQUIEU:    If triangles have gods, their gods would be triangles.

? : Thank God! I’m an atheist !! 




You talk to God, you're religious. 
God talks to you, you're psychotic.”Doris Egan

I REST MY CASE !









*