Saturday, October 06, 2012

597. ஒரு மன்னிப்பும் ஒரு வேண்டுகோளும் ...

*

பெறுனர்:
திரு
கனம்
உயர் திரு
ex-மாண்புமிகு
பழைய அமைச்சர் பெருந்தகையே
பழைய மின்சார அமைச்சரே
கழகத்தின் காவல் தூணே

 .............. ஆற்காடு நாராயண வீராசாமி அவர்களே

ஏதோ நாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் ஏதேதோ செய்து விட்டோம்; சொல்லி விட்டோம். உங்கள் மகத்துவம் இப்போது தான் எங்களுக்குத் தெரிகிறது. என்னென்னமோ நடக்குது; எப்படி எப்படியோ நடக்குது.  

எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்


*


அடுத்து ...

இன்னொரு பெறுனர்.

மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்


ஐயா, உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்

தினமும் எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கேட்க நாங்கள் அத்தனை முட்டாள்களா? அதெல்லாம் வேண்டாம்.

ஆனால் இன்னொரு உதவி மட்டும் செய்து விடுங்கள். சென்னைக்காரர்களுக்கும் மின் தட்டுப்பாடு என்றால் என்ன என்று தயவு செய்து சொல்லிக் கொடுத்து விடுங்கள். உங்க ஊரு நத்ததிலேயும் (அங்கெல்லாம் மின்சாரத் தடை இருக்குல்ல??) , அட .. எங்க ஊர் மதுரையிலேயும் எப்படியெல்லாம் மின்சாரத் தடை நடக்கிறது என்பதை சென்னைக்காரர்களுக்கும் செய்து காண்பித்து விடுங்கள் - உங்களுக்கு ரொம்ப புண்ணியமாக இருக்கும்.

கரண்ட் வரக்கூடாது. அப்படியே  வந்தாலும் அது மோசமான voltage drop-உடன் இருக்கணும். எல்லாம் இது மாதிரி சென்னைக்கும் பாத்து பாத்து செய்யுங்க ...

இப்படிக்கு

மின்துறை விலக்குகளால்
விளக்கு இல்லாமல் இருக்கும்,

மின்சாரத்தை எதிர்பார்த்து
ஈசி சேரில் படுத்தே கிடக்கும் ஒரு மதுரைப் பரதேசி



*
மதுரைக்கு வந்த (மின்சார) சோதனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள் ....

*

 
*

27 comments:

  1. என்னங்க, இந்த கரன்ட் கட் இருக்கறதால எவ்வளவு கம்மியா கரன்ட் பில் வருது பாத்தீங்களா?

    நல்லது நடந்தா உங்க கண்ணுல படாதே?

    ReplyDelete
  2. சென்னையில் மின் தடை இல்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?
    ஆட்சி மாறியவுடன் தமிழக பிற நகரங்களிபோல சென்னையிலும் மின் தடை அமலில் வந்து விட்டது.
    தாத்தா இருந்த வரைக்கும் சென்னையில் மின்தடை இல்லாமல் இருந்ததே உண்மை.
    பாட்டி வந்த பின்னர் அதுவும் வந்துவிட்டது.

    ReplyDelete
  3. ரெண்டாவது கடிதம் நத்தம் சாருக்கு அனுப்பி என்ன பிரயோஜனம் சார்? அம்மா தானே எல்லாமே?

    ReplyDelete
  4. Manickam sattanathan,

    //சென்னையிலும் மின் தடை அமலில் வந்து விட்டது. //

    அட போங்க சார்! தினமும் ஒரு மணி நேரம் சென்னையில் தடை.

    நேற்று மாலையிலிருந்து எங்க ஊரில் நடக்கும் மின் தடை ரொம்பவே டூ மச். அந்தக் கவலையில் எழுதியது. ராத்திரி பூராவும் நல்லா தூங்குற என்னாலேயே தூங்க முடியலை. ஒரு மணி நேரம் கரண்ட். அடுத்த இரண்டு அல்லது மூன்று மணிக்கு கிடையாது.
    ரொம்ப சோகம் ....

    ReplyDelete
  5. என்ன சார்,மின்தடையினால் தூக்கம் இல்லையா?வீராசாமி,நாராயணசாமியாகி விட்டார்.

    ReplyDelete
  6. நேற்று மாலையிலிருந்து எங்க ஊரில் நடக்கும் மின் தடை ரொம்பவே டூ மச்//

    எங்கள் ஊரிலும் அப்படித்தான்.

    ReplyDelete
  7. பெயருக்குத்தான் ஒருமணி நேர மின்தடை , அதோடு அல்லாமல் முன்னறிவிப்பு இன்றி ராத்திரி பன்னிரண்டு மணிக்கு போய் விடியல் காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு திருப்ப வரும் .இதெல்லாம் கணிக்கில் சேராத ஒன்று. இப்போது சந்தோஷமா ? :))

    ReplyDelete
  8. சட்டநாதன்,
    உங்க சோகம் உங்களுக்கு. 12 - 15 மணி நேர தடை எங்களுக்கு. அதுவும் 9 மணிக்கு கரண்ட் வந்திருச்சின்னு பொட்டி முன்னால் உக்காந்ததும் பத்து நிமிஷத்தில போய்டும். அடுத்து 20 நிமிஷத்தில் வரும் .. போகும் .. என்னென்ன சித்து விளையாட்டு எங்களுக்கு ...

    என்ன நாடோ ... என்ன சட்டமோ !!

    :-)

    ReplyDelete
  9. தருமி,

    இப்போ தான் தமிழக முதல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன்; கரண்ட் உபயோகப் படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாசம் குறைந்த பட்சம் ரூபாய் 500 கட்டவேண்டும்...

    இதற்கு ஒரு பெயர் கொடுக்கணுமே...சரி!
    Line Maintenance Charge...
    அப்புறம் கரண்டுக்கு தனி சார்ஜ்

    ReplyDelete
  10. தருமிய்யா,

    இருக்கிற மரமெல்லாம் வெட்டியாச்சு,மலையெல்லாம் பேத்தாச்சு,ஊரெல்லாம் காரு,தொழிற்சாலை..புவி வெப்பமாகி, துருவ பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து... தமிழ்நாடே கடல் கொண்டு போயிடும்னு விஞ்சானிகள் சொன்னத யாரு கேட்டாங்களோ இல்லையோ ஆத்தா கேட்டாங்க

    , ஆண்டுக்கு 5 நிமிசம் லைட் ஆஃப் செய்தாலே புவி வெப்பமாதல் குறையுதுன்னு சொல்லுறாங்க,அப்போ அஞ்சு நிமிசம் மட்டும் கரண்ட் விட்டுட்டு மிச்ச நேரம் நிறுத்திட்டா எவ்ளோ புவி வெப்பமாதல் குறையும்னு தீர்க்க தரிசனத்தோட சிந்தித்து திட்டம் தீட்டும் அருள்மிகு ஆத்தாவை புரிந்துகொண்டு தமிழர்களாகிய நாம் ஒத்துழைப்பு தர வேண்டாமா?

    ReplyDelete
  11. நம்பள்கி

    இந்த Maintenance என்ற வார்த்தையை நம்ம TNEB பயன்படுத்தும் அழகே தனி. நாள் முழுவதும் பவர் கட். ஆனா அதுக்குப் பெயர்: Maintenance.

    நல்லா எடுத்துக் கொடுக்குறீங்களே!

    ReplyDelete
  12. என்னங்க இப்படி சொல்லீட்டிங்க. எங்களுக்காகவா செய்றாங்க...... அடுத்தமுறை ஆட்சிக்கு வரனுமுன்னா சென்னையை சுற்றி இருக்கும் 30 சீட் மைனாரிட்டி ஆட்சி அமைக்க உதவும் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்

    அப்புறம் என் மீது உங்களுக்கு என்ன கோபம். நான் கரண்ட் இல்லாம தவிக்கிறது நல்லதா?

    ReplyDelete
  13. I underStand your pain, however, I can't stop laughing for the tone you used for it... :)))

    ReplyDelete
  14. // நான் கரண்ட் இல்லாம தவிக்கிறது நல்லதா? //

    ஒண்ணுமில்ல .. யாம் பெற்ற இன்பம் ...

    ReplyDelete
  15. மதுரைக்கு வந்த (மின்சார) சோதனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள் ....

    ReplyDelete
  16. பவர் இல்லாமலும் வாழ்க்கை பழக ஆரம்பிச்சிருச்சு...:-( நேத்து தான் வீட்டு பக்கம் நாங்கலாம் பேசிகிட்டோம் ..".சட்னி அரைக்க பவர் இல்லை...காஸ் விலை கூடிருச்சு....பேசாமல் இயற்கை உணவு தான் பெஸ்ட் "னு...
    காய்கறி சாலட்,சுக்கா ரொட்டி னு மெனு தான் இனி சரியா வரும்போல...:-) என்னவோ மோடி சார்...சரவணன் மீனாட்சி பார்க்க முடியாத கவலையில் நீங்க புலம்பின புலம்பல் மாதிரி தான் தோணுது...:-) நெசமா?;-)

    ReplyDelete
  17. @கக்கு மாணிக்ஸ் அண்ணா எங்கூரு(மதுரை) மின்தடை நேரம் அட்டவணை:]
    5a.m to 10a.m
    12 to 2 pm
    4 to 6pm
    7 to 8 pm
    9 to 10pm
    11 to 12pm
    1 to 3 am
    கூட்டி கழிச்சு பார்த்துக்கோங்க...சென்னையவும்,எங்க ஊரையும்...:-))

    ReplyDelete
  18. //மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்// தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு மின் துறை அமைச்சர் யாரென்று தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    Btw , இதெல்லாம் ஒரு பிளாக் ..இன்னும் யாரும் கருணாநிதியை திட்ட ஆரம்பிக்கல்ல

    ReplyDelete
  19. ஆனந்தி,

    இதையெல்லாம் விட ஒரு அரை மணி நேரத்திற்குள் 3 தடவை வந்து வந்து போகுமே கரண்டுன்னு ஒண்ணு ... அதையெல்லாம் அனுபவிச்சி தெரிஞ்சுக்கணும். .. அதுக்கும் கொடுத்து வைக்கணுமே ...

    ReplyDelete
  20. //என்னவோ மோடி சார்...சரவணன் மீனாட்சி பார்க்க முடியாத கவலையில்//

    அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. பவர் போனா போகுது. பவர் வந்ததும் யூட்யூப்ல 7C கட்டாயம் பாத்ருவோம்ல .. டைம் கிடச்சா அப்டியே ச.மீனாட்சி பாத்துர்ரது தான்!!

    ReplyDelete
  21. //சென்னைக்காரர்களுக்கும் செய்து காண்பித்து விடுங்கள்//
    அய்யா! சென்னைகாரர்கள் மீது ஏன் உங்களுக்கு அவ்வளவு பொறாமை!!!.

    ReplyDelete
  22. வேதனையைச் சொல்கிறீர்கள், சிரிக்காமல் இருக்க முடியவில்லை!
    மதுரைக்கு வந்த சோதனையா?, இங்கு கோவையில் மட்டும் என்ன வாழுகிறதாம்!

    ReplyDelete
  23. வவ்ஸ்,
    //அஞ்சு நிமிசம் மட்டும் கரண்ட் விட்டுட்டு மிச்ச நேரம் நிறுத்திட்டா எவ்ளோ புவி வெப்பமாதல் குறையும்னு தீர்க்க தரிசனத்தோட சிந்தித்து ...//

    ஆஹா .. எம்புட்டு நல்ல ரோசனை! ஆனா கேள்விப்பட்டது என்னன்னா. 10 + 10 சிஸ்டம் வரப் போகுதாமுல்ல. அதாவது பகலில் 10 மணி நேரம் + இரவில் 10 மணி நேரம் மட்டும் பவர் கட் வருதாமுல்ல.... புவி வெப்பமாகுமா என்ன?

    ReplyDelete
  24. நாளும் பொழுதாச்சு
    முழுசாத் தூங்கி
    உறக்கம் போயாச்சு
    விழியை நீங்கி \\ வருஷம் பதினாறு

    பாடல்வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

    மின்சாரத்தடையால் இப்பொழுது மின்னெரிச்சல் என்ற புதுநோய் ஒன்றும் பரவி வருகிறது.


    ReplyDelete
  25. தாங்கள் திருவாய் மலர்ந்த நேரம்,கரண்ட் கட் இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு விட்டது.திருப்தியா அண்ணாரே?
    கார்த்திக் அம்மா

    ReplyDelete
  26. //கரண்ட் கட் இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு விட்டது.திருப்தியா அண்ணாரே?//

    திருப்தி தாங்க ... ஏன்னா, சென்னைக்காரங்க பயங்கர போராட்டக்காரங்க .. அதுனாலதான் அங்கேயும் கரண்ட் கட் அப்டின்னா நீங்கல்லாம் பொங்கியெழுந்து ஏதாவது பண்ணிடுவீங்களேன்னு தான் அப்படி ஆசைப்பட்டேன்.

    ReplyDelete