Thursday, February 27, 2014

720. விவாதத்தில் விழுந்த கேள்விகள் .. பதில் வருமா?







விவாதங்கள் நடக்கும் போது சொல்லப்படும் எல்லா கருத்துக்களையும் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் வேண்டும். அதில் ஏதோ ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு பல கருத்துக்களைப் புறந்தள்வது சரியல்ல. உதாரணமாக, எனது முந்திய பதிவு அடிப்படையில் இறையச்சம் vs தனி மனித ஒழுக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டது. சான்றாகக் காண்பிக்கப்பட்ட இரு வேறுபட்ட மனிதர்களில் நல்ல மனிதர் யார் என்பது அடிப்படைக் கேள்வி. ’ஒரு வகை’ இறையச்சம் மட்டும் மனிதர்களை நல்ல மனிதர்களாக்குகிறது என்ற அடிப்படையில் வந்த பதிவை எதிர்த்தே அப்பதிவு. 

விவாதங்களில் எதிரணியினர் கேட்டவைகளுக்குத் தேவையான பதில்கள் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். விட்டுப் போயிருந்தால் அவர்கள் பட்டியல் தரட்டும். பதில்கள் தந்து விடலாம். அதே போல் அவர்கள் விட்டுப்போன loose ends இங்கே பட்டியலாக்கப்பட்டுள்ளன. ப்தில்கள் வருகின்றனவா என்றும் பார்ப்போம்.  

பி.கு. 

முகம்மது ஆஷிக், சு.பி. இருவர் மட்டுமல்ல ... ஓட்டுப்போட்ட சகோஸ்களும் பகிர்ந்து கொள்ளலாம். 
(ஆனாலும் சகோஸ்களின் “கட்டமைப்பு” எனக்கு இஸ்லாமைப் பற்றிப் பதிவிட ஆரம்பித்த காலத்திலிருந்து ஆச்சரியம் தருகிறது. நல்ல கட்டமைப்பு.. அவர்களுக்குள் யார் யார் பதில் சொல்வது என்பதிலிருந்து அனைத்துமே ‘remotely controlled' என்பதுபோல் தெரிகிறது. நல்ல system தான்!!  ’அங்கிருந்து’ ஆணை வந்தால் தான் மற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் போலும் !)  


****** 



1.     சரியோ தவறோ எப்பதிவாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் 35 பேர் சட சடன்னு ஓட்டுப் போட்டு மகுடம் கொண்டு வரும் கோஷ்டித் தனம் சரியா?

2.     இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? 

3.     கடவுள் நம்பிக்கையால்தான் மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்ற போதனையைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்துங்களேன். நல்லவர் எண்ணிக்கை குறைகிறதா பார்ப்போம்
 .
4.    ஏழைகள்,எளியவர்களுக்கு இறையச்சம் என்பதை புகட்டி வைத்தால் தான் கீழ்படிதலுடன் இருப்பார்கள் என அதிகாரத்தில் உள்ளோர்கள் நடத்தும் நாடகங்களே 

5.    இந்த இறையச்சம் சூடான் அதிபரோ,சவுதி அதிபருக்கோ இருப்பதில்லை,

6.    துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சூடானில் வழக்கம், இறையச்சம் எல்லாம் ஏதும் செய்ய இயலாத அப்பாவிகளுக்கு தான் போலும் 
!
7.    சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?

8.    கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும் 
.
9.     தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் நல்ல மனிதர்களாகஇருந்துள்ளார்கள். 
இவர்களில் யார் நல்லவர்?

10.   மனித தன்மை அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அது வேறெங்கிருந்தும் வரத்தேவையில்லை

 .
11.   எந்த புத்தகத்தை படிக்காத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும் 
.
12.  அறிஞரை தெரியாத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும். 

13.  மனிதநேயம் என்ற சித்தாந்ததில் இருந்து 
!
14.  வாழ்க்கை எனும் பள்ளியில் படித்த பாடத்தின் மூலம் வந்திருக்கலாம் 
.
15.  தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் 
!
16.   77.94% இந்தியர்களுக்கும் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் தனி மனித ஒழுக்கமில்லாதவர்கள். அப்படிதானே ஆஷிக்?

17.  90 விழுக்காடு (அவங்க கணக்கில்) இறையச்சம் உள்ளவர்கள் வாழும் உலகம் ஒழுக்கமாக இருக்கனும், ஆனா அப்படி இல்லையே

18.  இது இஸ்லாமியருக்குள் நடக்கும் யுத்தம். . நல்ல ஒழுக்கத்தையும், இறையச்சத்தையும் இஸ்லாம் கொடுத்திருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா? 

19.  இஸ்லாம் ஏன் இவர்களை நல்லவர்களாக்கவில்லை, போரை நிறுத்தவில்லை,

20.  கிறித்துவத்திற்குள் வந்தால் கீனாக்கள் துள்ளுவதில்ல;
இஸ்லாத்திற்குள் வந்தால் மூனாக்கள் துள்ளுகிறீர்கள்.
ஏன் என்று கேட்டேன் 
.
21.  எங்க பொண்டு புள்ளைகள நினச்சாலும் பயமா இருக்கே...- இதை ஒட்டிய செய்திக் குறிப்பு பற்றியும் உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டாமா நீங்கள்? ஆண் பெண் என்றால் அடுத்து உங்கள் நினைவில் வருவது sex மட்டும் தானா? சிறுபிள்ளையைக் குணப்படுத்த வைத்தியர்களைக் கூட மத்த்தால் தடுப்பது நிஜமாகவே முட்டாள் தனமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

22.  இதற்கு காரணம் இஸ்லாம் அல்ல. கரெக்டுதான். ஆனால், ஆனால் இஸ்லாத்தை கடைபிறக்கிற சாதாரண மக்கள் இருக்கிறார்களே. அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? 

23.  .வெளிநாட்ல என்னென்னமோ நடக்குதாமே.. அங்கல்லாம் இந்த அசீமானந்தா, பிரக்யாசிங் ஆளுங்க போகலைங்களே 
.
24.  இது உங்கள் மதத்தினால் வந்த கேவலம். இதே போல் இன்னொரு நிகழ்வு  

25.  முந்தியே பல தடவை ஒரு கேள்வி கேட்டுட்டேன். திருப்பிக் கேட்கிறேன். உலகத்தில் எங்காவது ஏதாவது ஒரு மதத்தில் கொலை செய்யும் போது இப்படி அல்லாஹூ அக்பர்னு கத்துற மாதிரி அவங்க சாமியைத் தொழும் மதம் ஏதாவது உண்டா? 

26.  பாஸ்டன்ல குண்டு .. சமீபத்திய இஸ்லாமியத் திருவிளையாடல்களை இங்கே பாருங்கள்.

27.  இதைப்பத்தி சொல்ல ஒன்றும் இல்லாததால் அந்த ஒற்றை வார்த்தை வைத்து சாமியாடுகிறீர்கள்.  !  பாவம்!!
2

8.  கொடுத்த accusationகளுக்குப் பதில் ஏதும் இல்லையென்றால் இந்தப் பல்லவியை வழக்கம் போல் பாடிவிட்டு போய்விடுவீர்கள் என்று தெரியாதா

29.  இன்றைய செய்தி - சுடச் சுட .- பதில் ஏதும் உண்டா இதற்கு?

30.  மத நல்லிணக்கம் என்றால் வீசை எவ்வளவு என்று வஹாபியர்களுக்கு என்றாவது புரியுமா...?

31.  இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! 
32.  கடவுள் மனிதனை முழுமையாக - as a perfect one - ஆகப் படைத்துள்ளார் என்று குரானில் சொல்லியாகி விட்டது. இதை அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட முழுமையான உடலில் ஒரு குறை கண்டு, விருத்த சேதனம்’ செய்வது  எதற்காக?
 


*****
 15.03.2014
நைஜீரியாவிலிருந்து ஒரு செய்தி. ”அல்லாஹூ அக்பர்”











*****




Sunday, February 23, 2014

719. இப்பதிவு தமிழ்மண மகுடத்திற்குப் போகுமா ...?







*

இறையச்சத்திற்கு அல்ல ....
வெறும் மனிதத் தன்மைக்கு வாழ்த்து மட்டும்.
***
 40 லட்சம் ரூபாயெல்லாம் நம்மால் கொடுக்க முடியுமா? 
நம்மிடம் என்ன பெட்ரோல் காசு இருக்கா என்ன?




இந்தத் தலைப்பில் இதைப் பற்றி நான் எழுதியதும் மக்கள் நீங்கள் எல்லாம் மகிழ்ந்து அதில் 21 பேர் ஓட்டும் போட்டு, தமிழ்மண மகுடத்தில் இப்பதிவை இடம் பெற வைக்கவா போகிறீர்கள்!

(அதென்ன 21 மட்டும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். வழக்கமான 35 பேர் மட மடன்னு ஏன் ஓட்டுப் போடவில்லை? அப்பதிவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் இதற்கும் ஓட்டுப் போடமாட்டார்களோ!!!)

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் நல்ல மனம் இருந்தால் அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..!

நிற்க. இனி விஷயத்துக்குச் செல்வோம்.

தெருவில் கிடந்த நகைப்பையை காவல் துறையிடம் ஒப்படைத்த இரு ஆட்டோ ரிக்‌ஷாகாரர்களைப் பற்றிய செய்தி இங்கே.

இந்த நல்ல மனதுக்காரர்களுக்கு ஒரு வேளை இனிமேல் ஏதேனும் பரிசுத் தொகை சிறிது கிடைக்கலாம். ஆனாலும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் தெருவில் கிடைத்த நகைகளைத் திருப்பிக் கொடுத்த இரு மதுரை ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் பெருமைக்குரிய பண்பு பாரட்டுக்குரியது. வெறும் ஆடு இல்லை அது; அவர்களுக்குக் கிடைத்தது ஒரு தங்கக் குவியல் !

 இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. மேலிருந்து எங்கள் ‘சாமி’ பார்த்துக் கொண்டே இருக்கும்; அதனால் இதை உரிமையாளர்களிடம் சேர்த்தோம் என்று பணக் கஷ்டம் உள்ள லாரன்ஸும்( father of three daughters), கணபதியும் சொல்லவில்லை!

இதற்கு //இஸ்லாமிய வாழ்வியல் நெறி// மட்டும் தேவை என்று எழுதும் அடிப்படைவாதிகள் நம் ஊரில் நடந்த நல்ல செய்தி இது என்று தெரிந்து கொள்ளவே இந்தச் செய்தியை இங்கு கொடுத்துள்ளேன்..

இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? 

ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் மனிதப் பண்பே இதற்குரிய காரணம். ஏதோ அல்லா மேலிருந்து பார்ப்பார் என்ற பயத்தினால் இல்லாமல் மனிதத்தன்மையோடு நடந்த இந்த இரு நல்ல “மனிதர்களுக்கு’ நம் பாராட்டு.







இந்த நல்ல இரு மனிதர்களைப் பாராட்ட பெரிய ஆட்கள், சுல்தான்கள்  எல்லாம் வந்து பரிசு தரவில்லை. ஏனெனில் இந்த மண்ணில் இது அப்படி ஒன்றும் காணக்கிடைக்காத விஷயம் அல்ல. இன்னும் இது போல் நிறைய உண்டு. கண்களைத் திறந்து செய்தித் தாள் வாசிப்பவர்களுக்கு இது போல் நிறைய செய்திகள் கண்ணில் படும்.

இதற்காக செளதிக்கெல்லாம் போகத் தேவையில்லை. ஒரு வேளை அங்கெல்லாம் இது ஒரு மிகப் பெரிய விஷயம் போலும். அதனால் தான் அத்தனை பரிசுகளும் பாராட்டும் அங்கே!!!



*

Saturday, February 22, 2014

718. பாலு மகேந்திரா






*
*




எத்தனை வருஷம் ஆச்சோ .. நினைவில்லை ... ’பல்லவி அனு பல்லவி’ என்ற படம் என்று நினைக்கிறேன். படம் பார்க்க சிறிது தாமதமாகப் போனேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ‘கெட்ட வார்த்தை’ வர்ர அளவிற்கு அழகான படப்பிடிப்பு பார்த்தேன். அந்தி நேரம் ஒன்றில், நீர்க் கரை அருகே இருவர் நடக்க, அவர்களின் நிழல் தண்ணீரில் தெரிய ... அடடா என்றிருந்தது. யாரடா இவன், இப்படி படம் எடுத்திருக்கிறான் என்று நினைத்து, இடைவேளையில் வெளியே வந்து ஒளிப்பதிவாளர் பெயரைப் பார்த்தேன். பாலு மகேந்திரா. ஏற்கெனவே அவரைப் பற்றித் தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எல்லாம் மகிழ்ச்சியாக மாறியது.

புகைப்படம் என்றால் அப்போது ரகு ராய் என்றும், சினிமா என்றால் பாலு மகேந்திரா என்றும் மாணவர்களிடம் சொல்லித் திரிந்த காலம் அது. 1985-ல் மாணவர்களோடு பெங்களூரு சென்ற போது .. அதென்ன .. லால் பார்க் என்று நினைக்கிறேன். அந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த போது சில மாணவர்கள் ஓடி வந்து, ‘சார்.. உங்க குரு படம் எடுத்துக்கிட்டு இருக்கிறார்’ என்றார்கள். பாலு மகேந்திரா ஏதோ ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளராக படம் எடுத்துக் கொண்டிருந்தார்; காத்திருந்தோம். ஒரு ‘பிரேக்’கில் அவரிடம் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, அவரோடு என் மாணவர்களும் நானுமாய் நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டோம். (படம் எங்கேயோ வைத்திருக்கிறேன். இப்போது தேடி எடுக்க முடியவில்லை.  )

எல்லோரும் அவரைப் பற்றி எழுதிக் குவித்த போதெல்லாம் பல நாளாய் மனதிற்குள் இருந்து நெருடிக்கொண்டிருந்த ஒன்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் இருந்து எட்டிப் பார்த்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் யாத்ரா. அதில் இருந்த திரைக்கதை அப்படி ஒரு அழகு. ஒரே இடம். திரும்பத் திரும்ப வரும். அதன் அருகாமை நமக்குப் பிடித்து விட்டு, அதனோடு ஒன்றி விடுவோம். அழியாத கோலங்களில் டைட்டில் வரும் போது இருட்டாக முதலில் தெரிந்த ஒரு இடம் மெல்ல மெல்ல வெளிச்சம் தெரிய, ஒரு ஓடை அதன் அருகே வெள்ளைப் பூவுடனிருக்கும் நாணல் புற்கள் ... டைட்டில் எழுத்துகளை யார் பார்த்தது. எழுத்துக்களின் வழியே தெரிந்த அந்த கவிதைகளை மட்டுமே காண முடியும். இப்படியெல்லாம் அவரை ரசித்த எனக்கு எல்லோராலும் புகழப்படும் மூன்றாம் பிறை படம் மட்டும் ஒரு எரிச்சலைத் தான் தந்தது. இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்து இறுகப் பூட்டி வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவர் மறைவுக்குப் பின்னும் அந்தப் படம் பற்றிய அரிய பெரிய உண்மைகளையும், உன்னதத்தையும் பேசும் போது உள்ளிருந்த எரிச்சல் மீண்டும் தலை காட்ட .... இன்று அதை வெளியே கொட்டி விடுவோம் என்று நினைத்தேன்.

படம் நன்றாக இருந்தது. எப்போதுமே மயில் ஸ்ரீதேவி அப்டின்னா அப்போதும் இப்போதும் பிடிக்காது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு ஒன்றும் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஒரு மன நோயாளிக்கு இப்படியெல்லாமா நடக்கும் என்ற நினைப்பு வேறு. அதனால் இப்பட்த்தின் கதாநாயகியோடு ஒட்ட முடியாது போனது. கதாநாயகனாக கமல் மிக நன்றாகச் செய்திருந்தார். தலையில் பானையைச் சுமந்து கொண்டு கதாநாயகிக்காக முதலில் கூத்தடிப்பது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியில் கதாநாயகி முழுமையாகக் குணமடைந்து விடுகிறாள். ரயில் ஏறிப் பயணப்படுகிறாள். கதாநாயகன் ஓடி வருகிறான். அவளிடம் பேச முயல்கிறான். அவளோ இப்போது முழுமையான குணமடைந்த சாதாரணப் பெண். அவள் முன்னால் குரங்கு போல் ஆடினால், அவள் காசுதான் தருவாள். அவளிடம் கதாநாயகன் ‘பேச’ வேண்டும். நீ எப்படி இருந்தாய்; நான் என்ன செய்தேன் என்றெல்லாம் கூறாமல் கூத்தடிதத்தைப் பார்க்கும் போது எனக்கு – கூத்தடிக்க வைத்த இயக்குனர், கூத்தடித்த நடிகர், இதை உச்சுக் கொட்டிப் பார்த்த ரசிகர்கள் என்று எல்லோர் மீதும் எரிச்சல் மட்டுமே வந்தது. அறிவுக்குப் பொருத்தமில்லாத அந்தக் காட்சியே மனதில் நின்று போனது. அப்படத்தை யாரும் பாராட்டும் போது எனக்கென்னவோ எரிச்சல் தான் மனதில் எழுந்தது. Emotional-ஆகக் காட்டவேண்டுமென்பதற்காக sensible-ஆக அதைக் காட்டக் கூடாதா?

எப்படியோ பாலு மகேந்திராவின் வீடு போன்ற படங்களின் சிறப்பும், கதை நேரங்களில் வந்த தொலைக்காட்சி படைப்புகளும் நிறைவைத் தருபவை. ஆனால் மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சி ....? stupid என்றே தோன்றுகிறது. ஆனால் பொதுவாக நம் ரசிகப் பெருமக்கள் இது போன்ற .... தனமான காட்சிகளுக்கு நன்றாகவே கை தட்டுகிறார்கள்.

மேலும், சில உதாரணங்கள் –

’முதல் மரியாதை’ நல்ல படம். ஆனால் ஒரு ஆணின் கட்டை விரலைத் துண்டாகக் கடித்து எடுத்து விடுவாளாம். ... அதுவும் சாவோடு தண்ணீருக்குள் போராடும் ஒரு பெண் ... கடவுளே! (இது ஒரு கதையிலிருந்து சுட்டது என்று பின்னால் சொன்னார்கள். காப்பியடிக்கும் போது கூட சரியானதை காப்பி அடிக்கக் கூடாதா?)

 ’புத்தம் புது அர்த்தங்கள்’ இப்படி ஒரு நல்ல தலைப்பு. ஆனால் கதை மகா நொண்டிக் கதை. கதை இறுதியில் காலின்றி, கோலூன்றி மிக மட்டமான மனிதன் வருகிறான்; காற்றில் கோல்கள் பறந்து விடுகின்றன. எந்த மனிதத் தன்மையில்லாத அவனை கதாநாயகி தோள் கொடுத்துத் தாங்கி .... அட போங்கப்பா ...!

‘அந்த ஏழு நாட்கள்’ – கடைசி சீனை எப்படி வைப்பது என்று மூன்று பெரும் இயக்குனர்கள் ஒன்றாக இருந்து யோசித்து ... கல்யாணம் ஆவதற்கு முன் இருந்த அந்தப் பெண் வேண்டும் என்று தாலியை மய்யமாக வைத்து கதாநாயகன் மறுத்து விடுவான். Too many directors spoil the movie என்றானது. (எங்கள் ஊரில் சந்திரபாபு திருமணத்திற்குப் பிறகு மிக நல்ல மனிதராக நடந்திருப்பதும் நினைவுக்கு வந்தது.)

இதையெல்லாம் கேட்டால் ‘படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது’ன்னு சொல்லும் தமிழ்ச் சாதி ரசிகர்கள் நிறைய உண்டு நம்மைச் சுற்றி ....




*


 

717. சிநேகாவின் காதலர்கள் -- எங்கள் மதுரை

* *

Tuesday, February 18, 2014

716. யூதாஸின் நற்செய்தி ... 7





***

ஏழு பதிவுகள்: 



***


  யூதாஸும் ஞான மரபும் 

Marvin Meyer 


ஐரினியஸ், யூதாஸின் நற்செய்தி காயினைட் குழுவினரால் எழுதப்பட்டது என்கிறார்.

பழமைக் கிறித்துவத்திற்கு எதிரான இந்தக் குழுவின் நான்கு பேரை ஐரினியஸ் நற்செய்திகளில் காணும் குணக்கேடானவர்களாகச் சொல்கிறார். அந்த நால்வர்: காயின் (Cain), ஈசாவ் (Esau), கோரா (Korah), சோதோம் மக்கள் (the people of Sodom). ஒருவேளை காயினைட் என்ற பெயர் கிறித்துவ எதிரிகளோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த ஐரினியஸ் போன்றோர் வைத்த பெயராக இருக்கலாம். (137)

 நாக் ஹமீதியில் கண்டெடுக்கப்பட்ட சில நூல்களில் – Secret Book of John, the Nature of Rulers, Holy Book of the Great Invisible spirit (the Egyptian Gospel) – காயினைப் பெருமைப் படுத்தும் பகுதிகள் உண்டு.

 Holy Book சோதோமின் மக்களை புரட்சிக்காரர்கள் என்று பேசுகிறது.

