Wednesday, June 30, 2010

408. FIFA 2010

*
29-30.6.10 - இரவு - http://www.tamilsportsnews.com/-க்காக எழுதிப் பதிப்பித்தது:
*

நெதர்லேன்ட் – ஸ்லோவோக்கியா - ஆட்டம் சுத்தமாக சோபிக்கவில்லை. ஸ்லோவோக்கியா ஆட்டம் ரொம்ப மோசம். வரும் பந்தை தடுத்து நிறுத்தவும் தடுமாறினார்கள். Advance passing என்று ஒன்றிருப்பதையே பசங்க மறந்துட்டாங்க போலும்.

Tuesday, June 29, 2010

407. கால்பந்து .... கொஞ்சூண்டு விம்பிள்டன்

*

ஜெர்மனி – இங்கிலாந்து ப்ரி க்வார்ட்டர் பைனலில் எதிர்பார்த்தது போலவே ஜெர்மனி வென்றது. இங்கிலாந்து போட்ட ஒரு கோல் நடுவரால் தவறாக தீர்ப்பளிக்கப்பட்டது.

Monday, June 28, 2010

406. அமினா - ஒரு 'திருட்டுப் பதிவு'

*

பதிவர் கபீஷ் நான் மொழிபெயர்த்த அமினாவைப் பற்றிய பதிவொன்றை 'போகிற போக்கில்' என்ற தன் கூட்டுப் பதிவில் இட்டிருந்தார்.  

அப்பதிவை அவரின் அனுமதியோடு இங்கு மறுபதிப்பாக இடுக்கிறேன். அவருக்கும் சஞ்சய்க்கும் மிக்க நன்றி.

முன்னுரை:

நூலகத்தில் இந்த புத்தகத்தை எடுக்கும்போது தருமி என்பது வலைப்பதிவர் தருமி என்று தோன்றவில்லை. யாரும் எனக்கு பரிந்துரைக்காத நூலை எடுத்து படிக்க வேண்டுமா என்று யோசித்தேன். 29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை கவர்ந்த நூல் என்று அட்டையில் இருந்ததாலும், கிழக்கு பதிப்பக நூலானதாலும், எப்படியும் மோசமாக இருக்காது என்று எண்ணி எடுத்துவந்தேன். (காசு கொடுக்கமால் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுக்க எவ்வளவு யோசனை) புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படித்திருந்தால் வலைப்பதிவர் தருமி தான் நூலாசிரியர் என்று தெரிந்திருப்பேன். அவசரக் குடுக்கையாக நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேறு நாட்டைக் கதைக்களமாக கொண்டாலும் அந்நியத் தன்மை, ஆசிரியர் கருத்து இடைச்செருகல், தேவைக்கதிகமான விவரணை இல்லாதது, எளிமையான நடை மற்றும் பெரும்பாலும் உரையாடல் மூலமாக கதை இருந்தது நாவலை சுவாரசியமாக்கியது. ஒரு வேளை பதிவர் தருமியா இருக்குமோ என்று அவரிடம் கேட்டேன் ஆமாம் என்றார். ஒரு வேளை தருமி எழுதியது என்று தெரிந்து படித்திருந்தால் எதோ ஒரு முன்முடிவுடன் படித்திருப்பேனோ என்னவோ தெரியாது. முக்கியமாக தருமி என் வங்கிக்கணக்குக்குப் பணம் எதுவும் இதுவரை அனுப்பவில்லை :-(((

பதிவர் தருமியின் அமினா 

ஆங்கிலத்தில் முகம்மது உமர் எழுதி, தருமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நண்பரின் நூலைப் பற்றிய அறிமுகம், விமர்சனம் இல்லை :-))

நாவலின் பெயர், கதையின் நாயகியின் பெயரே, அமினா. நைஜீரியாவின் பக்காரோ நகரின், அழகான மேல்தட்டு வர்க்கப் பெண். பணக்கார, ஆளும் கட்சி அரசியல்வாதி கணவன் ஹாருணாவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியின் போதும் ஒரு கல்யாணம் செய்யும் பழக்கம், அமினா நாலாவது மனைவி. அமினாவின் கல்லூரி கால நெருங்கிய தோழி ஃபாத்திமா, ஒரு பணக்காரருக்கு மூன்றாவது மனைவியாகி, கணவர் கொடுமையின் காரணம் விவகாரத்து செய்து, வழக்கறிஞர் படிப்பைத் தொடர்கிறாள், மாணவ இயக்கத்தில் சேர்ந்து சமூகத்துக்காகப் போராடுகிறாள். அமினாவுக்கு, பெரிய தொழிலபதிராகி, நாட்டிலேயே பெரிய பணக்காரியாவது தான் நோக்கமாக இருக்கிறது, கணவர் ஹருணாதான் அமினா தொழில் செய்ய தூண்டுகோலாய் இருக்கிறார்.

கணவர் திடீரென அமீனாவின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு அடித்த தருணத்தில், ஃபாத்திமா கொடுத்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்து, அவள் நோக்கத்தில் மாறுதல் ஏற்படுகிறது. ஃபாத்திமாவின் தூண்டுதலால், மற்ற பணக்காரப் பெண்களை உடன் சேர்த்து பெண்கள் இயக்கம் ஆரம்பித்து ஏழைப் பெண்கள் கல்வி கற்க உதவி செய்ய ஆரம்பிக்கிறாள், கல்வியின் மூலமே சமூகத்தில் மாறுதல் ஏற்படும் என்பதால். சமூகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்த அமினா படிப்படியாக பெண்களுக்காக போராட ஆரம்பித்து, பெண்களுக்கு எதிராக சட்டமியற்றும் அரசாங்கத்தை எதிர்க்க நேர்ந்து பக்காரோ நகரின் பெண்களுக்கு வழிகாட்டியாகி, ஐ நா சபை பாராட்டும் அளவுக்கு உயர்கிறாள்.

நைஜீரியாவின் அரசியல் நிலைமையையும் முஸ்லிம் பெண்களின் நிலைமையையும் இந்நாவல் அழகாகச் சொல்கிறது. நைஜீரியாவின் இயற்கை வளம் எவ்வாறு அன்னாட்டு அரசியல்வாதிகள் துணையுடன் ஏகாதிபத்திய அரசுகளால் சுரண்டப்படுகிறது என்பதை பாட்டூர் என்னும் கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். பாட்டூர், லண்டனிலிருந்து நைஜிரீயாவில் குடியேறிய அரசின் தொழில் ஆலோசகர். அரசியல்வாதிகள் ஊழலில் சம்பாதித்த பணத்தை அவர்கள் சார்பாக ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யும் சேவையை செய்து வருகிறார். நைஜீரியாவின் கல்வித்திட்டம் தொழில்நுட்பத்தை கற்க, ஆராய்ச்சி செய்ய ஏதுவாகவில்லை. முன்னேறிய நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நைஜிரியாவிலுள்ள இயற்கை வளங்களை ஆராய்ச்சி செய்து, அரசியல் வாதிகள் உதவியுடன் மற்ற நாடுகளுக்கு அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இதற்கு பிரதிபலனாக அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டில் அரண்மணை போன்ற வீடுகளும், வெளிநாட்டில் விலையுயர்ந்த வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலா, வெளி நாட்டு வங்கியில் பணம் முதலானவை கிடைக்கிறது, பாட்டூர் மூலம்.

நைஜீரியாவில் மேல்த்தட்டு முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். இந்திய பெண்களின் நிலை போலத்தான் இருக்கிறது, குறிப்பாக சொன்னால் இந்தியப் பெண்களைவிட இந்த நாவலில் காட்டப்பட்ட நைஜீரிய முஸ்லிம்கள் நிலை பரவாயில்லை போல என்று தோன்றுகிறது. ஒரு வேளை பணக்கார பெண்ணின் நிலையை மட்டும் ஆழமாக விவரித்ததன் மூலம் இப்படித் தோன்றியிருக்கலாம். கணவன் வந்தவுடன் அமினாவும் அவள் தோழி ஃபாத்திமாவும் முழந்தாளிட்டு முகமன் சொல்கிறார்கள்(இது இந்தியாவில் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்) சமையல் வேலை அமினாவுக்கு கிடையாது, நாவலின் சந்தோசமான இடம் இது.:-) ஒரே ஓர் இடத்தில் அவள் சமைப்பதற்காகச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து செல்கிறாள், தருமியிடம் ஏனென்று கேட்க முடியாது, உமரிடம் கேட்க வேண்டிய கேள்வி.:-)))


