Friday, April 29, 2005

8 M.G.R.>ரஜினி>விஜய்..???

2. சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை. அந்த பெரிய மனுஷன் M.G.R. ஒரு பத்து இருபது வருஷமா தமிழ் சினிமா முன்னேறாதபடி பார்த்துக்கிட்டார். ஏதோ அவரால முடிஞ்சது! சினிமான்னா கதை வேணும்னு யார் சொன்னதுன்னு கேட்டவர்.

ஏதோ...அவருக்குப் பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கலாம்னு தமிழ்த்திரையுலகம் நினைத்தது. வந்தாரையா நம்ம சூப்பர் ஸ்டார். நல்ல மனுஷன். M.G.R. மாதிரி இல்லாம நல்லாகூட நடிக்கக்கூடிய ஆளுதான். ஆனா நம்ம மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா? ஒரே ஸ்டைல் மயந்தான், போங்க. நானும் கையை ஆட்டி ஆட்டி பார்க்கிறேன்.. சத்தமே வரமாட்டேங்குது... (நான் ஒரு தடவை சொன்னா...). துண்டை தோளில் சுற்றி சுற்றி போட்றேன்... அப்பவும் சத்தமே வர மாட்டேங்குது! சரி, கதை, அதில் கொஞ்சம் லாஜிக், சண்டை, அதில் கொஞ்சம் sense, இப்படி ஏதும் இல்லாமலேயே தலைவர் காலம் போயிருச்சி... (past tense-ல் சொல்லலாமா? அல்லது இன்னும் 5 வருஷம் கழிச்சி வரப்போற படத்துக்குப் பிறகுதான் சொல்லணுமா?)

அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். சரி, இனி தமிழ்த்திரை எழுந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கும்போது வந்தாரையா அடுத்த வாத்தியார். வரிசையா ஹிட்ஸ். அதுவும் வழக்கமான நம்ம மசாலா படங்கள். logic இல்லாத, anti-gravitational டிஷ்யும் டிஷ்யும் படங்கள். புதிதாக எதுவும் முயற்சிகூட செய்துவிட மாட்டேன் என்ற நல்ல முடிவில் நம் இளைய தளபதி மிக மிக உறுதியாக இருக்கிறார். ஒரு தியாகம்தான். இனி இந்த தலைவர் தன் பங்குக்கு எத்தனை வருஷங்களைக் கெடுக்கப்போகிறாறோ.....ம்ஹும் ... சாபக்கேடுதான், போங்க!
நமக்கு மட்டும்...

ஏங்க இப்படி...?

3 comments:

  1. தருமியே, நீ சிறு சிறு நறுக்காக எழுதினாலும் நன்மை பயக்கும்படி எழுதுகிறாய்.வாழ்க உன் பணி.

    ReplyDelete
  2. உங்கள் கூற்று சரி தான் தருமி.. கமல் போன்றவர்கள் முன்னுக்கு தள்ள முயற்சிக்கும் வேளையில் இவர்கள் எல்லாம் தமிழ்த் திரையுலகிற்கு சாபக் கேடு.

    இவர்களை பார்த்து மற்றவர்களும் தங்கள் வழக்கமான பாணியில் இருந்து வெளிவருவது தான் கொடுமையே

    ReplyDelete