Monday, August 15, 2005

48. Da Vinci Code -ம் மத நம்பிக்கைகளும்..

DA VINCI CODE

by  DAN BROWN





உள்ளதே மத நம்பிக்கைகள் ஆட்டம் கண்டு ஒரு வழியாக இனி சமய மறுப்பே எனது வழி என்றிருக்கும் நிலையில், உள்ளது பற்றாது என்பது போல, இந்தப் புத்தகம் வாசித்ததும் கிறித்துவ சமயத்தைப் பற்றியும், அதனைத்தொடர்ந்து, சமயங்களை இறுகப் பற்றிக் கொண்டு, தங்கள் கடவுள்களையும், சமயங்களையும் தாங்கள்தான் காப்பாற்றியாக வேண்டிய நிலையில் இருப்பதாகக்கற்பித்துக் கொள்பவர்களையும் கொஞ்சம் நினைத்துக்கொண்டேன்.

இந்தப்புத்தகத்தை வாசிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்களுக்கு நிகராக google -லும், wikipedia-விலும் 'ஆராய்ச்சி' செய்தாகிவிட்டது. கதாசிரியர் வரலாற்று உண்மைகளையே எழுதியிருப்பதாகக் கூறியுள்ளார். சரி, நாமும் அதைச் சரி பார்ப்போமே என்று உள்ளே நுழைந்து பார்த்தாகிவிட்டது. சில செய்திகள் google, wikipedia-வில் கிடைக்கின்றன; சிலவற்றைக் கண்டு பிடிக்கவில்லை; எது எப்படியோ - இந்தப் புத்தகம் கிறித்துவர் வட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது போலும். இந்தக் கதைப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகளை மறுக்கும் முகமாக இன்டர்நெட்டில் பலப் பல கட்டுரைகள்; விவாதங்கள். God TV-ல் ஒன்றரை மணிநேர தன்னிலை விளக்கங்கள்; தர்க்கங்கள்; மறுப்புகள். ஆனால், எல்லாம் அறிவு பூர்வமான விவாதங்களே தவிர தனி மனிதச் சண்டைகள் ஏதும் இல்லை. திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது - ஒருவேளை கதாசிரியர் Dan Brown-க்கு ஏதும் மிரட்டல் வந்திருக்குமோவென்று; அதுபோல எதுவும் இல்லையென்பது ஒரு நல்ல விஷயம்.

கிடைத்த சில பதில்களையும், வந்த சில ஐயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

*பைபிள்களில் gnostic gospels என்று ஒரு பிரிவு இருந்தது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

*அவைகளில் சொல்லப்பட்ட பல சேதிகள் இதுவரை மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்து வந்துள்ளன.

*Holy Trinity- கிறித்துவ மதத்தின் ஆணி வேராகக்கருதப்படும் விஷயம்; ஆனால், அது கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) முடிவு செய்யப்பட்டது. ஆனால், கதையில் ஓட்டெடுப்பு மூலம் இந்த விவாதம் முடிவுக்கு வந்ததென்று கூறப்பட்டுள்ளது; எது சரியோ?

*Priory of Sion, Knights of Templars, Opus Dei - என்று கதையில் கூறப்படும் இந்த அமைப்புகள் பற்றிய எல்லாமே முழு உண்மை என்று தெரிகிறது. அதுவும், மேற்கூறியவற்றில் முதலிரண்டும் இப்போது வழக்கற்றுப் போனவை; ஆனால், மூன்றாவது இன்னும் இயங்கி வரும் ஒரு அமைப்பு. அதனால்தானோ என்னவோ, கதாசிரியரின் வெப்சைட்டில் அதைப்பற்றி இருந்த பக்கங்கள் 'தற்காலிகமாக' நீக்கப்பட்டுள்ளன; என்ன அரசியலோ!

*Opus Dei -க்கும் கத்தோலிக்கத் தலைமைக்கும் இருந்த உறவு பற்றிச் சொல்லப்பட்ட சேதிகள் பற்றி இன்னும் விபரங்கள் பார்க்கவில்லை.

*மிக முக்கியமானதாகவும், கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது: ஜீசஸ் திருமணமானவர் என்பது. திருமணம் என்பது தன்னிலே தவறானதாக இல்லாவிட்டாலும், ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும். 'நம்பிக்கை / விசுவாசம் / faith / fidelity - என்ற உணர்வுகளோடு இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையல்ல; புறங்கையால் ஒதுக்கிவிட்டுப் போய்விடுவார்கள் - என் சில கிறித்துவ நண்பர்கள் போல. ஆனால், என்னை மாதிரி 'கேசு'கள்தான் இதன் உண்மைநிலையைக் காண ஆசைப்படுவார்கள். நானும் முயன்றேன்; மிகச்சரியான விடை கிடைக்கவில்லை. தேடல் தொடரும்...

some informative and interesting web sites:

http://www.mystae.com/restricted/streams/masons/mysteries.html
http://www.rosslyntemplars.org.uk/
http://en.wikipedia.org/wiki/The_Da_Vinci_Code - objections or deviations

about templars &priory of sion -----http://altreligion.about.com/gi/dynamic/offsite.htm?

http://www.fiu.edu/~mizrachs/poseur3.html

Mysteries of Rosslyn Chapel, the Templars and the Grail ---
http://altreligion.about.com/gi/dynamic/offsite.htm?site=http://www.ancientquest.com/deeper/2002%2Dkrm%2Drosslyn.html
http://www.mystae.com/restricted/streams/masons/mysteries.html
http://www.rosslyntemplars.org.uk/http://en.wikipedia.org/wiki/The_Da_Vinci_Code - objections or deviations






16 comments:

  1. netrudhan edho oru channel il indha kadhaiyin muzhu varalaaru kaana nerndhadhu.

    priory of sion enbadhu oru frenchkaaran thannai raaja vamsam endru kaati kolla seidha fraud.
    avane oru tharuvayil idhai pooukondaan.

    oru french ezuthalar 'san greal'(holy grail) endru ezudha vendiyadhai spelling thavaru seidhu
    'sang real' (royal blood) endru thavarudhalaga ezudhiyadhai pidiththu kondu dhan indha
    bloodline kadhaigal vara arambithadhu.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. நானும் அந்தப்புத்தகத்தைப் படித்தேன். முதலிலே அது போல சில விசயங்களை அறிந்ததனால் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் Opus Dei மாதிரி சில புதிய விசயங்கள் கிடைத்தன.

    ReplyDelete
  8. நானும் இந்தப்புத்தகத்தை வாசித்துள்ளேன். ஆனாலும் நான் என் பதிவில் சொன்னது போல, ஊடகங்கள் ஏற்படுத்திய (தேவையற்ற) பரபரப்பில், கதைக்கரு முதலே தெரிந்து விட்டதில் புத்தகம் "புதிதாய்" வாசிக்கவில்லை.

    கதைக்கரு தெரிய வந்த போதிலும் இயேசு குறித்தான எனது கருத்தில் மாற்றங்களேற்படவில்லை.

    புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற இரகசியக் குழுக்களைப் பற்றி இணையத்தில் நானும் தேடினேன். சில பல interesting தளங்கள் பார்க்கக் கிடைத்தது.

    மற்றும்படி, இந்தப்புத்தகத்தின் கதையைப் பற்றிய எனது கருத்து: கிட்டத்தட்ட அரைவாசி அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமாகவே உணமையாக இருக்கும் என்பதே.

    ReplyDelete
  9. தருமி சார்,

    இந்த படத்தில், இயேசுவிற்கும் மக்தலேனாவுக்கும் திருமணம் நடந்திருக்கலாம் (இருக்கலாம்!!!) என்று சொல்வதை தவிற வேறெந்த விதத்திலும் தடை செய்ய ஏதுவாக எதுவும் இல்லை.

    இந்த படத்தின் அடுத்த பகுதியை பார்த்துவிட்டீர்களா? ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ். இது ஒரு அக்மார்க் திரில்லர் என்பதை தவிற வேறெந்த கான்ட்ராவர்ஸியும் இல்லை. ஆனால், இதையும் பார்க்க என் கிருத்துவ மனைவி மறுத்துவிட்டாள். என்ன சொல்வது?

    சீனு.

    ReplyDelete
  10. சீனு,
    கல்யாணம் மட்டுமல்ல; அதைவிட மற்ற மறைக்கப்பட்ட விஷயங்கள் எனக்கு மலைப்பாக இருந்தன. எவையெல்லாம் பைபிள் என்று முடிவாக்கப்பட்டது அங்கேதானே.

    ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ் - படித்தேன்; பார்த்தேன். ச்ச்ச்சும்மா ........ சினிமாட்டிக். அதுவும் சினிமா சுத்த சினிமாட்டிக். உங்க தங்ஸிடம் சொல்லுங்க .. ஒரு விஜயகாந்த படம் மாதிரின்னு சொல்லுங்க. அதோட ரோம் நகர கோவில்கள், அங்குள்ள மற்ற விவகாரங்கள் தெரிஞ்சுக்கலாம்னு.

    ReplyDelete
  11. அதையேதான் சார் நானும் சொன்னேன். ரோம் நகரத்தை மிக அழகாக காட்டியிருப்பார்கள். இது ஜஸ்ட் ஒரு திருல்லர் படம். கொஞ்சம் மேத்ஸ் கலந்திருக்கும்னு. ம்ஹூம். இது ஆன்டி-க்ரைஸ்ட் சப்ஜெக்ட். நான் பார்க்க மாட்டேன். அது பாவம்னுட்டா ;)

    ReplyDelete
  12. //நான் பார்க்க மாட்டேன். அது பாவம்னுட்டா ;)//

    :)

    நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்!!

    ReplyDelete
  13. //நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்!!//

    நோ! நோ!! அவளுக்கு கடவுள் மேல் பயம். அதனால் தான்.

    பரவாயில்லை. நீங்க வாங்க. உங்க பாதுகாப்புக்கு நான் கியாரன்டி.

    ReplyDelete
  14. //உங்க பாதுகாப்புக்கு நான் கியாரன்டி.//

    உங்க பாதுகாப்புக்கு ...?

    :)

    ReplyDelete
  15. //உங்க பாதுகாப்புக்கு ...?//

    இதோ! உங்களோடுபேசிக்கொண்டிருக்கிறேனே!!

    ReplyDelete
  16. அப்போ இதெல்லாமே உங்களுக்கு 'ரஸ்க்" சாப்ட்றது மாதிரி அப்டிங்கிறீங்க ..!

    ReplyDelete