தமிழ்மணத்துக்குள் நான் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இங்கு மதங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. என் கருத்துக்களை வைப்பதற்கு இஃது ஓர் ஊக்கியாக இருந்தது. என் எண்ணங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தபோதே நிறைய பின்னூட்டங்கள் கேள்விகளாகவும், விவாதங்களாகவும், விளக்கங்களாகவும் வர ஆரம்பித்ததால் நான் முழுமையாக எழுதி முடிக்கும் வரை பின்னூட்டங்களுக்குக் ‘கதவைச் சாத்திவிட்டு’ 7 பதிவுகளாக நான் பதித்து முடிந்ததும் பின்னூட்டக் கதவைத் திறந்தபோது, கேள்விளும், விளக்கங்களும், பதில்களும் வெள்ளமாய் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது - தொடர்ந்து வந்த மெளனம் - eerie silence -கொஞ்சம் அதிசயமாக இருந்தது; ஆச்சரியமளித்தது.
எல்லா மதங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை - சில கேள்விகளுக்கு பதில் எதுவும் இருக்காது; தர முயற்சிப்பது வீணே. நம்பிக்கை ஒன்றே பதிலாக இருக்கும். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாததால்தான் இந்த மெளனம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆயினும், ஒரு புதிய பதிவாளர் ஒரே ஒரு கேள்வி கேட்க, அதற்கு நான் அளித்த பதிலுக்கு அவரிடமிருந்து மீண்டும் எந்தவித எதிர்வினையுமில்லாமல் இருந்த போதுதான், இந்த மெளனம் ஒரு concerted effort என்ற தோற்றம் எனக்குப் புலானாயிற்று.
நான் கிறித்துவன் என்பதாலேயே நான்சொல்வதை மற்ற கிறித்துவப் பதிவாளர்கள் கேட்டு, அதன்படி நடந்து கொள்வார்களா, என்ன? நிச்சயமாக நான் அவர்களை அப்படிக் கட்டுப் படுத்தவும் முடியாது; அப்படி ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளவும் மாட்டேன். They will retain their own identity and remain as individuals.
இந்த வலிந்த மெளனம் எனது கேள்விகளுக்காக நான் எதிர்பார்த்த விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காததால் அந்தக் கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஒரு கற்பனை!
ஆனாலும் மதங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேறு வழிகள் திறக்கத்தான் செய்கின்றன.
08.11.’05 அன்று THE HINDU நாளிதழில் வந்த ஒரு சேதி அப்படி ஒரு வழியாகத் தெரிகிறது. http://www.hindu.com/2005/11/08/stories/2005110805730900.htmIrshad Manji என்ற கனடா நாட்டு, தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்மணியின் ,The Trouble with Islam Today என்ற புத்தகம் வரும் 10-ம் தேதி டெல்லியில் வெளியிடப் படுகிறதாம். என் பதிவுகளில் நான் எதிர்பார்த்ததையே அவரும் எதிர்பார்க்கிறார் போலும்: “I am much more interested in sparking conversations. … That is why, at the end of my book, I invite readers to tell me where I have gone wrong.” இந்த சொற்றொடர் என் பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்தது போலவே அவரும் பதில்களை / விளக்கங்களை எதிர்நோக்கியுள்ளார் என்பது தெரிகிறது.
அவரது நேர்காணலில் அவர் கொடுத்துள்ள சில விஷயங்கள் எனக்கு மிக அருகாமை உணர்வைத் தருகின்றன:
* “We .. are raised to believe that because the Quran comes after the Torah and the Bible, it is the final and therefore perfect manifesto of God’s will. This supremacy complex is dangerous because it inhibits the moderates from asking hard questions about what happens when faith becomes dogma.”
* “I believe that we Muslims are capable of being more thoughtful and humane than most of our clerics give us credit for. That is why I wrote this book.”
அவரிடம் கேட்கப் பட்ட கடைசி வினா:
* “Is it true that you are not going to India to promote the book because you have received threats? ”
வேறு நாடுகளில் இல்லாத எதிர்ப்பு நம் நாட்டில் என்பது வியப்பாக மட்டுமல்ல, கொஞ்சம் வேதனையாகவும் இருக்கிறது. இந்த மதத்தீவிரம் பற்றிதான் நான் என் மதங்கள் பற்றிய பதிவில் 21-ம் கேள்வியாகக் கேட்டிருந்தேன்.
அந்த நல்ல நாளுக்காக - விடியலுக்காகக் - காத்திருப்போம்…
Nov 10 2005 04:41 pm மதங்கள் edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 6 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
25 Responses
வசந்தன் Says: after publication. e -->November 10th, 2005 at 5:56 pm e
உங்கள் பதிவுளைப் படித்தேன். உங்களிடம் கேட்க என் தரப்பிலிருந்து எதுவுமில்லை. ஏனெனில் ஏற்கெனவே கிட்டத்தட்ட உங்கள் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவன்.
ஆனால் மதத்தைப் பொறுத்தவரை வாதிப்பதற்கு என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. எந்தவிதமான கேள்விகளையும் வாதத்தையும் எதிர்பார்க்கிறீர்கள்?கேள்வி கேட்கவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. யாரும் தங்கள் நிலைப்பாட்டை வாதங்கள் புரிந்து மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் மதநம்பிக்கையில் இல்லை.நீங்கள் பின்னூட்டப் பெட்டியை அடைக்கும்வரை நடந்தவை என்னவென்று தெரியும்தானே? தொடர்ந்து வாதங்கள் நடக்காதது எனக்கு ஆச்சரியமன்று, மாறாக ஆசுவாசமாக இருந்தது.
Mohandoss Ilangovan Says: after publication. e -->November 10th, 2005 at 6:26 pm e
தருமி, வசந்தன் சொன்னதில் எனக்கும் சம்மதமே.
“உங்கள் பதிவுளைப் படித்தேன். உங்களிடம் கேட்க என் தரப்பிலிருந்து எதுவுமில்லை.”
J Chandrasekaran Says: after publication. e -->November 10th, 2005 at 6:33 pm e
In my humble opinion, Tamil Blogs have something more purposeful than discussing religions. More unknown and unsung heroes of Tamilnadu, in all spectrum of life are being erased from history. Cant we not talk of such things, instead of religion, caste, where all our leaders are pointedly nurturing many such groups to generate mad vote banks? Should we also discuss and waste time like them? Sorry, if I cam wrong.
ramachandran usha Says: after publication. e -->November 10th, 2005 at 8:56 pm e
வசந்தன் சொல்லுவதை நானும் ஆமோதிக்கிறேன். மத நம்பிக்கை என்றுதானே சொல்லுகிறார்கள். எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கையும் இல்லை,மேலும் உலகில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் மதம் காரணம் என்று நினைத்தாலும், உள்ளம் உருகி வணங்குபவர்களைப் பார்க்கும்பொழுது, கடவுள் இல்லை என்று சொல்ல மனம் வருவதில்லை.தங்கள் மதத்தை முன்னிறுத்தி அடுத்தவரை சாய்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து மதங்களும் தோல்வி அடைந்துவிட்டன என்பது என் எண்ணம்.முன்பு நா.கண்ணன் அவர்களின் பதிவில் நானும் அவரும் சுவாரசியமாய் சண்டை போட்டோம். கண்ணன் சாரை ஆளையே காணோம்.
1 Says: after publication. e -->November 10th, 2005 at 9:53 pm e
/எல்லா மதங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை - சில கேள்விகளுக்கு பதில் எதுவும் இருக்காது; தர முயற்சிப்பது வீணே. நம்பிக்கை ஒன்றே பதிலாக இருக்கும். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாததால்தான் இந்த மெளனம் என்ற முடிவுக்கு வந்தேன்./
it is true.i have seen while trying to give forced explanation on those things,more question arises .
- inomeno
Awwai Says: after publication. e -->November 10th, 2005 at 10:35 pm e
//கேள்விளும், விளக்கங்களும், பதில்களும் வெள்ளமாய் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது - தொடர்ந்து வந்த மெளனம் - eerie silence -கொஞ்சம் அதிசயமாக இருந்தது; ஆச்சரியமளித்தது.நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாததால்தான் இந்த மெளனம் என்ற முடிவுக்கு வந்தேன்.இந்த வலிந்த மெளனம் எனது கேள்விகளுக்காக நான் எதிர்பார்த்த விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காததால் அந்தக் கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஒரு கற்பனை!//
I have undergone EXACTLY the same thought process. Later I got to know that I indeed set the reader into a thinking process and the solution was elusive, and that I will get an answer once the reader finds logical answer. Sometimes some questions take a very long time to resolve and then longer to accept the new thoughts, especially if the person is/was a proponent of opposing school of thought!
Patience is very important on these issues, I guess. The change that one’s writings bring about in the other person is far more important than the other person acknowledging it within the time frame teh writer sets!
anbudan awwai.
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 10th, 2005 at 10:49 pm e
உண்மை தான், மதசார்பற்ற நிலை மாறி அதைசார்ந்த தீவிரங்கள் உருவாகி வந்து கொண்டிருப்பது விரும்பதகாத நிலமைதான்.மாதாக் கோயில்ல அப்பமும் வாங்கி தின்னுட்டு, மாரியங்கோயில் பொங்கல்லையும் சாப்பிட்டுட்டு, தர்காவுல நோன்புக் கஞ்சி குடிச்சிட்டு சுத்தி வாழ்ந்த அனைத்து மத ஜனங்களோட அமைதியா வாழ்ந்த சூழ்நிலை ஏன் தான் மாசுபட்டு போச்சோ!
Nanjil stephen Says: after publication. e -->November 11th, 2005 at 8:59 am e
me too a christian. i have nearly same view. be happy because ‘arai vekkaduagal’ are not posting and comments.
தாணு Says: after publication. e -->November 11th, 2005 at 10:23 am e
தமிழ் வலைப்பதிவர்களின் நிலைப்பாடை நீங்க சரியா புரிஞ்சுக்கலையோன்னு தோணுது. தொடர் பதிவுகள் அனைத்தும் வாசிச்சுட்டு அந்த topic மேலே தீவிர விவாதம் நடத்துற அளவுக்கு யாருக்கும் நேரமில்லை என்பதுதான் உண்மை. அன்றன்று அல்லது, அந்த வாரம் முடியும் வரை வேண்டுமானால் அந்த பதிவு மனசிலிருக்கும். அதன் பின் அங்கேயே நின்று சண்டை போட அனைவருக்கும் பொழுதில்லை. யாரோ ஒன்று ரெண்டுபேர் வேணா தீவிரமா விவாதிக்கலாம். இது உங்க பதிவுக்கு மட்டுமல்ல, எல்லா பதிவிற்கும் ஏற்படும் பிரச்னைதான். இந்த மாதிரி உணர்வு ரொம்ப முயற்சி எடுத்து எழுதற பதிவர்களுக்கு இருப்பதை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.
சில நாட்கள் ஒண்ணுமில்லாத விஷயத்தை சீண்டிச் சீண்டி பேசிக் கொண்டிருப்போம், அதற்கு ஒன்றிரண்டு நாள் முன்னாடி முக்கியமான விஷயம் ஏதாவது விவாதிக்கப் பட்டிருப்பது தெரியாமலே போயிருக்கும்.. எல்லாமே நேரப் பற்றாக்குறையால்தான். நான் கூட உங்களின் சில பதிவுகளை ஒரு வாரம் கழித்துகூட வாசிப்பதுண்டு. அந்த சமயங்களில் பின்னூட்டமிடுவதே பொருந்தாச் செயல் போல் இருக்கும். அதனால் சோர்வடையாதீர்கள். விவாதிக்க வேண்டிய அவசியமுள்ள பதிவுகளை மறு பதிப்பு செய்யுங்கள், சரியாகிவிடும்.
துளசி கோபால் Says: after publication. e -->November 12th, 2005 at 10:06 am e
தாணு சொன்னது தான் நானும் சொன்னமாதிரி.
பாருங்க, இதுக்கே தனியா எழுத நேரமில்லை:-)
நேசகுமார் Says: after publication. e -->December 7th, 2005 at 10:30 am e
அன்பின் தருமி,
இது நடப்பதற்கு சில நூற்றாண்டுகள் ஆகலாம் என்று தோன்றுகிறது - இஸ்லாம் விஷயத்தில் நடக்காமலே கூட போகலாம். ஏனெனில், கேள்வி கேட்பதும், நம்பியுள்ளதில் சந்தேகம் கொள்வதும் மிகக் கடுமையான குற்றங்கள் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது. மேலும், என்ன சொன்னாலும் அதை நபிகள் நாயகத்தின் மீதான அவதூறாக ஒரு நம்பிக்கையுள்ள இஸ்லாமியர் கொள்ள முடியும்(நாகூர் ரூமி அவர்கள் மைலாஞ்சி பற்றி எழுதியுள்ளதை திண்ணையில் தேடி படித்துப் பாருங்கள்). அப்படி அவதூறு என ஒரு இஸ்லாமியர் கருதினால், அவர் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்பது மதக்கோட்பாடாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த விஷ்ஃபுல் திங்கிங் எல்லாம் இஸ்லாம் விஷயத்தில் சரிவராது என்றே தோன்றுகிறது. அவ்வப்போது மென்மைப் பட்டாலும் பிறகு மிகத்தீவிரமாக மதவெறியும் வன்முறையும் இந்த மூலங்களிலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு இஸ்லாமியரையும் வன்முறையில் ஈடுபடத் தூண்டுகிறது(அக்பர் போய் அவுரங்கசீப் வந்தாற்போல்!).
இந்த மூலங்கள் உடைந்தால், இஸ்லாமே உடைந்துவிடும் என்பதால் வன்முறை இல்லாவிட்டால் இஸ்லாம் இல்லை - இஸ்லாம் இருந்தால் வன்முறை மீண்டும் மீண்டும் கிளைத்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே என் எண்ணம்.
ஆனாலும், காத்திருப்போம்.
தருமி Says: after publication. e -->December 8th, 2005 at 1:17 am e
மன்னிக்கணும் வின்ஸ்டன்,
இந்த விவாதம் தவறு.
இதேபோல் ஜெருசலேமில் பூகம்பம் ஏற்பட்டால்…, காசியில் ஏற்பட்டால்… என்று உங்கள் கேள்வி விரிவானால் அது நன்றாகவா இருக்கிறது?இதுவரை கோயில்களோ, சர்ச்களோ, மசூதிகளோ பூகம்பங்களால் இடிபடாமலா இருந்திருக்கின்றன? அதனால் மத நம்பிக்கைகள் என்ன மாறியாவிட்டன?
கல்வெட்டு Says: after publication. e -->December 8th, 2005 at 8:19 am e
regarding this issue(related) my comments in usha’s post
http://nunippul.blogspot.com/2005/11/blog-post_113285280813111378.html
நம்பிகையாளர்களிடம் விவாதம் கொள்ளக்கூடாது என்பதே எனது கொள்கை.மேலும் மதம் சார்ந்த (எந்த மதமாக இருந்தலும்) புனித நூல்கள் பற்றிய விவாதத்தினால் இனி அவைகள் மாற்றி எழுதப்படப் போவதில்லை. அவை அப்படியே இருக்கும். இதில் நான் சொல்லி எதுவும் நடக்கப் போவது இல்லை .தனது நம்பிக்கையை தானே கேள்விக்கு உட்படுத்த முன்வருபவர்களுக்கு இடையில்தான் விவாதம் ஒரு முடிவை நோக்கி நகரும். ஒரு கருத்தில் நம்பிக்கை உள்ளவர்களிடம் , அதே கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் விவாதம் செய்யும் போது, நேர விரயத்துடன் அந்த விவாதங்கள் ஒரு அர்த்தமற்ற குப்பையாகமாறி தனிமனித தாக்குதல்களாக முடிந்துவிடும்.
தமிழ் ஈழம் (இலங்கை-விடுதலைப்புலி பிராபாகரன்) ,பிராமணர்,இராமதாஸ்-திருமா, இஸ்லாம் போன்ற விசயங்களைத் தொடுவது எனக்கு கொஞ்சம் சிக்கலானது. இந்த விசயங்களில் யாரும் இந்த வலைப்பதிவு விவாதத்தினால் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக வலைப்பதிவுச் சரித்திரம் கிடையாது.
aravindan neelakandan Says: after publication. e -->December 8th, 2005 at 5:06 pm e
வின்ஸ்டன் உங்கள் கேள்வியை எந்த மதத்தையும் தொடாமல் கேட்கலாமா? ஒரு மத நம்பிக்கையின் அடிப்படை தகர்ந்து போனால் - தகரும் படியான அடிப்படை நம்பிக்கை உடைய மதத்திற்கு என்னவாகும்? அப்படி ஏதும் நடக்க வேண்டாம். நடந்தால் நீங்கள் அதிசயிக்கத்தக்க விதத்தில் புதிய வியாக்கியானங்களுடன் நம்பிக்கையும் மதமும் மீண்டும் உயிர்வாழும். இந்த இழையில் ஒரு சிலர் மதங்கள் பற்றி விவாதிப்பது அவசியம்தானா என்கிற மாதிரி கூறியுள்ளீர்கள். அவசியம்தான். மதம் ஒரு அடிப்படை மானுட உணர்வு. அதனை விவாதிப்பது அது கழண்டு விழும் வரை அவசியம்தான். எளிதில் கழண்டு விழும்படிக்கு பழுத்த மதத்தை தேர்வு செய்வதும் அவசியம்.
நல்லடியார் Says: after publication. e -->December 9th, 2005 at 4:59 pm e
//இந்த வலிந்த மெளனம் எனது கேள்விகளுக்காக நான் எதிர்பார்த்த விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காததால் அந்தக் கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஒரு கற்பனை!ஆனாலும் மதங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேறு வழிகள் திறக்கத்தான் செய்கின்றன./
தருமி,
எம்மதமும் சம்மதமில்லை அல்லது சரியல்ல என் ‘சுய’ மார்க்கமே சரி என்று சென்ற நீங்கள், இஸ்லாம் பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கி இருப்பதும், இதற்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விக்களுக்கு அந்தத்த மத நம்பிக்கையாளர்களிடமிருந்து சரியான பதில் இல்லை என்ற விரக்தியிலும் பின்னூட்டங்களை எதிர் நோக்கிய இஸ்லாமிய விமர்சனமாக உங்களின் இப்பதிவை நினைக்கத் தோன்றுகிறது.
//முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?// என்று சுமார் 25 கேள்விகளை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் உங்களின் அடுத்தடுத்த பதிவுகளில் வைத்திருந்தீர்கள். அதில் பெரும்பாலான கேள்விகள் ஏற்கனவே வெவ்வேறு முஸ்லிம் பதிவர்களால் வெவ்வேறு பதிவர்களுக்குச் சொல்லப்படிருக்கின்றன. நானும் அதற்கு தயார் செய்த நிலையில் “தமிழ்மணம்” தளத்தின் கட்டுப்பாடுகள் என் ஆர்வத்தை தடுத்து விட்டன.
முன்னாள் கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள்,இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள ஆதி அடிப்படை ஒற்றுமைகளில் தெளிவின்றி உங்கள் கேள்விகள் இருக்கின்றன என “இஸ்லாம் பற்றிய உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும்” (இன்ஷா அல்லாஹ்) பதில் தரமுடியும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்,
நல்லடியார் Says: after publication. e -->December 9th, 2005 at 5:02 pm e
/இது நடப்பதற்கு சில நூற்றாண்டுகள் ஆகலாம் என்று தோன்றுகிறது - இஸ்லாம் விஷயத்தில் நடக்காமலே கூட போகலாம். ஏனெனில், கேள்வி கேட்பதும், நம்பியுள்ளதில் சந்தேகம் கொள்வதும் மிகக் கடுமையான குற்றங்கள் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது// - நேசகுமார் December 7th, 2005 at 10:30 am
நேசகுமார்,
இஸ்லாம் வெரும் முஹம்மது (ஸல்…) என்ற தனிமனிதர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றோடு 1426 வருடங்களாகி விட்டன. சுமார் 1.3 பில்லியன் உலகமக்கள் இஸ்லாத்தை தங்களின் தேடல்களுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டும், சுமார் 19 நாடுகள் 1400 வருடங்களுக்கு முன் அறிமுகமான இஸ்லாமிய வழிகாட்டலை தங்கள் அரசியல் அமைப்பாகவும், இன்னும் சுமார் 45க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்கள் தொகையில் 50%க்கும் மேல் இஸ்லாமியர்களாகவும் இருந்து கொண்டு “இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்கள் சந்தேகிக்க வேண்டும்” என்ற உங்கள் போன்றோரின் அபிலாசைகள் 14 நூற்றாண்டுகளாக நிராசைகளாக மட்டுமே அனாதையாக நிற்கின்றன.
//ஹஜருல் அஸ்வத் எனும் சிவலிங்கத்தையொத்த கற்சிலை) கைப்பற்றிக் கொண்டு போய், உடைக்கப் பட்டு அல்லது உடைந்து போய்(உடைக்கப் பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது - ஆனால் உடைந்துள்ளது என்றும் அதனாலேயே அதை வெள்ளியால் கட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகிறது) திரும்பக் கொண்டுவந்து வைக்கப் பட்டு உலகெங்கிலுமிருந்து அதை நோக்கி தொழுகை நடத்தப் படுகிறது//
கஃபாவை முன்னோக்கித் தொழுவதற்கு அங்கு இருக்கும் கருப்புக் கல்தான் காரணம் என்று நீங்கள்நினைத்தீர்கள் என்றால் உங்கள் அறியாமை வெளிச்சமாகிறது. மக்காவிலிருக்கும் கஃபாவை முன் நோக்கி தொழப்படும் முன் பாலஸ்தீனத்திலிருக்கும் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இருக்கும் திசையை நோக்கியும் முஹம்மது உட்பட்ட முஸ்லிம்கள் தொழுதுள்ளனர். (”திக்கை வணங்கும் துருக்கரும்” என்று பாரதி கூட முஸ்லிம்கள் திசையை வணக்குகிறார்கள் என்றே தவறாக புரிந்து வைத்திருந்தார்.)
கஃபாவில் பதிக்கப்பட்டுள்ள “கருப்புக்கல்” சக்தியற்ற வெரும் கல்லே என்று முஹம்மது நபியின் மருமகன் அலி (ரலி..) அவர்கள் சொல்லி அல்லாஹ்வை மட்டுமே வணங்கியதையும் அறிவீரோ?
ஹஜருல் அஸ்வத் கல்லை சிவலிங்கத்துடன் ஒப்பிடும் உங்களின் “”மூடநம்பிக்கைக்கு”" என்ன அடிப்படை என்று ஆதாரத்துடன் விளக்கினால் நாங்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். விளக்குவீர்களா?
aravindan neelakandan Says: after publication. e -->December 9th, 2005 at 7:31 pm e
‘வெறும் கல்லை’ உடைத்து எறிய வேண்டாம். குறைந்த பட்சம் கார்ல் சாகன் கேட்ட மாதிரி ஒரு சிறு துண்டை ஆராய்ச்சிக்காவது அனுப்பிவைக்கலாம் அல்லவா? டூனிக் துணியும் அயோத்தி நிலமும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. ‘வெறும் கல்லை’ சவூதி அரச வம்ச திலகங்கள் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கலாமே. ஆராய்ச்சி பண்ணுகிற காலத்திற்கு மெக்காவில் பாவங்களை வாங்க கண்ணுக்குக் கண் இஸ்லாமிக் ஸ்டைலில் வேண்டுமென்றால் பிர்பல் சாக்னி ஆய்வகத்திலிருந்து ஒரு கல்லை நாம் திரும்ப அனுப்பலாம். .
aravindan neelakandan Says: after publication. e -->December 10th, 2005 at 10:35 am e
மதவெறி பிடித்த சவூதி அரசனை மதச்சார்பற்ற இந்தியா தனது குடியரசு தின விழாவிற்கு அழைத்திருப்பதை நமக்கெல்லாம் காட்டி கண்ணை பிடுங்குவதுதான் இஸ்லாமிய அறநெறி அதன் மூலம் வன்முறையே குறைந்து விட்டது என்பார். அப்படி சவூதி அரசக்குடும்பத்துக்கு வெத்தலை பாக்குவைத்து வரவேற்ற பின்னரும் நேற்றைக்கு உலக இஸ்லாமிய நாடுகள் அமைப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிய ஜிகாதிகளுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டுள்ளதை கூறினால் தமிழ்மணத்திலிருந்து தருமிக்கு அரவிந்தன் நீலகண்டன் போன்ற பாசிசவாதிகளை அனுமதித்தால் உங்கள் வலைப்பூவையும் பிடுங்கி எறிந்துவிடுவோம் என தாக்கீது வந்தாலும் வரும். நமக்கேன் வம்பு. பாவம் தருமியின் வலைப்பூவாவது பிழைத்திருக்கட்டுமே. தருமி சார் !முடிந்தால் இந்த வார திண்ணையில் ஜோஸப் காம்பெல் குறித்த எனது கட்டுரையை படித்து பாருங்கள்: பார்த்துவிட்டு உங்கள் எதிர்வினைகளை தாருங்கள் சரியா?
தருமி Says: after publication. e -->December 10th, 2005 at 11:46 am e
நிரம்பவே விஷய ஞானங்களோடு எழுதுகிறீர்கள் பலரும். இந்த அளவு எனக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டு.ஆயினும், நல்லடியார் என் கேள்விகளுக்குப் பதிலளிக்கவே வருவதாகச் சொல்லியுள்ளார். (“இஸ்லாம் பற்றிய உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும்” (இன்ஷா அல்லாஹ்) பதில் தரமுடியும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.)
அவரிடம் ஏற்கெனவே முகம் காண்பித்து, கை குலுக்கிக் கொள்ள வாருங்களேன் என்று நட்போடு கேட்டிருந்தேன். அவருக்கு அதற்கு மனமில்லைபோல் தெரிகிறது. பரவாயில்லை.ஆயினும் நல்லடியார், நீங்கள் இதை மறு பரிசீலனை செய்யுங்கள். கட்டாயமில்லையாயினும் ஒரு நாகரீகம் கருதி…
அவர் தன் பதில்களைத் தரட்டும்; பின்னால் மற்றவர்கள் அதைத் தெளிவு படுத்தவோ, எதிர்வினை ஆற்றவோ செய்யலாம்.
நல்லடியாருக்கு ஓரிரு வேண்டுகோள்கள்:
1. முதல் படியாக, என் கேள்விகளுக்குப் பதிலாக மட்டும் முதலில் உங்கள் பதில்களைத் தாருங்கள்.மற்றவைகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
2. எந்த சமய நூல்களின் மேற்கோள்களுமின்றி உங்கள் பதில்களைத் தாருங்கள். ஏனெனில், அந்த நூல்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவித்து விட்டேன். என் கேள்விகளுமே அப்படிப்பட்ட கேள்விகள்தான்.’நீ மட்டும் ஏன் மேற்கோள் காட்டினாய்’ என்று கேட்டால் என் பதில்: அவைகளில் நான் கண்ட முரண்களைக் காட்டி அவைகளைப் புறந்தள்ளவே நான் மேற்கோள்களிட்டேன்.
3. என் கேள்விகளைக் குறிப்பிட்டு அதற்குரிய நேரடியான பதில்களை மட்டும் தந்தால் எளிதாயிருக்கும்.
4.no personal animosities, please. இதுவரை என்வார்த்தைகளில் இந்த அம்சம் எங்கும் எப்போதும் இல்லையென்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். let this be a two-sided affair.
NOW, OVER TO NALLADIYAR!
தருமி Says: after publication. e -->December 10th, 2005 at 12:03 pm e
இன்னொரு வார்த்தை:வசந்தன் சொல்வதுபோல் - “மதத்தைப் பொறுத்தவரை வாதிப்பதற்கு என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. கேள்வி கேட்கவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. யாரும் தங்கள் நிலைப்பாட்டை வாதங்கள் புரிந்து மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் மதநம்பிக்கையில் இல்லை.”
G.K.Chesterton தன் The Art OfArguing-ல சொல்றது மாதிரி விவாதங்களால் இருபுறமும் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளில் உறுதிப்படுகிறார்களேயொழிய ஒருவர் அடுத்தவரால் மாறுவதில்லை என்பதே பெரும்ப்பாலும் உண்மை. ஆயினும் நான் ஒரு நிலைப்பாட்டிலிருந்து வேறு நிலைக்கு மாறியவன் என்பதால் இறுகிய மனத்தோடு, மாறவே மாட்டேன் என்ற மனப்பாங்கோடு நான் இல்லை. நான் எடுத்த முடிவுகள் ஏற்கெனவே சொன்னதுபோல அறிவார்ந்த விஷயமாகவே இருக்கிறது - என்னைப் பொறுத்தவரையிலுமாவது.
சதயம் Says: after publication. e -->December 10th, 2005 at 1:06 pm e
தருமி சார்,
Nature of the Nature ஐ புரிந்து கொண்டவர்களுக்கு மதமோ,கடவுளோ ஒரு பொருட்டே இல்லை.காலம் காலமாய் தான் சார்ந்த குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கச் சொல்லப்பட்ட அதீதமான கருத்துக்களின் கோவைதான் மதம் என்பதை ஒவ்வொருவரும் நம்ப ஆரம்பித்தால் மனிதம் தழைக்கும்.
நல்லடியார் Says: after publication. e -->December 11th, 2005 at 8:40 pm e
//அவரிடம் ஏற்கெனவே முகம் காண்பித்து, கை குலுக்கிக் கொள்ள வாருங்களேன் என்று நட்போடு கேட்டிருந்தேன். அவருக்கு அதற்கு மனமில்லைபோல் தெரிகிறது. பரவாயில்லை.ஆயினும் நல்லடியார், நீங்கள் இதை மறு பரிசீலனை செய்யுங்கள். கட்டாயமில்லையாயினும் ஒரு நாகரீகம் கருதி…//
தருமி,
எங்கோ இருந்து கொண்டு இணைய தளங்களில் நடக்கும் விவாதங்களுக்கு வலைப்பூவின் ப்ரொபைலில் போட்டோவை இணைத்துக் கொண்டால்தான் எதிராளி உண்மையான நபர் என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இஸ்லாம் பற்றிய விவாதங்கள் என் கண்ணில் பட்டபோது நான் புரிந்து கொண்ட அளவுக்கு பதிலிடுவோம் என்ற ஆர்வத்தில்தான் எவ்வித உள்நோக்கமும் இன்றி வலைப்பூவில் எழுதத் தொடங்கினேன்.
என் தனிப்பட்ட புரிந்துகொள்ளலை முஸ்லிம் வாசகர்கள் சார்பில் என் பதிவில் எழுதிய போது, ஏற்கனவே இஸ்லாத்திற்கு எதிராக அவதூறாகவும் துவேச சிந்தனையுடன் எழுதியும், இஸ்லாமியர்களை கருவருப்பதை தலையாயக் கொள்கையாக் கொண்ட இயக்கங்களின் பின்னனியுடன் எழுதி வரும் வலைப்பதிவர்களை எதிர்கருத்துக்களால் எதிர்கொள்ளும் சூழலில் என்னைப்பற்றிய முழு விபரத்தையும் பொதுவில் அல்லது முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு தருவது (மன்னிக்கவும் இதைத்தவிர நேரடி வார்த்தை எனக்குத் தெரியவில்லை), தனி நபரான, எந்த இயக்கப் பின்னனியுமற்ற எனக்கு தேவையற்ற சிக்கலை உருவாக்கலாம் என்பதாலேயே போட்டோவை இணைப்பதையும், முகவரியை பகிர்ந்து கொள்வதையும் தவிர்த்தேன். மற்றபடி நீங்கள் தவறாக புரிந்துள்ளது போல் மனமின்றியோ அல்லது அநாகரிகமாகவோ அல்ல என்பதை அறியவும்.
இஸ்லாம் பற்றிய உங்களின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்தால் உங்களின் தவறான புரிந்து கொள்ளலை திருத்திக் கொள்வீர்களா? என்று உங்களின் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் கேட்டபோது,”உங்களின் தேடல்களின் பயணம் தொடருகின்றன; ஆனால் நிச்சயம் குழம்பிய பயணி அல்ல″ என்று சொன்னதாக ஞாபகம்.
நிற்க,
நான் ஏற்கனவே சொன்னதுபோல், உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் என் வலைப்பூவிலோ அல்லது தனி மெயிலாகவோ பதிலிடுகிறேன். அதற்கு முன் என் சில கேள்விகளுக்கு உங்களின் நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.
1) “எனக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற உங்களின் பதிவுகளில் “இந்துக்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்” என்று சொல்லி ஏனைய மதங்களை ஒப்புக்காக விமர்சித்து விட்டு, இஸ்லாத்தை மட்டும் விலாவாரியாகவும் ஒருதலைப் பட்சமாகவும் விமர்சித்தது ஏன்? இஸ்லாம் பற்றிய விமர்சனம் மட்டும்தான் உங்கள் எதிர்பார்ப்பாக இருந்ததா?
2) Irshad Manji என்ற கனடா நாட்டு, தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்மணியின் இஸ்லாத்தைப் பற்றி எதிர்மறைக் விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களை மையமாகக் கொண்டு “இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்” என்ற உங்களின் பரிந்துரையை வலைப்பூவில் வைத்து தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நேசகுமார்,நீலகண்டன், ஆரோக்கியம் போன்ற துவேச சிந்தனையாளர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தையும் இந்திய முஸ்லிம்களையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?மற்ற மதங்களை விட இஸ்லாம் விமர்சிக்கப்பட வேண்டும் என்ற உங்களின் அவாவா? அல்லது பிற மதங்கள் விவாதிக்க இலாயக்கற்றவை என்ற எண்ணத்திலா? தயவு செய்து விளக்குங்கள்.
3) நான் இஸ்லாத்தை அறிந்து கொண்டது இஸ்லாமிய நூல்கள் மூலமே என்ற சூழலில் இஸ்லாத்தின் மீதான உங்களின் கேள்விகளுக்கு அவற்றிலல்லாத என் தனிப்பட்ட பதில்கள் எந்தளவு சரியாக இருக்கும் என்று நம்புகிறீர்கள்?
4) உங்களின் இப்பதிவில் இஸ்லாத்தை விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற பேரவாவில் தற்போது பின்னூட்டமிட்டுள்ள நேசகுமார் மற்றும் நீலகண்டன் ஆகியோர் இந்து மதத்தை பற்றி நீங்கள் முன்பு வைத்த கருத்துக்களை ஏற்கிறார்களா? கிறிஸ்தவரான?! ஆரோக்கியம், நீங்கள் கிறிஸ்தவ மதத்தை கைகழுவியது பற்றியும் அதற்கு சொல்லப்பட்ட காரணங்களையும் பற்றி என்ன சொல்கிறார் என்றும் தெளிவு படுத்திவிட்டால் உங்களுக்கு மதம் பிடிக்கவில்லை என்பதற்கான காரணங்களில் சொல்லப்பட்டவை நியாயமாக இருக்கும் என்பதால் இதையும் நீங்களே தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
5) கிறிஸ்தவமதம் சரியில்லை என அம்மதத்தை விட்ட நீங்கள் அதற்கான காரணங்களைச் சொன்னதோடு, இஸ்லாத்தையும் விமர்சித்திருப்பது எந்த வகையில் உங்களின் தற்போதைய புதிய நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது?
6) சிலுவையிலறையப்பட்ட இயேசு பிரானை, கடவுள் காப்பாற்றாமல் கைவிட்டதாகச் சொல்லும் பைபிளின் கூற்றை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு கடவுளால் காப்பாற்றப்பட்டார் என்று சொல்லும் குர்ஆனின் கூற்றை ஏற்பதில் என்ன முரன்பாடு கண்டீர்?
7) கிறிஸ்தவம் பற்றி பாதிரியிடமும், இந்துமதம் பற்றி பூசாரியிடமும், இஸ்லாம் பற்றி ஆலிமிடமும் உண்மையான விளக்கம் கிடைக்காது எனச்சொல்லும் நீங்கள், இஸ்லாத்திற்கு எதிராக எழுதிய சல்மான் ருஷ்டி மற்றும் தற்போதைய கனடா எழுத்தாளர் ஆகியோர் மட்டும் உண்மையை எழுதுவதாக நம்புவது ஏன் என்று விளக்குவீர்களா?
8) எந்த நாட்டிலும் எதிர்க்கப்பட்டாத இஸ்லாமிய எதிர்ப்புவாத எழுத்தாளர்கள் மதசார்பற்ற நாடு என அறியப்படும் இந்தியாவில் எதிர்க்கப்படுவதை நினைத்து ஆதங்கப்பட்டிருக்கும் நீங்கள், இந்திய மொழிகளுள் ஒன்றான பெரும்பாலான இந்தியர்களால் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்திய அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட “ஹிந்தி” மொழியை எதிர்த்தது ஏன்? ஹிந்தி எதிர்ப்பு தமிழுணர்வால் ஈர்க்கப்பட்டு ஏற்பட்ட உந்துததலால் சரியென்றும், அவ்வாறு எதிர்க்கப்பட்டதை இன்றும் நீங்கள் பெருமையாக கருதும்போது, இஸ்லாத்தின் உந்துதால் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்பட்ட கட்டுக்கதைகளை எதிர்ப்பதை குற்றம் சொல்வது முரண்பாடாகத் தெரியவில்லையா?
9) மத நம்பிக்கையாளர்களின் ஒழுக்க நெறிகளும் இதர வாழ்க்கை நெறிகளும் மதக் கிரந்தங்கள் மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மனித நியதிக்குட்பட்டு இறையச்சத்தால் சகமனிதனுக்கு துன்பமிழைக்காமல் வாழ முடியும். எவ்வித கட்டுப்பாடும் இல்லாத யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற கோட்பாடுடைய கடவுள் மறுப்புக் கொள்கையை மனித குலம் முழுவதும் பின்பற்றினால் உலகம் எப்படி நிம்மதியாக இயங்கும் என்று பகுத்தறிப்பூர்வமாக இல்லாவிட்டாலும் உங்களின் நம்பிக்கையின்படி விளக்க முடியுமா?
10) தங்களின் இஸ்லாம் பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறேன் என்று உறுதியளித்திருந்த போதிலும் என் புகைப்படத்தையும் முகவரியையும் வெளியிட்டால்தான் விவாதிக்க இயலும் என்ற நீங்கள், நாகரிகமின்றி நான் மறுத்ததாகச் சொல்கிறீகள். நீங்கள் சார்ந்த நம்பிக்கையின்பால் ஏற்பட்ட வெறுப்பால், நீங்கள் சார்ந்திராத இன்னொரு மத நம்பிக்கையை விமர்சிப்பது எந்த வகையான நாகரிகம் என்று விளக்குவீர்களா?
பி.கு: என் கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதில் வந்தாலும் வராவிட்டாலும் கூடிய விரைவில் நான் உறுதியளித்திருந்தபடி என் பதில்களை வைக்கிறேன்.
அன்புடன்,நல்லடியார்
தருமி Says: after publication. e -->December 12th, 2005 at 8:50 pm e
நல்லடியார்,உங்கள் கேள்விகளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் கழித்துப் பதிலிடுகிறேன். சொந்த வேலை காரணமாக இந்தத் தாமதம். உங்கள் பதிவுகளைத்தவிர வேறு பதிவுகளை - at least இப்போதைக்காவது - வெளியிடப்போவதில்லை. இரண்டு காரணங்கள்: 1. என் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமல்லவா; 2. தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களும், அர்த்தமில்லாத சவால்களும் எனக்குத் தேவையில்லையல்லவா.
தருமி Says: after publication. e -->December 13th, 2005 at 2:45 pm e
நல்லடியார்,
உங்கள் கேள்விகளுக்கான் என் பதிலகள்:
1. பார்க்க - என் முதல் பதிவில் 4-ம் பத்தி.“இஸ்லாம் பற்றிய விமர்சனம் மட்டும்தான் உங்கள் எதிர்பார்ப்பாக இருந்ததா?”//நான் சார்ந்த மதத்தையே விமர்சித்தது, அதுவும் நீள் பதிவுகளில், பார்க்கவில்லையா? அந்த மதத்தைவிடவுமா இஸ்லாமை நான் விமர்சித்துள்ளதாகக் கூறுகிறீகள்?
மொத்தம் 7 பதிவுகளில், பதிவுகள் 1,2,& 4 -இவைகள் கிறித்துவத்தைப் பற்றி; 6 - ம் பதிவு மட்டும் இஸ்லாம் பற்றியது;
“நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த ‘ஆட்டை’யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one?”//- இந்துக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக பலர் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ சொல்லும் பதிலைச் சொல்லமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
2. now, over to nalladiar என்று என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதற்குக் காரணமே உங்கள் பின்னூட்டம் மட்டுமே வரவேண்டும் என்றுதான். ஆதரிக்கவும், எதிர்க்கவுமென நிறைய பின்னூட்டங்கள். நிறுத்தியுள்ளேன்.“துவேச சிந்தனையாளர்களுடன் சேர்ந்து ..”// நான் யாரையும் ‘கட்சி’ சேர்க்கவில்லை; என்ன தேவை எனக்கு?
” பிற மதங்கள் விவாதிக்க இலாயக்கற்றவை என்ற எண்ணத்திலா?”// - எல்லா மதங்களையும்தானே விவாதித்துள்ளேன்.
3. சரியாக இருக்காதுதான். அதைத்தான், என் முதல் பதிவின் 2-ம் பத்தியில்கூறியுள்ளேன்.7-ம் பதிவின் முதல் பத்தியைப் படித்துக் கொள்ளுங்கள்.
4. அவர்களுக்காக நான் பதில் சொல்ல முடியுமா? ஒன்று செய்யலாம். கடைசியாக வந்த நீங்கள் சொல்லும் மூவரின் பின்னூட்டங்களையும், வில்சனின் பின்னூட்டத்தையும் (அதற்கு என் மறுப்பை ஏற்கெனவே தெரிவித்திருந்தாலும்) உதாசீனப்படுத்திவிடுங்கள். அவைகளை நீக்க (இதுவரை பின்னூட்டங்களை நீக்கிய அனுபவம் இல்லாததால், அது என்னால் முடியுமாவென தெரியாது) முயற்சிக்கிறேன். ஏற்கெனவே நான்கு பின்னூட்டங்களைப் பதிவிடாமலே நிறுத்தியுள்ளேன். அவைகளோடு இவைகளையும் சேர்த்துவிடலாம். சம்பந்தப்பட்ட அனைவரும் பெரிது படுத்த வேண்டாம்.
