Tuesday, February 08, 2011

473. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 11

*

வழக்கமாக காலையில் செய்தித்தாள் வாசிக்கும்போது இரத்த அழுத்தம் சில புள்ளிகளாவது மேலேறும் என்பதுதான் வாடிக்கை.
சுற்றி நடக்கும் தொடர் நிகழ்வுகள் பற்றியறியும்போது எப்படி சாதாரணமாக இருக்க முடியும். ஆனால் இன்று (08.02.2011) காலையில் செய்தித்தாளை வாசித்ததும் மகிழ்ச்சியில் இரத்த அழுத்தத்தில் மாறுதல் என்று நினைக்கிறேன். எப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்து தினசரியின் நடுப்பக்கத்தில்! தலைப்பு: Corruption: is Italy a step ahead? 


நம்ம ஊர்ல திவாரின்னு ஒரு வயசான கவர்னர் “சித்து விளையாட்டு” விளையாடி மாட்டினார். இத்தாலியில் பிரதம மந்திரி அந்த ஆட்டம், அதுவும் சின்னப் பிள்ளைகளோடு ஆட்டம். இருந்தாலும் அவருக்குத்தான் இன்னும் மவுசு. மற்ற ஊழல் நம்ம நாட்டை விட மகா மோசமாம். ஆனாலும் மக்கள் எல்லோரும் நம் ஊரில் போலவே ‘இதெல்லாம் எப்பவும் நடக்கிறதுதானே; எல்லாரும் பண்றாங்க’ அப்டின்ற தத்துவத்தோடு போறாங்க. 
Image and video hosting by TinyPicஅப்பாடி நம்மை விட மோசமான ஒரு நாடு இருக்குன்னு நினைக்கும்போது போட்டியில் கடைசிக்கு முந்தின ஆள் அப்டின்ற பெருமையோடு நிற்கிறது போலுள்ளது. இந்த நினைப்போடு செய்தித்தாளை மூடிய போது இன்னொரு நினப்பு வந்து மறுபடியும் இரத்த அழுத்தத்தை கொஞ்சம் ஏற்றியது.

Image and video hosting by TinyPic
hybrid - கலப்பினம் என்று ஒன்று சொல்வார்கள்.இரு வேறுபட்ட குணநலன்கள் உள்ள இரு தாவரத்தைச் சேர்த்தால் வரும் புதிய இனம் அந்த இரு குண நலன்களில் உள்ளவைகளின் ஒரு தொகுப்பாகலாம். நல்ல பயிரினங்களை இப்படி உருவாக்குவது உண்டு. அட ... நம்ம ஊர்லேயும் இதே மாதிரி இந்திய - இத்தாலிய இனம் சேர்ந்து ஒரு புதிய இனம் உண்டானால் அது எப்படியிருக்கும் அப்டின்னு ஒரு டென்ஷன்.
Image and video hosting by TinyPic


திஸ்கி: பதிவு படம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதேன்னு ரெண்டு மூணு படம் போட்டிருக்கேன். மற்றபடி இந்தப் பதிவுக்கும் அந்த படங்களுக்கும் எந்த தொடர்புமில்லை! அட .. ராகுல் காந்தி நெற்றியில் போட்டிருக்கும் ராமத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லைங்க!  :)







7 comments:

  1. ஹாஹாஹா... நோ கமெண்ட்ஸ்! எகிப்தினைப் போன்று நமக்கும் ஒன்று வேண்டுமென்பது மட்டும் புரியுது!!

    ReplyDelete
  2. அய்யா தேர்தல் வருதில்ல... அசத்துங்க...படத்துக்கும் மெண்டலின் விதிக்கு சம்பந்தம் இல்லை... நிச்சயமாக நம்புகிறோம்..

    ReplyDelete
  3. //திஸ்கி: பதிவு படம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதேன்னு ரெண்டு மூணு படம் போட்டிருக்கேன். மற்றபடி இந்தப் பதிவுக்கும் அந்த படங்களுக்கும் எந்த தொடர்புமில்லை!//

    ஆஹா............ நம்பிட்டேன்;-)))))

    ReplyDelete
  4. :-))))

    Hybrids have already been unleashed. One is currently handling the strings that has a bearded doll tied to it.

    The second one is planning to wait for the doll to go waste and replace both the puppet and pupetteer with itself. Its current pre-occupation is trying to re-establish this family held company's foot prints throughout India.

    The third one is currently leading a happy family life. Will always jump in if the brother or the Mom asks her to do.

    India's fate is to look for salvation from abroad, especially from the land of Mafia!!!

    (Other thing to note is that if Iam made a head of state of an African nation, I would care neither about the well being of people or any type of deterioration the country's institutions as the only thing that is to my interest is to have my seat and power preserved. What the hell would matter if the poor African Nation thrives or not?? All I would want is my power and my family's well being taken care off. My mind simply would not deeply worry about a people that is no way related to me!!!

    An alien's basic mindset would not worry too much about whats happening in the place they stay. Their mind, soul and interest lay only in preserving the power they had got some how.

    That's precisely what is happening now in India.

    Alarmingly, in the past five six years, there has been a complete erosion in integrity of almost all
    the institutions in our country.

    It is as though these Italian masters have totally given a free hand to their Indian slaves to looty and plunder, provided their top position is not questioned.

    India not shining is very clear. Whereas India is now sliding - into the very depths of depravity and has more or less become the corruption capital of the world.

    Italians it seemed pioneered the Cosa-Nostra or in English the "Mafia"!!

    With such a method in India they now have one more such invention to their credit.

    Italy - Is now known as a place where its leaders debauch openly in their own societies.

    But what is not known is that it also exports such debauchery, depravity, immorality and corruption other Nations.

    India is one of the biggest receipeint of that largesse and we now know how this came from Italy!!!

    ReplyDelete
  5. பதிவுக்கும் படங்களுக்கும் ரொம்ப...நல்லா....தொடர்பு.....இல்லத்தான் அய்யா.

    ReplyDelete
  6. //திஸ்கி: பதிவு படம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதேன்னு ரெண்டு மூணு படம் போட்டிருக்கேன். மற்றபடி இந்தப் பதிவுக்கும் அந்த படங்களுக்கும் எந்த தொடர்புமில்லை!//

    நீங்க சொல்லி நாங்க நம்பாம இருப்போமா? நம்பிட்டேன்...

    ReplyDelete
  7. இப்படியும் ஒரு விளையாட்டு இருக்குதா?எனக்கு புதுசு.

    ReplyDelete