Friday, July 29, 2011

518. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*
WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் தொகுப்பு வெகு நாட்களாக எழுதிக் கொண்டிருந்த ஒரு கட்டுரைத் தொகுப்பு. அதை முடிக்க வேண்டும் என்பதால் எழுத வேண்டும் என்று நினைத்த பல ‘சின்ன’ விஷயங்களை எழுத முடியாமல் விட்டுப் போனது. நினைத்ததை தொகுத்தாவது வைத்திருந்தக்கலாம்!

***

ஆரண்ய காண்டம்.........
படம் பார்த்ததும் கட்டாயம் அது பற்றி எழுத நினைத்தேன். முடியாது போயிற்று. இப்போது ஒரே சொற்றொடரில் நினைத்ததைச் சொல்லி விடலாமென நினைக்கிறேன். “தமிழ்ப்படங்களில் உலகத்தரம் எல்லாம் வந்தாச்சு”!

நாளாகிப் போனதால் இந்த ஒன்று மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.

***
தங்கர்பச்சானின் ஆதங்கம் பற்றி எழுத நினைத்திருந்தேன். அவருக்கு நடிகர்களில் பலரும் தங்கள் சாதிப் பெயரை தங்கள் பெயரோடு இணைத்திருப்பதை எதிர்த்திருந்தார், அர்த்தமுள்ள எதிர்ப்பு.

இந்த நூற்றாண்டிலும் இன்னும் ஏன் சாதிப்பெயர்கள் வால்களாக முளைக்கின்றன? தாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று காண்பித்துக் கொள்ளும் ‘சாதித் திமிர்த்தனம்’ தவிர இதில் வேறெந்த பொருளுமுண்டோ?

தங்கர்பச்சான் தன் படத்தில் வேலை பார்த்த நடிகர்களின் பெயர்களில் இருந்த அந்த வாலை ‘வெட்டி’ வெறும் பெயரை மட்டும் திரையில் காண்பித்ததாகக் கூறியிருந்தார். ஒரு வேளை அப்படிப் பெயர் வைத்த நடிகர்களை அவர் தேர்ந்தெடுக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

***

சாதிப் பெயர் போல் கார்களின் கண்ணாடிகளில் தங்கள் ‘பக்தியைப்’ பறைசாற்றும் வாக்கியங்கள் எதற்கு என்பது எனது பல நாள் கேள்வி. இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. பாதுகாப்பிற்காக சாமி பெயரைப் போடுவதாகத் தெரியவில்லை. அதுவும் காருக்கு வெளியே அந்த பெயரைப் போடுவதில் ‘விளம்பரம்’ தவிர வேறு எதுவும் பொருளில்லை என்று நினைக்கிறேன்.

***

S.V. சேகரின் நிறைய ஜோக்குகள் பிடிக்கும். ஆனால் இப்போது மிகவும் பிடித்த ஜோக்: அவர் பையனைக் கதாநாயகனாக வைத்து படம் எடுப்பது.

இதுதான் இப்படின்னா அப்போ விஜயகாந்தின் ஆசைக்கு என்ன பெயர் சொல்ல?

***

Sam Anderson பற்றி ஒரு நேர்காணல் ஆ.வி.யில் வந்தது. சும்மா சொல்லக்கூடாது மனுஷனை. ஐந்து பேர் அவர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்களாம். இத்தனை பெரிய கம்பெனி நடத்துபவருக்கு எப்படி ஒரு படம் எடுக்க வழி கிடைத்தது? யாரு அவருக்குப் படம் எடுக்க காசு கொடுத்திருப்பாங்க? அந்தப் படத்தின் டைரடக்கரு யாரு? Sam Anderson தலைமை ரசிகர் மன்றம் பதில் சொல்லுமா?

***

28ம் தேதி தினசரியில் (T.O.I.) டீ-ஷர்ட்களில் எழுதக் கூடிய வசனம் ஒன்று போட்டிருந்தது: The only good thing over to come out of religion was the music.
வேணாம்னு நினச்சாலும் ‘மதம்’ மறுபடி வந்திருதே! அதாவது இதை வாசித்ததும் இஸ்லாம் இசையை வெறுக்குது; வேண்டாங்குது அப்டின்னு நினைவுக்கு வந்திச்சி!!

***
.
மதம்னதும் அடுத்து இன்னொண்ணு நினைவுக்கு வருது. என்னைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களே கிறித்துவர்களின் மன மாற்றத்திற்கு முதல் குறி - அன்றும் இன்றும். காரணம் தெரியும். அதற்கு அடுத்து ஒரு சில ‘மேல்” சாதியினரும் கிறித்துவத்திற்குள் வந்தார்கள். ஒரு நல்ல காரணம் கல்வி மூலம். ஆனாலும், எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் யாரும் கிறித்துவத்திற்குள் மனம்மாறி வந்தது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து Rev.Fr. சுந்தரம் என்று ஆங்கிலத்துறையில் St. Joseph's College-ல் ஒருவர் இருந்தார்; அவரை  மனம் மாறிய பிராமணரென்று கேள்விப்பட்டுள்ளேன். வேறு யாரும் எனக்குத் தெரியாது.

ஆனால் இஸ்லாமிற்குள் எல்லா சாதியினரும் வந்ததாகச் சமீபத்தில் சில பதிவுகள் படித்தேன். எல்லா சாதியினரென்றால் அதிலும் பிராமணர்களும் இருந்ததாகச் சொன்னது எனக்கு ஒரு ஆச்சரியம். பொதுவாகவே என்னைப் பொறுத்தவரை மதம் மாறுபவர்களுக்கு ‘தங்கள் மதமும் தெரியாது; புகும் மதமும் அவர்களுக்குப் புரியாது’ என்பது தான். ‘மதங்களைப் புரிந்தவனுக்கு ஏது மத மாற்றம்!”

இச்செய்தி எனக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது. அதுவும் பிராமணரும் இஸ்லாமிற்குள் ஐக்கியமானார்கள் என்பது. பற்றி, காரணங்கள், காரணிகள், இது எப்படி, ஏன் --- இப்படி பல கேள்விகள். பதில் தெரிந்தோர் விளக்கேற்றுங்களேன்!

***

43 comments:

  1. Sir.....

    I think you should leave the Religion Topic for a few months and concentrate more on something else.

    Kinda sounding stereotype for non keen users on the topic!

    Just felt so....

    ReplyDelete
  2. பார்பனர்கள் நிறைய பேர் இருகிறார்கள் கிருஸ்துவத்தில்.

    ReplyDelete
  3. எனக்குத் தெரிந்த ஒரு பார்ப்பணர் கேரள கோவிலில் அர்ச்சகராக இருந்து பின் இஸ்லாத்தை தழுவி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சமஸ்கிருத ஸ்லோகங்கள் அத்துப்படி.அதே போல் அவைகளில் உள்ள குளறுபடிகளையும் விபரமாக எடுத்துச் சொல்லுவார்.

    அன்புடன்,
    HBA

    ReplyDelete
  4. ஒவ்வொரு பதிவுலயும் ஒவ்வொரு கேள்வி கேட்டா பதில் சொல்லலாம் இத்தன கேள்வி ஒரே பதிவுல :) எதுக்கு பதில் சொல்லன்னு ஒரே கொழப்பமா இருக்கு. அப்புறம் என் பேர்ல ஜாதி பேர் இருக்கு அப்பா பேர் பின்னாடி எழுதறதால அதுக்கு மட்டும் பதில் சொல்றேன். காரணம் அப்பாகிட்ட கேட்டுட்டு. திமிரா வேற எதாவதும் காரணம் இருக்கான்னு :)

    ReplyDelete
  5. அவருக்கு நடிகர்களில் பலரும் தங்கள் சாதிப் பெயரை தங்கள் பெயரோடு இணைத்திருப்பதை எதிர்த்திருந்தார், அர்த்தமுள்ள எதிர்ப்பு. //

    குறைந்த பட்சம் இவராவது இந்த விசயத்தை சினிமாத் துறைக்குள்ளரயும் கொண்டு வந்திருக்காரே! பெரிய விசயம்தான். மெதுதுதூவா நடக்கும் பொறுமையா இருப்போம்...

    ReplyDelete
  6. //இஸ்லாத்தை தழுவி பிரசாரம் செய்து வருகிறார். //

    இவங்கல்லாம் தழுவுறது சரி... அதுக்குப் பிறகு பிரச்சாரம் எதுக்கு?

    ReplyDelete
  7. //சாதிப் பெயர் போல் கார்களின் கண்ணாடிகளில் தங்கள் ‘பக்தியைப்’ பறைசாற்றும் வாக்கியங்கள் எதற்கு என்பது எனது பல நாள் கேள்வி. இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை//

    பெருமை தான். மத போதை தான். எங்கள் கடவுளால் தான் இது சாத்தியமாயிற்று என்று காட்ட. எல்லா மதத்தவரும் வண்டி வாங்கி sticker ஒட்டுவதால், கடவுள் யாரையும் மதத்தை பார்த்து discriminate செயவதில்லை. கடவுள் உண்மையில் வண்டி விஷயத்தில் சோசலிஷவாதி.

    இந்துக்கள் வண்டியில் குலத் தெயவ கடவுளின் பெயரை வைத்து ஜாதியையும் அறிந்து கொள்ளலாம் - ஜாதியையும் பறைசாற்றும்.

    ReplyDelete
  8. //இவங்கல்லாம் தழுவுறது சரி... அதுக்குப் பிறகு பிரச்சாரம் எதுக்கு?//

    இதற்கு பதில் அவரைத்தான் கேட்கனும்

    அன்புடன்
    HBA

    ReplyDelete
  9. இது போன்று அந்த மதத்தில் இருந்து பாதிரி, உலமாக்கள் கூட மதம் மாறி இருக்கிறார்கள். இதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது.

    ReplyDelete
  10. //சாதிப் பெயர் போல் கார்களின் கண்ணாடிகளில் தங்கள் ‘பக்தியைப்’ பறைசாற்றும் வாக்கியங்கள் எதற்கு என்பது எனது பல நாள் கேள்வி. இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை.// நாத்திகர்களும் இப்படி செய்கிறார்களே, அது ஏன்?

    //மதம்னதும் அடுத்து இன்னொண்ணு நினைவுக்கு வருது. என்னைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களே கிறித்துவர்களின் மன மாற்றத்திற்கு முதல் குறி - அன்றும் இன்றும்.// முதன் முதலில் கேரளாவில் பார்ப்பனர்கள்தான் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஐரோப்பிய மிஷனரிகள்கூட முதலில் பார்ப்பனர்களிடையேதான் பணி செய்தனர்.

    // ஆனாலும், எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் யாரும் கிறித்துவத்திற்குள் மனம்மாறி வந்தது தெரியவில்லை.// கிறிஸ்தவர்களாகிய மாறிய சில பார்ப்பனர்களை எனக்கு தெரியும். கிறிஸ்தவத்தில் பரம்பரை கிறிஸ்தவர்களைவிட உறுதியாக நிற்பார்கள்.

    //என்னைப் பொறுத்தவரை மதம் மாறுபவர்களுக்கு ‘தங்கள் மதமும் தெரியாது; புகும் மதமும் அவர்களுக்குப் புரியாது’ என்பது தான்// என்னைப் பொறுத்தவரை புகும் மதத்தை நன்றாக தெரிந்துகொண்டு மாறுபவர்களும் உண்டு புரியாமல் மாறுபவர்களும் உண்டு.

    // ‘மதங்களைப் புரிந்தவனுக்கு ஏது மத மாற்றம்!”// மதங்களை புரிந்துகொண்டவன் நாத்திகனாக மாட்டான்!

    //அதுவும் பிராமணரும் இஸ்லாமிற்குள் ஐக்கியமானார்கள் என்பது. பற்றி,// இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை பிடித்திருக்கலாம்.

    //பதில் தெரிந்தோர் விளக்கேற்றுங்களேன்!// விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  11. //நாத்திகர்களும் இப்படி செய்கிறார்களே, அது ஏன்?//

    இதற்குப் பதிலும் சொன்னேனே. நீங்கள் காசு கொடுத்து ‘மோட்சம் செல்ல’ பொது இடங்களில் விளம்பரம் செய்வதை எதிர்த்து இங்கிலாந்தில் பேருந்துகளில் கடவுளும் இல்லை; மோட்சமும் நரகமும் இல்லைன்னு எங்க ஆளுங்க விளம்பரம் பண்றாங்கன்னு வாசிச்சேன்.

    ReplyDelete
  12. பிராமணர்களைப் பற்றி நீங்கள் சொல்லியவை எனக்கு புதிய செய்திகள்.

    ReplyDelete
  13. // ‘மதங்களைப் புரிந்தவனுக்கு ஏது மத மாற்றம்!”// மதங்களை புரிந்துகொண்டவன் நாத்திகனாக மாட்டான்!//

    எந்த மதமும் பகுத்தறிவுக் கேள்விகளுக்குப் பதிலளிக்காது என்பது என் அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பதில். ஆகவே புதிதாக ஒரு மதத்திற்குள் செல்பவர்கள் ‘கேட்க வேண்டியதை மட்டும்’ கேட்டு, புரிந்து உள்ளே செல்கிறார்கள். இங்கு பிரச்சாரத்தின் வேகம் மட்டுமே செல்லுபடியாகிறது.

    எங்கே கிறிஸ்து தன்னைக் கடவுளாகக் காண்பிக்கிறார்? இருப்பினும் தமதிருத்துவத்தில் உள்ள ஏசுவைக் கடவுளாக்கி விட்டீர்கள்; புதிதாக வருபவருக்கு ஏசு தமதிருத்துவத்தின் ஒன்றானவரா? (தமதிருத்துவத்தைக் கேள்விக் கேட்கக் கூடாதென்று அகுஸ்தினார் சொல்லியிருக்கிறார் என்ற துணைக் கதை வேறு!) அவர் கடவுளா? கடவுளின் குமாரரா? என்ற கேள்விகள் எழும்பி அதற்கும் பதில் கிடைத்து உங்கள் மதத்திற்குள் வருகிறார்கள் என்று நம்பி விடாதீர்கள்;

    IGNORANCE IS BLISS - for all converts! ஒரு இறைமறுப்பாளனின் தீவிர வாசிப்பு, யோசிப்பு,ஆய்வு இவைகளுக்கு முன் ஒரு மதத்திற்குள் புதியதாக நுழைபவனின் அனுபவம் ஈடாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் என்னைப் போன்று ஒரு மத விசுவாசியாக இருந்து வெளியே போனவனின் கேள்விகள் முன்னால் நிச்சயமாக ஈடாக இருக்காது. கண்மூடி வெளியே போகவில்லை; நன்கு கண்களைத் திறந்ததால்தான் வெளியே சென்றேன்.

    ReplyDelete
  14. //எங்கே கிறிஸ்து தன்னைக் கடவுளாகக் காண்பிக்கிறார்? இருப்பினும் தமதிருத்துவத்தில் உள்ள ஏசுவைக் கடவுளாக்கி விட்டீர்கள்; //

    இதற்கு பதில்,

    //IGNORANCE IS BLISS - for all atheists!//

    நீங்க இஸ்லாமியர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நம்பிவிட்டீர்கள்.

    I யோவான் 5 :7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

    இயேசு கிறிஸ்துவே தன்னைப்பற்றி சொன்னது:
    யோவான் 3

    16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

    18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

    ReplyDelete
  15. யோவான் 14

    1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

    2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

    3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

    4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

    5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

    6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

    7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

    11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

    12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

    13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

    14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

    ReplyDelete
  16. /எந்த மதமும் பகுத்தறிவுக் கேள்விகளுக்குப் பதிலளிக்காது என்பது என் அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பதில். // மனித அறிவுக்கு எட்டாத விஷயங்கள் பல உண்டு.

    //ஆகவே புதிதாக ஒரு மதத்திற்குள் செல்பவர்கள் ‘கேட்க வேண்டியதை மட்டும்’ கேட்டு, புரிந்து உள்ளே செல்கிறார்கள். // கிறிஸ்தவர்களாக மாறிய எத்தனை பேரிடம் பேசியிருக்கிறீர்கள்?

    //அதுவும் என்னைப் போன்று ஒரு மத விசுவாசியாக இருந்து வெளியே போனவனின் கேள்விகள் முன்னால் நிச்சயமாக ஈடாக இருக்காது.// கத்தோலிக்கர்களுக்கு பைபிள் அறிவு குறைவு. உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள்.

    // கண்மூடி வெளியே போகவில்லை; நன்கு கண்களைத் திறந்ததால்தான் வெளியே சென்றேன்.// ஞானக் கண்கள் திறக்கப்படும்போது உள்ளே வந்துவிடுவீர்கள் :)

    ReplyDelete
  17. //
    //IGNORANCE IS BLISS - for all atheists!////

    ’உண்மை’ பேசும் உங்கள் மனசாட்சிக்கு என் வாழ்த்து!

    ReplyDelete
  18. யோவான் 14

    1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

    2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு

    ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

    3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும்

    வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

    4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

    5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

    6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

    7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்

    என்றார்.

    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன்

    பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என்

    சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

    11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை

    நம்புங்கள்.

    12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை

    விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

    13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

    14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

    /எந்த மதமும் பகுத்தறிவுக் கேள்விகளுக்குப் பதிலளிக்காது என்பது என் அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பதில். // மனித அறிவுக்கு

    எட்டாத விஷயங்கள் பல உண்டு.

