Saturday, January 31, 2015

819. தருமிப் பக்கம் (அதீதம்) - புத்தக வாசிப்பின் ஆரம்பம்









*

அதீதத்தில், தருமிப் பக்கம் - 23ம் கட்டுரையின் மீள் பதிவு

*


 முதல் வகுப்பில் மாணிக்கம் சாரிடம் சேர்ந்த அந்த முதல் நாள் நினைவு மட்டும் நீங்காமல் மனதில் நின்று விட்டது. அதன் பின் நடந்தவைகள் அதிகம் நினைவில் இல்லை. மூன்றாம் வகுப்பில் கரும்பலகைக்குக் கருப்பு வண்ணம் ஏற்ற கண்டங்கத்திரி வேரை அரைத்து, சட்டையைக் கறையாக்கி வீட்டில் அடி வாங்கியது…. மதுரையில் நடந்த குத்துச் சண்டை வீரர்கள் எங்கள் வளாகத்திலிருந்த புனித மரியன்னைக் கோவிலுக்கு வந்த போது கோவில் ஜன்னல்கள் வழியே ஏறி எட்டிப்பார்த்தது … டென்னிஸ் பந்தை வைத்து ஆடிய கால்பந்து விளையாட்டுகள் …. என் முதல் நட்பு முறிந்து போனது … ஐந்தாம் வகுப்பில் ராஜாவுடன் ஏற்பட்ட தமிழ்ப் போட்டி  .... (எம் தமிழ்ப் பெருமை தெரிய இதைக் கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.) …. இவைகள் மட்டும் தான் நினைவில் இருக்கின்றன.

 புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்க்கு வந்தாகி விட்டது. விட்ட குறை .. தொட்ட குறை என்பது போல் இங்கேயும் I Form ‘A’ Section-ல் சேர்ந்தாச்சு. எங்கள் பள்ளியில் எப்போதும் நல்லா படிக்கிற பசங்களை ‘A’ Section-ல் தான் சேர்ப்பார்கள். நான் அங்கு வாத்தியார் பையன் என்பதாலோ என்னவோ ஒன்றாம் வகுப்பிலிருந்து VI Form வரை ‘A’ Section தான். மற்ற படி என் படிப்பிற்காக இருந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். இந்த ‘Form’ என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அந்தக் காலத்தில் S.S..L.C. இருந்த போது 1 – 5 வகுப்பு வரை Standard; 6லிருந்து 11 வரை Form என்று அழைக்கும் வழக்கம் இருந்தது.

 III Form வரை நடந்தவைகளில் இரண்டு விஷயங்கள் மனதில் வாழ்நாள் முழுமைக்கும் ஆழமாக நிலைத்து நின்று விட்டன. ஒன்று – ஆங்கில இலக்கணம் பயின்றது. அது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.



இரண்டாவது – எனக்கு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம். பள்ளி நூலகத்தில் இருந்த ஆசிரியர் அப்பாவுக்கு நண்பர். ஆனாலும் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்கு நிறைய தொடர்ந்து பல கதைப் புத்தகங்களைத் தருவார். அவரின் பெயர் ராயர். எங்கள் பள்ளியில் புத்தகம் எடுக்க நாங்கள் விரும்பும் நாலைந்து புத்தகங்களின் தலைப்புகளைத் தரவேண்டும். அதில் உள்ள புத்தகங்களில் இரு புத்தகங்களை நூலகர் தருவார். ஆனால் எனக்கு இந்த வழக்கம் கிடையாது. பள்ளி முடிந்தவுடன் போகாமல் சிறிது நேரம் கழித்து போக வேண்டும். எனக்குப் பிடித்தப் புத்தகங்களை நான் எடுத்துக் கொள்ளலாம்.

அப்பா ஒரு ஆசிரியர் என்றாலும் ஏனோ பாடப்புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களைப் படிக்க என்னை அனுமதிப்பதில்லை. அது இன்று வரை எனக்கு ஒரு பெரும் புதிர் தான். ராயர் சாரிட,மும் புத்தகங்கள் கொடுக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். ஆனால் என்னவோ நான் தொடர்ந்து கேட்டதும் அவர் வழக்கம் போல் கதைப்புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். நூலகத்தின் அலமாரிகளில் அங்கிருந்த சிறு ஏணியில் ஏறி பிடித்த புத்தகம் எடுத்து வருவது இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது.


முதலில் வாசித்த புத்தகங்கள் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள் தான். நூலகத்தில் எடுக்கும் புத்தகங்கள்  புத்தகப் பை வழியாக வீட்டுக்குப் போய்விடும். புத்தகம் வைக்கும் அலமாரிக்குப் பக்கத்தில் வீட்டில் எப்போதும் சில அரிசி மூட்டைகள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு இடைவெளியைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். பையிலிருந்த புத்தகம் சரியான நேரத்தில் சாக்குமூடைகளுக்குள் போய்விடும்.

பொதுவாக வீட்டில் வைத்து புத்தகம் படிக்க நல்ல தருணம் கிடைக்காது. ஆனால் மண்டைக்குள் முடித்து வைத்த கதையின் கடைசிப் பகுதி  சிறகடிக்கும். அடுத்து என்ன என்பது பெரும் முடிச்சாக மனதுக்குள் நோகடிக்கும். அம்மா கடைக்குப் போகச் சொல்லும் நேரம் தான் சரியான வாய்ப்பாக இருக்கும். கடைக்குப் போகச் சொன்னதும் உடனே ஓடிப்போய் சட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அதே தருணத்தில் திருட்டுத் தனமாக சாக்குக்குள் இருக்கும் புத்தகம் சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையில் போய் விடும். கால்சட்டைக்குள் திணித்து இடுப்பில் புத்தகத்திற்கு இருக்கை கிடைக்கும்.

வீட்டிலிருந்து சில வீடுகள் தாண்டியதும் ஒரு சந்து வழியாக அடுத்த சாலைக்குச் சென்றால் முதல் கடையாக அருணாசலம் அண்ணாச்சி கடை இருக்கும். அவர் கடையின் முன்னால் ஒரு சின்ன மரம் வளர்ந்து கொண்டிருந்தது. அண்ணாச்சி கடையில் எப்போதும் சில ஆட்களாவது இருப்பார்கள். நான் எங்கள் ரோட்டிலிருந்துஅந்த சந்து முனைக்கு வந்ததுமே புத்தகம் கைக்கு வந்து விடும். சந்தின் ஓரத்தில் நடந்து கொண்டே வாசித்துக் கொண்டு வருவேன்.அந்தச் சின்ன மரத்தடியில் கதை தொடரும். கூட்டம் குறைந்த பிறகு வாங்கலாம் என்று வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அண்ணாச்சிக்கு அப்பாவிடம் மரியாதை. ஆகவே அவர் கொஞ்சம் நேரம் என்னை வாசிக்க விட்டு விட்டு அதன் பின் என்னப்பா வேணும் என்று கேட்பார். சொன்ன பட்டியலைப் போட்டுக் கொடுப்பார். அவருக்கும் அப்பாவின் கெடுபிடி தெரியும். ஆனாலும்  கொஞ்சம் டைம் கொடுத்த பிறகே என் பக்கம் வருவார். இப்போதும் எப்போதெல்லாம் அண்ணாச்சி கடைப் பக்கம் வண்டியில் செல்லும் போது கட்டாயமாக அந்தக் கடை இருந்த இடத்தைப் பார்த்து விட்டுச் செல்வேன். இப்போது அந்தக் கடை அங்கே இல்லை. அந்த மரமும் இல்லை. நினைவுகள் மட்டும் இன்னும் அங்கே உயிரோடு நிழலாடுகின்றன.

இப்படி ஆரம்பித்த ‘திருட்டுப் பழக்கம்’ ரொம்ப காலம் தொடர்ந்தது. எந்த ஆசிரியர் பிடிக்கிறதோ அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கமும் தொடர்ந்தது. வாசிப்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் தொடர்ந்தது. கல்லூரி ஆசிரியர்களில் இரு மொழியிலும் வாசிக்கும் ஆசிரியர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவனாக பல காலம் இருந்து வந்தேன்.

என்ன ஆச்சோ... எப்படி ஆச்சோ ... வாசிப்பு இப்போது நிறைய குறைந்து போனது. ஆனாலும் ஒரு வசதி .... பதிவுகளில் மதம் பற்றி எழுத ஆரம்பித்ததால் நிறைய நூல்களை வாசிக்கும் கட்டாயம் வந்தது(!!!). மற்ற வாசிப்புகள் மிகக் குறைந்த அளவில் போகிறது ..............








 *

Thursday, January 22, 2015

818. J.V.'s PICTURES





14.1.2015 – a year has gone since the demise of Prof. J. Vasanthan. He has left to us so much of his artistic wealth, mainly lovely and live line drawings.  The treasure cove was so high, nearly 2500 drawings. Of these 70 drawings were kept in an  art gallery for a weak, from 9th to 14th of January for the Madurites to see and enjoy. I have got some of them as photos and given in this post for you to enjoy.



In addition to the gallery, there was a meeting to refresh his memories in the evening of 14th at the Chamber of Commerce. 



A documentary on JV was at the end of this meet. It remains still a mystery why JV never even tried to popularise all his talents and works. Many of his art pieces, both his drawings and writings were so new to all.
















Ashraf Bhagat, an art critic was able to recognize and appreciate JV’s art. Some excerpts from her note:

‘Works of JV are more than just lines.’



‘As a film critic he had prolifically critiqued cinemas in India and the West.’

‘ …. those layers of emotions that were stashed away deep within his subconscious never to be verbalized found a catharsis in his art particularly in the rendering of the countenances of ordinary being whom he encountered in his daily life.’



‘Vasanthan in his wide ranging cartoons, illustrations, and caricatures brilliantly captured the emotions and feelings, contextualizing within the political, social and cultural milieu in which they were situated.’

ARUN SHOURIE

‘His delineation of faces whether it was of Christ, an old man or a poor farmer was enormously evocative and poignant, with eyes expressing deep pain and sorrow – an inevitable ubiquity read across most of his works.’

















‘The pen and ink sketch of Gandhiji with his head bent over the walking stick is almost personalized and very poignant. …  This particular posturing evolved by Vasanthan conceals and reveals the magnitude of emotions in the body language.’





HOLMES






HITCHCOCK

Add caption













I am fortunate to have three of his drawings with me. The one I have given here is the laminated picture of my elder daughter, drawn more than  35 years ago, always proudly reminding me of my good fortune for being a good friend of him for so long …………









*****









Thursday, January 15, 2015

817. ஒரு எழுத்தாளனின் தற்கொலை








*



 ”எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.”

பெருமாள் முருகன் இவ்வாறு தன் எண்ணங்களை வெளியிட்டு, அதன் கீழ் ”அவனை விட்டு விடுங்கள்.” என்று எழுதி பெ. முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக) என்று கையொப்பமிட்டிருக்கிறார்.

இது ஒரு எழுத்தாளனின் தற்கொலையன்றி வேறில்லை. பெருமாள் முருகனோ /முருகனோ இனி ஏதும் எழுத மாட்டேன்; வெறும் ஆசிரியனாக மட்டும் இருப்பேன் என்றும் எழுதியுள்ளார்.

பெருமாள் முருகன் இனி எழுத மாட்டேன் என்றால் அது ஒரு எழுத்தாளனின் தற்கொலையன்றி வேறில்லை. பெருமாள் முருகன் தன்னுள் இருக்கும் ஒரு எழுத்தாளனைக் கொன்று விடுவது ஒரு தற்கொலை என்றால், ஏதோ பேனா பிடித்து (அல்லது) கணினியின் மூலம் எழுதும் ஒவ்வொருவரும், அப்படி எழுதப்பட்டவைகளை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

சாதி, மதங்களின் பெயரால் படைப்புகளைத் தடை செய்யும் போக்கு கட்டாயம் மாறியாக வேண்டும். இந்த நிலையில் பெருமாள் முருகனின் முடிவு ஒரு எழுத்தாளனின் முடிவாக இருக்க முடியாது. எழுத்தாளனுக்குப் பொறுமையை விட போராட்டம் அதிகமாக இருக்க வேண்டும். அவரின் பழிப்புக்குரிய அந்த நூலை நான் வாசிக்கவில்லை. செவிவழி செய்தியோ, உண்மையான வரலாறோ... தான் அறிந்த ஒரு செய்தியை எழுதியுள்ளார். எழுதிய செய்தி மனமறிந்து எழுதியிருந்தால் அந்தச் சொற்களை அவர் விழுங்க வேண்டியதில்லை. எழுத்தையே மூட்டை கட்டி வைக்க வேண்டிய தேவையும் இல்லை.

