*
கொரோனாவிற்காகக் கடவுளிடம் ஜெபம் / தூவா / பிரார்த்தனை செய்ய எல்லா மதத்தினரும் ஒரே நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடத்த நாளும் நேரமும் குறித்துள்ளனர். அதுவும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறார்.
சில கேள்விகள்:
1.
மத்: 10:30; லூக்
12:7 -- உன் தலைமுடிகள் கூட எண்ணப்பட்டு விட்டன என்கிறது கிறித்துவர்களின் வேதங்கள்.
.
“நடப்பதெல்லாம்
நாராயணன் செயல்” என்கிறார்கள் இந்துக்கள்.
யாராவது சரியாக
குரானிலிருந்து ஒரு மேற்கோள் கொடுத்து உதவினால் தன்யவனாவேன்!
ஆக. அனைத்து சாமிகளும்
அவர் படைப்பான நமது உலகத்தில் நடப்பதை Big Brother போல் பார்த்துக் கொண்டிருபார்க்(கள்).
கொடுத்ததும் அவரென்றால் எடுப்பதும் அவராகவே எடுக்க வேண்டும், கொடுக்கும்போது நம்மைக் கேட்டு விட்டுக் கொடுக்கவில்லை. ஆகவே எடுப்பதும்
‘அவன் செயல்’ அல்லவா? பின் எதற்காகக் கடவுளிடம் இறைஞ்ச வேண்டும்? பதில் தெரியவில்லை;
சொல்லிக் கொடுத்தால் தெரிந்து கொள்கிறேன்.
2
நாம் யார்? வெறும்
அற்ப மனிதர்கள்! நமக்கு காலமும் இடமும் கட்டாயம் வேண்டும். ஆனால் சாமிகளுக்கு…? ஒலிம்பிக்
இத்தனை மணிக்கு ஜப்பானில் ஆரம்பிக்கிறது என்றால் எல்லோரும் at least டி.வி. முன்னால்
சரியாக அந்த நேரத்தில் - நம் நாட்டு நேரத்தோடு கணக்கிட்டு - உட்கார்ந்து கொள்வோம்.
ஆனால் இப்படி ஒரு கட்டுப் பாட்டை மனிதர்கள் ஏன் நம் சாமிகளுக்குக் கொடுக்கிறார்கள்.
எல்லோரும் அவரவர் நாட்டு நேரத்திற்கேற்றது போல் ஜெபம் / தூவா / பிரார்த்தனை செய்து
கொண்டால் எப்படியும் கடவுளுக்கு அது தெரியாமலா போய்விடும்.
3.
எதற்காக கூட்டுப் பிரார்த்தனை
.. தனித்தனி பிரார்த்தனை … எப்படி செய்தாலும் சாமிக காதில் விழாதா? எல்லோரும் ஒரே மாதிரி
சத்தம் போட்டுக் கேட்டால் தான் சாமி காதில் விழுமா? ஏதோ ஒரு அரசுக்கு எதிராக / ஆதரவாக
கோஷம் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் சத்தம் கொடுத்தால்தான் அரசின் காதில் விழும்.
(அல்லது எல்லோரும் மாலை 5 மணிக்கு சத்தம் கொடுங்கள் என்பார் அமைச்சர். நாமும் ஐந்து
மணிக்கு சத்தம் கொடுத்துவிட்டு, ஐந்தே கால் மணிக்கு எல்லோருமாக ஊர் சுற்றக் கிழம்பி
விடுவோம். நம்ம வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே!) ஆனால் சாமிக்கு முன்னால் இதெல்லாம்
தேவையில்லை தானே?
வேண்டுவதே வேண்டாம்
- கடவுள் மேல் “உண்மையான” நம்பிக்கை இருந்தால்!
நம்மள படச்சவன் .. தண்ணி ஊத்துவான்
அப்டின்ற நம்பிக்கை இருந்தா நாம் எதுக்கு சாமிட்ட அது.. இதுன்னு .. எதுக்கு கேக்கணும்?
ஆச்சா …அதோட ஒரே நேரம்
பாத்துக் கேக்கிறதுக்கு காலம் என்ற சக்கரத்தோடு நாம் கட்டுண்டு இருக்கோமே அது மாதிரி
தானா சாமியும் காலத்தோடு கட்டுண்டு இருக்காரா என்ன?
‘இங்கே நல்ல மீன் விலைக்குக் கிடைக்கும்” என்று போர்டு வைத்த வடிவேலுவை பார்த்திபன் கலாய்ச்சி போர்டையே எடுக்க வச்சிருவாரே அந்தக் கதை நினைவுக்கு வந்தது.
1. காலம் கடந்த கடவுளுக்கு ஒரே நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை தேவையா?
2. தனித்தனியா கேட்டா கடவுளுக்குப் புரியாதா?
3. முழு நம்பிக்கை கடவுள் மேல் இருந்தால், பிரார்த்தனை தேவையா?
பதில்கள் தெரியவில்லை;
சொல்லிக் கொடுத்தால்
தெரிந்து கொள்கிறேன்.