Friday, August 06, 2010

423. சிங்கப்பூர் -- MEETING POINT

MEETING POINT


22 மே 2010: எங்க ஊர்ல சாதாரண பஸ், தாள்தள பஸ், சாஞ்ச சீட் உள்ள பஸ், ஏர் பஸ் இப்படி பல வகை உண்டு. ஆனால் விமானத்திலேயும் சகாய விலை 


விமானம், ஆகாயவிலை விமானம் என்றெல்லாம் வேறுபாடு இருக்கும்னு யாருக்குங்க தெரியும். 21-ம் தேதி இரவு .. கொஞ்சம் பசிதான். சரி விமானத்தில குடுப்பாங்கன்னு நினச்சிக்கிட்டு நானும் பிரபாவும் விமானத்தில ஏறி உக்காந்ததும் முன்னால் இருக்கிற புத்தகங்களில் ஒன்றை
                                                                                                                   





  எடுத்துப் புரட்டினேன். விலைவாசி எல்லாம் போட்டிருந்தது. நினச்ச மாதிரியே ஆர்டர் எடுத்தாங்க. தலைவிதியேன்னு சிக்கன் வாங்கினோம். தண்ணீர் 5 வெள்ளி, மற்றபடி டப்பாவில உள்ளது 8 வெள்ளின்னா எதை வாங்குவது புத்திசாலித்தனம் -- அதையே வாங்கினோம்.

.விமானத்துக்குள்ளேயும் நல்ல சத்தம். அரைத்தூக்கம்.



சிங்கப்பூர் வந்தாச்சு. வெளியே வந்ததும் ஆளுகளையே காணோம். பொழுது நல்லா விடிஞ்சிருந்தது. ஏற்கெனவே நான் பார்த்திருந்த சிங்கைப் பதிவர் கோவீஸ் மட்டும்தான். வெளிப்பக்கம் வந்து நின்றோம். திடீர்னு சில சிங்கைப் பதிவர்கள் உள்ளிருந்து வந்தார்கள். எங்களுக்காக அவர்கள் காத்திருக்க நாங்கள் அவர்களைக் கடந்து வெளியே வந்திருந்தோம் போலும்.




நாங்கள் வந்திருந்தது 'மலிவு விமானக் கூடமாம்'. அதுவே நல்லா இருந்தது. நாங்கள் இறங்கிய ஓரிரு மணி நேரத்தில் டாக்டர் தேவன்மாயம் அடுத்த விமான நிலையத்தில் வந்திறங்குவார். ஆகவே படையோடு அந்த விமான நிலையம் போனோம். அதென்ன ... ஜோசப் காரில் நாங்கள் அங்கே போகும்போது ஓரிடத்தில் ஜோசப் பாதை மாறினார். அதுக்காக ரொம்ப சுத்தி வந்து சரியான வழிக்கு வந்தார். ஹூம் .. ம்.. எங்க ஊர்லன்னா அந்த இடத்திலேயே எதிர்வழியானாலும் பரவாயில்லைன்னு திரும்பி வந்திர மாட்டோம்!


அடுத்த விமான நிலையத்துக்குப் போகும்போதே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொத்தம் மூன்று விமான நிலையமாம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாம். ஆளில்லா 'கார்' ஒன்று இவைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்குமாம். வேண்டுமானால் ஓசிப் பயணம்.












இன்னொன்றும் நண்பர்கள் சொன்னார்கள். இந்த விமான நிலையங்களுக்கு அடியில் ஒரு நிலத்தடி பாதுகாப்பு கட்டிடங்கள் உள்ளனவாம். 'மோசமான காலங்களுக்காக'  பொது மக்களுக்காகக் கட்டப்பட்ட இடமாம் அது.
'பவ்யமான' மனுஷங்க ரெண்டு பேர் !!


எனக்கு இன்னொன்று ஆச்சரியமளித்தது. விமான நிலையத்தைத் தாண்டியதுமே பார்த்தேன். சாலைக்கு இரு புறமும் செழித்து வளர்ந்திருக்கும் பச்சைத் தாவரங்கள். நோக்கிய இடமெல்லாம் பச்சை .. பசுமை .. வளமை. இந்த ஆச்சரியம் சிங்கையில் இருந்தவரை தொடர்ந்தது. எங்கு பார்த்தாலும் நல்ல செடிகளும், மரங்களும். அட .. கடற்கரைக்குப் போனோமே ..( இங்கே போய் பாருங்கள். பச்சைன்னு அப்படி ஒரு பச்சை!) அங்கேயும் எங்கும் புல்லும் பெரிய மரங்களும். அப்டின்னா .. மெரினாவில் சிலைகள் முளைத்தன. ஆனால் அதைத்தவிர புற்களும், மரங்களும் ஏன் முளைக்கவில்லை?



(கடற்கரைன்னாலே ஒரே 'தேரிக்காடு' .. வெறும் பனை மரங்களும், காய்ந்த மணல் வெளியுமாகத்தான் நம்ம நாட்டுல பார்த்திருக்கேன். இங்கே மட்டும் கடற்கரையான இடத்தில் எப்படி இவ்வளவு வளமையான பசுமை .. ?)
'மணற்கேணி' வெளியீடு 








அடுத்த விமான நிலையம். காத்திருக்க ஆரம்பித்திருந்தோம். காலைச் சிற்றுண்டி சாப்பிடலாமே என்றார்கள். என்னடா ... இந்தச் சிங்கைக்காரர்கள் சரியான சாப்பாடு ராமன்களோ .. இந்த நேரத்தில் சாப்பிடணும்னு சொல்றாங்களேன்னு நினச்சேன். ஏன்னா எனக்கு அப்போ ஒரு காலைக் காப்பி குடிக்கணும்போல்தான் இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது; நான் இன்னும் இந்திய நேரத்தில் இருக்கிறேன். அவர்கள் சிங்கை நேரத்தில் - காலை உணவு நேரத்தில் - இருக்கிறார்கள் என்பது. அவர்கள் சாப்பிட்டார்கள். நானும் பிரபாவும் குடித்தோம்.
டாக்டர் தம்பதிகள் வந்து இணைந்தார்கள்.
கோவீஸ்


'வாத்தியார்'

ஏறத்தாழ நாங்கள் இறங்கி இரண்டரை மணி நேரம் ஆகியிருந்தது. அதற்குள் எல்லாவித inhibitions-ம் போய் நல்ல கலகலப்பாகியிருந்தது.
பதிவர்கள் நெருங்கி தோழமையோடு, உரிமையோடு ஒட்டி விட்டார்கள். அதென்ன மாயமோ .. இந்தப் பதிவர்கள் என்றாலே எப்போதும் இப்படித்தான்

இவ்வளவு காலையில் அத்தனை பதிவர்கள் 'களமிறங்கி' விட்டார்கள். அறிமுகங்கள், அரட்டை, காலிழுப்பு (leg pulling!!)  -- வகை வகையாய் நடந்தேறின. குசும்புகளுக்கும் குறைவில்லை.
வெடிவால்

செம வால்

சின்னக் கண்ணன் சிரிக்கிறான்
ஜோசப் காரில்  நானும் பிரபாவும், இன்னொரு டெக்ஸியில் (அது ஏனுங்க .. உங்க ஊர்ல TAXI-யை டெக்ஸி அப்டின்னு எல்லோரும் சொல்றீங்க?) எங்களுக்கான ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.














பி.கு:

நீல நிறத்தில இருந்தா அதெல்லாம் சிங்கைப் பதிவர்களுக்கான ஹோம் வொர்க். அதிலுள்ள கேள்விகளுக்கு நல்ல பிள்ளைகளாய் பதில் சொல்லுங்கள். முந்திய பதிவிலும் சில கேள்விகள் .. இன்னும் பதிலில்லாமல் தனியாய் பாவம்போல் நிற்கின்றன.


15 comments:

  1. வாவ்! கலக்கல்ஸ் புகைப்படங்கள். தருமி பச்சை பார்த்தீங்களா... நம்ம ஊர்ல ஒவ்வொரு மரத்திற்கும் பதிலா சிலை ...ஹிஹிஹி

    ReplyDelete
  2. ஜோசஃப்னா யாரு மில்டன் ஜோவா? புகைப்படங்கள் எல்லாம் நல்லாருக்கு.

    ReplyDelete
  3. டி.பி.ஆர்.,

    "வாத்தியார்"தான் நீங்க சொல்ற மில்டன் ஜோ.

    ReplyDelete
  4. jo-aNNan innum appdiye thaan irukaaru pOla :)
    mathavanga ellaraiyum meeNdum paatha thirupthi :)

    //ஆளில்லா 'கார்' ஒன்று இவைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்குமாம்//

    aaLey illaa car ethukku waste-aa OdaNum? :)
    thaaniyangi car-aa tharumi sir?

    ReplyDelete
  5. அய்யா நிறைய நல்ல புகைப்படங்களுடன் பயண அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை . அங்கே பசுமை- இங்கே மரம் வெட்டுவதே தொழிலாக பலா்
    - சம்பத் -

    ReplyDelete
  6. ஜோஸப்பு.. இவ்ளோ வயசான பார்ட்டியா..?

    நான் ஏதோ என்னை மாதிரி யூத்துன்னுல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்..!

    ReplyDelete
  7. படங்களுடன் பகிர்வு அருமை

    அனபுடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  8. தொடர்கிறேன்....உங்கள் பார்வையில் முக்கியமானது(நம்மூரில் கவனிக்கப்படாதது) ஒன்று வருகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  9. டெக்ஸி என்பது "taxi"க்கான மலாய் சொல் என நினைக்கிறேன்... :)

    ReplyDelete
  10. //
    நீல நிறத்தில இருந்தா அதெல்லாம் சிங்கைப் பதிவர்களுக்கான ஹோம் வொர்க்
    //
    //
    22 மே 2010:
    //
    புதசெவி.... இதில் என்ன ஹோம் வொர்க் என்பதை தயவு செய்து விளக்கவும்... :)

    ReplyDelete
  11. வழக்கம் போலவே இந்தப் படத்திலும் நான் ரெம்ப அழகாய் இருக்கேன்... :)

    ReplyDelete
  12. வடுவூர்

    ஏற்கெனவே சிங்கை போகும் முன்பே ஒரு 'வார்னிங்க்' கொடுத்தீர்கள். இப்பவும் அப்படி ஒண்ணு. உங்க வலையில் மாட்டிக்கணும்னு நினைக்கிறேன். மாட்றேனான்னு பார்ப்போம்!

    ReplyDelete
  13. 22 மே 2010:
    //
    புதசெவி.... இதில் என்ன ஹோம் வொர்க் என்பதை தயவு செய்து விளக்கவும்... :)

    "வால்' என்பதை இப்படியெல்லாமா proof பண்ணணும்????

    ReplyDelete
  14. கண்ணபிரான்,
    //thaaniyangi car-aa tharumi?//

    அஃதே ... அஃதே ...

    ReplyDelete
  15. //வழக்கம் போலவே இந்தப் படத்திலும் நான் ரெம்ப அழகாய் இருக்கேன்... :)//

    ஐஸ்வர்யா ராயை யார் படம் எடுத்தாலும் அவங்க அழகா இருப்பாங்க .. அதுமாதிரி நீங்களும் ...!

    நல்லா இருங்க !

    ReplyDelete