Friday, October 12, 2012

596. ’பரதேசி’ பாலா .. ஒரு பெரிய பரதேசி.








*



வியாழக்கிழமை காலையில் மேசை மேல் கிடந்த தினசரிகளின் நடுவே இருந்து ஒரு முகம் என்னை முறைத்தது. ஆ.வி.யின் அட்டைப் படம் ... பரதேசி படத்தின் கதாநாயகனின் முகம் .. அதர்வா ... நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது அப்படம். அதர்வாவைக் காணோம். ஒரு பாவப்பட்ட கோவக்காரனின் வெறித்த கண்கள் நம்மை ஊடுறுவுவது போல் இருந்தன.




உள்ளே கட்டுரையில் பாலா: “பிழைக்க வழியில்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசி தான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான்!”

எங்கும் எத்தனை எத்தனையோ பரதேசிகள். எல்லாப் பரதேசிகளும் நன்கு ‘பிழைத்து’ விடவில்லை. பாலா சென்னைக்கு வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி வந்த பரதேசி இன்று மலைக்க வைக்க உயர்ந்து நிற்கிறார்.

வாழ்க ... வளர்க ....

ஆ.வி. கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காட்டின. பாலா காண்பிப்பது எல்லாமே ஒரு தனி உலகாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அந்த எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சில மனிதர்கள் ... அவர்கள் உலகம் என்றே அவரின் கதைகள் பயணிக்கின்றன. கதை மாந்தர்களை நிஜமான மனிதர்களை மாற்றி நமக்குத் தருகிறார். அவர்களின் அந்த உலகமும் - அந்த உலகம் மட்டுமே - நம்மைச் சுற்றி வருகின்றன. An embossed world!

அதர்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளாரேன்னு நான் கூட நினைத்தேன். ஆனால் பாலா, ‘அதர்வாவைக் கவனிச்சிப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும் போதும் அவன் கண்ணுல ஒரு சோகம் தெரியும்’ என்கிறார். என்னமோ பார்க்கிறார் .. எதையெதையோ நடிகர்களிடமிருந்து கொண்டு வருகிறார். நல்ல magician ... நல்ல creator .... ஒவ்வொரு நடிகனையும் எப்படி இவ்வாறு மாற்றி போடுகிறார்.

வெறும் ஒரு அட்டைப் படமே இந்த அளவிற்கு என்னை ‘உசுப்பேற்றி விட்டதே’ என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் வரும் மற்ற stills எல்லாமே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு ஆனந்த விகடனின் அட்டைப் படம் நல்ல ஒரு திறப்பு .. a real good bang!




கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காண்பிக்கின்றன. படங்களில் உள்ள முகங்களில் அதர்வா முகம் பட்டுமே பார்த்த முகமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஸ்ரீவித்யா மாதிரி முகம் தெரிந்தது. இன்னொரு பெண் யாரென்று தெரியவில்லை. இப்போதைக்குப் பிடித்த ஹீரோயின் - அதாவது இந்தப் படத்தின் ஹீரோயின் - அனுஷ்கா என்கிறார். படங்களில் தெரிந்த அந்த முகத்தைத் தேடிப்பார்த்தேன். அடையாளம் தெரியவில்லை. ஒரு வேளை இது வேறு ஒரு அனுஷ்காவோ??



முதல் நாள் .. முதல் ஷோ பார்க்கணும் .. பார்த்தே ஆகணும் !!

*

பின் குறிப்பு:
ஆ.வி.யில் அனுஷ்கா என்று கூறியுள்ளனர். அது தனுஷ்கா. தன்ஷிகா. அரவான் பட நாயகி.









 *

27 comments:

  1. தலைவிதி யாரை விட்டது

    ReplyDelete
  2. P.K.Venugopalan

    உங்களுக்கு விதி ..
    எனக்கு மதி !

    ReplyDelete
  3. இன்னுமா அவரை நம்பிகிட்டு இருக்கீங்க.
    ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  4. தருமிய்யா,

    அது எப்படி உங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியுது?

    எனக்கு அப்படி ஒன்னும் தெரியக்காணோம்... வாசன் ஐ கேர்ல இது போல பார்க்க என் கண்ணுக்கு டிரீட்மெண்ட் கொடுக்கணுமோ?

    பாலா படம் வருமுன் என்னமோ இருக்குன்னு எதிர்ப்பார்க்க வைத்துவிட்டு ...அப்புறம் ஒரு டிரேட்மார்க் பாலா படம்னு சொல்ல வச்சுடுவார் எதுக்கும் உஷாரா இருங்கோ :-))

    ReplyDelete
  5. ஹலோ சார் எப்டி இருக்கீங்க... :-)

    பதிவுகளே எழுதாம போனப்புறம்..... எழுதுவோமேனு ரீசெண்டா ஒரு ரிவ்யூ போஸ்ட் போட்டேன்....
    அடுத்த நாள் சொந்த வேலையா மதுரைக்கு வந்தேன் நொந்துபோயிட்டேன் பவர்கட்டுல...
    உடனே ஒரு பதிவு எழுதினேன்... போஸ்ட் பண்ணுறதுக்கு முன்னாடி யதார்த்தமா என் பதிவுல இருக்குற உங்க பதிவுக்கான லிங்க்-கில் பவர் கட் பத்தின உங்க பதிவு.... படிச்சுப்பாத்தேன்..... இனிமே என் பதிவு தேவையில்லனு விட்டுட்டேன்..... அதேதான் இப்பவும்...... என்னையும் அதர்வாவின் கண்கள் வலுவாகத் தாக்கின.... இத்தனைக்கும் ஆன்லைன்ல விகடன் அட்டைப்படம் மட்டும்தான் என்னால பார்க்கமுடிஞ்சது..... இன்னும் நான் பேட்டியைப் படிக்கல...... ஒரு போஸ்ட் போடலாம்னு நினைச்சிருந்தேன்.... இப்போ உங்க பதிவைப் பாத்துட்டேன்... :))

    ஆச்சர்யம்... அதைவிட சந்தோஷம்!

    வெல்.... பாலா பொறுத்தவரைக்கும் எனக்கு ஒண்ணுதான் புரியல.... என்னுடைய பார்வையில் பாலா அப்டிங்குற க்ரியேட்டர் இன்னும் தன் நிலையிலிருந்து சறுக்கவேயில்ல ஆனாலும் கோலிவுட்டும் ரசிகர்களும் ஏன் அவரைக் கிட்டத்தட்ட கைவுட்டுட்டாங்கன்னுதான் புரியவேயில்ல எனக்கு!

    அன்புடன்,
    பிரபு

    ReplyDelete
  6. it is not a direct comment passed by me over on your article but..i feel similar situation here

    http://www.vinavu.com/2011/04/01/modern-art-cia/
    அது ஒரு வண்ணக் குழப்பம். சரியாகச் சொல்வதானால், யாரோ ஒரு மார்வாடி பான்பராக்கை மென்று வெள்ளைத் துணியில் காறித் துப்பியது போல் இருந்தது. நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்த பின்னரும் மார்வாடியின் முகத்தை என் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை. அரங்கத்திலோ குண்டூசியைப் போட்டாலும் குண்டு போட்டதைப் போன்ற சப்தம் எழுமளவுக்கு நிசப்தம். நான் மெல்ல எச்சிலைக் கூட்டி விழுங்கியபடியே, பக்கத்தில் நின்றவரிடம் “இது எதைப் பற்றிய ஓவியம்?” என்று கேட்டேன்.

    மேலிருந்து கீழ் வரை என்னை ஒரு பார்வை பார்த்தவர், முகத்தைச் சுளித்துக் கொண்டே வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அது கேட்கக் கூடாத கேள்வி என்று அப்போது எனக்குப் புரியவில்லை. கேட்கக்கூடாதவரிடம் கேட்டுவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு, அந்தக் கண்காட்சியின் பொறுப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டேன்.

    அவரோ ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “தனது அர்த்தத்தைத் தானே தீர்மானிக்காமல் பார்க்கும் கண்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இந்த ஓவியங்கள் வழங்குகின்றன. ஒரு ஓவியம் எவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த ஓவியத்துக்கே உரியது. தனக்கான மொழியை அது தானே தீர்மானித்துக் கொள்ளும்” என்றார். “அதே நேரம் ஓவியத்தைப் பார்க்கிறவரின் உரிமையிலும் அது தலையிடாது. பார்வையாளரின் உள்மன ஒளியில் இந்த ஓவியம் ஏற்படுத்தும் பிம்பங்கள் உண்டாக்கும் அர்த்தங்ளை அவரவர் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளலாம் என்றும் இவை ஒரு பயன்பாட்டையோ அர்த்தத்தையோ முன்வைத்து வரையப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவியரின் மேல் திணிக்கும் சர்வாதிகாரமாகும்” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார்.
    அன்று அவர் வாயிலிருந்து வழிந்தவையென்னவோ ’தமிழ்’ வார்த்தைகள் தான்; ஆனால் எனக்கோ பண்டைய அராமிக் பாஷையில் யாரோ என்னோடு பேசியது போன்றதொரு உணர்வு எற்பட்டது. சொற்களால் அவர் தீட்டிய சித்திரமும் கிட்டத்தட்ட அந்த பான்பராக் ஓவியத்தையே ஒத்திருந்ததால், மெதுவாக அந்த அரங்கிலிருந்து நழுவிவிட்டேன்."

    ReplyDelete
  7. பிரபு,

    /என்னையும் அதர்வாவின் கண்கள் வலுவாகத் தாக்கின.... //

    என்னமோ போ! ஒரு C.I.A.-ன் விளையாட்டுதான் இது என்கிறார்கள் இங்கு வந்து பின்னூட்டம் போட்ட வேணுகோபாலன், வவ்வால், எதிகலிஸ்ட் & சுந்தர்.

    ஆனால் அதர்வாவின் அந்தப் படத்தை தினசரிகளுக்கு நடுவில் மேசையில் பார்த்த அனுபவம் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
  8. பிரபு,
    என்னப்பா இது ... மதுரையில் வர்ர பவர்கட் மாதிரி நினச்சதை எழுதாம போய்டுற ...! நீ நினச்சதை எழுதிடு.

    அடிமேல் அடி அடிச்சாதான் நல்லது.

    அதர்வா... பாலா பேட்டி படிச்ச பிறகு நினச்சது ... எல்லாம் எழுது. எதிர்பார்க்கிறேன்.....

    ReplyDelete
  9. ஐயய்யோ ! பாலா என்றாலே கிலி தான் எனக்கு, எதுக்கும் பொறுமையாக காத்திருந்து ஆழமறிந்து காலை விடுவோம்,

    ReplyDelete
  10. பாலா, தலைகுனிந்தே நடக்கிறார், அதான் கீழ் மட்ட மக்களின் படமா வருது. கவனிச்சீங்களா, அவர் சொன்ன கதை விசயங்கள் :)

    ReplyDelete
  11. அதர்வா'விற்கு உண்மையிலேயே பரதேசி நல்ல பேரைத் தரும். படங்களைப் பார்க்கும்போதும், பாலாவின் பேட்டியைப் படித்தபோதும் நானும் கட்டாயம் முதலில் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.
    தன் படங்களுக்கு கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை சொன்னதில் பாலாவின் நேர்மை பிடித்திருந்தது.
    நாஞ்சில்நாடன் வசனம் எனும்போது இன்னும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.
    பாலா தனக்கு பிடித்ததாய் சொன்னது அனுஷ்காதான். அரவான் நாயகி தன்ஷிகாவிற்கும் இப்படம் நல்ல பெயரைத் தரும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  12. //ஆ.வி.யில் அனுஷ்கா என்று கூறியுள்ளனர். அது தனுஷ்கா. அரவான் பட நாயகி.//

    அனுஷ்காவும் இல்ல தனுஷ்காவும் இல்ல அது தன்ஷிகா.. ஹய்யோ ஹய்யோ வயசானாலே அப்பிடித்தான் டோண்ட் வொரி :-)

    ReplyDelete
  13. Riyas

    //ஹய்யோ ஹய்யோ வயசானாலே அப்பிடித்தான் //

    யாருக்கு ...?

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. பிரபு,

    // ஆனாலும் கோலிவுட்டும் ரசிகர்களும் ஏன் அவரைக் கிட்டத்தட்ட கைவுட்டுட்டாங்கன்னுதான் புரியவேயில்ல எனக்கு!//

    கைவுடலை’ப்பா! நானும் அப்படித்தான் நினச்சேன். ஆனால் இந்தப் பதிவு போட்டதும் எப்படி இம்புட்டு ஆளுக இத வாசிச்சாங்கன்னு பார்த்ததும் ரொம்பவே அசந்துட்டேன். முதல் ரெண்டு மணி நேரத்தில் 200 பேர். இந்த நிமிடம் வரைக்கும் - 24 மணி நேரம் ஆகலை - 1200 பேரு தாண்டியாச்சி. அப்டின்னா ...

    பாலான்னு சொன்னதும் நிஜமாவே அதிருதுல்ல ...!

    சும்மா ஏமாந்தது போல் காமிச்சிக்கிட்டு, உள்ளே காத்துக்கிட்டு இருக்குதுக புள்ளைக ...

    ReplyDelete
  16. அதை விட பரவை முனியம்மா உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று பதிவு போட்டால் இதைவிட கூட்டம் வரும்.

    பாலா மொக்கை படங்களை எடுப்பது பிரச்சினை அல்ல. (யார்தான் மொக்கை படம் எடுக்கவில்லை) ஆனால் அதை உலக தரமான திரைப்படம் என்ற வகையில் பூதாகரமாக பாலாவும், நீங்களும், பிரபு போன்றவர்களும் உருவகிப்பதுதான் பிரச்சினையை உருவாக்குகிறது.

    நாய் வாலை நிமிர்ந்தாலும் பாலா திருந்தாது.

    ReplyDelete
  17. ஆழமான & கன்ஃப்லிக்டான மனித உணர்வுகளை/குணங்களை வெளிக்கொண்டுவந்தும், அதை திரைக்கதை முழுக்க வியாப்பித்திருக்கும்படி செய்வதில் தவறுகிறாரோ ...என கடைசி இரண்டு படங்கள் சொல்லவைக்கிறது.

    சில இயக்குனர்களிடம், அதிக எதிர்ப்பார்ப்போடு அணுகுவதால், இணையத்தில் மக்கள் மிக மோசமான திரைவிமரசனர்களை வைப்பது, ஆயாசத்தை தருகிறது.

    ReplyDelete
  18. Ethicalist E,

    //அதை விட பரவை முனியம்மா உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று பதிவு போட்டால் இதைவிட கூட்டம் வரும்.//

    ஓ! அப்டியா? எனக்கு அந்த அனுபவம் இல்லை.

    அனுபவித்தவர்கள் நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  19. // பாலா ... உலக தரமான திரைப்படம் என்ற வகையில் பூதாகரமாக பாலாவும், நீங்களும், பிரபு போன்றவர்களும் உருவகிப்பதுதான் பிரச்சினையை உருவாக்குகிறது.//

    Woody Allen, மணி, Coppola, ராம நாராயணன்,
    Tarantino, பேரரசு, Clint Eastwood, Polanski, Cameron ... இவர்களில் யார் உங்களுக்குப் பிடிக்குமோ .. எனக்குத் தெரியாது.

    பாலா என்னைப் பொறுத்தவரை ஒரு unique director. எனக்கு நன்கு பிடிக்கும்.

    ஆனால் அது இவ்வளவு பெரிய தவறு என்று நீங்கள் நினைப்பது யார் தவறு என்று தெரியவில்லை!

    உங்களுக்குப் பிடித்த இயக்குனர் படங்களை மட்டும் பாருங்கள் ... ரசியுங்கள். அவர்கள் ’வால்’ மட்டுமாவது உங்களுக்குப் பிடித்தால் நல்லது தானே!

    ReplyDelete
  20. தருமிய்யா,

    // ரொம்பவே அசந்துட்டேன். முதல் ரெண்டு மணி நேரத்தில் 200 பேர். இந்த நிமிடம் வரைக்கும் - 24 மணி நேரம் ஆகலை - 1200 பேரு தாண்டியாச்சி. அப்டின்னா ...//

    நான் எல்லாம் வழக்கமா உங்க கடைக்கு வர்ர ஆளு தானே, திடீர்னு பெருகின கூட்டம் எப்படின்னு இன்னுமா தெரியலை... சினிமா சம்பந்தமா எத எழுதினாலும் ஓடி வரும் கூட்டம் தான் பதிவுல அதிகம். அதான் மீட்டர் ஓடுது.

    காதக்கொண்டாங்க ஒரு ரகசியம் சொல்லுறேன்...அசினு,தீபிகானு பதிவுக்கு சம்பந்தமே இல்லாம நான் படம் போட்டாலும் இப்படித்தான்யா கூட்டம் கூடுது :-))

    இந்தனைக்கும் நான் திரட்டில இணைப்பதில்லை, ஆனாலும் பாருங்க ஒரு 500-600 பேரு படிச்சிடுறாங்க...ஹி ஹீ எல்லாம் அழகியல் உணர்வுள்ளவர்கள் போல :-))
    ----------

    சி.ஐ.ஏ னு என்னமோ சொல்லி இருக்கிங்க, பால படம்னு ஒரு டெம்ப்ளேட்டில் இருப்பதை தானே சொல்லி இருக்கேன், நான் என்ன பாலா படம் பார்க்காமலா போயிடப்போறேன், போகும் போது இருக்கும் உற்சாகம் படம் பார்த்த பின் புஸ்ஸுனு போயிடுது , எல்லாத்துக்கும் காரணம் அவர் மேல் மக்கள் வைக்கும் எதிர்ப்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யாதது தானே காரணம்.

    ReplyDelete
  21. சீரியலும் பார்க்கிறீங்க!பாலாவையும் ரசிக்கிறீங்க!விசித்திரமான ரசனைதான்:)

    ReplyDelete
  22. ஸாரி சார்.. இப்போதான் கமெண்ட்ஸ் பாக்குறேன்.... நிச்சியமா போஸ்ட் பண்ணுறேன்... :)

    //சும்மா ஏமாந்தது போல் காமிச்சிக்கிட்டு, உள்ளே காத்துக்கிட்டு இருக்குதுக புள்ளைக ..//

    இது ரொம்ப நிஜம் சார் :-)


    @Ethicalist E

    //பாலா மொக்கை படங்களை எடுப்பது பிரச்சினை அல்ல. (யார்தான் மொக்கை படம் எடுக்கவில்லை) ஆனால் அதை உலக தரமான திரைப்படம் என்ற வகையில் பூதாகரமாக பாலாவும், நீங்களும், பிரபு போன்றவர்களும் உருவகிப்பதுதான் பிரச்சினையை உருவாக்குகிறது.

    நாய் வாலை நிமிர்ந்தாலும் பாலா திருந்தாது.//

    என்ன மாதிரி பிரச்னையை உருவாக்குதுன்னு சொன்னீங்கன்னா என்போன்றவர்கள் திருந்த முயற்சிப்போம்.....
    ஏன்னா நாங்கபாட்டுக்கு பாலா படத்தை ரசிக்கிறதுனால நாட்டுல பெட்ரோல் விலையோ அல்லது மின்வெட்டோ இன்னும் அதிகமாகிடக்கூடாது பாருங்க!

    நாய் வாலை ஏன் நிமிர்த்தனும்..... பாலா ஏன் திருந்தணும்.... ரொம்ப முயற்சி பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. பிடிக்கலைன்னா பாக்காம போயிட்டே இருக்கலாமே!

    ReplyDelete
  23. "நாய் வாலை ஏன் நிமிர்த்தனும்..... பாலா ஏன் திருந்தணும்.... ரொம்ப முயற்சி பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. பிடிக்கலைன்னா பாக்காம போயிட்டே இருக்கலாமே!"

    முட்டாள் தனமான வாதம். ரஜனிக்கு பால் அபிசேகம், பியர் அபிசேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. பொது மேடைக்கு வந்த பிறகு எதுவும் விமர்சனத்திற்க்கு அப்பாட்பட்டதில்லை.
    பாலா தனது படத்துக்கு கதை இந்த மாதிரிதான் இருக்கும் விரும்பினவங்கள் வரலாம் விருப்பமிலாதவங்க வர வேண்டாம் என்றா விளம்பரம் செய்யிறார்.
    எல்லோரும் வாங்க தனது சிறந்த வித்தியாசமான முயற்சிக்கு ஆதரவு தாங்க என்றுதான் விளம்பரம் செய்யுறார்.

    பிரபு அதோடை உங்களுடைய மதவாத இணைய தளத்தையும் பார்த்தேன். (அதன் கருத்துகளை பார்த்து உங்களையும் அறிந்து கொண்டேன் வாழ்க வளர்க உங்கள் சேவை. கத்தியை ஓங்கி குத்தினாலும் மெதுவாக குத்தினாலும் குத்து குத்துதான்.)

    ReplyDelete
  24. "என்ன மாதிரி பிரச்னையை உருவாக்குதுன்னு சொன்னீங்கன்னா என்போன்றவர்கள் திருந்த முயற்சிப்போம்....."

    ஏன் பாலாவுக்கு நீங்க என்ன குரு நாதரா. நீங்க சொன்னால் அவர் கேக்கிறதுக்கு.

    முதலில் உங்களுக்கு மதத்தை பாதுகாக்கும் பணி மலை போல இருக்கும். அதை போய் கவனியுங்க. இல்லாதுவிட்டால் எல்லோரும் மதம் மாறி போய் விடுவாங்க. உடனே போங்க

    ReplyDelete
  25. "பாலா என்னைப் பொறுத்தவரை ஒரு unique director. எனக்கு நன்கு பிடிக்கும். "

    ராமராஜனும் unique டைரக்டர் தான். அவரை மாதிரி உலகத்திலை எவனும் படம் எடுத்ததில்லை.

    ReplyDelete
  26. "ஏன்னா நாங்கபாட்டுக்கு பாலா படத்தை ரசிக்கிறதுனால நாட்டுல பெட்ரோல் விலையோ அல்லது மின்வெட்டோ இன்னும் அதிகமாகிடக்கூடாது பாருங்க!"

    நீங்க மட்டும் ரசிக்கிரதாலை யாருக்கும் பிரச்சினை அல்ல. ஆனா தமிழன் என்றால் பாலா படம் பார்க்கணும் இல்லாது விட்டால் அவன் தமிழனே இல்லை இனத்துரோகி என்று பிரச்சாரம் (உங்களை மாதிரி ஆட்கள் தான்) செய்வது தான் பிரச்சினை. இது போதாது என்று பாலா வேறை விஜய் டிவி எல்லாம் வந்து தமிழ் சினிமாவை உலக அளவிற்க்கு கொண்டு செல்ல எடுத்த படம் என்றும் அதை தமிழ் ரசிகர் எல்லோரும் வந்து பார்த்து தமிழ் சினிமாவை வாழவைக்க வேண்டும் என்று கை எடுத்து கும்புடுவார்.

    இதையெல்லாம் நம்பி ஏதோ படம் பார்க்க போனால் பப்படம் தான் இருக்குது.

    என்ன செய்ய? திட்டத்தான் தோன்றும்.


    ReplyDelete