Friday, December 18, 2009

360. WHY I AM NOT A MUSLIM ... 2

*


ஏனைய பதிவுகள்:


*


Chapter I

THE RUSHDIE AFFAIR

*
14 பிப். 1989-க்கு முன்னால் ..

1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

1937-ல் எழுதப்பட்டு, 1974-ல் மட்டுமே பதிப்பிக்கப்பட்ட Dashti என்பவரின் 'இருபத்தி மூன்று ஆண்டுகள்' ( நபி தூதுவராகச் செயல்பட்ட 23 ஆண்டுகள் ) என்ற நூல் 1980-1986 வரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்ட அந்த நூலில் -

*
பகுத்தாயும் அறிவினை ஆதரித்து, கண்மூடித்தனமான நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். அந்த வகை நம்பிக்கைகள் அறிவு மிக்கவர்களின் மூளையின் கூர்மையைக் கூட மழுக்கடிக்கின்றன.

*
குரானின் மொழிநடை பற்றிக் கூறுகையில், குரானின் வாசகங்களின் அமைப்பும் நடையழகும் மிக உயர்ந்தவை அல்ல; இதைப் போன்றோ இதைவிட மேலாகவோ இன்னொரு கடவுள் நம்பிக்கையாளர்களால் எழுத முடியக்கூடியதே. (5)

*
குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

* குரானில் புதிதாக ஏதும், அதுவரை சொல்லப்படாதவைகள் ஏதும் சொல்லப்படவில்லை.

*
இஸ்லாமில் சொல்லப்படும் கடமைகளும், சமயச் சார்புள்ளவைகளும் ஏற்கெனவே இருந்துவந்த பாகனிய அராபிய, யூத வழக்கங்களே.

*
நபியின் வழித்தோன்றல்களுக்கு கொலை செய்வதைக் கூட இஸ்லாமியக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. (5)

*
Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும். (7)

*
Farah Fada அவரது 'NO to Sharia' என்ற தன் நூலில்: சமயங்களும் அரசியலும் தனித் தனியே கையாளப்பட வேண்டும்; ஏனெனில் இஸ்லாமால் ஒரு மதச்சார்பற்ற, தற்காலத்திற்கேற்ற அரசாங்கத்தை நடத்த முடியாது. (8)

*
பிப். 14, 1989-க்குப் பிறகு ...

ஈரானிய கோமேனி கூறியவைகள்: "புகழ் பெற்ற இஸ்லாமிய அகராதி ஜிகாட் என்பதை 'முகமதின் கொள்கைகளை நம்பாதவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஒரு யுத்தம். குரானில் சொல்லப்பட்டது போல் அது ஒரு தெய்வீகக் கடமை; இஸ்லாம் பரவுவதற்கும், இஸ்லாமியரிடம் உள்ள தீமைகளை வேரறுக்கவும் பயன்படும்'.(12)

*
இப்பகுதியில் ஆசிரியர் ரஷ்டிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பேசிய பலரின் கூற்றுக்களைத் தொகுத்தளிக்கிறார். இறுதிப் பத்தியில்: படைப்பைப் பொறுத்தவரையில் விவிலியமும் குரானும் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதைப் பற்றிச் சொல்கின்றன. ஆனாலும் பல கிறித்துவர்கள் அறிவியல் சொல்லும் பரிணாமக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளில் ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் பெற்றோர்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். விவிலியத்தில் சொல்வது போல் நம் 'முதல் பெற்றோர்கள்' என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அந்த 'முதல் காலடியைக்' கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. (33)



*


*

34 comments:

  1. ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் பெற்றோர்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ////

    எக்கசக்கமான ஆட்கள் இன்னமும் பரிணாமத்தை நம்ப மாட்டேன் என்று பல பேர் கூறுகிறார்கள் சார். ஆனால், இப்படி எல்லாருமாக இல்லை.

    மதத்தை, கடவுளைப் பற்றி ரொம்ப மட்டமாகத் திட்டுவதைக் கூட கிறிஸ்தவர்கள் இவர்கள் பொறுத்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  2. """""""குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன."""""""""""""
    என்னென்ன தவறுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அடுத்த கட்டுரைகளில் பதிவிடுங்கள் தருமி ஐயா.நாங்களெல்லாம் நோட்ஸ் எடுத்து வச்சுப்போம் பிற்காலத்தில் உதவியாயிருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
    வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும்.//

    இப்னு வர்ராக் என்பவர் எழுதியிருக்கும் இந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துப் பதித்துள்ளீர்கள். எவ்வித விமர்சனமுமில்லாமல் நீங்கள அவைகளைப் பதிந்துள்ளதால், அவர் கூறுவதை நீங்கள் ஆமோதித்து மற்றவர்களுக்கு அறியத்தருகிறீர்கள் என்றே கொள்ளமுடியும்.

    இவைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்துவிட்டீர்களா ?

    நபிகளாரின் மனைவியரை, விலைமாதர்கள் போல் சித்தரித்த ருஷ்டியின் தூஷண‌த்தினைவிட கடாஃபியின் தூஷணம் எந்த அளவிற்கு மோசமானது என அறியத்தரவும்.

    "மிரட்டல்" என்பவர் கேட்டிருப்பது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அது சற்று ஆழமானது.

    குர்ஆனில் நூற்றுக்கும் மேல் தவறுகள் உள்ளதினை நீங்கள் கண்டு உணர்ந்தது போலோவோ அல்லது படித்து அறிந்ததுபோலோவோ ஆமோதிக்கும் தொனியில், நீங்கள் அதனைத் தேர்ந்தெடுத்து காட்டியிருப்பதால், அவைகள் யாது என அறியத்தருவது உங்கள் நேர்மைக்குட்பட்ட செயல்.

    ReplyDelete
  4. மாலிக்,
    நீங்கள் satanic verses வாசித்து விட்டீர்களா?

    ReplyDelete
  5. உங்கள் இந்த கேள்விக்கு அவசியத்தினைக் கூறவும் தருமி

    ReplyDelete
  6. thank you malik.
    விடை சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அடேடே ! பதில் சொல்லிட்டேனா ?! :) இல்லையே தருமி, நான் இன்னும் பதில் சொல்லலையே !

    நீங்க கேட்ட கேள்வி பதிவுக்கோ விவாதத்துக்கோ அப்பாற்பட்டு, ஏதோ என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் போல நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். என் விவாதத்தினைப் பார்க்கும் போது, உங்கள் கேள்விக்கான தேவையைக் காண முடியாததால், நான் அறிய முயற்சித்தேன்.

    எனது பின்னூட்டத்தில், பிழைகள் இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டலாம். "ருஷ்டி அஃபைர்ஸ்" என்று தலைப்பிட்டு, அவரது புத்தகத்தின் ரசிகருக்கு நீங்கள் கொடுக்கும் கவரேஜ், ஏதோ நீங்கள் அவரது புத்தகத்தினைப் படித்தவரோ என நினைத்தேன்.

    என் பின்னூட்டத்தில் தவறு இருந்தால், என்னிடம் நீங்கள் எந்த இடத்தில் அவரது புத்தகத்தில் நான் கூறியவாறு வரிகிறதென்று வினவலாம். ஆனால், திசைத் திருப்பும் விதமாக உங்கள் கேள்வி அமைந்துள்ளதுபோல எனக்கு தோன்றியதால் நான் அக்கேள்வியை எழுப்பினேன்.

    உங்கள் பதிவு மீதான என் விமர்சனத்திற்கு பதில் சொல்வதும் சொல்லாததும் உங்கள் விருப்பம். ஆனால் திசைதிருப்பும் விதமாக நீங்கள் முயற்சிசெய்தால், நான் சுட்டிக்காட்ட வேண்டியது எனது ஒரு சிறு முயற்சி. என்னைப் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் கேட்கும் கேள்விகள் தனிப்பட்ட (personal) முறையில் அமையுமானால், அதற்கு பதில் சொல்லவேண்டும் என்பதும் என் விருப்பம்.

    நான் கேட்டதெல்லாம் இதுதான் தருமி:

    //Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
    வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும்.//

    இப்னு வர்ராக் என்பவர் எழுதியிருக்கும் இந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துப் பதித்துள்ளீர்கள். எவ்வித விமர்சனமுமில்லாமல் நீங்கள அவைகளைப் பதிந்துள்ளதால், அவர் கூறுவதை நீங்கள் ஆமோதித்து மற்றவர்களுக்கு அறியத்தருகிறீர்கள் என்றே கொள்ளமுடியும்.

    இவைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்துவிட்டீர்களா ?

    நபிகளாரின் மனைவியரை, விலைமாதர்கள் போல் சித்தரித்த ருஷ்டியின் தூஷண‌த்தினைவிட கடாஃபியின் தூஷணம் எந்த அளவிற்கு மோசமானது என அறியத்தரவும்.

    "மிரட்டல்" என்பவர் கேட்டிருப்பது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அது சற்று ஆழமானது.

    குர்ஆனில் நூற்றுக்கும் மேல் தவறுகள் உள்ளதினை நீங்கள் கண்டு உணர்ந்தது போலோவோ அல்லது படித்து அறிந்ததுபோலோவோ ஆமோதிக்கும் தொனியில், நீங்கள் அதனைத் தேர்ந்தெடுத்து காட்டியிருப்பதால், அவைகள் யாது என அறியத்தருவது உங்கள் நேர்மைக்குட்பட்ட செயல்.

