Friday, March 27, 2009

301. வாராரு .. வாராரு .. வோட்டாண்டி

*
300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

பதிவு உலகத்துல என்னத்த பெருசா பேசிட போறாங்க? வெட்டி பயலுக .. எல்லாம் டீக்கடை பெஞ்சுல உக்காந்து பேசுறத இங்க கணிப்பொறி முன்னாடி உக்காந்து பேசிட்டு இருக்காங்கனு தான் நான் ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். தருமி ஐயா பதிவ பத்தி விகடன் வரவேற்பறைல போட்டு இருந்தாங்க. சரி என்ன தான் இருக்குன்னு படிச்சு பாப்போமேன்னு ஒரு நாள் மனச திடமாக்கிட்டு ஓபன் பண்ணேன்.

முதல் பதிவு ஞானி-கலைஞர் சர்ச்சைய பத்தி இருந்துச்சு. அப்பறம் "கற்றது தமிழ" பத்தி இன்னொன்னு நெனைக்கிறேன். படிச்சு நல்லா இருந்துச்சுன்னு பீல் பண்ணதுனால (இத எழுதுறதுக்கு தருமி ஐயா எந்த சன்மானும் எனக்கு குடுக்கல என்பதை இந்த இடத்தில் தெரிவிச்சிக்கிறேன் ) நம்ப ஐயாவ பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். அதுக்கு பதிலும் அனுப்பி இருந்தாரு.

"பதிவு உலகத்துக்கு என்ன மாதிரி ஒரு சிறந்த(?) வாசகன அறிமுக படுத்தி வைத்தவர்னு" நம்ப தருமி ஐயா மதுரை பூரா ரவுசு உட்டு சுத்திட்டு இருக்குறத பத்தி இப்ப சொன்னா நல்ல இருக்காது.

seriousana matter-க்கு வருவோம். இவர் பதிவுல இருக்குற highlight-ஆன topic -- இட ஒதுக்கீடு(இடப் பங்கீடு), மற்றும் பகுத்தறிவு சமாச்சாரங்கள். anti-reservationista இருந்த என்ன slighta pro-reservationist side-யைப் பத்தி கொஞ்சம் சிந்திக்க வைத்ததற்கு நம்ப ஐயா பதிவுகள் தான் காரணம். இட ஒதுக்கீட பத்தி இவர் போட்டு இருக்கும் பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். ஆனால் follow-up பதிவுகள் ரொம்ப கம்மி. ஆரம்பத்துல இருந்த சூடு போக போக இல்லாம போயிடுச்சு. இட ஒதுக்கீடு பற்றிய செய்திகள் எல்லாம் நான் இவருக்கு அனுப்பி வச்சி, இத பற்றியும் பதிவு போடுங்கனு கெஞ்சுற அளவுக்கு கொண்டு வந்துட்டார்.

அப்பறம், என்னை வேற பதிவு போட சொல்லி கொஞ்சம் காலத்துக்கு மிரட்டிட்டு இருந்தார். அப்பறம் ஞானி சாயல்ல எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப softa deal பண்றது எனக்கு பிடிக்காத ஒரு விஷயம். சோதிடம், மதங்கள் பற்றி எல்லாம் நல்ல விதமாவே விமர்சனம் பண்ணி இருந்தாலும் அதுல காரம் ரொம்ப கம்மியாக இருந்துச்சு. ஆனா ஒரு point-க்கு value add பண்ண பல இடங்கள்லேந்து facts குடுத்து அசத்துவாரு. எந்த ஒரு சமூக பிரச்சனைய பத்தி details வேணும்னாலும் மொதல்ல இவர் கிட்ட "நீங்க இத பத்தி எதாவது பதிவு போட்டு இருக்கீங்களா?" னு கேட்டு வாங்கி படிச்சி இருக்கேன். (இத சாக்கா வச்சிக்கிட்டு archives-ல இருக்கிற பழைய பதிவுகள எல்லாம் படிக்க சொல்லி தள்ளி விட்டு இருக்கார்) .

