Wednesday, November 19, 2008

277. பொன்னியின் செல்வனும் EXODUS-ம்

*

*

வாழ்க்கையில் இதுவரை மும்முறை வாசித்த நூல்கள் இரண்டே இரண்டு. முதல் நூல்: கல்கியின் பொன்னியின் செல்வன். இரண்டாவது: LEON URIS எழுதிய EXODUS. ஒவ்வொரு முறையுமே இரண்டு கதைகளுமே புதியதாய்த் தோன்றின. இரண்டுமே வரலாற்றை வைத்து புனையப்பட்ட நவீனங்கள்.

முதல் நூலை முதலாவதாக வாசித்தபோது பள்ளிப் பருவத்தின் இறுதி நிலை. நானும் வந்தியத்தேவனைத் தொடர்ந்து அவர் பின்னாலேயே இன்னொரு குதிரையில் சென்றேன். ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும், பொன்னியின் செல்வரும், எல்லாரையும் விட குந்தவியும் மிகவும் பிடித்துப் போனார்கள். நந்தினியையும் பெரிய பழுவேட்டரையும் பார்த்து கொஞ்சம் பயந்ததும் உண்மை. மூன்றாம் பாகத்தின் நடுவில் என்றுதான் நினைக்கிறேன்; சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை குந்தவி சந்தித்து உரையாடும் இடம், அதற்கு மணியம் வரைந்த ஓவியம் .. ம்ம்.. எல்லாமே மிகவும் ருசித்தது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே என்று வருந்த வைத்த கதை.

இரண்டாம் முறையும் உருகி உருகி வாசித்து மகிழ்ந்தது முதலில் வேலைக்கமர்ந்த இடம் தஞ்சை அருகில் உள்ள ஒரு கல்லூரி. வாசம் தஞ்சாவூர். அவ்வப்போது பெரிய கோயிலுக்கும், சிவகங்கை தோட்டத்துக்கும் செல்லும்போதெல்லாம் கூடவே வந்தியத்தேவனும் குந்தவியும் வருவதுபோல் நினைத்துக் கொண்டதும் உண்டு. அந்தப் பெரிய கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் ராஜராஜனின் காலத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டதும் உண்டு. அந்த கோபுரத்தின் உச்சியில் இருக்கும் அந்தப் பெரிய கல், அதனை எப்படி மேலே ஏற்றியிருப்பார்கள் என்ற கேள்வியும், சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து சாரம்கட்டி ஏற்றினார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதை வைத்து ஆழ்ந்த பிரமிப்பில் இருந்து வந்திருந்தேன். அந்த பிரமிப்பு ஓகை எழுதிய கப்பிப்பயல் வலைப்பதிவு வாசிப்பது வரை நீடித்தது.


இஸ்ரேல் என்ற நாடு உருவான நிகழ்வை வைத்து, உண்மையான மனிதர்களைக் கதை மாந்தர்களாக வைத்து புதினமாக எழுதப்பட்ட Exodus வெவ்வேறு இடங்களில் கண்ணீரை வரவைத்த வரலாற்று நவீனம். ஹிட்லரின் வெஞ்சினமும் யூதர்கள் ghetto-க்களில் பட்ட வேதனைகளும், kibbutz-களில் யூத இளைஞர்களின் வாழ்க்கையும் எல்லாமே கற்பனை என்ற சுவடே இல்லாதபடி நேரில் கண்முன் விரிவதுபோல் நகரும் கதை. இஸ்ரேல் என்றொரு நாடு உருவாவதற்கு U.N.O.- வில் ஓட்டெடுப்பு நடந்த பகுதியை வாசிக்கும்போது மூச்சை இறுக்கிப் பிடித்துதான் வாசிக்க வேண்டியதிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டிட இந்தியாவும் இன்னும் சில கீழ்த்திசை நாடுகளும் எதிர்த்து ஓட்டுப் போட,பத்து நாடுகள் ஓட்டு போடாமல் "நடுநிலை" வகிக்க, 33:10 என்ற கணக்கில் இஸ்ரேல் ஒரு புதிய நாடாக அங்கீகரிக்கப் படும்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

இந்தப் புத்தகத்தின் தாக்கத்தால் Leon Uris எழுதிய மற்ற நாவல்களையும் தொடர்ந்து வாசித்தேன். எல்லாமே இஸ்ரேல் நாட்டின் அல்லது யூதர்களின் இரண்டாம் உலக யுத்த காலத்தை ஒட்டிய கதைகளே. வாசிக்க வாசிக்க யூதர்களின் மேல் ஒரு ஈர்ப்பு. அதோடின்றி அதன் பின் படித்த சில நூற்கள், அதிலும் முக்கியமாக 90 minutes at Entebbe. ஓ! இஸ்ரேயலர்கள் மேல் ஒரு பாசமே பிறந்துவிட்டது. கடைசியாகச் சொன்னது கதையல்ல; நடந்த ஒரு நிகழ்வு. சினிமாவாகவும் வந்தது. இடி அமீனின் ஆட்சிக்காலத்தில் உகண்டாவிலுள்ள Entebbe விமான நிலையதிற்குக் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த ஏறத்தாழ 150 யூதர்கள் மட்டும் பிணைக்கைதிகளாக வைக்கப் பட மூன்றே நாட்களில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் முன்பாகவே திட்டமிடப்பட்டு 53 நிமிடங்களில் இரவோடிரவாக அனைவரும் காப்பாற்றப் படுகிறார்கள். யூதர்களின் பக்கம் உயிர்ச்சேதம் - கமான்டோக்களைத் தலைமை ஏற்றுச் சென்ற இளம் வயது Netanyahu மட்டுமே. கதையை வாசிக்கும்போதே நம்மை அது முழுமையாக ஈர்த்துவிடும்.

இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின் அதன்பிறகு 1967-ல் நடந்த 'ஆறு நாள் யுத்தம்' - Six days war - அதில் அவர்கள் நடத்திய வியூகங்கள் எல்லாமே ஆச்சரியமாக இருந்தது மட்டுமில்லாமல் இப்போதுள்ள 'அகண்ட இஸ்ரேலுக்கு' அந்தப் போர்க்களமே வித்திட்டது. இது பற்றாது என்பது போல் உலகத்தில் இதுவரை அறிவுக்கூர்மைக்கு யூதர்கள் போல் வேறு எந்த race-ம் இணை இல்லை என்பதாக - உதாரணமாக, இதுவரை நோபல் பரிசுகள் வாங்கியவர்களில் 60 விழுக்காடு அவர்கள்தானாம்; மார்க்ஸிலிருந்து ஸ்பீல்பெர்க் வரை எந்த துறையிலும் அவர்கள் பெயர்களே; அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாவல்கள் நன்றாகவே வாசித்ததுண்டு.அது Irving Wallace ஆக இருக்கட்டும் இல்லை Arthur Hailey ஆக இருக்கட்டும் அமெரிக்கர், கனடாக்காரர் என்று நினைத்துக் கொண்டிருப்போம்; பார்த்தால் யூதராகவே இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து ஒரு பிரமிப்பு.

EXODUS வாசிக்க ஆரம்பித்து யூதர்களின் அபிமானியாக ஆகிப் போனேன். இந்த நிலை முற்றிலும் இப்போது மாறிவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அவர்களின் விடாப்பிடியும், எந்த சமாதான உடன்படிக்கைக்கும் வராத சண்டித்தனத்தையும் பார்க்கும்போது பிரமிப்பையும் தாண்டி எரிச்சல்தான் வருகிறது.

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் இன்னொரு விதயம்: எனக்கோ EXODUS வாசித்து இப்படியான பிரமிப்பு உண்டானது. கதையும் மிகவும் பிடித்துப் போக சில நண்பர்களிடம் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருக்கிறேன். அதில் இருவர் என்னால் இதை வாசித்தார்கள். ஆனால் எனக்கு வந்த பிரமிப்பும் பச்சாதாபமும் அவர்கள் இருவருக்கும் ஏற்படவேயில்லை. அதிலும் ஒருவர் நல்ல கிறித்துவர்; அவருக்கு ஏசுவை சிலுவையில் அறைந்து கொன்றது யூதர்கள்தானே என்ற வெறுப்பு! (அவருக்கு அடுததாக Holy Blood; Holy Grail வாசிக்கக் கொடுக்கணும்; அதில் ரோமர்கள்தான் ஏசுவைக் கொன்றார்கள்; யூதர்கள் அல்ல என்று எழுதியிருக்கிறார்கள்.)இன்னொருவருக்கு இந்த யூதப் பசங்க எப்பவுமே இப்படிதான்; very cunning .. dubious .. undependable என்று adjectives-ஆக அடுக்கினார்.

ஒரே புத்தகம்தான்; ஆனால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் அவர்கள் இருவரிடமுமில்லை. perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன!


பி.கு.
எனக்கு யூதர்களோடான ஒரு first hand experience: வியாபாரம் செய்வதில், பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள் என்பது ஒரு பரவலான செய்தி.

அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு டிஜிட்டல் கேமிராவை நியூயார்க்கின் பெரிய போட்டோ கடை ஒன்றில் வாங்கினேன். அது ஒரு யூதர்களின் கடை. அதோடு வைத்திருந்த Nikon SLR காமிராவிற்கு ஒரு குளோசப் ரிங் வாங்க நினைத்தேன். ஒன்றைக் காண்பித்தார்கள். பிசிக்கி பிசிக்கி செலவு செய்த எனக்கு அவர்கள் சொன்ன விலை அதிகமாயிருந்தது. யோசித்தேன். அதற்குள் விற்பனையாளன் இந்த ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்றான். கடைசி piece .. அதனால் விலை குறைத்து கொடுக்கலாமே என்றேன். ஒரே piece .. அதனால் விலை கூடத்தான் சொல்லவேண்டும் என்றான் சட்டென. ராசா, நல்லா பேசுறப்பா என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.


*

71 comments:

  1. //நானும் வந்தியத்தேவனைத் தொடர்ந்து அவர் பின்னாலேயே இன்னொரு குதிரையில் சென்றேன்.//

    அப்பறம் வந்தியத்தேவனுக்கு பிடிச்சவங்க எல்லாம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
    எக்ஸாடஸ் இன்னும் படிக்கலை

    ReplyDelete
  2. பொன்னியின் செல்வன் மூன்று முறைதான் படித்தீர்களா?
    ஆச்சர்யமாயிருக்கிறது.
    சுமார் 12 வயதில் பொ.செ.வைத் தொட்ட நான் 25 வயதுக்குள் சுமார் 50 முறையாவது படித்திருப்பேன் என நினைக்கிறேன்.
    படிக்கும் எல்லைகள் விரிந்த பதின்ம வயதுக்கப்பாலும் பொ.செ.மிக நீண்ட நாட்களுக்கு என்னை வசீகரித்த காரணம் இன்று வரை எனக்குப் புரியவில்லை.

    Exodus படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கும் சில புத்தகங்களில் ஒன்று,தேடிக் கொண்டிருக்கிறேன்,தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

    யூதர்களின் shrewedness மற்றும் splitsecond responsivness நினைத்து வியக்க வேண்டிய ஒன்றுதான்...

    ReplyDelete
  3. உங்கள் பதிவில் பதிவுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் கிளிக்கினால் notepad ல் ஏதோ கச்சா முச்சாவென விரிகிறது.
    என்னவெனப் பார்க்கவும்.

    ReplyDelete
  4. அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

    அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

    அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

    வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் கேட்க, பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

    அது பற்றி பிறகு. ஐஷ்மன் விஷயத்துக்கு வருவோம். அவன் குற்றவாளி என்றுத் தீர்ப்பளிக்கப் பட்டது. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மே 31 1962-ல் அவன் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிட இரண்டு சக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன. அவற்றை இருவர் ஒரே நேரத்தில் செயலாக்கினர். ஆகவே யார் அவனைத் தூக்கில் ஏற்றியது என்பது ரகசியமாக வைக்கப்பட்டது. பிணத்தை எரித்து சாம்பலை மத்தியதரைக் கடலில் தூவினர் இஸ்ரவேலர்கள். ஐஷ்மன் சகாப்தம் முடிவடைந்தது.

    நாஜிகள் பலர் வேடையாடிக் கொல்லப்பட்டனர். தப்பியவர்கள் தங்கள் வாழ்நாள் கடைசி வரை நிம்மதியாக வாழ இயலவில்லை. இத்தனை ஆண்டுகள் யூதர்களைக் கிள்ளுக்கீரையாக மதித்தவர்கள் இப்போது இஸ்ரவேலர்களைக் கண்டு பயந்தனர்.

    வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

    கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

    ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.

    இப்பின்னூட்டம் போடும் சந்தர்ப்பத்தை தந்த உங்கள் இப்பதிவிற்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. //Holy Blood; Holy Grail வாசிக்கக் கொடுக்கணும்; அதில் ரோமர்கள்தான் ஏசுவைக் கொன்றார்கள்; யூதர்கள் அல்ல என்று எழுதியிருக்கிறார்கள்// :)

    ReplyDelete
  6. நான் தான் முதல்ல?

