அப்டின்னு தினமலரில் வந்த ஒரு செய்தி:
"செக்ஸ் கவர்னர்'ன்னு சொன்னதும் கண்டுபிடிச்சிருப்பீங்களே, கரெக்ட், ஆந்திர மாஜி கவர்னர் என்.டி.திவாரி தான்.
பாவம் மனிதர், அரசியல் சட்ட தலைமை பதவியில் உட்கார வைத்ததை பற்றி கவலைப்படாமல், கவர்னர் பங்களாவில், விபசாரப் பெண்களிடம், "மசாஜ்' செய்து கொண்டதை, "டிவி' சேனல் வெளியிட, கடைசியில் பதவி பறிபோய், மூட்டை கட்டிக்கொண்டு, அடுத்த பிளைட்டிலேயே, சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு போய், வீட்டில் முடங்கி விட்டார். மீடியாக்களில் பரபரப்பு ஓயும் வரை பொறுத்திருந்தார் மனுஷன். அரசியலில் எல்லா அனுபவங்களையும் அனுபவித்து விட்ட 84 வயது, "பழுத்த பழத்து'க்கு, கை அரிப்பு தாங்கவில்லை. காங்கிரசும் ஒதுக்கி விட்ட நிலையில், சமீபத்தில், நிரந்தர் விகாஸ் சமிதி என்ற அரசியல் சாராத அமைப்பு அமைத்துள்ளார். இதன் ஆரம்ப விழாவில், காங்கிரசின் வி.ஐ.பி.,க்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஒதுங்கியிருந்த சிலரை, திவாரி வலுக்கட்டாயமாக அழைத்து, தலைவர், செயலர் பதவிகளை அளித்தார்; அமைப்பில், மகளிர் பிரிவும் உண்டு; அதற்கு ஆள் தேடினார். ஆனால், ஒருவர் கூட எட்டிப் பார்த்தால் தானே. அவ்வளவு ஏன்... அவரின் குடும்பத்து பெண்களோ, நண்பர்களின் குடும்ப பெண்களோ ஒதுங்கிக் கொண்டனர். மசாஜ் பிரிவு உண்டான்னு தெரியலே.
இப்படி ஒரு கேசு!! நடந்ததையெல்லாம் உடனேயே ஒதுக்கி வச்சிட்டு எப்படி இந்த மனுசனால இந்தக் கூத்தடிப்பு பண்ண முடியுது. இருக்கிற இடம் தெரியாம இருக்க வேண்டியதுதானே. அந்த ஆளுக்குத் தோலு என்ன அம்புட்டு முரடுதானா?
பாவம் மனிதர், அரசியல் சட்ட தலைமை பதவியில் உட்கார வைத்ததை பற்றி கவலைப்படாமல், கவர்னர் பங்களாவில், விபசாரப் பெண்களிடம், "மசாஜ்' செய்து கொண்டதை, "டிவி' சேனல் வெளியிட, கடைசியில் பதவி பறிபோய், மூட்டை கட்டிக்கொண்டு, அடுத்த பிளைட்டிலேயே, சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு போய், வீட்டில் முடங்கி விட்டார். மீடியாக்களில் பரபரப்பு ஓயும் வரை பொறுத்திருந்தார் மனுஷன். அரசியலில் எல்லா அனுபவங்களையும் அனுபவித்து விட்ட 84 வயது, "பழுத்த பழத்து'க்கு, கை அரிப்பு தாங்கவில்லை. காங்கிரசும் ஒதுக்கி விட்ட நிலையில், சமீபத்தில், நிரந்தர் விகாஸ் சமிதி என்ற அரசியல் சாராத அமைப்பு அமைத்துள்ளார். இதன் ஆரம்ப விழாவில், காங்கிரசின் வி.ஐ.பி.,க்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஒதுங்கியிருந்த சிலரை, திவாரி வலுக்கட்டாயமாக அழைத்து, தலைவர், செயலர் பதவிகளை அளித்தார்; அமைப்பில், மகளிர் பிரிவும் உண்டு; அதற்கு ஆள் தேடினார். ஆனால், ஒருவர் கூட எட்டிப் பார்த்தால் தானே. அவ்வளவு ஏன்... அவரின் குடும்பத்து பெண்களோ, நண்பர்களின் குடும்ப பெண்களோ ஒதுங்கிக் கொண்டனர். மசாஜ் பிரிவு உண்டான்னு தெரியலே.
இப்படி ஒரு கேசு!! நடந்ததையெல்லாம் உடனேயே ஒதுக்கி வச்சிட்டு எப்படி இந்த மனுசனால இந்தக் கூத்தடிப்பு பண்ண முடியுது. இருக்கிற இடம் தெரியாம இருக்க வேண்டியதுதானே. அந்த ஆளுக்குத் தோலு என்ன அம்புட்டு முரடுதானா?
அடுத்தது அந்த பக்கம் ... டைகர் வுட்ஸ். சொந்த வாழ்க்கையில தப்பு பண்ணிட்டாரு, நம்ம ஊரு ஆளா இருந்திருந்தா இத வச்சே பெரிய ஆளா ஆகியிருக்கலாம்! சரி.. ரொம்ப மனசு வருத்தப்பட்டார். அதனால பாதிக்கப்பட்ட தனது உறவு முறைகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலே போதுமென நினைக்கிறேன்.
ஆனால் மனுசன் உலகத்து முன்னாலேயே மன்னிப்பு கேட்டுட்டார். அது மட்டுமல்லாமல், காசு கொட்டும் தன் விளையாட்டையும் இப்போதைக்கு இல்லைன்னு தள்ளிப்போட்டு விட்டார்.இப்படியும் மனுசங்க இருக்காங்க.
இந்த இரண்டு நிலைகளையும் நம் இரு நாட்டு மக்களோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. எத்தனை பெரிய பதவி! நம்ம ஊரு ஆளுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? யாரு காசில் உட்கார்ந்து கொண்டு இந்த அழிச்சாட்டம்! அட் லீஸ்ட் வயசுக்கு ஏத்த வேலையா செஞ்சிருக்காரு?
ஆனால் இதையெல்லாம் நாம் யாரும் கண்டுக்கவில்லை. இதெல்லாம்தான் "பெரிய மனுசங்க" வேலைன்னு நினச்சிட்டு நம்ம காரியத்தைப் பார்க்கப் போய்விடுகிறோம்.
அங்கே, அவர் சம்பாரிச்சாரு; என்னமோ பண்ணினாரு. இதனால அவரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அவமரியாதையும், மனவருத்தமும். பொது மக்களுக்கு இதனால் எந்த லாப நட்டமில்லை. இருப்பினும் அவர் பொது மன்னிப்பு கேட்கிறார். இந்த லட்சணத்தில் இங்கே 'ஒருவன் ஒருத்தி' என்பதே நம் "பண்பாடு"ன்னு பீத்தல் வேறு.
ஏனிந்த வேறுபாடு? இதற்குரிய காரணங்கள் என்ன? --- எனக்குத் தெரியலை; உங்களுக்கு ... ?
*****
தமிழ்ப்படம் ஒரு நல்ல ஸ்பூஃப்; கேலிப்படம். நம்மைப் பார்த்து நாமே - இந்த 'நாமில்' படம் பார்க்கும் ரசிகர்களும் சேர்த்துதான் - சிரித்துக் கொள்வதுதான். இதில் என்ன தவறோ? அதற்குள் நிறைய செய்திகள் ஊடகத்தில் ... ஏதேதோ படத்தயாரிப்பாளர் எங்க ஊர்க்காரர் என்பதால்தான் எல்லோரும் இப்படி மெளனமாக இருந்து விட்டார்கள். இல்லாவிட்டால் இந்தப் படத் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரையும் ஆட்டி விட்டிருப்பார்களென ஒரு செய்தி திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்லப்படுகிறது.
சர்வர் சுந்தரம் என்னும் படத்தில் பாலச்சந்தர் சினிமாவில் ஹீரோக்களுக்கு டூப் போடுவது, வெறும் பொம்மைக் குதிரையில் ஹீரோ பறப்பது, மின்விசிறியால் சூறாவளியைக் காண்பிப்பது போன்ற சில சீன்களை எடுத்தார். அப்போதிருந்த மக்களுக்கு அவை மிகவும் புதிது. எம்.ஜி.ஆர், வில்லனிடம் மாட்டிக் கொண்ட போது அவருடைய விடுதலைக்காக புனித அந்தோனியாரிடம், செபஸ்தியாரிடம் (இவர்களெல்லாம் கிறித்துவ புனிதர்கள்; இதுபோல் இந்துக் கடவளர்களையும் மக்கள் கும்பிட்டிருக்கலாம்; அப்போது அந்த வயதில் எனக்குத் தெரிந்த மக்கள் கும்பிட்ட சாமிகள் நான் சொன்ன இந்த இருவரும்தான்.) நேர்த்திக் கடன் வைத்த மக்களை நான் அந்த வயதில் பார்த்திருக்கிறேன்.
அந்தப் படம் வந்த சமயத்தில் அந்தக் கால காமிரா விற்பன்னர் கர்ணன் அவர்களை ரயிலில் சந்திக்க ஒரு வாய்ப்பு. அவர் இதுமாதிரியெல்லாம் காமிச்சா படங்கள் பார்க்கிறவங்களுக்கு ஒரு த்ரில் இல்லாம போய்டும்; இதெல்லாம் காமிக்கக் கூடாதுன்னார். அந்த சமயத்தில் தனிப்பட்ட முறையில் அவர் சொன்னதைத் தவிர வேறு யாரும் அப்படி எதிர்த்துப் பேசவில்லை.
இப்போதும் எல்லோரும் தமிழ்ப்படத்தை நன்றாகவே எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். சும்மா எங்க ஊர்க்காரர் பெயரைச் சேர்த்துக்கிட்டு அதுனாலதான் எல்லாரும் பேசாம இருக்காங்கன்னு சொல்றது தப்பா தெரியுது.
*****
தெண்டுல்கர் 200 அடிச்ச செய்தி நம்ம பக்கத்து வீட்டுப் பேரன் சொல்லித் தெரிந்தது. அவன் படிக்கும் பத்தாவது வகுப்பிற்காக அவன் வீட்டில் இல்லாத தொலக்காட்சியைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு அந்தப் பேரன் வந்தான். அவனோடு சிறிது நேரம் கிரிக்கெட் பார்த்தேன். அப்போதுதான் 2007-ல் எழுதிய பதிவில் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் உயிர் இருக்கிறதென்பது தெரிந்தது.
அப்பதிவு:215. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ... அதில் அன்று கூறியது:
இப்போதும் எல்லோரும் தமிழ்ப்படத்தை நன்றாகவே எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். சும்மா எங்க ஊர்க்காரர் பெயரைச் சேர்த்துக்கிட்டு அதுனாலதான் எல்லாரும் பேசாம இருக்காங்கன்னு சொல்றது தப்பா தெரியுது.
நம்ம ஆளுங்க அந்த அளவு கூட நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களா என்ன?
*****
தெண்டுல்கர் 200 அடிச்ச செய்தி நம்ம பக்கத்து வீட்டுப் பேரன் சொல்லித் தெரிந்தது. அவன் படிக்கும் பத்தாவது வகுப்பிற்காக அவன் வீட்டில் இல்லாத தொலக்காட்சியைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு அந்தப் பேரன் வந்தான். அவனோடு சிறிது நேரம் கிரிக்கெட் பார்த்தேன். அப்போதுதான் 2007-ல் எழுதிய பதிவில் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் உயிர் இருக்கிறதென்பது தெரிந்தது.
அப்பதிவு:215. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ... அதில் அன்று கூறியது:
//10 விழுக்காடு மட்டுமே வெள்ளையர்கள் மக்கள் தொகையில் இருக்க, அந்த நாட்டின் விளையாட்டு அணியில் மட்டும் 95 விழுக்காடு அவர்கள் எப்படி இருக்க முடிகிறது? இன்னும் இனவாத அரசியல் - apartheid - இருக்கிறதா? நெல்சன் மண்டேலாவினால் நடந்த மாற்றங்கள் எல்லாமே வெறும் மேம்போக்கான விஷயங்கள்தானா? நாட்டின் செல்வமும், பொருளாதார மேம்பாடும் இன்னும் வெள்ளையர் கையில்தான் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பொருளாதாரம் மட்டுமல்ல 'எல்லாமே' இன்னும் வெள்ளையர்கள் கைகளில்தான் இருக்கிறதாகத்தானே இந்த விளையாட்டு அணியைப் பார்த்தால் தெரிகிறது.//
அப்போதாவது ஒரே ஒரு கருப்பர் இருந்தார். இப்போது அதுவும் இல்லை.
இதோடு சென்ற சில நாட்களுக்கு முன்பு இந்து தினசரியில் வந்திருந்த கட்டுரை ஒன்றில் பொதுவாக இன்னும் உடையவர்களாக வெள்ளைத்தோல்காரர்களும், தாழ்நிலையில் நாட்டுக்காரக் கருப்பர்களும் உள்ளதாக ஒரு கட்டுரை வந்திருந்தது.
அப்படியானால் மண்டேலா கால் நூற்றாண்டுகள் சிறையில் காலங்கழித்து, apartheid-யை வென்றதாக நாம் சொல்வதில் எத்துணை உண்மை?
இன்னும் அந்த இனவாத அரசியல் தென்னாப்பிரிக்காவில் இருந்துதான் வருகிறதா?
*****
இரணடாம் உலகப்போர் நடந்த சமயம் ஹிட்லர் ஆளுக்கொரு கார் என்ற குறிக்கோளோடு கார் கம்பெனிகளுக்குக் கொடுத்த சவாலால் வடிவமைக்கப்பட்ட தாகச் சொல்லப்படும் வோல்க்ஸ்வேகனின் Beetle கார் ரொம்ப அழகுதான். சில படங்கள் - I love you, Herbie - அந்தக் காரை மேலும் பிரபல்யமாக்கின. அந்தக் கார் இந்தியாவுக்கு வருகிறதென்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. அஞ்சாறு லட்சத்தில சின்னதா ஒரு காரு நம்மளைச் சுத்தி சுத்தி அலையப் போகுதுன்னு கற்பனை பண்ணியிருந்தேன். ஆனா அந்தக் காரு 22 லட்சம் ரூயாயாம்.
இது ரொம்ப அநியாயமா இருக்கிறதே ...ஏனிந்த விலை? குறைந்த விலைன்னா வாங்கிடலாம்னு நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் இப்படி ஒரு விலைன்னு ஆச்சரியமோ ஆச்சரியம்?
*****
மும்பையில ஒண்ணு ரெண்டு ஜன்மங்கள் இருந்துகிட்டு இது மராத்தி இடம் அப்டின்னு டமாரம் கொட்டிக்கிட்டு இருக்குதுகளே .. மும்பை வெடிகுண்டுக்குப் பின்னும் ஏனிப்படி அதுகள் கத்துது? ஆச்சரியம்தான்.
மும்பையில் உள்ள பல அமைப்புகள் மாறி ம ாறி Mumbai For India அப்டின்னு ஏதாவது ஒரு விழா, ஊர்வலம், விளையாட்டு .... அது இதுன்னு மாறி மாறி நடத்தினா அந்த ஜன்மங்கள் அடங்கி விடாதா?
ஒரு ஏக்கம்தான் ...! நடக்குமா?
*****
பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது ஐயா; குறிப்பாக தென் ஆப்ரிகா மக்கள் தொகை பற்றி தாங்கள் சொன்னது இது வரை தெரியாது.
ReplyDeleteநல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
திவாரி மற்றும் டைகர் உட்ஸ்......நியாயமான ஒப்பீடு...
ReplyDeleteஎனக்கு ஹான்ஸி குரோனியே & அசார் ஞாபகம் வந்தது...
அசாரால் கிடைத்த கூட நட்பால் பணத்திற்கு சபலப்பட்டு தேசத்தை சூதாடிய குரோணியே டெல்லி போலீசிடம் மாட்டிய போது அவர்கள் அரசும் மக்களும் குரோணிக்கு முழு ஆதரவு அளித்த நிலையில் குற்ற உணர்வு தாங்காமல் தானே சென்று அப்ரூவர் ஆகி... அழுது, புகழ்மங்கி பத்தோடு பதிணொன்றாக ஃப்ளைட் க்ராஷில் செத்துப் போன குரோணி அங்கு....
இங்கோ கடைசிவரை தன் சூதாட்டக் கேவலங்களுக்கு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் பொதுவாழ்வில் எப்போதும் போல் வலம் வந்த அசாருதீன் இப்போது தஞ்சம் புகுந்திருப்பது பார்லிமெண்டில்!!!
குரோணி வெள்ளையர் அல்ல என்றுதான் நினைக்கிறேன்!!
என்னத்த சொல்ல :)
தென்னாப்பிரிக்க அணி தேர்வில் ....இவ்வளவு வெள்ளையர், இவ்வளவு கறுப்பர் எடுக்க வேண்டும் என்று ஒரு கொள்கை (பாலிசி) இருக்கு ..
ReplyDeleteநேற்றைய ஆட்டத்தில் ...ஹஷிம் ஆம்லா, டுமினி, லங்கேவேல்ட்ட், பர்னெல்.....இவர்கள் எல்லாம் வெள்ளையர் இல்லை...
//அப்படியானால் மண்டேலா கால் நூற்றாண்டுகள் சிறையில் காலங்கழித்து, apartheid-யை வென்றதாக நாம் சொல்வதில் எத்துணை உண்மை?
இன்னும் அந்த இனவாத அரசியல் தென்னாப்பிரிக்காவில் இருந்துதான் வருகிறதா? //
எனக்கு அப்படி தோன்றவில்லை, தென்னாப்பிரிக்காவிற்கு சென்று வந்தவர்கள், அங்கு இருப்பவர்கள்...இன்னும் சரியான பதில் கூறலாம்.
தென்னாப்பரிக்க தேச அதிபர், கிரிக்கெட் ஆணையம் அதிபர் .....இவர்கள் எல்லாம் கருப்பர்கள் என்று தான் நினைக்கிறேன்
நல்லாயிருக்கு சார்!
ReplyDeleteதொடர்ந்து கேள்வி கேளுங்க!
அருமையான தொகுப்பு தருமி சார்.
ReplyDeleteஆந்திரா ஆளுநர் பத்தி சொன்னீங்க அதில் "அட் லீஸ்ட் வயசுக்கு ஏத்த வேலையா செஞ்சிருக்காரு? " அப்படின்னு குறிப்பிட்டிருக்கீங்க, அதான் ஆனந்த விகடன்ல வர்ற மருத்துவர் எந்த வயசுலயும் இப்படி செக்ஸ் உணர்வு இருக்கும் அதை நாம் தவறாக நினைக்க கூடாதுன்னு சொல்லிட்டாரே. பின்ன சும்மா இருக்குங்கள கெழங்க?? எப்பவுமே பெண்கள் பெருசுங்க விஷயத்துல ரொம்ப உஷாரா இருப்பாங்க இப்ப இந்த மாதிரி எழுதினதால (இதனால மட்டும் இல்ல, அவரு கணவன் மனைவி உறவு பத்தி சொன்னாரு அத புரிஞ்சிக்காம இதுங்க) எல்லாம் தீராத விளையாட்டு பிள்ளைங்கள சுத்துதுங்க.
அப்புறம் மும்பை மேட்டர், என்ன சார் இது ஓர வஞ்சனை?? இங்க நடக்கற கூத்தெல்லாம் சொல்லல நீங்க?? அவனவன் (Rapist, Fieldout Directors & Actors) தான் தான் தமிழன், இவன் ஆத்தா மட்டும் தான் தமிழ்காரி மாதிரி ரொம்ப ஆடுறானுங்க. அப்ப மத்தவங்க எல்லாம் என்ன ஆப்ரிக்கால இருந்து இன்னைக்கு தான் வந்தோமா??? நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியலைடா.... :ப
நன்றி.
திவாரி மேட்டர் போனா அடுத்து இன்னொன்னு...தொடருமே
ReplyDeleteதமிழ்ப் படம்...ஸ்பூப் னாலும் ஸ்பூன் அளவு பெரிசு.
திவாரி விஷயத்தை blow பண்ணதிலே எனக்கு ஒப்புதல் இல்ல. அந்த ஆளூ உங்க பணத்தில் 15 கோடி ரூபா வீடு வாங்கலாம். என்ன தப்பு வேணா பண்ணலாம். ஆனா பொண்ணு கூட இருந்தா தப்பு.... சும்மா கற்பு, பெண்ணுரிமைன்னு சொல்லாதீங்க. அந்தப் பொண்ணே வந்து என்னக் கட்டாயப் படுத்தினாருன்னு சொன்னா ஓ.கே... அந்த பொண்ணோட ஒப்புதல் இருந்தா அவங்க சொந்த விஷயம். சட்டத்தில் எந்த இடத்திலும் இத கேள்வி கேட்க இடமில்லயே?
ReplyDeleteஅப்படியே ethical,moral background ல பேசுனா கூட நேரும் ,லேடி மவுண்ட் பேட்டன் கதை தான் ஊருக்கே. தெரியுமே. அதெல்லாம் பாத்துட்டா இருக்கோம்..
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDelete//இன்னும் அந்த இனவாத அரசியல் தென்னாப்பிரிக்காவில் இருந்துதான்வருகிறதா//
ReplyDeleteஇல்லியா பின்ன?:-)
தருமி,
ReplyDeleteபார்த்தீங்களா, என்னமோ ஒரு வெடி இருக்குமே... ஆங்ங் ஆயிரம்வாலா சரவெடி கட்டு அதப் பிரிச்சு வெடிக்க வைச்ச மாதிரி வரிசையா போட்டுத் தாக்கிட்டீங்க, போங்க. சிலது படிக்க படிக்க சிரிப்பு, சிரிப்பா வருதுங்க. அதிலும் அந்த கவர்னர் மேட்டரோட எங்கூரு டைகர ஒட்டினது - ஹைலைட்.
நெல்சன் மண்டேலா விசயம் - இதெல்லாம் அரசியல்ல சகஜமிங்க! இதோ! ஒபாமாவும் தான் இருக்கார் இங்கே என்னாத்தை செய்யவிடுறாங்கோ!!
அடிக்கடி இந்த மாதிரி கதம்பம் கட்டுங்கய்யா :-)
அத்தனையும் அருமை,இதுவே தருமியின் பெருமை.
ReplyDeleteதருமின்னாவே கேள்வி கேக்கத்தான் தெரியும்:-))))))
ReplyDelete//அந்த ஆளுக்குத் தோலு என்ன அம்புட்டு முரடுதானா?//
ReplyDeleteவேண்டாம்.... சிரிப்பு வருகிறது. கொஞ்சம் மாற்றி படித்தேன்.
:) அப்பறம் கோவியார் ஆபாசம் பேசினார் என்று வரலாறு எழுதிவிடும்
samuel,
ReplyDelete//தென்னாப்பிரிக்க அணி தேர்வில் ....இவ்வளவு வெள்ளையர், இவ்வளவு கறுப்பர் எடுக்க வேண்டும் என்று ஒரு கொள்கை (பாலிசி) இருக்கு ..
நேற்றைய ஆட்டத்தில் ...ஹஷிம் ஆம்லா, டுமினி, லங்கேவேல்ட்ட், பர்னெல்.....இவர்கள் எல்லாம் வெள்ளையர் இல்லை...//
மன்னிக்கணும் சாமுவேல். நீங்க சொல்ற ஆளுகள், பெயர்கள், கருப்பா வெள்ளையா இதெல்லாம் தெரியாது. விளையாட்டு பார்க்கும்போது கருப்பே கண்ணில படலைன்னு பேரனிடம் கேட்டேன், அவன் யாரும் கருப்பர் இல்லையென்றான்.
உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகு கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன். இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன்.
There is still no ethnic black African in the team.
ஆனால் நீங்க சொல்ற ஒரு சட்டம் பெயருக்கு இருக்குதென்று போட்டிருக்கு.
கொஞ்சம் பாத்து சொல்லுங்க.
அன்பான நண்பர் திரு தருமி,
ReplyDeleteவேறுபாடே இல்லையே நண்பரே ஏனென்றால் நீங்கள் செய்த comparission தவறு!!
பில் கிளிண்டனுக்கு நடந்தது என்ன? Oval office இல் வேலைசெய்த ஒருவரிடம், அதுவும் தன் மகளின் வயதே ஆன ஒருவரிடம்
இவர் ஆடிய ஆட்டம்! வெட்ட வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் இரண்டாண்டுகாலம் கவலை இல்லாமல் பதவியை அனுபவித்துவிட்டு,இன்னுமும் பல
ஊர்களுக்கு சென்று மேடை பேச்சுகள் செய்து கொண்டிருக்கும் ஒருவரை கம்பேர் செய்யும்போது, நம்ம ஊரு சபல தாத்தாவிற்கு நாம் கொடுத்த தண்டனை எவ்வளவோ மேல் (அதாவது அவர் பதவி பிடுங்கப்பட்டது மேலும் அவர் அவர் முற்றிலுமாக அவமானபடுத்தப்பட்டார்)!
தமிழர்களிடம் sense of Humour மிக அதிகம்!! ஆனால் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை உணர்வுகள் பயத்தால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் போனது, அதற்க்கு காரணம், இங்கே நடக்கும் வன்முறை மற்றும் வன்மம் சார்ந்த அரசியல்! அதன் சாராம்சம், அவர்கள் யாரை வேண்டுமானாலும்
கிண்டலடிக்கலாம் , ஆனால் அவர்களை யாராவது கிண்டல் செய்தால் செய்தால், அவ்வளவுதான்!!!!! இங்கே ஆளும் கட்சியின் குடும்பத்தைப்பற்றியோ அவர்களின் அரசியலைப்பற்றியோ யாராவது கிண்டல் அடித்து படம் எடுக்கட்டுமே, "தமிழ் அரசியல்" என்று!!!! திரை அரங்குகள் கொளுத்தப்படும்!!!!
பக்கத்து கேரளாவில் எட்டிப்பாருங்கள், அச்சுதானந்தனில் தொடங்கி, கருணாகரன், அந்தோணி சினிமா நடிகர்கள் போன்ற எல்லோரையும் போட்டு வாட்டி எடுக்கிறார்கள்!!! அதும் தொலைக்காட்ச்சியில்!!! சில காட்சிகள் மிகவும் சுவையாக இருக்கும்! அதே இங்கு நடந்தால்................ 2007 இல் மதுரை சன் டிவி அலுவுலகத்திற்கு ஆன நிலைமைதான் ஆகும்!!!
தென்னாப்ப்ரிகாவில் நடக்கும் அரசியல் மொத்தமும் கருப்பு இனத்தவரால்தான் நடத்தப்படுகிறது!!! அரசியல், ஆட்சி, அதிகாரம் எல்லாமே அவர்களிடத்தில்தான்!
ஒருவன் நன்றாக வர்த்தகம் செய்தாலோ, களத்தில் விளையாடினாலோ அது அவனின் திறமை! இதில் வேறு எதற்கும் இடமில்லை! தென் ஆப்ரிகாவை
விடுங்கள்! பக்கத்தில் இருக்கும் ஜிம்பாப்வேவை எடுத்துகொள்ளுங்கள்! ராபர்ட் முகாபே 1980 முதல் ஆட்சியில் இருக்கிறார்! வெள்ளையர்கள் அரசியலைத்தவிர மற்ற இடங்களில் முதன்மை வகிக்கின்றனர் என்று கூறி கடந்த ஐந்து வருடமாக அவர் நடத்திய அராஜகத்தால், இன்று அந்த நாடு அகல பாதாளத்திற்கு சென்று விட்டது!!! பல வெள்ளையர்கள் பயந்து ஓடிவிட்டதால்தான் இப்பொழுது அந்நாட்டு கிரிகெட் டீமில் பல கருப்பு நிறத்தவர் உள்ளே வந்தனர்! திறமைக்கு இடம்
கொடுக்காததால் அந்த அணியும் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது!! உகாண்டாவிலும் அதுதான் நடந்தது! என்ன வெள்ளையர்க்கு பதிலாக இந்திய
வம்சாவெளியினர்! இடி அமீனால் துரத்தி அடிக்கப்பட்டனர் அன்று! மன்னியுங்கள் மறுபடி வாருங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் இன்று!!! இப்பொழுது உகண்டா ஒரு mini success story in economics along with Botswana and Zambia to a certain extent!
வோல்க்ஸ்வகேன் பீடில் இங்கே முழுவதுமாக தயாரிக்க படவில்லை! மெக்ஸிகோ நாட்டிலிருந்து CKD (completely knocked down) ஆக இருக்கமாதி செய்யப்பட்டு இந்தியாவில் அச்செம்ப்லி மட்டும் செய்யப்படுகிறது! இந்திய இருக்குமதி சட்டப்படி வாகனங்களை இந்தியாவில் தயாரித்தால்தான் உபரி பாகங்களுக்கு கஸ்டம்ஸ் பதினைந்து அல்லது பத்து சதவிகிதம்! ஒரு வாகனத்தையே நீங்கள் உள்ளே கொண்டு வந்தால் customs duty மிக மிக அதிகம்! மேலும் Beetle is not to be viewed in the league of an Indica, Alto or a Santro or for that mater a swift. The technology is far superior and theinteriors and finish is too polished. இந்தியாவில் இதை செய்தால் சுமார் எட்டு முதல் பத்து லட்சத்திற்கு விற்கலாம்!!
ReplyDeleteமும்பை வெறியர்களை தட்டி எழுப்பி, பால் கொடுத்து போஷாக்கு கொடுத்து வளர்த்து விட்டது காங்கிரஸ் கட்சி! அன்று பால் தாக்ரே லேபர் யூனியன்களை
ஒழிக்க, இன்று ராஜ் தாக்ரே, அவரையே ஒழிக்க! ஷாருக்கான் சமாச்சாரத்தால் இழந்த புகழை ஓரளவு மீட்ட பால் தாக்கரேயை எப்படி எதிர்க்கொள்வது என்று காங்கிரஸ் கணக்கு செய்து கொண்டிருக்கிறது! காங்கிரசுக்கு கண்டிப்பாக தெரியும் ராஜ் தக்கரே இப்பொழுது ஏதாவது செய்வாரென்று! அது பால் தாக்கரேவின் மாராட்டிய அபிமானி பெயரை மீண்டும் பரிக்கதான் என்பதும் தெரியும்! ஆதலால் Mumbai for India போன்ற நல்ல விஷயங்களை செய்ய
விடாது காங்கிரஸ்! அப்படி செய்தால் ராஜ் தாக்கரேயும் அல்லவா பெயர் இழக்க நேரிடும், பால் தக்கரே களத்தில் இருக்கும் வரை இது நடக்காது, காங்கிரஸ் விடாது! தீயை அணைக்காதே, அணைப்ப்வனையும் கிட்டே விடாதே, அதை ஊதி பாரப்புவர்களில் நமக்கு வேண்டிய பரப்புவர்கள் வேலைக்கு
உலை வேயப்பதில் நமக்கென்ன லாபம்! கொஞ்சமாக எரியட்டும்! பிறகு பார்த்துக்கொள்வோம்! இதுதான் காங்கிரஸ் கணக்கு! ராஜ் தாக்கரேயின் குண்டர்கள் வட மாநிலத்தவரை ரோடில் போட்டு பப்ளிக்காக அடிக்கும் பொழுது யாரும் ஏனென்று கேட்கவில்லை! அதையே பால் தக்கரே வேறு மாதிரி செய்த போது ஓடோடி வந்தவர் ராகுல் காந்தி!!!! பிந்த்ரன்வலேவிர்க்கு பிறகும் இவர்கள் திருந்தவில்லை!
நன்றி
மேல நான் சொன்னதற்கு மேலும் சில inputs!
ReplyDeleteஅமெரிக்காவின் NBA (national basket ball association) என்பது என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்! அமெரிக்காவையே சுண்டி இழுக்கும் ஒரு விளையாட்டு குழு என்றால் அதில் உள்ள பல குழுக்கள்தான்! அங்கே உள்ள குழுக்களின் ஆட்ட மோதல்கள் பயங்கர பரபரப்பை தூண்டுபவை! இதில் உள்ள எல்லா குழுக்களிலும்
மிக அற்புதமான வீரர்களை சேர்த்து dream team என்ற ஒன்றை உருவாக்கி அந்த அணியே மற்ற நாடுகளுடன் மோதும்! அந்த dream team இல் இருப்பவர் எல்லோரும் கருப்பு இனத்தவரே! Maybe ஒப்புக்கு ஒருவர் அல்லது இரு வெள்ளையர்கள் விளயாடிருக்கலாம்! ஆனால் நம்ம ஊர் சச்சின் டெண்டுல்கருக்கு இனயான வீர்கள் எல்லாம் கருப்பு இனத்தவரே!
அமெரிக்காவின் கருப்பு இனத்தவர் ஜன தொகை - 12%
வெள்ளை நிறத்தவர் ஜன தொகை - 80%
NBA வில் கருப்பு இனத்தவர் - 90%
Dream Team இல் கருப்பு இனத்தவர் -100%
இன்றைய செய்தி - ராஜ் தக்கரே தன்னுடைய அடுத்த ரௌண்டை தொடங்கிவிட்டார்! மண்ணின் மைந்தருக்குதான் விளை நிலங்களை விர்க்கவேண்டுமாம், அதாவது மாராட்டியர் அல்லாதோர் நிலம் வாங்கக்கூடாதாம்! இதை வைத்துக்கொண்டு சில அசிங்கங்களை அடாவடிகளை வன்முறைகளை நிச்சியமாக இந்த மனிதர் செய்வார்! அதைப்பார்த்து வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்! பால் தாக்ரே அடுத்த டார்கெட்டை தேடுவார்! இரண்டு ரவுடி கூட்டங்களுக்கும் பால் வார்த்து தன கோட்டையை பாதுகாக்க நினைக்கிறது காங்கிரஸ்!!!! இது ஆபத்தான போக்கு.
மோகன் குமார்,
ReplyDeleteபிரபு,
வால்ஸ்,
சித்து (//பின்ன சும்மா இருக்குங்கள கெழங்க??// என்னங்க எங்கள இப்படி தாக்கிட்டீங்க?!)
கண்மணி,
பப்பு,
அத்திரி,
சித்து,
கபீஷ்,
தெக்ஸ்,
மதுரை சரவணன்,
துளசி, (உள்ளதைச் சொல்றீங்க...)
கோவி. (பாவி மனுஷா!)
.......மிக்க நன்றி
NO,
ReplyDeleteசில எதிர்கருத்துக்கள்:
//The technology is far superior and theinteriors and finish is too polished. //
engine vibration நிறைய இருக்குமாம் அப்டின்னு வாசித்தேன்.qualityநீங்க சொல்ற அளவு இருக்குன்னு எனக்கு சந்தேகமே! இருந்தா சந்தோஷம்.
காங்கிரஸ் ஏதாவது மும்பையில பண்ணணும்னு நான் சொல்லலை. non-political organizations, பள்ளிகள், கல்லூரிகள், N.G.Os, marathons ..... இதுபோன்றகட்சி சார்பற்ற அமைப்புகள் இந்த முன் முயற்சிகள் எடுக்கப்பட்டால் நலமாயிருக்குமே ... ஆதங்கம் என்றேன்.
நான் டைகர் வுட்ஸ் என்ற ஒரு நல்ல உதாரணத்தை ஒரு பொறாமையில் எடுத்தேன்.
Invictus!
ReplyDeleteWatch the movie! And patch it with ur thoughts on SA's sports teams!