இன்னொரு பிடித்த விஷயம் என்னன்னா எந்த ஒரு mattera பத்தி பேசும்போதும் அதை deepa analyze பண்ணிட்டு தான் எழுதுவார். ஆனால் சில சமயம் stereo-type-ஆ ஒரே mattera மறுபடி மறுபடி போடுவார். eg:anti-hindutva பதிவுகள்.

மணிரத்தினம்-ரஹ்மான் பிடிக்காதுன்னும் பாலா-இளைய ராஜா பிடிக்கும்னும் சில பதிவுல சொல்லி இருக்கார். அதனால ரஹ்மான் oscar வாங்குனப்ப அவர பாராட்டி ஒரு பதிவு கூட போடல!!

அப்பறம் serious matter பேசுறப்ப திடீர்னு நடுவுல nicea சொந்த கதைய சொருகிடுவார்.
eg: ஹிந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகள்ல விமானத்துல போயிட்டு வந்த கதைய நேக்கா நுழைத்து இருப்பார். ஹிந்தி எதிர்ப்பு பதிவுகளையும் இவரோட காரம், கோபம் ரொம்ப கம்மி. (அந்த நேரத்துல பிறக்காத எனக்கு இருக்கற கோபம் கூட அந்த பதிவுகள்ல missing).
பதிவு போடறதோட நம்ப வேலை முடிஞ்சிடுசுனு இல்லாம சமூக அக்கறையோட சில காரியங்கள் செய்வதற்காக இவர பாராட்டியே ஆவணும். eg: department of adminstrative reforms and public grievance-க்கு இவர் அனுப்பின சில புகார்கள். மதுரை காவல் துறைக்கு இவர் சற்றும் மனம் தளராமல் அனுப்பின சில குறுஞ்செய்திகள். பதிவர் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள்......

மதுரை style-லில் சில விஷயங்கள கமுக்கமா கிண்டல் பண்ணி இருப்பார்.
eg:
//ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது. (அப்படி ஒன்று இருந்தால்தானே!) //-- நெனைச்சி நெனைச்சி சிரிக்க வைத்த கிண்டல்.

சொல்ல வர்ற விஷயத்த நேரடிய சொல்லாம சில சமயம் சொந்த கதை, சம்பந்தமே இல்லாத சில பல விஷயத்த எல்லாம் ஒரே பதிவுல cover பண்ணாலும் இறுதி வரைக்கும் tempo maintain பண்ணி interestingave பதிவ முடிப்பார்.

திடீர்னு சொல்லாம கொள்ளாம பத்து-இருபது நாளுக்கு பதிவே போடாம காணாம போயிடுவார். பதிவு உலகத்துல உங்க presence இருக்கணும்னா வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்கனு தாழ்மையோட கேட்டுக்கொண்டு (retire ஆயிட்டு வீட்ல சும்மா தான உக்காந்து இருக்கீங்க) என்னோட விமர்சன மடல முடித்து கொள்கிறேன்.

--வோட்டாண்டி

*

24 comments:

  1. 300 முடிச்சி 301 ஆ !

    வாழ்த்துக்கள்!

    //திடீர்னு சொல்லாம கொள்ளாம பத்து-இருபது நாளுக்கு பதிவே போடாம காணாம போயிடுவார். பதிவு உலகத்துல உங்க presence இருக்கணும்னா வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்கனு தாழ்மையோட கேட்டுக்கொண்டு (retire ஆயிட்டு வீட்ல சும்மா தான உக்காந்து இருக்கீங்க) என்னோட விமர்சன மடல முடித்து கொள்கிறேன்.//

    வோட்டாண்டியை வழிமொழிகிறேன்!
    :)

    ReplyDelete
  2. ஓ.. எனதருமை பேராசிரியர் 300-ஐ தாண்டிவிட்டாரா..?

    வாழ்த்துக்கள்..!

    ஐயாவின் பதிவுகளை அப்படியே பிட்டு, பிட்டா ஓட்டி ஸ்கேன் பண்ணியிருக்காரு வோட்டாண்டி..

    அது அத்தனைக்கும் அப்படியே ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன்..

    மத்தபடி ஐயா மதுரையில இருந்தாத்தான் மதுரைக்கார மக்களுக்கு கொஞ்சமாச்சும் மதுரை தளபதியின் பயம் இல்லாம இருக்கும்..!

    இந்நேரம் ஐயா அவுங்க தே.மு.தி.க.லோ, அ.இ.ச.ம.க.லோ சேர்ந்திருந்தா மதுரை தளபதியை எதிர்த்து நிக்குற சான்ஸ் கிடைச்சு ஜெயிச்சிருக்கலாம்..

    காலம் கடந்து போகலை.. இனிமேலாச்சும் ஐயாவுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, இந்தக் கட்சிகள்ல சேர வைச்சு, மதுரைக்கார மக்களுக்கு நல்லது செய்ய வைக்கணும்னு என் அப்பன் முருகனை மனமுருக வேண்டிக்கிறேன்..

    ReplyDelete
  3. உங்க பதிவில் வோட்டாண்டி Ph.D பண்ணியிருக்கார்!

    நல்லா நகைச்சுவையாகவும் இருந்தது!
    தேங்க்ஸ் டூ வோட்டாண்டி!

    ReplyDelete
  4. 300 தாண்டியதுக்கு வாழ்த்துக்கள்!

    விரைவில் லாரா வை முந்தனும்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் தருமி அய்யா.வோட்டாண்டியின் விமர்சனம் அருமை.

    தருமி அய்யா நிறைய எழுத வேண்டும்.(கோவியார் , ஆயிரம் பதிவுகள் எழுதியுள்ளாராம்)

    ReplyDelete
  6. வாவ்! தருமி 300 பதிவுகளா? எனக்கு இன்னமும் 3 வருஷம் எடுத்துக்கும் போலவே அங்கே வந்து நிக்க.

    வோட்டாண்டி பிட்டு பிட்டு வைச்சிட்டாரே ஆதி காலத்து பதிவுகளிலிருந்து இன்றைய நாள் பதிவு வரைக்கும், வோட்ஸ் - அசத்தல் எல்லா பதிவுகளையும் படிச்சததிற்கு :-)

    ReplyDelete
  7. 300க்கு வாழ்த்துகள் !

    மொய் போட்டாச்சு !
    :))))))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தருமி அய்யா

    -குடுகுடுப்பை-

    ReplyDelete
  9. உண்மை(யூ)த் தமிழன்,

    //...மதுரை தளபதியின் பயம் ..//


    மதுரையில யாருங்க தளபதி? அப்படியெல்லாம் யாரும் இங்க இல்லைங்க. எங்க எல்லாத்துக்கும் இருக்கிறது "ஆனா' மட்டும்தாங்க ..!

    ReplyDelete
  10. நாகை சிவா,
    லாரா தத்தை எதுக்கு முந்தணும்? அந்த அம்மாவும் ப்ளாக் எழுதுறாங்களா என்ன?

    :)

    ReplyDelete
  11. ஜாலி ஜம்பர்,

    //.(கோவியார் , ஆயிரம் பதிவுகள் எழுதியுள்ளாராம்//

    முடியிருக்கிற மவராசி அள்ளி முடிஞ்சுக்குறா .. நம்ம என்ன பண்றது அதுக்கு?

    ReplyDelete
  12. சிபி,
    வால்ஸ்,
    தெக்ஸ்,

    ரொம்ப நன்றிங்க..