    ReplyDelete
  7. நான் தான் முதல்ல?

    ReplyDelete
  8. நான் ரெண்டு புக்கும் படித்ததில்லை, இந்தியாவில் மார்வாடி மக்கள் வியாபாரத்தில் யூதர்கள் மாதிரி

    ReplyDelete
  9. நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கோணத்தில் பொன்னியின் செல்வன். இந்த இடுகையை படியுங்கள்.

    ஜேம்ஸ்பாண்ட் Vs வந்தியதேவன்

    http://kanavukale.blogspot.com/2008/11/vs.html

    ReplyDelete
  10. /*ஒரே புத்தகம்தான்; ஆனால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் அவர்கள் இருவரிடமுமில்லை. perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன*/
    சில சமயங்களில் ஒரே புத்தகத்தைத் திருப்பி திருப்பி படிக்கும் பொழுது, வெவ்வேறு பார்வைகள் கிடைக்கலாம். எனக்கும் பொன்னியின் செல்வன் மிகவும் பிடித்த நாவல். பின்பு பெரிய கோயிலின் கதை என "உடையார்" படித்தேன். அதைப் படித்த பின்பு, பெரிய கோயிலும், இராஜ இராஜனும் இன்னும் பிரமிப்பை உண்டாக்கினார்கள். யூதர்கள் பற்றிய வரலாற்றை சமீபத்தில் "யூதர்கள்" என்ற நூலில் படித்தேன். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு... படிக்க படிக்க பிரமிப்பையும், நடுவே கடவுளால் அளிக்கப்பட்ட பூமிக்காக இத்தனை இரத்தமா என்ற வேதனையும் எழுந்தது.

    ReplyDelete
  11. Exodus பற்றியெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவே பொன்னியின் செல்வன் தான் காரணம்.

    அதைப் படித்த பிறகு எத்தனை புத்தகங்கள் படித்தாலும் அனைத்தும் பொ.செ.வின் தழுவல்களாகவே தோன்றுகின்றன. மர்ம நாவல்கள்கூட பொ.செ.வின் சாயலிலேயே தெரிகின்றன.

    ReplyDelete
  12. எக்ஸோடஸ், கணவரின் தூண்டுதல் பேரால் படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெரிய மூச்சுடன் புத்தகத்தை மூட மூன்று நாட்கள் பிடித்தது. உங்களைப் போலவே லியான் யூரீஸ் புத்தகங்களையும் விட்டு வைக்கவில்லை.

    ஏதோ ஒன்று அவர்களீடம் இருந்திருக்கிறது.

    பொன்னியின் செல்வனைப் பற்றிச் சொல்ல இன்னும் நான்கு தடவை படிக்க வேண்டும்.:)

    ReplyDelete
  13. பொன்னியின் செல்வன் மூணாவது தடவை படிக்க இன்னும் வயசு இருக்குன்னு நினைக்கிறேன். :-)

    எக்ஸோடஸ் படிக்கலை. யூதர்களின் ஆதிக்கம் தான் அமெரிக்க அரசியலிலும் அரசுக்கொள்கைகளிலும் மிகுதியாக இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிப் படித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீடுகளுக்குச் சென்று பார்த்தால் தான் அவர்கள் யூதர்களா இல்லையா என்று தெரியும் போலிருக்கிறது. வெளி அடையாளங்கள் தெரிவதில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பலர் யூதர்களாக இருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்; ஆனால் ஒரே ஒரு பெண்மணி மட்டுமே யூதர் என்று இப்போது தெரியும். அதுவும் ஈஸ்டர் கொண்டாட்டம் எப்படி என்று ஒரு முறை கேட்டபோது 'நான் யூதர்; அதனால் கொண்டாடவில்லை' என்று அவர் சொன்னதால். கிறிஸ்துமஸின் போது இன்னும் சிலரிடம் கேட்டால் சொல்வார்களோ என்னவோ.

    ReplyDelete
  14. என்னோட நண்பர் வந்தியதேவனுடைய வரலாறை நான் கூட இருந்தே பார்த்துள்ளதால்... பொ.செல்வன் என்றதும் ஒரு சிலிர்ப்பு வருவது தவிர்க்க இயலாமல் போய் விடுகின்றது!

    ReplyDelete
  15. சின்ன அம்மிணி,
    Exodus வாசிங்க. அப்படியே Alex Haley எழுதிய Roots வாசிங்க.

    ReplyDelete
  16. அறிவன்,

    //நான் 25 வயதுக்குள் சுமார் 50 முறையாவது ...//

    வெறும் தலைப்பையா? :-)

    12 வயதிலிருந்து 25 வரை ...
    ஃ 12 வருடத்தில = 50 தடவை
    ஃ வருஷத்துக்கு = 4 தடவை
    ஃ ஒரு தடவை வாசிக்க = 3 மாதம்.
    (மொத்தம் 5 பாகம்!!)

    அப்ப வேற ஒண்ணுமே வாசிக்கலையா?

    சும்மா ஒரு கணக்கு .. அம்புடுதேன்!!

    நீங்கள் சொல்லும் பிரச்சனௌ எது என்று தெரியவில்லையே..

    ReplyDelete
  17. டோண்டு,

    //"நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். //

    கல்லூரியில் Schindler's List படம் போட்டோம். ஒரு ஜெர்மானிய இளைஞனும் வந்திருந்தான். படம் முடிந்ததும் அவன் கேவி கேவி அழுதது மிகவும் பாவமாயிருந்தது.

    //ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ//

    நீங்களும் ஊசிதான். I mean sharp!

    //நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். //
    அப்போ ஒண்னு பண்ணுங்களேன். பாலஸ்தீன பிரச்சனையை உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்களேன். ஒருவேளை ஏற்கெனவே எழுதியிருந்தால் தொடுப்பு கொடுங்கள்.

    Exodus படிச்சிட்டீங்களான்னு சொல்லவேயில்லையே...

    ReplyDelete
  18. கபீஷ்,
    better luck next time....

    ஒண்ணு பண்ணுங்களேன். கொஞ்சம் வயதான பிறகு பொ.செ படித்தால் அந்த அளவு impressive ஆக இருக்காதோ என்று எனக்கு ஒரு சந்தேகம். romantical history ஆக இருப்பதால் பதின்ம வயதில் வாசிப்போர் எல்லோருக்குமே மிகவும் பிடித்துப் போகிறதோ என்று ஒரு சந்தேகம். நீங்க இப்போ வாசித்து (பதின்மவயதைத் தாண்டியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை!) எப்படி என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete
  19. EXODUS என்ற புத்தகம் தமிழாக்கம் தாயகம் நோக்கிய பயணம் எனும் புத்தகமா?

    ReplyDelete
  20. வி. ஜெ. சந்திரன்,
    தெரியலைங்களே ..

    ReplyDelete
  21. சுரேsh,

    அட போங்கையா! தலைகீழ நின்னு பார்த்தேன்.
    * இரண்டு பேரின் பாஸைவிடவும் இவர்களே முக்கிய ஆளாகப் போய் விடுகிறார்கள் - என்று ஒரு பின்னூட்டம் போடலாமுன்னு பார்த்தா முடியவேயில்லை.

    பொ.செ. மேல் அப்படி ஒரு obsession அப்டின்னு தெரியுது!

    உங்க பேரை நாங்க இப்படி எழுதுவோம்ல...

    ReplyDelete
  22. அமுதா,

    //திருப்பி திருப்பி படிக்கும் பொழுது, வெவ்வேறு பார்வைகள் கிடைக்கலாம். //

    அதற்குக் காரணம் ஒருவேளை நாம் அந்தக் கால இடைவெளிக்குள் மாறியிருக்கக் கூடுமாதலால் இருக்குமோ?

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. வல்லி,
    நல்ல சிங்கம்தான் உங்க சிங்கம்!

    //ஏதோ ஒன்று அவர்களிடம் இருந்திருக்கிறது.//

    இன்னமும் இருக்கிறது... இல்லாவிட்டால் இப்படி எல்லா பக்கமும் இஸ்லாமிய பகை நாடுகளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியுமா?

    ReplyDelete
  25. குமரன்,
    அப்போ ரெண்டு தடவையோடு நிக்குதோ?

    நான் போன கடையில் நிறைய பேர் முடிவளர்த்து தெரிந்தார்களே...?

    ReplyDelete
  26. ராபின்,
    ஆமா .. நீங்க கூட வாசியுங்களேன் அந்தப் புத்தகத்தை. ரொம்ப நல்லாவும் நிறைய விஷயமும் இருக்கு. ஆனா "கண்ணாடி"யை கழட்டிட்டு வாசிக்கணும்; முடியுமா???

    ReplyDelete
  27. >>12 வயதிலிருந்து 25 வரை ...
    ஃ 12 வருடத்தில = 50 தடவை
    ஃ வருஷத்துக்கு = 4 தடவை
    ஃ ஒரு தடவை வாசிக்க = 3 மாதம்.
    (மொத்தம் 5 பாகம்!!)>>

    உங்களுக்கு எப்படின்னு தெரியலை,ஆனால் எனக்கு ஒரு பாகம் வாசிக்க 3 மணி நேரம் அதிகம் !

    பள்ளி கல்லூரி விடுமுறைகளில்(சுமார் 2 மாதத்தில்) மட்டுமே 3,4 முறைகள் படித்திருக்கிறேன் !

    ReplyDelete
  28. ரொம்ப நாள் ஆச்சே வந்தியத்தேவனோட குதிரையில் போயி... ஆரம்பிக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  29. அறிவன்,
    //எனக்கு ஒரு பாகம் வாசிக்க 3 மணி நேரம் அதிகம் !//

    நான் அப்பீட்! நான் ஒரு ஆமை'ங்க.

    ReplyDelete
  30. கொத்ஸ்,
    அவரு குதிரையிலேயே போயா ..ச்சீ .. சீ ... அது மருவாதியில்ல ...

    ReplyDelete
  31. என்னிடம் EXODUS மின்னூல் வடிவில் இருக்கின்றது. அதனை அனவைரிடமும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    கீழ்கண்ட சுட்டியின்வழி அம்மின்னூலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    http://www.mediafire.com/download.php?u1tmnjfv531

    ReplyDelete
  32. எனது வலைப்பக்கத்தில் இஸ்ரேல் என்னும் லேபலின் கீழ் 13 பதிவுகள் உள்ளன. அவற்றில் 5 நான் ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன் என்னும் தலைப்பில் வரும். மீதி எட்டில் இஸ்ரேல் பற்றி போகிற போக்கில் சொல்லியிருப்பதால் அந்த லேபலையும் போட்டிருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. உள்ளேன் ஐயா பின்னூட்டம்.
    பதிவைவிட பின்னூட்டங்கள் சுவையா இருக்குபோல.

    படிச்சுட்டு வரேன்,வருவேன்

    ReplyDelete
  34. பொன்னியின் செல்வன் பலமுறை படித்த பிடித்த புத்தகம். வந்தியத்தேவனை ஏன் அவ்வளவு பிடிக்கிறது என்பது இதுவரைக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் கதையின் பெயர் வேறொருவருக்கு உரியது. ஆனால் கதையை வந்தியத்தேவர் எடுத்துக்கொண்டார். அதே போலக் குந்தவை. இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அப்படி அடித்துக் கொள்ளும். நந்தினியின் மீது வெறுப்பு தோன்றி...அது அநுதாபமாக மாறிப் பரிதாபமாகும். மணிமேகலை.... பாவிப் பெண். காதலுக்கு உயிரையும் கொடுத்தாளே. இரண்டு திருமணங்களை ஏற்றுக் கொள்கிறவன் இல்லையென்றாலும்.... வந்தியத்தேவா மணிமேகலையையும் திருமணம் செய்து கொள் என்று நம்மைக் கெஞ்ச வைத்திடுவார் கல்கி. என்ன புத்தகம் சார். அடாடா!

    ReplyDelete
  35. எனது பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் முதன் முறையாக பொன்னியின் செல்வன் படித்தேன். "வந்தியத்தேவன்" எனது வாழ்கையில் நான் மிகவும் ரசித்த நாயகன். இதோ அட்லாண்டா மாநகரின் ஆள் அரவம் அற்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிக்கிக் கொண்ட போது எனக்கு கிடைத்த ஒரே நண்பன் பொன்னியின் செல்வன் மென் நூல். மூன்றாம் முறையாக படித்தாலும் முதல் முறை போல அதே பிரம்மிப்பும் அதே துள்ளளும் தாராளமாய் தந்தது. மணிமேகலைக்காக இளகிய நெஞ்சமும் என்னையும் அறியாமல் கலங்கிய கண்களுடனும் முடிவுரை படித்து சில மணி நேரமே ஆனது. அற்புதமான நாவல்.

    நன்றி
    தென்னவன்

    ReplyDelete
  36. //ராபின்,
    ஆமா .. நீங்க கூட வாசியுங்களேன் அந்தப் புத்தகத்தை. ரொம்ப நல்லாவும் நிறைய விஷயமும் இருக்கு. ஆனா "கண்ணாடி"யை கழட்டிட்டு வாசிக்கணும்; முடியுமா???// நல்ல வேளை, கண்ணை மூடிக்கிட்டு வாசிக்கணும்னு சொல்லாம இருந்தீங்களே :)

    ReplyDelete
  37. என் கதையைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  38. ராகவன், கண்ணனுக்கு அடுத்தபடி வந்தியத்தேவனுக்குத் தான் ரசிகர்கள் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

    அந்தப் பெயருக்கு உண்டான காந்தம் வேறு எதிலயும் நான் பார்க்கவில்லை.
    அதே போல் வந்தியத்தேவன் குந்தவி காதல்.

    ReplyDelete
  39. சதீசு குமார்,
    நிச்சயமாக இந்தப் பதிவின் இந்த உங்கள் பின்னூட்டம் பலருக்கு உதவியாக மகிழ்ச்சியாக இருக்கும். கொடுத்த தொடுப்புக்கு மிக மிக நன்றி.

    ReplyDelete
  40. டோண்டு,
    இதுவரை வாசிக்காது விட்டு விட்டேன். வாசித்துக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  41. துளசி,

    நம்ம ஸ்பெஷாலிட்டியே எப்போதும் அதுதானே. நானே பல முறை சொல்லியுள்ளேன் - என் பதிவுகளை விடவும் அவை ஈர்க்கும் பின்னூட்டங்கள் நன்றாக இருக்குமென்று.

    ReplyDelete
  42. //
    அப்போ ஒண்னு பண்ணுங்களேன். பாலஸ்தீன பிரச்சனையை உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்களேன். ஒருவேளை ஏற்கெனவே எழுதியிருந்தால் தொடுப்பு கொடுங்கள்.
    //

    இவர் ஒரு இஸ்ரேல் ஆதரவாளர். ஆகயால் பாலஸ்தீனர்கள் தவறு தான் இவருக்குத் தவறாகத் தெரியும். இஸ்ரேல் ஆதரவு நிலையையே எடுப்பார். இஸ்ரேலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிப்பவர். இதுவெல்லாம் போதாது என்பது போல் இவர் பிறந்த ஜாதி வேறு அமைந்துவிட்டது.
    இஸ்லாமிஸ்டுகளும் இஸ்ரேலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் சோசியலிஸ்டுகளும் இவரை கடுமையாகத் தாக்க ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் இதற்கெல்லாம் சளைத்தவரா இவர் ?

    ReplyDelete
  43. பொ.செ.னை இன்னும் பள்ளி கல்லூரி பாடபுத்தகத்தில் சேர்க்காதது ஆச்சர்யமே!

    சதீசு குமார் கொடுத்த exodus தொடுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  44. பொன்னியின் செல்வனைப் பலமுறை படிச்சுப் பரவசம் அடைஞ்சுருக்கேன்.
    எனக்கு எப்பவும் நந்தினியின் தலை அலங்காரம்தான் பிடிக்கும்.

    ரொம்ப அழகுஇல்லே அவுங்க. படமெடுத்தாடும் பாம்பின் கவர்ச்சி.

    இன்னொன்னும் சொல்லிக்கறேனே

    ஆதித்தன் இறந்த பக்கங்கள் இல்லாத புத்தகம்தான் முதல் முறை கிடைச்சது. என் நிலை எப்படி இருந்துருக்குமுன்னு சொல்லுங்க......
    என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு தவிப்பு.

    இங்கே இருந்த ஒரு இலங்கைத் தோழியிடம் அஞ்சாம் பாகம் மட்டும் கடன் வாங்குனேன். என் அதிர்ஷ்டம் பாருங்க...... நான் தேடும் பகுதிக்கு முன்னே இருக்கும் அத்தியாயம் ரெண்டு முறை வந்துருக்கு. வேணுங்கறதைக் காணோம்.

    ஒருவழியா இணையத்துலே தேடிப் படீசுட்டொம்லெ:-)))

    ReplyDelete
  45. டோண்டு,

    //"நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். //

    கல்லூரியில் Schindler's List படம் போட்டோம். ஒரு ஜெர்மானிய இளைஞனும் வந்திருந்தான். படம் முடிந்ததும் அவன் கேவி கேவி அழுதது மிகவும் பாவமாயிருந்தது.

    //ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ//

    This is total trash!
    What does a youth belonging to this generation got to do with Nazism? Not all German are racists!

    I befriended a few Germans in Tokyo and they were really nice.

    We talk about other people being racist, how about Indians? Don't we treat Africans & Caucasians differently? Check out the different treatment meted out to a white tourist and a black tourist all over this country.

    We need to get out of this shallow mentality!

    ReplyDelete
  46. வஜ்ரா,
    long time ... no see ?!

    புரியலை நீங்க டோண்டுவைப் பாராட்டுகிறீர்களா இல்லை குறை சொல்லுகிறீர்களா?

    ReplyDelete
  47. நான் ஆதவன்,

    நீங்கதான் ஆதவன்!

    வேணாங்க .. பாடப்புத்தகமா வச்சா இப்படியெல்லாம் அடுத்த தலைமுறை பொ.செ. பற்றி பேசாது.

    ReplyDelete
  48. துளசி,

    எனக்கு குந்தவி தலையலங்காரம், பழுவேட்டரையர் Sr. மீசை பிடிக்கும்

    //ஒருவழியா இணையத்துலே தேடிப் படீசுட்டொம்லெ:-))) //
    பிறகு, டீச்சர்னா சும்மாவா?

    ReplyDelete
  49. ஜோ,
    //This is total trash! //
    எதுக்குங்க இம்புட்டு கோவம்?

    வரலாற்றுத் தவறுகள் அப்டின்னு சிலதை சொல்லுவாங்க. அதற்கு அடுத்த தலைமுறைகளில் மன்னிப்பு கேட்பதையெல்லாம் மேள்விப்ப்டடதில்லையா?
    இர்னடாம் உலகப்போரில் ஜெர்மானியர்களின் தவறைத் தட்டிக் கேட்காததத்காக இப்போதுதான் போப்மன்னிப்பு கேட்டாரென நினைக்கிறேன். சீனாவிடமும், கொரியாவிடமும் ஜப்பான் மன்னிப்பு கேட்டது.
    and this is a sign of broad mind definitely.

    ReplyDelete
  50. ராபின்,

    //நல்ல வேளை, கண்ணை மூடிக்கிட்டு வாசிக்கணும்னு சொல்லாம இருந்தீங்களே //

    மன்னிக்கணும் ராபின். நீங்க சட்டையையே தோலாகப் போர்த்திக் கொள்ளும், கண்ணாடிகளையே கண்களாக ஆக்கிக்கொள்ளூம் வகையானவர் என்பதை மறந்து அப்படி சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  51. நன்றிக்கு நன்றி ஓகை.

    ReplyDelete
  52. //மன்னிக்கணும் ராபின். நீங்க சட்டையையே தோலாகப் போர்த்திக் கொள்ளும், கண்ணாடிகளையே கண்களாக ஆக்கிக்கொள்ளூம் வகையானவர் என்பதை மறந்து அப்படி சொல்லிவிட்டேன்.//
    கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! என்று நீங்கள் எழுதியிருப்பதின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

    ReplyDelete
  53. சதீஷ்,மிக்க நன்றி எக்ஸாடஸ் இணைப்புக்கு..
    தேடலை எளிதாக்கி விட்டீர்கள்.

    நன்றிகள் மீண்டும்..

    ReplyDelete
  54. //
    long time ... no see ?!

    புரியலை நீங்க டோண்டுவைப் பாராட்டுகிறீர்களா இல்லை குறை சொல்லுகிறீர்களா?
    //

    வேலை...பிரயாணம்...
    பிளாக்கில் ஈடுபாடு குறைந்துவிட்டது.

    நான் டோண்டுவைப் பற்றியே சொல்லவில்லை. அவருக்கு எதிர்கருத்து கொண்டவர்களுக்கு அவரைத் தாக்க ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்கிறீர்களா? என்று நான் உங்களைக் கேட்டேன்.

    ReplyDelete
  55. Exodus பற்றி இன்னொரு தகவல். வாசிப்பது குறைந்துள்ள அவசர உலகத்தினருக்கு. Paul Newman நடித்து ஒரு திரைப்படமாக வந்துள்ளது. புத்தகம் படித்தவர்கள் கூட ஒரு முறை பார்க்கலாம். Ari Ben Canaan ஐ நேரில் பார்த்த ஒரு அனுபவம் கிட்டும்.

    நேரில் பார்த்த இன்னொருவரைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். முதல் சில அத்தியாயஙளில் சைப்ரஸ் தீவில் கப்பலில் போராடி (2 மணி நேரத்துக்கு ஒரு தற்கொலை தான் உச்ச கட்ட பொராட்டம்) பின் பயணப்பட்ட 300 சிறுமிகளில் ஒருவரை இப்போது மூதாட்டியாக பார்த்தேன். அது ஒரு புல்லரிக்க வைக்கிற அனுபவம்.

    Arulraj Navamoni

    ReplyDelete
  56. அருள்ராஜ் நவமணி,
    எந்த அருள்ராஜ் நவமணி? எனக்குத் தெரிஞ்ச U.S.-ல குடியேறிட்ட A.C.- Physics ஆளா?

    exodus படம் வந்ததே தெரியாது. அந்த 'சிறுமி'கூட பேசினீங்களா? should have been a great experience.

    ReplyDelete
  57. பதிவும், பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம். இரண்டு புத்தகங்களும் பலமுறை படித்ததால் சுலபத்தில் relate செய்துகொள்ள முடிந்தது.

    அனுஜன்யா

    ReplyDelete
  58. //அனுஜன்யா said...
    பதிவும், பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம்.//

    எப்பவுமே நம்ம பதிவின் பின்னூட்டங்கள் அமர்க்களமாகவே இருக்குமுங்க. அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete
  59. Dear Dharumi
    அதே அருள்ராஜ் நவமணி தான். அமெரிக்கன் காலேஜ் செய்திகளைத் தெரிந்துகொள்ள உங்கள் வலைப்பூவை அணுகினேன். உங்கள் மற்ற பதிவுகளினால் கவரப்ப் பட்டேன். Exodus ப்ற்றி பார்த்தவுடன், "மறைந்திருந்து பார்க்கும் மர்ம"த்தை உடைக்கத் துணிந்தேன்.
    அந்த 'சிறுமி' இப்போது 'பாட்டி'. அவர்களுடைய வியப்பு என்னவென்றால் அவர்களுக்கே ஞாபகம் இல்லாத, அல்லது புரியாத விஷயங்கள் எனக்கு தெரிந்திருப்பது. உதாரணமாக அந்த முதல் கப்பல் பயண்த்தின் பெயர் "மொஸால் அலிஜா பெத்".
    பல மலரும் நினைவுகல்ளை "உசுப்பி" விட்டதற்கு நன்றி. இந்த நன்றி உங்களுடைய மற்ற மதுரை, மற்றும் அந்த கால ரயில் பயணம், திரைப்படம் (ரீகல் டாக்கீஸ்) பற்றிய பதிவுகளுக்கும் சேர்த்துத்தான்!
    Can I email you to catch up on things, which may not be of any interest to other bloggers? Thanks for remembering me!

    ReplyDelete
  60. //"மறைந்திருந்து பார்க்கும் மர்ம"த்தை..//
    ஓ! அப்படியும் சில வாசகர்கள் இருக்கீங்க போலும்.

    //Thanks for remembering me!//
    ஆமால்ல அது ஒரு 20-25 வருஷம் இருக்குமா? அதைவிட அதிகமில்லையே?


    //Can I email you to catch up on things..//
    இதென்ன கேள்வி .. PLEASE ...

    ReplyDelete
  61. I was attracted by the fact that the title contained the titles of the two books I had been familiar with. I expected a lot of comparison and that intrigued me. But it looks only two or three people have read both and they liked both. I liked Exodus. Even though I read it only once, I saw the movie a few times to share the experience with friends. And it led me to read almost all of Leon Uris novels.

    பொ.செ. நான் முழுவதும் படிக்கவில்லை. இடையிலேயே நிறுத்திவிட்டேன். காரணத்தைக் கீழே சொல்லி இருக்கிறேன். நானும் பள்ளியில் படிக்கும்போது "பார்த்திபன் கனவு" படித்து மயங்கினவன்தான். பொ.செ. படிக்க ஆரம்பிக்கும்போது என் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். Maybe that is why I was so critical.

    நான் பொ.செ. படிப்பதை நிறுத்திய இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சில இலங்கை புத்த பிக்ஷுக்கள் பொ.செல்வனுக்கு இலங்கை மணி மகுடத்தையும், சிங்காதனத்தையும் வழங்க முன் வரும்போது தர்ம நியாயங்களைக் காரணம் காட்டி ம்றுத்து விடுகிறார் அருள்மொழி வர்மர் (பொ.செ). அதைப்பற்றிய வந்தியத்தேவனுடைய reaction கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


    ---------------
    இரண்டாம் பாகம் : சுழற்காற்று

    35. இலங்கைச் சிங்காதனம்
    ..........
    அரைநாழிகை நேரத்துக்குப் பிறகு இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். விஹாரத்துக்குள் இருந்தவரையில் வாயைக் கெட்டியாக மூடி வைத்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது அடக்கி வைத்திருந்த எண்ணங்களையெல்லாம் அவிழ்த்து விட்டான்.

    "சோழ நாடு! நீர்வளம் நிலவளம் பொருந்தியதுதான். ஆனால் இந்த இலங்கைக்கு இணையாகாது. இப்படிப்பட்ட இரகசியத் தீவின் சிம்மாசனம் வலிய வந்ததை உதைத்துத் தள்ளிவிட்டீர்களே! இது என்ன பேதைமை? தங்களை அழைத்து மணிமகுடத்தை வழங்க வந்த பிக்ஷுக்களின் மதியை என்னவென்று சொல்ல? அடுத்தாற்போல், நானும் தூணோடு தூணாக நின்றுகொண்டிருந்தேனே? எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று இப்படியெல்லாம் பொருமிக் கொட்டிக் கொண்டிருந்தான்.
    ............

    வந்தியத்தேவனுடைய கூற்று அவனுடைய தகுதிக்கு சற்றும் ஒவ்வாது என்பதை ஒத்துக்கொள்ளுகிறவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். சக்கரவ்ர்த்தியிடமிருந்து இளவலுக்குத் தூது செல்லும் தகுதியுள்ள ஒருவன் அவன். An ambassador! அவனை ஏன் இவ்வளவு அறிவிலியாக கல்கி காட்டுகிறார்? பொ.செல்வனை இன்னும் உச்சிக்கு கொண்டு செல்வதற்காக. இது இப்போதும் திரைப்படங்களில் வரும் ஒரு மட்டமான உக்தி. நம்முடைய கதநாயகர்களை உயர்த்திக் காட்ட அவனுடன் எப்போதும் ஒரு idiot இருப்பான். அவனை சதா இகழ்ந்து கொண்டோ (insult) அல்லது கன்னத்தில் அறைந்தோ (என்ன கொடுமை) கதாநாயகன் தன் மேதாவித்தனத்தை நிலை நாட்டிக் கொள்வான்.

    ஆனால் இங்கே ஒரு கதை மாந்தனை அடி முட்டாளாகக் காட்டுகிறார் கல்கி, (பொ.செ. என்பது புதினத்தின் பெயரானாலும், வந்தியத்தேவன் தான் கதாநாயகன்.) இது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த இடத்தில் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வனைப் பாராட்டுவதாக அமைத்திருக்கவேண்டும். "எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்பது அபத்தத்தின் உச்சம். இப்படி ஒரு அரைகுறையைக் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட புதினத்தை என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதற்கப்புறமும் அவனோடு மானசீகமாகக் குதிரையில் போகிறவர்கள் போகட்டும்!

    Consistency in charactersஐ நமது திரைப்படங்க்ளும், புதினங்களும் தொலைத்து வெகு நாட்களாகிவிட்டன என்றாலும், கல்கியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது வேதனைக்குரிய விஷயம்.

    ReplyDelete
  62. கறுப்பா இருந்தாலும் கலையா இருக்குது!(புதுமுகப் படத்தைச் சொன்னேன்:)

    ReplyDelete
  63. //perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன!//

    எழுத்தின் துவக்கத்திலிருந்து அத்தனைக்கும் பின்னூட்டம் போடணுமின்னு தோணுது.

    பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் மட்டுமே மனசில் பசக் என ஒட்டிக்கொண்டான்.நீங்கள் சொன்னதுபோல் தஞ்சைக் கோயிலில் அவ்வளவு பெரிய கோயிலில் அம்மாம் பெரியக்கல்லை ஏற்றிவைத்தது ஆச்சரியமான விசயம்தான்.கோயிலுக்குள் இருந்த கணங்கள் பொன்னியின் செல்வன் காலத்துக்கே கொண்டு செல்லும் உணர்வுதான்.

    அதுசரி.அறிவன் ஐயாவுக்கு அந்தக்காலத்தில் வேற புத்தகமே படிக்க கிடைக்கவில்லையா?50 தடவை படிச்சேன்ங்கிறாரு:)

    நேற்றுக்கூட ஒரு நண்பர் இஸ்ரேலியர்கள் பற்றி வியந்து பேசினார்.சுற்றியும் பகைவர்களை வைத்துக் கொண்டு உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே காட்டும் சாதுர்யம் ஆச்சரியப்படக் கூடியதுதான்.புத்திசாலித்தனம் உலகப் பிரசித்தி என்றாலும் எனக்குப் பிடித்தவர் எதிர்வீட்ல இருந்து எதிர்ப்பாட்டு சிந்துபாடும் நோம் சாம்ஸ்கி.

    பைபிள் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு இனமே அடித்து துரத்தப் பட்டது அவலத்திற்குரியது.அந்தப் பகைமையில் பாலஸ்தீன மக்கள் இப்பொழுது அவஸ்தைப்படுவதும் மறுப்புக்குரியது.

    சக மனிதனுக்கும் வாழும் உரிமையுண்டு என்ற மனித இயல்புக்கு இஸ்ரேல் வந்தால் மகிழ்ச்சையடைவேன்.

    ReplyDelete
  64. எங்கே டோண்டு சாரை ஆளைக்காணோமின்னு பார்த்தேன்:)என்ன சொல்றாருன்னு பார்த்துட்டு வருகிறேன்.

    ReplyDelete
  65. பின்னூட்டத்தை முழுசாப் படிக்க விடாம சதிசு குமாரு எங்கோயே கொண்டு போகிறாரே!

    சரி!சரி!கிணற்று வெள்ளத்தை ஆறா கொண்டு போகப் போகிறது?

    நன்றி.சதிசு!இணைப்புக்கு வருகிறேன்.

    ReplyDelete
  66. Exodus கண்ணுக்கு வந்திருச்சு.டாட்டா!

    ReplyDelete
  67. அருள்ராஜ் அவர்களின் பார்வை சற்று வித்தியாசமானது தான். இப்போது இல்லாத கல்கி அவர்களுக்கு நான் கொஞ்சம் சப்பைக்கட்டு கட்ட முயல்கிறேன்:

    வ.தேவன் இயல்பிலேயே குறும்புடனும், அவ்வளவாக முதிர்ச்சி இல்லாத வாலிபனாகத்தான் அறிமுகம் ஆகிறான். பொன்னின் செல்வன் அருகில் இருந்து, அவரிடம் பழகி, அவரைக் கவனித்த பின்பே ஓரளவு நிதானமும், முதிர்ச்சியும் பெறுகிறான். சமயோசிதமாகப் பேசுவதும், சாதூர்யமாக வாதிடுவதும் வேறு. அறிவு நுட்பத்துடனும், முதிர்ச்சியுடனும் செயல்படுவது வேறு. முதல் பாகத்து 'ஆடிப் பெருக்கு' வ.தேவனுக்கும் மணிமேகலை மாளும் கடைசி பக்க வ.தேவனுக்கும் ஒரு பெரிய மாற்றம் வந்ததை, கதாசிரியர் விளக்குவதுடன், வாசகர்களும் உணர்ந்தே இருப்பார்கள். ஆதலால், இந்த சிறிய குறை (உங்கள் பார்வையில்) ஒன்றைக் காரணம் காட்டி, ஒரு அரிய பொக்கிஷத்தை இழக்காதீர்கள்!

    Benhur படத்தில் சாரட் பந்தயக் காட்சிகளில், ஒரு காட்சியை freeze பண்ணிப் பார்த்தால் ஒரு automobile தெரியும் என்பது எங்கள் பதிண்ம பருவத்தில் நாங்கள் சட்டைக் காலரைத் தூக்கிக் கொண்டு திரிந்தபடி 'என்ன படம் எடுக்குறான்' என்றது ஞாபகம் வருகிறது.

    ஆதலால், எங்களுக்காக ஒரு முயற்சி செய்யுங்கள். பொ.செ. படியுங்கள்-முழுவதுமாக.

    அன்புடன் அனுஜன்யா

    ReplyDelete
  68. அருள்ராஜ்,
    எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம்; பொ.செ. இப்போது படித்தால் எனக்குப் பிடிக்குமா? சிறுவயதில் வாசித்ததால் மட்டுமே அந்த அளவுக்குப் பிடித்துப் போயிற்றா என்று எப்போதுமே ஒரு கேள்விக்குறி தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருந்ததுண்டு.

    எந்தக் கதை வாசித்தாலும் வாசிக்கும் காலத்தின் மனநிலை முக்கியமென்றே நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டமும் அதையே உறுதிப் படுத்துகிறது.

    ReplyDelete
  69. //புதுமுகப் படத்தைச் சொன்னேன்//
    ஹி .. ஹி ...

    //எழுத்தின் துவக்கத்திலிருந்து அத்தனைக்கும் பின்னூட்டம் போடணுமின்னு தோணுது.//

    தோணுறத பண்ணிடுங்க ...

    //Exodus கண்ணுக்கு வந்திருச்சு.டாட்டா!//

    ஒரேயடியா டாட்டா காமிச்சா எப்படி? படிச்சிட்டு எப்படி என்ன ஏதுன்னு வந்து சொல்லுங்க ..

    ReplyDelete
  70. "யாரடா இவன், அதிகப்பிரசங்கி, கட்டையை எடுத்து அடியுங்கள்" என்பது போன்ற response-ஐ எதிர் பார்த்தேன். மிகவும் மென்மையாக, ஆனல் உறுதியாக பதிலளித்திருக்கிறீர்கள், ஆனுஜன்யா, நனறி. இது 'சப்பைக்கட்டு' அல்ல. Your argument about V's formattive years makes sense. இப்போது வாசிப்பது என்பதே ஒரு சவாலாக இருக்கிறது. ஏற்கெனவே என்னுடைய லிஸ்டில் இருக்கும் "Crime & Punishment", "War & Peace" புத்தகங்களையே இன்னும் படிக்க முடியவில்லை. பொ.செ.யையும் சேர்த்துக்க் கொள்ளுகிறேன்.

    Ben Hur பற்றி சொன்ன விஷயம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அதை verify பண்ணிக்கொள்ளவுமில்லை; அது உண்மையாய் இரூக்கும் பட்சத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதுமில்லை.

    //தருமி:எந்தக் கதை வாசித்தாலும் வாசிக்கும் காலத்தின் மனநிலை முக்கியமென்றே நினைக்கிறேன். //

    ஒத்துக்கொள்கிறேன். ஒரு உதாரணம். Erich Segal's "Love Story" நான் மாணவப் பருவத்தில் டஜன் தடவைகளுக்கு மேல் படித்த புத்தகம். மொத்தம் 150 பக்கங்களே உள்ள சிறிய புத்தகம்தான். ஆனால் அதே புத்தகத்தை சமீபத்தில் படித்தபோதும் அதே involvement-ஓடு படிக்க முடிந்தது. வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், முன்பு படிக்கும்போது எனக்கு இளைஞனாகிய கதாநாயகன் சொல்லுவது நியாயமாகப் பட்டது; இப்பொது அவனுடைய அப்பா சொல்லுவது சரியென்று படுகிறது! I was amazed by the author's ability to put himself in both the Father's and the son's shoes! So that is why some books can always be cherished.

    ஜெயகாந்தன் அமெரிக்கன் கல்லூரியில் பெசும்பொது அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். அவருஅடைய "பாரீஸுக்குப் போ!" புதினத்தில் வரும் அப்பா சேஷையாவின் வாதமும், மகன் சாரங்கனின் வாதமும் சரியென்று படுகிறதே. அவர் (ஜெ) யாருடைய கட்சி என்று கேட்டேன். அவர் தான் யார் கட்சியும் இல்லையென்றும், இரண்டு பேருடைய நிலைப்படுகளையும் சொல்லுவதுதான் அவருடைய வேலை, முடிவெடுப்பதோ, ஒரு கட்சியைச் சாருவதோ வாசகனுடைய பொறுப்பு என்றார்.

    தருமி, நீங்கள் சொல்லுவதுபோல், மனநிலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால், அதையும் மீறி விரும்பப்படும் புத்தகங்கள் உள்ளன, even if don't agree with evrything the books say.

    கொஞ்சம் நீளமாக எழுதி விட்டேனோ?

    ReplyDelete
  71. உங்களைப்பற்றியும் இந்த பதிவு குறித்தும் முக்கியமாக EXODUS குறித்து எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

    http://parvaiyil.blogspot.com/2011/06/exodus.html


    மீண்டும் நன்றி.

    ReplyDelete