நான் வாசித்தவைகளில் இருந்து ஒரு சான்று:

கிறித்துவர்களின் வேத நூலில் மகதலேனா ஒரு நடத்தை கெட்ட பெண் என்றுள்ளது. ஆனால் இவைகளை மறுத்து சில சான்றுகளோடு, மகதலேனா ஏசுவின் மனைவி; ஏசுவின் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள்; அச்சத்தோடு தப்பி குழந்தையோடு ஓடினார் என்று சில ’வரலாற்று’ நூல்கள் வெளி வந்துள்ளன. இதை எழுதிய ஆசிரியர்கள் இதுவரை பயமுறுத்தப் படவில்லை. அவர்கள் மேலோ அவர்களது நூல்கள் மீதோ எவ்வித நடவடிக்கைகளும் வரவில்லை. அந்த ஆசிரியர்களும் அச்சத்தாலோ, வெறுப்பாலோ தங்கள் படைப்பாற்றலை மூட்டை கட்டி ஓரம் கட்டவில்லை. 


இந்தியாவில்,  அதுவும் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் இந்த சாதி, சமய அராஜகப் போராட்டங்களுக்கு வாசிப்பாளர்கள் அனைவரும் திரண்டு தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டும். பெருமாள் முருகன் தவறாக எழுதியிருந்தால், அவரை எதிர்ப்பவர்கள் அதை முதலில் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதுவும் முறையான வழியில் வரவேண்டும். கூட்டம் கூடி, குரலெழுப்பி படைப்பாளர்களை சந்தியில் நிறுத்தக் கூடாது; அதைப் பொறுமையோடு வாசகர்கள் கைகட்டிப் பார்க்கக் கூடாது.

பெருமாள் முருகன் சொல்வது போல் அவர் கடவுள் அல்ல; ஆனால் அவரால் உயிர்த்தெழ முடியும். அவரை உயிர்த்தெழ வைப்பது வாசகர்களின் முதல் கடமை.


 பெருமாள் முருகனை உயிர்த்தெழ வைப்போமா ....?





*


816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்






*



தி இந்து - ஜனவரி 14, 2015

 வாசகர் திருவிழா - 2015 

 நான் என்னென்ன வாங்கினேன்? -- எஸ். ராமகிருஷ்ணன் 


 நமது ஆளுமையை, அழகுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உனது நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழியிருக்கிறது. இதற்கு மாறாக, நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் என நான் சொல்வேன்.

வேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான்.

புத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு.

இன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை: --

ரே பிராட்பரி எழுதிய “பார்ன்ஹீட் 451
வண்ணதாசனின் “சின்ன விஷயங்களின் மனிதன்”
ஜெ.ட். சாலின்ஜர் எழுதிய “குழந்தைகளின் ரட்சகன்”
சார்லஸ் ஆலன் எழுதிய “பேரரசன் அசோகன்”
”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை”
“தி.க.சியின் நாட்குறிப்புகள்





 *

Sunday, January 11, 2015

815. JIHADI COLLECTION (14)



தி இந்து  -- 10.1.15
அச்சத்தில் பணிந்து விடக் கூடாது.
-- சைமன் ஜென்கின்ஸ்  (தி கார்டியன்)

பயங்கரவாதம் என்றொரு தொழில்நுட்பம்

பயங்கரவாதத்தை ஒழிக்க எளிதான வழி ஏதும் இல்லை என்று அதை ஆய்வு செய்த ரிச்சர்ட் இங்கிலீஷ் எழுதியதைத்தான் அனைவரும் ஒப்புக் கொள்கின்ற்னர். பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகள் கையாளும் தொழில் நுட்பம்தானே தவிர அது சித்தாந்தம் அல்ல;பயங்கரவாதம் என்பது ஒரு செயலைச் செய்யும் விளைவு தானே தவிர, அதற்கான காரணம் அதுவல்ல.