    வோட்டாண்டி வந்து அவரும் நீங்க சொன்னதுக்குப் பின்னூட்டம் போடுவாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. கோவி,
    வரவு வச்சாச்சி .. நன்றி


    குடுகுடுப்பை,

    ஓ! இப்படி ஒரு ஆசையா ... நல்லது. நடக்கட்டும் (ப்ளாக் டெவலப்மெண்ட் ஆபீசரா நம்மள போட்டு கவனிச்சிருங்க .. சரியா?

    ReplyDelete
  14. என்னோட விமர்சன மடல விமர்சனம்(!) பண்ண அனைவருக்கும் நன்றி...
    இஸ்லாம் மதத்த பத்தி இவர் எழுப்பி இருந்த கேள்வி பதிவுகள இந்த விமர்சன மடல் எழுதுன அப்பறம் தான் படித்தேன்...நல்லடியார் குடுத்த toruture...இப்னு பஷீர், மற்றும் சில இஸ்லாம் பதிவர்கள் இவர பத்தி நக்கலா அவங்க பதிவுஉலகதுல அவங்க குள்ளையே பேசி சிரிச்சிட்டு இருந்தது...இந்த matterlam எனக்கு தாமதமாக தான் தெரிய வந்துச்சு..

    அந்த மேட்டர்லாம் பார்த்ததுக்கு அப்பறம் இன்னொரு pointum சொல்லியே ஆவணும்...
    தருமி ஐயாவுக்கு பொறுமையும் ரொம்ப அதிகம்...(முதிர்ச்சி!!)

    ReplyDelete
  15. தருமி ஐயா,
    இதுவரைக்கும் தங்களோட election manifesto, ideology (கொள்கை), எதையும் வெளியிடாத ஒரு கட்சியின் (DMDK) இணைய தள கொள்கை பரப்பு செயலாளரா இன்னமும் இருக்கீங்களா??

    ReplyDelete
  16. அனைத்து பதிவர்களுக்கும் ஒரு அறிவுப்பு,
    பதிவுகளுக்கு தகுந்த விமர்சனம்(சன்மானத்திற்கு ஏற்ப) எழுதி தரப்படும்
    --இங்கணம்
    வோட்டாண்டி

    ReplyDelete
  17. வோட்ஸ்,
    மொதல் பின்னூட்டத்தில ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே!

    கடைசி பின்னூட்டத்தில், என்னமோ சொல்லீட்டீங்க .. இப்படியா உண்மைய டொம்னு போட்டு விஷயத்த உடைக்கிறது!

    ஆனாலும் காசோலை குடுத்து, அதுவும் வங்கியில encash-ஆயிரிச்சின்னு தெரிஞ்ச பிறகுதான் விமர்சனம் அனுப்புவேன்னு அடம் பிடிக்கிறது நல்லாவா இருக்கு! ஏதோ பாத்து செய்யுங்கப்பா .....

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் தருமி. தலைப்பை பார்த்து இது கூட்டணிகள் குறித்த விமரிசனப்பதிவாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.

    ReplyDelete
  19. பத்மா,
    எப்படியோ (ஏமாந்து..) வந்திட்டீங்களே .. அதுவரை நல்லது.

    ReplyDelete
  20. 300 ஆஆஆஆஆஆஆஆஆ!

    முடியிருக்கிற மவராசி அள்ளி முடிஞ்சுக்குறா .. நம்ம என்ன பண்றது அதுக்கு?

    ரிப்பீட்டே:)

    ReplyDelete
  21. 300 வது பதிவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  22. //தலைப்பை பார்த்து இது கூட்டணிகள் குறித்த விமரிசனப்பதிவாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.

    எல்லாம் நம்ப பேருக்கு இருக்குற மதிப்பு

    ReplyDelete
  23. ராஜ நடராஜன்,
    (முதல் முறையா வந்திருக்கும்) ஞானசேகரன்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  24. வாழ்த்துகள் வாத்தியாரே!

    ReplyDelete