அமினா வீட்டிலிருந்து வெளியே செல்ல காரில் ஏறும் போதும், இறங்கும் போதும், அவளைத் துதித்து பாட்டு பாடி சில நாய்ராக்கள் பெறும் சிறு கூட்டம், அமினாவின் கணவனின் ஒரு மனைவியின் மகனான அப்துல்லாஹியுடன் ஃபாத்திமா செய்யும் சீண்டல்கள், அமினாவின் கல்லூரி கால ஒரு தலைக் காதல், அமினாவின் பெண்கள் அமைப்பு தோழி பில்கிசு, குலு, "பக்கோரோவின் ரேடியோ" என்று அழைக்கப்படும் மைரோ, இதுபோல சுவாரசியமான சம்பவங்களும், பாத்திரங்களும் நாவல் வறண்டு போகாமல் இருக்கச் செய்கின்றன.

அமினா பெண்கள் அமைப்பைத் தொடங்கி உரையாற்றும் போது இவ்வாறு முடிக்கிறாள்

"ஒரு சொலவடை உண்டு:
ஓராண்டுக்குத் திட்டமிட்டால் சோளம் விதை;
பத்தாண்டுக்குத் திட்டமிட்டால் ஒரு மரம் நடு;
நீண்ட நெடு வாழ்க்கைக்குத் திட்டமிட்டால் கல்வி கொடு.

பெண்கள் நாங்கள் பக்காரோவின் எதிர்காலத்தைத் திட்டமிட ஆரம்பித்திருக்கிறோம் வளமான, சந்தோஷமான, ஒளிமயமான, எதிர்காலத்தை பக்காரோ காணவேண்டும். அதற்காகவே பெண் கல்வியோடு எங்கள் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். பெண்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்தாலே, நகரம், மாநிலம், நாடும் வளம் பெறும். நன்றி ! "



ஆங்கிலத்தில் படிக்கவில்லை. தமிழில் இயல்பாக, படிக்கத் தொய்வில்லாமல் இருக்கிறது. அமினாவின் அழகை விவரித்து சொல்லும் இடங்களில் என் தோழி ஞாபகத்துக்கு வந்தாள். நம் நாட்டு நிலைமையுடன் பெரிதும் ஒப்புமைப் படுத்தி பார்க்கும் விதமான சூழலைக் கொண்டது நைஜிரியா என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய சில ஆஃப்பிரிக்க தோழிகள் சொல்லியிருக்கிறார்கள் எங்கள் நாடும் உங்கள் நாட்டைப்போல இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் முன்னேறிய நாடுகளால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் நாடு என்று. உண்மை தான் என்று தோன்றுகிறது. இங்குள்ள (இங்கிலாந்து) அருங்காட்சியகங்களில் பெரும்பாலான பழம்பொருட்களின் கீழ், ஆஃப்ரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ராணிக்கு அன்பளிப்பாக கிடைத்தவை என்ற குறிப்பு இருக்கும்.


மொத்தத்தில், அமினாவின் மூலம் சின்ன குழுவின் மூலமே பெரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையைத் தருகிறார் நாவலாசிரியர். தனி மனிதன் நினைத்தாலே மாற்றம் வரும் என்பதற்கு 2004 ல் நோபல் பரிசு வென்ற கென்ய நாட்டு வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai) மற்றும் தமிழக்தின் கிருஷ்ணம்மா முதலிய சமூக ஆர்வலர்கள் வாழும் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.


மூல ஆசிரியர்: முகம்மது உமர்
தமிழில்: தருமி
பதிப்பகம்: கிழக்கு
விலை : Rs. 200/-

Post by : Kabheesh

பின்னூட்டங்கள்:
ரோகிணிசிவா – (June 24, 2010 7:22 PM)
i have not read the book u have shared , but u have put it in good way, i wil seek to read it, thank u for sharing

முத்துலெட்சுமி/muthuletchumi – (June 24, 2010 7:22 PM)
நல்லதொரு அறிமுகம் கபீஷ்..வாசிக்க ஆவலைத்தூண்டுகிறது.

வினையூக்கி – (June 24, 2010 7:23 PM)
அக்கா நல்லதொரு அறிமுகம் !! நன்றி

அதிஷா – (June 24, 2010 7:25 PM)
பிம்பிலிக்கி!

Thekkikattan|தெகா – (June 24, 2010 7:28 PM)
நல்ல அறிமுகம், சீராக சென்றது - வாசிப்பதற்கு. நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி – (June 24, 2010 7:50 PM)
GOOD

ஆதிமூலகிருஷ்ணன் – (June 24, 2010 10:33 PM)
தருமி ஐயாவுக்கு வாழ்த்துகள்.

Chitra – (June 25, 2010 1:46 AM)
Seems to be an interesting book. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் – (June 25, 2010 2:18 AM)
அறிமுகத்திற்கு நன்றி கபீஷ்!
இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?

cheena (சீனா) – (June 25, 2010 8:22 AM)
அன்பின் கபீஷ்
புத்தகம் வாங்கி விட்டேன் - படிக்கிறேன் - கருத்து சொல்கிறேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

SanjaiGandhi™ – (June 25, 2010 9:09 AM)
சூப்பரப்பு.. படிக்கும் ஆவலைத் தூண்டுது..
//இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?//
நல்லா சொல்லுங்க நடராஜன்.. நான் சொல்லி சொல்லி களைச்சிட்டேன்.. கேக்க மாட்டேங்கறா..

Bharath – (June 25, 2010 2:22 PM)
pretty crisp review rather intro. :)

//இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
//
பொம்பளை, சாதனை, பாராட்டுனாலே பெண்ணியம்ன்னு ப்ராக்கெட் போட்டுர்றாங்கப்பா.. கூகிள் என்ன சொல்லிச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசயா இருக்கோம்..




Friday, June 25, 2010

405. சிங்கப்பூர் -- 'வாழை இலை'யில் பரிசளிப்பு

*
28.05.2010

28.05.2010 நாள் மாலை 6 மணிக்கு லிட்டில் இந்தியா எனப்படும் 'நம்மூர்' வாடை அடிக்கும் இடத்தில் உள்ள "வாழை இலை" (banana leaf) என்னும் உணவு விடுதியில் 'தஞ்சை அறை'யில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது.

Thursday, June 24, 2010

404. ராவணன் படம் பார்த்தேன்.

*


ராவணன் பார்க்கப் போனேன். அதிக கூட்டம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துச் சென்றேன். கூட்டம் ஏதுமில்லை. என் சைடில் நின்ற ஒரு ஆள் பிச்சை கேட்பதுபோல் நின்றார்.

Saturday, June 19, 2010

403. FIFA - 2010

*

முனிசாமி, ஆண்டிச்சாமி, அழகர்சாமி, குழந்தை சாமி, கோட்டைச் சாமி, ராமசாமி, இப்படி சாமி பேருகளையா வச்சிக்கிட்டு ஒரு டீம் இருக்குதுன்னு வச்சுக்குவோம்.

Thursday, June 17, 2010

402. FIFA - 2010 --- ஒரு புதிய விளையாட்டிற்கான இணையப் பக்கம்

 *

உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பார்ப்பது என்னவோ ஒரு தவம் மாதிரி ஆகிப் போச்சு. சென்ற கோப்பையில் ஆங்கிலத்தில் 'எனக்கு நானே' என்பது மாதிரி சில குட்டி குட்டிப் பதிவுகள் போட்டு ஆற்றிக் கொண்டேன்.

Saturday, June 12, 2010

401. சிங்கப்பூர் -- BARBEQUE சந்திப்பு -- 2

*

23 மே, 2010


அது என்னங்க .. எனக்கென்னவோ கடலோரம் என்றாலே, நம் ஊருல தேரிக்காடு என்பார்களே, அதுமாதிரி ஒரேடியாக மணலும்,கொடும் வெயிலும், நீரற்ற வெளியும்தான் நினைவுக்கு வருது, ஆனால், இந்த ஊரு சிங்கப்பூரில திரும்புமிடமெல்லாம் பச்சைப் பசேலாக இருக்கு. சாலையோரமெல்லாம் பச்சைப் புல். இதுகூட வெளியூர்ல இருந்து நல்ல மணல் கொண்டு வந்து செடி வளர்த்திருப்பாங்களோன்னு ஒரு சந்தேகமே வந்துச்சு. ஹைவே மாதிரி அழகான ரோடு போட்டிருக்காங்களே அது வழியா போகும்போது காட்டுக்குள்ள போற மாதிரி இரு பக்கமும் பச்சை பசேல்.


சிங்கப்பூரில் இரண்டாவது நாள். மாலை கடற்கரையில் கறி சுட்டு்ச் சாப்பிடலாம் .. வாங்கன்னு மக்கள் கூப்பிட்டிருந்தாங்க. கடற்கரைக்குப் போனோம். கடலே பார்க்காமல் .. கடற்கரையில் வளர்ந்திருந்த பச்சை மரங்கள், புல்வெளியே நடந்து நமக்காக உத்தரவு வாங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம்.

அங்கங்கே நல்ல உட்கார இடம் விட்டு, நல்ல மேசையிட்டு பக்கத்திலேயே ஒரு grill அடுப்பு. அடுப்பு, அடுப்பு மேல கம்பி வலை எல்லாம் அழகா போட்டுருக்கு. நாம் முதலிலேயே பணம் கட்டி இடத்தை வாடகைக்கு எடுத்துக்கலாமாம். BARBEQUE செஞ்சு சாப்பிட்டுட்டு இடத்தைச் சுத்தமாக்கி வைத்து விட்டு செல்லணுமாம். அரை குறையா விட்டுட்டா அடுத்த நாளே 'நோட்டீஸ் & தண்டம்' வந்திருமாம். சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பும்போது இந்த விதிகளைக் கூறிக்கொண்டே நண்பர்கள் எல்லா இடத்தையும் சுத்தமாக்கினார்கள்.




 அப்போது ஜோசப் 'இதை ஊரில் போய் எல்லார்ட்டய்ம் சொல்லுங்க்; இங்க எல்லாம் சுத்தமாக வைத்திருக்கணும்' அப்டின்னாரு. நாங்களும் அப்படித்தான். உங்க ஊரு ஞானசேகரிடம் கேட்டுப் பாருங்க.
எங்க கல்லூரி வளாகத்தில் பதிவர் சந்திப்பு வைக்கும்போது இடத்தைக் காலி செய்யும்போது அப்படி'ப்க்காவா' இடத்தைச் சுத்தம் செஞ்சுட்டு வருவோம்ல ... (ஆனா வேற இடங்களில் நடத்தும்போது அப்படி இருந்தோமா?)




நேற்று காலை எங்களை விமான நிலையத்தில் அழைக்க வந்தவர்களும், வாசகர் வட்டக் கூட்டத்தில் எங்களைச் சந்தித்தவர்களும் மட்டுமே சிங்கைப் பதிவர்களோ என நினைத்தேன். ஆனால் இன்று மாலை BARBEQUE சந்திப்புக்குத்தான் சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வந்திருந்தனர். நல்ல கூட்டம். எங்களுக்குப் புதிய முகங்கள் என்ற வேற்றுமையில்லை; அவர்களுக்கு 'புதுசுகள்' என்ற நினைப்பில்லை. காலங்காலமாய் பழகிய தோழர் வட்டமாக இருந்தது.

















அரட்டை அடிக்க ஒரு கூட்டம்;







இன்னொரு பக்கம் கடமையே முனைப்பாய் அடுப்பு மூட்டி (கரி கூட ரெடிமேடாக இருக்கும் போலும்) எரிய வைத்து சமையல் வேலை மும்முரமானது.

பத்த வச்சாச்சு ..
.

முதலில் வெள்ளித் தாளில் சுற்றிய சோளக்கதிர் தயாரானது. எங்க ஊர்ல பாட்டி ஒண்ணு தரையில காலை நீட்டி உக்காந்துகிட்டு ஒரு விசிறி வைத்து வீசிக்கொண்டே சோளக்கதிர் சுடுவதைப் பார்த்த எனக்கு, இங்கே ஒரு வித்தியாசம் மட்டும் தெரிந்தது. பாட்டி இல்லை;  வயசுப் பசங்க  அந்த வேலையைச் செஞ்சாங்க ... எது எப்படி இருந்தாலும் சோளக் கதிரின் சுவை என்னவோ இரண்டிலும் ஒன்றுதான்!





கடை விரிச்சாச்சு ..


 சிங்கை நாதனின்  வீட்டிலிருந்து வந்த இனிப்பு ஒரு நடு இணைப்பு. சிறந்த படைப்பு.





அடுத்து, ' பறப்பது' மூன்று நிலைகளில் வந்தது. துண்டாக,அடுத்து hotdog அப்டின்னு நினைக்கிறேன் .. அடுத்து மூன்றாவதாக ... ஆஹா ... அந்த grilled honey chicken ... பின்னிட்டாங்க ... போங்க. ஆனாலும் ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன். சில 'வில்லன்கள்' அதை மட்டும் காலந்தாழ்த்தி வாங்கி வந்தமையால் அது கடைசி ஐட்டம் ஆகி, அதற்குள் வயிறு நிறைய மற்றவற்றைத் தின்று, குடித்து  (ஆமா .. உங்க ஊர்ல சாப்பிடும்போது தண்ணியே குடிக்க மாட்டீங்களா? எல்லாமே வேறதானா?!) வயிறு நிறைஞ்சு போச்சு.



சும்மா சொல்லப்படாது ..... ஐட்டங்கள் தீர்மானித்த அந்த நல்ல  மனிதர்களுக்கு உளமார்ந்த, வயிறு நிறைந்த நன்றி.



சாப்பாட்டோடு கலகலப்பான  பேச்சும் தொடர்ந்தது. என்னென்னவோ பேசினோம். பதிவுகள் பற்றி ... உலக நிகழ்வுகள் பற்றி ... தமிழ்நாடு பற்றி ... சொந்தக் கதைகள் .. சோகக்கதைகள் பற்றி ...





சிங்கை எப்படியிருக்குன்னு என்னிடம் கேட்டார்கள். நான் சொன்ன பதிலுக்கு சில 'பின்னூட்டங்கள்' உடனே வந்தன.  ..ம்ம்...ம் .. அவைகளைப் பற்றி பின்னால் பார்ப்போம்.








                 கண்ணாடிக்காரர்கள்.




மூணு கண்ணாடிக்காரர்கள். நல்லா இருக்குல்ல ... என்னது .. முதல் ரெண்டுபேரும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்காங்களா? RayBan  கண்ணாடியா? அதுவும் .. ஒரே கண்ணாடி அப்டின்றீங்களா? அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ஜோசப் திரும்ப திரும்ப என்னிடம் 'இது என் கண்ணாடி .. என் கண்ணாடிதான் அப்டின்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அறிவிலி படையப்பா சூப்பரு மாதிரி சிரிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தார். அம்புட்டுதான் எனக்குத் தெரியும் ... ரவிச்சந்திரன் கண்டுக்கலை ...


 CLICK HERE FOR THE SECOND ROUND OF BARBEQUE PHOTOS



*

Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:






நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*










Wednesday, June 09, 2010

399. சிங்கப்பூர் -- சந்திப்பு 1

22 மே 2010

இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தோம்; மாலையில் முதல் சந்திப்பு நடந்தது.

ஊரெங்கும் .. இல்லை .. இல்லை .. அந்த நாடெங்கும் பல நூலகங்கள் இருக்குமாம். அதில் ஒன்றான - ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அங் மோ கியோ என்றால் "(உடைந்த) தக்காளி" என்று பொருளாம்; அங்கு சிங்கப்பூரின் "வாசகர் வட்டம்" என்ற குழுவினரால் ஒரு அறிமுக - வாழ்த்துக் கூட்டம் நடத்தப் பட்டது. கூட்டம் நடந்த அறையின் பெயர்: தக்காளி அறை




தக்காளி அறைக்குள் செல்லும் முன் நூலகத்தை ஒரு பார்வையிட்டோம். தமிழுக்கென்று ஒரு தனிப் பகுதி. அப்பகுதியின் சில படங்கள் இங்கே ...











**


பின் எல்லோரும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப் பட்டோம். வாசகர் வட்டத்தின் வரலாறும், வளர்ச்சியும் வாசகர் வட்டத்தின் திரு. இராம கண்ணப்பன் அவர்களால் விளக்கப்பட்டது.











ஜோசப் பால்ராஜ் அனைவரையும் வரவேற்றார். (படத்தில் இருப்பது போல் 'சோகமாக' அல்ல; மிக்க மகிழ்ச்சியாக ...!) வேறெங்கும் இல்லாத அளவு எப்படி இந்தப் போட்டியை சிங்கைப் பதிவர்கள் நடத்த முனைந்ததைப் பற்றிய என் கேள்விக்கு, எங்களின் நேரமும் வாய்ப்பும் கொடுத்த முனைப்பு என்றார். அதோடு அவர்கள் எல்லோரின் ஒருமித்த கருத்தும், மனதும் முக்கிய காரணிகளாக எனக்குப் பட்டன.


அடுத்து, ஜோ 'மணற்கேணி'யினைப் பற்றிய அறிமுகம் அளித்தார். பலராலும் மணற்கேணி என்ற பெயர் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஆண்டு நடத்திய போட்டி போலவே தொடர்ந்து நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
முதலாண்டு பரிசு வாங்கியவர்கள் இரண்டாமாண்டில் வெற்றி பெற்றோருக்கு  'கைடு'களாக வரவழைக்கப்படலாமே என்ற என் கோரிக்கை (!!)அடியோடு நிராகரிக்கப்பட்டது. :(




 

வாசகர் வட்டத்தின் திருமதி சித்ரா ரமேஷ்  மணற்கேணி இந்த ஆண்டுக்கு வெளியிட்ட
 நினைவு நூலின் கட்டுரைகள் அனைத்தையும் பற்றிய தன் கருத்துக்களை தொகுத்தளித்தார்.

இந்த மணற்கேணி நூலினால், 'இணையப் பதிவர்களா'க இருந்த நண்பர்கள்  இப்போது 'எழுத்தாளர்கள்' என்று promote ஆகிவிட்டார்கள்!  மேலும் .. தொடர்ந்து .. வளர்க.







பரிசு பெற்ற மூன்று கட்டுரைகளின் அறிமுகமும், நடுவர்கள் அளித்த குறிப்புகளும் அதற்குப் பின் பரிசு பெற்றோரின் பதிலுமாகக் கூட்டம் தொடர்ந்தது.





முதலில் என் கட்டுரையை குழலி அறிமுகம் செய்வித்தார். இருபுற அலசல்கள், உணர்ச்சிகரமான அணுகல், நேற்றைய, இன்றைய நிலவரங்கள், வழக்குகள், புள்ளி விவரங்கள், pace ஆகியவை பற்றி குறிப்பிட்டார். இடப்பங்கீடு என்ற தலைப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.

என் பதிலில் க்ரீமி லேயர் என்பது பிற்படுத்தப்பட்டோரின் கேள்வியாக இருக்க வேண்டும்; அந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடப்பங்கீட்டின் முக்கியத்துவம் புரிய வேண்டும். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை. இரண்டாவதாக, நியாயமான க்ரீமி லேயருக்கு என் பதிலை அளித்துள்ளேன். அதற்கு வாசகர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு (இந்த நிமிடம் வரையிலும் கூட ) எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை என்று கூறினேன்.

