*
அரசியல் கலப்பில்லாத பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நாட்டின் பெரும் பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைக்கவே முதன் முதல் நரசிம்மராவால் அரசியலுக்குக் கொண்டுவரப் பட்டார். இதனாலேயே அவர்மீது எனக்கு மிக்க மரியாதை உண்டு. ஆனால் இந்த அணு சக்தி விவகாரத்தில் ஏனிப்படி அவரும், அவரது அரசும் கட்சியும் ஒரு முரட்டுத்தனமான நிலைப்பாடை எடுக்கின்றன என்பது புரியாத புதிராகவே முதலிலிருந்து இருந்து வந்துள்ளது.
நாட்டின் நீர்நிலைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பதில் குறைந்த செலவில் நிறைய சக்தி பெருவதற்கானச் சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக இருப்பினும் ஏன் பல சூழலியல் காரணங்களுக்காக எதிர்க்கப்படும் அணு ஆலைகளுக்கு மிகப் பெரும் செலவு செய்யவே நமது அரசு எப்போதும் தயாராக இருக்கிறது என்பதே புரியாத ஒரு காரியம். இவ்வளவு செலவு செய்தும், வானத்திலிருந்து கொட்டுவதுபோல் மின்சாரம் நமக்கு குறைந்த செலவில் கிடைக்கப் போவதில்லை; தன்னிறைவையும் காணமுடியாது; அணு ஆலைகளின் அழிக்கவோ மாற்றவோ முடியாத அதன் கழிவுப் பொருட்கள் என்ற பல பிரச்சனைகள் இருந்த போதிலும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து அணுஆலைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் அரசியல் புரியவில்லை.
123 திட்டம், Hyde Act, N.S.G., என்று நித்தம் நித்தம் ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மட்டுமே பயன்பட்டன. இருபக்க விவாதங்களிலும் இருந்த தெளிவின்மையோ, அவரவர் சார்புக்கேற்றவாறு தரப்பட்ட விவாதங்களோ மேலும் மேலும் தெளிவின்மையை மட்டும் கொடுத்து வந்துள்ளன. ஆனால் 05,செப்ட். இந்து நாளிதழில் வந்துள்ள ஒரு கட்டுரை நம் அரசின், அயல்நாட்டமைச்சரின் எல்லாவற்றிற்கும் மேலாக நமது பிரதம மந்திரியின் “பொய்களை” வெளிப்படுத்துகின்றன. கட்டுரை ஆசிரியர்: Brahma Chellaney, a professor of strategic studies at the Centre for Policy Research in New Delhi, is the author, among others, of “Nuclear Proliferation: The U.S.-India Conflict.
கட்டுரையின் தலைப்பு: Revelations unravel hype and spin
தொடுப்பு: http://www.hindu.com/2008/09/05/stories/2008090553271100.htm
அமெரிக்க அரசின் இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய சில குறிப்புகள் –இதுவரை வெளியிடப்படாமலிருந்தவைகள் – இப்போது வெளிவந்துள்ளதையும் அந்தக் குறிப்புகளுக்கு முற்றிலும் எதிர்மறையானக் கருத்துக்களை நமது அரசும் பிரதம மந்திரியும் நம்மிடம் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதையும் இக்கட்டுரை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்:
அமெரிக்க அரசின் குறிப்பு 1: இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை எவ்வகையிலும் எரிபொருளை இந்தியாவுக்குத் தொடர்ந்து தருவதற்கு வற்புறுத்தாது.
ஆனால் மன்மோகன்சிங் தொடர்ந்து அமெரிக்கா எரிபொருளைத் தரும் என்று ஆகஸ்ட்13, 2007-ல் மக்களவையில் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் குறிப்பு 2: இந்தியா எக்காரணம் கொண்டும் எப்போதும் அணு சோதனைகளை நடத்தக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: நமது அணுசோதனகளுக்கு எவ்விதத் தடையுமில்லை.
அமெரிக்க அரசின் குறிப்பு 3: 123 உடன்பாடு Hyde ACtக்கு உட்பட்டது.
ஜூலை 2, 2008 – மன்மோகன்சிங்: 123 உடன்பாடு Hyde Actக்கு உட்பட்டதல்ல.
அமெரிக்க அரசின் குறிப்பு 4: எரிபொருள் தருவதோ எப்போது வேண்டுமென்றாலும் நிறுத்துவதோ அமெரிக்க அரசின் விருப்பத்திற்குரியது.
