*
நம்ம லல்லு - ஜப்பான் ஜோக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பீஹார் இன்று இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலமாம். வளர்ச்சி விகிதம் 13.1% இது இந்த ஆண்டு மட்டுமல்ல, சென்ற ஆண்டும் முதல் இடத்தில் இருந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டை எண்களில் வளர்ச்சி. பஞ்சாபைத் தாண்டி விட்டதாம். 6-வது இடம் நமக்கு. நமக்கு அடுத்த இடம் அதிகமாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வரும் குஜராத்!
.................................
அதே பீஹாரில் ... ரன்விர் சேனா தெரிந்திருக்குமே ... பணக்கார, ‘உயர்சாதி’ விவசாயிகளின் ஆட்கொல்லும் படை. இதன் தலைவன் 70 வயது தாண்டிய ப்ரம்மேஷ்வர் சிங். டிசம்பர் 2006-ல் 61 தலித்துகளைக் கொன்றொழித்த இவன் மேல் போட்ட வழக்கில் விடுதலையாகி இந்த ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்கிறான். போயே போய்டான். வழக்கம் போல் அடையாளம் தெரியாத குழு ஒன்று அவனைச் சுட்டொழித்திருக்கிறது.
இப்போது. இவனுக்குத் தேவையான பாதுகாப்பு காவல் துறை கொடுக்கவில்லை இப்போது அங்கே கலகங்கள் ...தீ வைப்புகள்.
................................
ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தெற்காசிய குழந்தைகள் அமெரிக்காவின் spelling bee போட்டியில் வென்று வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையும் வென்றது நம் நாட்டுக் குழந்தைகள். ஆந்திர மாநில ஸ்னிக்தா முதல் பரிசு பெற்றுள்ளார். இரண்டாம் பரிசு பெற்ற ஸ்துதிக்கு இந்தியும், ஒரியாவும் தெரியும் மற்ற மொழிகள். மூன்றாம் பரிசு பெற்ற அர்விந்துக்கு தெலுகு, ஸ்பானிய மொழி தெரியுமாம்.
நல்ல பிள்ளைகள் ... வளரட்டும்.
(spelling bee பற்றிய திரைப்படம் ஒன்று பார்த்தேன். எவ்வளவு கடின முயற்சி எடுக்கிறார்கள். அந்தத் தேர்வுக்குத் தயாராவது பற்றி அந்த படம் நிறைய சொல்லியது.)
.................................
என்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பங்கு மார்க்கட் விவகாரங்கள் எதற்கு? ஒரு காலத்தில் ஒரு சில பங்குகள் வாங்கி, ஹர்ஷத் மேத்தா வந்து ‘உழுதுட்டு’ போய்ட்டார். அந்த பங்குகள் குப்பையாக இருந்தது. இப்போ இதோ இந்த வருடம் 20000 ஆயிரத்தைத் தாண்டும் என்றார்கள். அப்படி சொல்லி நாலைந்து வருஷமாச்சு. இப்போ 16000க்கு தடுமாறுது. எல்லாமே சந்தோஷ செய்திகளாக இருக்க வேண்டாமென இச்செய்தி. :-(
...................................
சந்தோஷம்னா அப்படி ஒரு சந்தோஷம். நம்ம குடியரசுத் தலைவிக்கு அடுத்த மாதத்தோடு பதவிக்காலம் முடியுதாம். வீடு மாத்த ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். அப்பாடி .....!
...................................
மோடி தான் அடுத்த பிரதமர் அப்டின்னு ஒரு கூட்டம் கூடு கட்டுது. அத்வானிக்கு செம கடுப்பு. ஒவ்வொரு தலைவரும் கட்காரியை ஆளுக்கொரு பக்கம் இழுக்கிறார்கள். இன்றைக்கு கமல் சந்தேஷ் அப்டின்னு ஒரு ஆளு மோடிக்கு இப்போ என்ன அவசரம் என்று சைரன் ஊதியிருக்கிறார்.
(பி.ஜே.பி. வேண்டாம். காங்கிரஸ் வேண்டாம். இரண்டும் தனித்தனியாக வர முடியாது. இரண்டுமே குதிரை ஏறித்தான் வரணும். போற போக்கைப் பார்த்தா நம்ம ‘மம்மி’க்குக் கூட சான்ஸ் வரலாமோ. நம்மள கடவுள் தான் காப்பாத்தணும்.)
...................................
மம்மி செஸ் வீரர் ஆனந்துக்குக் இரண்டு கோடி ரூபாய் பரிசளித்துள்ளார்.
ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.
நேற்று புட்டின் அடித்த ஜோக் நன்றாக இருந்தது. ஆனந்த் தான் இளம வயதில் சென்னையில் ரஷ்ய நாடு நடத்தும் வகுப்புகளில் செஸ் படித்ததாகச் சொல்லியுள்ளார். புட்டின், ’அட! எங்க தலையில நாங்களே இழுத்து விட்டுக் கொண்டோமோ’ன்னு சொல்லியிருக்கிறார்.
...................................
‘பத்து வினாடி முத்தம்’ என்று எழுதினார் சுஜாதா. அந்தப் பத்து வினாடியெல்லாம் இப்போ பறந்து போய்க்கிட்டே இருக்கிறது. உசைன் போல்ட் தன் ஓடும் நேரத்தை மீண்டும் மீண்டும் குறைத்து வருகிறார். கடைசியாக நூறு மீட்டருக்கு எடுத்த நேரம்: 9.76 வினாடிகள். அம்மாடி!
ஒலிம்பிக்ஸில் இன்னும் எவ்வளவோ! ஆனாலும் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலில் வரும் இவருக்கும் அடுத்தவருக்கும் எவ்வளவு தொலைவு வித்தியாசம் ... மன்னன்! ..............................
*
தருமி சார்!
ReplyDelete//ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.//
ஆனந்த் பிராமணர் ஆச்சே! யூதர்களின் ஒரு பிரிவுதான் தாங்கள் என்றும் தங்களின் பூர்வீக உறவுகள் இஸ்ரேலியர்கள் என்றும் முன்பு திரு டோண்டு ராகவன் பதிவிட்டதாக ஞாபகம். எனவே பரிசு சேரும் இடம் நோக்கியே சென்றுள்ளது.
சுஜாதாவின் '10 செகண்ட் முத்த'த்தில் தமிழரசியின் குறிக்கோள் பெண்கள் 100மீ தடகளப்போட்டியில் 10 செகண்ட் எட்டுவது. அது இதுவரை எட்டப்படவேயில்லை :)
ReplyDeleteசுருக்கமாக ஆனால் நறுக்கென்று பத்திரிக்கைகள் படிக்காத குறைகளை போக்கியது.
ReplyDeleteரன்வீர் சேனா விஷயம் படிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ReplyDeleteகுடியரசுத் தலைவி? (குடியரசுத் தலைவர்னே சொல்லலாமே?) இது என்ன நல்ல செய்தி? இன்னொருத்தர் வரத்தானே போறார்?
//இன்னொருத்தர் வரத்தானே போறார்?//
ReplyDelete'இது’ போற சந்தோஷம் இப்போ!
வெற்றி பெற்ற விசுவநாதன் ஆனந்த் என்கின்ற இந்திய தமிழருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete