Monday, November 17, 2008

275. எங்க காலத்தில எல்லாம் ..…

*

*
"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...



விலைவாசி அன்று ...


அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக ஒரு மாத முழுமைக்கும் மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.


ஆனா இப்போ நான் கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. விலைவாசியில் இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும். உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா.


இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம்.


அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை. அதாவது அப்போதிருந்த demonstrator என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ' இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்கு மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பன் கன்னையனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை அறைக்கு வந்ததும் படுக்கையைத் தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான்.


பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது ... இன்றுவரை !


75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. ரொம்ப பெர்சனலானதுதான். இருந்தாலும் போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?


படம்: 1


மூன்றுமாதக் குழந்தையாயிருந்த மகளுக்கு வாங்கிய Farex டப்பாவின் விலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏழே முக்கால் ரூபாய்! இன்னைக்கி என்ன விலைன்னு தெரிஞ்சிக்குவோமே என்று கடையில் போய்க் கேட்டேன். 120 ரூபாயாமே!

படம்: 2



1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்படியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு ( நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள எல்லாம் பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!



படம் 3:



அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 80 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88



படம் 4 :


அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)

படம்: 6


சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 25 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!


*

*

32 comments:

  1. நான் தான் முதல்ல!

    ReplyDelete
  2. வருடம் 1971, ஜனவரி. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தயவால் மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலை மின்பொறியாளராக நியமனம் செய்யப்பட்டேன். முதல் வேலை பம்பாயில். சம்பளம் ரூபாய் 540. அக்காலத்தில் அது பெரிய தொகை. மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிளில் ஒரு அறையில் ஒரு கட்டில் வாடகைக்கு. மாதம் ரூபாய் 70. கன்ஸர்ன்ஸில் சாப்பாடு மாதம் ரூபாய் 72. அப்பாவுக்கு மாதம் அனுப்பியது ரூபாய் 100, மற்றச் செலவுகள் கிட்டத்தட்ட ரூபாய் 100, சேமித்தது ரூபாய் 200.

    காப்பி 30 பைசா, ஒரு பிளேட் இட்டலி 40 பைசா என்ற ரேஞ்சில்தான் விலைகள். எங்கள் கேன்டீனில் மதிய உணவு 95 பைசா. பட்டினி எல்லாம் கிடக்கவில்லை. நன்றாக வாழ்க்கையை அனுபவித்தேன். பார்த்த சினிமாக்களுக்கு குறைவில்லை. ஞாயிறு காலைகளில் அரோரா சினிமாவில் தமிழ்ப்படம் போடுவார்கள். பிரிட்டிஷ் கௌன்சில், மேக்ஸ்ம்யுல்லர் பவன் மற்றும் அமெரிக்க நூலகங்களில் உறுப்பினர். ஆகவே படிக்கக் கிடைத்த புத்தகங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா தமிழ்ப்பத்திரிகைகளும் தாராளமாகக் கிடைக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. கபீஷ்,
    அப்ப மறுபடி வருவீங்கல்ல ... ?

    ReplyDelete
  4. ஹா... வாங்க டோண்டு

    துளசி சொல்றது மாதிரி நம்ம வயசுக்கார ஆளுக எல்லோருக்கும் கொசுவத்தி சுருளைப் பத்த வச்சாச்சுன்னு சொல்லுங்க.

    //கிங்க்ஸ் சர்க்கிளில் ஒரு அறையில் ஒரு கட்டில் ..//

    அப்புறம் மீதிக்கெல்லாம் என்ன பண்றது?

    ReplyDelete
  5. என்னமோங்க. பதிவு படிச்சதிலேர்ந்து மன்சை என்னமோ பண்ணுது . அதுசுகமா, சோகமான்னு தெரியலை..

    ReplyDelete
  6. என்னமோங்க. பதிவு படிச்சதிலேர்ந்து மன்சை என்னமோ பண்ணுது . அதுசுகமா, சோகமான்னு தெரியலை..

    ReplyDelete
  7. அடேங்கப்பா!

    //அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். ... அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய்.//

    1981-லேயே எனக்கு முதல்மாத சம்பளம் ரூ. 200 தான், இதுக்கு என்ன சொல்றது?

    ReplyDelete
  8. என்னுடைய தாத்தாவுக்கு (அம்மாவோட அப்பா) கடைசி வரைக்கும் வீட்டுச் செலவு கணக்கு எழுதுற வழக்கம் இருந்தது. நானும் அவருக்கு உதவியா சின்ன வயசுல கணக்கு எழுதியிருக்கேன். பாட்டி வீட்டுக்குப் போனா 80களில் எழுதிய கணக்கு நோட்டுகள் கிடைக்கும். என் கையெழுத்தில் எழுதிய செலவு கணக்கெல்லாம் பார்க்கலாம்.

    இப்ப நெனச்சு பார்த்தா அவங்களுக்கும் அப்படி 'கையில காசு வாயில தோசை' வாழ்க்கை தான் இருந்திருக்குமோன்னு தோணுது. நம்பவும் முடியலை. மாச சம்பளக்காரங்க இல்லை. வீட்டுப்பகுதிகளை கடைகளுக்கு வாடகை விட்டிருந்தாங்க. ஜவுளி வியாபாரமும் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதனால கணக்கெழுதுறது பழக்கத்தால வந்ததுன்னு நினைக்கிறேன். பாட்டிக்கிட்ட கேக்கணும். இன்னும் அவங்க கணக்கு எழுதிக்கிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். நாலு வருடம் முன்னாடி போய் பாத்தப்ப என் பொண்ணு கையில காசு குடுத்துட்டு உடனே நோட்டைத் திறந்து எழுதி வச்சாங்க. :-)

    இப்ப கணக்கு வழக்கெல்லாம் ஒன்னும் புரியலைன்னு போன வருடம் ரெண்டு மாசத்துக்கு கணக்கு எழுதி வச்சுப் பார்த்தேன். எம்புட்டு செலவாகுதுன்னு ஒரு ஐடியா கிடைச்சது. நிறுத்தியாச்சு. அந்த கணக்கெல்லாம் கணியில இருக்கும்; தேடி வைக்கணும். நாளைக்கு நானும் என் புள்ளைங்ககிட்ட காட்டலாமுல்ல. :-)

    ReplyDelete
  9. நல்ல பதிவு. இது கால காலமாய் நடக்கும் விஷயம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து எழுதினால் இப்படி எழுதுவோம்;

    2008 இல் தங்கம் ஒரு கிராம் ஆயிரம் ரூபாய்தான் , அப்போதே நாற்பது பவுன் வாங்காமல் விட்டு விட்டேன்.

    2008 இல் ஒரு கிரௌந்து நிலம் நாற்பது லட்சம் தான், அப்போதே 4 கிரௌந்து வாங்காமல் விட்டேனே இன்று ஒரு கிரௌந்து இரண்டு கோடி ஆகி விட்டது என்போம்.

    அப்போது எல்லாம் காபி ஆறு ரூபாய் தான், அளவு சாப்பாடு முப்பது ரூபாய் தான்.....



    ஆனால காலம் மாற மாற நோய்கள் குறைதல், அறிவியல் முன்னேற்றங்கள், வசதிகள், கவலை படுதல் குறைந்து இருத்தல் போன்றவை ஏற்படுகின்றன.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  10. நாங்களும் அந்த காலத்துல அப்பா ஒவ்வொரு செலவாக சொல்ல வரிசையா நோட்டுல எழுதி கூட்டி கழிச்சு அடிச்சு(அடி வாங்கி) திருத்தி கணக்கு போட்டு கொடுப்போம்ல :D


    //என்னமோங்க. பதிவு படிச்சதிலேர்ந்து மன்சை என்னமோ பண்ணுது . அதுசுகமா, சோகமான்னு தெரியலை..

    //

    ரிப்பீட் யுவர் ஆனர்!

    ReplyDelete
  11. //ரெண்டு மாசத்துக்கு கணக்கு எழுதி வச்சுப் பார்த்தேன். எம்புட்டு செலவாகுதுன்னு ஒரு ஐடியா கிடைச்சது. நிறுத்தியாச்சு. //

    இங்கேயும் அதே கதைதான். நீங்கள் கணினியில் எழுதியிருப்பீங்க போலும்; நாங்க சிட்டையில .. அம்புடுதான் வித்தியாசம். நாலஞ்சி மாசம் எழுதிட்டு அதுனால் நிலைமை ஒண்ணும் பெருசா வித்தியாசமா இல்லாததால உட்டாச்சு.நானும் அப்பாவின் பழக்கத்தால் தான் ஆரம்பிச்சேன். ஆனால் அவருக்கு இருந்த perseverence எல்லாம் நமக்குக் கிடையாது.
    ஆனால் பிள்ளைகள் வளர்ந்ததும் ஒரு சில மாசங்களுக்குப் பிள்ளைகள் in-charge / FM-ஆக இருந்தார்கள்.எல்லாம் ஒரு முயற்சிதான்!

    ReplyDelete
  12. காசி,
    அப்டியா? அப்போ நம்ம கதையைத் தூக்கி சாப்பிடுறது மாதிரி இருக்குமே. எடுத்து உடுறது ..

