சாதிகள் இருக்குதடி பாப்பா…4
II. இரண்டாம் பகுதி.
ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:
சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை. ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, ‘நம்மைப் போன்றவர்களுங்கூட’ சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் ‘அவன்’ மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு ‘கீழ்சாதிக்காரன்’ எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே ‘ஆண்டை’யாகவும்’ இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் ‘சலுகைகள்’ என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?
இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: ” சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்.” ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக ‘உழைக்கும் வர்க்கமாகவும்’ பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை ‘அறிவாளிகளாகப்’ புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் ‘தகுதி’ இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).
நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.
ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை.*** (*** பின் குறிப்பில் விளக்கம் காண்க.) 266 பேர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ? இது ஒன்றும் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டல்ல. இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண் சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில் - பெயரளவிலாவது - பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் - மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் - வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das - அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? - உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள ‘பென்ச்’சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!
அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும். ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் - அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது - கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.
இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது ‘விளக்குமாறு போராட்டத்தில்’ இந்த ‘வசனம்’ அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்? சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பிலேயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி ‘விகிதாச்சார இட ஒதுக்கீடு’ (proportional reservation) செய்திருந்தால் இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் ‘திறமை’ இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)
¼br /> வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற “நல்லெண்ணமே” இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.
***பின் குறிப்பு:
*** நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை. - இந்தத் தகவல் தவறு. 4 தாழ்த்தப்பட்டோர் நீதிபதிகளாக இருந்துள்ளனர். அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று தவறான தகவலை (திசைகள் இதழில்) கொடுத்தமைக்கு மிக வருந்துகிறேன். ஆயினும், நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் நான் சொன்ன கருத்துக்களில் மாற்றமில்லை - சில வழக்குகளில் உயர் நீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக்குச் சார்பாக நீதி வழங்கியிருப்பினும்.
Pathivu Toolbar ©2005thamizmanam.com
Jul 31 2006 10:11 am Uncategorized
2 Responses
k Says:
August 8th, 2006 at 10:42 pm
RESPECTED SIR,
I HEREBY WISH TO BRING TO YOUR ESTEEMED NOTICE THAT NEEDS YOUR IMMEDIATE ATTENTION AND ACTION.TO STOP WHATEVER DAMAGE DONE ALREADY AND TO RETRIEVE WHATEVER IS POSSIBLE.
IN THIS JUNCTURE I WISH TO EXPRESS MY KUDOS TO THE AUTHOR MR,SHARAD YADAV , RAJYA SABHA M.P AND MANY CONGRATULATIONS TO THE HINDU FOR PUBLISHING HIS COURAGEOUS ARTICLE ON 7-7-2006. APPROPOS THE UNCONSTITUTIONAL POLICY OF DISCRIMINATION PRACTICED BY THE UNION PUBLIC SERVICE COMMISSION IN CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION 2005.A PIECE OF DOCUMENT THAT WAS INCISIVE AND STRIKES AT THE ROOT OF OUR NATION’S MALAISE AND WITHOUT MINCING, ANSWERS THE QUESTION OF MEDIOCRITY IN OUR ADMINISTRATION TOO.
SIR , I AM ONE OF THE SUCCESSFUL CANDIDATES IN THE CIVIL SERVICE 2005 EXAMINATION ,YET A VICTIM OF THE HIGH LEVEL SCANDAL AND DISCRMINATION BY THE PREMIER EXAMINATION CONDUCTING BODY OF THE NATION AS VIVIDLY DESCRIBED BY THE WELL INFORMED AUTHOR MR, SHARAD YADAV.I BELONG TO THE SECTION OF THE SOCIETY THAT HAS BEEN DENIED IT’S RIGHTFUL POSITION BY THE HONORABLE U.P.S.C.
