ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
இப்போதைய பதிவு - 9
*
*
CHAPTER 5
THE KORAN
தொடர்ச்சி ....
PERFECT ARABIC ?
Noldeke என்ற அறிஞர் குரானின் மொழி நடையின் குறைபாடுகளை விளக்குகிறார்:
* குரானின் வாசகங்கள் முதல் தர நடையில் இல்லை.
* விளக்கங்கள் பல இடங்களில் முரட்டுத் தன்மையுடனும், மொட்டையாகவும் (vehement and abrupt ...) உள்ளன.
* விரயமான வார்த்தைகள் அதிகம் உண்டு.
* விளக்கங்கள் முறையாகச் சொல்லப்ப்டுவதில்லை.
* ஆனால் ஜோசப்பின் கதை மட்டும் விலாவாரியாகச் சொல்லப்பட்டுள்ளது.
* கருத்துக்கள் சரியான முறையாகச் சொல்லப்படுவதில்லை.
* சொல்லடுக்குகளில் அழகில்லை. (..the syntax betrays great awkwardness.)
* சொற்றொடர்களில் நிறைய தவறுகள் காணப்படும். (Anacolutha .. are of frequent occurence.)
* சொற்றொடர் ஆரம்பிக்கப்படுவது போல் முறையாக முடிக்கப்படுவதில்லை. * இந்தக் குறைகளை மொழிமாற்றம் செய்வோர் (ellipsis) சரிக்கட்டுகிறார்கள்.
* சில சொற்கள் மீண்டும் மீண்டும் தேவையின்றி பயன்படுத்தப்படுகின்றன.
* முகமதுவின் மொழி நடை எவ்வித சிறப்புமற்றது. (Mahomet in short, is not in any sense a master of style.)
Ali Dashti முகமதுவின் வசனங்களில் உள்ள இலக்கணப் பிழைகளை பட்டியலிடுகிறார்:
சுரா 4. 162
சுரா 49. 9
சுரா 20. 63 - இதில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அலி டாஷ்தி: அராபி மொழிக்குறிய இலக்கணங்களிலிருந்து நூற்றுக்கு மேலான தவறுகள் குரானில் உண்டு.
VERSES MISSING, VERSES ADDED:
தவறான பாலியல் குற்றங்களுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை பற்றி முகமதுவின் மனைவி ஆயிஷா கூறியதாகக் குரானில் இருந்த பகுதி இப்போது குரானில் இல்லை. அதற்குப் பதிலாக அவை சவுக்கடிகளாக மா(ற்)றி விட்டன. முதலில் வந்த கலிபாக்கள் இதை மாற்றினார்கள். குரானில் இல்லாது போனாலும் இன்று வரையிலும் இஸ்லாமிய நாடுகளில் சவுக்கடிகளுக்குப் பதிலாக கல்லெறிதலே பயன்படுகிறது. இதுபோன்று நூற்றுக்கணக்கான வசனங்கள் இப்போது இல்லை. அலிக்குப் பயன் தரக்கூடிய பல வசனங்களை உத்மன் அரசியல் காரணங்களால் நீக்கி விட்டதாக Shiites சொல்கிறார்கள்.
முகமது சில வசனங்களை மறந்திருக்கலாம்; அவருடன் உடனிருந்தோர் சிலவற்றை மறந்திருக்கலாம்; அவர்களிடம் கேட்டு எழுதியவர்கள் சிலவற்றை மறந்திருக்கலாம். Satanic Verses பற்றிப் பேசும்போது எப்படி முகமது சில வசனங்களை விட்டு விட்டாரென்பதற்கான சான்றாக உள்ளது.
சில வசனங்களின் உண்மைத் தன்மையை மேனாட்டு அறிஞர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமிய அறிஞர்களும் எழுப்பியுள்ளனர். அலியின் வழி சென்ற Kharijites குரானில் வரும் ஜோசப்பின் கதை மிகவும் மோசமானதாகவும், எதிர்மறையானதாகவும் உள்ளதாகவும், அது குரானில் இருக்க லாயக்கற்றதெனவும் கருதினர். Sacy, Weil, Hirschfeld, Casanova போன்ற மேனாட்டு அறிஞர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் பலரின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஒலிச் சேர்க்கைக்காவும், சில இடங்களில் இரு வசனங்களை ஒன்றோடொன்று சேர்த்து பொருளுள்ளதாக மாற்றவும் சில வசனங்கள் சேர்க்கப்பட்டன.
ஒலிச் சேர்க்கைக்காவும், சில இடங்களில் இரு வசனங்களை ஒன்றோடொன்று சேர்த்து பொருளுள்ளதாக மாற்றவும் சில வசனங்கள் சேர்க்கப்பட்டன.
Bell & Watt சில குரானின் வசன நடை மாறுபட்டிருப்பதாகக் காண்பித்து, அவையெல்லாம் பல பிற்சேர்க்கைகளால் வந்த மாறுபாடே என்கிறார்கள்.
al-Kindi 830-ம் ஆண்டில் குரானை விமர்சனம் செய்யும்போது வரலாற்று நிகழ்வுகள் பல ஒட்டு மொத்தமாகக் குழம்பியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது பலரது சேர்க்கையால்தான் இப்படி நிகழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கான சான்றுகளாக சிலவற்றைப் பட்டியலிட முடியும்.
* சுரா 20. 15 - இந்த வசனம் பொருந்தாத இடத்தில் வருகிறது.
* சுரா 78. 1-5 -அப்ப்குதியின் மற்ற வசனங்களுக்கும் இதற்கும் எப்பொருத்தமும் இல்லாதிருப்பதால் இது சேர்க்கப்பட்ட வசனமாக இருக்க வேண்டும்.
* சுரா 78 33 & 34 - இந்த இரு வசனங்கள் 32 -35-வது வசனங்களுக்கிடையே நுழைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் 32-க்கும் 35-க்கும் உள்ள சரியான தொடர்பை அது துண்டிக்கிறது.
* சுரா 74. 31-வது வசனம் நுழைக்கப்பட்டது; ஏனெனில் அது மற்ற சுராக்களை விட நீளத்திலும் நடையிலும் மிகவும் மாறுபட்டுள்ளது.
* சுரா 50. 24-32 - இந்த வசனங்களும் நுழைக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும்; ஏனெனில் அவை பொருத்தமில்லாத இடத்தில் உள்ளன.
அதிகப் புழக்கத்தில் இல்லாத, வித்தியாசமான சொற்கள் சுராவில் வரும்போது அவைகளை விளக்க, 'What has let you know what ... is?' என்றோ ''What will teach you what ... is?' என்றோ சொல்லப்பட்டு அதன்பின் ஒரு விளக்கம் கொடுக்கப்படும். மொத்தம் 12 இடங்களில் இப்படி கொடுக்கப்பட்டிருக்கும். இவைகள் எல்லாமே பின்னால் சேர்க்கப்பட்ட விளக்கங்கள்.
Bell & Watt தரும் இன்னொரு உதாரணம்: சுரா 101. 9-11-வில் வரும் hawaiya என்ற சொல்லுக்கான 'குழந்தையற்றவள்' என்ற பொருளை மாற்றி புதிய விளக்கமாக 'hell' என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது.
குரானில் எவ்வளவு சிறிய மாற்றமாயிருந்தாலும் அது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையைத் தகர்க்கிறது.இதன் தொடர்பான இன்னொரு நிகழ்வு நூலில் தரப்படுகிறது. அது Abd Allah b. Sa'd Abi Sarh என்பவரின் வரலாறு. இவர் மதீனாவில் முகமதுவிற்குக் கிடைத்த வஹிகளைத் தொகுத்து வந்தவர். இவர் பலமுறை முகமதுவின் ஒப்புதலோடு வசனங்களின் இறுதிப் பகுதிகளில் உள்ள சொற்களை மாற்றுவதுண்டு. உதாரணமாக, முகமது , 'And God is mighty and wise' என்று சொல்லும்போது இவர் 'knowing and wise' மாற்றலாமா என்னும்போது, முகமது அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.
ஆனால் Sa'd Abi Sarh இந்த வித மாற்றங்களைச் செய்தபின், கடவுளின் வார்த்தையென்றால் அவற்றை எப்படி மாற்றலாம் என்று எண்ணி, அதனால் இஸ்லாமை விட்டு விலகி, மெக்காவிற்குச் சென்று, அங்கிருக்கும் Qorayshites-இடம் சேர்ந்து விடுகிறார். மெக்கா முகமதுவினால் வெல்லப்பட்ட பின் முகமது இவரைக் கொல்ல ஆணையிடுகிறார். ஆனால் உத்மன் தன்னோடு உடன் வளர்ந்த Sa'd Abi Sarh-விற்கு முகமதுவின் மன்னிப்பை மிகுந்த சிரமத்துடன் பெறுகிறார்.
ABROGATION OF PASSAGES IN THE KORAN (நீக்கப்பட்ட வசனங்கள்)

சுரா 2. 106 - 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றி விட்டால் அல்லது மறக்கச் செய்து விட்டால் (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்'. (நான் முன்பே கேட்டதுபோல் கடவுளுக்கு இந்த எடிட்டிங் வேலை தேவைதானா? "அதனினும் ... சிறந்த வசனத்தைத் தருவது" இப்படிக் கூறுவது giving something better 'on second thought' என்பதா? "எந்த ஒரு வசனத்தையாவது ... மறக்கச் செய்து விட்டால்" - ஆக, அல்லா சிலவற்றை முகமது மறக்கும்படியும் செய்கிறாரா? இதுவும் 'on second thought' என்றுதான் கொள்ளவேண்டும்!) al-Suyuti இதுபோல் 500 வசனங்கள் நீக்கியிருப்பதாகக் கணக்கிடுகிறார்.
மெக்காவில் முதல் பாதி சுராக்களும் பின் மதீனாவில் மற்ற சுராக்களும் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் காலவேற்றுமை 'எப்போதுமிருக்கும்' எல்லாம் வல்ல கடவுளின் வார்த்தைக்கும் உண்டு! எல்லாம் வல்ல, எங்குமிருக்கும், எதையும் செய்யும் ஆற்றல் கொண்ட கடவுள் ஏன் தன் கட்டளைகளையே அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லாம் அறிந்த அவரே ஏன் முதல் தடவையிலேயே சரியான வசனத்தைச் சரியாகத் தரவில்லை? (114)
Al Dashti முகமதுவின் காலத்திலேயே பலர் மேற்சொன்ன கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்பதை சுரா 16. 101 & 102 மூலம் காண்பிக்கிறார். இதில் 'ஒரு வசனத்திற்குப் பதிலாக வேறொரு வசனத்தை நாம் இறக்கியருளினால் - அப்போது இந்த மக்கள் நீர்தான் புனைந்துரைக்கின்றீர்'! என்று கூறுகின்றார்கள்.
(இதன் மூலம் குரான் "புனையப்பட்ட நூல்" என்ற இன்றைய குற்றச்சாட்டு குரான் 'பிறந்த' காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது தெரிகிறது. அதனால் தான் அடிக்கடி "1400 வருடக்கதைகள்" என்ற வார்த்தைகளை நம்பிக்கையாளர்கள் நம் முன் வைக்கிறார்கள் போலும்.
மக்கள் இது புனைந்துரை என்று கெக்களிக்கிறார்கள்; உடனே வஹி வருகிறது; அதில் அல்லாவே 'நானே எல்லாவற்றையும் சொல்கிறேன்' என்று சாட்சிக் குரல் கொடுக்கிறார். இது எதனை நிரூபிக்கிறது - கடவுள் முகமது இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறார் என்றா? இதையெல்லாம் பார்த்தால், இது என்னவோ சிறுபிள்ளை விளையாட்டு மாதிரிதான் தோன்றுகிறது. கடவுள் இப்படியெல்லாமா தன்னை நிரூபிக்கணும்!! முந்திய பதிவு ஒன்றில் ஆயிஷா 'அடித்த ஜோக்' போன்றுதான் இந்த நிகழ்வும் உள்ளது. ) குரான் கடவுளின் வார்த்தை என்றால், அதில் மனித அறிவுக் குறைபாடுகள் போன்ற தவறுகள் இருக்க முடியாது. ஆனால் மேற்சொன்ன இரு சுராக்களிலும் இந்த தவறு தெரிகிறது.

குரானின் முதல் மூலம் சுவர்க்கத்தில் இருக்கிறதென்பதுவும், அதையே முகமது வஹியாகப் பெற்றார் என்பதுவும் இஸ்லாமிய நம்பிக்கை. இந்த நம்பிக்கை மேற்சொன்ன விடுபடும், மாறும் வசனங்களால் கேலிக்குள்ளாகிறது. கடவுளின் ஒரு வார்த்தையை விட இன்னொரு வார்த்தை மதிப்பு கூடியதா?
Muir குரானில் இருந்த 200 வசனங்கள் நீக்கப்பட்டு விட்டன என்கிறார். முழுக்குரானில் மூன்று விழுக்காடு தவறானதாக இருக்கிறது என்கிறார் இவர்.
இஸ்லாமில் மது குடிப்பது தவறானது என்று சுரா 2.219-ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சுரா 16. 67-ல் வரும் வசனங்களுக்கு பலவகை வேறுபாடான விளக்கங்கள் ..! தமிழில் 'அதில் போதைப் பொருளையும் தயாரிக்கிறீர்கள்' என்று சொல்லப்படுகிறது. Dawood இதை 'intoxicants' என்றும், Pickthall இதனை 'strong drink' என்றும், Sale இதனை 'inebriating liquor' என்றும் சொல்ல, Ysusuf Ali இதனை அராபிய மொழியில் 'sakar', அதாவது 'முழுமையான பானம்' என்று சொல்கிறார். அதோடு Ysusuf Ali இன்னொரு அழகான 'சால்ஜாப்பு' தருகிறார். 'ஒருவேளை சக்கர் என்பதை 'நொதிக்கப்பட்ட பொருள்' என்று பொருள் கொண்டால், போதைப் பொருள் குடிப்பது தவறு என்று மதீனாவில் சொல்லப்படுவதற்கு முன்பாக மெக்காவில் இருந்து சொன்ன சுரா என்பதால் இது சரியே என்கிறார் ! (அதாவது முதல் காலக்கட்டத்தில் ஒரு கட்டளை; பின் இன்னொரு மாறுபட்ட கட்டளை??)
'வசதிக்காகவே' இப்படி வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கங்கள் இஸ்லாமை நம்புவோருக்கு இடைஞ்சலைத் தருகின்றன. மேலும், முதலில் வரும் சுராக்களில் (மெக்கா) பொறுமை போதிக்கப்படுகிறது. ஆனால் பின் வரும் சுராக்களில் (மதீனா) 'இம்சை' போதிக்கப்படுகிறது. சுரா 9.5 (இறைவனுக்கு இணை வைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! ) இந்த சுரா நல்லெண்ணத்தையும், பொறுமையையும் போதிக்கும் 124 வசனங்களை நிராகரித்து விடுகிறது.(115) (நம்பிக்கையாளர்கள் வழக்கமாக இதற்கு விளக்கமாக, இந்த வசனம் எதிரிகளோடு போர் புரியும்போது சொல்லப்பட்டது; தன்னை எதிர்த்து நிற்போர்களைப் பார்த்து சொன்னது என்பது போன்ற 'நொண்டிச்சாக்குகள்' சொல்வது வழக்கம். இது தவறு. எங்கும், எப்போதும் உள்ள அல்லா - எல்லாம் அறிந்த கடவுள் - இப்படியெல்லாம் சொல்லலாமா; சொன்னால் அது சரியா? இந்த வசனத்திற்கு இப்படி context பார்த்து புது விளக்கங்கள் கொடுக்க முயல்வது வேடிக்கைதான்! )
இப்பதிவு இன்னும் தொடரும் ....
குர் ஆன் மிகவும் இலக்கியத்தரமானது என்று கூறுவார்கள். யாருக்கும் இங்கே அரபி தெரியாது என்பதால் தாம் கூறும் பொய்கள் அப்படியே நிலைத்து நிற்கும் என்று கனவு கண்டிருப்பார்கள். ஆனால், அரபி அறிந்த பல்வேறு ஆய்வாளர்களும் அரபி மொழி ரீதியிலான மொழிநடை, இலக்கணப் பிழை பற்றி முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளனர். நன்று.
ReplyDeleteவசனங்களை சேர்த்தது, நீக்கியது, மாற்றியது பற்றியெல்லாம் இவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒத்துக்கொண்டிருந்தால், இஸ்லாம் என்பதே ஒரு கற்பனைக் கதை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டியிருக்குமேஎன்று மறுதலிப்பார்கள்.
குரானை விளங்க வேண்டுமெனில் பல மதவாதிகள் எவ்வாறு விளங்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் சில எளிய விதிகளின் மூலமே விளங்கிறார்கள் என்று புரிந்தது.
ReplyDeleteமிகவும் கஷ்டப் பட்டு கவனித்த சில விதிகள்
1.ஒரெ செயல் பல இடங்களில் பல விதமாக கூறப்பட்டாலும் விளக்கம் ஒன்றே.
2.குரான் மறாதது ஆனால் விளக்கங்கள் மாறும்(அறிவியலுக்கு ஏற்றவாறு).
3. ஒவ்வொறு வசனத்திற்கும் சமமான எதிர்வசனம் உண்டு.
4.யார் கூறுவது,யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை என்றால் அடைப்புக் குறிக்குள் எழுதிவிட வேண்டும்.
