Wednesday, July 07, 2010

411. FIFA 2010 -- உருகுவே -- நெதர்லேண்ட் - I அரையிறுதி

*


*



அப்பாடி … என்ன மேட்ச் … அதுவும் அந்தக் கடைசி 10 நிமிடங்கள் …


உருகுவே – நெதர்லேண்ட் -- ஆட்டம் முழுதும் விறுவிறுப்பாக இருந்தது. இரண்டு டீமும் முழு முனைப்பில் ஆடின. ஏறக்குறைய இரு தரப்புமே ஒரே அளவில் ஆடின. இரு தரப்புமே ஒரே மாதிரி short passes கொடுத்து ஆடுனாங்க. ஆயினும் நெதர்லேண்டின் ராபன், ஷ்னெய்டர் இருவரும் நெதர்லேண்டை கொஞ்சம் மேலே தூக்கி வைத்தார்கள். அவர்கள் இருவரால் நெதர்லேண்ட் தரப்பு சிறிது சிறப்பான டீமாகத் தெரிந்தது. உருகுவே நல்லா midfield game ஆடுவார்கள். அதன் பின் கோல் கிட்டே வந்ததும் எப்படி பந்தை யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாது விழிப்பது போல் நடந்தது. They were not confused near the goal post. அங்கே போய் யார்ட்ட பந்தைக் கொடுப்பது என்பது தெரியாமல் எங்கேயோ அடித்தது போலவே தெரிந்தது. பந்துகளை அடுத்தவருக்குக் கொடுத்து கோலை நோக்கி அடிக்கவைக்கும் அந்த கடைசி நிலைத்திறன் உருகுவேயிடம் குறைவு. நெதர்லேண்டிடம் அந்தக் குறை ஏதுமில்லை.

நெதர்லேண்டின் முதல் கோலும் (கேப்டன்: ஜியோவானி; 18வது நிமிடம்), உருகுவேயின் முதல் கோலும் (ஃபார்லான்; 41வது நிமிடம்) வெகுதூரத்திலிருந்து அடித்த பந்துகள். அதிலும் இரண்டாவதுகோல் வலது போஸ்ட்டில் பட்டு உள்நுழைந்தது. ஸ்னெய்டரும், ராபனும் 70, 73 நிமிடங்களில் ஆளுக்கொரு கோலை டப் .. டப்புன்னு அடிக்க, சரி அம்புட்டுதான் ஆட்டம் குளோஸ் அப்டின்னு நினச்சப்ப … எக்ஸ்ட்ரா டைம் ஆரம்பித்த உடனேயே உருகுவேயின் வீரர் ஒரு கோல் அடிக்க …. அந்த அழகான கடைசி நேர விளையாட்டு நடந்தேறியது. அதன்பின்னும் உருகுவே மிக அழகாக, வேகமாக நெதர்லேண்டின் கோல் அருகே அடிக்கடி பந்தைக் கொண்டு செல்ல. நாம் இருக்கையில் அமர முடியாமல், இன்னும் ஒரு கோல் உருகுவே போட்டு விடுமோ என்ற எதிர்பார்ப்பில் இருக்க வேண்டியதிருந்தது. ஓரிரு கோல்கள் ஒட்டி வந்தன … பாவம் உருகுவே ..

ஆனாலும் கடைசியில் நல்ல ஒரு டீம் சரியாக, நன்றாக விளையாடி வெற்றி பெற்ற மகிழ்ச்சி இருந்தது.



4 comments:

  1. ஆகா, முதல் பாதி பார்த்துட்டு தூங்கிட்டேனே. நல்ல மேட்ச் மிஸ்.

    ReplyDelete
  2. :)

    இன்னிக்கு ஜெர்மனுக்கு சப்போர்ட் பண்ணுங்க ;)

    ReplyDelete
  3. //இன்னிக்கு ஜெர்மனுக்கு சப்போர்ட் பண்ணுங்க//

    அப்போ, ஸ்பெயின் ஜெயிக்கணும்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க சொன்ன மாதிரியே ஆகி போச்சே

    ReplyDelete