*
நேத்து விஷவரூபம் படம் பாத்துட்டேன். நானும் டைட்டிலில் காமிக்கிறது மாதிரி தலைப்பை டைப் அடிச்சிப் பார்த்தேன். வித்தியாசமான படம் என்ற அர்த்தத்தில் அப்படிச் செய்யவில்லை.
அந்தக் காலத்தில் இங்கிலிபீசு படம் நண்பர்களோடு பாத்துட்டு, படம் முடிஞ்சதும் ஒரு டீ-கம்-தம் அடிச்சிக்கிட்டு அந்தப் படத்தை போஸ்ட்மார்ட்டம் பண்றது உண்டு. இதுக்கு மெயின் ரீசன் என்னன்னா, படத்தில இங்கிலிபீசு பேசுவாங்களா .. அதில கொஞ்சூண்டு மட்டும் நமக்குப் புரியுமா .. எனக்குப் புரிஞ்சது அவனுக்குப் புரிஞ்சிருக்காது .. அவனுக்குப் புரிஞ்சது எனக்குப் புரிஞ்சிருக்காது ... எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குழப்பி ... இதில நடுவில இங்கிலிபீசு படம் ரொம்ப பாக்காத ஒரு நண்பன் திடீர்னு, ‘ஏண்டா .. அந்த மொத சீன்ல செத்தவன் பிறகு நாலாவது சீன்ல உயிரோடு வர்ரானே’, அப்டிம்பான். ‘அடப் பாவி .. அவன் வேற .. இவன் வேற’, அப்டின்னா, ‘ஓ! எல்லா பயலுவ மூஞ்சும் ஒரே மாதிரி இருக்கா .. அதான் குழம்பிடுச்சி’, அப்டிம்பான்!
நேத்தும் அது மாதிரி கூட வந்த இரு நண்பர்களோடு ஒரு டீ மட்டும் அடிச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் படம் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். All said and done .... ஹே ராம்! மாதிரி இதிலும் மிகவும் வெகு கடுமையான உழைப்பு. பல இடங்களில் படம் பாக்கும்போது நினச்சிப் பாத்துக்கிட்டேன் - தமிழ்ப் படம் தானா என்று. அம்புட்டு நல்லா இருந்தது. தலைக்கு ஒரே ஒரு ஃபைட் ... விஷ்வரூபம் எடுக்கிறதுக்கு ... ரெண்டு சொட்டு தண்ணி உளுவுறதுக்குள்ள நடந்திடுது ... அதுனால ஒரு ரீவைண்ட் .. ஆஹா ..!
அதுக்குப் பிறகு பல இடங்களில் வழக்கமா ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருமே .. அது மாதிரி சுத்தி நின்னு ஷூட் பண்ணினாலும் ஹீரோ மட்டும் சுடப்படவே மாட்டார்.
டாக்கின்ஸ் செத்து போற இடம், F.B.I. chasing scenes, ஆப்கானிஸ்தான் செட், அங்கே நடக்கும் விஷயங்கள், அங்குள்ள landscape ... எல்லாம் ஜொலிக்குது. ரொம்ப வித்தியாசமா இருந்தது. ஆனாலும் பல இடங்கள் புரியலை. வசனம் எந்த மொழியில் இருக்குன்னு நான் நினச்சி முடிக்கிறதுக்குள் மக்கள் வசனம் பேசி முடிச்சிர்ராங்க. அதுக்குப் பிறகுதான் அவங்க பேசினது தமிழ்/இங்கிலிபீசு/தாலிபான் மொழி அப்டின்னு தெரிய ஆரம்பிக்குது.
நிறைய விஷயம் புரியலை. எல்லாம் ஒண்ணா நின்னு அதையெல்லாம் பேசினோம். அவர் யாரு டாக்கின்ஸ், இம்புட்டு கனமான ரோலுக்கு (!) சேகர் கபூர் எதுக்கு? (ஆனாலும் சேகர் கபூரை கமல் ‘அங்கிள்’ அப்டின்னு கூப்பிடுறது டூ இல்ல த்ரி ஆர் ஃபோர் மச்!) நைஜீரியாகாரன் எதுக்கு உடம்பு முழுவதும் ஷேவ் பண்ணிக்கிர்ரான், (இஸ்லாமியர் சவத்தை நன்கு ஷேவ் செய்து புதைப்பார்களாம். இவனும் ஒரு suicide bomber. அதான் அப்படி ஷேவ் பண்ணிக்கிறான் - அப்டின்னான் நண்பன். தலைவர் நல்லா யோசிச்சி படம் எடுத்திருக்கார் .. இல்ல?) இப்படி நிறைய டிஸ்கஸ் பண்ணினோம். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில் தெரியலை.
டாக்கின்ஸ் (அட.. நம்ம ஆளு பெயரையும் -ல்போட்டுட்டாங்க!) ஒரு antique shop-ல் ஆள் மாற்றிப் பெயர் சொல்லி ஒரு கவர் வாங்கிட்டு போறாரே .. அது என்னப்பா என்றேன். அது விஷ்வரூபம்-2-ல் பார்த்துக்கங்க என்றான் நண்பன்.
கமல் ரொம்ப அழகானவர் தான். ஆனாலும் இப்படி மீசை இல்லாமல் தாடி வச்சிட்டு வர்ரதைப் பார்த்ததும் அய்யோன்னு இருந்தது. இந்த ஸ்டைலைப் பார்த்தால் ரொம்ப அவலட்சணமாகவும், கொஞ்சம் funny ஆகவும் எனக்குத் தெரியும். யார் கண்டது .. கரண்டைக் காலுக்கு மேல் pants போட்டுக்கோ ... தாடி வச்சி கலர் அடிச்சுக்கோ .. அப்டின்றது மாதிரி இதுவும் ஒரு ஹதீசோ என்னவோ!
படத்தில ரொம்ப நல்லா நடிச்சது கமலின் மனைவியா வர்ர அம்மாதான்! அந்த அம்மாவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்த போது ‘இது என்ன நடிக்கும்.. சரி .. ஆண்ட்ரியா இருக்காங்களே’ன்னு நினச்சேன். ஆனால் இந்த அம்மா சும்மா கிளப்பியிருக்குது.
படம் பார்த்த பிறகு எங்க போஸ்ட்மார்ட்டத்தில் - யாருக்கும் பதில் தெரியாத - ஒரு முக்கியமான கேள்வி:
எதுக்காக கமல் இந்த படத்தை இம்புட்டு பணம் போட்டு எடுத்தார்? எப்படி அந்த ‘தைரியம்’ வந்தது? நிச்சயமான எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தும் ஏனிந்த 90 கோடி கொலைவெறி?
ஆனாலும் அந்த எதிர்ப்பே அவருக்கு முதலாகவும் மாறிப் போச்சு .. lucky man !
*