காலச்சுத்தின பாம்பு கடிக்காம விடாது அப்படிம்பாங்க. இந்ததும் அப்படித்தான் ஆகிப் போச்சு. இந்த weird விஷயம் சுத்துல வருதுன்னு பாத்ததுமே எந்தப் பாவி எப்போ வந்து காலச்சுத்துமோன்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ கோவி.க. வந்திட்டார்.(இப்படி சொன்னா கோவி.க. கோவிக்க மாட்டாருன்னு தெரியும்!)
ஏதோ உன்னிட்ட இருக்கிற நல்ல விஷயத்தை எடுத்துவுடு அப்டின்னா சடார்னு எடுத்து உட்டுருக்கலாம். அவ்வளவு நல்ல விஷயம் உங்கிட்ட இருக்கான்னு கேக்காதீங்க. நல்லதுன்னு நினச்சிக்கிட்டு இருக்கிறது ஒண்ணு ரெண்டு; அதை படக்குன்னு சொல்லிடலாம். இப்போ நம்மளப் பத்தியுள்ள விஷயத்தில எல்லாமே கொஞ்சம் இந்த weird டைப்புதான். அதில எதன்னு எழுதறது அப்டின்னு ஒரு யோசனை. எல்லாம் problem of plenty!
உன்னைப் பத்தி சுருக்கமா சொல்லு'பா அப்டின்னு யாரும் கேட்டா வழக்கமா மேலே இருக்கிற தலைப்பைச் சொல்லிடுவேன். அதான் நமக்குப் பொருத்தமா இருக்கும். அதனால கேட்டிருக்கிற weird பத்தி நிறையவே சொல்லலாம். ஆனா நாளைக்கு தலைய வெளிய காமிக்க முடியாதேன்னு யோசனையா இருக்கு. அதனால சொல்லக் கூடியதா பாத்து ஒரு நாலு,- இல்ல அஞ்சு சொல்லணுமோ, - சொல்லலாமுன்னு துணிஞ்சிட்டேன்.
A clean desk is the sign of a sick mind - இது கல்லூரியில் நம்ம மேசைக்கு முன்னால் ஒரு போஸ்டர் ரூபத்தில எப்பவும் இருக்கும். இல்லைன்னா நம்ம மேசைய பார்க்குறவங்க பதறிடமாட்டாங்களா. நமக்கு நேர் எதிர் மறையான இன்னொரு பேராசிரியர்; அப்படி ஒரு சுத்தமா இருக்கும் அவர் மேசை. எது எதுல இருக்கும்னு மனுஷன் கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடுவார். நானும் அவரும் பேசும்போது 'எத எங்க வச்சேன்னு தேடுறதிலய என் லைஃப்ல பாதி போயிடும்போல' என்றேன். அவர் 'நான் எத எத எங்க வைக்கணும்னு நினைச்சே பாதி லைஃப் போயிருது' அப்டின்னார், ஆகா, அப்படியா எப்படியோ ரெண்டுபேரு கணக்கும் ஒண்ணாத்தான இருக்குன்னு அப்படியே எப்போதும் இருக்கிறதுன்னு ஒரு "நல்ல" முடிவையெடுத்து இன்னைக்கி வரைக்கும் தவறாம (எப்போதும் போல) அப்படியே இருக்கிறேன். ம்னசுதானங்க சுத்தமா இருக்கணும், இல்லீங்களா...!
procrastination - அப்டின்னு ஒரு வார்த்தை படிச்சேங்க. அத அப்படியே வாழ்க்கையில ஒரு லட்சியமா வச்சிக்கிட்டேன். (நாசமா போய்ட்டேன்...) எந்த வேலையையும் உடனே ஆரம்பிச்சோம்; முடிச்சோம்னு கிடையாது. எல்லாமே அந்த eleventh hour rush தான். ஆனா எப்படியோ செய்ய வேண்டியதை செஞ்சிருவேன் - ஆனால் எல்லாமே நம்ம pace தான். ஒரே வார்த்தையில் சொல்லணும்னா முழுச்சோம்பேறி. 'நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை.
பொதுவாகவே ஒரு சண்டைக் கோழி. அதில தார்மீகக் கோபம் அப்டின்னு ஒரு வார்த்தை வேற தெரிஞ்சு போச்சா. அது சும்மா புசு புசுன்னு வந்திரும். நாலு வினாடி இருக்கும்போதே போ.. போ..ன்னு சிக்னலில் கையைக் காமிச்ச தாணாக்கார ஐயாவைப் பாத்து 'நீங்க இப்படி 4 செகண்டு இருக்கும்போது போங்கன்னு சொல்லுங்க; அதனாலதான், நீங்க இல்லாட்டி 7 செகண்டு இருக்குபோதே நாங்க கிளம்புறோம்' அப்டின்னு இன்னைக்குக் காலையில கூட ஒரு போலீஸ்கார ஐயாகிட்ட சொன்னேன். அது என்னமோ அந்த நிமிசத்தில நினைக்கிறத செஞ்சிட்டா, சொல்லிட்டா at least மனசுக்கு ஒரு நிம்மதி. அதே மாதிரி traffic rules மீறுற ஆளுக, பைக்கில போய்க்கிட்டே எச்சி துப்புற மனசப் பிறவிகள், கைத் தொலைபேசிய கழுத்துப் பேசியாக வச்சிக்கிட்டு போற ஜென்மங்கள் எல்லாத்தையும் பார்த்து சவுண்டு உடறது தன்னாலேயே வந்துருது. பின்னால் உக்காந்துகிட்டு வர்ர தங்கமணி எவ்வளவு திட்டினாலும் வாங்கிக் கிட்டு நான் ரோட்ல போற இந்தமாதிரி ஆளுகளைத் திட்டுறது வழக்கம். தங்க மணிக்கு இப்போ ஒன்றரை மாசமா கொஞ்சம் நிம்மதி. ஏன்னா இப்போவெல்லாம் முழு தலைக்கவசம் போட்டுட்டுப் போறதால யாரையும் திட்ட முடியலை; ஒரே சோகமா இருக்கு....
இன்னொரு உடன்பிறந்த வியாதி. வெட்டி அரட்டை. எங்க எப்போ சான்ஸ் கிடச்சாலும் நேரம் போறதே தெரியாது.பிடிச்ச மக்கள் அல்லது பிடிச்ச மேட்டர் கிடச்சுதுன்னு வச்சுக்கங்க.. அது பாட்டுக்கு நேரம் போறது தெரியாம கச்சேரி தொடரும். அதில இன்னொரு வழக்கமும் தொத்திக்கிரிச்சி. என்னன்னா, அதான் devil's advocate வேலை. துறையில எல்லாரையும் 'போட்டுப் பார்த்துக்கிட்டு' இருந்த தலய (Head of the Dept-தான்) அடிப்பட்ட எல்லாருமா உக்காந்து இழவு கொட்டிக்கிட்டு இருப்போம். நான் திடீர்னு அவர் சைடு எடுத்து பேச ஆரம்பிப்பேன்; மக்களுக்கு வர்ர வெறுப்பைப் பார்க்கணுமே ...
நம்ம மாணவர்கள் கிட்ட அனேகமா விடைபெறும் சமயத்திலோ அல்லது வேறு சரியான தருணத்திலேயோ ஒண்ணு கட்டாயமா சொல்றது உண்டு: Take me as a model in your life; and you would be a great success. (இந்த இடத்தில் கொஞ்சம் pause ...) But the only thing, take me as a negative model. அப்புறம் இவ்வளவு மோசமான ஆள்ட்ட படிச்சிட்டு போற பையன் நல்ல படியா வரணுமே அப்டிங்கிற ஒரு கரிசனம் ஒரு வாத்தியாருக்கு இருக்கணுமா இல்லையா?
இப்படியே சொல்லிக்கிட்டு போகலாம்; ஆனால் தாங்க மாட்டீங்க. போனா போகுது உட்டுர்ரேன். வர்ட்டா ...
ஓ! அடுத்து ஒரு அஞ்சு பேர மாட்டி உடணும்ல... ம்ம்..ம் யாரந்த பாவப்பட்ட மனுசங்க ..
1. ஜோ
2. திரு
3. குழலி
4. வரவனை
5. பாலபாரதி
(சே! எப்படிங்க இப்படி? முதல் ஆளு ஒரு எழுத்துக்காரர்; இரண்டாவது இரண்டெழுத்துக்காரர்... எப்படி அமைஞ்சி போச்சு, பாருங்க ..!)
ஐயா, சாமிகளா நீங்க ஏற்கெனவே மாட்டியிருந்தீங்கன்னா, இன்னொரு ஆளை substitute-ஆ இறக்கிவுட்டுடுங்க..
//1. ஜோ
ReplyDelete2. திரு
3. குழலி
4. வரவனை
5. பாலபாரதி
(சே! எப்படிங்க இப்படி? முதல் ஆளு ஒரு எழுத்துக்காரர்; இரண்டாவது இரண்டெழுத்துக்காரர்... எப்படி அமைஞ்சி போச்சு, பாருங்க ..!)
//
ஆகா. அருமை அருமை. இப்படி பட்டியல் போட்டு இதை மட்டும் சொல்லியிருந்தாலே போதுமே. எங்க ஊர் பெரியவர் எவ்வளவு லவ்ஸின்னு தெரிஞ்சிருக்குமே. :-)
தருமி ஐயா. பதிவை இன்னும் முழுசா படிக்கலை. யாரைக் கூப்டீங்கன்னு பாக்க கீழே வந்தேன். இதைப் பாத்தவுடனே சொல்லணும்ன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
அட மொத்தமா என்னைப்பத்தி சொல்லியிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன். அந்த தார்மீகக் கோபத்துல மட்டும் கொஞ்சம் நான் கம்மி தான். முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட அவ்வளவா வச்சிக்க மாட்டேன். ஆனா பொண்டாட்டிப் பிள்ளைங்ககிட்ட தார்மீகக் கோபம் (அது உரிமையில வர்றதுன்னு சொல்லிக்குவேன்) நல்லாவே வரும். எங்க வீட்டுத் தங்கமணிக்கும் தார்மீகக் கோபம் வரும். உங்களை மாதிரி பேசாம கேட்டுக்க இன்னும் அனுபவம் பத்தலைன்னு நெனைக்கிறேன். :-)
ReplyDeleteதலைக்கவசமோ முழுக்கவசமோ................
ReplyDeleteநீங்க பாட்டுக்குத் திட்டுறதைத் திட்டுங்க.
தங்கமணிக்கு கேட்டா என்ன கேக்காட்டா என்ன? :-))))))
இவ்வளவு எழுதிய நீங்கள் பிராமணீயத்துக்கு எதிராக ஏன் களம் இறகினீர்கள் என்று எழுதவில்லையே? அவர்கள் என்ன நீங்கள் உண்ட உணவிற்கு பாதகம் இழைத்தனரா? இல்லை இரண்டகம் செய்தனரா?
ReplyDeleteமாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு..... ஹி ஹி சுத்த விசயத்துல அப்படியே என்னை மாதிரி.... கலக்குங்க.... கோத்து விட்டுட்டிங்க.....
ReplyDeleteநன்றி
உங்க குணம்னு நீங்க சொல்லற எல்லாமும் துண்டு துண்ட்ட இங்கேயும் இருக்கு.
ReplyDeleteகவசம் போட்டுக் கிட்டிங்களா.
அப்போ அப்போ கழட்டித் திட்டிவிட்டு மறுபடி மாட்டிக்கலாமே.
:-)
ஆஹா..மாட்டிகிட்டேனா..அவ்வ்வ்.
ReplyDelete//மொத்தமா என்னைப்பத்தி சொல்லியிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன். //
ReplyDeletecome on, kumaran
you cannot be that lousy. :)
துளசி, வல்லிசிம்ஹன்,
ReplyDeleteநன்றி.
துளசி,
அப்டில்லாம் தங்கமணிய கண்டுக்காம இருக்க முடியுமா என்ன?
வல்லி,
துண்டு துண்டா இருந்தா சமாளிச்சிக்கலாம்; இங்க மொத்தமால்ல இருக்கு!
ஜோ, குழலி,
ReplyDeleteஎப்டி அமுக்கியாச்சா ஈரத்துண்டு போட்டு ...
அனுபவி ராசா .. அனுபவி
ஆதிசேஷன்,
ReplyDelete//இவ்வளவு எழுதிய நீங்கள் ...//
எவ்வளவு ..?
//பிராமணீயத்துக்கு எதிராக ...அவர்கள் என்ன ...//
உங்கள் கேள்வியில் உள்ள தவறு நம் பதிவுலகத்தில் உள்ள பொதுத் தவறு. ப்ராமணீயத்தை எதிர்ப்பது நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயம். உங்களுக்கு பார்ப்பனீயம் - பார்ப்பனர்கள், ப்ராமணீயம் - ப்ராமணர்கள் இதற்குரிய வேற்றுமை புரியாததால், அல்லது அதைப் புரிய மறுப்பதால் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். கொஞ்சம் தூக்கத்திலிருந்து எழுங்களேன் - எவ்விதத் தூக்கமாயினும்.
டெல்ஃபின்,
ReplyDelete//i am just not able to believe this piece of your writing... // வேற வழியில்லைங்க .. உண்மைகளை நம்பித்தான் ஆகணும். ஏன் நம்ப முடியலைங்கிறீங்க?
தருமி சார்,
ReplyDeleteஎவ்வளவு அருமையான பழக்கங்கள்! இதைப்போய் வியர்டு கியர்டுன்னுகிட்டு...
அதது அந்தந்த எடத்துல இருந்தா அது மியூசியம். வீடு வீடா இருக்கனும்னா இருக்கறது இருக்கற எடத்துல இருக்கக்கூடாது. உங்களுக்கு ஆபீசுலலும் அப்படித்தானா?
//பொதுவாகவே ஒரு சண்டைக் கோழி. அதில தார்மீகக் கோபம் அப்டின்னு ஒரு வார்த்தை வேற தெரிஞ்சு போச்சா. அது சும்மா புசு புசுன்னு வந்திரும். //
அப்படின்னா எங்கூட ஒரு நாளு இருந்தீங்கன்னா போதும்! என்னைத் திட்டியே ஓய்ஞ்சிருவீங்க பார்த்துக்கிடுங்க.. :)
// பிடிச்ச மக்கள் அல்லது பிடிச்ச மேட்டர் கிடச்சுதுன்னு வச்சுக்கங்க.. அது பாட்டுக்கு நேரம் போறது தெரியாம கச்சேரி தொடரும்//
ஒரு நாளைக்கு என்கிட்ட மாட்டாமயா போயிருவீங்க! அன்னைக்கு பார்த்துக்கலாம் யாரு பொங்கல் போடறதுல பயங்கரமான ஆளுன்னு...
நீங்க தேடியெடுத்திருக்க முத்துக்கள் அத்தனையும் (முத்துவை விட்டுட்டீங்க...) இந்த பொங்கல் போடறதுல கரைகண்டவங்க... எல்லாரும் ஒன்னுசேர்ந்து பேச ஆரம்பிச்சோம்னா நாலுநாளைக்கு அதகளமா இருக்கும்! :)))
// I am a lousy guy//
ReplyDeleteNo one had any doubt on that score, Mr. Professor.
bala
/// bala said...
ReplyDelete// I am a lousy guy//
No one had any doubt on that score, Mr. Professor.
bala///
yep. with some people i become lousier even!
இளவஞ்சி,
ReplyDelete//முத்துவை விட்டுட்டீங்க...// மனுஷன் இப்ப ரொம்ப பிசின்னு பேப்பர்ல போட்டிருக்கு.
//உங்களுக்கு ஆபீசுலலும் அப்படித்தானா?//
காலேஜ்லதான் அப்படி. வீட்டுல தங்கமணி பாத்துக்குவாங்க. நான்; என்னால 'முடிஞ்சதை' செஞ்சு வச்சிருவேன்.
//வீடு வீடா இருக்கனும்னா இருக்கறது இருக்கற எடத்துல இருக்கக்கூடாது//
எனக்குப் பிடிச்ச தத்துவம், இளவஞ்சி.
//ஒரே வார்த்தையில் சொல்லணும்னா முழுச்சோம்பேறி. 'நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை.
ReplyDelete//
சோம்பேறித்தனத்துக்கான விளக்கம் 'நாளை' என்பது சிறப்பாகவும், உண்மையாகவும் இருக்கிறது. இது சமயத்துல புரியாமல் போவதால் தள்ளிப் போடுகிறோமோ ?
நான் கூட நாளைக்கு படிச்சுட்டு மறுநாள் பின்னூட்டமிடலாம் என்று இருந்தேன். 'நாளை'வரிகளைப் படித்ததும் முதுகில் தழும்பு.
:)
வசமா மாட்டினேன்... சீக்கிரம் வறேன். அதான் கடைசி நேரத்தில எழுதுற ஆளாச்சே நான் :).
ReplyDeleteபொதுவாகவே ஒரு சண்டைக் கோழி. அதில தார்மீகக் கோபம் அப்டின்னு ஒரு வார்த்தை வேற தெரிஞ்சு போச்சா. அது சும்மா புசு புசுன்னு வந்திரும். .... அது என்னமோ அந்த நிமிசத்தில நினைக்கிறத செஞ்சிட்டா, சொல்லிட்டா at least மனசுக்கு ஒரு நிம்மத//....ஹி,ஹி,நானும் அதே மாதிரிதான்.தார்மீகமோ இல்லையோ,சண்டைக் கோழி என்பதில் சந்தேகம் இல்லை.கார்த்திக் அம்மா
ReplyDelete//ம்னசுதானங்க சுத்தமா இருக்கணும், இல்லீங்களா...!//
ReplyDeleteஆமாங்க. அடுத்த முறை நம்ம வீட்டாண்ட வரும் போது இதை மட்டும் கொஞ்சம் சத்தமா சொல்லிட்டுப் போயிடுங்க.
//நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை.//
நாளை வெறும் கனவு அதை நாம் ஏன் நம்பணும் நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் என்பது எல்லாம் பாட்டுக்கு வேணா சரியா இருக்கும். நமக்கெல்லாம்....ஹிஹி
//அதில தார்மீகக் கோபம் அப்டின்னு ஒரு வார்த்தை வேற தெரிஞ்சு போச்சா. அது சும்மா புசு புசுன்னு வந்திரும்.//
அதுதான் நம்மளும். ஆனா நாம எதாவது சொன்னா அதைப் புரிஞ்சுக்காம எதாவது பட்டம் கட்டி சொன்னதையே ஹைஜாக் பண்ணிடறாங்க, அதையே நீங்க சொன்னா பாராட்டறாங்க. இதுல கருத்து நாகரிகம், எழுத்து நாகரிகம் அப்படின்னு... சாரி சாரி எங்கயோ போயிட்டேன் இல்ல. நமக்கும் தார்மீகக் கோபம் வரும்.
//வெட்டி அரட்டை. //
இது மட்டும் கிடையாது. In fact, இப்படின்னா என்னான்னே தெரியாது.
ஆமாம் நாலுதான் சொல்லி இருக்கீங்க. அஞ்சு சொல்ல வேண்டாமா?
//முதல் ஆளு ஒரு எழுத்துக்காரர்; இரண்டாவது இரண்டெழுத்துக்காரர்... எப்படி அமைஞ்சி போச்சு, பாருங்க //
The best on the spot jokes are the most rehearsed!! ஆனா நல்ல ஐடியாதான். :))
பொன்னியின்செல்வன்,
ReplyDeleteவராதவங்க வந்திருக்கீங்க மொத மொதல்ல... வாங்க அடிக்கடி..
அது என்ன நம்ம பதிவர்களில் முக்காவாசிப் பேர் சோம்பேறித்தனம் அல்லது கோபத்தில ஒரேமாதிரி இருக்கிறோம் போல் தெரிகிறதே...
கொத்ஸ்,
ReplyDeleteஇதான வேணாங்கிறது .. உங்களுக்கு வெட்டி அரட்டை மட்டும் கிடையாதா? உங்க பின்னூட்டங்களில் நடக்கிறது அதில்லாம வேற என்னவாம்?
//....எதாவது பட்டம் கட்டி சொன்னதையே ஹைஜாக் பண்ணிடறாங்க, அதையே நீங்க சொன்னா பாராட்டறாங்க...//
கும்மி சத்தம் குறைஞ்சா சரியாயிடும்னு நினைக்கிறேன். கும்மியடிக்கும்போது யாராவது ஒருத்தர் beat மாறி கும்மியடிச்சிட்டா அதுக்குப் பிறகு மத்தவங்களும் அதே beat-க்கு மாறிடராங்கன்னு நினைக்கிறேன்.
//The best on the spot jokes are the most rehearsed!! //
இப்படியா காலை வார்ரது..?
கோவி.க. கோவிக்காம வந்ததுக்கு நன்றி.
ReplyDeleteதிரு,
ம்ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்களா ...வாங்கய்யா..வாங்க.
அது என்னமோ..இந்த மாதிரி சுழற்சி விளையாட்டுகளில் மாட்டும்போது வர்ரது தலைசுத்தல்தான். ஆனா, மாட்டி விடும்போது ரொம்ப ஜாலியா இருக்கு !! :)
ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறத
ReplyDeleteweird . :).. இங்கே இணைக்கப்படுகிறது
No one had any doubt on that score, Mr. Professor.
ReplyDeletebala///
yep. with some people i become lousier even//
True imdeed, Professor.Your prejudices are too well known for you to deny them and masquerade as a balanced person.
Bala
வண்டி ஓட்டிக்கிட்டே எச்ச துப்பரது வியர்டு.
ReplyDeleteஅவன திட்டரது வியர்டா?
பாலா,
ReplyDeleteநீங்க எழுதுற நடை நல்லாவே இருக்கு..
ஒரு உதவி செய்யணுமே; எனக்காகத் தனிப் பதிவுகூட நீங்களே போட்டுக்கங்க; வேணாங்கலை. ஆனால் என் பதிவுக்கு வரவேணாமே, சரியா. கொஞ்சம் frequency ஒத்து வர மாட்டேங்குது. அவ்வளவுதான். முடிஞ்சா இத ஆதிசேஷன் அய்யாட்டையும் சொல்லிடுங்க - முடிஞ்சாதான்.
SurveySan,
ReplyDeleteநீங்கதான் தீர்ப்பு சொல்லணும் ...
இதுதான் நான் படித்த உங்களின் முதல் பதிவு... அதுபோய் இந்த பதிவா அமையுனுமா... ;(?
ReplyDeleteஉங்களின மற்ற பதிவுகளை படிச்சிட்டு வரேன்...