*
*
ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு ஓட்டுப் போட்டாச்சு. அது எல்லாம் முடிஞ்ச பிறகு நடக்கிறதுக்கு உள்ள விஷயம். இப்போ அதுக்கு முந்தி நடக்கிற விஷயம் பத்தினது.
கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு.
வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாமா கூடாதா என்பதுதான் விவாதப் பொருள். ஒரு இளைஞர் மட்டும் என்னோடு கொஞ்சம் உடன்பட்டார். ஆக 50:50 கூட இல்லை; ஒரு 75:25 -ன்னு வச்சுக்குவோம்.
*
* உங்களைப் பெத்து, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக் காலத்தில் கூடவே வைத்திருந்து காப்பாத்துறத விடவும் பிள்ளைகளுக்கு வேறு என்ன பெரிய கடமை இருக்கு?
* பெத்தவங்களை இல்லங்களுக்கு அனுப்புவது செய்நன்றி கொல்றது இல்லியா?
* அப்படி அனுப்பிச்சா அந்த வயசான காலத்தில அவங்க மனசு என்ன பாடு படும்?
* இதே மாதிரி நீங்க பொறந்ததும் உங்கள அனாதை விடுதியில் சேர்த்திருந்தா நீங்க என்ன ஆயிருப்பீங்க?
* பெத்த குழந்தைகளை நல்லா வளர்க்கிறது பெத்தவங்களோட கடமைன்னா, பெத்தவங்களை கடைசிக் காலத்தில் மனங்கோணாம நல்லா வச்சுக்கவேண்டியது பிள்ளைகள் கடமையில்லையா?
-- இப்படியெல்லாம் ஒரு கட்சி.
*
இன்னொரு கட்சியில் --
* பெத்தவங்க பிள்ளைகளை உருவாக்கணும் அப்டிங்கிறதையும், கடைசிக் காலத்தில் பெத்தவங்களை பிள்ளைகள் தங்களோடு வைத்துப் பராமரிக்கணும் அப்டிங்கிறதும் ஒன்றல்ல. வெறு செண்டிமென்ட் வச்சுக்கிட்டு இதைப் பேசக்கூடாது.
* பிள்ளைகளை வளர்க்கிறது, அதுவும் அவங்க சின்ன வயசுல அவங்கள சுமக்கிறதில் பெற்றோருக்கு வலியிருப்பதில்லை; சந்தோஷம்தான். படுத்துக் கொண்டு பிள்ளையை தன் நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை அசிங்கம் செய்தாலும் எந்தப் பெற்றோரும் முகம் சுளிப்பதுண்டா என்ன? அதை நினைவில் வைத்து பிள்ளை வளர்ந்த பிறகு அதை சந்தோஷமாய் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளாத பெற்றோர் யார்? ஆனால் வயதான தாயோ தகப்பனோ படுக்கையே எல்லாமுமாய் ஆகும்போது அதை சாதாரணமாய் - சந்தோஷமாக இல்லாவிட்டாலும் - எடுத்துக் கொள்ள முடியுமா? எடுத்துக் கொண்டாலும் எத்தனை நாளைக்கு அந்தப் பணியை முகம் சுளிக்காமல் செய்ய முடியும்?
* பிள்ளைகளைக் கூட விடுங்கள்; பேரப் பிள்ளைகளை நல்லாயிருக்கும்போது கொஞ்சி விளையாடிய தாத்தா, பாட்டி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானால் எந்த பேரப்பிள்ளை இப்போதும் தாத்தா பாட்டியைக் கொஞ்சும்?
* அதைவிடவும் அவர்கள் காலத்துக்குப் பிறகு தாத்தா பாட்டி நினைவு வந்தாலே அந்தக் கஷ்டமான காலங்கள் அதற்கு முந்திய நல்ல இனிய நினைவுகளைக் கூட அழித்து விடுமே. தாத்தா பாட்டி என்றாலே பின்னாளில் அந்தக் கஷ்டப் படுத்திய நாட்கள்தானே பேரப்பிள்ளைகளின் நினைவில் வரும்.அது தேவையா? அதைவிடவும் இனிய நினைவுகளை மட்டுமே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதில் தங்க வைக்கவேண்டியது பெரியவர்களின் கடமையல்லவா?
* வயதான காலத்தில் எதற்காக மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டும்? காசு கொஞ்சம் கொடுத்து இல்லங்களில் இருந்தால் நாம் பிள்ளைகளுக்குப் பாரமாக இல்லை என்ற நினைவே சந்தோஷம் கொடுக்காதா?
* பிள்ளைகள் சிறுசுகளாக இருக்கும்போது அவர்களுக்காகப் பெற்றோர்கள் பல 'தியாகங்கள்' செய்திருக்கலாம். அதற்காக இன்று பிள்ளைகளும் அதேபோல் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் வாழ்க்கையும், பாசமும் வெறும் வியாபாரமாகி விடாதா? நேற்று உனக்குக் கொடுத்தேன்; இன்று நீ எனக்குக் கொடு என்பதா வாழ்க்கை. நேற்று உன்னைத் தாங்கினேன்; இன்றும் நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன் என்பது தானே நல்ல உறவாக, பாசமாக இருக்க முடியும்?
* இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளோடு பாசமாக இருக்க முடியாதா, என்ன? படிக்கிற காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிள்ளைகளை விடுவதைப் போலத்தானே இதுவும்.
* ஒரு காலத்தில் நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்போது வயதான பெற்றோரை வீட்டோடு வைத்திருப்பது எளிதாயுமிருந்திருக்கும். அப்போது அதுதான் சரியானதாயிருந்திருக்கும். ஆனால் இன்று nuclear family என்றான பிறகு, வாழக்கை ஒரு விரைந்த ஒன்றான ஆன பிறகு என்னையும் உன் தோளில் தூக்கி கொண்டே போ என்று பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் சொல்வது எந்த அளவு சரி? மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையும் மாற வேண்டாமா?
* உண்மையிலேயே பிள்ளைகள் மேல் பாசம் உள்ள பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்குவதற்கு தாங்களாகவே பிள்ளைகளக் கட்டாயப்படுத்தியாவது தயாராக வேண்டாமா?
*
இதில் நான் இரண்டாவது கட்சி..
இப்போ சொல்லுங்கள்.. நீங்கள் எந்த கட்சி?
*
***இப்பதிவு 25 Dec. 06 பூங்காவில் இடம் பெற்றுள்ளது. (6)

//192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY." //
ReplyDeleteநான் இதைப் படிக்கவே இல்லை!
குருமூர்த்தி சொல்ற இந்தக் கோணத்திலிருந்தும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க:
ReplyDeleteGurumurthy put forward his social capital theory, which was well researched by SJM. According to the theory, the biggest government expenditure in the western countries is social security payments. In the USA, it is about 35% to 40%. In India, the family or the society bears the burden of social security, i.e., taking care of elderly citizens, unemployed brothers and sisters. With 65% of households having a single earning member, Indian families contribute to the social capital through which the society sustains by itself. It is unthinkable to remove social security in a country like the USA. It clearly shows that the economy in India is privatized in an area where western economies have failed to do so. Gurumurthy said that, India needs original thinking that fits the current functional economy with respect to a family being the consuming unit rather than an individual. Both capitalism and socialism are two sides of the same coin. Both treat an individual in a society as the consuming unit.
நானும் இரண்டாவது கட்சி தான்
ReplyDeleteதருமிசார்,
ReplyDeleteஇதுபோன்ற விஷயங்களை முடிவு செய்யவேண்டியது அவரவர் நிலமைகளே, மனப்பாங்குகளே.
Having said that, என்னக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும்போது வயட்ஹான காலத்தில் தனிமையில் இருப்பதையே விரும்புவேன். with access to my family of course.
கூடவே இருந்து விரோதம் வளர்க்கிறதவிட தனிமையில் இருப்பதே மேல். என்ன நீங்க தயாராயிட்டீங்களா?
முதுமைக் காலத்தில் குழந்தைகளை விட்டு தனியாக இருக்க நாம் இளமையிலேயே பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் சிறந்த வழி.
ReplyDeleteஇதில் நீங்கள் குறிப்பிடாத இன்னொரு
முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது தருமி.
குழந்தைகள் பெற்றோருடன் ஒரே ஊரில் இல்லாது வேறு ஊர்களில் அல்லது வெளிநாடுகளில் பணி நிமித்தமாகச் செல்லவேண்டிய கட்டாயங்கள் இன்றைக்கு இயல்பான ஒன்றாகி விட்டன. பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதில் முதியோர்களை கவனிப்பது வேலைக்குச் செல்வோருக்கு மேலும் சிரமமாகி விடுகிறது. அப்போது முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் இருந்தால் அது அவர்களுக்கு தனியாக கவனிக்க முடியாது இருப்பதை விடவும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற உணர்வு முக்கியமாகி விடுகிறது.
இதில் ஆறுதலான விஷயம் முதியோர்
இந்த சூழலைப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டதுதான்.
அந்த குடும்ப உறுப்பினர்கள் (முதிர்ந்த பெற்றோர் உட்பட) தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இரண்டை சிபாரிசு செய்கிறேன். இல்லையென்றால் ஒன்றை சிபாரிசு செய்கிறேன்.
ReplyDeleteநாமக்கல் சிபி said...
ReplyDeleteநான் இதைப் படிக்கவே இல்லை! //
இதுதான் நல்ல "பையனு"க்கு அழகு :)
anony,
ReplyDeletethanks for the info
//என்ன நீங்க தயாராயிட்டீங்களா?//
ReplyDelete- சிறில்
ஓ !
நன்றி ராஜராஜன்........
ReplyDelete//...முதியோர்
ReplyDeleteஇந்த சூழலைப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டதுதான். //
எதுக்கு என்னை இப்படி ரொம்ப புகழ்றீங்க..!
சபாபதி சரவணன்
ReplyDelete:)))
சே! தனியா ஒரு 14"டிவி..சின்ன கட்டில்..ஒரே ஒரு ஃபேன்.. அப்பப்ப சாப்பாடு..
ம்ம்...ம்.
//192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY." //
ReplyDeleteநான் இதைப் படிக்கவே இல்லை! //
நானும் தான்.... :-))))
What percentage and which kind of demographics are we talking here when coming to the senior citizens?
ReplyDeleteI think It's little more complicated. With the kind of economic system - [mind that no/little support from the government as social security yet] and the inheritance of legacy considered more than just money, but related to the tradition and cultural heritage, this subject might never suit the people with a self sustaining businesses.
Assume if one of your friend who had finished his schooling with you and did not opt for an employment, but chose to run his familiy business. Does this case apply/ even stand to be suggessted as an option to him??
Beleive me, If an elder had the duty of providing his children and raising his family and if he did that well. No matter what substantiates the reason to move them away, He deserves the RIGHT to DIE in that HOME.
இந்த விடயத்தில் நான் ஒரு conservative
ReplyDeleteமொத கட்சிக்குத்தான் என் ஓட்டு.
தருமி சார் எதுக்கு எங்கேயோ போய்கிட்டு வாங்க நான் தனியாதான் இருக்கேன். என்னா சனிக்கிழமை அன்னிக்கு மட்டும் ;) ஒரு குவாட்டர் எக்ஸ்ட்ரா வாங்கனும் அவ்ளோதானே....
:)))))))))))))))))))))
யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா,போங்க ! இரண்டாவதுதேன் :)
ReplyDeleteமுதியோர் இல்லமோ - மகன் மகள் வீடோ - எங்கிருந்தாலும் - தன் காலில் நிற்க வேண்டும். அடுத்தவ்ர்களை எதிர் பார்க்கக் கூடாது. பிரச்னைகள் இல்லாமல் விட்டுக் கொடுத்து - அவ்வப்பொழுது நலம் விசாரித்து - பண்டிகை காலங்களில் கூடிக் களித்து - இது தான் முதியவர்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
ReplyDeletei support the second party, but its not rigidly It may vary depend on situation as Mr. Cyril said.
ReplyDelete