Monday, October 27, 2008

271. பதிவுலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு

*

பதிவுலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு. ஆமாங்க, நானும் பதிவனாகி ரெண்டரை ரெண்டேமுக்கா வருஷம் ஆகப் போகுது. இது ரொம்ப புதுசா இருக்குங்க. இதுவரைக்கும் பதிவுலகில் இப்படி நடந்து நான் பார்க்கவே இல்லை. மனசு ரொம்ப கவலையாயிருக்கு. ஏன் ..? என்ன ஆச்சு நம் மக்களுக்கு அப்டின்னு மனசு ரொம்ப கிடந்து அடிச்சிக்கிது.

விளையாட்டுத்தனமா இருந்து பார்த்திருக்கிறேன். அப்போகூட இப்படி கிடையாதே! அதே மாதிரி ரொம்ப சீரியஸா இருப்பாங்க; அப்போதும் இந்த தடவை மாதிரி நடந்ததே கிடையாதே! பின் ஏன் இப்படி இப்ப இருக்காங்கன்னு தெரியலையே. யாரைக் குறை சொல்றதுன்னும் தெரியலை. இதில் தனிப்பட்ட பதிவர்களை நோவதில் எந்தப் பயனுமில்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு பதிவுலகத்தின் பொதுக்குணத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலாகவே பார்க்கிறேன். ஆனாலும் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இப்படியெல்லாம் நடக்கலாம், நடக்க முடியும் என்று நான் எப்போதும் நினைத்தும் பார்த்ததில்லை.

இப்படி நடந்ததற்காக யாரைக் குறை சொல்வது என்றும் புரியவில்லை. 'அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன்' என்பதாகத்தான் ஒவ்வொருவரும் இதற்குரிய பதிலாகத் தருவார்கள் என்பதும் எனக்குப் புரிகிறது. ஆனாலும் அப்படி ஒரு பதிலால் மனம் சமாதானமடைய மறுக்கிறது. எனக்கென்ன என்றும் பேசாமல் என் வழியைப் பார்த்துக் கொண்டும் போகமுடியவில்லை. இத்தனை நாட்களாய் இல்லாமல் இன்று ஏன் இப்படி என்ற கேள்வியை மறக்கவோ மறுக்கவோ மனம் தயாராக இல்லையே; நானென்ன செய்வது?

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்லி வைத்துக் கொண்டு அமைதி காப்பதாகத்தான் படுகிறது. இது யாரோ ஓரிருவர் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம். அவர்களே ஒரு குழுவாகச் செயல்படுகிறார்களோ என்ற ஐயம் கூட எனக்கு. ஆனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவோ, குற்றம் சாட்டவோ நான் தயாரில்லை. இதை ஒரு பொது விஷயமாக, நம் பதிவுலகத்தின் பொதுக் குறையாகவே நான் பார்க்கிறேன். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வருத்தமோ சந்தேகமோ இல்லைதான். இருந்தாலும் இதை எல்லோரும் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.

பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டவேண்டுமே; கட்டியாக வேண்டுமே. இல்லாவிட்டால் இதே ஒரு தொடர்கதையானால் நாளைய பதிவுலகம் நம் எல்லோரையுமே எள்ளி நகையாடாதா? குறை சொல்லாதா? அப்போது நாம் என்ன பதில் சொல்ல முடியும்? நம் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்ள முடியும்? இந்தக் கவலையின் உந்துதலாலே இதை இப்போது உங்கள் எல்லோர் முன்னும் பொதுவாக வைக்கிறேன். மனம் திறந்து இதைப் பற்றி யோசியுங்கள். நாம் எல்லோரும் இதைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் நிற்கிறோம். ஒரு கால கட்டாயத்திலும் இருக்கிறோம்.

நடந்தது நடந்து விட்டது; இனி நடப்பதாவது நல்லதாக இருக்கட்டும் என்பார்கள்; நானும் அந்த எண்ணத்தில்தான் என் தனிப்பட்ட மனக்குமுறலை, மன அழுத்தத்தை, மனப் பாரத்தை உங்கள் எல்லோர் முன்னும் இறக்கி வைக்க நினைக்கிறேன். நீங்களே நினைத்துப் பாருங்கள்; உங்கள் மனசாட்சிக்கு முன் நான் வைக்கும் கேள்வியை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். எப்படி இது நடந்தது; இனி இதுபோல் நடக்கலாமா? என்று நீங்களே உங்கள் உள்மனத்தினை சோதித்துப்(introspect) பாருங்கள்.

நீங்கள் தரும் பதில் எதுவாயினும் இருக்கட்டும். ஆனால் அது நியாயமான பதிலாக, எல்லாவற்றையும் அளந்து பார்த்து தரும் பதிலாக இருக்கட்டும். அதோடு நீங்கள் தரும் பதில் இனி நம் பதிவுலகத்தை வழி நடத்தக் கூடிய பதிலாக இருக்கட்டும். ஆகவே பொறுமையோடும், நல்ல தெளிந்த சிந்தனையோடும், நடு நிலையோடும், நாம் தரும் இந்தப் பதில் பதிவுலகத்தின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு காரியம் என்பதை மனத்தில் ஆழத்தில் இருத்திக் கொண்டு பதில் தாருங்கள். PLEASE!

தீபாவளியும் வந்து இதோ முடிந்துகொண்டிருக்கிறது.எத்தனை எத்தனை படங்கள் வெளியாயிருக்கும். ஆனாலும் இன்னும் எந்த ஒரு படத்திற்கும்கூட விமர்சனப் பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் ஏன் இன்னும் வெளியாகவில்லை? ஏன்? ஏன்? என்னாயிற்று? பதிவர்களே சிந்தித்துப் பாருங்கள். ஏனிந்த மெளனம்? படம் வெளியாவதற்கு முன்பேகூட விமர்சனம் எழுதும் பதிவர்கள் இருப்பார்களே அவர்களுக்கெல்லாம் என்னாயிற்று? சுடச் சுட விமர்சனம் என்றெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் பதிவர்கள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தின் இந்த மெளனத்தின் பின்னணி என்ன? இந்தப் பின்னடைவுக்கு நாமெல்லோரும் பொறுப்பேற்க வேண்டாமா? நடந்த தவறுக்கு வருந்த வேண்டாமா? நடந்த தவறைத் திருத்த வேண்டாமா? சொல்லுங்கள் பதிவர்களே, சொல்லுங்கள் .... :(

65 comments:

  1. கோவி கண்ணன் எழுதியிருந்தாரே ;)

    ReplyDelete
  2. தீயவன், மேகம் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வந்திருக்கும் சமயத்தில் இப்படியாகப்பட்ட வறட்சி நிலவுவது கண்டிப்பு கலந்த வருத்தத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
  3. நீங்க கூட மொக்கை எழுதுவீங்களா. அப்ப நாங்க் என்ன பண்றது.

    மதுரை மைந்தனான நீங்கதான் ஒரு டொரினோவையோ ஒரு புரிட்டீயோ குடிச்சிட்டு முத திரை விமர்சனம் எழுதனும் அப்பதான் மதுரைக்கு அழகு.:)

    ReplyDelete
  4. //தீபாவளியும் வந்து இதோ முடிந்துகொண்டிருக்கிறது.எத்தனை எத்தனை படங்கள் வெளியாயிருக்கும். ஆனாலும் இன்னும் எந்த ஒரு படத்திற்கும்கூட விமர்சனப் பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் ஏன் இன்னும் வெளியாகவில்லை? ஏன்? ஏன்? என்னாயிற்று? பதிவர்களே சிந்தித்துப் பாருங்கள். ஏனிந்த மெளனம்? படம் வெளியாவதற்கு முன்பேகூட விமர்சனம் எழுதும் பதிவர்கள் இருப்பார்களே அவர்களுக்கெல்லாம் என்னாயிற்று? சுடச் சுட விமர்சனம் என்றெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் பதிவர்கள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தின் இந்த மெளனத்தின் பின்னணி என்ன? இந்தப் பின்னடைவுக்கு நாமெல்லோரும் பொறுப்பேற்க வேண்டாமா? நடந்த தவறுக்கு வருந்த வேண்டாமா? நடந்த தவறைத் திருத்த வேண்டாமா? சொல்லுங்கள் பதிவர்களே,//

    ஏன்?

    ஏன்?

    ஏன்?

    நானும் கேட்டுக்கிறேன்! ஒரு படத்துக்கும் வர்லை (காலையிலேர்ந்து வாட்ச் பண்ணிட்டேன்! 1ம் இல்ல!)

    ReplyDelete
  5. இதான் சமாச்சாரமா? நாங்கூட என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். அதெல்லாம் நம் பதிவர்கள் கடமை ஆற்றிட்டாங்களே?

    ReplyDelete
  6. நல்லதா ஏதாவது இருந்தாப் பேச மாட்டோமா? அப்புறம் ஏகன் விமர்சனங்கள் ஒண்ணு ரெண்டு வந்தது போல் இருக்கே!

    ReplyDelete
  7. :)

    I've seen one review abt "Aegan" from Kovi.Kannan :)

    ReplyDelete
  8. எனக்கு ஒன்றும் புரியவில்லை உண்மையாகவே... :-(

    ReplyDelete
  9. :))

    வரிக்கு வரி ரிப்பீட்டு!!

    பதிவர்களின் இப்போக்கை கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்!!

    ReplyDelete
  10. ஹா... ஹா... ஹா. ஏங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பொறுக்கலையா, அதுக்காகவெல்லாம் இப்படியா உசிப்பேச்சி பார்க்கிறது.

    வேண்டாம் தருமியாரே, ரொம்ப எக்சைட் ஆகாதீங்க யாரும் இன்னும் அது போன்று சுடச் சுட சட்டை கிழிஞ்ச கையோட படத்தை பார்த்திட்டு பதிவெழுதலயேன்னு நினைக்காதீங்க, எந்தவொரு முடிவுக்கும் வந்திராதீக, வருவாங்க பாருங்க...

    பாவங்க நீங்க, ஏமாறப் போறீகளே :).

    ReplyDelete
  11. தீபாவளியன்று என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள்(ஏப்ரல்).

    ReplyDelete
  12. எல்லோருமே தீபாவளிப் படங்களைப் பார்த்து நொந்து போய் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஏற்கெனவே கோவி.கண்ணன் 'ஏகன்' விமரிசன்ம் போட்டுட்டாரு.
    ஆனாலும் ரொம்ப விவரமய்யா நீர்..நாலு இளிச்சவாய்ப்பதிவர்கள் படம் பார்த்து விமரிசனம் போடணும். அதைப் பார்த்துட்டு நல்ல படத்துக்கு மட்டும் ரிசர்வ் பண்ணிப் பார்க்கணும். நல்ல எண்ணமய்யா உமக்கு....

    ReplyDelete
  13. ஆமாம் காலம் எல்லாம் கெட்டுத் தான் போச்சி...நீங்க எல்லாம் மொக்கை போட ஆரம்பிச்சிட்டீங்க..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. ஐயா...

    அடக்க முடியலை... சிரிப்பதான்..!! ;)

    PS: எத்தனை படம் ரீலிஸ் ஆச்சி??

    ReplyDelete
  15. நல்லா நறுக்குன்னு நாக்கைப் புடுங்கிக்கறமாதிரி கேட்டுருக்கீங்க!!!

    எழுதணுமுன்னுதான் தோணுது. ஆனால்.....படம் இன்னும் எனக்கு வந்து சேரலையே(-:

    நான் படத்துக்குப் போகமாட்டேன். அது இங்கே என்னைத் தேடிவரணும் என்ற இறுமாப்பு எனக்கு:-)

    ReplyDelete
  16. திரு தருமி!

    ரசித்தேன்!

    நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டுமே! தமிழர்களை திருந்த விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!

    ReplyDelete
  17. ஆகா வாங்க
    அடேயப்பா எத்தன வருசமாவுது உங்கள கண்டு
    என்ன தெரியுதுங்களா?

    என்னானச்சு பதிவர் மத்தியில
    என்ன சொல்ல வாரீங்கன்னு புரியவில்லை

    வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறுன கதையா?


    நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க

    ReplyDelete
  18. தருமி சார். குசும்பு ஜாஸ்தியாவே இருக்கு. என்னவோ ஏதொன்னு வந்தேன்:)

    ReplyDelete
  19. //தீபாவளியும் வந்து இதோ முடிந்துகொண்டிருக்கிறது.எத்தனை எத்தனை படங்கள் வெளியாயிருக்கும். ஆனாலும் இன்னும் எந்த ஒரு படத்திற்கும்கூட விமர்சனப் பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் ஏன் இன்னும் வெளியாகவில்லை? ஏன்? ஏன்? என்னாயிற்று? பதிவர்களே சிந்தித்துப் பாருங்கள்.//

    தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே, ஏகன் விமர்சனம் எழுதி சூடான இடுகையில் வந்தும் சென்றுவிட்டது.

    தூங்கிட்டிங்களோ !

    ReplyDelete
  20. இந்த தீபாவளிக்கு இரண்டு திரை படங்கள் தான் வெளியீடு. சேவல் மற்றும் ஏகன்.

    சேவல் படத்தில் கதாநாயகி சரி இல்லை, எனவே அந்த திரைபடத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சென்னையில் ஒரு பிரபல திரை அரங்கில் தீபாவளி அன்று 5 காட்சிகள் என்று விளம்பரம் செய்து 4 காட்சிகள் போட்ட விஷயம் தெரியும் அல்லவா.


    ஏகன் படத்தை உலகத்தமிழார்கள் பெரும்பாலும் புறக்கணித்து உள்ளனர். ஏகன் அஜித் இலங்கை தமிழர் இன்னல்களுக்கு நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம். அஜித் கஷ்ட பட்டு நடித்தாலோ , தயாரிப்பாளர் கஷ்ட பட்டாலோ நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்.


    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  21. Indha maadhiri 'podi vechchu' ezhudharadha ellaarum niruththanum.

    appadhaan, padhivulagam uruppadum

    ;)

    ReplyDelete
  22. ஹி..ஹி.. வந்ததே 4 படம் .அதுல 2 ஊர் பேர் தெரியாத படங்கள் ..ஒண்ணு பாதை மாறி போன பரத்தின் மற்றொரு மசாலா ,ஹரியின் இயக்கத்தில் ..இன்னொண்ணு நடன இயக்குநரின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இந்தி படத்தில் காப்பி ..இதுக்கு விமர்சனம் ஒண்ணு தான் குறை ..ஹா ஹா ஹா.

    ReplyDelete
  23. :-))))...

    ரொம்ப சீரியஸா ஆரம்பிச்சபோதே மைல்டா டவுட்டு வந்தது...:-)))..

    கோவி அண்ணன் பதிவு நீங்க பாக்கலியா??

    ReplyDelete
  24. //தீபாவளியும் வந்து இதோ முடிந்துகொண்டிருக்கிறது.எத்தனை எத்தனை படங்கள் வெளியாயிருக்கும். ஆனாலும் இன்னும் எந்த ஒரு படத்திற்கும்கூட விமர்சனப் பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் ஏன் இன்னும் வெளியாகவில்லை? ஏன்? ஏன்? என்னாயிற்று? //

    குசேலன்,

    குருவி,

    சத்யம்,

    ....ரொம்ப வலிக்குது தருமி ஐயா. அதனால் தான் :)

    ReplyDelete
  25. எல்லோரும் மன்னிக்கணும். பதிவின் முதல் வரியிலேயே தவறான ஒரு செய்தி சொல்லிட்டேன். இப்போதான் பார்க்கிறேன். ஏப்ரல் 2005ல் பதிவெழுத ஆரம்பித்திருக்கிறேன். அப்படியானால், பதிவிட ஆரம்பித்து மூன்றரை மூன்றே முக்கால் ஆண்டுகள் ஆச்சு. ஒரு வருஷத்தை முழுசா முழுங்கிட்டேன்.

    ஆனாலும் ஏறக்குறைய 4 வது ஆண்டைத் தொடப் போகிறேன் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. முதல் ஆண்டைத் தவிர ஏதும் உருப்படியாக எழுதவில்லையோவெனவும் தோன்றுகிறது. (இப்பவாவது புரிஞ்சிக்கிட்டியேன்னு யாரோ அங்க அசரீரி மாதிரி கேட்பதுபோல் இருக்கிறது.)ஏன் அப்டின்னும் தெரியலை. :(

    சட்டி முழுசுமாவா காலியாகப் போய் விட்டது... ? அல்லது அகப்பையில் ஏதும் பிரச்சனையோ?
    தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
  26. அடுப்பு எரியுதான்னு பாருங்க. அணையலைன்னா...சட்டி ஓட்டையா இருக்க வாய்ப்பில்லை:-)

    ReplyDelete
  27. துளசி,
    அடுப்பெல்லாம் எரியுதே!

    //சட்டி ஓட்டையா இருக்க வாய்ப்பில்லை:-)//

    அப்படியா நினைக்கிறீங்க? அப்படி இருக்கணும்னும், அடுப்பு எப்போவும் எரியணும்னும்தான் ஆசை.

    ஆமா எனக்கே நாலுன்னா உங்களுக்கு ... ?

    ReplyDelete
  28. பதிவுலகில் உங்க மனசு பதியலைன்றதுதான் இப்போதைய உண்மை!

    பதிவு நடப்பைக் கவனிக்கலை(-:

    போனமாசம்தான் 'நாலில் இருந்து ஐந்துக்கு ஓர் நகர்வு'ன்னு பதிவு போட்டுக் கொண்டாடிட்டோம்லெ:-)))

    ReplyDelete
  29. இந்த ஜெ.கே.ரித்திஷ்ன்னு ஒருத்தரப் பத்தி எல்லோரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பதிவுகள் போடுறாங்களே!நேத்துத்தான் அவரோட டான்ஸ் ஒண்ணு கலைஞர் டி.வியில பார்த்தேன்.சும்மா குசாலா ஆடுறாரு:) அவரோட படம் ரிலிஸ் ஏதாவதுக்கு நீங்களே ஒரு விமர்சனம் போட்டிங்கன்னா நல்லாயிருக்கும்:)

    ReplyDelete
  30. துளசி,
    அஞ்சுக்கு நகர்ந்தாச்சா ... அம்மாடி உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது இதுவும் ஒண்ணு - அன்னைக்கி மாதிரியே இன்னைக்கும் அதே வேகம். எல்லாம் சட்டியில் சரக்கு இருக்கிற தகிரியம்!

    ReplyDelete
  31. ராஜ நடராஜன்,
    என்னங்க பெரிய ரித்தீஷ் .. நம்ம பேர் இருக்க சாம் ஆண்டர்சன் வரட்டும் .. பின்னி பெடலெடுத்துருவோம் ... அதுக்குத்தான் வெய்ட்டிங் .. !!

    ReplyDelete
  32. கடைசி வரைக்கும் இது வேற எதோ உள்குத்துன்னு நினைச்சேன்

    ReplyDelete
  33. நானும் சினிமா விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  34. இவ்ளோ பெரிய மொக்கையா?

    ReplyDelete
  35. //நானும் பதிவனாகி ரெண்டரை ரெண்டேமுக்கா வருஷம் ஆகப் போகுது//

    ரெண்டரை yaa? ரெண்டேமுக்கா vaa?
    GK vai improve பண்ணிக்க இந்த கேள்வி

    ReplyDelete
  36. //வால்பையன் said...
    கடைசி வரைக்கும் இது வேற எதோ உள்குத்துன்னு நினைச்சேன்
    //

    அதே....

    ReplyDelete
  37. //ரெண்டரை yaa? ரெண்டேமுக்கா vaa?
    GK vai improve பண்ணிக்க இந்த கேள்வி//


    கபீஷ்,
    ஒழுங்கா பின்னூட்டத்தையும் வாசிங்கப்பா... இங்க பாருங்க -->
    //எல்லோரும் மன்னிக்கணும். ... ஏப்ரல் 2005ல் பதிவெழுத ஆரம்பித்திருக்கிறேன். அப்படியானால், பதிவிட ஆரம்பித்து மூன்றரை மூன்றே முக்கால் ஆண்டுகள் ஆச்சு. ஒரு வருஷத்தை முழுசா முழுங்கிட்டேன்.//

    ReplyDelete
  38. பாஸ்டன் பாலா,
    //தீயவன், மேகம் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வந்திருக்கும் சமயத்தில் இப்படியாகப்பட்ட வறட்சி நிலவுவது கண்டிப்பு கலந்த வருத்தத்தை தூண்டுகிறது//

    அதான ...

    ReplyDelete
  39. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்),
    கொஞ்சம் நல்லவரா ரொம்ப கெட்டவரா நீங்க? இப்படி ஐய்ய்ய்ய்யோ அப்டின்றீங்களே!?

    ReplyDelete
  40. வருங்கால முதல்வர்,
    ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்துதான் அடுத்த முதல்வர் அப்டின்னு நினச்சிக்கிட்டு இருக்கோம்... நீங்க என்ன போட்டியா ... ? ம்ம்.. ம், இது நல்லா இல்லை...

    அது என்ன மொக்கை போட எனக்கு உரிமையில்லையா என்ன? தனியொரு பதிவருக்கு மொக்கையில்லையெனில் .... ஜாக்கிரதை!!

    ReplyDelete
  41. ஆயில்யன்,
    இந்தியன்,
    கொத்ஸ்,
    nathas,
    கப்பி,
    தெக்ஸ்,

    எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  42. கிரி,
    இப்போ மாதிரி எப்பவும் அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருங்க...

    ReplyDelete
  43. கையேடு,
    மாப்பு பண்ணிக்கங்க...

    ReplyDelete
  44. தமிழ்ப்பறவை,

    //நல்ல படத்துக்கு மட்டும் ரிசர்வ் பண்ணிப் பார்க்கணும். நல்ல எண்ணமய்யா உமக்கு....//

    அதெல்லாம் எப்பவும் பண்றதில்லைங்க....

    ReplyDelete
  45. tbcd,
    //நீங்க எல்லாம் மொக்கை போட ஆரம்பிச்சிட்டீங்க..//

    ஏதோ நடந்தது நடந்து போச்சி... இதுக்கெல்லாமா மனச தளரவிட்டு அழுவுறது. விடுங்க சில நேரங்களில் சில மனுசங்க அப்டின்னு உட்டுட்டு போங்க ..

    ReplyDelete
  46. பதிவுலகப் பெரியவர்கள் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யவும்.கருத்து பேதங்களை பேசி தீர்க்க முயற்சிக்கலாம்.

    1.தனிமனிதத் தாக்குதல் அறவே தவிர்க்கப் படவேண்டும்.
    2.ஆபாசம் கூடவே கூடாது.
    3.அரசியல்,சினிமா விமர்சனங்களில் கண்ணியம் காக்கப் படவேண்டும்
    4.வார்த்தை பிரயோகம் இனிக்க வேண்டும்
    5.இதையெல்லம் மீறுபவர்களை பிறர் புறக்கணிக்க முயற்சிக்க வேண்டும்.



    இந்த முயற்சியை

    1.சுப்பையா வாத்தியார்
    2.தாங்கள்
    3.டோண்டு சார்
    4.கோவை காட்டுஇலக்கா அதிகாரி
    5. துளசிடீச்சர் அவர்கள்
    6.kRs அவர்கள்
    அனைவரும் ஒரு நல்லெண்ண
    குழு தொடங்கி நல்லது செய்ய் வேண்டுகிறேன்

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. தென்றல்,

    //எத்தனை படம் ரீலிஸ் ஆச்சி??//

    படங்கள் ரிலீசாச்சுன்னு தெரியும்; ஆனா எத்தனை, எதெது அப்டின்னு தெரியலையே... (சிவாஜி ஸ்டைலில்...)

    ReplyDelete
  49. துளசி,
    //என்னைத் தேடிவரணும் என்ற இறுமாப்பு எனக்கு:-)//

    வேற வழி ஏது உங்களுக்கு ??!!

    ReplyDelete
  50. வல்லி சிம்ஹன்,

    மாப்பு கேட்டுக்கிறேன் :-)

    ReplyDelete
  51. சுவனப் பிரியன்,

    //தமிழர்களை திருந்த விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!//

    அம்புட்டு லேசா உட்டுறலாங்களா..?

    ReplyDelete
  52. ஜோசப் இருதயராஜ்,

    //என்ன சொல்ல வாரீங்கன்னு புரியவில்லை//

    இப்படிதாங்க என் லைஃப் ஓடிறிச்சி...நான் சொன்னது என் பசங்களுக்குப் புரியாத மாதிரி... :-(

    ReplyDelete
  53. கோவி,
    அதை பார்த்த பிறகுதான் எழுதினேன். ஒருத்தர்ட்டயும் சொல்லிடாதீங்க. இப்பவே மக்கள் ஒருமாதிரியா பார்க்கிறாங்க .. பயமாத்தான் இருக்கு !!

    ReplyDelete
  54. சர்வேசன்,

    முதலில் அவங்களை நிறுத்தச் சொல்லுங்க ..

    ReplyDelete
  55. நன்றி
    குப்பன் யாஹூ
    ஆட்காட்டி
    சென்ஷி

    ReplyDelete
  56. விஜய் ஆனந்த்,
    குசும்பன்,(வலிச்சாலும் அழப்படாது),
    சுந்தரராஜன்,
    லஷ்மி,

    நன்றி

    ReplyDelete
  57. ரமணா,
    இந்தப் பதிவில் வந்து இதை நீங்கள் சொல்வது ஏனென்று தெரியவில்லை. (என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே!)

    வயசானதுகளையா பொறுக்கி எடுத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    இதுக சொன்னா அதுக கேட்குமா?
    இதுகளுக்குள்ள அந்த 2-ம் நம்பர் ஆளுக்கு அப்படியெல்லாம் சொல்ல தகுதி இருக்கா?
    இவங்க ஏதும் சொல்லாமலேயே நீங்க சொன்ன அஞ்சாவதை அவரவராகவே செய்துவிட முடியாதா?

    ---- இப்படிப் பல கேள்விகள்.

    ReplyDelete
  58. வால்ஸ்,

    என்னமோ உள்குத்து அப்டின்னு என்னமோ சொல்றீங்களே .. அப்டினா என்னங்க?

    ReplyDelete
  59. கபீஷ்,

    எதுக்கு இப்ப GK வை இம்ப்ரூவ் பண்ணனும்?

    அவன் எங்க ஜிகே என்னும் கோபால கிருஷ்ணன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் ரத்ததில் சக்கரை அளவு கம்மி ஆகி இருக்கு.

    உன்னை இம்ப்ரூவ் பண்ண கபீஷுக்கு ஆசைன்னதும், எதுக்கு வேண்டாத வேலைன்னு மியாவ்றான்:-))))

    ReplyDelete