அடுத்து மருத்துவர் தேவன்மாயத்தின் கட்டுரையை கோவி கண்ணன் ஆய்வு செய்தார். சரியான சொல்தேடலால்,  புரிதல் எளிதாகிறது என்பதிலிருந்து, நம்  மேற்படிப்புகளைத் தமிழில் நடத்த முடியுமா என்ற வினாவையும் எழுப்பினார். இலங்கையில் மருத்துவம் தமிழில் சொல்லிக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.



தேவன்மாயம் அறிவியல் சொல்லாடல்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.

மூன்றாவதாக, பிரபாகரின் கட்டுரையை முகவை ராம் அறிமுக செய்வித்தார். கட்டுரையில் தமிழ் இசையின் முழு வரலாறு, பக்தி இசை, இசையில் சமயங்களின் ஈடுபாடு,  இசை ஆர்வலர்களின் அளிப்புகள், அரசியலின் தாக்கம்  என்பவற்றைக் கூறி இசை நோக்கிய பயணத்தின் அடுத்த அடிக்குச் செல்லும் சிறப்பான கட்டுரை என்று கூறி முடித்தார்.

அதன்பின் நடுவரின் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. பிரபாகர் தன் ஏற்புரையில் தான் கட்டுரையில் எடுத்துக் கொண்டவைகளைப் பற்றியும், இசையைப் பற்றிய பொதுப்பார்வையையும், தமிழிசையின் இன்றைய நிலைப்பாடுகள், வேறுபாடுகள் பற்றியும் அளித்தவையும், குட்டி musical demo-வும் அவையோரைக் கட்டி வைத்தது.




இறுதியாக 20 நூல்கள் வெளியிட்டிருக்கும் வாசகர் வட்ட திருமதி ஜெயந்தி சங்கரின் நூல்கள் பரிசு பெற்றோருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டன்.







































இன்னும் கொஞ்சம் 'தக்காளி'ப் படங்கள் பார்க்க இங்கே வாருங்களேன் ...........

வேறு பதிவுகள்:  
http://abidheva.blogspot.com/2010/06/blog-post_04.html

http://abidheva.blogspot.com/2010/06/2.html


http://dharumi.blogspot.com/2010/06/397-1.html

http://dharumi.blogspot.com/2010/06/400.html

Monday, June 07, 2010

398. உங்களுக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு ... வாங்க

*
திடீர்னு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்த்துட்டாங்க. ஆனா அதுக்கு முயற்சி எடுத்த நம்ம நாட்டு BCCI, இப்போ நடக்கப்போகிற ஆட்டத்துக்கு நாங்க வரமாட்டோம்; எங்களுக்கு அதை விட "பெரிய" வேலை இருக்கு.

Sunday, June 06, 2010

397. Sam & Silas vs ஏசு & முகமது

*


எனக்கு  மிகவும் இளையவராக கல்லூரியில் எனது துறையில் சேர்ந்து, சேர்ந்த புதிதில் என்னையும் என் நடவடிக்கைகளையும் 'ஒரு மாதிரி'  பார்த்து, சுணங்கி, எட்டி நின்று,

Friday, June 04, 2010

396. இடப்பங்கீடு - தனிமடல் பதிவு

*

//ஒரு வேண்டுகோள்:

என் பதில்கள், முடிவுரை என்ற இக்கட்டுரையின் கடைசிப் பகுதிகளை வாசித்து அதற்கான உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.// இப்படி ஒரு வேண்டுகோளுடன் என் முந்திய பதிவாக சிங்கைப் பதிவர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற என் கட்டுரையை அளித்திருந்தேன்.

தொடக்கூடாத கட்டுரை போல் எவ்வித response-ம் இல்லாமல் "பாவம்" போல் (3 பின்னூட்டங்கள் தவிர )அக்கட்டுரை அப்படியே இருந்துவிட்டது.