ஆகஸ்ட் 13, 2007 – மன்மோகன்சிங்: விரிவான பல அடுக்கு ஆலோசனைக் கட்டங்கள் இருப்பதால் எரிபொருள் நிறுத்தப்படும் சாத்தியமில்லை.
அமெரிக்க அரசின் குறிப்பு 5: எதிர்காலத் தேவைக்கேற்ப எரிபொருளை சேமித்து வைக்கும் உரிமையை அமெரிக்க அரசு கொடுக்காது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமெரிக்க அரசு உதவும்.
அமெரிக்க அரசின் குறிப்பு 6: 123 உடன்பாட்டிலிருந்து வேறுபடும் எந்த முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: உடன்பாட்டிற்குப் பிறகும் எந்த புது மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது.
அமெரிக்க அரசின் குறிப்பு 7: உடன்பாட்டின்படியோ இல்லை அதைவிடுத்தோ அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அணுசக்தியைப் பற்றிய எந்த புதுதொழில் நுட்பங்களையும் பெற உதவாது.
மன்மோகன் சிங்: இந்த உடன்பாடு இந்தியா புது தொழில்நுட்பங்களைப் பெறவும் நாட்டை தொழில்மயமாக்கலில் முன்னேற்றவும் உதவும்.
அமெரிக்க அரசின் குறிப்பு 8: தமிழ்ப் படுத்த சிரமம். அங்கேயே போய் வாசித்துக்கொள்ளுங்களேன்.
ஆக, இந்த எட்டு அமெரிக்க அரசின் குறிப்புகளுக்கு நேர் எதிரிடையாக நம் பிரதமர் அளித்துள்ள விளக்கங்களை வாசித்தபோது எட்டும் எட்டப்பனும் என்ற தலைப்பு மனதில் தோன்றியது. நம் நாட்டை அடகு வைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. எத்தனையோ எரியும் பிரச்சனைகள் இருந்தும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும் ஏனென்று தெரியவில்லை; தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
*
அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டை அடகு வைக்கும் முயற்சி, அமெரிக்காவின் ஏமாற்று வேலை என்பது மிகச்சரி. மன்மோகன்சிங்கின் சொந்த விருப்பம், சுயநலம் மற்றும் லாப சிந்தனைகளின் வெளிப்பாடு...
ReplyDeleteவணக்கம் தோழரே
ReplyDeleteஉங்களுக்கு இணைப்பு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
Correct.
ReplyDeleteவிழித்திருப்போம். எதையும் சந்தேகிப்போம்.
//தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.//
ReplyDeleteஅவங்களத்தான் நானும் தேடறேன்.
இது ஏதோ பெரிய அளவுல நடக்கர தில்லுமுல்லாதான் தெரியுது.
சம் பாஸிபிலிட்டீஸ்:
1) சிங்கின் செக்ரட்டரி சிங்குக்கு அல்வா கொடுத்திட்டாரு. "சிங் நான் படிச்சிட்டேன் எல்லாம் சரியாயிருக்கு. இதுதான் டீட்டெயில்ஸ்"
2) சிங் mis-interprets. ( but, he is not Laloo :) )
3) சிங் & கோவுக்கு பஹாமாஸ் பக்கட்த்துல ஒரு தீவு லஞ்சமா கொடுத்திட்டாங்க. இந்த அக்ரீமண்ட் முடிஞ்சதும், சிங் & கோ, நாட்டை விட்டு ராவோட ராவா குஜிலீஸோட அங்க போய் செட்டில் ஆயிடுவாங்க.
4) அணு ஆயுதம் இந்தியாவுக்கு ரொம்ப அவசியம்னு சிங்கு நெனைக்கறாரு. 1000 பொய்யச் சொல்லி கல்யாணம் பண்ர மாதிரி.... ;)
5) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
விஜய் ஆனந்த்,
ReplyDeleteமன்மோகன்சிங் அரசியல் கலப்பில்லாதிருந்ததும், பெரிய கல்வியாளராக இருந்தமையாலும் பதவிக்கு வந்த பின்பும் பெரிய அவதூறுகள் ஏதுமின்றி இருப்பதும் அவரது மேல் மிக்க மரியாதை வைக்கக் காரணமாயிருந்தது. ஆனாலும் இந்தப் பதிவில் உள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும்போது மிகுந்த மனஉளச்சலோடும் குற்ற மனத்தோடுதான் இந்த தலைப்பை வைத்தேன்.
நீங்கள் சொல்வதுபோல் முழுக்குற்றமும் அவர்மீதுதான் இருக்குமா என்ற கேள்வி இன்னமும் உள்ளது.
superlinks,
ReplyDeleteஇப்படி ஒரு தொடுப்புகளுக்கென்றே ஒரு பதிவா? நன்றாக உள்ளது. நன்றி
கலையரசன்,
ReplyDelete//விழித்திருப்போம். எதையும் சந்தேகிப்போம்.//
அதன் பின் ... ???
surveysan,
ReplyDelete//அவங்களத்தான் நானும் தேடறேன். //
நம்ம தேடி முடிக்கிறதுக்குள்ள ...
என்ன சார் இன்னும் சின்னபுள்ளத் தனமா காரணம் தேடிகிட்டு இருக்கிங்க!
ReplyDeleteநம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதே பார்த்தோமே!
அது தான் காரணம்
பெரிய பெரிய சூட்கேஸ்
The NYT தலையங்கம் ...
ReplyDeleteA Bad Deal
ஒரு முக்கியமான விஷயத்த உட்டுடீங்க
ReplyDelete"We believe the Indian government shares our understanding of this provision"
roughly translates to
-"இந்திய அரசாங்கத்துக்கு இது எல்லாம் தெரியும் என்று நம்புகிறோம்"
இந்தியா இப்போது கிட்ட தட்ட ஒரு லட்சத்தி சொச்சம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கிறது. power for all by 2012 படி இரண்டு லட்சம் மெகா வாட் 2012 இல் தேவை. தண்ணீர், சூரியன் வாயிலாக மின்சாரம் தயாரிப்பதில் பல சிரமங்கள் உள்ளன
ReplyDelete1) கூடுதல் நிதி சுமை
2) வெயில் காலத்தில் தண்ணீர் வராது. மழை காதில் வெயில் வராது
3) நம் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பக்கத்து மாநிலங்கள் சுத்தமாக தண்ணீர் தருவதில்லை
4) நிலம் கயகபடுத்துவதில் பிரச்சனை (tato-singur பிரச்சனைகள் பல இடங்களில் உண்டு)
நிலகரி வழி மின்சாரத்தில் இன்னும் பல பிரச்சனைகள்
1) நூறு வருடங்களில் இந்தியாவில் எல்லா கரியும் காலியாகிவிடும்
2) CO2 காரணமாக புவி வெப்பமடைதல்(globl warming) அதிகரிக்கும்
3) இந்தியாவில் மிக சிறந்த வகையான கரிகள் கிடையாது
காற்றலை வாயிலாக மிக குறைந்த அளவு மின்சாரம் மட்டும் தான் தாயரிக்க முடியும். அதுவும் இப்போது பல தனியார் நிறுவனங்கள் இதில் புகுந்து விட்டன..
அணு உலைகளை தவிர்த்து விட்டு இவை மூலமாக மின் உற்பத்தி செய்தால் 2012 இல்லை 3012 ல கூட நமது உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்த முடியாது.
அணு உலைகளின் சிறப்பு
1) ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு இடத்துல அணு உலை அமைக்கலாம்.. ஏன் கப்பல கூட அமைக்கலாம்
2) குறைந்த செலவில் அதிக மின்சாரம்
3) குறைந்த எரி பொருளில் அதிக மின்சாரம்
ஒரே பிரச்சனை கழிவுகள்
ஆனால் அனல் மின் நிலையங்கள் வெளியிடும் CO2 வின் பாதிப்பு தான் இப்போது உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது அணு உலை கழிவுகளில் சிக்கல்கள் கம்மி தான்.
போட்டுக்க செருப்பு இல்லைன்னு கால வெட்டிக்க முடியுமா?
அந்த நிலைமை தான் இப்போ 123 ஒப்பந்ததுலையும்
அணு மின்சாரத்துக்கு போறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம், இப்ப தயாரிக்கிற மின்சாரம் தேவையனவங்களுக்கு போய் சேருறது கெடயாது. தயாரிக்கிற மின்சரதுல 38% அம்பேல். "TRANSMISSION LOSSES" 14-18% தான். மீதி எல்லாம் திருட்டுலையே போய்டுது. திருட்டுல நம்பர் 1 நம்ப சிறு தொழிற் சாலைகள்..அடுத்து அரசியல் கூட்டங்கள். இந்த திருட்ட தடுத்தாலே போதும்.. பெட்டி பெட்டியா நம்பிக்கை வாக்கு எடுப்புல செலவு பண்ணத மின் திருட்ட தடுக்க செலவு பண்ணிருந்தா USA கிட்ட எதயும் அடகு வச்சிருக்க வேண்டிய நிலைமை வந்துருக்காது..
