Thursday, November 21, 2019

1072. தோரணம்





*

பேருந்தில் மூன்று பெண்களுக்குத் தூக்குத் தண்டனை என்றார்கள். பின்னாளில் அவிழ்த்து விட்டு விட்டார்கள். அந்த நீதிபதிகளுக்கு உள்ள மனசாட்சி அது தான் போலும். 
*****

மேலவளவு 13 கொலைகாரர்களை அரசு வெளியே சுதந்திரமாகச் சுற்ற அவிழ்த்து விட்டு விட்டார்கள். அத்தனை மெல்லிய மனசு நம் அமைச்சர்களுக்கு.
*****

சமூகத்தின் ஒரு சாரார் தங்கள் பிணக்குழிக்குக் கூட ஓர் ஒழுங்கான வழியில் செல்ல முடியாத அளவு இருக்கும் அவலம் அரசின் கண்களில் விழுவதே இல்லையே ஏன்? 
*****

உயர் கல்வி நிலையங்களில் பட்டா போட்டுக் கொடுத்தவர்கள் மட்டும் தான் பயில வேண்டும் என்பது கீழ்நிலை மக்களுக்குப் புரியாமல் ஏன் அங்கே போய் தலை கொடுக்கிறார்கள்?
*****


சாதி வித்தியாசம் பார்க்கும் ஆசிரியர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதே. ம்ம்..ம்.. சாதி .. அது எங்கும் வியாபித்திருக்கும் பெரும்பொருளாகப் போய் விட்டதே ...

*****





2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாட்டு சூழல் உங்கள் ஆதங்கத்தில் தெளிவாகப் புரிகிறது ஐயா.
தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

வேகநரி said...

//சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும் இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை.//
இந்தியாவில் யதார்த்தமான உண்மை.
இந்திய மக்கள் எப்போதுமே என் ஜாதி ஜாதி ஜாதி என்று ஜாதி வெறி கொண்டோராக மனித வெறுப்பாளராகவே தொடர்ந்தும் உள்ளனர்.

Post a Comment