5. முதல் நிலை என் (கிறித்துவ) மதம் பிடிக்காமல் போனது. அடுத்த நிலை - நான் பார்த்தவரை - எதுவும் பிடிக்காமல் போனது. அதற்கு எல்லா மதங்களையும் பற்றி என்னால் முடிந்த அளவு தெரிந்து கொள்ள ஒரு முயற்சி. இதை ஆரம்பத்திலேயே மிகத் தெளிவாகக் கூறியுள்ளேனே!நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். என் தனிப்பட்ட முயற்சி இஸ்லாமை மட்டும் குறி வைத்து அல்ல. என் மதத்தில் நான் கண்ட குறைகளால் வெளிவந்து, அதன்பின்பு ‘சுற்றியும்’ பார்க்க ஆரம்பித்தேன்.
6. ஏற்கெனவே சொல்லிவிட்டேனே… இவைகளை எல்லா மதங்களிலும் இருக்கும் கதைகளாகவே நான் பார்க்கிறேன் என்று.அது சரி, இரண்டில் ஒன்றுதான் சரியென்றால் அது எது என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்ததுதானே. அதை நம்பாததால் இதை நம்பு என்பது சரியான விவாதமா?
7. it is very simple, nalladiyar. ஒரு பாதிரியார் எடுக்கும் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அதை பைபிளில் நான் படிக்க முடியும். எதிர்மறைக் கருத்துக்களையும் படிக்கிறேன்; படித்து நானே ஒரு முடிவுக்கு வருகிறேன். ஏன், பைபிளிலிருந்தும், குரானிலிருந்தும் நான் மேற்கோள்கள் காட்டவில்லையா? அவைகளைக் கடவுளின் வார்த்தைகளாகக் கொள்ளாமல், அதிலிருக்கும் முரண்பாடுகளையோ, என் மனதுக்குப் பொருந்தாத விஷயங்களையோ குறிப்பிடவில்லையா?
8. தலை சுற்றுகிறது. எதற்கும் எதற்குமோ ஏன் இந்த முடிச்சு? மேலும், இதற்கு அங்கேயே பதிலும் கூறியாகிவிட்டது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இது இங்கு தேவையில்லாத ஒரு விவாதம். “ஹிந்தி எதிர்ப்பு தமிழுணர்வால் ஈர்க்கப்பட்டு ஏற்பட்ட உந்துததலால் சரியென்று”..இப்படி யார் சொன்னது; நானா? நம் பெரிய பிரச்சனையே மதங்களையும் அரசியல் படுத்துவதே. இங்கு அது தேவையில்லை.
9. மதங்கள் ஏன், மதங்களின் தேவை என்ன என்று இந்த இறுதிப் பதிவின் இறுதியில் எழுதியுள்ளேனே. பார்க்கவில்லையா? they are just my hypotheses. மதங்களின் தேவையை -வாழ்வின் ஒரு நிலை வரை - நான் சொல்லியிருப்பதைப் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பாருங்கள்.
10. நீங்கள் முகம் காண்பிக்கவேண்டும்; என்னப் பொறுத்தவரை அதுவே நாகரீகம் மட்டுமல்ல, நியாயமும்கூட. இதற்கு எது தடை என்பதும், இந்த மறைப்புக்காரணம் என்னவென்றும் எனக்குப் புரியவில்லை. ஆயினும் அதைக் காரணம் காட்டி உங்களை ஒதுக்குவது எனக்கு நாகரீகமாகத் தெரியவில்லை.
மத நம்பிக்கைகள் யாருடைய தனிச்சொத்தும் அல்லவே. பொது விஷயங்கள் எதுவுமே விவாதிக்கப்படலாமே. அதில் என்ன தவறு? மத நம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்துதலே நாகரீகமற்ற செயலா? அப்படி ஒன்று இருப்பின் நம் சமூகத்தில் நம்மைப் போன்றவர்கள் இந்து மதத்திலேயே தான் இருந்திருக்க வேண்டும். மத மாற்றங்களுக்கு வழியே இல்லாது போய்விடும். கொச்சைப்படுத்தினாலோ, கேவலமாக ஏதும் எழுதினாலோ, தவறான வார்த்தைப் பிரயோகங்களோ, பொய்களோ இதுவரை நான் எழுதியிருந்தால் அதுதான் நாகரீகமற்றது’ அப்படி ஏதும் கண்டிருந்தால் கூறுங்கள். எதிர்மறைக் கருத்துக்களைக் கூறுவதே நாகரீகமற்ற செயல் என்பீர்களாயின்…… எனக்குச் சொல்ல ஒன்றுமேயில்லை.
நல்லடியார்,பலர் பலதடவை கூறியது இப்போது நிஜமாகிறது என்று நினைக்கிறேன். முதல் பதிவின் 3-ம் பத்தியில் கூறியுள்ள நிலைக்கு நீங்கள் வர முடியாதென்றே நினைக்கிறேன். ஆகவே, நம் விவாதங்களில் நம்மால் எந்தவித முடிவுக்கும் வரமுடியாதெனவே தெரிகிறது. ஆயினும் இன்னொரு கேள்வியை முன்வைத்து முடிக்கிறேன்: ஞானபீடம் என்பவர் ஒரே ஒரு முறை மேற்கோள் ஒன்றுடன் பின்னூட்டத்தில் வந்தார் - கிறித்துவத்திற்கு சார்பாக; இந்து மதம் பற்றி யாரும் கேள்வி எதுவும் எழுப்பவே இல்லை; ஆனால் இஸ்லாம் பற்றி எழுதியதற்கு மட்டும் ஏன் இப்படி, இவ்வளவு எதிர்ப்பு என்று கொஞ்சம் தெளிவாக்க முடியுமா?
தருமி Says: after publication. e -->December 13th, 2005 at 3:44 pm e
19-வது பின்னூட்டம் என்னுடையது. அதில், “அவர் தன் பதில்களைத் தரட்டும்; பின்னால் மற்றவர்கள் அதைத் தெளிவு படுத்தவோ, எதிர்வினை ஆற்றவோ செய்யலாம்.” என்று கூறியுள்ளேன். ஆகவே அதற்குப் பிறகு வந்த பின்னூட்டங்களில் neutralஆன் கருத்தோடு வந்த சத்யம் என்பவரது பின்னூட்டத்தைத் தவிர ஏனையவற்றை நீக்கியுள்ளேன். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment