Thursday, November 19, 2009

352. சில சின்னச் சின்னக் கேள்விகள் ...

*
2007-ல் தீர்ப்பு வந்தது -- தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அ.தி.மு.க. கட்சியினருக்குத் தூக்குத் தண்டனை அப்டின்னு. நம்ம பதிவர்கள் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா கை தட்டினாங்க.

அவங்க தொங்கியாச்சா?

*
2006-ல் இன்னொரு தீர்ப்பு. அப்சலம் தூக்குத் தண்டனை. பதிவுலகத்தில் நிறைய வாதங்கள்.

அவனும் தொங்கியாச்சா?

*
கேசாப் வழக்கு இன்னும் நடக்குது. அவன் வயசாகி, தானா சாகுறதுக்குள்ள அந்த வழக்கு முடிஞ்சிருமா?

*
கோடா இப்ப நாலஞ்சு நாளா ஆளே தினசரியில காணுமே. எங்க போனான்? அம்புட்டுதானா?

*
இன்னொரு மத்திய அமைச்சர். வெளிநாடு போனப்போ இங்கே அந்த ஆளு வீட்ல படுக்கை அறை, பூசை அறையில் இருந்த சாக்கு மூடைகளில் பணம்.. பணம் .. அப்டின்னு மூட்டை மூட்டையா கண்டு பிடிச்சாங்க. பேரு என்னமோ ஒரு ராமர் அப்டின்னு நினைவில் இருக்குது. அதுவும் அம்புட்டுதான் ...

*
மஞ்சள் துண்டு ஆட்சி வந்ததும் பழைய பச்சை சேலை இருந்த சிறுதாவூர் அரண்மனை அடிச்சிப் பிடிச்ச இடத்தில கட்டுனதுன்னு புகார் வந்திச்சி. புதுசா வந்திருக்க ஆளுக உடனே அடிச்சிப் பிடிப்பாங்கன்னு பார்த்தேன். அவுகளுக்குள்ள என்ன அரேஞ்மென்டோ ... அந்த நில தாக்கீதை ஒரு வாரத்தில கண்டு பிடிங்கன்னு சொல்லுவாங்கன்னு நினச்சா அரசே 6 மாசம் டைம் கொடுத்திருச்சி. அதுக்கு ஏது இம்புட்டு டைம்?!. ஆனா, இப்ப இதுவரை ஒண்ணையுமே காணோம். மஞ்சளுக்கும் பச்சைக்கும் நடுவில சிகப்பு வந்திச்சி. அதுட்ட இருந்தும் சத்தம் ஒண்ணும் இல்லை.

*
அந்த பத்திர ஊழலில் ஒரு போலீஸ்காரர் முதல் நிறைய பேருங்க சொன்னாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனா இதில் எனக்குப் பிடிச்சது அந்த பிடிபட்ட போலீஸ்காரர் அப்படியே சும்மா ஜில்லுன்னு மீசையை வருடி விட்டுக்கிட்டு வர, அவரை சுத்தி நிக்கிற போலீஸெலாம் அவருக்கு சல்யூட் அடிப்பாங்க பாருங்க .. அது நல்லா இருந்திச்சி. மற்ற சில குற்றவாளிகள் மாதிரி மூஞ்சை மூடிக்கிட்டு ... அதெல்லாம் எதுக்கு இவருக்கு? நல்ல மனுசன் ..

*
ராஜா விவகாரமும் இப்ப தினசரியில ஒண்ணையும் காணோம். "எல்லாமும்" முடிஞ்சிருக்குமோ?

*
கொஞ்ச நாளா லட்ச கோடிப்பணம் ஸ்விஸ் வங்கிகளில் தூங்குது. நாங்க வந்த உடனே வெளியே கொண்டு வந்திருவோம்னு சொன்ன காவிக்கலர்காரங்க இப்ப அவங்க பிரச்சனையில இருந்து இன்னும் வெளியே வரவேயில்லை. அதுவும் அம்புட்டுதானா?

*
அப்போ, மாட்டுத்தீவனத்தை "மாடு" தின்னுட்டு போயிரிச்சி; இனிமே அது அம்புட்டுதானா?

*
பச்சை சேலைக்கர மம்மி மேல இன்னும் நிறைய கேஸ் இருக்கும் போலும். லண்டன் ஹோட்டல் ... அது இதுன்னு நிறைய இருக்கு. ஆனா எல்லாமே அம்புட்டுதானோ?

* ஆனாலும் போபர்ஸ் வழக்கு மாதிரி எதுவும் இருக்க முடியாதுல்ல .. க்வாட்ரச்சியோடு அதையும் இழுத்து மூடியாச்சோ?

*
ஆனாலும் நமக்கெல்லாம் மறக்கிற ஞாபக சக்தி இல்லாட்டி ரொம்ப கஷ்டம்ல ...?


*

*
U.I.D. பற்றி சிறிது எழுதணும்; அதற்கு உங்க ஆதரவும் வேணும். கொஞ்சம் யோசிச்சிட்டு பொறுத்து எழுதுகிறேன்.

*

9 comments:

வால்பையன் said...

நம்ம கடவுள் மேட்டருக்கு கூட பதில் கிடைச்சிரும், இதுக்கு பதிலே கிடையாது சார்!

Unknown said...

ஆமா, இதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிகிட்டு இருக்கீங்க?

ரொம்ப சின்ன புள்ளைத்தனமால இருக்கு...
;-)

தருமி said...

வால்ஸ்,
//நம்ம கடவுள் மேட்டருக்கு..//

:)

தருமி said...

சட்ட நிபுணர்களே இப்படி சிரிச்சா எப்புடி ..!

தருமி said...

தப்புத்தான் இளைய கரிகாலன்

சீனு said...

இதையும் சேர்த்துக்கலாம்...

"பத்திரிக்கை ஆபீஸ எரிச்சு மூனு பேர கொன்னாங்களே, அது என்னாச்சு?"

ஆனாலும், தருமி சாருக்கு இம்பூட்டு மறதி இருக்கக்கூடாது... ;)

தருமி said...

//ஆனாலும், தருமிக்கு இம்பூட்டு மறதி இருக்கக்கூடாது... ;)

சீனு,
அதான் சொல்லிட்டோம்ல ..

ஆனாலும் நமக்கெல்லாம் மறக்கிற ஞாபக சக்தி இல்லாட்டி ரொம்ப கஷ்டம்ல ...?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நம்ம கடவுள் மேட்டருக்கு கூட பதில் கிடைச்சிரும், இதுக்கு பதிலே கிடையாது சார்!//
Repeattu.

தருமி said...

ஸ்ரீ,

கடவுள் மேட்டருக்கு கூட பதில் கிடைச்சிருச்சே !!!!

Post a Comment