*
*
ஐயன்மீர், அம்மாமீர்,
notepad-ல் e-கலப்பை வைத்து உழுகத் தெரியும். அப்படி உழுததை பிறகு நகல் & ஒட்டு செய்து பதிவு போட்டுக் கொண்டு காலத்தை நல்லபடியாதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். இப்போ ஒரு சின்ன ஆசை; அதனால் ஒரு ப்ரச்சனை. அதான் புத்தரே சொல்லிட்டுப் போய்ட்டார் - ஆசைதாண்டா கவலைக்குக் காரணம்னு. ப்ரச்சனை என்னன்னா, word-ல போய் சில பல விஷயங்களைத் தமிழ்ல தட்டச்சி வேற சில வேலை செய்யலாமேவென நினச்சி, அங்க போய் தட்டச்சினா கட்டம் கட்டி விளையாடுது. எழுத்து வர மாட்டேங்குது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கலப்பையை வச்சு உழுவுறது மட்டும்தான். தமிழ் தட்டச்சு படிக்கலை. (இனிமே படிக்கிறதாகவும் எண்ணமில்லை !) அதாவது phonetic வச்சி தட்டச்சிறதுதான்.
அதனால மக்களே!
எனக்குத் தெரிஞ்ச கலப்பையை வச்சி தருசு நிலத்தில (அதாங்க - notepad) மட்டும் உழுதுக்கிட்டு இருக்கிற நான் வயக்காட்டுல (அதாங்க - word-ல) எப்படி உழுகுறதுன்னு எனக்குக் கூட புரியறது மாதிரி யாராவது ஒரு புண்ணியாத்மாவாவது சொல்லிக் கொடுங்கப்பா...ப்ளீஸ். போற இடத்துக்குப் புண்ணியமாகப் போகும்.
*
*
எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன். கேள்வி எல்லாம் இருந்தா விக்கியில்தான் கேட்கணும்.
ReplyDeleteகொஞ்சம் விபரங்கள் தேவைப்படுது. தனி உரையாடலுக்கு (Private Chat) வருகிறேன். இருங்கள்.
என்ன வேகம'ப்பா! நம்ம ஆளுக உடனே ஓடியாந்து உதவி பண்ணிட்டாங்க'ல்ல.
ReplyDeleteகுழலி வந்து (தலையில அடிச்சிக்கிட்டு)இது ரொம்ப ஈசியாச்சேன்னு சொல்லிட்டு Arial Unicode MS font தேர்ந்தெடுத்துட்டு உழுகச் சொன்னார்.
தேர்ந்தேன்
அடித்தேன்
word-லும் தமிழ்
என்ன சந்தோஷமுங்க...
ஒரு வரி அடிச்சிட்டு பாத்தா, அங்க நம்ம கொத்ஸ் வந்து நிக்கிறார் - அதே தீர்வோடு..
பதிவு போட்டு பத்து நிமிஷத்துல பதில் கிடச்சிருச்சி..
அவங்களுக்கு நன்றி
இன்னும் யாருக்காவது இந்தப் பயன் கிடைக்கட்டுமே என்பதற்காக இந்தப் பதிவை எடுக்க வேண்டாமென இருத்தியுள்ளேன்.
இது ரொம்ப ஈசியாச்சே,ஓடியாந்து அங்க நம்ம பதிவு பாத்தா சந்தோஷமுங்க...
ReplyDeleteபாத்தீங்களா...எவ்வளவு லேசா ஆயிருச்சு வேலை.
ReplyDeleteநான் word பயன்படுத்துறதில்லை. wordpad தான். அதுல யாரோட உதவியும் இல்லாம உழலாம். அதுவுமில்லாம சேமிக்கைல அளவு கொஞ்சமா இருக்கும்.
ஜிரா,
ReplyDelete//பாத்தீங்களா...எவ்வளவு லேசா ஆயிருச்சு வேலை.//
ஆமாங்க.. ஒரு விஷயம் பிடிபட்டுருச்சின்னா லேசா ஆயிடுதுங்க.
//wordpad தான். அதுல யாரோட உதவியும் இல்லாம உழலாம்.''
என்ன சொல்றீங்க .. புரியலையே. இதுக்கும் word-க்கும் என்ன வித்தியாசம் ...வேணாம், ஒழுங்கா கேட்டிர்ரேன்..என்ன வேற்றுமை? :)
//அதுவுமில்லாம சேமிக்கைல அளவு கொஞ்சமா இருக்கும்.''
அப்படியா?
நன்றி
ஐயா,
ReplyDeleteஉங்க தலைப்பு எனக்கு புரியலை... கொஞ்சம் விளக்கறீங்களா :)
இந்த தலைப்பெல்லாம் தெரியலைன்னு அது சொ. செ.சூ. வச்சிக்கிறமாதிரி. எந்த பா.க.ச. மெம்பர்கள்ட்ட கேளுங்க. உடனே சொல்லிடுவாங்க - கம்ப்யூட்ட கை நாட்டு அப்டின்னு. (இதை முதலில் தயாரித்தளித்தவர்: துளசி )
ReplyDeleteநானும் இப்ப தெரிஞ்சுகிடேன். டாங்சுங்கோ.
ReplyDelete:)
அய்யா
ReplyDeleteநல்ல தலைப்பு!! :))
க்நாலெட்ஜ்( இதுக்குத் தமிழ் என்னவோ?)
ReplyDeleteபண்ணதுக்கு நன்றி தருமி.
புது ப்ளொக்கர் மாற்றம் வயித்தைக் கலக்குது.
அதுக்கும் நட்புவட்டம் ஓடோடிவந்து கை கொடுக்குமுன்னு
பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கேன்.
இப்படிக்கு,
க.கை.நா.# 1
தருமி.. கலக்கல்.. ஆக, இதான் வழியா.. கொத்தனாருக்கும், குழலிக்கும் நானும் நன்றி சொல்லிக்கிறேன் :)
ReplyDeleteஆனா, நானும் வோர்டில் அடிக்கிறதில்லை... நோட்பாட் இல்லைன்னா கூகிள் தான் :)
கோவிச்சுக்காதீங்க கொத்ஸ். அங்க வந்தா வரிசையில நின்னு நம்ம டர்ன் வர்ரது வரை நிக்கணுமேன்னு இப்படி பொது இடத்துல கேட்டேன். உடனே பதில் கிடச்சிருச்சில்லா...
ReplyDeleteவாக்கீசர்,
ReplyDeleteஉங்க பதிவைப் பார்த்தேங்க.
சிறில், சிவ பாலன்,
ReplyDeleteநன்றி.
நான் Word-இல் உபயோகிப்பது TSCu_Paranar (பரணர்) எழுத்துரு.
ReplyDeleteTry Wordpad.
ReplyDeleteSimple.