    ReplyDelete
  13. இளா,
    இப்பகூட பிள்ளைகளோடு ஒண்ணா இருக்கும்போது பழைய கதையெல்லாம் பேசுவோம். சந்தோசமாத்தான் இருக்கும்.
    எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்ல அப்படின்னு நினைக்கிறது நல்லா இருக்கு. அதோடு இருந்த நிலையை நினைவுல வச்சிக்கிறது நல்லதுதானே!

    ReplyDelete
  14. குப்பன் யாஹூ,
    நல்ல கற்பனைதான். அதுவும் இந்த வீடு, மனை, தங்கம் விஷயங்களில் காலங்காலமாய் மக்கள் பேசுறது இப்படித்தான்.

    ReplyDelete
  15. குப்பன் யாஹூ,
    ரொம்ம்ம்ப வருஷத்துக்கு முந்தி ஆ.வி. அல்லது குமுதத்தில் பென்ஷன் வாங்கப் போற ஒருத்தரின் செலவு பற்றி ஒரு கதை நீங்கள் சொன்ன சாயலில் வந்திருந்தது.

    ReplyDelete
  16. "ஏழரை ரூபாய் சம்பளம். அதுலே ஒரு ரூபாய்க்கு ஒரு நல்ல புடவை வாங்கிக்குவேன். டீச்சரா இருக்கேன்லெ. பளிச்னு உடுத்திக்கிட்டுப் பள்ளிக்கூடம் போகணுமில்லே?

    மீதிக்காசை அப்படியே அம்மாகிட்டே கொடுத்துருவேன்."

    சொன்னது எங்க பாட்டி. எங்கவீட்டின் முதல் ஒர்க்கிங் வுமன்.

    நாங்கெல்லாம் 'ஆஆஆஆ'ன்னு வாயைப் பொளந்துகிட்டு இருப்போம்.

    அப்புறம் 1974 இல் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சு ரெண்டு பேர் சம்பளமும் சேர்ந்து 1000 ன்னு ஒருமாதிரியா ஜாலியா இருக்க ஆரம்பிச்சோம். வந்தது வினைன்னு இவர் வேலையை விட்டுட்டு ஒரு கம்பெனிக்கு ட்ரெயினியாப் போய்ச் சேர்ந்துட்டார். வேலையை விட்டுட்டு வான்னு ஒரே பிடுங்கல். இவர் போனதோ மலையாளக் கரையோரம். இது போதாதா? அப்பெல்லாம் வாழ்க்கையைப் பத்துன ஒரு பயம்(?) வேலையை விட்டுட்டேன். இவருக்கு ஸ்டைஃபண்ட் பணம் 500 வரும். அதைவச்சே குப்பைகொட்டிக் குடும்பம் நடத்தின்னு ஆச்சு.

    ஒரு பைசா விடாமக் கணக்கு எழுதுனோம். இன்னும் அந்த நோட்டுப்புத்தகங்கள் இருக்கு. அதைவிட ஊரூராப் போகும்போது பாங்க்லே கணக்கு ஆரம்பிச்சுருவோம். ஆரம்பத்துலே ஜோரா 50 ரூபாயோட ஆரம்பிக்கும் கணக்கு. மாசாமாசம் பத்து ரூபாயாவது போடணுமுன்னு ஆரம்பிக்கரதுதான். ஆனால்............ அதுலே இருந்து அஞ்சும் பத்துமா எடுத்துக் காலி பண்னிட்டுத்தான் மறுவேலைன்னு ஆகிரும். அத்தாட்சிக்களா ஏழெட்டு பாஸ்புக்ஸ்.

    அப்பெல்லாம் பேங்க் சார்ஜ் னு ஒன்னும் இல்லை!!!

    ReplyDelete
  17. பயங்கர adventeruous lifeதான். இல்ல.

    //ஒரு பைசா விடாமக் கணக்கு எழுதுனோம்//

    ஆக இது ஒரு universal matter போலும்!

    ReplyDelete
  18. கடைவீதிக்கு போய் சாமான் வாங்கீட்டு வர்ற அம்மா, வீட்டுக்கு வந்து கடைக்காரன் போட்ட கணக்கு சரியா இருக்கான்னு சரி பாப்பாங்க. எல்லாம் மனக்கணக்குதான். இன்னிக்கு கால்குலேட்டர் இல்லாம முடியறதில்லை.

    ReplyDelete
  19. உங்க காலத்து விவரங்கள் படிக்க சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
  20. 1967 ல் நான் முதலில் ஸ்கூட்டரில் ஆபீஸ் போக ஆரம்பித்த போது 5 லிட்டர் பெட்ரோல், அதற்கு 2டி ஆயில் போட்டதும் 5 ரூபாய் தருவேன். அவன் மிச்சக் காசு தருவானே.
    சகாதேவன்

    ReplyDelete
  21. கொசுவத்தி நீங்க மட்டும் தான் சுத்துவிங்களா!

    நான் முதம் முதலாக வேலைக்கு போனது ஒரு பெட்ரோல் பங்குக்கு தான்.
    அப்போ பெட்ரோல் 20 ரூபாய், டீசல் 7.90 காசு.
    நான் நகைகடையில் வேலை செய்யும் போது தங்கம் ஒரு கிராம் 400 ருபாய் தான் இருந்தது.

    ஆனால் பணத்தின் மதிப்பு இப்படி குறைந்து கொண்டே பாஒவதற்க்கு காரணம் தான் தெரியவில்லை.

    இதை உளவியல் ரீதியாக ஆராயலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  22. சின்ன அம்மிணி,
    அமுதா,

    மிக்க நன்றி

    ReplyDelete
  23. சகாதேவன்
    நமக்கும் சீனியரால்ல இருப்பீங்க போலும். at least வண்டி வச்சிருந்ததில சீனியர்தான். நான் வாங்குனது 1970 தானே.

    ReplyDelete
  24. வால்ஸ்,
    //இதை உளவியல் ரீதியாக ஆராயலாம் //

    இதை எப்படி உளவியலா ஆராய்றது? தெரியலை. செய்யுங்க .. தெரிஞ்சிக்கிறேன்.

    ReplyDelete
  25. கணக்கெழுதும் பழக்கம் மிக நல்ல பழக்கம்.
    நான் தொண்ணூறுகளின் இறுதியில் கோவையில் இருந்தபோது நிலவிய விலைவாசி விவரங்களை எடுத்துப்பார்க்கும் போதே வியப்பு பீறிடுகிறது,நீங்கள் அறுபதுகளின் விலையைப் பார்த்தால்...,ஒன்னும் சொல்லிக்கிறாப் போல இருக்காதுன்னு தெரியும்.......

    ReplyDelete
  26. அறிவன்,
    ஆடிட்டர் அப்படித்தான் சொல்லுவீங்க. நாங்க ஏதோ சில மாதங்கள் இதைக் கடைப்பிடித்தோம். அதன்பின், நாமென்ன வெட்டியா ஏதும் செலவு பண்ணலையில்ல அப்டின்னு சொல்லிட்டு கணக்கை விட்டாச்சு :-(

    ReplyDelete
  27. மன்னிக்க வேண்டும்!
    அத்தனை படத்தையும் சேமித்துக் கொண்டேன் ஐயா! :))

    ReplyDelete
  28. KRS,
    //அத்தனை படத்தையும் சேமித்துக் கொண்டேன் //

    ஓ! வரலாற்றுப் பொக்கிஷங்கள் அப்டின்றீங்க. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போகும் உங்கள் முயற்சி வாழ்க!!

    ஆனா எதுக்கு மன்னிப்பு?

    ReplyDelete
  29. ஒண்ணும் மட்டும் புரியுது.... 'அந்த காலத்து ஆள்களுக்கு' தினமும் கணக்கு எழுதுற பழக்கம் இருந்திருக்கு!

    இன்னும் அப்பாவுக்கு கணக்கு எழுதுற பழக்கம் உண்டு. 10, 50 காசு tally ஆகிற வரைக்கும் விட மாட்டாங்க!(இப்ப கொஞ்சம் பரவாயில்லை..!! ;) )

    2 ரூபாய் குறைஞ்சாகூட அவ்வளவுதான்... அம்மா 'காலி!' இதுக்காகவே அம்மாவுக்கு 'உதவிய' நாட்களாம் உண்டு!

    'அம்மா, அந்த பூ காரனுக்கு ரெண்டு ரூபாய் குடுத்தீங்களேனு ' அம்மாவை காப்பாத்துவோம்!!
    [சில சமயம், நாங்க 'பூ சுத்துறத' அப்பா கண்டுபிடிச்சதும் உண்டு]

    ReplyDelete
  30. ஆஹா வாத்திக்கு வயசாயிடுச்சு.........

    ReplyDelete
  31. தென்றல்,
    இந்த விசயத்தில் உங்கள் தலைமுறைக்காரனாகி நானும் "கெட்டுப் போய்ட்டேன்"!

    ReplyDelete
  32. அப்பு பாண்டி,
    எப்ப இல்லன்னு சொன்னோம்? புதுசா கண்டுபிடிச்சிருக்க ... ஹே .. போப்பு..

    ReplyDelete