*
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.
சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்...
*
சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6%
மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்? (சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)
* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)
* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)
* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%; அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?
மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா ஜி.ரா.?
இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான். அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு போங்க)
* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்... *
தெக்கத்திக்காரங்கன்னா தெக்கத்திக்காரங்க, தான் !!!
+2 தேர்வுகளின் முடிவுகளில் டாப் 10 இடத்தில் முதல் ஐந்து இடங்களில் நான்கிடம் தெக்கத்தி மாவட்டங்களுக்குத் தான். அதில் எங்களுக்குப் பெருமை. ஆனால் அதிசயத்தக்கமானதாக எனக்கு அன்றும் இன்றும் இருப்பது முதலிடத்தை பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து வைத்திருப்பதுதான். இந்த ஆச்சரியத்தின் காரணமாக 2006-ம் ஆண்டே ஒரு பதிவிட்டிருந்தேன். மீள் பதிவாக அதே ஆச்சரியத்தோடும், அப்போதிருந்த கேள்விகளோடும் எழுதப்பட்ட பழைய பதிவை மீள்பதிவிடுகிறேன்.
பதிலிருப்போர் பதில் தரலாமே ...
இந்த ஆண்டின் தேர்வு முடிவுகள்
+2 PASS PERCENTAGE
THE TOP 10 DISTRICTS
விருதுநகர் 94.68
தூத்துக்குடி 94.62
ஈரோடு 93.35
மதுரை 93.32
திருநெல்வேலி 93.11
கோவை 91.46
நாமக்கல் 90.97
திருப்பூர் 90.8
கரூர் 90.8
சிவகங்கை 90.58
சென்னை 90.4
..............................................................................................................................................
மீள் பதிவு
THE HINDU தேதி: 23.11.'06
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.
சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்...
*
சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6%
மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்? (சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)
* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)
* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)
* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%; அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?
மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா ஜி.ரா.?
இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான். அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு போங்க)
* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்... *
We are in the middle of the fab four!! Hats of Erode!!!
ReplyDelete1985இல் விருது நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(காமராஜர் பெயரில்). அன்று முதல் தொடர்ந்து
ReplyDelete27 வருடங்களாக முதன்மை இடத்தில் இருப்பினும் கூட மாவட்டம் முழுமைக்கும் ஒரு அரசு கலைக்கல்லூரியோ அரசுமருத்துவக்கல்லூரியோ (ஹோமி சித்தா உட்பட)இல்லை என்ற அவலம் மட்டும் தீரவில்லை. இப்போதும் சரி எப்போதும் சரி யாராவது ஒருவர் மட்டும் மந்திரியாக இருப்பது தொடர்கிறது. ஆறு எம் எல் ஏக்களும் கூடவே இருக்கிறார்கள். விருது நகரில் பிறந்து அகவை 50ஐக்கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உட்பட தேர்தலில் வாக்குகளை அளித்து விரலில் மையிட்டு கொண்டிருக்கிறோம்.தங்களது 2006ஆம் வருடத்திய பதிவுக்கும் தற்போதைய பதிவிற்கும் வணக்கமும் வாழ்த்துகளும்.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.
எனது வலைத்தள முகவரி:
http://sugadevnarayanan.blogspot.com