***
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
***
நானும் மிகவும் உற்சாகமாக 'நீயா? நானா?' நிகழ்ச்சி பற்றி மகிழ்ச்சியாக ஒரு பதிவு போட்டேன். ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கடன் பற்றிய நிகழ்ச்சி அது. ந்ன்றாகச் செய்திருக்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால் புத்தாண்டன்று அதே நிகழ்ச்சி 'இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கப் போகிறது?' என்று ஐந்து ஜோதிடர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. எல்லோரும் ஏதேதோ ராசி அது இதுன்னு பேசினாங்க. எரிச்சலில் முழுவதும் பார்க்கவில்லை. 2010 எப்படியிருக்கும்; எந்த ராசிக்காரருக்கு நல்லா இருக்கும் என்று ஒரு பட்டிமன்றம் மாதிரி ... இந்த ஐந்து ஜோதிடர்களில் ஓரிருவர் ஏற்கெனவே வந்து 'வாங்கிக் கட்டிக்கிட்டு' போனவங்க மாதிரி தெரிஞ்சிது.
கடைசியில் ஒரு பங்களிப்பாளருக்கு குலுக்குச்சீட்டு முறையில் பரிசு கொடுப்பதாக ஒரு ஏற்பாடு. குலுக்குச் சீட்டு எடுப்பதற்கு முன் அந்த ஐந்து ஜோதிடர்களிடம் எந்த ராசிக்காரருக்குப் பரிசு கிடைக்கும் என்று கோபிநாத் கேட்க, அந்த ஐவரும் ஆளுக்கொரு ராசி சொன்னார்கள். அவர்களில் ஒருவரே குலுக்குச் சீட்டை எடுக்க, பரிசு கிடைத்தவர் அவர்கள் சொன்ன அந்த ஐந்து ராசியிலும் இல்லாதவர்!! :)
ஒருவேளை இந்தப் பரிசு சீட்டு மூலம் ஜோதிடமே பொய்யென்று நிரூபிப்பதற்காகத்தான் இப்படி ஒரு நிகழ்ச்சியை கோபிநாத் / விஜய் தொலைக்காட்சியினர் ஏற்பாடு செய்திருப்பார்களோ என்னவோ !
***
ஆ.வி.யிலி இருந்து ... ஒரு புத்தாண்டு வாழ்த்து.
சிறுமிகளைப் பலாத்காரப்படுத்தி பிறகு பதிவு உயர்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள், அதிகாரிகள், ராஜ்பவனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆளுநர்கள், ஐந்தாயிரம் கோடிக்கு மேல் லஞ்ச ஊழலில் சாதனை படைத்த தலைவர்கள், சிலபல கொலைகள் புரிந்து, அரசியலில் கூட்டணி அமைத்து முதல்வரானவர்கள் ... இவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்குத் தங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறார்கள்!
***
ஆ.வி.யில் ... "நானே கேள்வி ... நானே பதில்" பகுதியில், கே. ராமலிங்கம், மதுக்கூர் கூறியது ...
"மக்கள் தீர்ப்பு உண்மையிலேயே மகேசன் தீர்ப்பா?"
சமீபத்தில் நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்ட மனறத் தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மது கோடாவின் மனைவி, அபார வெற்றி பெற்றிருக்கிறார்.
கொலை வழக்கு உட்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ள சிபு சோரனுக்குத்தான் முதல்வராகும் வாய்ப்பு அதிகமாம்.
இன்னுமா சார் இந்த ஊரு இதை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கு?
***
திடீர்னு ஒரு சந்தேகம் வந்தது: நம்ம ஊர்ல அரசியல் தீவிரவாதிகளாக நக்சலைட்டுகளும், மாவோயிஸ்டுகளும் இருக்கிறார்களே .. அவர்கள் அவ்வப்போது காவல் நிலையங்களைத் தாக்கி சில காவலர்களைப் பலி வாங்கி, ... இல்லாவிட்டால், எங்கேயாவது குண்டு வைத்து சில இடங்களை அழித்து ... இல்லாவிட்டால், யாரையாவது ஒருவரைக் கொன்று விடுகிறார்களே ... இவர்களுக்குச் "சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை? அதை ஏன் தவற விடுகிறார்கள்? அப்படிக் கிடைத்தால் கொஞ்சம் நாடு நல்லா ஆகாதா?
ஒண்ணுமே புரியலையே!
***
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சாரே!
ReplyDeleteவருடத்தின் முதல் பதிவே, வெறும் ஆசைகளுடன் :) ...
//இவர்களுக்குச் "சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை?//
ReplyDeleteஅதுதானே ஒருவேளை பயமா???
//"சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை? //
ReplyDelete:))
புத்தாண்டு வாழ்த்துகள் சார்..
அன்பின் அண்ணே தருமி
ReplyDeleteஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது - நாடு எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது.
நீயா நானா - விஜய் தொலைக்காட்சி நடத்தும் நல்லதொரு நிகழ்ச்சி - இருப்பினும் இது மாதிரி சில சமயங்களில் நடந்துவிடுகிறது.
நல்வாழ்த்துகள் அண்ணே
புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)க்ள்.
ReplyDeleteஇப்பெல்லாம் இந்தியாவைப் புரட்டிப்போட்டாச்சு.
'மகேசன்'தீர்ப்பே 'மக்கள்' தீர்ப்பு!
உங்க ஊர்தான் நெம்புகோல் வச்சுப் புரட்டிப்போட்டதுன்னு கேள்வி:-)
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..
ReplyDelete"சரியான முகவரிகளை"யும், "பொட்டி"யையும், "ஆயுதத்தையும்" கொடுத்தால் நான் ரெடி..!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஉ.த.,
ReplyDeleteமுகவரிகளுக்குத்தான் பஞ்சமில்லையே; ஆனால், இதுக்கெல்லாம் பொட்டி கிடையாதுல்ல ...
[[[தருமி said...
ReplyDeleteஉ.த., முகவரிகளுக்குத்தான் பஞ்சமில்லையே; ஆனால், இதுக்கெல்லாம் பொட்டி கிடையாதுல்ல...]]]
பொட்டி இல்லாம செய்யறதுக்கு நான் என்ன தியாகியா..?
இந்தக் கைல பொட்டி.. அந்தக் கைல ஆயுதம்.. அப்பால பாருங்க.. இன்னா நடக்குதுன்னு..!
சமூக அக்கறை உள்ள பதிவு.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் தருமி சார்...
ReplyDelete//அப்பால பாருங்க.. இன்னா நடக்குதுன்னு..!//
ReplyDeleteமுருகா!
யானைக்கும் அடி சறுக்கும்.விஜய் டிவியோ கோபிநாத்தோ சும்மாவா ஷோ நடத்துறாங்க.நானும் அந்தக் கண்றாவியை ஒரே ஒரு நிமிடம் பார்த்துட்டு ஓடிப் போயிட்டேன்.
ReplyDeleteஎனக்குள் எழுந்த சந்தேகம் ஜாதகம் முக்கியமா தமிழ் வருடத்தை வைத்துத்தானே கணிக்கிறாங்க.அப்புறம் ஆங்கில நியூ இயருக்கு ஏன் ராசி பலன்....
இந்த திவாரி மேட்டரிலுல் டவுட்.ஜூவியில் நக்கீரனில் படித்த வரை பல மாதங்கள் வருடங்களாக தங்கள் ஆதாயம் காரியம் சாதிக்க கவர்னரோடு இருந்த பெண்[கள்]ணுக்கு திடீரென எப்படி சீரழிஞ்சி போகிறோம்னு கவலை வந்து மீடியா உதவி கேட்டாங்க.
என்னைப் பொறுத்தவரை ரெண்டு கை தட்டினாத்தான் ஓசை.
இதே கதைதான் ஜெயலட்சுமி மேட்டரிலும்...தண்டனை கவர்னருக்கு மட்டுமில்லை அந்தப் பொண்ணுங்களுக்கும் கொடுக்கனும்.
அந்த நிகழ்ச்சி சோதிடர்களின் உளரல்கள் எப்படிப் பட்டது என்பதை அறியும் ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கும் போது எனக்கு டென்சன் ஏற்படவில்லை.
ReplyDelete:)
//தண்டனை கவர்னருக்கு மட்டுமில்லை அந்தப் பொண்ணுங்களுக்கும் கொடுக்கனும்.//
ReplyDeleteதற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்வது போல், தற்கொலைக்குத் தேவையான பூச்சு மருந்து விற்பவரும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதாகச் சொல்கிறீர்களா ?
ஆ.வி. புத்தாண்டு விஷயத்தை அதில் படித்தால் எப்படி இருந்திருக்குமோ, இதில் படிக்கும் போது சப்பென்று அறைவது போல் உணர்வு (அரசியல் கோ)
ReplyDelete“சரியான முகவரி”?
அதே ஆவியில் பகுத்தறிவு சிங்கம் போட்டோவுக்கு மாலை போட்டு கும்பிடுறதை பார்த்திங்களா!?
ReplyDelete