Tuesday, July 13, 2010
415. FIFA 2010. நிறைவு
*
2010 உலக கால்பந்து பந்தயங்கள் முடிந்தன.
போட்டியின் ஆரம்ப நாளில் நடந்த விழா நிரம்பவும் ஏமாற்றம். ஆனால் இந்த முடிவு நாள் விழா மிக மிக அழகு. ஒரே வண்ணக்கோலங்கள். முழு பந்தயத் திடலின் தரையும் 'வெள்ளித் திரை'யானது. தரையில் வண்ணக் கோலங்கள் வந்தேற, சுற்றிலும் அரங்கின் மேலிலிருந்து வண்ணப் பட்டாசுகள் கோலங்காட்டின.
* நடுவிலே ஒரு நீர் குட்டை
* அதனை சுற்றி வரும் ஆப்ரிக்க மிருகங்கள், வெள்ளை யானைகள்
* ஒரு மக்கள் குழாம் நடந்து வர, அவர்களின் நடை தாண்டியதும் பங்குபெற்ற நாட்டுக் கொடிகள் அவர்களின் காலடியிலிருந்து முளைத்து வர,
* ஒரு மக்கள் குழாம் நடந்து உஊஸுலா குழல் வடிவத்தில் நிற்க, அதில் வாயிலிருந்து வண்ணக் குழம்புகள் வடிவெடுத்து வர,
* மகான் மண்டேலா சின்ன ஊர்வலமாக வர,
* மக்களெல்லோரும் அவரைக் கண்டதும் மகிழ்ச்சியில் கூத்தாட,
* வாக்கா .. வாக்கா பாட்டு அனைவரையும் துள்ள வைக்க,
* இறுதியில், பங்கு பெற்ற நாட்டினரின் மொழியில் THANK YOU என்ற எழுத்துக்கள் வர .............
................ மிக மிக நன்றாக இந்தக் காட்சிகள் அமைந்தன.
அதன்பின் நடந்தது கடைசி போட்டி. என்னவோ ஒரு ஆட்டம். தாங்க முடியவில்லை. கால்பந்தின் அழகு அங்கே சுத்தமாகக் காணோம். ஒரே சொதப்பல்தான்; நடுவர் சீட்டுக் கட்டு நன்றாக விளையாடுவோர் போலும். பதினைந்து மஞ்சள் சீட்டுகளை வீரர்களுக்கு அள்ளித் தெளித்தார். பந்துகள் இரு முனைகளுக்கும் மாறி மாறி சென்றன. என் கணக்குப் படி ஸ்பெயின் பக்கம் ஒன்பது முறையும், நெதர்லேண்டு பக்கம் பத்து முறையும் கோல் விழுவது போல் தோன்றின. கடைசியாக இரு நிமிடம் இன்னும் இருக்கும் நேரத்தில் இனியெஸ்டா ஒருகோல் போட ஸ்பெயின் வென்றது.
எனக்குப் பிடித்த கோல் கீப்பர்:
VINCENT ENYEAMA
எனக்குப் பிடித்த வீரர்:
NEDERLAND'S ROBBEN
எனக்குப் பிடித்த கோல் போட்டவர்:
BRAZIL'S MAICON
எனக்குப் பிடித்த போட்டி:
ஜெர்மனி vs உருகுவே
பெரிதும் கேட்கப்பட்ட சத்தம்:
உஊஸுலா குழல்
உங்களுக்குமா மாடரேஷன்!அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteநீங்க இன்னுமா விளையாடிட்டு இருக்கீங்க:)
ReplyDeleteநாங்கெல்லாம் விளையாட்டுக்கடையவே இழுத்து மூடிட்டோமில்ல!
ஐயா சாமி, இறுதி ன்னு தலைப்பில் போட்டு நாள் என்று எழுதி இருக்கிறீர்கள், அதற்கு கீழ் தருமின்னு பெயர் வருது தமிழ்மணத்தில் படிக்கும் போது 'பக்' என்று இருந்தது, தலைப்பை
ReplyDelete"415. FIFA 2010. நிறைவு நாள்" - என்று மாற்றவும், நெருப்பு என்றால் வாய்வேகாது, ஆனால் வசைச் சொல் சொன்னால் கன்னம் பழுக்கும் என்பார்கள் பெரியவர்கள்.
:)
இறுதி ஆட்டம் ரொம்பவே சுமார். பந்தை உதைப்பதை விட ஏதிரணி ஆட்களை உதைப்பதில் தான் அதிகம் முனைப்பு காட்டினார்கள். நெதர்லாந்து நெகடிவ் ஆட்டம் ஆடியதாகவே எனக்குப்படுகின்றது.
ReplyDeleteநீங்கள் கூறியதை போல் ஜெர்மனி - உருகவே ஆட்டம் தான் சூப்பர்.
//நீங்க இன்னுமா விளையாடிட்டு இருக்கீங்க//
ReplyDeleteஇன்னும் ஒண்ணு இருக்குல்ல ...!
கோவீஸ்,
ReplyDeleteகளவாணி சினிமாவுக்கு போற அவசரம் .. அள்ளித் தெளிச்சிட்டு போயாச்சு!
பெரிசே..
ReplyDeleteஏன் இப்படி..?
சரோஜாதேவி இதைப் பார்த்தா வருத்தப்பட மாட்டாங்களா..? ஷகீரா உங்களையும் கவுத்துட்டாளே..!
இதைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் பக்கம் போகவே நாட்டமில்லை!
ReplyDeleteஇறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கால்பந்து ஆட்டத்தையே கேவலப்படுத்தி விட்டனர் என்று ஜெர்மனி ஜாம்பவான் பெக்கன்பாவரும் கூறியுள்ளார். நீங்கள் தமிழ்நாட்டு பெக்கன்பாவரோ?
ReplyDeleteஎனக்கும் ராபன் (ராபின்??) ஆட்டம் மிகவும் பிடித்திருந்தது.
ReplyDeleteஎன்னை பொருத்தவரை சுவிஸ் அணியின் கோல் கீப்பர்தான் அருமை. முதல் போட்டியில் உலக சேம்பியனை மண்ணை கவ்வ வைத்தாரே...
அதே போல் பராகுவே அணியின் பயிற்சியாளரை போட்டியின் போது பார்தீர்களா? நம்ம ஊர் காமெடி நடிகர்கள் போலவே நடந்துகொண்டார். (குறிப்பாக ஜப்பானுடனான போட்டியின் போது)