ஏராளமானோரின் உயிர்களைப் பலிவாங்குவது மூலம் பயங்கரவாதிகள் இரண்டு விஷயங்களைச் சாதிக்கப் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றி விமரிசித்தால் இது தான் நடக்கும் என்று விமர்சித்தவர்களுக்கும் விமர்சிக்கப் போகிறவர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள்.....  தங்களுடைய (மதம் சார்ந்த) கட்டுப்பாடு ஒருமுகமானது; வலுவானது; துணிச்சலானது; நிரந்தரமான முத்திரையைப் பதிக்கவல்லது என்று கருதுகிறார்கள்.

அச்சம் தான் அடிப்படை
பயங்கரவாதம் சாதாரணமான குற்றச்செயல் இல்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பொறுத்திருக்கிறது. ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் அளவுக்கோ அரசுகளைக் கவிழ்க்கும் அளவுக்கோ அது ஆற்றல் மிக்கது அல்ல. மக்களின் மனங்களில் அச்சத்தை மூட்டக்கூட அது செய்தி ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறது.
*


THE HINDU - 9.1.15


CHARLIE HEBDO  TO PUBLISH "SURVIVORS ISSUE"


பத்திரிகை அலுவலகத்திற்கு பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காகத் திரளாகக் கூடினர்; பலர் பென்சில்-பேப்பரை அங்கு வைத்து தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.  ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர், ‘நாம் அமைதியானால் அவர்கள் வென்றதாகி விடும்” என்றார்.  “நான் ஒரு சார்லி” என்ற அட்டைகளோடு பலர் கண்களில் நீரோடு அங்கு வந்திருந்தனர். சிலர் தங்கள் கைகளிலிருந்த பென்சில்களை வானத்தை நோக்கி நீட்டினர்.


 ***********




இந்த மதத்தீவிரவாதிகளை நோக்கி எள்ளிநகையாடுவதன் மூலம் அவர்கள் போராட்டத்தைப் பொருளற்றதாக ஆக்க முடியும்.

இப்பத்திரிகை இஸ்லாமியத்திற்கு எதிரியானது அல்ல;  ஆனால் எல்லா மதங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும், தீவிரவாதத்திற்கும் எதிரானது.

இப்பத்திரிகை மிகவும் துணிச்சலானது. ஏனெனில் அது மதம் என்னும் மிக பலம் வாய்ந்த ஒரு கட்டமைப்பை எதிர்க்கிறது. 

பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளையும், மதங்களின் தேவையில்லா சடங்குகளையும் அது கேள்வி கேட்டு வந்துள்ளது.

 *************



’அல்லாகு அஹ்பர்” என்று கத்திக் கொண்டு அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த இரு காவல்துறையினரைக் கொன்று விட்டு அங்கிருந்த ஒரு காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.

*************






*******


THW HINDU - 8.1.15




ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து பலரையும் நோக்கிச் சுட்டனர். ‘எங்கள் தூதருக்காக நாங்கள் பழி வாங்கி விட்டோம் ... “ என்றும் “அல்லாகு அக்பர்” என்றும் உரத்துக் கத்தினர்.



********************


Monday, January 05, 2015

814. மதங்களும் ... சில விவாதங்களும்



                                                                  


*









எதிர் வெளியீடு 


சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு



மதங்களும் சில விவாதங்களும்...
 
தருமி 



பூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம், சுவனம், பரலோகம், சிவலோகம், வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து, நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து, அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த முத்தாய்ப்பான உத்திக்குப் பெயர் தான் விதி.
                                                                                         
  Dr.கோவேத.சுவாமிநாதன்,                                                                                                   தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு), 
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.                                                                             
 

 ***


காலமெல்லாம் ஒரே மதத்திலேயே வளர்ந்திருந்தாலும் அம்மதத்தின் பழைய வரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல முக்கிய செய்திகள் நம் கண்களுக்கு வராமலேயே இருக்க வழியுண்டு. அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள செய்திகளின் மேல் இந்நூல் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தருமி


*8*