தங்களை ஞான மரபு என்றழைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கு உலக ஞானத்தை விட கடவுளைப் பற்றிய ஞானமும், mystical ஞானமும் மிகுந்தவர்களாகவும் கடவுளோடு ஒட்டிய உறவும் கொண்டிருந்ததாகக் கருதினர். யூதாஸின் நற்செய்தியில் ஞானம் – gnosis- என்ற சொல் இரு முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. (50,54)

 நாக் ஹமீதில் உள்ள Secret Book of John என்ற நூல் சேத்திய ஞானமரபு -Sethian Gnostic – சார்ந்த நூல். யூதாஸின் நற்செய்தியும் இதைப் போலவே சேத்தியன் வகையோடு சேர்ந்துள்ளது. (139)

’ என்றும் அழிய முடியாத ராஜ்ஜியமான பார்பெலோ’ என்பது சேத்தியன் ஞான மரபில் வழக்கமாக வரும் சொற்றொடர்.

 பார்பெலோ என்ற சொல்லின் ஆரம்பம் எது என்று தெரியவில்லை. ஒருவேளை ‘கடவுள்’ என்ற பொருள் தரும் நாலெழுத்து சொல் ‘YHWH’ அல்லது யெஹோவா (Yahweh) அல்லது ஆங்கிலத்தில் Jehovah என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஹீப்ரு மொழியில் ‘சொல்லில் அடங்கா கடவுள்’ என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும். (140)

சேத்தியன் மரபுப் படி பல சமயங்களில் தெய்வீகத்தைத் தங்களுக்குள் கொண்டிருக்கும் மனிதர்கள் இந்த உலகைப் படைத்த சிறு கடவுள்களை விடவும் மேலானவர்கள். (142)

யூதாஸின் நற்செய்தி சேத்தியன் கிறித்துவ மரபுகளை உள்ளடக்கியதாக உள்ளது. யூதாஸின் நற்செய்தியில் கடவுள் என்று வரும் சொல் எல்லாமே உலகத்தைப் படைக்கும் சிறு கடவுள்களையே குறிக்கிறது.(143)

இந்தக் கடவுள்களைத் தாண்டியவர் ‘பெரிய கடவுள்’ – Great One – என்றும் குறிப்பிடுகிறது. இதே மரபு Secret Book of John என்ற நூலிலும் காணப்படுகிறது. ’Great One’ என்ற ‘பெரிய கடவுள்’ காண முடியாத ஆன்மா.(Nag Hammadi Codes 11: 2-3) (144)

சேத்தியன் மரபின் படி Autogenes என்பது பார்பெலோவிலிருந்து தோன்றியது. ஆனால் இத்தோன்றல் தனித்திருக்கும் ஆற்றலுடையது. Autogenes என்பது auto-generated என்பது யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. (146)

வேறு சில சேத்தியன் நூல்களில் இந்த Autogenes-ன் தோற்றம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Secret Book of John –ல் ’Great One’விற்கும், பார்பெல்லோ என்ற தாய்க்கடவுளுக்கும் நடுவில் ஆன்மா இணைப்பால் பிறந்ததுவே Autogenes என்றும் சொல்லப்படுகிறது.

யூதாஸின் நற்செய்தியில் நான்கு ‘ஒளிப் பிரவாகிகள்’ – luminaries – Autogenesக்குக் கீழே பணி புரிகிறார்கள். இவர்களுக்குத் தனித் தனிப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. (147)

இக்கட்டுரை மேலும் பல சேத்தியன் கோட்பாடுகளை விளக்குகிறது. இதில் உள்ள நான்கு ஒளிப் பிரவாகிகளின் பெயரைக் கொடுக்கிறது.

கடவுளின் கட்டளையை மீறும் ஆதாம், ஏவாள், சோபியா – இவைகளின் கதைகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வுலகின் படைப்பாளிகளான Nebro, Yaldabaoth, Saklas … அவர்களின் பண்புகள் ... உலகை ஆளும் பன்னிருவர்களும் அவர்களுக்கு உதவியான வான தூதர்களும் ... மனிதனும் உலகமும் படைக்கப்படுதல் ... இதுபோன்ற பலவகையான கோட்பாடுகளும், Nag Hammidi-ல் உள்ள பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டவைகளும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.