வாழ்க ஜனநாயகம்.
இந்தியா இப்போது கிட்ட தட்ட ஒரு லட்சத்தி சொச்சம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கிறது. power for all by 2012 படி இரண்டு லட்சம் மெகா வாட் 2012 இல் தேவை. தண்ணீர், சூரியன் வாயிலாக மின்சாரம் தயாரிப்பதில் பல சிரமங்கள் உள்ளன
ReplyDelete1) கூடுதல் நிதி சுமை
2) வெயில் காலத்தில் தண்ணீர் வராது. மழை காதில் வெயில் வராது
3) நம் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பக்கத்து மாநிலங்கள் சுத்தமாக தண்ணீர் தருவதில்லை
4) நிலம் கயகபடுத்துவதில் பிரச்சனை (tato-singur பிரச்சனைகள் பல இடங்களில் உண்டு)
நிலகரி வழி மின்சாரத்தில் இன்னும் பல பிரச்சனைகள்
1) நூறு வருடங்களில் இந்தியாவில் எல்லா கரியும் காலியாகிவிடும்
2) CO2 காரணமாக புவி வெப்பமடைதல்(globl warming) அதிகரிக்கும்
3) இந்தியாவில் மிக சிறந்த வகையான கரிகள் கிடையாது
காற்றலை வாயிலாக மிக குறைந்த அளவு மின்சாரம் மட்டும் தான் தாயரிக்க முடியும். அதுவும் இப்போது பல தனியார் நிறுவனங்கள் இதில் புகுந்து விட்டன..
அணு உலைகளை தவிர்த்து விட்டு இவை மூலமாக மின் உற்பத்தி செய்தால் 2012 இல்லை 3012 ல கூட நமது உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்த முடியாது.
அணு உலைகளின் சிறப்பு
1) ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு இடத்துல அணு உலை அமைக்கலாம்.. ஏன் கப்பல கூட அமைக்கலாம்
2) குறைந்த செலவில் அதிக மின்சாரம்
3) குறைந்த எரி பொருளில் அதிக மின்சாரம்
ஒரே பிரச்சனை கழிவுகள்
ஆனால் அனல் மின் நிலையங்கள் வெளியிடும் CO2 வின் பாதிப்பு தான் இப்போது உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது அணு உலை கழிவுகளில் சிக்கல்கள் கம்மி தான்.
போட்டுக்க செருப்பு இல்லைன்னு கால வெட்டிக்க முடியுமா?
அந்த நிலைமை தான் இப்போ 123 ஒப்பந்ததுலையும்
அணு மின்சாரத்துக்கு போறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம், இப்ப தயாரிக்கிற மின்சாரம் தேவையனவங்களுக்கு போய் சேருறது கெடயாது. தயாரிக்கிற மின்சரதுல 38% அம்பேல். "TRANSMISSION LOSSES" 14-18% தான். மீதி எல்லாம் திருட்டுலையே போய்டுது. திருட்டுல நம்பர் 1 நம்ப சிறு தொழிற் சாலைகள்..அடுத்து அரசியல் கூட்டங்கள். இந்த திருட்ட தடுத்தாலே போதும்.. பெட்டி பெட்டியா நம்பிக்கை வாக்கு எடுப்புல செலவு பண்ணத மின் திருட்ட தடுக்க செலவு பண்ணிருந்தா USA கிட்ட எதயும் அடகு வச்சிருக்க வேண்டிய நிலைமை வந்துருக்காது..
வாழ்க ஜனநாயகம்.
வால்பையன், தென்றல், & அரவிந்தன்
ReplyDeleteநன்றி
//2) வெயில் காலத்தில் தண்ணீர் வராது. //
ReplyDeleteவற்றாத நதிகளில் எடுக்கும் மின்சாரத்தைப் பற்றிக் கூறுகிறேன். அதோடு காற்று இருக்கும்போது காற்றாலை என்பதுபோல் நீர் இருக்கும்போது நீரிலிருந்து மின்சாரம். அவ்வளவே.
//3) நம் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பக்கத்து மாநிலங்கள் சுத்தமாக தண்ணீர் தருவதில்லை//
நாம் பேசுவது நாட்டைப் பற்றி.
//1) நூறு வருடங்களில் இந்தியாவில் எல்லா கரியும் காலியாகிவிடும்//
அதுவரை...
//1) ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு இடத்துல அணு உலை அமைக்கலாம்.. //
ஓ! அப்டின்னா ரொம்ப safeஆக ஆகிவிடுமோ .. என்னங்க?
//அணு உலை கழிவுகளில் சிக்கல்கள் கம்மி தான்.//
என்ன இப்படி எளிதா சொல்லிட்டுப் போய்ட்டீங்க?
//2) குறைந்த செலவில் அதிக மின்சாரம் //
நெஜமாவா சொல்றீங்க? ரொம்ப சரியா மாத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.
மிகச்சரியாக எழுதியிருக்கிறீர்கள் !
ReplyDeleteஎன்னய்யா இப்பிடிப் பயமுறுத்துறீக!!!!
ReplyDeleteகவுண்டமணி ஒரு படத்துல வசனம் சொல்வாரு..."செர்மன் பொண்டாட்டியோ..சிங்கப்பூர் பொண்டாட்டியோ...சப்பான் பொண்டாட்டியோ..இந்தியப் பொண்டாட்டியோ...பொண்டாட்டீன்னு வந்துட்டாலே அவுக வாயக் கட்டவே முடியாது"
அது மாதிரி... படிச்சவரோ படிக்காதவோ...(கோயிலை) இடிச்சவரோ...இடிக்காதவரோ...அரசியல்வியாதின்னு வந்துட்டாலே....அவுக கையைக் கட்டவே முடியாது போல....
அனல் மின் நிலையங்கள் இன்னும் நிறைய திறந்தால் கரி நூறு வருடம் இல்லை 50 வருடத்தில் காலி ஆகிவிடும். அதுக்கு அப்பறம் 'அணு' தான். இப்போதே australia வில் இருந்து நிலகரி இறக்குமதி தொடங்கியாச்சு.
ReplyDeleteகதிர் வீச்சு கட்டு படுத்தாமல் வெளியிட்டால் மட்டும் தான் சுற்று சூழல் கேடு. ஆனால் CO2 வால் எப்போதுமே கேடு.
அணு உலை அமைப்பதற்கு மட்டும் தான் செலவு அதிகம்.(infrastructure). அதுக்கு அப்பறம் எரிபொருள் செலவு குறைவு.
ஆனால் hydro இன்னும் பல ஆறுகளில் நடைமுறை படுத்தப்படவில்லை.
அமெரிக்காவும் தொடர்ந்து எரிபொருள் தருவதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க வில்லை. ஆதலால் அணு உலைகளுக்கு செல்வதற்கு முன் hydro விற்கும் solar kum செல்வதே சிறந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் அணு வழி மின்சாரம் இல்லாமல் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அப்போது அமெரிக்காவிடம் தான் கையேந்த வேண்டும்.
இன்னொரு சந்தேகம்
ReplyDeleteஅணு ஒப்பந்ததால நமக்கு எந்த லாபமும் இல்லன எதுக்கு NSGla இருக்குற சில நாடுகள் நமக்கு குடுக்குற சலுகைய எதிர்க்கணும்.நமக்கு அமெரிக்கா கடைசில ஆப்பு வைக்க போது , அதனால நமக்கு உதவி பண்ற நல்ல எண்ணத்துல தான் அவங்க இப்படி பண்றாங்களா?
இத நம்பவே முடியலையே பா
அப்புறம் சமீபத்துல TOIla சூரிய ஒளி வழி மின்சாரம் பத்தி ஒரு article போட்டுருந்தான்
The cost of production through coal is around rs3-4 per megawatt whereas in case of solar it is around rs15-16 and it might come down a bit in few years.
நெனச்சு பாருங்க சூரியனோட சக்திய பயன் படுத்தி நம்ம வீட்ல ஒரு AC இல்ல பிரிட்ஜ் ஒடுச்சுன நம்ம சூரியனுக்கே ஆப்பு வச்ச மாறி ஆச்சுல
Thanks to Tharumi for this post.
ReplyDelete