*
29-30.6.10 - இரவு - http://www.tamilsportsnews.com/-க்காக எழுதிப் பதிப்பித்தது:
*
நெதர்லேன்ட் – ஸ்லோவோக்கியா - ஆட்டம் சுத்தமாக சோபிக்கவில்லை. ஸ்லோவோக்கியா ஆட்டம் ரொம்ப மோசம். வரும் பந்தை தடுத்து நிறுத்தவும் தடுமாறினார்கள். Advance passing என்று ஒன்றிருப்பதையே பசங்க மறந்துட்டாங்க போலும்.
பந்து வந்ததும் அதை back pass பண்ணுவதே ஒரே குறிக்கோள். அப்பாடா, எப்போதுடா உங்க ஆட்டம் முடியும் அப்டின்னு எனக்கு இருந்தது. எப்படித்தான் பழைய சாம்பியன் இத்தாலியைத் இவர்கள் தோற்கடித்தார்களோ! ஒரு வழியாக நெதர்லேன்ட் 2:1 என்ற கணக்கில் வென்றது. அடித்த ஒரு கோலும் ஒரு பெனல்ட்டி கோல். அதுவும் கடைசி நிமிடங்களில். நெதர்லேன்ட்டின் ராபின் அடித்த முதல் கோல் நன்றாக இருந்தது. ஸ்ட்ரெய்ட் கிட் … வலுவான உதை. ஜிவ்வென்று கோலுக்குள் சென்றது.
*****************
அடுத்தது, காத்திருந்த ப்ரேசில் ஆட்டம். எதிர்பார்த்தது போலவே ஆட்டம் சுறு சுறு .. ஏற்கெனவே பார்த்ததில் சில்லியின் ஆட்டம் பிடித்திருந்தது. மிளகாயின் காரத்தோடு அவர்கள் விளையாடியதைப் பார்த்ததும் இந்த ஆட்டமும் சூடு பறக்கும் என்று நினைத்தது போல் நடந்தது. ஆனால் ப்ரேசிலின் ஆட்டம் மிக அழகு. ஸ்லோவோக்கியா பந்தை நிப்பாட்ட கஷ்டத்தை இப்போதுதான் பார்த்து விட்டு ப்ரேசில் ஆட்டம் பார்க்கும்போது .. என்ன ஒரு அழகு; நேர்த்தி. பந்து அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டது போலிருந்தது. Defense மிகச் சுத்தம். அவர்களது கோல் லைனின் அவர்கள் நின்றால் எதிரணி அடிக்கும் பந்து சரியாக ப்ரேசில் வீரர்களின் காலுக்குத்தான் வரும் போலும். அவர்களைத் தாண்டி பந்து போவது மிகச் சிரமம்.
கொரியாவுடன் விளையாடிய முதல் போட்டியிலும் ப்ரேசிலின் ஆட்டத்தில் fouls மிக மிகக் குறைவாக இருந்தது. இப்போதும் முதல் பாதி ஆட்டத்தில் அப்படியே. முதல் மஞ்சள் அட்டை இரண்டாம் பாகத்தில்தான் நடுவரின் பாக்கெட்டிலிருந்து வெளியே வந்தது. முதல் ஐந்து பத்து நிமிடங்கள் கொஞ்சம் தூக்கக் கலக்கத்திலிருந்த எனது கண்கள் அதன் பின் அந்த இரவு 12 மணிக்குப் பிறகும் நன்கு விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன! விளையாட்டு அப்படி …!
கொரியாவின் ஆட்டத்தில் போட்ட அழகான முதல் கோலை மனதில் வைத்து ப்ரேசிலின் மைக்கானுக்கு Magic Maicon என்று பெயர் வைக்க வேண்டுமென்று தோன்றியது. இந்த ஆட்டத்தில் 34வது நிமிடத்தில் அவர் அடித்த கார்னர் ஷாட்டை யுவான் (Juan) தலையால் தட்டி கோலடித்தார். அடுத்த நான்கு நிமிடங்களில், ராபின்ஹோ இடது பக்கமிருந்து அடித்த பந்தை காக்கா தடுத்து கோலின் நடுப்பகுதிக்கு அனுப்ப, பந்தைப் பெற்ற Fabiano பந்தைப் பிடிக்க வந்த கோல் கீப்பரை அழகாக tackle செய்து கோலடித்தார். மனதில் அப்போது தோன்றிய எண்ணம்: ப்ரேசில் வீரர்கள் மட்டும் கோல் பக்கத்திலும் ‘தொழில்’ காண்பித்து கோலடிக்கிறார்கள். 58வது நிமிடத்தில் Fabiano மூன்றாவது கோலை அடித்து வெற்றிக் கொடி நாட்டினர்.
ப்ரேசில் இனி நெதர்லேன்ட் உடன் க்வார்ட்டர் விளையாட வேண்டும் ….
நான் எழுதியதைப் பார்த்ததும் நான் ஒரு ‘சுத்த ப்ரேசிலின் விசிறி’ என்று தோன்றுகிறதல்லாவா” சரி .. சரி.. உண்மையை ஏன் மறைக்கணும்!
**************
சில நிமிடங்களுக்கு முன்தான் ஜப்பான் – பராகுவே ஆட்டம் முடிந்தது. ஆட்டம் வெகு சுமார். முழு நேரமும், அதன் பின்னான எக்ஸ்ட்ரா கால ஆட்டமும் முடிந்து விளையாட்டு யாரும் கோல் போடாததால் ‘மனசைக் கடுப்படிக்கும்’ பெனல்ட்டி கோல். கோமேனோ அடித்த பந்து தவறியது. பராகுவே க்வார்ட்டருக்குள் சென்று விட்டது.
**********************
No comments:
Post a Comment