    ReplyDelete
  8. //நபிகளாரின் மனைவியரை, விலைமாதர்கள் போல் சித்தரித்த ருஷ்டியின் தூஷண‌த்தினைவிட...//

    மாலிக்,
    இது ருஷ்டியின் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்திலுள்ளது என்று கூற இயலுமா?

    ReplyDelete
  9. தருமி,

    ருஷ்டி புத்தகத்தின், ஆறாம் அத்தியாத்தின் சில பக்கங்களில் வரும் வரிகளை கவனிக்க. இதில்,Jahilia எனும் நகரில் "The Curtain" எனும் விபச்சார விடுதியில் நடக்கும் சம்பவங்களெனக் கூறப்பட்டுள்ளவைகளை கவனிக்க. "The girls of The Curtain" என்று தொடங்கும் பத்தியிலிருந்து அனைத்தும், நான் கூறியதைத் தான் சொல்கின்றன.

    எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகளை நான் சுட்ட வேண்டுமானால், இதோ....

    "
    How many wives? Twelve, and one old lady, long dead. How many whores behind The Curtain? Twelve again; and, secret on her
    black--tented throne, the ancient Madam, still defying death. Where there is no belief, there is no blasphemy. Baal told the Madam of
    his idea; she settled matters in her voice of a laryngitic frog. "It is very dangerous," she pronounced, "but it could be damn good for
    business. We will go carefully; but we will go."

    "

    மற்றொரு வரி ...

    "
    When the news got around Jahilia that the whores of The Curtain had each assumed the identity of one of Mahound's wives,...
    "



    "
    The
    oldest, fattest whore, who had taken the name of "Sawdah",...
    "

    "
    The whore "Hafsah" grew as hot-tempered as her namesake ...
    "

    "
    ...becoming "Umm Salamah the Makhzumite" and ...
    "

    "
    And there was a "Zainab bint
    Jahsh", and a "Juwairiyah", named after the bride captured on a military expedition, expedition, and a "Rehana the Jew", a "Safia" and a "Maimunah",
    "

    (நான் காசுக் கொடுத்து வாங்கி அதைப் படித்து, ருஷ்டிக்கும் பதிப்பகத்தாருக்கும் லாபம் தர விருப்பமில்லாததால், ஒரு pirated காப்பியை இணையத்தின் மூலமாக மட்டுமே படித்ததால், பக்க எண் தெரியாது. )

    மிக வெளிப்படையாகவே அவரது புத்தகத்தில் இவ்வாறு பாத்திரங்கள் உருவாக்கப்பட்டும் சொல்லப்பட்டும் இருந்தும், நீங்கள் அவைகளைப் பற்றி வினா எழுப்புகிறீர்கள்..

    அவர் புத்தகத்தினைப் படிக்காமலேயே, அவரது ரசிகராகவும், அவரது ரசிகர்களின் ரசிகராகவும் இருப்பது எதனால் ? சிந்தனை ஒருமைப்பாட்டினாலா ?

    ReplyDelete
  10. //விவிலியத்தில் சொல்வது போல் நம் 'முதல் பெற்றோர்கள்' என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அந்த 'முதல் காலடியைக்' கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. (33)//

    காலடி எடுத்து வைப்பது அவர்களுக்கு விலக்கப்பட்டு (ஹராம் ஆக்கி) இருக்கு. அதனால் நீங்கள் அப்படியான ஒப்பீடு செய்ய முடியாது.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. //குர்ஆனில் நூற்றுக்கும் மேல் தவறுகள் உள்ளதினை நீங்கள் கண்டு உணர்ந்தது போலோவோ அல்லது படித்து அறிந்ததுபோலோவோ ஆமோதிக்கும் தொனியில், நீங்கள் அதனைத் தேர்ந்தெடுத்து காட்டியிருப்பதால், அவைகள் யாது என அறியத்தருவது உங்கள் நேர்மைக்குட்பட்ட செயல்.//

    அந்த நூலில் கண்டதைச் சொல்லியுள்ளேன். இனிமேல் அந்த தவறுகள் பற்றிய விளக்கங்கள் அந்த நூலில் வரும்; என் பதிவுகளில் தொடரும்.

    ஆனாலும் நீங்கள் கேட்டபடி “தவறுகள்” பற்றி நான் சொல்லவேண்டும் என்பதால் எனக்குக் கண்ணில் பட்ட ஓரிரு தவறுகளைச் சொல்லட்டுமா?
    நாம் ஏற்கெனவே விவாதித்த விந்து vs விலாஎலும்புக்கும்,முதுகுத்தண்டிற்கும் உள்ள தொடர்பின்மை; உலகத்தை விரித்தல்; சூரியன் தஞ்சமடைதல்; தேனீக்கள் ‘பழம்’ அல்லது நீங்கள் சொன்ன ////
    Then to eat of all the produce (of the earth),..//, இவைகளோடு , Sin of Khalwa, லாய்லாஹ் … இப்படியாகச் சில.

    ReplyDelete
  13. //ருஷ்டி புத்தகத்தின், ஆறாம் அத்தியாத்தின் சில பக்கங்களில் வரும் வரிகளை கவனிக்க.//

    நான் காசுக்கு வாங்கிய புத்தகத்தில் இதை வாசித்துக் கொள்கிறேன்.

    இன்னொன்று .. அதைச் சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை; இருந்தும் …

    ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்னாலிருக்கும் என்று நினைக்கிறேன். Irving Wallace என்பவர் எழுதிய Seven minutes என்ற கதையை வாசித்தேன். ஈசா தன்னோடு பாலியல் உறவு கொள்வதாக தான் ஒரு கனவு கண்டதாக ஒரு பெண் .. இப்படி ஒரு கதை; அந்த நூலை தடை செய்து விடுகிறார்கள்; அதற்காக அதன் ஆசிரியர் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் வென்று விடுவாரென நினைக்கிறேன். இதுதான் அக்கதை.

    இந்த நாவலை நான் ஒரு “நல்ல” மத நம்பிக்கையாளனாக, ஒரு கிறித்துவனாக இருந்தபோது படித்தேன். படிக்கும்போது நெருடல் .. ஆனாலும் படித்து முடித்தபின் யாருக்கும் "நான் பட்வா கொடுக்கவில்லை". தூர எறிந்துவிட்டு அடுத்த புத்தகத்தை எடுத்தேன்.

    ஏனெனில் “என் கடவுள்” தன்னைக்காத்துக்கொள்ளும் வலு உடையவர் என்பது எனக்குத் தெரியும். அவரைக் காக்க நான் யாரையும் மிதிப்பேன்; கொல்லுவேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்க வேண்டியதில்லை. “என் கடவுள்” மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இது போன்ற’வெத்துக்கதைகள்’ “என் கடவுளை” ஒன்றும் செய்துவிட முடியாது; என் ஆழ்ந்த நம்பிக்கையையும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கையிருந்தது எனக்கு. “என் கடவுளை”க் காக்க நான் யாரிடமும் போரிடத் தேவையில்லை என்பது எனக்குத் தெரியும். (ஆபிதின் பக்கங்களில் அப்பதிவர் சொல்வது போல்: //அவனிடம் நான் கொண்டுள்ள நேசம் அளவில்லாதது. ‘Why I am not a Muslim?‘ படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டான்!// என்பது மாதிரிதான்.)

    கிறித்துவத்திற்கு எதிராகவும் எத்தனையோ புத்தகங்கள், திரைப்படங்கள். அங்கங்கே சில அலைகள் .. அவ்வளவே. ஆனால் சல்மானுக்கு கொலைத்தண்டனை. அதனால் நடந்தது … அவரது புத்தகத்தின் (நீங்கள் வாங்காவிட்டாலும் .. ) அதிக விற்பனை. Midnight children என்ற அவர் கதையை வாசிக்க ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்ட நான் இப்போது இந்த புத்தகத்திற்குக் காசு கொடுத்து வாங்குகிறேன்.

    இதையொட்டிய என் கேள்வியை 22வது கேள்வியாக என் பழைய பதில் கேட்டுள்ளேன். வாசித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. "பரந்த பூமி" என்றாலோ, "சூரியன் மறைகிறது", "sun sets" என்று சொன்னால் கூட தருமியால் குற்றம் காணமுடியும்.

    அதென்ன தருமி, "sin of khalwa" ? அப்படியென்றால் என்னெவென்று தான் சொல்லுங்களேன். அதைக் குர்ஆனில் உள்ள தவறு என்று ஏன் சொல்கிறீர்கள் ? கொஞ்சம் நேர்மையோடு குர்ஆன் வசன எண்ணைக் குறிப்பிடவும். பிறகு பார்ப்போம் அது என்னவென்று.

    (சும்மா வெறுமனே இணையதள முகவரியை மட்டும் குறிப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், நீங்கள் ஏதோ அவைகளைப் படிப்பது போல குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அது பற்றி உங்களிடம் விவாதித்தால், அவைகளை நீங்கள் படிப்பதில்லை என தெரிகிறது. உங்கள் 353-ஆவது பதிவில், sin of khalwa பற்றி எழுதியவரை முன்னால்-முஸ்லிம் என அவிழ்த்து விட்டீர்கள். எப்படி சொல்கிறீர்கள் ? எனக் கேட்டேன். ஆனால் பதில் இல்லை.

    "why i am not a Muslim ... 1" என்ற பதிவில், ஏதோ நீங்கள் படித்தது போல ஒரு ஆங்கில தளத்தின் சுட்டியை கொடுத்து ஒரு விஷயத்தினை விவாதித்துவிட்டு, பிறகு ஹதீதுகளை எப்படி "weak" என பிரிக்கிறார்கள் என தெரியவில்லையென முனுமுனுத்தீர்கள். அது அந்த பதிவிலேயே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது. சல்மான் ருஷ்டியின் "Satanic verses" படிக்காமலேயே "Rushdie Affairs" என ஏதோ விவாதிக்கிறீர்கள். அது பற்றி விவாதித்தால் அவர் புத்தகத்தினைப் படிக்கவேயில்லை எனத் தெரிகிறது. கேட்டால் 'காசு கொடுத்து புத்தகம் வாங்கிவைத்துள்ளேன்; இனிமேல்தான் படிக்கனும்' என்கிறீர்கள் :) இதைவிட கொடுமையென்னவென்றால், உங்களிடம் விவாதிப்பவரிடம் Satanic verses படித்துள்ளீர்களா எனக் கேட்கிறீர்கள் :)

    எனவே நீங்கள் படித்ததை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு, நீங்கள் என்னத்தினைப் புரிந்துகொண்டீர்கள் என எங்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு, முழுமையாக விவாதிக்கவும். வெறுமனே இணையதள முகவரியை மட்டும் சுட்டுவதைத் தவிர்க்கவும்.)

    நான் முன்பு கேட்டிருந்தேன்: //குர்ஆனில் நூற்றுக்கும் மேல் தவறுகள் உள்ளதினை நீங்கள் கண்டு உணர்ந்தது போலோவோ அல்லது படித்து அறிந்ததுபோலோவோ ஆமோதிக்கும் தொனியில், நீங்கள் அதனைத் தேர்ந்தெடுத்து காட்டியிருப்பதால், அவைகள் யாது என அறியத்தருவது உங்கள் நேர்மைக்குட்பட்ட செயல்.// என நான் கேட்டதற்கு, தருமி அவர்கள், //அந்த நூலில் கண்டதைச் சொல்லியுள்ளேன். இனிமேல் அந்த தவறுகள் பற்றிய விளக்கங்கள் அந்த நூலில் வரும்; என் பதிவுகளில் தொடரும்// எனக் கூறினார். இதைத் தருமி அவர்கள், நேர்மையாக சொன்னாரா ? இல்லையா ? என அவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம். வாசகர்கள் கவனிக்க: தருமி அவர்கள் நூறு தவறுகளைக் குறிப்பிட இருக்கிறார்; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் :)

    தருமி, நீங்கள் பதிவில் எழுதிய, //Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
    வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும்// என்ற வரியினை மேற்கோள் காட்டி, //இவைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்துவிட்டீர்களா ? நபிகளாரின் மனைவியரை, விலைமாதர்கள் போல் சித்தரித்த ருஷ்டியின் தூஷண‌த்தினைவிட கடாஃபியின் தூஷணம் எந்த அளவிற்கு மோசமானது என அறியத்தரவும்.
    // எனக் கேட்டிருந்தேன். இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே !

    அப்புறம், நீங்கள் சுட்டிக்காட்டிய 22-ம் கேள்வியை வாசித்தேன். அதில் கேட்டிருந்தீர்கள்: //22.) ஒரு பானைக்கு ஒரு சோறு: Satanic verses என்பது முகமது சாத்தானால் சோதிக்கப்பட்டு, அல்லாஹ் கூறாத ஒரு வசனத்தைக் குரானில் சேர்த்ததாகவும், பின்பு மனம் கசிந்து அதை எடுத்ததாகவும், இல்லை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் இரு தரப்பு வாதங்கள் உண்டு. முகமதின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுக்கு சர் வில்லியம் முய்ர் என்பவர் வைத்த பெயரே இது. இதை ஒரு நாவலுக்கு தலைப்பாக வைத்தார், சல்மான் ருஷ்டி. அதற்கு ஏன் இத்தனை வன்மம்? //

    இதைப் படித்தபோது, அந்தப் புத்தகத்தினைப் படிக்காமலேயே விவாத்திக்கும் மேதாவி நீங்கள் எனப் புரிந்தது.

    ReplyDelete
  15. பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.


    பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

    cont......

    ReplyDelete
  16. மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

    நன்றி செங்கொடி!

    ReplyDelete
  17. //அல்லாஹ்வுக்கு மாறு செய்த "இபுலீஸ்" என்பவன் ஜின்னினத்தைச் சேர்ந்த்தவன். முன்றாவதொரு படைப்பாக ஷைத்தான்கள் படைக்கப்பட்டு இபுலீஸின் தலைமையில் அவர்கள் இயங்கச் செய்யப்படுகிறார்களா?///

    ஒருத்தன் அல்லாவுக்கே மாறு செய்யுறான்னா, பிறகு என்ன அல்லா பெரிய கடவுள்!

    ReplyDelete
  18. //ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். அப்படிப் படைக்கப்பட்டதாலேயே ஷெய்த்தான் 'படைபால் உயர்ந்தவன்" என்று கர்வம் கொண்டான்.//

    இது என்ன புது கதை!
    ஆகுகன்ன உடனே ஆணது தானே இந்த உலகம், நெருப்பால் தனியா உட்கார்ந்து ஜின் இனத்தை படைச்சாராக்கும்!

    ReplyDelete
  19. //இந்த இப்லீஸின் சேனைகளாக இயங்கும் ஷெய்த்தான்களே உலகில் பல பயங்கர விளைவுகளை - இறைநம்பிக்கையாளர்களுக்கு தொடர் தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் அவர்கள் சேரும் இடம் நரகம்//

    இறைநம்பிக்கையாளர்கள் ஆங்காங்கே குண்டி வெடிச்சிகிட்டு இருக்காங்களே, அது மட்டும் தொந்தரவு இல்லையா!?
    அவங்களுக்கு மட்டும் சொர்க்கமா?

    என்னமா இது நியாயம்!

    ReplyDelete
  20. //மனித மனங்களில் குழப்பதை ஏற்படுத்துவதும், கணவன் மனைவிகளுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விளையாடுவதும், இணைவைப்பு என்ற பலதெய்வக் கொள்கையை, நம்பிக்கையை மனிதர்களிடம் ஆழமாக வேறூன்றச் செய்வதும் இப்லீஸ் மற்றும் அவனது படைபலமான ஷெய்த்தான்களின் பிரதான பணியாகும்.//

    இந்த விசயங்கள் மதம் தோன்றியதிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது, அப்படியானால் இப்லீஸும் அப்போ இருந்து இருக்கானா!?

    அப்படியானால் அல்லாவால் இப்லீஸை அழிக்க முடியவில்லையா!?

    இப்லீஸையே அழிக்கமுடியாத அல்லா எங்கிருந்து மறுமையில் உலகை அழிக்கப்போகிறார்!?

    ReplyDelete
  21. //தண்ணீரின் மீது இப்லீஸின் சிம்மாசனம் உள்ளது. அவன் தினமும் பல திக்குகளிலும் தனது சேனையை அனுப்பி குழப்பம் விளைவிப்பான் அதில் அவனுக்கு மிக விருப்பமானது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஊட்டுவதாகும் என்றெல்லாம் பல நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன.//

    தண்ணி மீது சிம்மாசனம் வைத்திருக்கிறான் என்றால் அவன் எம்மாம் பெரிய ஆளாய் இருப்பான்,

    அது சரி தண்ணி மேல எப்படியய்யா சிம்மாசனம் இருக்கும், கதை கட்டுறதுக்கு வேற வழியே இல்லையா உங்களுக்கு!?

    ReplyDelete
  22. //மனித மனங்களில் குழப்பங்களை விளைவிக்கும் அந்த பாரதூர செயலை செய்யக் கூடியவர்கள் மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் ஷெய்த்தானிய செயலை ஒத்திருப்பதால் அவர்களையும் ஷெய்த்தான் என்று குர்ஆன் அடையாளப்படுத்துகின்றது.//

    இதான் மேட்டர்!
    உங்க குரான் படி நாங்கெல்லாம் சைத்தான்! அப்படிதானே!?

    உங்க குரானே ஒரு டுபாக்கூரா இருக்கும் போது நாங்க எப்படி சைத்தானாக இருக்க முடியும்!

    ReplyDelete
  23. ஆதாரங்கள்!

    (அல்குர்ஆன் 18:50)
    (அல் குர்ஆன் 7:12)
    (அல்குர்ஆன் 7:27)
    (அல்குர்ஆன் 15:32)
    (அல்குர்ஆன் 26:95)
    (அல்குர்ஆன் 114:6)

    ReplyDelete
  24. //'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

    நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.//

    இதுல என்ன தெளிவாச்சு!
    நீங்களே எழுதிகிட்டு, நீங்களே தெளிவாகிட்டா போதுமா?

    உங்களோட ஒரே குஷ்டமப்பா!

    ReplyDelete
  25. //(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)//

    படிச்சு காட்டுறவங்கெல்லாம் இறைதூதர்களா?

    1600 க்கு பிறகு இறைதூதர்களே இல்லாமா பூமி கஷ்டப்படுதே அல்லாவுக்கு இரக்கமே இல்லையா?

    2000 வருசத்துக்கு முன்னாடி ஈசாநபி, அடுத்த முன்னூறு வருசத்துல முகமது நபி!

    எங்களுக்கும் ஒரு நபியை அனுப்பி திருத்தலாமே!

    வானத்தையே நாலு நாளா மாத்தி அமைச்ச அல்லாவுக்கு இது ஒண்ணும் பெரிய விசயமில்லையே!

    ஏன் செய்யல,

    (இருந்தா தானப்பா செய்யுறதுக்கு)

    ReplyDelete
  26. //2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது.//-வால்பையன்.

    அப்படி தட்டை என பொருள் கொண்டால் யார் தவறு ? உதாரணத்திற்கு இவர் சுட்டிக்காட்டிய முதல் வசனத்தினுடைய பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் இவை.

    usuf Ali:
    [002:022] Who has made the earth your couch, and the heavens your canopy; and sent down rain from the heavens; and brought forth therewith Fruits for your sustenance; then set not up rivals unto God when ye know (the truth).

    Dr. Munir Munshey (one of www.answering-christianity.com's authors):
    [002:022] It is He Who stretched the earth for you like a carpet, and the sky (over you) like a canopy. From the sky, He sent down water, and with it He brought forth fruits for your sustenance. Therefore, do not rank others as rivals of Allah. You do know (the truth)!

    Sher Ali:
    [002:022] WHO made the earth a bed for you, and the heaven a roof, and caused water to come down from the clouds and therewith brought forth fruits for your sustenance; so do not set up equals to ALLAH, while you know.

    Shakir:
    [002:022] Who made the earth a resting place for you and the heaven a canopy and (Who) sends down rain from the cloud then brings forth with it subsistence for you of the fruits; therefore do not set up rivals to Allah while you know.

    Muhammad Al-Hilali & Muhsin Khan:
    [002:022] Who has made the earth a resting place for you, and the sky as a canopy, and sent down water (rain) from the sky and brought forth therewith fruits as a provision for you. Then do not set up rivals unto Allah (in worship) while you know (that He Alone has the right to be worshipped).

    ReplyDelete
  27. அந்த வசனத்தில் பூமியின் வடிவத்தினைப் பற்றிக் கூறப்படுவதைவிட, பூமியைத் தங்குவதற்கு ஏதுவாகவும், அதன் வானத்தினையும் உங்களுக்கு ஏதுவாக பாதுகாப்பினைத் தரக்கூடியதாகவும் படைத்தவன் யார் என வினவும் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது.

    கவனிக்க: பூமி உருண்டை என கண்டறிவதற்கு முற்பட்ட காலத்தில், "பூமியை உங்களுக்காக உருண்டையாக்கியவன் யார் ?" என வினவினால் :) , அரபுக்கள் அனைவரும் குழம்பி ஒரு வழியாகிவிடுவார்கள். அப்புறம் பூமி உருண்டை என்று மக்களுக்கு தீர உணர்த்தவேண்டிய அவசியம் ஏற்படும். அது குர்ஆனின் நோக்கத்திற்கு மாறானது. அதன் நோக்கம், மக்களை அவர்களைப் படைத்தவனை வணங்கச் செய்வது; அவனுக்கு பயப்படச் செய்வது; நன்மைகள் செய்யத் தூண்டுவது; அவ்வாறு செய்வதற்கு கூலி இவ்வுலகில் கிடைக்காவிட்டாலும், அவர்களின் காலத்திற்குப் பிறகு இறைவனிடம் கிடைக்கும் என வாக்களிப்பது, போன்றவைகள்.

    ReplyDelete
  28. ஆனால் ஒரு விஷயத்தினை ஒப்புக்கொள்ள வேண்டும். முஸ்லீம்களில் சிலர், குர்ஆனின் நோக்கத்திற்கு மாறாக, 'அதில் இந்த அறிவியல் உண்மைதான் உள்ளது' என்றோ அல்லது 'அந்த அறிவியல் உண்மைதான் உள்ளது' என்றோ கூறி மெய்சிலிர்த்து போலி மகிழ்ச்சி அடைவது தற்காலத்தில ஃபாஷன்.

    'துல்கர்னைன்' கதையை 'செங்கொடி' கூருவதற்கு முன்னராகவே 'சுவனப்பிரியன்' என்ற பதிவர் பதிந்திருந்தார். அதில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளேன். அவரது பதிவு இதோ: http://suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html

    எனது பின்னூட்டம் இதோ:
    //
    "பின்னர் ஒரு வழியில் சென்றார்" என்றால் நீர்வழி பயணத்தைதான் மேற்கொண்டிருக்க வேண்டுமா ? ஏன் நிலத்தின் வழியாக பயணத்தினைத் தொடர்ந்து கிழக்கு நோக்கி சென்று சூரியோதயத்தினைப் பார்த்திருக்க முடியாதா ?

    அப்படியே நீங்கள் கூறுவது போல் மேற்கு நோக்கி நீரில் பயணத்தினை மேற்கொண்டு அவர் நிலத்தினை அடைந்தாலும் அவரால் நிலத்தில் சூரியன் மறைவது போன்ற காட்சியத்தான் பார்க்க முடியும். தான் கடந்து வந்த நீரிலிருந்து சூரியன் உதிப்பது போன்ற காட்சியை அவர் கிழக்கினை அடந்த பிறகுதான் காணவேண்டும் என்பதில்லை. அவர் மேற்கிலிருந்து கடல் வழியாக புறப்பட்ட நிலையில் கூட எந்த நிலப்பரப்பினையும் அடைவதற்கு முன்பே அவரால் சூரியோதயத்தினைப் பார்த்திருக்க முடியுமே :)

    இப்போது யோசியுங்கள். எது சரி ?//
    (எனது பின்னூட்டம் புரியவேண்டுமானால் அவரது பதிவினைப் படிப்பது அவசியம்.)

    ஆனால் இந்த கதையில் குர்ஆன் பூமியைப் பற்றி அது உருண்டை என சொல்லவில்லை என்பதற்காக அது தட்டை என்று சொல்வதாகக் கருதமுடியாது. வால் பையன் சுட்டிக்காட்டிய வசனங்களில் அது பூமியின் வடிவத்தினைப் பற்றி ஏதும் சொல்லாதபோதே "அதைத் தட்டை எனக் கூறுகிறது என குர்ஆன் சொல்கிறது" எனக் கூறுவது, "குர்ஆனின் துல்கர்னைன் கதையில் பூமியை உருண்டை என சொல்லப்படுகிறது" என்ற அபத்தத்திற்கு ஈடு.

    ReplyDelete
  29. செங்கொடி/ வால்பையன் சுட்டிக்காட்டிய ஏனைய வசனங்களின் பல ஆங்கில மொழிபெயர்ப்புகளை http://www.answering-christianity.com/quran_search.htm

    என்றதளத்தில் உள்ள கருவியைப் பயன்படுத்தி 11 மொழிபெயர்ப்புகளைப் பார்த்துக்கொள்ளலாம். (கவனிக்க, இந்த தளத்தில் கூறப்பட்டுள்ள மற்ற கட்டுரைகளுக்கு நான் முழு ஆதரவு அளிப்பவனல்ல என்ற டிஸ்கி அவசியம்).

    அனைத்து வசனங்களிலும், பூமியை மனிதன் வாழ்வதற்காக சமன் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. பூமி அப்படித்தானே உள்ளது ? அது மனிதன் கால் வைக்க முடியாமல் கூர் கூராக உள்ளதா ? இல்லையே. அல்லது அது ஒரு கம்பு போல உள்ளதா ? இல்லையே ! ஒரு கம்பு போல இருந்தால், அதன் தரையை மனிதன் வாழ்வதற்காக சமன் செய்யப்பட்டுள்ளதாக கூறபுமுடியாது.

    ReplyDelete
  30. //அந்தப் புத்தகத்தினைப் படிக்காமலேயே விவாத்திக்கும் மேதாவி நீங்கள் எனப் புரிந்தது.//

    அய்யோடா .. நான் உங்களைப் போல் எல்லாம் படித்து விவாதிக்கும் மேதையெல்லாம் இல்லைங்க ..

    ReplyDelete
  31. மாலிக்,

    //sin of khalwa" ? அப்படியென்றால் என்னெவென்று தான் சொல்லுங்களேன்.//

    தொடுப்பு என் பதிவில் உள்ளதே; பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் ஏன் லாய்லாஹ் பற்றி ஒன்றும் சொல்லாமல் போகிறீர்கள்?

    //வாசகர்கள் கவனிக்க: தருமி அவர்கள் நூறு தவறுகளைக் குறிப்பிட இருக்கிறார்; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் :)//

    பயங்கராமாக சென்ஸார் போர்டு எல்லாம் வைக்கிறீர்களே! நல்லது; நான் தருவது நான் வாசிக்கும் புத்தகத்தில் உள்ளவை. அதில் நூறும் கொடுக்கலாம்; அதற்கு மேலும் கொடுக்கலாம். அதில் எனக்குப் பிடித்தவைகளை இங்கு தருவேன். எனக்கு நீங்கள் தரும் உத்தரவு தேவையில்லை. அதற்கு மேல் கேள்வியிருந்தால் அந்தப் புத்தகத்தை நீங்கள் முழுமையாக (நீங்கள் தான் என்னைப்போலல்லாமல் எல்லாவற்றையும் முழுவதுமாக வாசிப்பவராச்சே.) அதற்குரிய பதில்களை உங்கள் பதிவில் இடலாமே. வரவேற்கிறேன்.

    ReplyDelete
  32. Simple dharumi,
    i think ur comrades may help u on this?
    For muslims, we had Quran as base to identify what is Good and what is Sin.

    For Atheist what is the base to evaluvate?

    Is their base on Evolution for Sin.

    Or by majority people decide this good and this is Sin.

    or by Bilogical , they conclude what is wrong and what is right?

    All my thought abt atheism went wrong by their statements :
    when they say :
    'Can't prove but still belive it' I belive so also u belive in it'
    'My mind say this is Sinful' :)) makes me laugh...

    ReplyDelete