போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் விடுவிப்பு; சரியான ஆதாரங்கள் சி.பி.ஐ. தரவில்லை; இந்த வழக்கிற்கான செலவு 250 கோடி அல்ல, பத்து கோடிதான்; - சென்ற வாரத்தில் அடுத்தடுத்த பத்திரிகைச் செய்திகள்.
இது ஒன்றும் புதிது அல்ல. சி.பி.ஐ. தொடுத்த வழக்குகள், அதுவும் சிறப்பாக பெரிய அரசியல் புள்ளிகள் தொடர்புள்ள வழக்குகள் ஏதும் வெற்றி பெற்றதாகவே தெரியவில்லை. Accountability (சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை; உதவவும் ) என்று எதுவும் சி.பி.ஐ.-க்கு கிடையாதா?
அந்த அமைப்பிற்காகச் செலவிடப்படும் பொதுப்பணம் எல்லாம் வீண் என்றால் எதற்கு அந்த அமைப்பு?
அங்கு பெரிய பொறுப்பில் வேலை பார்க்கும் பெரிய மனிதர்களுக்கு சுய கெளரவமே இருக்காதா?
எதிர் கட்சிக்காரங்களை அவ்வப்பொழுது பயமுறுத்துவதற்கு மட்டுமே இந்த அமைப்பா?
உண்மை சிந்திக்க வேண்டிய கருத்து, போலிஸ் சிபீஐ எல்லாம் சாதாரண மனிதர்களுக்கு தான்!!!
ReplyDeleteஇப்போது நடக்கும் ஸ்பெக்ட்ரம், CWG ஊழல் வழக்குகள் இதே பாதையில்தான் போகுமென நினைக்கிறே.
ReplyDelete