பல விதிகளை தொழில் இரகசியமாக வெளியே சொல்ல மறுக்கிறார்கள்.
ம(ந்)தவாதிகள் அடிக்கடி சொல்லும் ஒரு மெகா ஜோக் என்னவென்றால், ஒன்றை தவறு என்று தடுத்தப்பிறகு செய்வதுதான் தவறாகுமாம். அதற்கு முன்பு தடுக்கப்படாத எந்த ஒன்றும் தவறாக ஆகாதாம். அதாவது வட்டி,மது,வரதட்சனை,பன்றி இறைச்சி உண்ணுதல் போன்றவைகளை அல்லா தடை செய்வதற்கு முன் அனுமதிக்கப்பட்டதால் அன்று அவைகள் தவறில்லையாம். தடுத்த பிறகு மீறுவதுதான் குற்றமாகுமாம். ஏன் அன்று மட்டும் மதுவும் பன்றி இறைச்சியும் சுவையானதாகவும், வட்டி மகிழ்ச்சி தரக்கூடிய செயலாகவும் இருந்ததா? என்றுதான் விளங்கவில்லை. குரானுக்கு முன் எத்தனையோ வேதங்கள் வழங்கியதாக பிதற்றும் அல்லா இதை ஏன் முந்தைய வேதங்களில் தடுத்து நிறுத்த கட்டளை பிறப்பிக்கவில்லை? எனவே அல்லாவிடத்தில் உள்ள மூலப்புத்தகத்தில் இப்படி தாறுமாறாக இருந்ததால் தானே இத்தனை முரண்பாடுகள்! ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
ReplyDeleteயாருமே பதில் கொடுக்க வரலியே ஏன்?
ReplyDeleteகும்மி,
ReplyDelete//வசனங்களை சேர்த்தது, நீக்கியது, மாற்றியது பற்றியெல்லாம் இவர்களுக்கும் தெரியும்.//
நீங்கள் சொல்வதை மறுக்கிறேன். என்னைவிட வயது மூத்த, இஸ்லாமை ஒழுங்காகப் பின்பற்றும் என்னுடன் வேலை செய்தவரிடம் ஒரு முறை முகமதுவிற்கு எத்தனை மனைவியர் என்றேன். நான்கு என்றார்!
சில நல்ல நம்பிக்கையாளர்களிடம் கேட்டேன்: சுன்னத்து செய்வது பற்றி குரானில் இருக்கிறதா? அவர்கள் அனைவரும் சொன்னது ஆமாம் என்ற தவறான பதில்தான்.
இஸ்லாமைப் போதிக்கும்போதே குரானை வடிகட்டியே சொல்லித் தருகிறார்கள். அதையும் தாண்டி, தானாக வாசித்து நம்பும் சில இஸ்லாமியர்களுக்கு மட்டும் "எல்லாம்" தெரியலாம். ஆனாலும் மதநம்பிக்கைகளில் மிக ஆழமான நிலையில் உள்ள இவர்கள் மட்டுமே உங்கள் கருத்துகளை உண்மையாக்குபவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மறுதலிக்க முடியாதவர்கள்.
இதில்தான் என் ஆச்சரியம்: எப்படி இத்தனை ஆழமான நம்பிக்கைகளை இஸ்லாம் உருவாக்குகிறது? என் பழைய கேள்விதான் இது.
//மதநம்பிக்கைகளில் மிக ஆழமான நிலையில் உள்ள இவர்கள் மட்டுமே உங்கள் கருத்துகளை உண்மையாக்குபவர்கள் என்று நினைக்கிறேன்//
ReplyDeleteநானும் அவர்களைத்தான் குறிப்பிட்டேன்.
//எப்படி இத்தனை ஆழமான நம்பிக்கைகளை இஸ்லாம் உருவாக்குகிறது? //
இது பற்றி நிறைய பேசியுள்ளோம். இன்னொரு வகையினர் பற்றி. தெரிந்தும் மறுதலிப்பவர்களின் நிலையையும் பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு பிஜே : தர்கா நடத்துபவர்களை உண்டியல் வைத்து வயிறு வளர்ப்பவர்கள் என்று அவர் கூறுவார். அதுபோல் இவர் வாய் வைத்து வயிறு வளர்ப்பவர். வயிறு வளர்க்க இதுதான் வழி என்று தேர்ந்தெடுத்தபின் அவர்களுக்கு தேவை ஒரு மந்தைதானே.