Tuesday, June 26, 2012

576. ஹதீஸ் - சில குறிப்புகளும் ஒரே ஒரு கேள்வியும்.




 *


பிறப்போடு ஒட்டிப் பிறந்த மதங்களிலிருந்து நம்மை நாமே பிரித்தெடுப்பது மிகவும் கடினமான பிரச்சனை. எந்த மதத்தில் பிறக்கிறோமோ அந்த மதம் நம்மை முழுமையாக ஆட்கொள்வதும் மிகவும் சாதாரணமாக நடப்பதே. அதிலும் கிறித்துவனாகப் பிறந்த எனக்குச் சிறு வயதிலிருந்தே தொடர்ந்த மதப் பாடங்களும் பயிற்சிகளும் வீட்டிலும், கோவிலிலும், பள்ளியிலும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும். இளம் வயதில் விதைக்கப்படும் அந்த விதைகள் வேரூன்றி ஆழமாக வளர்வதும் இயல்பே. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகள், அச்சமூட்டல்கள், அறிவுரைகள் என்று இவைகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இவைகளிலிருந்து நாம் பொதுவாக விடுபடுவதில்லை. 

ஆனாலும் அங்கங்கு சில விதிவிலக்குகள் உண்டல்லவா? அது போல் என் நாற்பதுகளில் சில ஐயங்கள் .. சில கேள்விகள் .. சில பதில்கள் என்று ஆரம்பித்த நிலை, என் ஐம்பதுகளில் சில முடிவுகளை எனக்குத் தந்தன. அந்த முடிவுகளை ஏற்கத்தான் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது. என் முடிவுகள் எனக்கே அந்நியமாகப் பட்டன. காலத்தின் நீட்சியில் என் முடிவுகளுக்கு என்னை நானே பழக்கப்படுத்திக் கொண்டேன். உண்மையிலேயே கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறாயா?என்று யாரும் அழுத்தி ஓங்கிக் கேட்டால் ‘ஆமாம்என்று சொல்லவே பல ஆண்டுகள் பிடித்தன. 

பதிவுலகம் வந்ததும் மதங்களைப் பற்றிய மாறிய என் மன நிலையை எழுத ஆரம்பித்தேன். கிறித்துவ நம்பிக்கைகளைப் பற்றிய என் கேள்விகள் என எழுதி முடித்த பின் மற்ற மதங்களைப் பற்றிய என் கேள்விகளையும் தொகுத்தேன். அது மதங்களில் என் ஆரம்பக் கல்வியாக இருந்தது. கிறித்துவம் பற்றியெழுதும்போது என் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக வெகு சில கேள்விகளே வந்தன. இந்து மதம் பற்றியெழுதிய போது எழுந்த கேள்விகள் இந்து சமயம் – சாதிப் பிரிவினை என்ற அடிப்படையில் மட்டுமே அதிகமாக இருந்தன. ஆனால் இஸ்லாமியம் பற்றிய கட்டுரைகள் ஆரம்பித்த போதே பல ஆக்ரோஷமான கேள்விகளும் எதிர்ப்புகளும் பீறிட்டு வந்தன. ஆனால் நாட்கள் கடந்து செல்ல இஸ்லாமியப் பதிவர்களுக்குள் இருந்த கட்டுப்பாடு நன்கு புரிந்தது. ஒரு நேரத்தில் ஒரு பதிவர் மட்டும் தொடர்ந்து விவாதம் நடத்துவார். அதன் பின் அடுத்தவர் ஒருவர் வருவார். தொடர் சங்கிலியாக ... அவர்களுக்குள் ஏதோ ஒரு நேர்த்தியானக் கட்டுப்பாடு இருக்கும் போலும்.

இன்னொன்றும் புரிந்தது. இஸ்லாமியத்திற்கு எதிரான பதிவுகளை நோக்கி அவர்களது விவாதங்கள் வரும் ஆனால் அவர்களிடம் முறையான பதில் இல்லாத பொழுது அப்பதிவுகள் பக்கமே யாரும் வரமாட்டார்கள். சான்று 1: இங்கே வந்து பாருங்கள். ஒரு இஸ்லாமிய பதிவரும் எதிர்ப்பு ஏதும் சொல்லவில்லை.  சில பதிவுகளில் எவ்வளவு சான்றுகள் / விளக்கங்கள் கொடுத்தாலும் அதில் எதையும் ஒத்துக் கொள்வதில்லை. என் முயலுக்கு மூன்றுகால் தத்துவம் தான். சான்று 2: இங்கு வந்தால் தெரியும். சில பதிவுகள் பக்கமே அவர்கள் வருவதில்லை. (இப்பதிவும் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கலாம்!) இதற்கான சான்றிற்கு இங்கு வாருங்கள். 

கிறித்துவனாக வளர்க்கப்பட்ட போது தொடர்ந்து ஒரே மாதிரியான “கதைகள்”,. விவாதங்கள், விசுவாச நம்பிக்கைகள் என்று தொடர்ந்து இருந்து வந்தன. இவைகள் சிலருக்கு ஒரு வயது வரையும், பலருக்கு வாழ்க்கை முழுமையும் இந்த தொடர் நம்பிக்கைகள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து நிற்கின்றன. இந்த நம்பிக்கைகளில் பலத்த தீவிரம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இஸ்லாமியத்தில் இளம் வயதில் ஏற்படும் தீவிர நம்பிக்கைகள் எப்படி இந்த அளவு மிகத் தீவிரமாக அவர்கள் பலரின் முழு வாழ் நாள் முழுவதும் நிரம்பி நிற்கிறது என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு கேள்விதான். 

கிறித்துவத்தில் சொல்லித் தரப் படும் நம்பிக்கைகள், கேட்கப்படும் கேள்விகளுக்குத் தரப்படும் பதில்கள் எங்கும் எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளன. கானான் தேசத்துப் பெண்ணிடம் ஏசு ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார் என்று கேட்டால், அந்தப் பெண்ணின் விசுவாசத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேட்டார் என்பதுதான் ஒருமித்த பதிலாக இருக்கும். (இந்த நிகழ்வு பற்றி அதிகம் அறிய இங்கே   வாருங்களேன்!) தலைகால் புரியாத தமத்திரித்துவம் – holy trinity – என்பது பற்றிக் கேட்டால், இஸ்லாமியத்தில் ‘விதிஎன்பதற்கான விளக்கம் கேட்டால் கிடைக்குமே அதே பதில் – இது மனித மூளைக்கு அப்பாற்பட்ட விஷயம். இது புரியாது. புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு - என்ற பதில்தான் வரும்.
என் புரிதலில் இஸ்லாமியக் குழந்தைகளுக்கும் இதே போன்றுதான் மதங்களைப் பற்றிய கற்பித்தல் இருக்கும் போலும். ஏனெனில் இம்மத்த்திலேயும் சிறுவர் முதல் பெரியவர் வரை சில கோட்பாடுகளை எல்லோரும் ஒரே மாதிரி ‘அச்சுக் கோர்த்த்து போல்சொல்வார்கள். 


எனக்குத் தெரிந்த சில கோட்பாடுகள் இவை: 
·          இஸ்லாம் ஒரு அமைதியான மதம்.
·          இஸ்லாம் தன் ஏகத்துவத்தால் உலகம் எங்கும் பரவியது; வாளால் பரவியதாகச் சொல்வது தவறு.
·          1400 ஆண்டுகளாக பல எதிர்ப்புகளுக்கு நடுவில் வளர்ந்து வந்துள்ளது.
·          எல்லாக் கேள்விகளுக்கும் எங்கள் மதத்தில் பதில் உண்டு.
·          குரானின் கோட்பாடுகள் எல்லாம் அறிவியலோடு இணைந்தவை.
·          நபி எல்லாவற்றிற்கும் மேலானவர்.
·          என் தாய் தந்தை எல்லோரையும் விட நான் நபியை நேசிக்கிறேன்.
·          நபி மனிதருள் மாணிக்கம்.
·          நபி நட்த்திய போர்கள் எல்லாமே தன்னையும் தன் கூட்டத்தையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவே நடந்தது.
·         முந்திய நபிகளுக்கு அல்லா கொடுத்தவைகள் எல்லாம் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டு திரிக்கப்பட்டு விட்டன.
·         முகமதுவிற்குக் கொடுத்த குரான் மட்டும் மனிதக் கரங்களால தீண்டப்படாமல் பாதுகாக்கப்பட்டு, அல்லாவின் வார்த்தைகளாகவே உள்ளன.
·         முகமது வஹி பெற்றதிலிருந்து தாஷ்கண்ட் குரான் வரை நடந்தவைகளை ஒரு கதை போல் ஒரு எழுத்தும் மாறாமல் ஒரு வரலாறு. (ஏறக்குறைய எல்லா குழந்தைகளும் இதை மனனம் செய்து விடுவார்கள் போலும். வேறு எந்தக் கருத்தை யார் சொன்னாலும் இந்தக் கதைக்குள் அவை நுழைய முடியாது.)
·         யார் முயற்சித்தாலும் குரானின் மொழி நடை போல் இனி யாரும் எழுத முடியாது.. 

– இப்படி பல ..........................


ஆனால் இந்தக் கோட்பாடுகளைத் தாண்டி பலருக்கும் தங்கள் மதத்தின் எல்லா பக்கங்களும் தெரிவதில்லை. என்னுடன் வேலை பார்த்த, இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றும் நல்ல இஸ்லாமிய நண்பரிடம் நாலைந்து வருடங்களுக்கு முன் முகமதுவிற்கு எத்தனை மனைவியர் என்று கேட்டேன். நான்கு என்றார். மஜீத் பாய், அவருக்கு ஒன்பதோ பத்தோ என்றேன். நம்ப மாட்டேன் என்றார். அவருக்கும் வயது அப்போது கொஞ்சமல்ல .. 70+  பழைய மாணவி ஒருவர் எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்றார். மற்ற மதங்களைப் பற்றி என்ன தெரியும் என்றேன். ஒன்றும் தெரியாது; எங்கள் மதம் பற்றித்தான் தெரியும் என்றார்; அப்படியென்றால் எப்படி எல்லாக் கேள்விகளுக்கும் எங்கள் மதத்தில் பதில் உண்டு என்கிறீர்கள் என்றேன். பதிலில்லை. இன்னொரு பழைய மாணவர் என்னிடம் விவாத்த்திற்கு வந்தான். நீங்கள் எழுதியதைக் கொடுங்கள் என்றான். கொடுத்தேன். அதன்பின் என்னிடம் பேசுவதைத் தவிர்க்க நினைத்தான். என்னப்பா .. படிச்சிட்டியா என்றேன். படிக்கவில்லை என்றான். ஏனென்றேன். நீங்கள் நபியைப் பற்றிச் சொல்லும்போது உடனே அடைப்பானுக்குள் peace be upon him என்றெல்லாம் போடவில்லை. அதனால் அதனை நான் வாசிக்க மாட்டேன் என்றான். நல்ல பிள்ளை!

இதில் இன்னொரு சிக்கல். இஸ்லாமில் குரான் மட்டுமின்றி ஹதீஸுகளும் நிறைய உண்டு. பல இஸ்லாமியருக்கு எது குரானில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை; எது ஹதீஸிலிருந்து கொடுக்கப்பட்ட கட்டளை என்பது தெரியாது என்பது வெளிப்படை உண்மை; சான்றாக, விருத்த சேதனம் செய்வது குரானில் சொல்லப் படாத ஒன்று. ஆயினும் பல இஸ்லாமியர் அதுவும் குரானில் சொல்லப்பட்ட, விலக்கப்பட முடியாத ஒரு கட்டளை என்று நினைக்கின்றனர். இஸ்லாமியர் அனைவரும் விருத்தசேதனம் செய்வதை ஒரு தெய்வீகக் கட்டளையாகத்தான் நினைக்கின்றனர்.


இந்நிலையில் இஸ்லாமியக் கோட்பாடுகளில் ஹதீஸுகளின் நிலைபற்றிப் பேசவே இக்கட்டுரை.
·          
*   அல்லா தன் வார்த்தைகள் மட்டுமே முக்கியம் என்றார். ஆனாலும், ஹதீஸுகள் கிளைத்துள்ளன.

*        முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.


ஹதீஸ்களைப் பற்றிய தகவல்கள்;

இஸ்லாமியரோடான விவாதங்களின் போது அவர்களது விவாதங்கள் வெறும் குரானிலிருந்து  மட்டுமின்றி ஹதீஸுகளிலிருந்தும் மேற்கோள்கள் வரும். பல  வேளைகளில் ஹதீஸுகளில் குறை சொன்னால், இந்த ஹதீஸ் குறைபாடுள்ளது என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்ற பதில்கள் வருவது வழக்கமே. இப்படிப்பட்ட ஹதீஸுகள் எப்படி வழக்கிற்கு வந்தன என்றால் ஹதீசுகள் வரையறுக்கப்படும் வரலாற்றைச் சொல்வதுண்டு.  அந்த ஹதீஸுகள் குறைபட்டது என்றால் ஏன் இன்னும் வழக்கில் உள்ளது? அவைகள் வழக்கிலிருந்து எடுபட்டிருக்க வேண்டாமா என்று கேட்டால் முறையான பதில்கள் வருவதில்லை. 

 
ஹதீஸ் என்றால் உரையாடல் என்று பொருள். இவைகள் முகமது தன் வாழ்வில் கூறியவைகளின் தொகுப்புகளே. முகமதுவோடு இணைந்திருந்தோர்களிடமிருந்து தொகுத்த இவைகள் எண்ணிக்கையில் பலவாக இருந்தாலும் ஸ்ஹீஹூல் புகாரீ, சுனன்ன் அபூதாவூத், ஸ்ஹீ முஸ்லீம் போன்ற ஆறு தொகுப்புகளே முக்கியமானவை. 

ஹதீஸுகளைப் பலவாறாகப் பிரிக்கிறார்கள். ஹதீஸ் குத்ஸி என்பவை முகமது, அல்லாவே சொன்னதாகச் சொல்லும் வசனங்கள்; ஆனால் இவை குரானில் இடம் பெற்றிருக்காதவை. ஸ்ஹீஹ் என்பவை முதல் தரம் (!) என்று அழைக்கப்படும் ஹதீஸுகள். குறைபாடுள்ளவைகள் லயீப் என்றழைக்கப்படுகின்றன; பொய் வசனங்கள் எனக் கருதப்பட்டவைகள் மல்லூஉ என்றழைக்கப்படுகின்றன. 

தொகுப்புகள் வகை வகையாக இருந்தாலும் முகமது, அல்லா தனக்குச் சொன்னதாகச் சொல்லும் வசனங்களைத் தவிர தான் சொல்லும் வசனங்களைத் தொகுக்கக் கூடாதென முகமதுவே சொல்லியுள்ளார்.  

Ibn Saeed Al-Khudry என்ற முகமதுவின் தோழர், நான் சொல்வதில் குரான் வசனங்களைத் தவிர வேறெதையும் எழுதி வைக்காதீர்கள்; எழுதியவைகளையும் அழித்து விடுங்கள் என்று முகமது சொன்னதாக [Ahmed, Vol. 1, Page 171, and Sahih Moslim, Zuhd, Book 42, Number 7147]ல் குறித்துள்ளார். முகமதுவின் வசனங்களை உடனிருந்து தொகுத்த Zayd Ibn Thabit முகமது இறந்து 30 ஆண்டுகள் கழிந்த பின், Khalifa Mu'aawiyah என்பவரிடம் முகமதுவின் வாழ்க்கைக் குறிப்பொன்றைக் கூறினார். அதனை எழுதி வைக்கும்படி Mu'aawiyah சொன்ன போது Zayd மறுத்து விட்டார். குரானைத் தவிர வேறெந்த ஹதீஸுகளையும் குறித்து வைக்க வேண்டாமென முகமது கூறியுள்ளார் என்றார். 

அல்லாவே நேரடியாக வந்து ஹதீஸுகளை எழுத வேண்டாமென்று சொன்ன நிகழ்வு ஒன்றை Ibn Al-Salah எழுதிய மிகவும் பிரபலமான "Ulum Al-Hadith" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. "Taq-yeed Al-Ilm", என்ற நூலில் அதன் ஆசிரியர் Abu Saeed Al-Khudry கூறுவது: முகமதுவின் கூற்றுகளை எழுத உத்தரவு கேட்ட போது, அவர் மறுத்து விட்டார்’. 

முகமது தன் இறுதிப் பிரசங்கத்தில் கூறிய ஒரு சொற்றொடர் சுன்னி, சியா பகுதியினரால் வெவ்வேறாகக் கூறப்படுவதிலிருந்தே ஹதீஸைப் பற்றிய வேற்றுமைகள் புரியும்.  

1-Second version, " I left for you what if you hold on to, you will never be misguided, the book of God and my Family. Moslim 44/4, Nu2408; Ibn Hanbal 4/366; darimi 23/1, nu 3319.
இது சியா பிரிவினரின் வசனம்.
2-Second version, "I left for you what if you hold on to, you will never be misguided, the book of God and my Sunnah" . Muwatta, 46/3
இது சுன்னி பிரிவினரின் வசனம்.
3- Third version, "I left for you what if you hold on to, you will never be misguided, the book of God." Moslim 15/19, nu 1218; Ibn Majah 25/84, Abu dawud 11/56.
இது சியா, சுன்னி இருவருக்கும் பிடிக்காத பிரிவினரின் வசனம்!


ஹதீஸுகளின் வரலாறு:
குரான் ஒரு முழுமையான,சிறப்பான, விளக்கமான நூல் (Quran is a complete, perfect and full detailed book.) என்பதற்கான குறிப்புகள் 6:19,38,114,115; 50:45, 12:111 என்ற வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 6: 115 –ல் உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன. (பிறகு எதற்கு ஹதீஸ்?)


முகமதுவிற்குப் பின் வந்த நான்கு கலிபாக்களும் குரானின் முழுமைத் தன்மையை நம்பினார்கள். 6:114 எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இவ்வேதம், உம்முடைய இறைவனிடமிருந்து சத்தியத்துடன் இறங்கியிருக்கின்றது என்பதை நன்கறிவார்கள்என்கிறது. முகமது இறந்த இரு நூறு ஆண்டுகள் வரை இந்தக் கட்டுப்பாடு முழுமையாக இருந்து வந்துள்ளது

முகமதுவோடு இணைந்திருந்த அபு பக்கர் தான் எழுதிவைத்த 500 ஹதீஸுகளை எரித்துப் போடும் வரை தூக்கமின்றி இருந்தாராம். Omar Ibn Al-Khattab முகமதுவின் தோழர்கள் ஹதீஸுகளைக் கூறுவதைத் தடை செய்தார். ஓமர் முகமதுவின் வசனங்களை எழுதி வைக்க ஆவல் கொண்டிருந்தும், அவைகள் இஸ்லாமியரால் குரானை விடவும் மேலாகக் கருதப்பட நேரிடலாம் என்ற அச்சத்தால் அப்படியேதும் எழுதாதிருந்தார். மேலும் அவர் Abu Hurayra என்பவரை ஒரு பொய்யர் என்று கூறி அவரை அவரது தேசமான ஏமனுக்கு அனுப்பிவிடுவதாகப் பயமுறுத்தினார்; ஆனால் ஹுரைய்ரா ஓமர் இறந்த பிறகு தன் வேலையைத் தொடர்ந்தார்; பல ஹதீஸுகளை எழுதித் தள்ளினார்! 

Jami' Al-Bayan 1/67 என்பவர் நானும் சில நூல்களை எழுத எண்ணினேன். ஆனால் அவைகளால் கடவுளின் நூல் கைவிடப்படலாம் என்பதால் எழுதவில்லை; கடவுளின் நூலை மாற்றுவிக்கும் எந்த நூலையும் எழுத மாட்டேன்என்கிறார்.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்தாலும் பின்னால்  Khalifa Omar Ibn Abdel-Aziz ஹதீஸுகளையும் சுன்னாக்களையும் எழுத அனுமதியளித்தார். அதுவரை அல்லாவின் வார்த்தைகள் என்றிருந்த கட்டுப்பாடு தகர்க்கப்பட்டு, அல்லாவாலும், முகமதுவாலும் தடைசெய்யப்பட்ட ஹதீஸ், சுன்னா இவைகள் முக்கிய இடம் பெற்றன.


எத்தனை ஹதீஸுகள்

Malik Ibn Anas -- 500 ஹதீஸ்கள்.
Ahmed Ibn Hanbal -- 700,000 ஹதீஸ்களிலிருந்து 40,000 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன; அதாவது  94% விழுக்காடு பொய்யான, திரிக்கப்பட்ட ஹதீஸுகளாகக் கருத்தப்பட்டுள்ளன. 
Bukhari -- 600,000 ஹதீஸ்களிலிருந்து 7275 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன;, 99%  தவறானவை.
Moslem --  300,000 ஹதீஸ்களிலிருந்து 4000 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன;,  99%  விழுக்காடு தவறானவை. 

இதில் உள்ள குளறுபடிகள்:

Abu Hurayra  முகமதுவோடு இரு ஆண்டுகள் மட்டுமே உடனிருந்தவர். ஆனால் இவரது ஹதீஸுகளின் எண்ணிக்கை: 5374.  இவை ”Aahad" என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை எழுதியவர் மட்டுமே இந்த ஹதீசுகளுக்கு சாட்சி. முகமதுவோடு பலகாலம் இருந்த அவரது மனைவி ஆயிஷா பெயர் வாங்குவதற்காகவேஹுரைய்ரா இத்தனை ஹதீஸுகளை எழுதியுள்ளார் என்று சொல்லியுள்ளார். 

ஹதீஸ்கள் எழுதிய பலரோடு ஹுரைய்ராவை ஒப்பிடுதல்:  
Abu Hurayra  -- 5374  -- 2 ஆண்டுகள் மட்டுமே முகமதோடு இருந்தவர்.
Aysha  --  மனைவி -- 2210
Umar Ibn al-Khattab -- 537
Ali Ibn Abi Talib  -- 536
Abu Bakr al-Siddiq -- 142  -முகமதுவோடு 23 ஆண்டுகள் இருந்தவர். 

ஹூரைய்ரா, ஓமரின் இறப்பிற்குப் பின் தொடர்ந்து ஹதீஸுகளை உருவாக்கினார்”. ஓமருக்குப் பின் வந்த கலிஃபா Mu'aawiyah ஹூரைய்ரா போன்ற சிலரை முகமதுவின் உறவினரான Ali Ibn Abu Talibக்கு எதிராக பல ஹதீஸுகளை எழுத ஊக்குவித்தார் என்பது வரலாறு. ஹூரைய்ரா எழுதிய சில ஹதீஸுகளில், கலிஃபா Mu'aawiyah-வை அல்லாவிடம் கீழ்ப்படிதல் செய்வது போல் கீழ்ப்படிய வேண்டும் என்று ஹதீஸுகளை உருவாக்கினார். இது குரானுக்கு நேர் எதிர்மறையான புரட்டு. இதையெல்லாம்  எழுதும்போது ஹுரைய்ரா கலிஃபாவின் அரண்மனையில் சுகவாசம் செய்து வந்தார். 

.முகமதுவின் மனைவி ஆயிஷா ஹுரைய்ரா புதுப்புது ஹதீஸுகளை எழுதுவதாகக் கண்டித்தார். 
அல்லா, குரான் மட்டுமே சிறந்த ஹதீஸ்என்று சொல்கிறார்.
39:23 – ”அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை”. 
7:185-ல் இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீது தான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள் ?”
6:112-113-ல் இதுபோன்ற திருவிளையாடல்கள்நடந்தேறும் என்றும் அல்லா கூறுவதாகக் குரானில் உள்ளது.
25:30-ல் என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குரானை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்றையக் கிறித்துவம் பால் எழுதிய குழப்பவாதத்தால் மாறியது போலவே சுன்னி இஸ்லாமியராலும், புகாரி போன்றவர்களாலும் இன்றைய இஸ்லாம் திரிந்து விட்டது. 

இஸ்லாமியர்கள் ஹதீஸிற்காகவும் சுன்னாவிற்காகவும் தங்கள் உண்மையான மதத்தைத் திரித்து விட்டார்கள். இப்போதுள்ள இஸ்லாமியம் Bukhari, Moslem, Nesaay, Termethy, Abu-Daoud போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் மதமாக மாறிவிட்டது. அல்லா முகமதுவிற்குக் கொடுத்த இஸ்லாமியம் இல்லை அது. 

புகாரி Ali Ibn Abu Talib போன்ற தனது அரசியல் வெறுப்பாளர்களை வைத்தே எந்த ஹதீஸை சேர்க்கலாம் .. விலக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அவர் இணைத்துள்ள சில ஹதீஸுகள் குரானுக்கு விரோதமான, ஏற்கெனவே கூறப்பட்ட ஹதீசுகளுக்கு விரோதமான, அல்லாவை கேலிக்குள்ளாக்கும், முகமதுவை இழிவாக்கும், அவரது மனைவியரை இழிவாக்கும் ஹதீஸுகளாக உள்ளன.  புகாரி, நம்பகத்தன்மையற்றவர்கள் என்று Moslem என்ற அறிஞரால் ஒதுக்கப்பட்ட 434 பேரின் ஹதீசுகளை ஏற்றுக் கொண்டுள்ளார். .


முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள்:
சில சான்றுகள்:
முகமது ஒரே இரவில் தன் ஒன்பது மனைவியரிடமும் இரவிலோ பகலிலோ கலவி கொள்வார். அவருக்கு 30 மனிதர்களின் புணரும் சக்தி இருந்தது. இது எந்த வகையில் முகமதுவிற்குப் புகழ் சேர்க்கும்?