IT IS ONE OF THE MOST SOPHISTICATED AND REFINED SCAM PERPETUATED NOT JUST AGAINST A SECTION OF THE SOCIETY BUT AGAINST THE WHOLE NATION, ITS YOUTH AND THE ASPIRING CHILDREN WHO HAVE A BLIND FAITH ON THE IMPARTIALITY AND FAIRNESS OF THESE SO CALLED CONSTITUTIONAL BODIES. A FRAUD COMMITTED AGAINST AN INNOCENT NATION WHICH HAS BEEN SYSTEMATICALLY DENIED OF AN EFFICENT AND ENLIGHTENED ADMINISTRATION SINCE INDEPENDENCE. THE PEOPLE OF THIS NATION THROUGH THEIR ELECTED GOVERNMENTS AND THEIR SET CONSTITUTIONAL POLICIES BASED UPON SOCIAL JUSTICE DELEGATED TO THESE BODIES THE RESPONSIBILITY OF SELECTING THE BEST SET OF EXECUTIVES TO ADMINISTER THEIR NATION BY A FAIR AND IMPARTIAL METHOD BASED ON THE CONSTITUTIONAL PRICIPLES OF SOCIAL JUSTICE. BUT THAT RESPOSIBILITY AND TRUST HAS NOT ONLY BEEN WANTONLY FAILED BUT THE NATION STANDS CHRONICALLY CHEATED BY THESE ELITE BODIES.
U.P.S.C HAS BEEN ACCORDED RESPECT ALL THESE YEARS NOT BECAUSE IT WAS FAIR AND TRANSPARENT , WORDS WHICH ARE NON- EXISTENT IN THE BOOKS OF THE U.P.S.C ,BUT BECAUSE OF THIS NATIONS GOODNESS IN REPOSING FAITH ON SUCH HIGHER NATIONAL BODIES AND A PUBLIC THAT DOES NOT WANT TO SEE ITS OWN HIGHEST EXAMINATION CONDUCTING BODY DEGRADED BEFORE ITS OWN EYES , AMIDST THE HEAP OF SCANDALOUS NEWS AND REPORTS ON THE VARIOUS STATE PUBLIC SERVICE COMMISSIONS AND OTHER LOWER LEVEL BODIES.
SIR, MYSELF, AS A HUMBLE CITIZEN, AS A CIVIL SERVANT DESIGNATE AND ABOVE ALL AS A PATRIOT, SEEK ANSWERS TO THE FOLLOWING QUESTIONS.
1. WHY DOES THE U.P.S.C CONDUCT THE 2005 CIVIL SERVICE EXAMINATION INTERVIEWS TO THE SC/ST AND BC CANDIDATES ON SEPERATE DATES, THEREBY OPENLY DISCLOSING THE CASTE OF THE CANDIDATES TO THE INTERVIEWERS AND EXPOSING HIM/HER TO THEIR PREJUDICES ? .
IN A SOCIETY THAT IS HIGHLY FRACTURED AND DIVIDED ON COMMUNAL LINES WITH AN UNDER CURRENT OF COMMUNAL PREJUDICES FLOWING AT EVERY LEVEL AND IN EVERY SECTION OF THE SOCIETY , WHY HAVEN’T THE U.P.S.C FOUND A DECENT METHODOLOGY BY WHICH THE CANDIDATE’S CASTE IS NOT REVEALED TO THE INTERVIEWER.WHY DOES IT SEGGREGATE THE CANDIDATES WHO ARE THE PROSPECTIVE FUTURE CHIEF EXECUTIVES ON COMMUNAL LINES, EVEN AT THE TIME OF INTERVIEW ITSELF. IS UNTOUCHABILITY THE ANSWER FOR THIS UNCIVILIZED WAY OF TREATING THESE ASPIRANTS BELONGING TO THE RESERVED CATAGORY . DOES THE U.P.S.C PERPETUATE THE UNCONSTITUTIONAL PRACTICE OF UNTOUCHABILITY CLANDESTINELY. WHY NOT CALL THE CANDIDATES IN THE ORDER OF THEIR ROLL NUMBER OR BY THE ORDER OF THEIR MAINS MARKS OR EVEN BY ALPHABETICAL ORDER.
THE PRACTICE OF SEGGREGATING CANDIDATES ON CASTE LINES DURING THE INTERVIEW IS NOT JUST PRIMITIVE AND BACKWARD BUT SHAMEFUL.
SAD , THAT THE U.P.S.C IS YET TO LEARN THE ESSENCE OF THE INDIAN CONSTITUTION AND MODERN CIVILISATION.
THIS UNETHICAL POLICY IS THE ROOT-CAUSE FOR THE SC/ST CANDIDATES BEING GIVEN AVERAGELY 140 MARKS IN THE INTERVIEW AND THE CANDIDATES BELONGING TO NON- RESERVED CATEGORY GETTING AVERAGELY 200 MARKS.THIS DIFFERENCE OF 60 MARKS IN THE INTERVIEW IS THE KEY INSTRUMENT IN THE HANDS OF THESE WELL ORGANISED COMMUNAL MINDED ELITE COTERIE TO DISCRIMINATE THE CANDIATES BELONGING TO SC/ST WHO ARE TIGHTLY PACKED AFTER THE 350 TH RANK .THE IDEA BEHIND THIS PLAN IS TO KEEP THE OPEN SEATS RESERVED EXCLUSIVELY FOR THE FORWARD CATEGORY CANDIDATES AND CROWNING THEM THE TOPPERS IN IAS AND AS THE SOLE OWNERS OF THE SO CALLED MERIT AND KNOWLEDGE. ON THE OTHER HAND IT PUTS THE OPEN CATEGORY SEATS BEYOND THE REACH OF EVEN A BETTER PERFORMING SC/ST AND BC CANDIDATES. CAN’T ASK FOR A BETTER COMEDY THAN THIS IN THE NAME OF MERIT.
2. WHY HASN’T THE U.P.S.C BE TRANSPARENT IN CONDUCTING THE EXAMINATION .LACK OF TRANSPARENCY BREEDS CORRUPTION.NO ONE KNOWS THE CUT OFF MARK FOR THE PRELIMINARY EXAMINATION FOR CIVIL SERVICES NOR THE MARKS OBTAINED BY THE CANDIDATES ARE REVEALED.WHAT IS THE MAINS MARKS RANKING? IT IS AN EVERLASTING SECRET.WHAT IS THE COMMUNAL REPRESENTATION IN THE INTERVIEW BOARDS?
THE HONORABLE U.P.S.C HAS BEEN BURNING ITS MIDNIGHT OIL TO SEE TO IT THAT EVERY INFORMATION IS KEPT HIDDEN FROM PUBLIC SCRUTINY AND CRITICISM.NON-TRANSPARENCY IS ITS CORE POLICY.THE FINAL MARKS OF THE CANDIDATES CAN BE SEEN IN THE U.P.S.C WEB SITE ONLY BY TYPING THEIR DATE OF BIRTH AND NOT BY THEIR ROLL NUMBER.THIS PREVENTS ONE TO KNOW THE MAINS AND INTERVIEW MARKS OF THE SUCCESSFUL CO- CANDIDATES OR RATHER THE MARKS OF COHORTS BELONGING TO OTHER COMMUNITIES BECAUSE EVERYONE KNOWS THE ROLL NUMBERS OF THE SUCCESSFUL CANDIDATES BUT NOT THEIR DATE OF BIRTH .SO NO CHANCE OF COMPARING THE COMMUNITYWISE PERFOMANCE IN MAINS PAPERS AND THE INTERVIEW. PERHAPS THE U.P.S.C DOES NOT WANT ITS UNSCRUPULOUS HANDIWORKS REVEALED BY ANY MEANS.
WILL THE U.P.S.C COME OUT OF A RANKING LIST BASED ON THE MAINS MARKS OF ALL THE SELECTED CADIDATES EXCLUDING THE DUBIOUS INTERVIEW MARKS . THEN THE DYE WON’T LAST. I WONDER WHETHER THE U.P.S.C HAS SUCH POLICIES AS FOLLOWED BY CERTAIN CENTRAL INSTITUTIONS LIKE NATIONAL INSTITUTE OF TECHNOLOGIES (FORMERLY R.E.C) WHO ALLOT ROLL NUMBERS TO THE CANDIDATES FOR THEIR EXAMS WHOSE CERTAIN DIGITS CAN REVEAL THE COMMUNITY OF THE CANDIDATES TO THE PAPER EVALUATING OFFICIAL.THIS AGAIN IS A DISCRIMINATORY POLICY ELSWHERE, IN ANOTHER ELITE TECHNICAL INSTITUTION IN THIS COUNTRY. DOES THE U.P.S.C FOLLOW ANY SUCH UNSCRUPULOUS METHODS LIKE THE ONE FOLLOWED IN THE N.I.T’S. IT REMAINS TO BE ANSWERED.
