Thursday, August 18, 2011

524. அன்னா ஹசாரே ... மதுரையில் சின்ன முயற்சி



*

எங்களூரில் "நம் நாடு’ என்றொரு புதிய அமைப்பொன்று சமீப காலங்களில் ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை மேற்கொண்டு, அவைகளில் வெற்றியும் பெற்றுள்ளனர். இவ்வமைப்பு அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த முனைந்துள்ளனர். இதற்காக இன்றிலிருந்து (18.08.’11) ஐந்து நாட்களுக்கு மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கருகில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு முன்பு மாலை 6 - 7 வரை மெழுகுவர்த்தியுடன் லோக்பால் தொடர்பான முழக்கங்கள் எழுப்பி, தங்கள் முனைப்பைக் காட்டி வர திட்டமிட்டுள்ளனர்.

இன்று மாலை நான் சென்ற போது வெறும் 50 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் கூட்டம் முடியும் போது 200 பேர் இருந்திருப்போம். இதில் ஏறத்தாழ 70லிருந்து 100 பேர் வரை வட இந்திய நண்பர்கள் இருந்தார்கள் - சில பெண்களையும் சேர்த்து. இவர்களில் இளைஞர்களே அதிகம்.

25 ஆண்டுகளுக்கு முன் இரு சர்தார்ஜிகளோடு ஓரிரு நாட்கள் சேர்ந்திருக்கும் காலத்தில் அவர்கள் சொன்னது இன்று நினைவுக்கு வந்தது. உண்மையான சுதந்திரப் போராட்டத்தின் வன்மையான பொழுதுகள் வட இந்தியாவிலேயே அதிகமாக இருந்தன. அதோடு வரலாற்றிலும் நெடுக அயல் நாட்டுப் படையெடுப்புகளும் வட இந்தியாவிலேயே அதிகம். அதோடு அந்த இரு சர்தார்ஜிகள் அப்போது நடந்து முடிந்திருந்த இந்தியா - பாக். யுத்தம் ஒன்றில் - கார்கில் யுத்தத்திற்கு முந்திய போர் - அவர்கள் கிராமங்களுக்கு சற்றே வெளியே பாக். விமானம் ஒன்று நம் குண்டுகளால் சேதமடைந்து வயல் வெளிகளில் விழுந்தது. சிறிது முன்பே விழுந்திருந்தால் எங்கள் கிராமத்தில் பாதி இறையாகிப் போயிருக்கும் என்றார்கள். அந்த விமானத்தின் சில பகுதிகளை எங்கள் வீட்டுப் பூசை அறையில் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம் என்றார்கள். இப்படி போராட்டங்களோடு வாழ்ந்ததாலேயே எங்களிடம் போர்க்குணம் அதிகம். இந்தியப் படை வீரர்களில் நாங்களே அதிகம் என்றார்கள்.

நம் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். இத்தனை பெரிய ஊரில் வெறும் 200 பேர் மட்டும்தானா என்றொரு கேள்வியும் வந்தது. அதுவும் வந்ததில் ஏறத்தாழ பாதிக்கும் மேல் வட இந்தியர். எழுந்த கோஷங்களில் பாதி அவர்களது மொழியில். தாய்நாட்டுக் கொடி பிடித்து தமிழிலும், இந்தியிலும் கோஷம் எழுப்பியது எனக்கு மிகவும் புதியது. வெறும் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் போட்டது நம் பதிவர்களில் சிலருக்குப் பிடிக்காத ஒன்றாக, தேவையற்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பாரதி சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு.

ஒரு சின்ன ஆரம்பம். அக்கினிக் குஞ்சு பலுகிப் பெருக ஆவல்.

மதுரைக்கார பதிவர்களை இக்கூட்டங்களுக்கு அழைக்கின்றேன். 
இன்னும் மீதியிருக்கும் நான்கு நாட்களில் நாமும் இணைவோமா?

*
-----------------------------------------
http://timesofindia.indiatimes.com/city/madurai/Candlelight-demonstration-against-govts-Lokpal-bill/articleshow/9679768.cms


MADURAI: Slogans for a corruption-free India resonated in the streets of Madurai as a group of men and women gathered to stage a candlelight protest against the Centre and its proposed Lokpal Bill.

Men and women from various walks of life joined the protestors across the country in demanding Jan Lok Pal, at Anna Bus Stand in the city. The protestors, young and old, who gathered under the aegis of "India Against Corruption," lit candles and raised slogans for making the country corruption free. In fact, many of the passersby also joined the agitators in raising slogans against corruption and demanded that the Lokpal bill be strengthened.

They also showered praises on anti-corruption crusader Anna Hazare and demanded the government to accede to the demands of the fasting activist. Students from Madurai Medical College, American College, Madurai Kamaraj University and MIET college also joined the protestors.

The protestors have planned to stage a similar candle light protest at Gandhi Museum on Sunday. "We expect more people to participate in the protest on Sunday. In fact, wherever we go, people are eager to participate and express their solidarity with Anna Hazare," said Anupam Khandelwal, a native of Indore in Madhya Pradesh pursing final year MBBS in Madurai Medical College.

He said that they are planning to mobilise more students and spread the protest across the region. The protestors have also planned to take out a rally in the city next week.



14 comments:

  1. ஏதோ மொத்த இந்தியாவும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது போல டைம்ஸ் ஆப் இந்தியாவில் இரண்டு நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்னவென்றால், 50 பேர்தான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...:-)

    ReplyDelete
  2. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! வூழல் பணமாக சுவிஸ் வங்கியில் பதுங்குவது உண்மையில் நம்மிடமிருந்து வாங்கப் பட்ட வரிப் பணமே. பிக் பாக்கெட் காரார் பஸ்ஸில் நம்மிடமிருந்து நூறு ரூபாய் அடித்து விட்டால் அன்று முழுவதும் அதை எண்ணி வருந்துகிறோம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கில் நாம் கட்டும் வரியானது நமக்கு தெரியாமலே களவாடப் படுவதுதான் வூழல். இந்திய அரசுக்கு வரவேண்டிய பணம் வராமல் செய்யப் பட்டு வெளி நாட்டு வங்கியில் பதுங்குகிறது என்றால், அது நமக்கு தேவையான சாலை, மின் உற்பத்தி நிலையங்களை கட்ட வைத்திருந்த பணத்தை பரி கொடுத்தது போலத் தான்.

    மீண்டும் பாராட்டுகிறேன்!

    ReplyDelete
  3. தருமி ஐயா.. நம் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. உங்களுடன் மதுரையில் இருக்க முடியாவிட்டாலும்.. உங்களுக்கு உறுதுணையாக என் வீட்டிலும் மெழுகுவர்த்தி எரியும்..
    அன்புடன் சீமாச்சு...

    ReplyDelete
  4. https://www.facebook.com/event.php?eid=111977202236300

    ReplyDelete
  5. Nalla thodakam! Madurail irundirudal kandhpaga naanum ungalil oruvaaga irundirupen! Indha theeporiyai patra vaitha nalla ullathirku en nandriyaiyum aatharavaiyum urithakkungal!

    ReplyDelete
  6. //நீங்கள் என்னவென்றால், 50 பேர்தான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.//

    இன்று வாருங்கள் .. 500 ஆக்குவோம்

    ReplyDelete
  7. //என் வீட்டிலும் மெழுகுவர்த்தி எரியும்..//

    நன்றிக்கும் மேல் ...

    மகிழ்ச்சி

    ReplyDelete
  8. திருச்சிக்காரன், நண்டு

    நன்றி

    ReplyDelete
  9. சீனு, தாரிசன்

    நன்றி

    ReplyDelete
  10. நம் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். இத்தனை பெரிய ஊரில் வெறும் 200 பேர் மட்டும்தானா என்றொரு கேள்வியும் வந்தது.//
    சுயநலக்கூட்டம் ஐயா இது. இவர்கள் வாழ்வில் பொதுநலம் கொஞ்சம் கூட கிடையாது. மெத்தப்படித்தவர்கள இருந்தும் என்ன பயன். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தாணுண்டென்போன் சின்னஞ்சிறு கடுகுபோன்ற உள்ளம் கொண்டோன் என்று நான் சிறுவயதில் படித்த பாடல் ஒன்றுதான் நினைவிற்க்கு வருகிறது. அப்படிப்பட்ட கடுகு உள்ளம் கொண்டவர்கள். எவன் செத்த நமக்கென்ன நம்பாடு நமக்கு என்று தன்னைத்தானே குறுக்கிக்கொண்டவர்கள். உங்கள் போரட்டம் வலுவடைய வெற்றிபெற
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஊழலை, கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, ஒழிக்க வேண்டும் என்ற சித்தாந்தம் படி தான் நம் நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கின்றன்.

    ஆனால் அன்னா ஹசாரே முயற்சி “trickle down effect" மூலம் மேல் மட்டத்தில் சரி செய்தால்தான், அது கீழ் மட்டத்தில் தானாக சரியாகும் என்பதாக இருக்கின்றது.

    அதனால் தான் ஜன் லோக் பால் மசோதாவை எவ்வளவு dilute செய்ய முடியுமோ அவ்வளவு செய்யமுயல்கிறார்கள். மேல் மட்டத்தில் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த மசோதாவே தேவை இருந்திருக்காது.

    ஊழலின் பயன்மின்மை, brazeness ஆகியவைதான், இப்பொழுது அன்னாவுக்கு மக்களின் ஆதரவு கிடைக்க செய்துள்ளது. தற்சமயம் மதுரைக்கு அன்னாவின் போராட்ட தாக்கம் மிகவும் அதிசயம். ”அண்ணனின் அடிப்பொடிகள்” இனி வளராமல் இருப்பதற்கு.


    //எங்களிடம் போர்க்குணம் அதிகம். இந்தியப் படை வீரர்களில் நாங்களே அதிகம் என்றார்கள்.//
    ராஜ ராஜ சோழன் தெரியுமா, சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சேர மன்னர்கள், இமயம் இலங்கை கிழக்கு ஆசிய நாடுகள் வென்ற...வரலாறு சர்தார்ஜிக்கு தெரியுமா.

    இப்பொழுது எப்படி இருப்போம் என்பது முக்கியமல்ல வரலாற்றில் எப்படி இருந்தோம் என்று மேடைப் பேச்சில் புல்லரிப்போம்.
    “வரலாறு முக்கியம் அமைச்சரே”

    ReplyDelete
  12. avasiyam kalanthu kolkiren... phone seithirukkalaame... thakaval theriyavillai... nalai santhippoom...

    ReplyDelete
  13. முதலில் உங்கள் எண்ணை எனக்கு அனுப்பிவையுங்க ! 9994622423 !

    ReplyDelete