சாஹிஹ் (Sahih) நூல்கள் குரானுக்கு மாறான சில சட்டங்களைத் தருகின்றன. சான்றாக, அல்லா கொடுக்காத ஒரு தண்டனையை முகமது தருவதாக உள்ளது. பாலியல் கள்ளத் தொடர்பிற்கு அல்லா 100 கசையடிகள் என்ற தண்டனை தர (24:2), முகமது கல்லாலெறிந்து கொல்ல வேண்டுமென்கிறார்.( Moslim Book 17, Number 4192) ஆனால் இதிலொரு வேடிக்கை! குரானிலும் கல்லாலெறிந்து கொல்ல வேண்டுமென்ற சட்டம் இருந்ததாகவும், ஆனால் அதை ஒரு ஆடு அதைத் தின்று விட்ட்து என்றும் அதனால் அச்சட்டம் இப்போது குரானில் இல்லையென்றும் சொல்லப்படுவதுண்டு. (அல்லா காப்பாத்தணும்னு நினச்சதை ஆடு தின்னுடுச்சே!) அல்லாவையோ, முகமதுவையோ, வஹிகளையோ இதைவிட மோசமாகக் கேலி செய்யவோ, தரம் தாழ்த்தவோ முடியாது. 

முகமதுவின் கனிந்தஉள்ளத்தை இன்னொரு ஹதீஸ் காட்டுகிறது. புகாரி Vol 8, நூல் 82, எண் 796 –ல் Oreyneh, Oqayelh என்ற இடங்களிலிருந்து வந்த சிலர் இஸ்லாமிற்குள் சேர முகமதுவிடம் அனுமதி கேட்கிறார்கள். முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார். அவர்கள் பிறகு முகமதுவின் ஆடு மேய்ப்பாளரைக் கொன்று விடுகிறார்கள். முகமது அவர்களைப் பிடித்து, கட்டி வைத்து, கண்களை நோண்டியெடுத்து, அவர்கள் கை கால்களை வெட்டி வனாந்திரத்தில் தண்ணீருக்கும் வழியின்றி இருக்கச் செய்து சாக விடுகிறார். முகவதுவின் கருணை வெள்ளத்தை இதைவிட எந்த ஹதீஸ் தெளிவாகக் காண்பிக்கும்?

Vol 7 , நூல் 62, எண் 52-ல் Jabir bin 'Abdullah, Salama bin Al-Akwa இருவருமாகச் சொல்லும் ஹதீஸ்: போராட்டக் களத்தில்  ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்தால் அவர்கள் Mut'a (தற்காலிகத் திருமணம்) செய்து கொள்ளலாம் என்கிறார் முகமது. இது மூன்று இரவுகளுக்கு மட்டும் உரிய கல்யாணம். அதன்பின் அவர்கள் விரும்பினால் திருமணத் தொடர்பை வைத்துக் கொள்ளலாம் அல்லது விட்டு விடலாம். இதில் சில குழப்பங்கள்: 1. முகமது தானாகவே ஒரு புதிய சட்டத்தைத் தருகிறார். 2, இச்சட்டம் அல்லாவின் 6:114, 66:1 சட்டங்களுக்குப் புறம்பானது. 3. திருமணத்தை ஒரு புதிய கோணத்தில் இச்சட்டம் பார்க்கிறது. Muta-திருமணங்கள் என்பதற்கான பொருளே காமத்திற்கான கல்யாணம்என்பதாகும். உண்மையில், விபச்சாரத்தின் மறுபெயராகவே முடா-திருமணங்கள் உள்ளன.

குரானில் முகமது தானே வலிந்து எந்தவித அதியச் செயல்களைச் செய்ததாக இல்லை. ஆனால் புகாரி Vol:5, நூல் 58, எண்:208ல்  Anas bin Malik என்பவரின் ஹதீஸ்: மெக்கா மக்கள் முகமதுவிடம் ஒரு அதிசயச் செயலைச் செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். முகமது நிலைவை இரண்டாக உடைத்து, அதன் இடைவெளி வழியே ஹிராம் மலையைக் காண்பிக்கிறார்.

அல்லாவை நிந்திக்கும் ஹதீஸ்:
மோசே தான் கடவுளைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல  மனிதர்கள் தன்னைப் பார்க்க முடியாது என்கிறார் அல்லா. (7:143)  ஆனால், அல்லா தன்னை நம்புவர்களுக்கு முழு நிலவு போல் காட்சி தந்தார் என்று புகாரி Vol: 9, நூல்: 93, எண்: 529-ல் கூறுகிறார்.
Moslem Book:1, எண்: 349-ல் அல்லா மனிதனைப் போல் சிரிக்கிறார் என்கிறது!

வேறு சில விந்தையான ஹதீஸ்கள்:
 
Sahih Moslem, நூல் 23, எண் 5017:- நின்றுகொண்டு நீர் அருந்தாதே. அப்படி நின்று கொண்டு நீர் அருந்தி விட்டால், ஹுரைய்ரா அந்த நீரை வாந்தி எடுக்க வேண்டும் என்கிறார்.
 
Sahih Moslem, நூல் 2, எண் 522ல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதே! (முகமது நின்று கொண்டு சிறுநீர் கழித்த்தாகவும், இல்லையென்றும் (Hanbel) ஹதீஸ்கள் உள்ளன.)
ஆதாம் 60 கைகள் அளவு உயரத்திலும், 7 கைகள் அளவு அகலத்திலும் இருந்தார். (ஆக, ஆதாம் மிக மிகப் பெரியவன்!) ஹூரைய்ரா, Sahih Moslem இருவருமே ஆதாமைப் பற்றி இப்படிக் கூறுகிறார்கள். 


வேறு சில கேவலமான ஹதீஸ்கள்: 

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பது ஹராம். அப்படி தனித்திருக்க வேண்டுமானால் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தன் முலைகளைச் சப்புவதற்குக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் உறவு ஹலால் ஆகி விடுகிறது.!!!!!!!!!!!!!!!

இதற்கான சான்று:
 Sahih Muslim Book 008, Hadith Number 3426.
Sahih Muslim Book 08. Marriage

Chapter: Suckling of a young (boy).

Ibn Abu Mulaika சொன்னது: ‘ஆயிஷா, Sahla bint Suhail b. 'Amr என்பவர் முகமதுவிடம் வந்து சலிம் என்ற சுதந்திரம் கொடுக்கப்பட்ட அடிமை எங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறான். அவன் இப்போது வயதுக்கு வந்து விட்டான். அவனுக்கு பாலியல் பற்றிய அறிவு வந்து விட்டது என்றார். அதற்கு முகமது, அவனை உன் முலைகளைச் சப்புவதற்கு அனுமதி. இதனால் அவன் உனக்கு ஹலால் ஆகி விடுவான்.’

இந்த ஹதீசை ஓராண்டு வரை நான் யாரிடமும் பயத்தினால் சொல்லவில்லை. அதன் பின் al-Qasim-இடம் இதைச் சொன்னேன். அவர் இதை ஆயிஷா கூறியதாக எல்லோரிடமும் சொல்லச் சொன்னார்.

http://en.wikipedia.org/wiki/Rada_%28fiqh%29- என்ற விக்கிப்பீடியாத் தளத்தில்: ’Radāʿ or ridāʿa’ என்ற சொல் சுன்னி இஸ்லாமியச் சட்டச் சொல்லாகும். முலை சப்புவதால் திருமண உறவுகள் தடையாக்கப்படுகிறது என்பது அதன் பொருள்.

இக்கருத்து ஆங்கிலத்தில் இங்கே:
Ibn Abu Mulaika reported that al-Qasim b. Muhammad b. Abu Bakr had narrated to him that 'Aisha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail b. 'Amr came to Allah's Apostle (May peace be upon him) and said: Messenger of Allah, Salim (the freed slave of Abu Hudhaifa) is living with us in our house, and he has attained (puberty) as men attain it and has acquired knowledge (of the sex problems) as men acquire, whereupon he said: Suckle him so that he may become unlawful (in regard to marriage) for you He (Ibn Abu Mulaika) said: I refrained from (narrating this hadith) for a year or so on account of fear. I then met al-Qasim and said to him: You narrated to me a hadith which I did not narrate (to anyone) afterwards. He said: What is that? I informed him, whereupon he said: Narrate it on my authority that 'Aisha (Allah be pleased with her) had narrated that to me.
 

 Radāʿ or ridāʿa  is a technical term from Sunni Islamic jurisprudencve meaning "the suckling which produces the legal impediment to marriage of foster-kinship".(http://en.wikipedia.org/wiki/Rada_%28fiqh%29)

இதுபோல் இன்னும் நிறைய ...


மீண்டும் – இரு குறிப்புகளும் ஒரு கேள்வியும்:
இரு குறிப்புகள்:
·         அல்லா தன் வார்த்தைகள் மட்டுமே முக்கியம் என்றார். ஆனாலும், ஹதீஸுகள் கிளைத்துள்ளன.
·         முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.


ஒரே கேள்வி: 

·         பின் ஏன் ஹதீஸ்?






இதைப் பற்றிய இன்னும் ஒரு  கட்டுரை;    

http://www.quran-islam.org/articles/part_1/history_hadith_1_%28P1148%29.html





































*

Friday, June 22, 2012

575. ’அவாளுக்கு’ மட்டும் !



*


இன்று - 22.6.21 - இந்து தினசரியில் ஒரு கடிதம்.

இந்துவின் ‘Property Plus’ supplement (April 7, 2012)-ல் ஒரு விளம்பரம். வீடுகள் விறபனைக்கு வந்த விளம்பரத்தில் “only Brahmins” என்றிருந்திருக்கிறது. இது சட்டப்படி தவறானது; முறையற்ற விளம்பரம் என்று இனியன் இளங்கோ என்று ஒருவர் எழுதியுள்ளார்.

Your ‘Property Plus’ supplement (April 7, 2012) carried an advertisement for the sale of flats with a caption stating “only Brahmins,” excluding non-Brahmin castes, Dalits and religious minorities such as Muslims, Christians, Jains, Buddhists, Sikhs, etc., from buying or residing in the flats, thus discriminating against people on the basis of caste and religion, thereby violating the letter and spirit of Articles 15 and 17 of the Constitution. Excluding Dalits from buying the advertised flats can only be construed as an expression of untouchability against them.

Excluding people based on caste or religion from the sale, rental or residence of housing facilities is a blatant act of bigotry and oppression that causes great distress to the victims apart from leading to social balkanisation of our nation due to caste segregation and religious polarisation. Such advertisements and business practices which exclude people on the basis of caste or religion should be proscribed.

Iniyan Elango, Chennai

இந்துவும் இது தன் தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளது. எங்கள் பார்வையையும் மீறி வந்த விளம்ப்ரம் என்று சொல்லியுள்ளது.

 இந்த தொல்லையெல்லாம் இல்லாமல், சாதிப் பிரிவினைகள் இல்லாமல் நம்ம நாடு மாறாதா ...? எல்லோரும் மனுஷங்க தான்னு எல்லோரும் எப்போ உணரப் போகிறோம் என்றெல்லாம் மனசு கொஞ்சம் நினச்சிது. பகலில் இந்த நினைவில் இருந்திருந்தேன்.

சரவணா மீனாட்சி சீரியல் பார்த்ததும் வழக்கமாக தொலைப்பெட்டியிலிருந்து ஓடி வந்து விடுவேன். சூப்பர் சிங்கர்னு ஒரு வருஷமா ஒரு போட்டி நடக்குமே ..பாவிகளா .. இப்படியா இழுப்பாங்கன்னு நோகணுமே .. அந்த காட்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தியே இடத்தைக் காலி பண்ணிடுவேன். அப்படிப் போன பிறகு தங்ஸ் அந்த நிகழ்ச்சி பார்த்துட்டு போங்கன்னு கூப்பிட்டாங்கன்னு போய்ப் பார்த்தேன்.

அடப் பாவமே .. ஈஷ்வரா ... எல்லோருமே ‘அவாளா’ மாறிண்டிருந்தா. பாடரவா எல்லோரும் அவா மாதிரி ட்ரஸ் பண்ணிண்டிருந்தா... compere  பண்றவாளும் அப்படித்தான் ... அந்தப் பொம்மனாட்டி ஒண்ணு இருக்குமே .. லோகத்தில எல்லா மனுஷ மூஞ்சையும் உத்துப் பாத்தா சில மிருகங்களோட மூஞ்சு மாதிரி தெரியும்னு சொல்லுவா .. தெரியுமோ? அது மாதிரி அந்தப் பொம்மனாட்டியைப் பாத்தா ஒரு ஒட்டகம் மாதிரி எனக்குத் தோணும். நடக்கிறப்போ கூட ஒட்டகம் நடக்குறாப்ல தான் தோணும். இன்னைக்கி மூஞ்சு பூரா பவுடரை ஈஷிண்டு, மூக்குல பில்லாக்கு மாட்டிண்டு அலைய்றப்போ ஒரு  ஒட்டகம் அசமஞ்சமா பில்லாக்கு போட்டு நடக்குறது மாதிரி நேக்கு தெரிஞ்சது. அதுவும் அந்த அம்பி இருக்கானோ இல்லியோ .. அவன் பரட்டையா குடுமி, தாடி வச்சுண்டு ... அப்டியே அபிஷ்டு மாதிரி இருந்தான். காணச் சகிக்கலை .. அடுத்து... ஜட்ஜஸ் எல்லோரும் மாமி மாதிரி, மாமா மாதிரி வந்திருந்தா ... இம்புட்டுதான் நினச்சிண்டிருந்தேன். ஆனா பாருங்கோ ... சின்னப் புள்ளைகளோட தோப்பனார், அம்மா எல்லோரும் அதே மாதிரி ‘அவாளா’ வந்திருந்தா ... அதுக்கு மேல பார்க்க தோணலை... என்ன பாடினாளோ ... என்ன பண்ணினாளோ தெரியலை.

சும்மா சொல்லப்படாது ... விஜய் டிவி நல்ல நிகழ்ச்சியெல்லாம் கொடுப்பா. ஆனா ஏனிப்படி ஒரு  நிகழ்ச்சி பண்றான்னு புரியலை. இன்னொரு புதுசா ஒரு நிகழ்ச்சி தர்ரா ...’ ஆஹா!’ன்னு ஒண்ணு.... ஏன்னு நேக்கு தெரியலை .. அதுவும் அப்படியே அவாளோட நிகழ்ச்சி. நேக்கு என்ன தோண்றதுன்னா ...’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. . இருந்தும் ஆளாளுக்கு இப்படி நடத்துறாளே .. ஏன்?  யாருக்காக இப்படில்லாம் பண்றா? இப்படிப் பண்றவா எல்லோரும் அவாளும் கிடையாதுன்னு நான் நினச்சுண்டு இருக்கேன். பின் ஏன் இப்டி பண்றா...?


ஒரு வேளை அடுத்த வாரம் சூப்பர் சிங்கரை வன்னியருக்கு ..அதுக்கடுத்த வாரம் முதலியாருக்கு ... அதுக்கடுத்த வாரம் தலித்துக்கு, தேவருக்குன்னு பிரிச்சு கொடுப்பாளோ என்னவோ ... யாராவது தெரிஞ்சவா இருந்தா கொஞ்சம் கேட்டு சொன்னேள்னா ரொம்ப நன்னியாருக்கும்.

சொல்றேளா ....?



*
பி.கு. (10.7.12):
வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலருக்கு இது தவறு; சிலருக்கு இது சரி. ஆனால் மதுரை திடீர் நகர் - நகரின் சுத்தம் பேணுவோருக்கான வீடுகள் - பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஒரே சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அதாவது அந்தக் குடியிருப்புகள் ஒரு சாதியினருக்கே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. . ஆனால் இதில் யாருக்கும் வருத்தமோ கோபமோ ஏதுமில்லை ! எல்லோருக்கும் அது சரியாகவே படுகிறது !!






*