    //ஆகவே புதிதாக ஒரு மதத்திற்குள் செல்பவர்கள் ‘கேட்க வேண்டியதை மட்டும்’ கேட்டு, புரிந்து உள்ளே செல்கிறார்கள். //

    கிறிஸ்தவர்களாக மாறிய எத்தனை பேரிடம் பேசியிருக்கிறீர்கள்?

    //அதுவும் என்னைப் போன்று ஒரு மத விசுவாசியாக இருந்து வெளியே போனவனின் கேள்விகள் முன்னால் நிச்சயமாக ஈடாக

    இருக்காது.// கத்தோலிக்கர்களுக்கு பைபிள் அறிவு குறைவு. உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள்.

    // கண்மூடி வெளியே போகவில்லை; நன்கு கண்களைத் திறந்ததால்தான் வெளியே சென்றேன்.// ஞானக் கண்கள் திறக்கப்படும்போது

    உள்ளே வந்துவிடுவீர்கள் :)

    ReplyDelete
  19. //எங்கே கிறிஸ்து தன்னைக் கடவுளாகக் காண்பிக்கிறார்? இருப்பினும் தமதிருத்துவத்தில் உள்ள ஏசுவைக் கடவுளாக்கி விட்டீர்கள்; புதிதாக வருபவருக்கு ஏசு தமதிருத்துவத்தின் ஒன்றானவரா? (தமதிருத்துவத்தைக் கேள்விக் கேட்கக் கூடாதென்று அகுஸ்தினார் சொல்லியிருக்கிறார் என்ற துணைக் கதை வேறு!) அவர் கடவுளா? கடவுளின் குமாரரா? என்ற கேள்விகள் எழும்பி அதற்கும் பதில் கிடைத்து உங்கள் மதத்திற்குள் வருகிறார்கள் என்று நம்பி விடாதீர்கள்;// இது நீங்கள் சொன்னது. இதற்கு நான் பைபிளிலிருந்தே ஆதாரம் கொடுத்திருக்கிறேன். இனி உங்கள் மன சாட்சியை நீங்கள்தான் கேட்கவேண்டும்?

    இன்னும் பல ஆதாரங்கள் உண்டு. நீங்கள் பைபிள் முழுக்க படிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. யோவான் (John) புத்தகத்தை மட்டும் படித்தாலே போதும். இப்படிப்பட்ட தவறான கேள்விகளை கேட்கமாட்டீர்கள்.

    ReplyDelete
  20. //அவர் பையனைக் கதாநாயகனாக வைத்து படம் எடுப்பது. //

    :)

    மதமாற்றம் பற்றி..

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் பார்ப்பனர்கள் இஸ்லாமிற்கு வந்ததாகவும், தோற்றம் பற்றிய ஒரு குறிப்புடன் பின்னூட்டத்தில் எழுதியிருந்தார் நமது நண்பர் அப்துல்லா ( அவரில்லையென்றால் மன்னிக்கவும்).

    அநேகமாக அது ஜோதிஜி யின் இஸ்லாமியர் நதிமூலம் பற்றிய இடுகை என்று நினைக்கிறேன். இதுவும் தவறென்றால் இருவரும் மன்னிக்கவும்.

    ஆனால், எவ்விதமான ஆதாரங்களையும் முன்வைத்ததாக நினைவில்லை.

    ReplyDelete
  21. இடுகை பின்னூட்டம் - இரண்டுமே சரிதான்..
    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_17.html

    ReplyDelete
  22. சார்வாகனின் பதிவுகள், பின்னூட்டங்கள் பார்த்த பிறகும் ’IGNORANCE IS BLISS - for all atheists!’ என்று சொல்வதிலிருந்தே உங்களின் ‘ஞானக்கண்ணின்’ தீட்சண்யம் புரிகிறது.

    நீங்கள் சொன்னவைகளையும் சேர்த்தே என் பழைய பதிவுகளில் கிறித்துவம் பற்றியக் கேள்விகள் உண்டு. இங்கே திசை திரும்பாமல் அங்கேயே முடிந்தால் சந்திப்போமே!

    ReplyDelete
  23. கையேடு
    நீங்கள் சொன்ன பதிவைப் படித்த பின்புதான் அந்த ஐயமும், ஆச்சரியமும் எனக்கு வந்தது.

    ReplyDelete
  24. எனக்குள் இருக்கும் ஒரு பெரிய கேள்வி?

    ஒரு இந்து ஒரு விசயத்தைப்பற்றி எழுத பேசத் தொடங்கும் போது மதம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவர் அல்லது முஸ்லீம் பேசத் தொடங்கினால் இடுகையில் கூட மதம் கலந்து தான் பேசுகிறார்கள். இது ஏன்?

    ராபின் ஒரு கதக்களியே ஆடியுள்ளார். ஆனால் என்ன சொல்லவருகிறார் என்று தான் எனக்குப் புரியவில்லை. திடீர் என்று நீங்க பழைய பதிவுக்கு உள்ளே வரக் காரணம் கையேடுவா?

    ReplyDelete
  25. //சார்வாகனின் பதிவுகள், பின்னூட்டங்கள் பார்த்த பிறகும் ’IGNORANCE IS BLISS - for all atheists!’ என்று சொல்வதிலிருந்தே உங்களின் ‘ஞானக்கண்ணின்’ தீட்சண்யம் புரிகிறது.// அப்போ உங்க பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் உங்களுக்கே நம்பிக்கையில்லை. சார்வாகன் இந்து மதத்தின்மேல் 'பாசம்' வைத்திருப்பவர். அவர் தன்னுடைய மதத்தைவிட மற்ற மதங்களை விமர்சித்து எழுதியதுதான் அதிகம்.

    //ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் பிற்கால (கிறித்தவ)ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதாகவும் கருத்து உண்டு. நாம் நடுநிலைமையோடு இந்த வரலாற்று இயேசுவை தேடும் வரலாற்றாய்வாளர்கள்,அவர்களின் எழுத்துகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஜோசஃபஸை பற்றி எழுதவே பல பதிவுகள் தேவைப்படும் என்பதால்,ஜோஸஃபஸ் புத்தகத்தில் இப்போதைய கிறித்தவ‌த்திற்கு ஆதரவான கருத்துகள் இருக்கின்ற்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள்.// கிறித்தவ‌த்திற்கு ஆதரவான கருத்துகள் இருப்பதால் ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் இருக்குதாம். இதுதான் இவர்கள் ஆய்வு செய்யும் லட்சணம்.


    //இங்கே திசை திரும்பாமல் அங்கேயே முடிந்தால் சந்திப்போமே!// இங்கே விவாதத்தை ஆரம்பித்ததே நீங்கள்தான். இப்போ போக்கு காட்டினா எப்படி?

    //ஒரு இறைமறுப்பாளனின் தீவிர வாசிப்பு, யோசிப்பு,ஆய்வு இவைகளுக்கு முன் ஒரு மதத்திற்குள் புதியதாக நுழைபவனின் அனுபவம் ஈடாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? // இது நீங்கள் சொன்னதுதான். அப்படி தீவிர ஆய்வு நடத்தியிருந்தால் //அவர் கடவுளா? கடவுளின் குமாரரா?// இந்த கேள்வி உங்களுக்குள் எழும்பியிருக்காது. நான் பைபிளிலிருந்து கொடுத்த ஆதாரங்கள் தீவிர வாசிப்பில் விடுபட்டு போனது எப்படி? நாத்திக ஞானிகள் எழுதிய புத்தகத்தை மட்டும் படிக்காமல், கொவுரவகுறைச்சலாக நினைக்காமல் இயேசு நாதரின் போதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் பைபிளை திறந்து படிச்சு பாருங்க, அப்புறம் பேசுங்க!

    http://tamil-bible.com/

    ReplyDelete
  26. //அவர் தன்னுடைய மதத்தைவிட மற்ற மதங்களை விமர்சித்து எழுதியதுதான் அதிகம்.//

    ஐயா, தாங்கள் எப்படியோ?

    சார்வாகனின் இஸ்லாமிய அறிவைப் பற்றிச் சொன்னேன். உங்களுக்குப் புரியவில்லை போலும்!

    //கிறிஸ்தவர்களாக மாறிய எத்தனை பேரிடம் பேசியிருக்கிறீர்கள்?//
    குறைந்தது 50 பேருக்கு மேல் ..

    //இப்போ போக்கு காட்டினா எப்படி?//

    இப்போதும் அதே கேள்வி தொங்கித்தான் நிற்கிறது. ஏசு கடவுள் என்பதற்கான வசனம் நீங்கள் கொடுத்ததில் இல்லை. தான் வழி என்கிறார்; அந்தம் அவரில்லை.

    இங்கு இல்லாமல் பழைய பதிவுகளில் விவாதம் தொடர்வோம் என்று சொன்னது அவ்வளவு ‘சாவான பாவமா’?!!

    ReplyDelete
  27. //இயேசு நாதரின் போதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் பைபிளை திறந்து படிச்சு பாருங்க, அப்புறம் பேசுங்க!//

    இஸ்லாமியப் பதிவர்கள் சொல்லும் அதே வசனத்தை எடுத்துப் போட்டால் எப்படி? பைபிள் என்பத்ற்குப் பதில் குரான் என்று போட்டால் அவர்களின் வழக்கமான வசனம்!!

    ஒரிஜினலா ஏதாவது சொல்லுங்களேன்.

    ReplyDelete
  28. //ஏசு கடவுள் என்பதற்கான வசனம் நீங்கள் கொடுத்ததில் இல்லை. // இது ஒரு பாமரத்தனமான பதில். இயேசு இறைமைந்தன் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படைகளில் முதன்மையானது. இயேசு இறைமைந்தன் என்பதற்கு ஆதாரங்களை கொடுத்தாகிவிட்டது. இன்னும் இயேசு கடவுள் என்பதற்கு ஆதாரம் காட்டு என்றால் என்ன அர்த்தம்?

    //தான் வழி என்கிறார்; அந்தம் அவரில்லை.//
    13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்

    இதுவும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

    //இஸ்லாமியப் பதிவர்கள் சொல்லும் அதே வசனத்தை எடுத்துப் போட்டால் எப்படி? பைபிள் என்பத்ற்குப் பதில் குரான் என்று போட்டால் அவர்களின் வழக்கமான வசனம்!!// தருமி சார், உங்களுக்கு கிறிஸ்தவத்தின் அடிப்படைகளைப் பற்றிய புரிதல் இல்லை. உங்களுடைய கத்தோலிக்க பின்புலம்தான் இதற்கு காரணம். அதனால்தான் பைபிளை படிக்க சொன்னேன். கிறிஸ்தவத்தை நீங்கள் சரியாகப் புரிந்து வைத்திருந்தால் இயேசு இறை மைந்தனா கடவுளா என்று கேட்கமாட்டீர்கள். பைபிளில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது இயேசு இறை மைந்தன் என்று.

    //I யோவான் 5 :7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;// இதையும் நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

    வெளி 5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல்உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.வெளி 5:13 அப்பொழுது, வானத்திலும் பூயிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

    வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும்ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

    வெளி 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு .

    ReplyDelete
  29. //இது ஒரு பாமரத்தனமான பதில்.//

    இப்படியெல்லாம் ‘அழகாகப்’ பதில் கொடுத்தால் நானும் அதே அழகில் நீங்கள் மறுபடியும் ‘முட்டாள்தனமான’ பதில் கொடுத்துள்ளீர்கள் என்றும் பதில் சொல்லக் கூடும். இப்போதைக்கு அது வேண்டாமென இம்முறை ஒதுக்கி வைத்துள்ளேன்.

    நீங்கள் கொடுத்துள்ள மேற்கோள்களை மீண்டும் கண்களைத் திறந்து வாசியுங்கள்.

    என் ’மரியாதையான’ குறிப்பிட்ட பதிலை அங்கே இட்டிருக்கிறேன்.பார்க்கவும்: http://dharumi.blogspot.com/2005/09/59-4.html

    ReplyDelete
  30. இணையத்தில் இஸ்லாத்தில் சாதி இல்லை என்று கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படியும் நடக்கிறது.

    இதை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு தனி வகுப்பெடுக்க வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    //சுல்தான் ஒரு தடவை தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஓடையில வைச்சி வேலை நடக்கும்போது, அங்க அம்மணமா வந்து நின்னாரு.//

    //கஷ்டப்பட்ட சமுதாயத்தில் இருந்து யாரும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க. கழிப்பறையை கட்டுறதை எதிர்த்து சுப்பு கோனார்; அவருடன் சேர்ந்து மீரான், சுல்தான் எல்லாம் மிரட்டினாங்க.//

    http://www.penniyam.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  31. This discussion reminds me this...one of my ex-colleague is a christian from another south indian state and belongs to a particular sect..he told me "When St. Thomas came to India he converted a lot of Brahmins first and we are descendants of that set of Brahmins"...i felt he emphasized more on "Brahmins" to convey that they are superior than other sects...

    ReplyDelete
  32. Dear Mr. Dharumi,

    Somebody just told me about Arun Shourie's latest book called "Does He Know a Mother's Heart". In fact I did not find time to order a copy. I am planning to get one shortly.

    Based on what I heard I think its something that you should not miss. Arun takes on the concept of god and his so called love and affection for Humanity! He quotes all religions, texts and beliefs and seems to conclude that none (that includes all religions) offers a picture of God who has solid reasons to inflict pains and suffering on Humanity and none of those gods are benevolant!

    The subject looks exciting as I heard that he has quoted extensively from all religious texts and goes to throw on the mat that the god/s those all extoll are essentialy cruel unforgiving and illogical!

    Knowing Arun Shourie's scathing analysis and presentation I believe it should be an exciting analysis of beleifs, gods and religions!! This work I believe is the outcome of his outlook on suffering that his own family (his kid and wife) were subjected to and for which he had searched all holy texts a reason!!

    I expect you to write a review on this shortly.

    ReplyDelete
  33. //I am planning to get one shortly.//
    //I expect you to write a review on this shortly. //

    இரண்டையும் சேர்த்துப் போட்டால் ...
    I am planning to get one .. write a review on this shortly
    என்றல்லவா வருகிறது! மறுபதிப்பு என் வலைப்பூ .. இது எப்பூடி?!

    ReplyDelete
  34. //...his outlook on suffering that his own family (his kid and wife) ...//

    ??????

    ReplyDelete
  35. Thanks for the reply.

    But the only problem is I have lined up atleast 5 new books and going by the official work load I have its going to be months before I read this one let alone write a review. Thought it would be interesting to see your review.

    ReplyDelete
  36. His only kid is almost vegetative since birth and his wife is suffering from Parkinson for so many years now. His view is about the reason why such suffering is made to happen by the all benevolent god.

    ReplyDelete
  37. //எனக்குத் தெரிந்து Rev.Fr. சுந்தரம் என்று ஆங்கிலத்துறையில் St. Joseph's College-ல் ஒருவர் இருந்தார்; அவரை மனம் மாறிய பிராமணரென்று கேள்விப்பட்டுள்ளேன். //

    சுசீலா மாமி - ரகுநாதன் கிறித்துவ பிராமணா சென்னையில் பல இடங்களில் கலக்குறா, கவனித்தது இல்லையா ?

    ReplyDelete
  38. கோவி.
    அவாளெல்லாம் நேக்கு தெரியாதே!

    ReplyDelete
  39. பெயருக்கு பின்னால் ஜாதி சேர்ப்பதற்கு காரணம் நீங்கள் சொல்லுவது போன்ற திமிர்
    இல்லை ?
    தத்தம் ஜாதியை தாங்களே தாழ்வாக நினைக்க தான் இந்த ஜாதிய பிரச்சனயே வந்தது !
    எல்லோரும் தங்கள் ஜாதியை உயர்வாக நினைக்கும் பட்சத்தில் தற்காலத்தில் நடக்கும் ஜாதிகள் இல்லை என்ற காமெடியை ஓரம் கட்டலாம்!

    ஒருகாலத்திலும் ஜாதிகள் இல்லாத சமுதாயம் அமையமுடியாது !

    ReplyDelete
  40. @naren,
    தவறு. குலதெய்வம் பெயர் வைத்து இருந்தால் ஜாதி கண்டு பிடிக்கமுடியாது. ஏனெனில், பல ஜாதியினருக்கும் - அடுக்கின் எல்லா நிலையில் வைக்கப்படோருக்கும் உள்ளடக்கி - அதே குல தெய்வம் இருக்கும்.
    வேண்டுமானால் அந்த தெயய்வத்தின் பெயரினை சமஸ்க்ருதத்தில் எழுதி இருப்பார்கள். அதை வைத்து ஏதும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  41. //சுசீலா மாமி - ரகுநாதன் கிறித்துவ பிராமணா சென்னையில் பல இடங்களில் கலக்குறா, கவனித்தது இல்லையா ? //

    கோவி
    வெகு சமீபத்தில் இந்த ரகுநாதன் எடுத்த படம் ஒன்று பார்த்தேன். எப்படி ஒரு பிராமணர் கிறித்துவத்திற்குள் வந்தாரென்று, சாரு ஹாசனை வைத்து எடுத்திருந்தார். movie making is quite good. ஏ.ஆர். ரஹ்மானுக்கு வயிற்று வலி சரியானது போல் இங்கு ஒருவர் உயிர் பிழைக்கிறார். மதம் மாறுகிறார்!

    so ... அவாளும் நிறைய இருக்கிறா ...!

    ReplyDelete