3. WHY DOESN’T THE U.P.S.C REVEAL THE RANK LIST WITH THE COMMUNITY RANK SIDE BY SIDE IN ITS FINAL RESULT RELEASED RECENTLY. JUST ONE SCHEDULED CASTE CANDIDATE FIGURES IN THE FIRST 100 RANKS OF THE SO CALLED MERIT LIST.THIS IS A HIDDEN FACT. WAS IT A PREMEDITATED MOVE BY THE U.P.S.C TO COVER UP SUCH GLARING INFORMATIONS WHICH CAN RAISE MANY AN EYEBROWS AND BOUND TO AGGITATE MANY A SANER SOULS.THIS INFORMATION IS REVEALED NOW VERY LATELY BY THE DEPARTMENT OF PERSONEL AFFAIRS AND TRAINING IN ITS OFFICIAL LIST OF SUCCESSFUL CANDIDATES AND BY THEN THE U.P.S.C CAN ESCAPE FROM LEGAL OR ANY OTHER OFFICIAL INTERVENTIONS ON THE PRETEXT OF HAVING WASHED IT’S HANDS OFF, HAVING DONE ITS JOB OF SELECTING THE SUCCESSFUL CANDIDATES. BY THEN THE BATON HANDED OVER TO THE D/O.P.T. INDEED A WONDERFUL, YET A SINISTER PLAN TO SCUTTLE ANY POTENTIAL SCRUTINY OR LEGAL INTERVENTION BY SPARING NO TIME FOR THE AGGRIEVED PARTIES TO SEEK JUSTICE. CONGRATS, FULL MARKS TO THE U.P.S.C.
4. THE CONDUCT OF CIVIL SERVICE EXAMINATION 2005 AND 2006 BY UPSC WAS UNTIDY AND MESSY BY ITS OWN STANDARDS.FIRST THE NEWS OF SOME QUESTION PAPER PROBLEM IN SOME CENTERS RESULTING IN A RE-EXAMINATION FOR THE PUBLIC ADMINISTRATION OPTIONAL CANDIDATES ALL OVER THE COUNTRY A MONTH LATER.THEN CAME THE NEWS OF WRONG ALLOCATION OF I.P.S POST FOR THE SC/ST CANDIDATES.IT REQUIRED AN ENQUIRY AND FEW SUSPENTIONS TOO.SUBSEQUENTLY THE SADDEST PART OF THIS MESS IS THE RESHUFFLING OF THE CIVIL SERVICE 2005 RANK LIST.THIS REARRANGEMENT OF RANKS ALSO AFFECTED ONLY THE SC/ST CANDIDATES. WHY NOT THE ENTIRE LIST? WHO WILL ANSWER TO THE CANDIDATES AFFECTED BY THE ARBITRARY RESHUFFLING OF THEIR RANKS BY THE U.P.S.C?. IS THE U.P.S.C SO CALLOUS TO THE ISSUES CONCERNED WITH SC AND ST CANDIDATES.
5. NOW THE OPEN OR RATHER A BIGGER QUESTION IS, CAN WE ASSUME THAT THE MEDIOCRE , INSENSITIVE ,APATHETIC AND CORRUPT ADMINISTRATION IMPOSED ON THIS NATION ALL THESE YEARS ( ONE OF THE VITAL STIMULANT FOR ANGUISHED PERSONS LIKE ME TO ENTER CIVIL SERVICE) IS BECAUSE OF SUCH UNPROFESSIONAL, UNETHICAL AND OBVIOUSLY UNCONSTITUTIONAL WAYS OF U.P.S.C CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION , BLATANTLY DISCRIMINATING A LARGE SECTIONS OF THE NATION AND VIOLATING NOT JUST THE BASIC POLICIES OF THE GOVERNMENT BUT CHEATING THE INNOCENT YOUTH AND CHILDREN WHETHER DWELLING IN A SMALL HUT OR IN A BIG MANSION , IN EVERY NOOK AND CORNER OF THIS WONDERFUL NATION WHO PROUDLY AND EARNESTLY WISH AND ASPIRE TO BECOME AN I.A.S OR AN I.P.S OFFICER TO SERVE THEIR NATION,who NOT KNOWING THAT SUCH A LARGE AND METICULOUSLY PLANNED SCANDAL IS BEING PERPETUATED AGAINST THEIR HOPES AND HARD WORK BY A SINISTER SET OF COMMUNAL MINDED PEOPLE WITHIN U.P.S.C AND ITS ACCOMPLICE THE DEPARTMENT OF PERSONEL AND TRAINING.A NATION ROBED OF ITS OWN VIBRANT AND DYNAMIC HUMAN RESOURSES.
ALL THESE YEARS THE U.P.S.C HAD TOOK FOR GRANTED THE BLIND TRUST OF THE PUBLIC AND ESTEEMED REPUTATION REPOSED BY THE STUDENT COMMUNITY ON IT.EVEN THE USUALLY VITRIOLIC POLITICAL ESTABLISHMENT DID NOT WISH TO INTERFERE IN THE AFFAIRS OF THE U.P.S.C AND ITS WAY OF CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION.
TOO MUCH FAITH AND TRUST AND INTENTIONALLY KEPT FAR AWAY FROM POLITICAL ,PUBLIC AND MEDIA SCRUTINY AND THE LACK OF GENUINE REFORMS HAVE CAUSED THIS SERIOUS LAPSE OF MORALITY AND EHICS IN THE PHILOSOPHIES AND POLICIES OF THIS INSTITUTION. THE U.P.S.C AND ITS VILLAINOUS PLANS HAS KEPT AWAY THE MERITORIOUS CANDIDATES OF THE RESERVED SECTIONS OF THE SOCIETY ALL THESE YEARS FROM THE TOP RANKS SHOULD BE COUNTED AS ONE OF THE MOST PROLONGED,SINISTER AND NOTORIOUS SCANDALS KNOWN TO THIS COUNTRY.THE DAMAGE DONE TO THE NATION IS IRREPARABLE ON THE ACCOUNT OF UNDESERVING CANDIDATES OF SOME PREVILIGED SECTIONS OCCUPYING THE CHAIR BECAUSE OF THE UNDUE AND UNPRICIPLED FAVOUR SHOWERED UPON THEM AND THE INJUSTICE CAUSED TO THE DESERVING CANDIDATES OF THE BACKWARD SECTIONS OF THE SOCIETY IS UNIMAGINABLE.THIS SINISTER DESIGN SHOULD NOT GO UNANSWERED AND THE SCRIPT WRITERS UNPUNISHED.
A DRASTIC CHANGE IS A MUST TO END SUCH MODERN DAY APARTHIED PERPETUATED BY SUCH HIGHER INSTITUTIONS.CONSTITUTING REFORM COMMITTEES WILL NOT SOLVE THE PROBLEM, BECAUSE SUCH COMMISSIONS ALSO ACT AS THE AGENTS OF THESE COMMUNAL MINDED SECTIONS OF THE SOCIETY AS THEY ARE DRAWN FROM SUCH BIASED SECTIONS OF THE ELITE.IN ADDITION IT IS NOT ENOUGH THAT JUSTICE IS DELIVERDED BUT IT SHOULD BE QUICK AND SEEM TO HAVE BEEN DELIVERED.THIS CANNOT BE EXPECTED FROM A WELL ORGANIZED SET OF THE ‘MERIT’ BRIGADE WHICH SEEMS TO RAPIDLY LOSE FAITH ON MERIT ITSELF BUT IS DEPENDING MORE AND MORE ON SUCH CROOKED DESIGNS TO CONTINUE HAVE AN IRON GRIP OVER THE POWER STRUCTURE OF THIS NATION.
I WISH THE HONORABLE PRESIDENT AND THE FIRST CITIZEN OF OUR GREAT COUNTRY WILL TAKE IMMEDIATE STEPS TO RECTIFY A MAL FUNCTIONING INSTITUTION. YOU ALONE HAVE THE MORAL STRENGTH TO TAKE UP THESE INSTITUTIONS AS THEY ARE NOT THE GOLDEN CALF NOR THE HOLY SPIRIT BEYOND BLASPHEMY TO EXPECT BLIND TRUST BEYOND suspicion .COMMUNAL MINDED PEOPLE HAVE HIJACKED THIS REVERED INSTITUTION .IT HAS TO BE RETRIEVED ,REFOMED AND REJUVENATED .WE THE PEOPLE OF THIS COUNTRY ARE WITH YOU IN THIS ENDEAVOUR TO RESCUE THIS ESTEEMED INSTITUTION AND REASSURE THE HOPES OF MILLIONS OF OUR PATRIOTIC YOUNG CIVIL SERVICE ASPIRANTS ON THE UNION PUBLIC SERVICE COMMISSION , BEFORE THE LAST FEW DROPS OF FAITH ON THE SAYING ‘TRUTH ALONE TRIUMPHS” DRIES UP.
THANK YOU.
YOURS SINCERELY,
A humble citizen who has passed the civil service 2005 examination.
Sivabalan V Says:
August 18th, 2006 at 10:10 pm
தருமி அய்யா,
உங்களின் இந்தப் பதிவை என் பதில் இனைத்தமைக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment