Monday, April 27, 2009

307. மம்மி குடுத்த குச்சி முட்டாய்

*

*** மம்மி ஈழ நாடு வாங்கித் தரப்போறாங்களாம். எங்கிருந்துன்னு தெரியலை; ஒரு வேளை கொடநாட் எஸ்டேட்டுல இருந்து தயார் பண்ணுவாங்களோ என்னவோ?
இப்படி ஒரு குச்சி முட்டாய் மம்மி தர்ரன்னு சொன்னதும்தான் எத்தனை எத்தனை பெயர் வாயில் ஜொள்ளு.

*** தேர்தல் வாக்குறுதின்னா என்ன .. காசா பணமா அவுத்து உட வேண்டியதுதானே... கச்சத்தீவு பத்தி கூட முந்தி ஒரு வாக்குறுதியைத் தூக்கிப் போடலை .. அதுமாதிரி இதுவும் ஒண்ணு இருந்திட்டு போவுது.

*** போன தேர்தலில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்னும் போதுகூட ஒண்ணும் தோணலை. ஆனா, வீட்டுக்கொரு கலர் டிவி என்றதும் .. இந்த ஒரு தேர்தல் அறிக்கைக்காகவே திமுக தோற்று விடும். இது நடக்கிற காரியமா? அதைவிட நடக்க வேண்டிய காரியமா? வரிப்பணத்தை இப்படி சூறை விடலாமா? நிச்சயமா இந்த ஒரு வாக்குறுதியாலேயே மக்களுக்கு எரிச்சல் வந்து, அதனால திமுக வீட்டுக்குப் போகப் போகுதுன்னு அறியாப்பிள்ளையா நினச்சேன்.

ஆனா பாருங்க.. நாடே, அதாவது நம் தமிழ்நாடே இந்த வாக்குறுதியால் ஆடிப் போக, அடுத்து மம்மியும் நானும் குடுப்பேனே அப்டின்னு சொல்லிப் பாக்க, நம்ம மக்கள் அதெல்லாம் அழுவுணி ஆட்டம்; முதல்ல சொன்னவங்களுக்குத்தான் ஓட்டு அப்டின்னு செம குத்து குத்திட்டாங்க.

*** ஆனா இந்த தடவை மம்மி சுதாரிச்சிக்கிட்டாங்க. அவங்கதான் தமிழ் ஈழம்னு முதல்ல் சவுண்டு உட்டுருக்காங்க. அதனால் நமது ஓட்டு மம்மிக்கே அப்டின்னு நம்ம பதிவர்களில் பலரும் களத்தில் குதிச்சாச்சு.

*** அது என்னமோ, தலையில் பேன் கடிச்சா கொள்ளிக்கட்டைய வச்சா சொறிஞ்சிக்கிறது அப்டின்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குது.

*** இந்த தடவை திமுகவிற்கு என் ஓட்டு இல்லை என்று முதல்லேயே முடிவு பண்ணியாச்சு. யாருக்குப் போடலாம்னு இன்னும் யோசிச்சி முடிக்கலை.


*** ஆனால் எப்பவும் அதிமுகவிற்கு என் ஓட்டு இல்லைன்னு எப்போதோ தீர்மானித்ததுதான். basic decency - அடிப்படை நாகரீகம்னு சொல்லுவோமே - அது ஒவ்வொருவருக்கும் மாறும். நான் வச்சிருக்கிற அளவு கோலுக்கு மம்மி எப்பவும் வரப்போறதில்லை. அதினால எப்பவோ, எப்பவுமே இல்லை அப்டின்ற முடிவெடுத்தாச்சி.

*** ஆனா இப்ப நம் பதிவுகளில் அடிக்கிற 'மம்மி அலை'ய நினச்சா பயமாத்தானிருக்கு.


*** ஆனாலும் என்ன,

நாம் எவ்வளவோ பாத்துட்டோம்; இதையும் பாத்திர மாட்டமா ...!

Sunday, April 19, 2009

306. கடவுள் என்றொரு மாயை ... 5

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 3: ARGUMENTS FOR GOD'S EXISTENCE (pp100 - 136)


Can omniscient God, who
Knows the future, find
The omnipotence to
Change His future mind?

(என் முந்தைய பதிவொன்றில் இதை ஒட்டிய என் கேள்விகளை வைத்திருந்தேன்.)

*

எனது கல்லூரி இளங்கலை நண்பன் ஒருவன் மிகவும் கடவுள் நம்பிக்கையாளன். அவன் ஒரு முறை தன் தோழியோடு ஸ்காட் தீவு ஒன்றில் தங்கியிருக்கும்போது நள்ளிரவில் சாத்தானின் குரல் கேட்டு விழித்தார்களாம். அந்தக் குரல் எழுப்பிய பய்ங்கரத்தைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாதெனக் கூறினான்.
பின்பு ஒரு முறை விலங்கியல் நிபுணர்கள் சிலரோடு இருக்கும்போது நான் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிய போது அவர்கள் அதிரடியாகச் சிரித்து 'Manx shearwater' என்றார்கள். இந்தப் பெயருடைய பறவை ஒன்று இதுபோல் நாராசமான குரலெழுப்பக் கூடியது என்றும், அதனாலேயே அது 'Devil Bird' (பேய்ப் பறவை) என்று அழைக்கப் படுவதாகச் சொன்னார்கள்.

*

இதைப் போலவே நம்பிக்கையாளர்கள் பலரும் தங்களுக்குக் கடவுளின் 'தரிசனம்' கிடைத்ததாகக் கூறுவதுண்டு. எனக்கும் கூட அப்படி ஒரு "தரிசன அனுபவம்" என் இளவயதில் கிடைத்ததுண்டு. இன்னும் பசுமையாக அது மனதில் இருக்கிறது.


*

பீட்டர் (Peter Sutcliffe) என்ற ஒரு கொலைகாரன் தன் காதில் பெண்களைக் கொலை செய்யச் சொல்லி ஏசுவின் குரல் ஒலித்ததாலேயே தான் பெண்களைக் கொன்றதாகக் கூறினான். George Bush கடவுள் ஈராக் மீது படையெடுக்க தான் கடவுளால் ஏவப்பட்டதாகக் கூறித்தான் அப்போரைத் தொடங்கினார்.(pp112)

*

Sam Harris என்பவர் தன் 'The End of Faith' என்ற தன் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: மிகுந்த நம்பிக்கையாளர்களை நாம் ('religious') மத நம்பிக்கையாளர்கள் என்கிறோம். அனால், அவர்களை mad, psychotic ,or delusional என்றே அழைக்க வேண்டும் ....

மத நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்தி பிசகியவர்கள் அல்ல; ஆனல் அவர்களது அடிப்படை நம்பிக்கைகள் அறிவற்றவையே. (pp113)

*

மத்தேயுவும் லூக்காவும் தங்களது விவிலியங்களில் ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகையில் ஆளுக்கொரு விதமாக சொல்லியிருக்கிறார்கள். .. தாவீதின் குலத் தோன்றல் என்று எழுதப்பட்டிருப்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில், லூக்கா ஏசுவும் மரியாளும் பெத்லேகம் சென்றதாக எழுதியுள்ளார். உண்மையிலேயே தாவீது இருந்திருந்தாலும் அவர் ஏசுவின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவர். அவரது பிறப்பிடத்திற்குத்தான் அவரது வாரிசுகள் மக்கள் கணக்கெடுப்பிற்காக செல்ல வேண்டும் என்று எப்படி ரோமர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்? இதனாலேயே, Lane Fox தனது நூலான The Unauthorised Version-ல் லூக்காவின் கதை வரலாற்றுப்படி நடந்திருக்க முடியாததாக உள்ளது என்கிறார். (pp119)

*

Robert Gillooly ஏசு கதையில் வரும் - அவரது பிறப்பில் கீழ்த்திசையில் உதித்த விண்மீன், குழந்தை ஏசுவை ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள், அவர் வாழ்வில் ஏசு நடத்திய அதிசயங்கள், கொல்லப் பட்டது, உயிர்த்தெழுந்தது, பரலோகத்திற்கு எழுந்தருளியது - இவை எல்லாமே ஏற்கெனவே Mediterranean and New East regions-களில் இருந்துவந்த மதங்களில் இருந்துவந்த கதைகளே.

மத்தேயு், ஏசு தாவீதின் குடும்பத்தில் அவதரித்தவர், பெத்லேகமில் பிறந்தார் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கும், லூக்கா, ஏசுவை மற்ற சாதியினருக்கும் பொதுவாக்க நினைத்ததால் கன்னிப்பிறப்பும், ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள் கதையையும் இணைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நடுவில் எழுந்த பிரச்சனைகளே இந்த இருவரின் விவிலியங்களில் உள்ள வேற்றுமைகளுக்கான காரணம். ஆனாலும் இந்த வேற்றுமைகள் மிகத்தெளிவாக இருந்தாலும் அவைகளை நம்பிக்கையாளர்கள் கண்டு கொள்வதில்லை.

எப்படி இவைகள் வேத வார்த்தைகள் என்று நம்பும் மக்கள் இது போன்ற வித்தியாசங்களைக் கண்டு கொள்வதில்லை? மத்தேயு ஏசுவிற்கும் தாவீதுக்கும் நடுவே 28 பரம்பரைகள் இருந்ததாகச் சொல்கிறார். லூக்காவோ 41 பரம்பரைகள் நடுவில் இருந்ததாகச் சொல்கிறார். இரண்டிலும் வரும் பெயர்கள் ஒத்திருக்கவுமில்லை. அதோடு ஏசு உண்மையிலேயே கன்னித்தாயின் மூலமாகப் பிறந்திருந்தால் அவரது தந்த ஜோசப்பின் பரம்பரை தேவையற்றதாகி விடுகிறதே! (pp120)

*

புதிய ஏற்பாட்டின் 4 விவிலியங்களும் ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு விவிலியங்களுக்கும் மேலானவைகளிலிருந்து (தாம்ஸ், பீட்டர், நிக்கோடீமஸ், பிலிப். பார்த்தலோமியோ, மரிய மக்தலேனாள் போன்றோரின் விவிலியங்களிலிருந்து..)குத்து மதிப்பாக (arbitrarily) தெரிந்தெடுக்கப்பட்டவையே.(pp121)

*

மொழிபெயர்ப்புகளினால் ஏற்படும் பல மாற்றங்களுக்கு சில உதாரணங்களைத் தருகிறார்:
ஜோசப் தச்சு வேலை செய்தவர் என்று சொல்லப்படிகிறது. tekton என்ற க்ரீக் சொல்லுக்கு அந்தப் பொருளுண்டு.இந்த சொல்அராமிக் மொழியின் naggar என்ற சொல்லின் மொழியாக்கம். ஆனால் இந்த அராமிக் சொல்லுக்கு தச்சன் என்ற பொருளோடு, படித்தவன் என்ற பொருளும் உண்டு.

அடுத்து, ஹீப்ரு மொழியில் almah - இளம்பெண் - என்ற சொல்லே க்ரீக்கில் parthenos கன்னிப்பெண் என்று மொழி பெயர்க்கப்பட்டு ஏசுவின் பிறப்பு ஒரு கன்னித்தாயிடம் என்பதாக மாறியுள்ளது.

விவிலியங்களில் உள்ள இந்த மொழிபெயர்ப்பு வினோதங்களுக்குப் போட்டியாக குரானில் ஒரு வேடிக்கையான மொழி பெயர்ப்பு நடந்துள்ளது. Why I am not a muslim? என்ற நூலை எழுதிய Ibn Warraq தன் கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது: மார்க்கத்திற்காக தன் உயிரைக் கொடுக்கும் மதத் தியாகிகளுக்கு 72 "கன்னியர்கள்" சுவனத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது தவறு. ஏனெனில், கன்னியர்கள் என்பது ஒரிஜினல் சொல்லின் தவறான மொழியாக்கம்; உண்மையில் அது - white raisins of crystal clarity - அதாவது 72 நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்பதாகும்! இந்த உண்மை மட்டும் எல்லாருக்கும் தெரிந்திருந்தால் எத்தனை எத்தனை மனித வெடி குண்டுகள் வெடிப்பு தடுக்கப்பட்டு, எத்தனை எத்தனை மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்க முடியும்? (pp123)

*

BERTRAND RUSSEL: பெரும் விஞ்ஞானிகள் பலரும் கிறித்துவ மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். ஆனால் தங்கள் வருமானம் தடைபட்டுப் போய்விடுமே என்பதால் பலரும் அந்த உண்மையை மறைத்துவிடுகிறார்கள். (pp123)

*

Nobel prize-winning Scientific Christians பற்றியான ஒரே ஒரு வலை மனையில் (web site) ஆறே ஆறு விஞ்ஞானிகளின் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்களில்லை! மீதி இரு்வரில் ஒருவர் சமூகக்காரணங்களுக்காக மட்டும் கோவிலுக்குச் செல்பவர் என்பது எனக்குத் தெரியும். (pp126)

அமெரிக்க மக்களை விடவும் அமெரிக்க விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையற்றவர்களே. .. and the most distinguished scientists are the least religious of all. (pp127)

*

Results of Paul Bell's meta-analysis in Mensa Magazine in 2002: படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அட! இந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கே! (pp129)

*

=====================================

இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்: JESUS PAPERS

வாசிக்கக் காத்திருக்கும் நூல்: Ibn Warraq's WHY I AM NOT A MUSLIM?


====================================


next chapter: 4. WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD


*

Thursday, April 09, 2009

305. கடவுள் என்றொரு மாயை ... 4

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*

கடவுள் என்றொரு மாயை


*


கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION
THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


CHAPTER 2: THE GOD HYPOTHESIS
PART II

*

ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:


முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது Francis Galton. இவர் டார்வினின் (ஒன்றுவிட்ட!?) சகோதரர். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எல்லா கோயில்களிலும் அந்த நாட்டின் அரச குடும்பத்தினருக்காக மக்கள் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது வழக்கம். மற்ற சாதாரண மக்களுக்கு அவர்களின் உற்றார் உறவினர்கள் மட்டுமே வேண்டுவார்கள். அப்படியானால், அரச குடும்பத்தினர் மற்ற சாதாரணர்களை விடவும் திடகாத்திரமானவர்களாக, ஆரோக்கியத்தோடு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அப்படியேதும் இல்லை.

வேறு வேறு நிலங்களில் நின்றுகொண்டு அங்குள்ள பயிர்களுக்காகவும் ஜெபித்தார். ஆனால் அந்தப் பயிர்கள் ஜெபிக்கப்படாத பயிர்களை விடவும் அதிக விளைச்சல் எதுவும் தரவில்லை!


சமீபத்தில் 2006-ம் ஆண்டு ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. "Study of the therapeutic effects of intercessory prayer (STEP) in cardiac bypass patients". American Heart Journal151: 4, 2006, 934 - 42. நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள Templeton Foundation.
விளையாட்டல்ல; இதற்காக செலவிடப்பட்ட காசு: 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!

மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே. (இந்த ரெண்டை வச்சே கடவுள் சரியான நோயாளியைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா என்ன!)வழிபாடு நடத்தியவர்கள் வேறு வேறு தொலைவில் உள்ள மாநிலங்களில் உள்ள நம்பிக்கையாளர்கள்.

நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும். முதலிரண்டு குழுவும் ஜெபத்தின் / தொழுகையின் தாக்கம் குறித்து அறிய. மூன்றாவது குழு ஜெபத்தால் ஏற்படக்கூடிய மன-உடல் பாதிப்புகளைக் கண்டு கொள்ள.

RESUTLS & DISCUSSION !!

மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.

சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் intersting ஆன விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், 'பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ' என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.

கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித சால்ஜாப்புகள் / காரண காரியங்கள் தரப்பட்டன. கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் (Oxofd theologian: Richard Swinburne). Swinburne ஏற்கெனவே ஹிட்லரால் யூதர்கள் கொல்லப்பட்டதுகூட ஒரு விதத்தில் நல்லது என்று சொன்னவர். இவர் மட்டும் இல்லை; வேறு சில மத நம்பிக்கையாளர்களும் இந்த சோதனை முடிந்த பிறகு 'ச்சீ .. சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போன்ற கருத்து முத்துக்களை உதிர்த்தார்கள். ஆனால், ஒரு வேளை இந்தச் சோதனையில் வழிபாடுகளுக்கு வலு உண்டு என்பதுபோன்ற முடிவு கிடைத்திருந்தால், இதே நம்பிக்கையாளர்கள் அவைகளை அப்போது சும்மா விட்டிருந்திருப்பார்களா? (91)

*

புத்தகத்தில் அடுத்த பகுதி: chapter 3: ARGUMENTS FOR GOD'S EXISTENCE




*

Sunday, April 05, 2009

304. பதிவர் சந்திப்பும் .. இன்னும் தொடரும் ஓட்டமும் ... 4


*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்...1
2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 2
3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!
4.291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 3


*

இரு நாட்களுக்கு முன்பு (மூன்றாம் தேதி) மாலை பதிவுலக நண்பர் ராம் வீட்டுக்கு வந்திருந்தார். இரு பதிவர்கள் மட்டுமே சந்தித்துப் பேசினாலும் அதுவும் ஒரு பதிவர் சந்திப்புதானே. அன்று என் பக்கத்து வீட்டு நண்பர் பழனியும் எங்களோடு இணைந்து கொண்டார். Two is company; three is crowd என்பதற்கேற்ப எங்கள் "கூட்டம்" இனிதே நடந்தது.

பழனி, ராம், நான் என மூவரும் சிறிது நிமிடங்கள் ஏதேதோ பேசியவர்கள் எப்படியோ முந்திய பதிவர் சந்திப்பைப் பற்றிய பேச்சு வர, அப்படியே தமிழ் எழுத்தைப் பற்றிய பழைய விவாதம் தொடர ஆரம்பித்தது. அது போனது ஏறத்தாழ இரண்டரை மணி நேரம்.



ஒரு முக்கிய புள்ளியில் ராம் ஜாலி ம்பர், tbcd போலவே தமிழ் .. தாய் .. போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது தெரிந்தது. மற்ற எந்த மொழிக்காரர்கள் போலில்லாமல் தமிழ் மொழியை மட்டுமே '(தமிழ்க்) கடவுள்' என்ற நிலையில் வைத்திருக்கிறோம் நாம் என்றார் ராம். அதுதான் பிரச்சனையே என்றேன் நான். என் வீட்டு தொலைபேசியைப் போல் மொழி எனக்கு ஒரு கருவி; அது 'என்னுடைய' கருவி என்ற முறையில் அதன் மீது எனக்கு ஒரு பிடித்தம், நெருக்கம் இருக்கலாமேயொழிய அதை கன்னித்தமிழ், தமிழன்னை, தமிழ்க்கடவுள் என்றெல்லாம் உயர்த்துவதாலேயே பிற மொழிக் கலப்பு போன்றவைகள் உங்களைப் போன்ற தமிழன்பர்களுக்கு நிரம்பவே உறுத்துகிறது. மொழியை ஒரு கருவியாக மட்டும் பார்த்தால் இந்தப் பிரச்சனை இல்லையென்பது என் விவாதமாக இருந்தது. ராமால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றியது.



தமிழ்க் காதலில் tbcd, ஜாலி ம்பர் போலவே ராமும் அவர்களை ஒத்திருந்தார். ஆனால், இவரது வேறொரு தமிழ்க்கொள்கை அவர்களிலிருந்து முற்றிலும் வேறாக, அடுத்த எதிர்முனையில் இருப்பது போல் தோன்றியது. ராம் இயல்பான தமிழில் பதிவுகள் எழுதும் கொள்கை பற்றிப் பேசினார். அதுவே புதிய பதிவர்களுக்கு எழுதும் ஆர்வத்தைத் தரும்; ஆகவே பேச்சுத் தமிழை எழுத்துத் தமிழாக எழுதுவது சரி என்று வாதிட்டார்.


இதைப் பற்றி நான் முன்பிட்டிருந்த பதிவைப் பற்றிக் கூறினேன். தமிழில் ஆங்கிலம் போலல்லாமல் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் மிகவும் ஒன்றோடொன்று விட்டு விலகி நிற்பவை.அதில் எழுத்துத் தமிழை முறையாகப் பயன்படுத்துதலே சரி. மொக்கை, ஜாலி பதிவுகள் என்ற முறையில் சில பதிவுகளை,பின்னூட்டங்களை பேச்சுத்தமிழில் எழுதுவது சரியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் அப்படி எழுதுவது தமிழ் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றேன். ராம் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. விவாதம் போய்க்கொண்டிருந்த போது, ராம், "இதைப் பற்றி ஆராய்ஞ்சி சொல்லணும்..." என்று சொல்ல, நான் அவரிடம் எழுதும்போது, 'இதைப்பற்றி ஆராய்ஞ்சி .. ' என்று எழுதலாமா, இல்லை, 'இதைப்பற்றி ஆராய்ந்து ...' என்று எழுதவேண்டுமா என்ற கேள்வியை வைத்தேன்.



ராம் 'இதைப்பற்றி ஆராய்ஞ்சி .. ' என்று எழுதினால் போதும் என்றார். நான் அது தவறு என்றேன். 'ஆராய்ந்து..' என்றுதான் எழுதவேண்டும் என்றேன். எங்கள் விவாதம் அந்தப் புள்ளியில் முடிந்தது.

இங்கே விவாதம் தொடருவோமா ...

Thursday, April 02, 2009

303. கடவுள் என்றொரு மாயை ... 3

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

2

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*

கடவுள் என்றொரு மாயை

*






THE GOD DELUSION
THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


CHAPTER 2: THE GOD HYPOTHESIS

"The religion of one age is the literary entertainment of the next." -- RALPH WALDO EMERSON

*

கதைகளில் வரும் மிகவும் மோசமான பாத்திரப்படைப்புகளையும் தாண்டியதாகவே பழைய ஏற்பாட்டின் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொறாமை, அதன் மீதான பெருமிதம்; சின்னத்தனமான (petty), நீதியற்ற, மன்னிக்காத, பழிவாங்கும், இனவாதியான, குழந்தை, சகோதரன், பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் கொல்லும், வீண்பெருமையடிக்கும், பெண்களை வெறுக்கும், தலைக்கனம் மிகுந்த, மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் கொள்ளும் மிக மோசமான ஒரு பாத்திரப் படைப்பு.(51)

*

தாமஸ் ஜெபர்சன்: மோசஸின் கடவுள் மிகவும் பயங்கரமான ஒரு பாத்திரம்(character): கொடூரமான, பழிவாங்கும், தன்னிஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும், நியாயமற்ற பாத்திரம்.(51)

*

கிறித்துவத்தில் பேசப்படும் தமதிரித்துவம் (Holy Trinity)ஒரு வேடிக்கையான தத்துவம். அதையும் தாண்டி கத்தோலிக்க கிறித்துவத்தில் நாலாவதாக மரியாளும் சேர்க்கப்படுகிறாள். அதனால் கடவுளே கூட இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறார். (55)

அதிலும்தான் எத்தனை விதவிதமான மரியாள்கள்: Our Lady of Fatima, Our Lady of Lourdes, Our Lady of Guadalupe, Our Lady of Medjugorje, Our Lady of of Akita, Our Lady of Zeitoun, Our Lady of Garabandal, Our Lady of Knock ... ( அடடா! .. இதில நம்ம ஊரு பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா - இதெல்லாம் விட்டுப் போச்சு!!)

1981-ல் இரண்டாம் ஜாண் பால் என்ற போப்பாண்டவர் ஒரு கொலை முயற்சியில் குண்டடி பட்டு மயிரிழையில் தப்பினார்.( நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கு நடந்த மாதிரியேதான்!!) அதற்கு 'அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'! (56)

*

GORE VIDAL: காட்டுமிராண்டிகளாக மனிதன் இருந்த காலத்தின் மத நூலான 'பழைய ஏற்பாட்'டிலிருந்து யூதமதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று மனித குலத்திற்கு எதிரான (anti-human religions) மதங்கள் பரிணமித்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் வானுலகத்தில் இருக்கும் இந்தக் கடவுளாலும், அவரை வழிபடும் ஆண்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். (58)

*

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தவரை மனிதர்களை ஏழு படிகளில் பிரிக்கலாம்:

1. நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள்.
2. நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
3. 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.
4. சரியாக 50%. கடவுள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
5. <50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள். 6. >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.
7. கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள். (73)

*

BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.

நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.


*

அடிக்கடி சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு: எப்படி என்பதை விளக்குவது விஞ்ஞானம்; ஏன் என்பதை விளக்குவது மெஞ்ஞானம் என்று.

விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்கு மதங்கள் பதில் சொல்லிவிடும் என்பது என்ன விதமான நம்பிக்கை?!

ஆக்ஸ்போர்டில் Martin Rees என்ற விண்வெளிப் பயணி 'விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அனேகமாக மதங்கள்தான் அதற்குரிய பதில்களைத் தரவேண்டுமென்று சொல்லியிருந்தார்'. ஒருமுறை நானும் அதே ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அவர் இந்தக் கேள்விக்குரிய பதிலைத்தர நான் நமது மதகுருவைத்தான் அழைக்க வேண்டுமென்றார். விஞ்ஞானிகளுக்கே தெரியாத பதிலை இந்த மதக்குருக்கள் மட்டும் எப்படி தர முடியும்?

விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை. மனிதன் நடக்கவேண்டிய நல்வழி பற்றி சொல்வது விஞ்ஞானத்தின் கட்மையல்ல. மதங்களுக்கு உண்டென்கிறார்கள். அவைகளுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்பதாலேயே அவைகளுக்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது சரியா? அப்படியே கொடுப்பதாயின் எந்த மதத்திற்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது? பைபிளில் விபச்சாரம் செய்தவர்களோடு, ஓய்வு நாளில் (Sabbath day) விறகு பொறுக்கியவர்களையும், பெற்றோரிடம் மரியாதையில்லாமல் பேசியவர்களையும் ஒன்றாக்கி இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான மரண தண்டனை என்று சொல்லியிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்? எந்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது? (81)


*

அடுத்த பதிவில்:ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:


*