Wednesday, August 30, 2023

1245. WALKING TIME TRAIN


27, 28.8.23 

களியக்காவிளை ...





Tuesday, August 22, 2023

1243. ஏண்டா கொமாரு, இந்தக் கடவுள்களெல்லாம் இப்படி பண்றாங்கடா?



*

ஏண்டா கொமாரு,

இந்தக் கடவுள்களெல்லாம்

இப்படி பண்றாங்கடா?


எல்லா மத்த்தினரும் சாமியை “தகப்பனாகவே” வைத்திருக்கிறார்கள். (ஏசப்பா!) நீ ஏன் அது அம்மாவாகவும் இருக்கக் கூடாதுன்னு கேக்கலாம். அப்படியெல்லாம் கேட்கக் கூடாது. சாமிக்கும் gender bias இருக்கு. சாமின்னா அது ஆம்பிள மட்டும் தான். ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. சரியா? பொம்பிள சாமில்லாம் ரெண்டாம் இடம் தான்.

சரி... ஒரு அப்பா தன் பிள்ளைட்ட என்ன எதிர்பார்ப்பார். அய்யனே சொல்லிட்டாரு.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

இது நியாயமா இருக்கு. நம்ம பெத்த பிள்ளை நல்லபடியா இருக்கணும்; நல்லவனா இருக்கணும். வாழ்க்கையில் உயர்ந்தபடியில் இருக்கணும் ... இப்படியெல்லாம் நினச்சா நல்ல தகப்பன் தான் அவரு.

இதை உட்டுட்டு நான் உன்னைப் படைச்சிட்டேன். அதுனால நீ நித்தமும் என் காலடியில் அமர்ந்து கொண்டு என்னை நினைச்சிக்கிட்டு - பஜனை பண்ணு / ஸ்தோத்திரம் சொல்லு / தொழுகை நடத்துன்னு சொன்னா அந்தக் கடவுள் ஏனிப்படி பண்றாருன்னு ஒரு கேள்வி வராதா?

அதுவும் நித்தமும் அனைத்துக் காலமும் அவரையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமாம். அதிலும் ஒரு ஜோக் தெரியுமாடா கொமாரு? அவனின்றி அணுவும் அசையாது ... தூணிலும் இருப்பார்; துருப்பிலும் இருப்பார் ... என்பார் ஒரு க்ரூப். இன்னொண்ணில தினமும் திரிகால ஜெபம்னு மூணு தடவையாவது சாமியை நினைக்கணுமாம். இன்னொண்ணில சாமி தினமும் 50 தடவை தொழுகணும்னு சொல்லிச்சாம். நபி கஷ்டப்பட்டு திரும்பத் திரும்பப் போய் பேரம் போய் பேசி கடைசியில் 5 தடவைன்னு சாமி முடிவு பண்ணிரிச்சுன்னு சொன்னாங்க. நல்லா இருக்குல்ல.

அப்பா பெத்தாரு ... வளத்தாரு... நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுத்தாரு. அதுக்காக அவரு காலுக்கு கீழ உக்காந்துட்டு பஜனை / ஸ்தோத்திரம் / தொழுகை பண்ணினா அப்பா அடிச்சி விரட்ட மாட்டாரா? அவரு பேரைக் கெடுக்காம நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தால் அப்பா மகிழ்ச்சியடைவார். அதுதான் அவருக்கு வேணும்.

ஆனா நம்ம சாமி நம்மள இப்படி விரட்டி விரட்டி .. என்னைப் பத்தியே நினைன்னு சொன்னா அத egoism பிடிச்ச ஆளு மாதிரின்னு தான் நினச்சிக்கணும் இல்லடா, கொமாரு?

என்னமோ போடா, கொமாரு!