Saturday, August 13, 2011

522. FORBIDDEN FRUITS ARE SWEETER !

*

சமச்சீர் நூல்களின் சில பகுதிகளை ஆசிரியர்கள் ‘அழிக்கும்’ முயற்சியில் அரசாங்க ஆணையால் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். Forbidden fruits are sweeter என்பார்கள். மறைத்தவைகளைப் பார்க்க மாணவர்களுகு நிச்சயம் ஆசை வரும். கறுப்பெழுத்தில் மறைந்த எழுத்துக்களை விளக்கின் ஒளிக்கு எதிர் வைத்துப் பார்த்தால் அந்த மறைந்த எழுத்துக்களைப் படிக்க முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த படங்களை அந்த ஸ்டிக்கரைக் கிழித்தால் பார்க்கலாமா? இப்படிப் பல கேள்விகள் கட்டாயம் மாணவர்களுக்கு வரும். அதோடு ஆசிரியர்கள் ‘அழிக்கும்’ முயற்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் பழைய நினைவு ஒன்று வந்தது.

1963; தமிழ் வளர்த்த மதுரை தியாகராஜர் கல்லூரியில் இரண்டாமாண்டு இளவியல். தமிழ் வகுப்பு. பெரிய புராணத்தில் பாணினியின் அழகு பற்றிய பாடல் ஒன்று வரும். பாணினியை ‘பாதாதி கேசம்’ வரை வர்ணித்திருப்பார் ஆசிரியர். நடுவில் ஒரு வரி விடப்பட்டு, அதற்குப் பதில் அந்த வரியில் சில புள்ளிகள் மட்டுமே இருக்கும்.

எங்கள் தமிழ்ப்பேராசிரியர் பேரா. சங்கர நாராயணன். செய்யுள் வரிகளை நடத்துவதில் விற்பன்னர். பிடித்த சில ஆசிரியர்களில் அவரும் ஒருவர். கனமான குரல்; சிதம்பரம் ஜெயராமனின் குரலை இன்னும் கொஞ்சம் மெல்லியதாக்கினால் வருமே .. அப்படி ஒரு நல்ல குரல். செய்யுள்களை மிக அழகாகப் பாடி, இசைக்குறிப்பும் கொடுப்பார் - என்ன ராகம் .. தாளம் என்று. அதன்பின் அதே ராகத்தில் உள்ள சினிமாப் பாடலொன்றின் சில வரிகள். பின் செய்யுளை தளை நீக்கி தெளிவாக அவர் சொல்லும்போதே பாதிப் பாடல் புரிந்து விடும்.  நூலில் விட்டுப்போன வரியைப் பார்த்து, ‘நீங்கள் கெட்டுப் போய் விடுவீர்கள் என்ற அச்சத்தில் அந்த வரிகளை விட்டு விட்டார்கள் போலும். இதனாலெல்லாம் நீங்கள் கெட்டு விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லை; ஆகவே அந்த வரிகளை எழுதிக் கொள்ளுங்கள்’ என்று அவர் அந்த வரிகளைத் தந்தார்.

”ஈர்க்கிடை புகா ஏறிள வனமுலை”

எல்லா வரிகளும் மறந்து விட்டன; ஆனால் இந்த வரி மட்டும் ‘இன்னும்’ மறக்கவில்லை.

Forbidden fruits are sweeter!


*

3 comments:

  1. ஐயா,

    அந்த காலத்தில் அவ்வளவு “வறட்சியா”??

    தொலைப்பேசியில் பார்த்ததும்?????

    forbidden fruits are sweeter...அவங்க apple யா சாப்பிடப் போகிறார்கள். முழுப் பாடத்தையும் மை கொண்டு அழித்தால், மாணவர்கள் அவர்களாவே முழுப் பாடத்தைப் படித்துவிடுவார்கள், நல்ல ஐடியா!!!

    ReplyDelete
  2. //தொலைப்பேசியில் பார்த்ததும்?????//

    திருத்தி விட்டேன்; நன்றி

    ReplyDelete