யூதாஸின் நற்செய்தியில் சேத் ஒரு நல்ல ஆட்சியாளரென்று சொல்லப்படுகின்றது. அவரது வழியினரோ பெரும் பரம்பரையினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நற்செய்திகளின் வழியே பார்க்கும் போது ‘முதல் குடும்பத்தினர்’ ஒப்பேறாத ஆட்களாக (the first family is highly dysfunctional !!!) இருப்பது போல் தோன்றுகிறது. பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் சண்டை; ஏதனை விட்டுத் துரத்தப் படுகிறார்கள்; காயில்-ஏபேல் நடுவில் சண்டை; அடுத்து ஒரு மகன்; ஆதாமைப் போன்றவன் இந்த மகன். (157)

சேத் ஆதாமின் ‘அடுத்த ஒரு விதையாக’ இருப்பதால் allogene என்ற பெயர் அவருக்களிக்கப்படுகிறது. (158)

யூதாஸ் நற்செய்தியில் ஏசு ஒரு ஆசிரியராகவும், வெளிப்படுத்துபவராகவும் தெரிகிறார். தெய்வீகத்திலிருந்து வந்து மீண்டும் தெய்வீகத்திற்குள் செல்லப் போகிறார். அவர் யூதாஸிற்குப் போதனை செய்கிறார். யூதாஸோடு சேர்த்து சேத்தின் வழித்தோன்றல்களுக்கும் போதனை தருகிறார்.

 ஏனைய சேத்தியன் நூல்களிலும் ஏசு இதே போன்று போதனை செய்கிறார். தன்னை பார்பெல்லோ, ஆட்டோஜீன்கள் என்ற சுயம்பிகள், சேத் என்று அனைவருக்கும் இந்தப் போதனை அளிக்கிறார்.

 Secret Book of John என்ற நூலில் கிறிஸ்து சுய விளம்பிகளோடு அடையாளப்படுத்தப் படுகிறார்.

இதில் மேலும் ஏசு பார்பெல்லோவின் மகனாகக் காண்பிக்கப்படுகிறார்.

 Holy Book of the Great invisible spirit-ல் சேத் ஏசு சேத்தின் அவதாரமாக இருக்கிறார். 

Book of Allogenes-ல் ஏசு சேத்தின் இன்னொரு பக்கமான அல்லோஜீன் என்ற புதிய மனிதராகக் காண்பிக்கப்படுகிறார். (168)

யூதாஸின் நற்செய்தியில் ஏசு பார்பெல்லோவோடு தொடர்பில் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறார். (169)

****
முற்றும்



 *



715. யூதாஸின் நற்செய்தி ... 6



***


***

ஏழு பதிவுகள்: 




***





 ஐரினியஸ் – யூதாஸின் நற்செய்தி 

Gregor Wurst 

 எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட Codex Tchacos-ல் மொத்தம் நான்கு ஞானமரபு நூல்கள் இருந்தன. அவை: பேதுரு பிலிப்பிற்கு எழுதிய கடிதம்; (இது 1945ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட Nag Hammidi ஏடுகளிலும் இருந்தது.); Nag Hammidiல் இருந்த ஜேம்ஸின் வெளிப்பாடுகள்; யூதாஸின் நற்செய்தி; Book of Allogenes என்ற நூலின் சில பக்கங்கள். (121)

இந்த ஏடுகள் காப்டிக் மொழியில் இருந்தாலும் அவைகளின் மூலமும் காப்டிக் மொழியல்ல. கிரேக்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்று கருதப்படுகிறது. பிஷப் ஐரினியஸ் தன் நூலில் யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (122)

 ஐரினியஸ் தன் நூலில் ஞானமரபுக் கிறித்தவர்களைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் தன் நூலில் யூதாஸைப் பற்றி ’மற்றவர்கள் போலில்லாமல் யூதாஸ் முழுமையான உண்மையை அறிந்திருந்ததாகக் கூறப்பட்டவர்’ என்று கூறுகிறார்.

 ஐரினியஸைப் பொருத்தவரை யூத வேத நூல்களில் குறிப்பிடப்படும் – Esau, Korah, the sodomites – என்பவர்கள் பழமைக் கிறித்துவர்களால் கெட்டவர்களாகவும், எதிராளிகளாகவும் கருதப்பட்டவர்கள். ஆனால் இவர்களே பெரும் கடவுளின் உண்மையான ஊழியர்கள் என்று ஞான மரபில் கூறப்படுபவர்கள். (123)

 ஐந்தாம் நூற்றாண்டின் Theodoret of Chyrrus யூதாஸைப் பற்றிக் கூறும் போது அவர் அப்போஸ்தலர்களுக்குள் முதனமையானவர் என்று கூறுகிறார்.

 மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த ஞான மரபினர் Cainites – காயினின் வழியினர் – என்று கிளமென்ட் அலெக்ஸாண்ட்ரியா போன்ற கிறித்துவ ஆசிரியர்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.(124)

ஐரினியஸின் எழுத்துகளிலிருந்து கானனைட்கள் யூதாஸின் காட்டிக் கொடுத்தலில் உள்ள மர்மத்தை ஆதரித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. (125)

 35ம் பக்கத்தில் யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் தோன்றுகிறார். அந்தக் காட்சியில் அவர் மட்டுமே சீடர்களில் ஏசுவை முழுமையாக அறிந்த ஒரே ஒருவராக்க் காட்சிப்படுத்தப் படுகிறார். அதோடு ‘ஏசு பார்பெலோவிலிருந்து வந்தவர்’ என்றும் கூறுகிறார். (128)

இதனாலேயே ஏசு அவரைத் தனியாக அழைத்து ‘தன் அரசின் மர்மங்களை’ விளக்குகிறார். (யூதாஸ் நற்செய்தி 35, 45)

 யூதாஸிடம் மட்டுமே ஏசு ’எந்த தேவ தூதர்களாலும் கூட காணப்படாத, தன் பெரும், அகன்ற ராஜ்ஜியத்தைப் பற்றியும், எந்தப் பெயராலும் அழைக்கப்படாத அங்கேயுள்ள ஆன்மாவைப் பற்றியும்’ கூறுகிறார்.

மேலும், பிரபஞ்ச உண்மைகளையும், சின்னக் கடவுளர்களால் படைக்கப்பட்ட மனித குலத்தைப் பற்றியும் கூறுகிறார். (யூதாஸ் நற்செய்தி 52-55)

 காப்டிக் ஏடுகளில் யூதாஸ் ‘எல்லா உண்மைகளையும் அறிந்தவர்’ என்று கூறப்படுகிறார். (57)

இறுதியாக யூதாஸ் ஒரு ஞான மரபினர்; அவர் இறுதியில் ஒரு ஒளிமயமான மேகத்திற்குள் ஏறி, அங்கிருந்து பெரும் கடவுளைக் காண்பார். (129)

யூதாஸின் வேலையே ஏசுவை அவரது உடம்பிலிருந்து விடுதலை செய்வது தான். (130)

 யூதாஸ் நற்செய்தி எழுதப்பட்ட காலம் எது? கணிக்க மிகவும் கடினம். இந்த நற்செய்தியில் அப்போஸ்தலர்களின் நடவடிக்கையைப் பற்றிய குறிப்புள்ளது. 

யூதாஸ் நற்செய்தியின் 36ம் பக்கத்தில் ஏசு யூதாஸிடம், ‘உனக்குப் பதிலாக வேறு ஒருவர் வருவார். மீண்டும் 12 அப்போஸ்தலர்களாக ஆகி கடவுளோடு ஒன்றி விடுவார்கள். அப்போஸ்தலர் நடவடிக்கையில் (1:15-26) யூதாஸிற்குப் பதிலாக மத்தியாஸ் என்பவர் இணைந்து மீண்டும் 12 அப்போஸ்தலர்கள் ஆகிறார்கள். (133)

 கார்பன் டேட்டிங் முறையில் A.J.Tmothy Jull என்பவரால் அரிசோனா பல்கலையில் ஆராயப்பட்ட இந்த ஏடுகள் மூன்றாம் நூற்றாண்டின் கடைசி 3 மாதங்களில் என்று இவ்வேடுகளின் காலம் கண்டறியப்பட்டது. (134)

 பழைய ஞான மரபுகளைப் பற்றிப் படிக்க இந்த ஏடுகள் மிகுந்து பயன்படும். சேத்தியன் ஞானமரபு பற்றிய அறிதலுக்கும் இது பயனளிக்கும். இந்தச் சேத்தியன் ஞான மரபு ஐரினியஸ் காலத்திற்கு முந்தியது என்பது வெளிப்படையாகிறது.

கிறித்துவத்தின் வரலாற்றறிவிற்கு இது பயனளிக்கும். (133)





 *