Thursday, April 26, 2007

213. பதிவர் சந்திப்பு - கொசுறுகள்

எத்தனை எத்தனை கோணங்கள். நடந்த நிகழ்வு ஒன்றுதான். ஆனாலும் எத்தனைக் கோணங்கள். என் பங்குக்கு என் கோணத்தை நான் சொல்ல வந்தேன். அவை கொஞ்சமே என்றதால் கொசுறுகள் என்றேன்.

இதற்கு முந்திய பதிவர் சந்திப்பில் ஒரு நல்ல உதயம் - தொழில் நுட்பம் சார்ந்த உதவிக்கென்றே ஒரு குழு அமைந்(த்)தது. இம்முறை நடந்து சந்திப்பில், அது இன்னும் மேலும் பதிவர் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டுமென்ற உணர்வு தொடர்புள்ள பதிவர்களிடம் இருந்தமையும், அதனை மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டுமென்ற எண்ணம் வலுப்பட்டமையும் நல்ல ஒரு காரியம்.

அடுத்து, வளர்ந்து வரும் பதிவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் பொருட்செறிவும் பற்றாது என்பதால் மேலும் நம் தமிழ்ச் சமூகத்திலிருந்து பதிவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் இலவசமாக மென்பொருளைப் பரவலாக மக்களுக்குக் கொடுக்க முயல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது, பதிவர் கெளதம் அதற்குரித்தான முதல் கட்ட பணியாக, பதிவுகளைப் பற்றியும், எளிதாக ஒரு பதிவை ஆரம்பிக்கும் நடைமுறை பற்றியும் மக்கள் தொலைக்காட்சி மூலம் செய்தியைப் பரப்புவதற்கு உதவுவதாகக் கூறியது மகிழ்ச்சியான காரியம். இப்பணி சிறப்பாக நடந்தால் மக்களிடையே பதிவுலகம் பற்றிய ஒரு தெளிவு பிறக்கும்; பதிவுலகின் வீச்சு நீளும்.

மூன்றாவதாக, மக்களிடையே பரவலாகத் தெரியப்பட்டுள்ள ஊடகங்களின் வெளிச்சம் நம் பதிவுலகத்தின் மேல் விழுவது இன்னும் இந்த உலகம் விரிவடைய ஏதுவாக இருக்கும். அந்த 'வெளிச்சத்தை' நம் ப்திவுலகம் மேல் விழவைப்பதற்காக உழைத்து, நடைமுறைப் படுத்திய சென்னைப் பதிவர்களுக்குப் பொதுவாகவும், சிறப்பாக யெஸ்.பா. விற்கும் என் நன்றிகள்.

13 comments:

  1. மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் நாள் நேரம் முன்னதாகவே சொன்னால் அனைவரும் காண ஏதுவாகும்.
    அடுத்த பதிவர் சந்திப்பு இன்னும் அதிக பதிவர் எண்ணிக்கையில் அமையட்டும்.

    ReplyDelete
  2. பர்ஸ்ட் நாந்தேன்..

    ஏற்கெனவே அல்லாரும் ஏப்ரல்-22-ஐ அக்கக்கா பிச்சுப்புட்டாக..

    பெரியவர் நீங்க.. 'இனமானப் பேராசிரியர்' வேறய்யா.. அதான் நச்சுன்னு பெருமாள் கோவில் புளியோதரை மாதிரி சிறுசா இருந்தாலும் மூணு மணி நேரத்தை ரத்தினச் சுருக்கமாச் சொல்லிப்புட்டீக..

    நீங்க நினைச்சதும், எதிர்பார்க்கிறதும் கண்டிப்பா நடக்கும்.

    அதுக்கு ஐயாவோட சீரிய வழிகாட்டுதலும் இருந்தாலே போதுங்க.. நன்றிங்கோ..

    ReplyDelete
  3. வணக்கம் தருமி.உங்கள் எண்ணங்கள் நிறைவேற எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கண்மணி,
    'மொட்ட பாஸ்'கிட்ட சொல்லிடுறேன்.

    உண்மைத் தமிழன்,
    பிந்திட்டீங்க..!

    //நீங்க நினைச்சதும், எதிர்பார்க்கிறதும் கண்டிப்பா நடக்கும்//
    கொஞ்சம் மாற்றி, நாம நினைச்சதும், எதிர்பார்க்கிறதும் கண்டிப்பா நடக்கும் ...

    ReplyDelete
  5. டெல்பின்,
    இப்போதைக்கு ஏதுமில்லீங்க.


    துர்கா,
    உண்மைத் தமிழனுக்குச் சொன்னதே இங்கும்.

    நன்றி.

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா!!
    :):)
    நாம நினைச்சதும் எதிர்பார்க்கிறது கண்டிப்பா நடக்கும்

    ReplyDelete
  7. நீங்கள் தான் என்று தெரியாமல் கை குலுக்கி வெளியேறியதற்கு... இப்போது வருந்துகிறேன்.சிறிது நேரம் பேசியிருக்கலாம்.
    உங்கள் பழைய வலைப்பூ என்னுடைய கணினியில் அப்படியே சில சமயம் உறைந்து போனதால் பின்னூட்டம் இட முடியவில்லை.
    மக்கள் தொலைக்காட்சி பார்க்கமுடியாதவர்கள் என்னுடைய பதிவில் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. மன்னிக்கணும் பா.பா.,
    உங்கள் தனிமடலை இங்கு இட வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் உங்களை எப்படி தொடர்புகொள்வதென்று தெரியவில்லை.
    ஆகவே, -
    நன்றி சொல்லவும், இன்னும் சில ஐயங்கள் இதுபற்றிக் கேட்டறிய உங்கள் தனிமடல் முகவரி கேட்கவும் இதைப் பதிப்பித்தேன். உங்கள் profile-ல் முகவரி தேடினேன். தெரிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  9. வினையூக்கி,
    நல்ல நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு - மகிழ்ச்சி. ஓர் இளைஞரிடமிருந்து வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. வடுவூர் குமார்,

    நன்கு பேசி அறிமுகம் செய்துகொள்ளாமல் விட்ட ஓரிருவரில் நீங்களும் ஒன்றாகி விட்டது குறித்து எனக்கும் குற்ற உணர்வும், வருத்தமும் இருந்தது.

    ReplyDelete
  11. My apologies for the delay in responding Dharumi... will revert back soon with a post :D

    ReplyDelete
  12. பாபா,
    நன்றி.

    அந்த அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete