Sunday, November 18, 2012

606. அஞ்சலி - அப்பாடா! - இதில் எது சரி?




*




பால் தாக்ரே இறந்ததும் பத்தி பத்தியாக செய்தித் தாளில் பல கட்டுரைகள்; பதிவு ஒன்றும் பார்த்தேன். அவர் படம் போட்டு கீழே ‘அஞ்சலி’ என்று மட்டும் போட்டிருந்தது. கட்டுரைகளை வாசித்ததும் என் மனதில் ஒரு கேள்வி .. அவர் படத்திற்குக் கீழே அஞசலி - அப்பாடா! - இதில் எது போட்டால் சரி?

இந்து தினசரியில் வந்த கட்டுரையில் சில பகுதிகள்:

*  அவர் கூறும் ஒவ்வொரு இனவாத சொல்லும் மும்பையில் பெரும் போராட்டங்களையும் தொல்லைகளையும் தரக் கூடியதாக இருந்தது.

*  ஆரம்பத்தில் இவர் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருந்து. மும்பையில் மிகவும் உறுதியாக இருந்த தொழில் சங்கங்களுக்கு உலை வைத்தார்.

*  எளிதாக ஆரம்பித்த அவரது கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பின்னாளில் உருவெடுத்தது.

*  வட இந்தியர்கள், அதைவிட தென்னிந்தியருக்கு எதிராகவே அவரது சிவ சேனாவின் (சிவாஜி சேனையின்) கோபம் வளர்ந்தது.

*  ஹிட்லரை இவருக்கு மிகவும் பிடிக்குமாம். அவரை ஒரு பெரிய கலைஞன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*  .C.P.I. & C.P.I. (M).கட்சிகளின் தலைவர்கள் பலர் சிவ சேனாவினால் தாக்கப்பட்டார்கள்.

*   இதன் உச்சமாக ஜூன்6, 1970ம் ஆண்டு சிவ சேனையின் குண்டர்களால் C.P.I. எம்.எல்.ஏ. - கிருஷ்ண தேசாய் என்பவர் கொல்லப்பட்டார். இதுவே சுதந்திரத்திற்குப் பின் மும்பையில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலையாகும். இதில் காங். கட்சியின் வசந்தரோ நாயக் என்பவரையும், பால் தாக்ரேயையும் இக்கொலையில் தொடர்புபடுத்தி எதிர்க் கட்சிகள் போராடின. 

cultural police வேலையை மிக ‘ஒழுங்காக’ சிவ சேனை செய்து வந்தது. வால்ன்டைன் நாள் அன்று அவர்கள் ஆடிய ஆட்டங்கள் அனைவரும் அறிந்ததே.

*  பாக். அறிஞர்கள், கலைஞர்கள் சிவ சேனையினால் மிகவும் அவமதிக்கப்பட்டனர்; எதிர்க்கப் பட்டனர்.

*  மணிரத்தினத்தின் பம்பாய் படம் பட்ட அவஸ்தை எல்லோருக்கும் தெரிந்த இன்னொரு விஷயம்.

மண்டல் கமிஷனை மிகவும் ஆக்ரோஷத்தோடு எதிர்த்தார்.

*  1995 அசெம்ப்ளி தேர்தல்களில் இந்துத்த்வா கொள்கைகளோடு வெற்றி பெற்றார்.

*  பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை ஒப்புக் கொள்ள மறுத்து, மும்பையில் டிசம்பர் 1992 முதல் ஜனவர் 1993 வரை இரு மாதங்களுக்குத் தொடர்ந்து பெரும் போராட்டங்களை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். 

*  ஆனாலும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் சிவ சேனை குண்டர்களும், தலைவர்களும் இஸ்லாமியர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள் என்று உறுதியாகக் கூறியது.

இவ்வளவு நேர்மையான ஒரு அரசியல் தலைவர் இறந்திருக்கிறார். நாடு முழுவதும் சோகத்தைக் கடைப்பிடிக்கணும் என்கிறார்கள் சிலர். ஏனெனில் இறந்த ஒரு மனிதன் மேல் உங்களுக்கு ஏன்  இத்தனை எதிர்ப்பு என்கிறார்கள்.

இப்படியே போனால் நாளை தாவூத் இறந்ததும் அரைக் கம்பத்தில் கொடியை இறக்கி, இதைப்போல் அஞ்சலி எல்லாம் போடுவார்களா என்றொரு ஐயம். அதனால் தான் இந்தக் கேள்வியை இங்கே கேட்டுள்ளேன்.

 பதில் தெரிந்தவர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ..... அஞ்சலியா ... அப்பாடா! - இரண்டில் எதைப் போடுவது?


*

Markandey Katju is Chairman, Press Council of India.
இன்றைய - 19.11.12 - இந்துவில் ியர் ியட்டுரின் கைசி வாக்கியம் ஒன்று பும். அந்தாக்கியம் .....
Hence I regret I cannot pay any tribute to Mr. Bal Thackeray.

*
 20.11.12 THE HINDU:
இன்று இந்துவில் 3 நல்ல கட்டுரைகள்:
பார்க்க ....
1.Katju blasts arrest of women who commented on FB
2. An authentic Indian fascism
3.'Mumbai shuts down due to fear, not respect'

*



28 comments:

  1. வணக்கம்,
    அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சிவாஜி மீது பித்து கொண்ட மக்களை, தனது அரசியல் நலனுக்கு பயன்படுத்தினார். அரசியலில் ஒரு எதிரியைக் காட்டி எல்லாவற்றுக்கும் அவனே காரணம் என் சொல்வதுதான் பிழைக்கும் வழியாகும்.

    தாக்கரே அரசியலில் எதிரிகளை 1,தென் இந்தியர்கள்,2 கம்யுனிஸ்டுகள்,3.மத சிறுபான்மையினர் என கால்த்துக்கு ஏற்ற படி மாற்றி வந்தார்.

    இரு வாரிசுகளின் போட்டியில் என்ன நடக்குமோ ,யார் எதிரி ஆவார்களோ அதுவே அஞ்ச‌லியா,அப்பாடாவா என புரிய வைக்கும்.

    ஆகவே இப்போது எதுவும் சொல்ல முடியாது!!

    நன்றி

    ReplyDelete
  2. அஞ்சலி !!!

    (அவர் இந்திய பாகிஸ்தான் கிரிகெட் பார்க்காமல் சென்றதற்காக ...!!!)

    அமைதியும் சமத்துவமும் எங்கும் மலரட்டும் .....

    நன்றி !!!

    ReplyDelete
  3. Tricolour on the body who has no respect to it. Perhaps to realise the body atleast.

    ReplyDelete
  4. தருமிய்யா,

    அய்யோடான்னு சொல்ல வச்சிட்டிங்க :-))

    நம்ம நாட்டில் எதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் போது இதெல்லாம் சகஜம் தானே.

    அவருக்கு சிலை வச்சு, தேசிய விடுமுறை எல்லாம் அறிவிப்பாங்க ,அதையும் பார்க்கத்தான் போறோம்.

    ReplyDelete
  5. சொன்னால் கோபப்பட மாட்டீங்க தானே.

    அவர் கடந்து வந்த வாழ்க்கையில் அவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார் என்பதே நீங்க நைஸா இந்துவில் இருந்து சுட்டிக் காட்டிய விசயங்களில் இருந்தே புரிகின்றது.

    நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி.

    சாதியை ஒழித்தே ஆக வேண்டும் என்று தந்தை பெரியார் கடைசி மூச்சு இருக்கும் வரை பாடுபட்டார். தற்போதைய திராவிடர் கழகம் வீரமணி அவர்களின் கொள்கையும் நோக்கமும் தான் என்ன?

    மதவாதம் தேவையில்லை என்று சொன்ன கலைஞர் கூட பாரதிய ஜனதா கட்சியோடு தான் கூட்டணி வைத்தாரே?

    சிவசேனை முன்னெடுத்த பிராந்தியவாதம் அல்லது மராட்டியர் நலன் என்று எடுத்துக் கொண்டாலும் இங்கே திருமா,கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ராமதாஸ் சொன்ன கருத்துக்கள் இங்கே எடுபடவில்லையே ஏன்? அவர்கள் சமூக மக்களே அவர்கள் கட்சிக்கு ஓட்டுப் போட முன்வருதில்லையே ஏன்?

    அப்பட்டமாக நீங்க சொல்ல வருவது தாதா போல நாகரிக அரசியல்வாதி என்ற போர்வையில் இருந்தார் என்கிறீர்கள்? இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு அரசியல் தலையை அப்படி இல்லை என்று நம்மால் கூறமுடியுமா?

    அவர் வெளிப்படையாக இருந்தார்
    மற்ற அத்தனை பேர்களும் மறைமுகமாக இருக்கிறார்கள். இது தான் எனக்குத் தெரிந்த வித்யாசம்.

    அவர் தொழில் அதிபர்களுக்கு குண்டர் படை மூலம் உதவி புரிகின்றார் என்றால் இவர்கள் கமிஷ்ன் வாங்கிக் கொண்டு முறையற்ற வழியில் மக்களின் நலத்தை அவர்கள் சூறையாட அனுமதி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    வித்யாசம் என்ன?

    அவர் பேசிய பல கூட்டப் பேச்சுகளை டாக்மெண்டரி மூலம் பார்த்தேன். அப்பட்டமான மதவாதம். சந்தேகமே இல்லை.

    ஆனால் சாதியை ஆதரிக்காத, மதத்தை மறைமுகமாக ஆதரிக்காத ஒரு தலையை இந்திய அரசியலில் காட்டுங்க.

    நானும் உங்களைப் போல அப்பாடா என்று கையைத் தூக்குகின்றேன்.

    ReplyDelete

  6. //இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு அரசியல் தலையை அப்படி இல்லை என்று நம்மால் கூறமுடியுமா?//

    நம் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரே மாதிரிதான். so what?

    இப்போ கேள்வி: இவருக்கு அஞ்சலியா .. அப்பாடாவா?

    அதுக்குப் பதில் சொல்லவேயில்லையே நீங்க ...!

    ReplyDelete
  7. Periyar, ambedkar is also dead.. but still vengence and propaganda against them continues..

    so nothing harm in appaadaa.. let us continue calling a spade, a spade.

    ReplyDelete
  8. அப்பாடா

    எல்லாம் கொடுக்கல் வாங்கல் முடித்துக் கொண்டு சனி அன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அது

    மும்பய் மக்கள் வெளியே தலை காட்டவில்லை, அது தெரிவிக்கவில்லையா உங்களுக்கு அப்பாடா?

    இந்திராவால் வளக்கப்பட்டு, தனி ஆர்வத்தனம் செய்தவர்.

    மணிரத்தினத்தின் பம்பொய் கூட சகிக்காதவர்

    மும்பயின் ஓட்டத்தை இரண்டு விஷயம் முடக்கும் என்றார்கள் நான் சந்தித்த மும்பய் மக்கள்

    ஒன்று அப்பாடா?
    மற்றொன்று மழை

    அப்பாடா என்று இருக்க முடியுமா என தெரியவில்லை நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே அதை தொடர்வார் என்றே தெரிகிறது

    ReplyDelete
  9. இப்படியும் போடலாம்...
    அம்மாடி!

    ReplyDelete
  10. அடி வயிற்றிலிருந்து பொங்கி வரும் விடுதலை உணர்வு கலந்த சந்தோசத்தை முகத்தில் காட்ட முடியாமல் சோகமாக நடிக்கிறார்கள் பல மும்பைவாசிகள்.

    ReplyDelete
  11. முடிஞ்சது முடிஞ்சி போச்சி...

    ReplyDelete
  12. அப்பாடா!

    இங்கே அப்பாடா போடும் நண்பர்களே. கொஞ்சம் உஷார். இந்த லிங்க் ஐ கிளிக்கி பாருங்கள்.

    http://tamil.oneindia.in/news/2012/11/19/india-woman-arrested-posting-anti-thacker-comment-facebook-164872.html

    ReplyDelete
  13. Alien A
    அட போங்க Alien. கட்ஜுவைக் கைது செஞ்சிட்டு நம்ம கிட்ட வரட்டும்.

    இன்றைய - 19.11.12 - இந்துவில் நீதியரசர் கட்ஜு எழுதிய கட்டுரையின் கடைசி வாக்கியம் ஒன்று போதும். அந்த வாக்கியம் .....

    Hence I regret I cannot pay any tribute to Mr. Bal Thackeray.

    ReplyDelete
  14. //ramachandranusha(உஷா) said...

    உதயம் :-)))//

    ஒரு நம்பிக்கை .. குறையும்னு ..

    ReplyDelete
  15. கட்ஜூவின் கட்டுரை நன்றாக இருந்தது.
    அப்பாடா போட வேண்டுமென்றால் பல அப்பாடாக்கள் வெயிட்டிங்'கில் இருக்கின்றன.

    ஜோதிஜி சொல்வதும் உண்மை என்பதை இங்கே சொல்லி வைக்கிறேன்..:))

    ReplyDelete
  16. ஜோதிஜியின் ஒவ்வொரு எழுத்தையும் எதிர்க்கிறேன். ஒரு மேலெழுந்தவாரியான வாக்குவாதமாக உள்ளது.

    ‘உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்’!!!!!!

    ஃ யாரும் யார் மீதும் கல்லெறியக்கூடாது.

    ஒத்துவரவில்லை.

    ReplyDelete
  17. நீங்களே சரியா பதில் சொல்லிட்டீங்க.

    நன்றிங்கோ.

    ReplyDelete
  18. இதில் அஞ்சலியா (sympathy), அப்பாடா (relief) என்று பார்பதை விட அப்பாடா (happy) என்றுதான் பார்க்க வேண்டும். இந்த சந்தோஷம் பால் தாக்கரே இறந்ததற்காக அல்ல, பால் தாக்கரேயின் கொள்கையால், இந்திய அரசியலைப்பு நிறுவனங்கள் எந்தச் சேதாராமும் அடையாமல் இன்னும் நிலைத்திருப்பதற்கு.

    நண்பர் ஜோ.தி. சொல்வதை இப்படியும் எடுக்கலாம்- பால் தாக்கரேவிற்கு அப்பாடா என்றால், இறந்து போன இன்னும் இறக்கப் போகும் அவரைப்போல மறைமுகமாக இருக்கும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பாக நாமும் அப்பாடா போடத்தான் வேண்டும்.

    தாக்கரேவாவது பராவாயில்லை, நான் இப்படித்தான் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறிவிட்டார், எந்த ஒரு எதிர்வினைக்கு அஞ்சாமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை அளிக்க செய்ய வேண்டியவர்கள், அவ்வாறு செய்யாமல்- அவர்களும் அவர்களின் கூட்டாளிகளும், அஞ்சலி செலுத்த தேவையில்லை அப்பாடா என்றால் அவர்களுக்கும் அப்பாடாதான்.

    நாம் சாதாரண குடிமகன்கள், நமக்கு தாக்கரேவின் மரணத்தை பற்றி கருத்து கூற உரிமையுண்டு - நாம் ஆதரித்த அரசிய்லவாதிகள் கொள்கைகள் தாக்கரேவை போல இருந்தால்- மன குற்றணர்வுடன்.

    தாக்கரேவின் மரணம் எனக்கு ஒரு சம்பவம் தான். ஆனால் இந்திய கிராமிய பண்பாட்டின் படி பார்த்தால் தாக்கரேவின் மரணம்- I am sorry for the man.

    ReplyDelete
  19. very clever.If we write about living celebrities we will be arrested.So here after we have to write like this only.
    kalakarthik

    ReplyDelete
  20. very clever.If we write about living celebrities we will be arrested.So here after we have to write like this only.
    kalakarthik

    ReplyDelete
  21. karthik-amma,

    நீங்கள் சொன்னது புரியவில்லை..!

    ReplyDelete
  22. என்ன புரியவில்லை தலைவரே?தமிழ் உரு வேலை செய்வதில்லை.அதனால் வேறு தளத்திற்கு சென்று பதிவிட வேண்டியுள்ளது.அதுதான் தங்கள் ஆதங்கமா?
    இப்போதைய பிரபலங்கள் யாரைப் பற்றி எழுதினாலும் , பேசினாலும் டிவிட்டினாலும் கேள்வி கேட்காமல் அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளுகிறார்கள். அதனால் இறந்தவரைப் பற்றி எழுதுவது சால சிறந்தது என்கிறேன்..தங்களுக்கு புரியாததா? அறிந்தும் அறியாதவர் போல் ஏன் இந்த நாடகம்?
    கார்த்திக் அம்மா

    ReplyDelete