Monday, July 27, 2009

325. காவல்துறைக்கு அனுப்பிய கடிதம்.

*

*

"கிணறு வெட்ட பூதம்" என்ற தலைப்பில் பதிவர் ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் இட்ட பதிவினைப் படித்து, அதிர்ந்து, அதன் தொடர்பாக அப்பதிவின் பின்னூட்டத்தில் கொடுக்கப் பட்ட காவல்துறை முகவரிக்குக் கீழ்க்கண்ட புகாரினை அனுப்பியுள்ளேன்.

அப்பதிவினைப் படித்து, நீங்களும் உங்கள் புகாரையோ அல்லது நானனுப்பியுள்ள புகாரின் நகலையோ நீங்களும் அனுப்ப வேண்டிக்கொள்கிறேன். அதன் முகவரி: http://www.tnpolice.gov.in/mailcomplaint.php

மேற்சொன்ன முறையில் கடிதம் அனுப்பு சிரமம் உள்ளது. அதோடு பெனாத்தல் சுரேஷ் சொன்ன ஒரு திருத்தத்தின் பேரில் இந்த புகார் கடிதத்தை விடவும் நேரடியாக போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு ஒரு கடிதம் / தந்தி இட்டால் நல்லது என்று கருதப் படுகிறது. ஆகவே கீழ்க்காணும் கடிதத்தை அனைவரும் அனுப்பி நம் பதிவுலக ஒற்றுமையையும், நடக்கும் ஒரு போராட்டத்தில் சிறு பங்கெடுக்கவும் அழைக்கப்படுகிறீர்கள்.




====================================================================





To
Commissioner of Police,
Police commissioner's office,
Egmore,
Chennai- 600 008





ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் என்ற ஒரு தமிழ்ப்பதிவர் தனது பதிவு ஒன்றில் - http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html - தான் நடத்திவரும் ஒரு அறப்போராட்டம் பற்றி எழுதியுள்ளார். தொடர்ந்து போராடி வரும் அவரது போராட்டத்தின் அற நிலை குறித்த நம்பிக்கையாலும், அவரது தொடர் போராட்டம் ஒரு ந்ல்ல முடிவைக் காண வேண்டும் என்பதாலும் இதனை உங்களிடம் கொண்டுவருகிறேன்.

1) திரு நாராயணன் தன் தவறை உணார்ந்து நல்ல நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
2) ஆய்வாளரும் துணை ஆய்வாளரும் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்
3) காவல் துறைக்கு வரும் எல்லா புகார்களுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது கொடுப்பது தங்கள் கடமையென காவல் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் ரசீது பெறுவது தங்கள் உரிமையென்பதை உணர்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப் பட வேண்டும்.




================================================


உயர் காவல்துறையினருக்கு,

ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் என்ற ஒரு தமிழ்ப்பதிவர் தனது பதிவு ஒன்றில் - http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html - தான் நடத்திவரும் ஒரு அறப்போராட்டம் பற்றி எழுதியுள்ளார். தொடர்ந்து போராடி வரும் அவரது போராட்டத்தின் அற நிலை குறித்த நம்பிக்கையாலும், அவரது தொடர் போராட்டம் ஒரு ந்ல்ல முடிவைக் காண வேண்டும் என்பதாலும் இதனை உங்களிடம் கொண்டுவருகிறேன்.


*சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களிடம் கடந்த 9 மாதங்களாக தான் தங்கியுள்ள அறைக்கு நல்ல நீர் தர முயலவேண்டும் என்று ரமேஷ் சதாசிவம் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக அவர் தன் பதிவில் காவல்துறையினர் இதுவரை எத்துணை 'துணை'யாக இருந்துள்ளனர் என்பதையும் தெளிவாக எழுதியுள்ளார்.

• எழிலகத்தில் உள்ள தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகி பெற்ற அறிக்கையில், தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர் திருமதி. சந்த்ரிகா நாங்கள் பயன் படுத்தும் நீரில் மனித மலத்தின் கலவை மிக அதிக அளவில் இருப்பதாக கூறினார். நூற்றுக்கு முப்பத்தாறு என்கிற விகிதம் எள்ளளவும் சகித்துக்கொள்ள கூடிய அளவில்லை என்றும் கூறியுள்ளார்.

• இப்பிரச்சனையில் துணை ஆய்வாளர் திரு. த. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் முனைவர். திரு. செல்வகுமார், நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஆகியோர் தலையிட்ட விதம் அப்பதிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

• *மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் ஜூன் பதினொன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளார்.

• *குற்றவியல் நீதி மன்றத்திலும் என்னை மிரட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளார்.

• *நுகர்வோர் நீதி மன்றத்திலும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யவுள்ளார்.

இன்னும் விடிவுக்காகக் காத்திருக்கிறோம். இன்னொரு பதிவன் என்ற முறையில் நடக்கும் விஷயங்களில் மக்களின் காவலர்களான நீங்கள் அப்பதிவரின் நடவடிக்கைகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்.

இக்கடிதம் ஏற்கெனவே ஈஸ்வரி என்பவர் அனுப்பிய 709TRID6 என்ற எண்ணிட்டப் புகாரோடு தொடர்புடையது.

===================================================

Sunday, July 19, 2009

324. மதங்கள் எல்லாம் மனிதர்கள் படைத்ததுதானே ...

*




*

மீனாட்சி அம்மன் கோவில் - அதுக்கு எதிர்த்தாற் போல் இருப்பது மதுரையின் பழமையான கடைகளில் ஒன்றான துணிக் கடையின் பெயர் ஹாஜி மூஸா. அந்தக் கடையின் நுழை வாயிலில் கண்ணாடி போட்டு அழகு படுத்தியுள்ளார்கள். அந்தக் கண்ணாடி முகப்பில் தெரிவது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் நிழல். படத்தை எடுத்தது - Sam.

Tuesday, July 07, 2009

323. BLOWING MY OWN TRUMPET ...

*

நிர்மல் சேகர் அப்டின்னு ஒருத்தர் இந்து தினசரியில் விளையாட்டுப் பகுதியில் எழுதுவார். தொடர்ந்து விம்பிள்டன்னுக்கு நேரே சென்று எழுதுவார். ஒவ்வொரு முறையும் அவர் எழுத்தை வாசிப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கும்; அந்த அளவு அவரது ஆங்கிலம் எனக்குப் பிடிக்கும். ஆங்கில இலக்கியம் கற்றவராக இருக்க வேண்டும் - ஏனெனில், அவர் எழுதுவது என்னவோ டென்னிஸாக இருந்தாலும் பழைய ஆங்கில இலக்கிய பாத்திரங்கள் நடு நடுவே வந்து தலைகாட்டும். அதுவும் ஒரு பெரிய விளையாட்டுக்காரர் வென்றாலும், தோற்றாலும் அவரது ஆங்கில நடை தீவிரமாகி விடும். மொழி இழைந்தோடும். வாசிப்பதே பேரின்பம்.

இதை என் வகுப்புகளில் சொன்னதுண்டு. நேற்று திடீரென ஒரு sms வந்தது:

sir you said about articles written in Hindu after tennis matches. when read it today thought of you ....

வந்தது வெறும் எண்ணோடு வந்ததால் யாரென்று தெரியவில்லை. இருப்பினும் ...

some good seeds on some good ground!
Good.
Thanks.
but still not sure who u r ...

பதில் வந்தது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் முந்திய ஒரு மாணவியின் எண்.


ம்ம்..ம்.. சில நல்ல விதைகள் நானும் விதைத்து, அதுவும் சில நல்ல நிலங்களில் விழுந்து முளைத்திருப்பதைப் பார்த்து சந்தோஷமாயிருந்தது.


****** ****** ******* *******


விம்பிள்டன் பார்க்க ஆரம்பிக்கும்போது பெடரர் பக்கம்தானிருந்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்ததும் service தவிர மற்றவற்றில் ராடிக்கின் ஆட்டம் அழகாயிருந்தது. அதுவும் கடைசி ஆட்டம் தவிர எந்த ஒரு game-லும் அவர் தோற்கவில்லை. முதல் செட் வென்றது, இரண்டாவது செட் tie breaker-ல் தோற்றது - இரண்டுமே எதிர்பார்க்காமல் நடந்தது போலிருந்தது.


****** ******* ******** *********


நாடல் அடுத்து வந்து பெடரரோடு இறுதியாட்டத்தில் மோதும் காட்சியைக் காண இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

நிச்சயம் நன்றாக இருக்கும் அந்தப் பந்தயம்.

****** ******** ******** ********


*

Friday, July 03, 2009

322. WIMBLEDON ' 09 -- 2

*

*

பெடரர் -ஹாஸ் அரையிறுதி ஆட்டம் முடிந்தது. ஆட்டத்தில் காரமே இல்லை. பெடரருக்கு எளிதான வெற்றி.

*

அடுத்து இரட்டையர் மகளிர் ஆட்டத்தில் வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி.

*

அடுத்த இரட்டையர் ஆட்டம். ராடிக் - முர்ரே. முர்ரேவுக்கு பலத்த ஆதரவு. அதே அளவு அந்த ஆளும் "சும்மா" பயங்கர body language விஷயங்கள் செஞ்சிக்கிட்டு இருந்தார். 4 செட் ஆட்டம் ஆனது. இரண்டாம் செட் தவிர மற்றவைகளில் வென்று, ராடிக் இறுதிப் போட்டிக்குள் வந்திருக்கிறார். மகிழ்ச்சி. அதென்னவோ இந்த இங்கிலீசுகாரங்கன்னாலே அப்படி ஒரு லயிப்பு எனக்கு!

ராடிக் ரொம்ப சென்டி ஆகிவிட்டார். மைதானத்தில், பின் உள்ளே நுழைந்து படியில் ஏறும்போதும் மிகவும் அழுதுட்டார். ஏற்கெனவே பெடரரிடம் விம்பிள்டன்னிலேயே இருமுறை இறுதிப் போட்டியில் தோற்றிருக்கிறார்.

*

லியான்டர் இறுதி கலப்பாட்டத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு ஸ்லாம் அவருக்கு? பார்க்கணும்...


*

Thursday, July 02, 2009

321. WIMBLEDON '09

*

*
இப்போதான் செமி பைனல்ஸ் - பெண்கள் முடிந்தது, முதல் செமி செரீனாவுக்கும் ரஷ்யப் பெண் டெமென்டிவாவுக்கும் நடுவில் நடந்தது. செரீனா வெல்லவேண்டுமென்று நினைத்தாலும் ஆடும் ஆட்டம் இருக்கே .. அட .. சாமி .. வென்றபோது கோபம்தான் வந்தது. இவ்வளவு மோசமாக செரீனா விளையாடி என்றும் பார்த்ததில்லை. முதல் செட் பார்க்கவில்லை. கடைசி இரு செட்களிலும் ஆடிய ஆட்டம் இருக்கிறதே .. நானே நாலைந்து 'சிக்ஸ்ர்' பார்த்தேன். மகா மட்டமான ஆட்டம். ஏதோ கடைசி மூன்று ஆட்டத்தில் ஆடிய இரண்டு மூன்று 'ஷாட்'கள் ஒப்பேத்தியது. 6-7;7-5;8-6 என்று வென்றாயிற்று. ஆனால் ஆடிய ஆட்டத்துக்கு இதுவே பெருசுதான்!

அடுத்து சாபினாவோடு வீனஸ் ஆடிய ஆட்டம். ஆகா .. என்ன அழகு! 6-1; 6-0 ஸ்கோர். வீனஸ் - வந்தார்; ஆடினார்; வென்றார். அவ்வளவே ... மிக அழகான ஆட்டம். சாபினாவைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாகவே இருந்தது.

அடுத்து இறுதி ஆட்டத்தில் அக்காவும் தங்கையும். செமியில் பார்த்த அளவில் அக்கா நிச்சயமாக 6=0; 6-0-ல் வெல்ல வேண்டும். போனால் போகுது 6-2; 6-3-ல் வீனஸ் வெல்லட்டும். வீனஸுக்கு வாழ்த்துக்களுடன் ... காத்திருப்போம்.

ஆண்கள் ஆட்டம். Haas-யை பெடரர் வென்று விடுவார். இறுதிப் போட்டிக்கு Andy Murray vs Andy Roddick. என் கணிப்பு & ஆசை - Roddick வெல்லணும். ஆனால், இறுதி பெடரருக்குத்தான். I miss you, Rafa! 15வது வெற்றிக் கோப்பை வெல்லும் முதல் வீரரைப் பார்ப்போம்.



*

320. ஒரு சின்ன அச்சம்



ஒரு வழியாக எங்கள் ஊரில் (மதுரை) பல ஆண்டுகளாகக் கட்டுமானமின்றி இருந்த தொடர்வண்டிப் பாதைக்கு மேலான சாலைப் பாலம் ஒன்று இப்போது தீவிரக் கட்டுமானத்தில் உள்ளது; மகிழ்ச்சிதான். சீக்கிரமாக இந்த செல்லூர்ப் பாலம் முடிந்தால் என்னைப் போல் நித்தமும் இருமுறையோ நான்கு முறையோ இந்தப் பாலத்தைக் கடக்கும் என் போன்றோருக்கு நிம்மதிதான்.

வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆற்றின் ஓரத்தில் சாலை ஓரத்தில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வேலை நடந்து வருகிறது. அதை வேடிக்கைப் பார்க்கவே முதலில் சில நாட்களாகப் பெருங்கூட்டம் கூடி இருந்தது. நான் சிகப்புக் கோடிட்டிருக்கும் இடத்தில் ஒரு வெடிப்பு கூட உள்ளது.

அதோடு சாலையில் மேல் பகுதியில் எந்தவித தடுப்போ, எச்சரிக்கைகளோ இல்லாமல் "பா" வென்று சாலை இருக்கிறது. நான் மஞ்சள் வண்ணத்தில் வட்டமிட்டுள்ள இடம் எந்த வித பாதுகாப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் திறந்த சாலையாகவே உள்ளது. அதைத் தாண்டும்போது சின்ன அச்சம்தான். அதில் ஏதேனும் தற்காப்பு ஏற்பாடுகள் இருந்தாலே நல்லது. ஆனால் வேலை நடத்துவோருக்கோ, காவல் துறைக்கோ, மாநகராட்சிக்கோ அது தோன்றாதது கொஞ்சம் வேதனைதான்.

என்னால் முடிந்த அளவு இரு முறை இதற்காக முயற்சித்தேன். இதுவரை பயனேதுமில்லை. யாராவது கண் திறந்தால் நல்லது ....