COMMON
இந்த விளையாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வை மாலை 7 மணியிலிருந்து 11 மணிவரை பார்த்துக் கொண்டிருந்தேன். கல்மாடி வம்பெல்லாம் கேட்காமல் இருந்திருந்தால் மிகவும் நன்றாக ரசித்திருக்க முடியும். விழாவில் நடுவிலேயே நீநீநீநீநீநீளமாய் விளம்பரங்களைப் போட்டு தூர்தர்ஷன் மிகவும் பெண்டெடுத்தார்கள். காசுக்காகவா .. ?
கல்மாடியை வைத்து விழாவிற்கான வரவேற்புரையைக் கொடுக்காமல் வேற யாரையாவது வைத்துக் கொடுத்திருக்கலாம். என்னதான் ஊழல் பண்ணினாலும் அரசியல் வியாதின்னா அவங்களுக்கு எப்பவுமே முதலிடம் என்பதை இங்கும் இப்படி உறுதி செய்ய வேண்டுமா ?
விளம்பர நிகழ்வுகள் நன்றாக இருந்தன. percussion இசையில் நம்ம ஊர் மிருதங்கமும், தவிலும் ஏன் வரவில்லை?
ஹரிஹரனின் பாட்டு நன்றாக இருந்தது.
ரஹ்மானின் பாட்டு முதல் தடவை கேட்கும்போது இருப்பதை விட 'காலமானால் கனிந்திருக்கும்' என்பது ரஹ்மான் பிரியர்களின் வழக்கமான வாக்கு மூலம் ஒரு தியரி! எந்திரன் படத்தில் பாட்டுக்கள் வந்ததும் இதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். காலம் பலவாயிற்று. இப்போது அந்தப் படப் பாட்டுகள் நன்றாக ஆகிவிட்டனவா ? அதேபோல் இந்த விழாப்பாட்டு ஒருவேளை விளையாட்டு முடியும் நாள் விழாவில் மீண்டும் ஒரு முறை கேட்கலாம். இருமுறை கேட்டால் ரஹ்மானின் பாட்டு எப்படி யிருக்கும். ஆரம்ப விழாவில் கேட்டதுபோல் எந்த வித அதிர்வும் ஈர்ப்பும் இல்லாமல்தானே இருக்கும் ? ஜெய் ஹோ பாட்டு இங்கு எதற்கு ? அதாவது எடுபடட்டுமே என்றா ?
aero stat என்று ஒன்றிருந்தது. கீழே நடக்கும் நிகழ்வுகளைப் பெரிதாக்கி காண்பித்தது. நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கான செலவுத்தொகை 40 கோடி என்றதும் அடி வயிற்றில் என்னமோ செய்தது. அம்புட்டு காசா ...... அதுக்கு ?
விளையாட்டுகளைப் பார்க்கலாமென நினைத்தால் இந்தியில் மட்டுமே வர்ணனைகள். (நான் பார்ப்பது DD sports channel-ல்) மற்ற மொழியினருக்கு விளையாட்டு வேண்டாமோ ?
இரவு வெளிச்சத்தில் விளையாடுபவர்கள் பாவம் ... ஒளியில் பறக்கும் பூச்சிகளை விரட்டவே ரொம்ப கஷ்டப்பட்டார்கள்.
அந்த காலத்தில் கோலி குண்டுகளை வைத்து 'பேந்தா' என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம். அதே மாதிரி கொஞ்சம் பெரிய ப்ளாஸ்டிக் பந்துகளை வைத்து lawn bowling என்று ஒரு விளையாட்டு விளையாடினார்கள். நல்ல (சின்ன பிள்ளைகள் விளையாடுற) விளையாட்டு ..! ஆனால் இங்கிலாந்திலிருந்து 'பாட்டிகள்' வந்து விளையாடினாங்க. கொஞ்சம் புரிந்து கொள்ளலாமே என்று பார்த்தால் இந்தி எங்கே புரியுது. தெரிஞ்சவங்க இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் ..!
டென்னிஸ், ஷட்டில் காக் விளையாட்டுகளைப் பார்க்கும் போது விளையாட்டு வீரர் ஒருவர் வெற்றி பெறும் இறுதி நிலையில் விளையாட்டை மாற்றி விட்டார்கள்.கொஞ்சம் மூளையோடு வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?
விளையாட்டு வீரர்களிடம் வரும் நேர்முகக் கேள்வி கேட்டவர்களின் ஆங்கிலம் .. அந்தக் காலத்தில் வயலும் வாழ்வும் பகுதியில் கேள்வி கேட்பார்களே அதை விடக் கேவலம். Table tennis வெள்ளிப் பதக்கம் பெற்ற நம் நாட்டு வீரர்களிடம் கேள்வி கேட்டவர் ஆங்கிலத்தைக் 'கொன்னுட்டார்'.
எல்லா காமன் வெல்த் நாடுகளும் - 71 நாடுகளும் - வந்து விட்டதாகக் கல்மாடி பறை சாற்றினார். அதில் பல நாடுகளின் பெயர்களை அந்த விழாவின் போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டுள்ளேன். Belize ... Kiribati ... Nauru ... Saint Lucia ... Tuvalu ... Vanuatu --- எல்லாமே நான் கேள்விப்படாத நாடுகள். நமக்கு அம்புட்டு ஜியோகிராபி போலும்!
கனடாவும் இந்த காமன் வெல்த்தில் இருக்கிறது. ஏன் ? எப்படி ?
கனடா இருக்கிறதென்றால் ஏன் அமெரிக்கா இல்லை ?
எனது பெரிய பெரிய சந்தேகங்கள்:
இங்கிலாந்து மட்டுமா, பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற பல நாடுகளும் பல நாடுகளை அடிமைப்படுத்தி காலனிய அரசு அமைத்திருந்தன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் (Un)Common Wealth அமைப்பென்று எதுவும் உருவாக்கவில்லை. இந்த ஆங்கிலக்காரர்கள் மட்டும் ஏன் இப்படி ஒன்றை ஏற்படுத்தினார்கள் ?
இந்த Common Wealth அமைப்பு எதற்காக ஏற்படுத்தப்பட்டது ?
இவ்வமைப்பினால் நாமெல்லோரும் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் 'அடிமைகள்' என்ற ஒன்றை நினைவு படுத்துவதைத் தவிர இந்த அமைப்பால் என்ன நன்மை ?
உலகைச் சுற்றி வரும் அந்த 'தீப்பந்தத்தின்' பெயர் கூட Queen's baton ..! அதுக எல்லாம் இன்னுமா நமக்கு Queen ? அடப்பாவமே !
உலகைச் சுற்றி வரும் அந்த 'தீப்பந்தத்தின்' பெயர் கூட Queen's baton ..! அதுக எல்லாம் இன்னுமா நமக்கு Queen ? அடப்பாவமே !
எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ?
//எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ?//
ReplyDeleteநல்லாக்கேட்டீங்க ஒரு கேள்வி? உப்புப்போட்டு சாப்பிடவறனெல்லாம் நாக்கைப்புடுங்கிட்டு சாகோணும்.
அய்யா,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப் பக்கம் தான், நானும் ஒரு வலைப் பக்கம் உருவாக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது அதை எனது வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். இனி அடிக்கடி சந்திப்போம்.
நன்றி
முனி பாரதி
>இவ்வமைப்பினால் நாமெல்லோரும் >ஒரு காலத்தில் >இங்கிலாந்தின் 'அடிமைகள்' என்ற >ஒன்றை நினைவு படுத்துவதைத் >தவிர இந்த அமைப்பால் என்ன >நன்மை ?
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். நமது அரசியல்வாதிகளுக்குத் தான் சொந்தமாக யோசிக்கத் தெரியாதே.
மற்றபடி எந்திரன் பாடல்கள் நன்றா இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ரஜினி ரசிகர் எல்லாம் கிடையாது. ஆனால் காதல் அணுக்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. கிளிமஞ்சாரோ-வும் அப்படியே.
இது காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்க கிடைத்த சந்தர்ப்பம் ....
ReplyDelete//நாமெல்லோரும் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் 'அடிமைகள்' என்ற ஒன்றை நினைவு படுத்துவதைத் தவிர இந்த அமைப்பால் என்ன நன்மை ?
ReplyDeleteநாம் அடிமைகள் என்பதை நினைவுபடுத்தும் இந்த அமைப்பு தேவையா ?
எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ? //
சிந்திக்க வைத்த பதிவு. இந்தியர்களுக்கு அடிமைத்தனம் மிகவும் பிடிக்கிறது,ிங்கிலாந்திற்கு மட்டுமல்ல அமெரிக்காவிடமும் அப்படித்தான்.
சொந்த நாடு சொந்த டிவி சானல். ஆனாலும் விளம்பரத்துலே காசு பார்க்கும் ஆசை போகலை பாருங்க. 3 மணி நேரம் லைவா கொடுக்கமுடியாதா இவுங்க நினைச்சால்? எங்கே நியூசி போயிருமோன்னு இருந்தேன். நல்லவேளை அப்போ கமர்ஸியல் ப்ரேக் வரலை.
ReplyDeleteநீங்க சொன்னநாடுகள் பல பஸிஃபிக் சமுத்திரத்தில் இருக்கு. அந்த துவாலுதான் கடல்மட்டம் ஏறிக்கிட்டே இருக்காம். இன்னும் சில ஆண்டுகளில் முழுக்க மூழ்கிருமாம்:(
இப்படி ஏகப்பட்ட கேள்வி ஒரே சமயத்திலே கேட்டால் எப்படி? நாங்கெல்லாம் பரிட்சைக்கு எழுதறமாதிரி வரிசையா எழுத முடியாது...ஆமாம்:-)
//ஏகப்பட்ட கேள்வி ஒரே சமயத்திலே கேட்டால் எப்படி?//
ReplyDeleteடீச்சரே இப்படி கேட்டால் நானென்ன செய்ய?
கொஞ்சம் சாய்ஸில் விட்டுட்டு மத்ததுக்கு பதில் சொல்லலாமே ..! பெரிய கேள்விகளைக் கண்டு கொள்ளலை!
ஏற்கெனவே பதிவு வாசித்தவர்களுக்கு -- இன்னும் ஓரிரு கேள்வி சேர்த்திருக்கேன். அதிலும் இந்தக் கேள்வியை வாசிக்காமல் நீங்கள் இருக்கலாமா -- //உலகைச் சுற்றி வரும் அந்த 'தீப்பந்தத்தின்' பெயர் கூட Queen's baton ..! அதுக எல்லாம் இன்னுமா நமக்கு Queen ? அடப்பாவமே !//
ReplyDelete// கனடா இருக்கிறதென்றால் ஏன் அமெரிக்கா இல்லை
ReplyDelete//
மற்ற அனைத்து நாடுகளும் சுதந்திரம் வாங்கிய நாடுகள். அமெரிக்கா எடுத்துக்கொண்ட நாடு. அதனால்தான் இல்லை.
தங்கள் பிரஜைகளுக்காக அந்தக் காலத்தில் ப்ரிட்டிஷ் மன்னர்கள் ஏற்படுத்தின விளையாட்டுப் போட்டிகள் இது. ஆரோக்கியமான போட்டிகள் திறமைசாலிகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பிரஜைகள் தங்கள் நாட்டை மட்டும் தெரிஞ்சுக்காம சகோதர நாடுகளையும் தெரிஞ்சுக்கும் வாய்ப்பாக இது அமைஞ்சு இருந்துச்சு.
ReplyDeleteஇந்தியாவுக்கு வேணாமுன்னா எதுக்கு 48 கோடி லஞ்சம் கொடுத்து இங்கே நடத்துறாங்க என்பது என் கேள்வி!
பிரிட்டிஷ்காரனே அமெரிக்காவிலும் போய் காலு குத்திக் குடியேறினாலும் அவுங்க இது எதுலேயும் இல்லை. காமனும் வேணாம் வெல்த்தும் வேணாமுன்னு இருந்துட்டாங்க பாருங்க.
என் மனசில் பட்ட ஒன்னை இங்கே சொல்லிக்கிறேங்க தருமி. ஒலிம்பிக்ஸ் போல எல்லா நாடுகளும் கலந்துக்கிட்டா நம்ம இந்தியாவுக்கு இத்தனை பதக்கங்கள் வந்துருக்குமா?
பெரிய கேள்விக்கு நான் பதில் சொல்லாததன் காரணம்.... நானும் இன்னும் குவீனின் பிரஜைதான். அரசியின் பிறந்த நாளுக்கு எங்களுக்கு அரசு விடுமுறை உண்டுன்னா பாருங்க. அரசியின் சார்பா எங்களுக்கு கவர்னர் ஜெனரல் இருக்கார். அரசியின் பாதுகாப்பு வேணுமா வேணாமான்னு இன்னும் முடிவாகலை நியூஸியில். விவாதங்கள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டே இருக்கு. அப்படி இருக்கும்போது நான் என்னன்னு என் பதிலை சொல்றது? தகுதி வேணாமா?
குவீன் ஆசிர்வதிச்சு அனுப்புவதால் அது குவீன்ஸ் பேட்டன். வேணுமுன்னா அது இந்தியாவில் நுழைஞ்சதும் சிங்'ஸ் பேட்டன்னு வச்சுக்கலாம். தமிழ் நாட்டுக்குள்ளே வரும்போது....வேற பெயர் வச்சால் ஆச்சு:-))))
CWG are thr even b4 independence..why not abolish history books which teach we were slaves-to the next generation??!!!
ReplyDeleteex-french colonies in africa have an organization but dont know whether they conduct games
//why not abolish history books which teach we were slaves-to the next generation??!!!//
ReplyDeletelet us call a spade a spade.
//ex-french colonies in africa have an organization ..//
they make it an organization WITHOUT the French. right? that's good.
NO SEE FOR LONG!