ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
இப்போதைய பதிவு - 8
*
CHAPTER 5
THE KORAN
*
கடவுளே தந்ததால் குரான் மிகச்சிறந்த இலக்கியம்; அதைவிட மேலான இலக்கியம் அரேபிய மொழியில் இதுவரை இல்லை; இனி அப்படி சிறப்பான ஒன்றை யாரும் எழுதிவிடவும் முடியாது; -- இப்படியெல்லாம் எழுதியதை வாசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட அறைகூவல்களை வாசித்த பின் இந்த நூலை வாசிக்கும் வாய்ப்பு வந்தது. இதில் இந்த அறைகூவல்களுக்கு எதிராக ஒரு நீண்ட தனிப் பகுதியே (chapter) இருக்கிறது. அதில் கூறியவைகளின் சுருக்கத்தை உங்களுக்கு இங்கே ...
யார் குரானைத் தொகுத்திருந்தாலும் அவர்கள் நீள சுராக்களை முதலில், குறுகிய சுராக்களைப் பின்னாலும் தொகுத்துள்ளார்கள். கால வர்த்தமானம் இதில் ஏதுமில்லை.(105)
(குரான் கடவுளால் அருளப்பட்டது; எந்த வித மாற்றமும் இன்றி 1400 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது என்பது வழக்கமாகச் சொல்லப்படுவது. இப்படி எந்த மாற்றமும் இன்றி கடவுள் சொன்னதை அப்படியே சொல்லும் வசனங்கள் ஏன் கடவுள் தந்த கால வரைமுறையில் இல்லை; ஏன் அது மட்டும் மனித விருப்புகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டது? கடவுள் சொன்னதில் "காலம்" ஏன் கைவிடப்பட்டது. அதுவும் கடவுள் கொடுத்த நிகழ்வுப்படி இருப்பதுதானே சரி?
கடவுளே இந்த வரிசையை / தொகுப்பை இப்படி மாற்றி மாற்றி அளித்தாரென்றால் கொடுக்கும் போது மட்டும் ஏன் மாற்றி மாற்றி முகமதுவிற்குக் கொடுத்தார்?
இதில் நான் வாசித்த IFT தமிழ் குரானில் முகமதுவினால் சுராக்களின் வரிசை தொகுக்கப்பட்டது என்று கூறுகிறது. நான் கேட்ட கேள்வி இதற்கும் பொருத்தமானதே. )
இந்த சுராக்களில் முதல் சுராவான Fatihah-ம், ஒன்பதாவது சுராவும் தவிர மற்ற சுராக்கள் எல்லாமே 'அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்...' என்று ஆரம்பிக்கும்.
Suyuti (சுயுட்டி) - இவர் குரானை மிகுந்து ஆராய்ந்தவர். இவர் குரானில் மொத்தம் ஐந்து சுராக்களை அல்லாவிடமிருந்து வந்தவைகளாகக் கருதவில்லை. முதல் சுரா கடவுளிடம் வேண்டுதல் போல் உள்ளது; ஆகவே அந்த சுரா அல்லாவால் தரப்பட்டதல்ல என்கிறார்.
இப்படிப்பட்ட சுராக்களின் முன்னால் 'say' என்ற சொல்லைச் சேர்த்து விட்டால் இந்த 'குழப்பம்' நீங்கும். இப்படி குரானில் மொத்தம் 350 தடவைகளில் இது போன்ற தொல்லைகளை மாற்ற 'say' என்ற சொல் குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Ibn Masud - இவர் முகமதுவின் தோழரும், குரானின் ஆய்வாளருமானவர். இவர் முதல் சுராவையும், சுரா 113 & 114 - இவைகளில் 'I take refuge with the Lord' என்ற வசனம் வருவதால் இவைகளை அவர் ஒத்துக் கொள்வதில்லை. அதே போல் ( I am not your keeper என்ற வசனம் வரும்) சுரா 6.104-வையும் ஒத்துக் கொள்வதில்லை. தாவூத் என்ற அறிஞரும் இவ்வசனத்தில் வரும் ' I ' என்பது முகமதுவைக் குறிக்கும் என்கிறார்.
இந்த வசனத்தின் ஆரம்பத்தில் 'say' என்ற சொல்லை யூசுப் அலி தன் மொழியாக்கத்தில் எவ்வித தனிக் குறிப்பும் இன்றி சேர்த்துள்ளார்.
அலி தாஷ்த்தி (Ali Dashti) சுரா 111 அல்லாவின் வார்த்தைகளாக இருப்பதற்கான தகுதிகள் இல்லாததால் அதனை கடவுளின் வார்த்தைகள் என்று சொல்ல முடியாது என்கிறார்.இந்த சுரா (Abu Lahab) அபூலஹபி என்ற முகமதுவின் மாமாவும், முக்கிய எதிரியாகவும் இருந்தவர். இந்த சுராவின் வார்த்தைகள் ஒரு நபி சொல்லும் வார்த்தைகளாகவும் இருக்க தகுதியற்றவை. (அவ்வளவு வன்மம்.) (106)
Goldziher இதைப்பற்றி சொல்வது:
முகமது தன் எதிரிகளைச் சபிக்கும் சுராக்களைக் காணும்போது அவைகள் நிச்சயம் ஒரு கடவுளால் சொல்லப்பட்டவைகளாக இருக்க முடியாது. இந்த அளவுகோலை நாம் நீட்டிப் பார்த்தல் பல சுராக்கள் அறிவுள்ள, இரக்கமுள்ள, கருணையுள்ள ஒரு கடவுளால் சொல்லப்படக் கூடியவைகளாக இல்லை.
இன்னும் சில சுராக்கள் நிச்சயமாக முகமதுவினால் சொல்லப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும். அவைகள் :
சுரா 27.91;
சுரா 81. 15-29
சுரா 84. 16-19
சுரா 112 ; 111. (107)
இஸ்லாமிற்கு எவ்வகையிலும் எதிராக இல்லாத Bell & Watt கூறுவது:
குரானின் வாசகங்கள் எல்லாமே அல்லாவினால் சொல்லப்பட்டது என்பது பல சிக்கல்களுக்குக் காரணமாகலாம். பல இடங்களில் கடவுள் மூன்றாவதான நிலையில் தான் (third person) பேசப்படுகிறார். கடவுளே தன் பேச்சை 'சத்தியமாக' என்று சொல்வது மிகவும் நகைப்புக்குரியதாகிறது. சில வசனங்களில் .நான் சத்தியமாக சொல்வது ... என்று வருவதை மறுக்க முடியாது. சான்றாக சுரா 75. 1.2; சுரா 90.1
சுரா37. 161-166வில் வானதூதர்களின் பேச்சாக சுரா இருக்கிறது.
THE FOREIGN VOCABULARY OF THE KORAN
Verily, we have made it an Arabic Koran (12.1) - இப்படி ஒரு சுரா இருப்பினும் குரானில் பிற மொழிச்சொற்கள் காணப்படுகின்றன. ஆயினும் அப்படி பிற மொழிச் சொற்கள் இருப்பதாகச் சொல்வது கடவுளுக்கு எதிராக, மறுப்பாகப் பேசுவது என்பது பழம் நம்பிக்கைகளில் ஒன்று. பலரும் வேற்று மொழிச்சொற்களை பலவாறு கணக்கெடுத்துள்ளார்கள்: சுயுட்டி 107 பிறமொழிச் சொற்கள் என்றும், ஆர்தர் ஜெப்ரி என்பவர் 275 சொற்கள் என்றும், அவைகள் அராமிக், ஹீப்ரு, சிரியாக், எத்தியோப்பிக், பெர்ஷியன், க்ரேக்கம் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன. 'குரான்' என்ற சொல்கூட சிரியாக் மொழியிலிருந்து கிறித்துவ மரபின் வழியாக முகமது பெற்றதுதான்.
VARIANT VERSIONS, VARIANT READINGS
குரானின் ஆரம்ப கால வரலாறு, அப்போதிருந்த குரானின் பலவகைப் பதிவுகள், நகல்கள் - variant versions and variant readings - இவைகளை முதலில் ஆராய்தல் அவசியமானது. முதலில் குரான் என்ற நூலே இல்லாமல் இருந்தது. அதற்கென ஒரு பதிவோ, நூலோ இல்லாமல் இருந்தது. குரான் கடவுளின் வார்த்தைகள் என்று சொன்னால், 'அது எந்த குரான்?' என்றுதான் கேட்க வேண்டியுள்ளது.
கி.பி. 632 - முகமதுவின் மறைந்த இந்த ஆண்டில் குரான் என்ற ஒரு நூல் இல்லை. அதன்பிறகு அவரின் வழி வந்தவர்கள் பல கையெழுத்துப் பிரதிகளை ஒன்று சேர்க்க ஆரம்பித்தார்கள். Ibn Masud, Kab, Ali, Aby Bakr, al-Ashari, al-Aswad போன்ற பலரின் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இஸ்லாம் பரவ ஆரம்பித்த அந்த நிலையில் மெக்கா, மதீனா, டமாஸ்கஸ், குபா, பஸ்ரா போன்ற இடங்களில் இந்தக் கையெழுத்துப் பதிவுகள் இருந்தன. உத்மன் இந்தக் குழப்ப நிலைக்கு ஒரு ஒழுங்கைக் கொண்டு வந்தார்; மதீனா கையெழுத்துப் பிரதி மட்டுமே இனி இருக்க வேண்டுமென்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தார். மற்ற பிரதிகளை அழிக்கவும் ஆணை பிறப்பித்தார்.
உத்மனின் கையெழுத்துப் பிரதி இறுதியான பிரதியாக (Consonantal Text) அறுதியிடப் பட்டன. ஆயினும் இஸ்லாம் பிறந்த நான்கு நூற்றாண்டுகள் வரை மற்றைய பிரதிகளும் இருந்தே வந்துள்ளன. புள்ளிகள் இல்லாத எழுத்துக்கள், முழு வேற்றுமையில்லாத சில எழுத்துக்கள் என்றெல்லாம் இருந்தமையால் பல வகைப்பிரதிகள் இருந்து வந்துள்ளன.
இதனோடு, முதலில் அராபியன் எழுத்துகளில் குறுகிய உயிரெழுத்துக்கள் இல்லாமலிருந்து, பின் காலத்திலேயே அவ்வகை எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. அராபிய மொழி மெய்யெழுத்து சார்ந்த ஒன்று. குறுகிய உயிரெழுத்துக்கள், எழுத்துக்கள் மூலமில்லாமல் மூன்று வகை ஒலிக்குறிப்புகள் (orthographical signs) மூலம் பயன்படுத்தப்பட்டன. பின்னால் மெய்யெழுத்துகளில் மாற்றங்கள் செய்தபின்பே, இந்த குறுகிய உயிரெழுத்துக்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதில் எந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது என்பதிலும் கேள்விக்குறி எழுந்ததுண்டு.
இந்த மொழி/ எழுத்துப் பிரச்சனைகளால் பல கையெழுத்துப் பிரதிகள் இருந்து வந்தன. எங்கு எந்த ஒலிக்குறிப்பு, எங்கு புள்ளி வைக்க வேண்டும் போன்ற கேள்விகளால் இந்த வேற்றுமைகள் இருந்து வந்தன.
உத்மன் மற்ற கையெழுத்துப் பிரதிகளை அழித்தொழிக்கக் கூறியிருந்தாலும் அவ்வகைப் பிரதிகள் இருந்தே வந்துள்ளன. Charles Adams கூறுவது போல் பல்லாயிரக்கணக்கான பிரதிகளின் நகல்கள் இருந்து வந்துள்ளன. இந்த வேற்றுமைகளால் உத்மனின் பிரதியையும் அவை பாதித்தன. எந்த பிரதி உண்மையான பிரதி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளன. Ibn Masud, Ubayy ibn Kab and Abu Muse போன்ற சில இஸ்லாமிய அறிஞர்கள் உத்மனின் ஆணையை மீறி, வேறு பிரதிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கி.பி. 935-ல் Ibn Mujahid என்பவரால் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துகள் இறுதியிடப்பட்டு, அதன் மூலம் ஏழு பிரதிகள் தொகுக்கப்பட்டன. ஆனாலும் சிலர் இதை பத்து பிரதிகளாக்கினர். இவ்வளவு தொகுப்புகளில் இறுதியாக மூன்று பிரதி வகைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் -
Warsh (கி.பி.812) from Nafi of Medina,
Hafs (கி.பி.805) from Asim of Kufa
al-Duri (கி.பி.860) from Abu Amr of Basra
இப்போதைய இஸ்லாமில் இரு வகை பிரதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை -
Asim of Kufa through Hafs (1924-ம் ஆண்டிலிருந்து எகிப்திய பிரதி)
Nafi through Warsh (எகிப்தைத் தவிர்த்த ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பிரதி)
பலவித (ஏழு versions) இருப்பது குரானைப் பற்றிய இஸ்லாமியரின் நம்பிக்கைக்கு எதிராக இருப்பதால், இந்த versions எல்லாமே அவைகளை வாசிக்கும் முறையில் மட்டும்தான் மாற்றம் உண்டு என்ற ஒரு போலியான மன்னிப்பு சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது சரியான விவாதமல்ல.
(மேற்கூறிய விவாதங்களில் வரும் சில சொற்களுக்கு என்னால் மிகச்சரியான தமிழ்ச் சொற்கள் கொடுக்க முடியவில்லை. ஆகவே அதிக டெக்னிக்கலாக இருக்கும் இப்பகுதியைப் பற்றி மேலும் விளக்கங்கள் வேண்டியிருப்போருக்காக இப்பகுதி வந்த 109 & 110 பக்கங்கள் இரண்டின் நகல்களை இங்கே சேர்த்திருக்கிறேன். விளக்கம் வேண்டுவோர் இப்பக்கங்களைப் பெரிதாக்கி வாசித்துக் கொள்ள தோதுவாக இருக்கும். )

என் பதிவில் படங்களை நேரடியாக ஏற்ற முடியவில்லை (யாராவது உதவப்படாதா!?) அதனால் tinypic மூலம் படங்களை ஏற்றுகிறேன். ஆகவே படங்களைப் பெரிதாக்க நினைப்பவர்கள் வலது க்ளிக் செய்து, save image as . என்று சேவ் செய்து அதன்பின் பெரிதாகப் பார்க்கலாம்.
சிரமங்களுக்கு மன்னிக்க.
//குரான் கடவுளால் அருளப்பட்டது; எந்த வித மாற்றமும் இன்றி 1400 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது என்பது வழக்கமாகச் சொல்லப்படுவது.//
ReplyDeleteஒரு முன்னாள் இஸ்லாமியர் வஃபா சுல்தான் சொன்னது, "குரானை உண்மையான அர்த்தத்தில் தெரிந்துகொள்ள வேண்டுமாணால் அதை அரபியில் படிக்கவேண்டும். காரணம், மற்ற மொழிகளில் மொழி பெயற்க்கப்படும் பொழுது அதன் அர்த்தத்தில் மேலே 'சர்க்கரை' தடவி சொல்லப்பட்டிருக்கும். உதா, நபி ஒரே இரவில் 900 யூதர்களை கொன்று அன்று இரவு கொல்லப்பட்ட யூதர்களின் மனைவிமார்கள், தங்கைகள், மகள்களுடன் உறவு கொண்டார் என்று அரபி தெரிந்த குழந்தைகளுக்கு பாடநூலாக சொல்லப்படுகிறது" என்றார். தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் சரி!
வணக்கம் அய்யா,
ReplyDeleteமதம் என்றால் அதற்கு ஒரு கடவுள் வேண்டும் வேதமும் வேண்டும்,மற்றும் சில சடங்குகளுக்காகவும் விழாக்களுக்காகவும் வேண்டுதல்,காணிக்கை,பலியிடல்,மொட்டையடித்தல்,யூனிஃபாம் அணிதல்,விரதம் எனவும், மறுமை,சொர்க்கம்+நரகம்=தண்டனை போன்று மிரட்டல்+சந்தோசம். குட்டிப்பிசாசு,சைத்தான்,ஜின்,போன்ற மேஜிக்(சித்து)விளையாட்டு. மேல் உலக தேவதைகள்,மலக்குகள்,விண்விளையாட்டு போன்ற கற்பனைக் கதைகள் இவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அய்யா.
ஒரு நாவல் எழுதுவதாக இருந்தாலும் தலைப்பு,முகவுரை,முடிவுரை,பாகம்,பக்கம்,எண்கள் மேலும் அட்டைப்பட அலங்கரிப்பு என அழகாக மனிதன் தொகுத்து வழங்கும் போது, கடவுள் என தன்னைத் தானே உயர்த்திக்கொண்ட (பொருள்,பண்டம்,கல்,மண்,மரக்கட்டை)ஏதோ ஒன்று,மனிதர்களுக்கு உபயோகத்திற்கென்று வழங்குகின்ற பொழுது குழப்பமில்லாமல் தெளிவாக தன் வேதபுத்தகத்தை வழங்கியிருக்க வேண்டாமா? கடவுளின் மூலப்பெட்டகத்திலிருந்து பிரதி எடுத்து அனுப்பியதிலேயே இத்தனை குழப்பங்கள் எனில்,அவனிடத்தில் உள்ள மூலப்புத்தகமே குழப்பம் தானோ?
அருமையான பதிவு.
ReplyDeleteஉங்களின் இந்த பதிவு படித்த பின் இந்த புத்தகம் படிக்காமல் இருக்க முடியவில்லை. ஒரே மூச்சில் படித்தேன்.இபின் வாரக் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார். இந்த குரான் அத்தியாயம் கூட மிகவும் அறுபுதமாக எழுதப் பட்டு உள்ளது. குரானின் எழுத்து சீரமைப்பு பற்றிய் உங்கள் மொழி பெயர்ப்பு அருமை.
இந்த புத்தகம் இந்த தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதி உள்ளது. இந்த தளத்தை பாருங்கள்.உங்களுக்கும் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
http://atheistmovies.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-ibn-warraq.html
சீனு
ReplyDelete//தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் சரி!//
நானும் காத்திருக்கிறேன்.........
நன்றி யாசிர்
ReplyDeletesaarvaakan
ReplyDelete//ஒரே மூச்சில் படித்தேன்//
பயங்கரமான ஆளு நீங்க ...
அதிக தகவல்களுக்கும் தொடுப்புக்கும் மிக்க நன்றி
http://atheistmovies.blogspot.com/2009/02/jonathan-millers-brief-history-of.html
ReplyDeleteஅய்யா வணக்கம் தாங்கள் கேட்ட இணைப்பை அனுப்பி உள்ளேன்.
ஏதோ முடிந்த வரை எழுதுகிறேன்.நன்றி