26 கோடி செலவு..27 கோடிக்கு காப்பீடு...அது இதுன்னு ஒரே build up. படம் என்ன ஆச்சு, ஆகப்போகுதுன்னு தெரியலை. ஆனால் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த துண்டுச்செய்திகளும், பார்த்த சின்னத்திரை விளம்பரங்களும் தரும் சேதிகள் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒரே க்ராஃபிக்ஸ் மயம்தான் என்பதுதான் கெட்ட & கேட்ட சேதி.
ஷங்கர் படத்தைப் பற்றி பெரிதாக எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் ஒன்றும் கிடையாது. கொஞ்ச நஞ்சம் இருந்ததும் 'பாய்ஸ்'- ஓடு போயே போய் விட்டது. சுஜாதாவுக்கும் அது ஒரு கண்திருஷ்டியாக போய் விட்டது. அவரை மாதிரி யாராவது ஷங்கரிடம் கொஞ்சம் சொல்லலாம் - இந்த க்ராஃபிக்ஸ் எல்லாம் - நம்ம 'காஞ்சி ப்லிம்ஸ்'காரர் மாதிரி - க்ராஃபிக்ஸ்னா க்ராஃபிக்ஸ் மாதிரியே தெரியக்கூடாது; அதுதான் உண்மையான, திறமையான ரசிக்கக்கூடியதுன்னு. உதாரணமா, பாம்பே இல்லாம ஆனா தத்ரூபமா பாம்பு மாதிரி (Anaconda), பொம்மைகளை வைத்தே பயங்காட்டுற (Jurassic Park) மாதிரி இல்லாம, கிறுக்குத்தனமா தண்ணீரில நடக்கிறது, வானத்தில பறக்கிறதுன்னு ஒரு சீனப்படம் - crouching tiger... - ஆஸ்கார் பரிசு வாங்கிச்சே, அதுதான் க்ராஃபிக்ஸ்னு ஷங்கர் நினைச்சுக்கிட்டார்னு நினைக்கிறேன். அப்படி எப்படி ஒரு சின்னப்பிள்ளைத்தனமான படத்திற்கு பரிசு கொடுத்தார்களோ, அது ஒரு கேவலம்.
நம்ம ஆளு என்னன்னா, ரொம்ப ரொமான்டிக்கான சீன்களில் கூட கதாநாயகன் திடீரென்று கழுதையா, புலியா மாறுவார். ரொம்ப சிம்பாலிக்கா காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு பலதலைப் பாம்பு - draw a lebelled picture-ன்னு தேர்வுல கேட்பார்களே அது மாதிரி -எழுத்துக்களோடு வரும். aesthetics-னா வீசை எவ்வளவுன்னு கேட்கிறது மாதிரிதான் இதுவரை ஷங்கரின் படத்தில் க்ராஃபிக்ஸ் பார்த்ததாக நினைவு. இந்த படமும் அதே மாதிரிதான் போலும்.
சுஜாதா சார், நீங்களாவது கொஞ்சம் சொல்லக்கூடாதா?
//ரொம்ப ரொமான்டிக்கான சீன்களில் கூட கதாநாயகன் திடீரென்று கழுதையா, புலியா மாறுவார்.// :-) ஹீரோவுக்கு க்ளோசப்புல ரொமான்ஸ் வரலைன்னா, அப்புறம் இப்படித்தான்..
ReplyDelete"ஹீரோவுக்கு க்ளோசப்புல ரொமான்ஸ் வரலைன்னா, அப்புறம் இப்படித்தான்.. "
ReplyDeleteஹீரோவுக்கு ரொமான்ஸ் வருதோ வரலையோ, டைரடக்கருக்கு கழுதை, புலி மேல ரொமான்ஸ் வரக்கூடாதில்லையா?
"???????????? said...
ReplyDeleteநானும் உங்களைப் போல படத்தில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக்கொண்டு..."
அதுக்குத்தான் நம்மள மாதிரி ராசாமார் கிட்ட மட்டும் அப்படி கேக்கணும். ஷங்கர்கிட்ட கேட்டா அப்படித்தான்!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete