23 மே, 2010
அது என்னங்க .. எனக்கென்னவோ கடலோரம் என்றாலே, நம் ஊருல தேரிக்காடு என்பார்களே, அதுமாதிரி ஒரேடியாக மணலும்,கொடும் வெயிலும், நீரற்ற வெளியும்தான் நினைவுக்கு வருது, ஆனால், இந்த ஊரு சிங்கப்பூரில திரும்புமிடமெல்லாம் பச்சைப் பசேலாக இருக்கு. சாலையோரமெல்லாம் பச்சைப் புல். இதுகூட வெளியூர்ல இருந்து நல்ல மணல் கொண்டு வந்து செடி வளர்த்திருப்பாங்களோன்னு ஒரு சந்தேகமே வந்துச்சு. ஹைவே மாதிரி அழகான ரோடு போட்டிருக்காங்களே அது வழியா போகும்போது காட்டுக்குள்ள போற மாதிரி இரு பக்கமும் பச்சை பசேல்.
சிங்கப்பூரில் இரண்டாவது நாள். மாலை கடற்கரையில் கறி சுட்டு்ச் சாப்பிடலாம் .. வாங்கன்னு மக்கள் கூப்பிட்டிருந்தாங்க. கடற்கரைக்குப் போனோம். கடலே பார்க்காமல் .. கடற்கரையில் வளர்ந்திருந்த பச்சை மரங்கள், புல்வெளியே நடந்து நமக்காக உத்தரவு வாங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம்.
அங்கங்கே நல்ல உட்கார இடம் விட்டு, நல்ல மேசையிட்டு பக்கத்திலேயே ஒரு grill அடுப்பு. அடுப்பு, அடுப்பு மேல கம்பி வலை எல்லாம் அழகா போட்டுருக்கு. நாம் முதலிலேயே பணம் கட்டி இடத்தை வாடகைக்கு எடுத்துக்கலாமாம். BARBEQUE செஞ்சு சாப்பிட்டுட்டு இடத்தைச் சுத்தமாக்கி வைத்து விட்டு செல்லணுமாம். அரை குறையா விட்டுட்டா அடுத்த நாளே 'நோட்டீஸ் & தண்டம்' வந்திருமாம். சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பும்போது இந்த விதிகளைக் கூறிக்கொண்டே நண்பர்கள் எல்லா இடத்தையும் சுத்தமாக்கினார்கள்.
அப்போது ஜோசப் 'இதை ஊரில் போய் எல்லார்ட்டய்ம் சொல்லுங்க்; இங்க எல்லாம் சுத்தமாக வைத்திருக்கணும்' அப்டின்னாரு. நாங்களும் அப்படித்தான். உங்க ஊரு ஞானசேகரிடம் கேட்டுப் பாருங்க.
எங்க கல்லூரி வளாகத்தில் பதிவர் சந்திப்பு வைக்கும்போது இடத்தைக் காலி செய்யும்போது அப்படி'ப்க்காவா' இடத்தைச் சுத்தம் செஞ்சுட்டு வருவோம்ல ... (ஆனா வேற இடங்களில் நடத்தும்போது அப்படி இருந்தோமா?)
நேற்று காலை எங்களை விமான நிலையத்தில் அழைக்க வந்தவர்களும், வாசகர் வட்டக் கூட்டத்தில் எங்களைச் சந்தித்தவர்களும் மட்டுமே சிங்கைப் பதிவர்களோ என நினைத்தேன். ஆனால் இன்று மாலை BARBEQUE சந்திப்புக்குத்தான் சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வந்திருந்தனர். நல்ல கூட்டம். எங்களுக்குப் புதிய முகங்கள் என்ற வேற்றுமையில்லை; அவர்களுக்கு 'புதுசுகள்' என்ற நினைப்பில்லை. காலங்காலமாய் பழகிய தோழர் வட்டமாக இருந்தது.
அரட்டை அடிக்க ஒரு கூட்டம்;
இன்னொரு பக்கம் கடமையே முனைப்பாய் அடுப்பு மூட்டி (கரி கூட ரெடிமேடாக இருக்கும் போலும்) எரிய வைத்து சமையல் வேலை மும்முரமானது.
பத்த வச்சாச்சு ..
.முதலில் வெள்ளித் தாளில் சுற்றிய சோளக்கதிர் தயாரானது. எங்க ஊர்ல பாட்டி ஒண்ணு தரையில காலை நீட்டி உக்காந்துகிட்டு ஒரு விசிறி வைத்து வீசிக்கொண்டே சோளக்கதிர் சுடுவதைப் பார்த்த எனக்கு, இங்கே ஒரு வித்தியாசம் மட்டும் தெரிந்தது. பாட்டி இல்லை; வயசுப் பசங்க அந்த வேலையைச் செஞ்சாங்க ... எது எப்படி இருந்தாலும் சோளக் கதிரின் சுவை என்னவோ இரண்டிலும் ஒன்றுதான்!
கடை விரிச்சாச்சு ..
சிங்கை நாதனின் வீட்டிலிருந்து வந்த இனிப்பு ஒரு நடு இணைப்பு. சிறந்த படைப்பு.
அடுத்து, ' பறப்பது' மூன்று நிலைகளில் வந்தது. துண்டாக,அடுத்து hotdog அப்டின்னு நினைக்கிறேன் .. அடுத்து மூன்றாவதாக ... ஆஹா ... அந்த grilled honey chicken ... பின்னிட்டாங்க ... போங்க. ஆனாலும் ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன். சில 'வில்லன்கள்' அதை மட்டும் காலந்தாழ்த்தி வாங்கி வந்தமையால் அது கடைசி ஐட்டம் ஆகி, அதற்குள் வயிறு நிறைய மற்றவற்றைத் தின்று, குடித்து (ஆமா .. உங்க ஊர்ல சாப்பிடும்போது தண்ணியே குடிக்க மாட்டீங்களா? எல்லாமே வேறதானா?!) வயிறு நிறைஞ்சு போச்சு.
சும்மா சொல்லப்படாது ..... ஐட்டங்கள் தீர்மானித்த அந்த நல்ல மனிதர்களுக்கு உளமார்ந்த, வயிறு நிறைந்த நன்றி.
சாப்பாட்டோடு கலகலப்பான பேச்சும் தொடர்ந்தது. என்னென்னவோ பேசினோம். பதிவுகள் பற்றி ... உலக நிகழ்வுகள் பற்றி ... தமிழ்நாடு பற்றி ... சொந்தக் கதைகள் .. சோகக்கதைகள் பற்றி ...
சிங்கை எப்படியிருக்குன்னு என்னிடம் கேட்டார்கள். நான் சொன்ன பதிலுக்கு சில 'பின்னூட்டங்கள்' உடனே வந்தன. ..ம்ம்...ம் .. அவைகளைப் பற்றி பின்னால் பார்ப்போம்.
கண்ணாடிக்காரர்கள்.
மூணு கண்ணாடிக்காரர்கள். நல்லா இருக்குல்ல ... என்னது .. முதல் ரெண்டுபேரும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்காங்களா? RayBan கண்ணாடியா? அதுவும் .. ஒரே கண்ணாடி அப்டின்றீங்களா? அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ஜோசப் திரும்ப திரும்ப என்னிடம் 'இது என் கண்ணாடி .. என் கண்ணாடிதான் அப்டின்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அறிவிலி படையப்பா சூப்பரு மாதிரி சிரிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தார். அம்புட்டுதான் எனக்குத் தெரியும் ... ரவிச்சந்திரன் கண்டுக்கலை ...
CLICK HERE FOR THE SECOND ROUND OF
*
ஆஹா.. கறி போச்சே..:-)))
ReplyDelete//நாம் முதலிலேயே பணம் கட்டி இடத்தை வாடகைக்கு எடுத்துக்கலாமாம்.//
ReplyDeleteஇடம் இலவசம் தான் ஆனால் பதிவு செய்து அனுமதி வாங்கிக் கொள்ளனும்
இப்போதெல்லாம் இந்த கறி சுடர வசதி விட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சிறிய பூங்காவுக்கே வந்துவிட்டது.
ReplyDeleteநகரத்தையே பூங்காவாக ஆக்காம விடமாட்டாங்க போல் இருக்கு அதே சமயத்தில் கீழே விழும் இலைகள் பக்கத்தில் இருக்கும் சாக்கடையை அடைப்பதற்கு முன்னாலே கூட்டிப்பெருக்கி வெளியேற்றிவிடுகிறார்கள்.
அட்டகாசம்!!!!
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅந்த கண்ணாடி என்னுது தான், ஆனா அன்னைக்கே அந்த ரேபான் காணா போச்சு.
யாருகிட்ட இருக்குன்னு தெரியலை. அட்லீஸ்ட் உங்க போட்டலயாச்சும் பார்த்துக்கிறேன் என் கண்ணாடிய.
அட்டகாசம்!!!!!!
ReplyDeleteஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமை
ReplyDelete//துண்டாக,அடுத்து hotdog அப்டின்னு நினைக்கிறேன் .. அடுத்து மூன்றாவதாக ... ஆஹா ... அந்த grilled honey chicken ... பின்னிட்டாங்க ... போங்க. ஆனாலும் ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன்//
:-) grilled honey chicken மற்றும் honey chicken வந்தடைய 7 மணிக்கு மேலாகிவிட்டது. அதானால் சுட்டுத்தர தாமதாகிவிட்டது. :-)
//அப்போது ஜோசப் 'இதை ஊரில் போய் எல்லார்ட்டய்ம் சொல்லுங்க்; இங்க எல்லாம் சுத்தமாக வைத்திருக்கணும்' அப்டின்னாரு. நாங்களும் அப்படித்தான். உங்க ஊரு ஞானசேகரிடம் கேட்டுப் பாருங்க. //
ReplyDeleteம்ம்ம் உண்மைதான் ..
எல்லா இடங்களிலும் அப்படியிருந்தால் ஆணந்தபடுவரின் நானும் ஒருவன்... படங்களும் பகிர்வும் அருமை அழகு... மிக்க நன்றி
மகிழ்ச்சியுடன்
ஆ.ஞானசேகரன்
ம்ம் ஒரு வெட்டு வெட்டியாச்சா சார் !!!
ReplyDelete:)
உங்கள் பயணக் கட்டுரை பசியை ஏற்படுத்தினாலும் ருசிக்கிறது . ஹனி சிக்கன் போனாலும் உங்கள் எழுத்துக்கள் எங்கள் மனத்தை நிறைத்துள்ளன. அடுத்து எப்போது....
ReplyDeleteஎனக்கு barbeque ... :)) அசத்தல் போங்கோ
ReplyDeleteகா.பா.
ReplyDeleteநம்மூர்லேயே செஞ்சிருவோம்.
கோவீஸ்,
அப்டியா? அரசுக்குத் தாராள மனசு.
நல்லது; நடக்கட்டும் ..
வ.குமார்,
ReplyDeleteஉங்க ஊர்லயா .. இங்க, சிங்கையிலா?
எப்படித்தான் பண்றங்களோ .. எல்லாம் செயல்படுது.......
ஜோசப்.
ReplyDelete//யாருகிட்ட இருக்குன்னு தெரியலை.//
எனக்குத் தெரியும். சொல்லடா ..? ஆனா அங்க போனா ரேபேன் கிடைக்குமா இல்ல வேறெதாவதா ..?
டபுள் அட்டகாசத்திற்கு மிக்க நன்றி, துளசி
ReplyDeleteடொன்லீ,
அமைதியின் இருப்பிடமே .. மிக்க நன்றி.
ஞானசேகரன்,
ReplyDeleteநேசமித்திரன்,
தெக்ஸ்,
சரவணன்
..........அனைவருக்கும் மிக்க நன்றி.
என்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போகாத ஜோசப்பு..ஒழிக..:)
ReplyDeleteஎன்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போ்ன ஜோசப்பு..வாழ்க..:)
ReplyDeleteஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமை
ReplyDeleteநன்றி ஜெகதீசன்.
ReplyDeleteபடங்களில் நிறைய "விழுந்திருக்கிறீர்கள்"!
:)
ReplyDelete/இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன். சில 'வில்லன்கள்' அதை மட்டும் காலந்தாழ்த்தி வாங்கி வந்தமையால் /
ReplyDeleteஹா...ஹா...ஹா...ஹா...ஹா...
//அறிவிலி படையப்பா சூப்பரு மாதிரி சிரிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தார்.//
ReplyDelete:-)
//ஜோசப் பால்ராஜ் said...
ஐயா,
அந்த கண்ணாடி என்னுது தான், ஆனா அன்னைக்கே அந்த ரேபான் காணா போச்சு.
யாருகிட்ட இருக்குன்னு தெரியலை. அட்லீஸ்ட் உங்க போட்டலயாச்சும் பார்த்துக்கிறேன் என் கண்ணாடிய.//
:-)))))))))))))
அறிவிலி,
ReplyDeleteஇப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? நிறைய அர்த்தமிருக்கிறது மாதிரி தோணுதே!
very nice sir.photos and comments very interesting.
ReplyDeleteR.Periyasamy.LIC.TIRUPUR.
நன்றி பாமரன்
ReplyDelete