Wednesday, December 12, 2012

614. இலங்கைப் பயணம்... 5 - கண்டதும் .. கேட்டதும் (1)




*
முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு 
நான்காம் பதிவு
ஐந்தாம் பதிவு
ஆறாம் பதிவு
ஏழாம் பதிவு
எட்டாம் பதிவு
ஒன்பதாம் பதிவு
பத்தாம் பதிவு
பதினொன்றாம் பதிவு
பன்னிரெண்டாம் பதிவு



*

ஊருக்குள் – சிறிய ஊரோ, பெரிய ஊரோ – திரும்பும் இடமெல்லாம் எங்கும் புத்தர் நிற்கிறார் – எங்கும் எதிலும். ஒரு அரச மரத்தடி ... அல்லது ஒரு மண்டபத்திற்குள்.

* சிங்கள மொழி ப்ரம்மி எழுத்துக்களை ஒட்டி அமைந்துள்ளது.

*  சிங்கள மொழி ஒரிய எழுத்துக்களோடு தொடர்புடையது போல் தெரிகிறது. நம்முடைய ரூபாய் நோட்டுகளைக் காண்பித்தோம். அதில் உள்ள ஒரிய எழுத்துக்கள் தங்கள் எழுத்தோடு ஒட்டி வருவதாகச் சொன்னார்கள்.






*  கேரளா போல் இங்கும் வீடுகளின் தரைகள் ground level-ல் உள்ளன. மழைத்தண்ணீர் வீட்டுக்கள் நுழைந்து விடாதா என்று கேட்டேன். மேடு பள்ளங்கள் உள்ள இடம். ஆகவே தண்ணீர் ஓரிட்த்தில் நிற்காது ஓடி விடும் என்றார்கள்.

*  காட்டுக்குள் வீடுகள் – நம் கேரளா மாதிரி.

*  ஊரைச் சுற்றும் போது நம்மூர் கேரளாவிற்குள் இருப்பது போன்ற எண்ணமே வந்தது. எங்கும் பச்சைச். செடிகளும், கொடிகளும் ....

  * அதிசயம் .. ஆனால் உண்மை. பல வீட்டு சன்னல்களில் பாதுகாப்பிற்காக வைக்கும் குறுக்குக் கம்பிகளே இல்லை.

* நம்மைப் போல் வீட்டுச் சுவரெல்லாம் ஆணி அறைந்து படங்கள் தொங்கப் போட மாட்டார்கள் போலும். நான் சென்ற சில வீடுகளில் படங்களில் அறைகளின் ஒரு மூலையில் தரையில் வைக்கப்பட்டிருந்தன. (எங்க வீட்டுக்கு வந்தா மயக்கமே போட்ருவாங்க ...!)





* நான் பார்த்த நாலைந்து வீடுகள் நம் வீடுகளை விட அழகாக வைக்கப்பட்டிருந்தன. நல்ல அழகுணர்ச்சி ...

வீட்டுக்குள் ஒரு ’காடு’ !






* சிங்களவர்களிடம் ஒற்றுமை மிகக் குறைவு என்றார் தமிழ் நண்பர் ஒருவர். அட ... நம்மள விடவா அப்டின்னு நினைத்துக் கொண்டேன்.


* செவ்விளநீர் மட்டுமே விற்பனையாகிறது. விற்பனைக்குப் பச்சைத் தேங்காய் பார்க்கவேயில்லை. அதை அவர்கள் குடிப்பதில்லை என்று சொன்னார்கள்.

*  மூன்று முறை இளநீர் குடித்தேன். அடடா ....! அப்படி ஒரு சுவை.


இந்த விளம்பரம் நன்றாக இருந்தது.

*  சில பெண்களை மட்டும் சேலையில் பார்த்தேன். நல்ல வேலையில் உள்ள பெண்கள் சேலையில் வேலைக்குப் போவார்களாம்.

* இலங்கைப் பெண்கள் சேலை கட்டுவது பார்க்க  அழகாக இருந்தது. ஏதேதோ frills முன்னும் பின்னும் வைத்துக் கட்டியிருந்தார்கள். அதை ஒரு புகைப்படம்  எடுக்க ஆசைதான் .... :(
ஒரு வயதான மலையாளப் பெண்ணும், ஓரிளம் சிங்களப் பெண்ணும் போல் இவர்கள் தோன்றவில்லையா?



திருமணத் தம்பதிகளை திருமண உடையில் படமெடுக்க இந்த சோலைக்கு அழைத்து வருகிறார்கள். ில ம்பிகை அன்ு சோலையில் பார்த்ேன். பக்கத்தில் போய் படமெடுக்க எனக்கு மட்டும் ஆசையில்லையா ... என்ன..?

* பெண்களின் மார்பகங்கள் நம் ஊர்களில் மாதிரி ஒரு காட்சிப் பொருளாவதில்லை என்று தோன்றியது. இதற்குக் காரணம் நம் ஊர் பெண்களின் ’மனோதத்துவம்’  தான் என்று தங்க்ஸிடம் விவாதித்தேன்.

*  இலங்கை முழுவதுமே நல்ல மழைப் பகுதிதான். நாங்கள் இருந்த நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வந்து இரு நிலைகளையும் நாங்கள் அனுபவிக்குமாறு இருந்தது.

*  தழிழல்லாதவரின் பல முகங்களும் எந்த வேற்றுமையும் இல்லாமலிருந்த்து. முகங்களை மட்டும் வைத்து தமிழர், சிங்களவர் என்று அடையாளம் காண்பது கஷ்டமோ?

*  எங்கிருந்து நீங்கள் இங்கே வந்தீர்கள் என்று சில சிங்கள நண்பர்களைக் கேட்ட போது, இந்தியவிலிருந்து தான் என்றார்கள்.

* ஒரியாவிற்கும் இந்த நாட்டின் வரலாற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு போலும்.

*  அந்நியரைப் பார்த்தும் முகம் பார்த்து சிரிப்பதைப் பரவலாகப் பார்த்தேன்.

* அதைவிட security ஆட்கள் பலரும் (என்னைப் பார்த்ததும்) மிகவும் அகலமாகச் சிரித்தார்கள்! விமானத் தளத்திலிருந்து இதைத் தொடர்ந்து அனுபவித்தேன்.

  * நாட்டின் வரலாற்றைப் பார்க்கலாமென நினைத்து அங்க்ங்கே இருந்த நூல் விற்பனைக்கூடங்களுக்குச் சென்ற போது பெரும் ஏமாற்றம். அப்படி புத்தகங்கள் அதிகம் இல்லை. இருக்கும் ஓரிரண்டும் வெறும் கற்பனைக் கதைகள் நிரம்பிய myths ஆகத் தான் இருந்தன.

*  Famous Sri Lankan personalities என்றொரு புத்தகம் பார்த்தேன். நம்ம சிவாஜி அட்டைப்படத்தில் இருந்தார். மாலினி பொன்சேகா என்ற நடிகையோடு நம்ம திலகம் பைலட் ப்ரேம்நாத் என்ற படத்தில் நடிச்சிருக்கார். அந்தப் படம் அட்டையில் இருந்தது      



*  எங்கு பார்த்தாலும் நல்ல சாலைகள்.

* சாலைகள் எல்லாமே மிகச் சுத்தம். எங்கும் குப்பை கூளங்கள் காணவில்லை.

* அதுவும் சுற்றுப் பயணிகள் அதிகம் வரும் பழங்கால இடங்களை மிகவும் அழகாக, சுத்தமாகப் பேணி வருகிறார்கள்.

* பெரிய ஊர்களை விட்டு சிறிய எஸ்டேட் பகுதிகளுக்குப் போன போதும் அங்கும் மிக நல்ல சாலைகள் இருந்தன.




*  எல்லா சாலைகளும் போடுவது சைனாக்காரன்.

* ரோடு போடும் செலவில் அவனுக்குப் போவது பாதி; மீதிப் பாதி அரசியல்வாதிகளுக்கு!


*  தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களச் சிப்பாய்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து அங்கு குடியேற்றுகிறார்கள்.

*  இந்த நிலத்தை நாலைந்து ஆண்டுகளில் அவர்கள் தமிழர்களுக்கே விற்று விட்டு சிங்களப் பகுத்திக்குள் சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமாம்

*  இப்படிக் குடியேறும் மக்களும் இன்னும் ஒரு வித அச்சத்தோடு தான் குடியேறுகிறார்கள்.

*  எல்லா இஸ்லாமியரும் தமிழர்கள் தான்.

*  ஆனால் அவர்கள் இஸ்லாமியர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

* பல அரசியல் முடிவுகளில் தமிழருக்கு எதிராகவும், சிங்களவருக்கு அனுசரணையாகவுமே அவர்கள் முடிவெடுப்பது பழக்கம்.

* இலங்கை முழுவதுமே நல்ல மழைப் பகுதிதான். நாங்கள் இருந்த நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வந்து இரு நிலைகளையும் நாங்கள் அனுபவிக்குமாறு இருந்தது.





இன்னும் சில நிழற்பட்ங்கள் ------>  இங்கே ....

11 comments:

  1. போக எண்ணியிருக்கும் ஊர். தொடர்ந்து வாசிக்கிறேன்;

    இத்தொடரின் மற்ற பகுதிகளும் வாசித்தேன். சிறு சிறு குறிப்புகளாக எழுதும் விதம் சுவையாக உள்ளது

    தொடருங்கள்!

    ReplyDelete
  2. //பல அரசியல் முடிவுகளில் தமிழருக்கு எதிராகவும், சிங்களவருக்கு அனுசரணையாகவுமே அவர்கள் முடிவெடுப்பது பழக்கம்.//

    அந்த அளவு புலிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தவறு முஸ்லிம்களிடத்தில் அல்ல. புலிகளிடத்தில்.

    ReplyDelete
  3. //தவறு முஸ்லிம்களிடத்தில் அல்ல. புலிகளிடத்தில்.//

    சு.பி.,
    கோழி மொதல்ல வந்துச்சா ... முட்டை மொதல்ல வந்துச்சா ... ?

    ReplyDelete
  4. //எல்லா இஸ்லாமியரும் தமிழர்கள் தான்.
    ஆனால் அவர்கள் இஸ்லாமியர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்//

    என்னத்தை சொல்வது! ஆனா தமிழ்நாட்டு சுபி அப்படியல்ல. தன்னை தமிழராகவே சொல்லி கொள்வார். கைபர் கணவாய் வழியாக எதிரிங்க வந்து தமிழனை தாக்கிவிட்டார்கள் என்று பொங்குபவர்.
    காத்தான்குடி என்று இலங்கையில் ஒரு தமிழ் நகரம் இருக்கிறதாம்.அங்கே உள்ள தமிழர்களின் மதம் இஸ்லாம் தங்களை அரபியர்களாகவே (தாடி உடை)கற்பனை பண்ணி மகிழ்வார்களாம். பேசுவது மட்டும் தமிழ். பேரீச்ச மரமே உண்டாக்கியிருக்காங்க. இலங்கையின் உத்தியோகபூர்வமான மொழியே இல்லாத அரபியில் வீதிகளின் பெயர்கள் எழுதி வைத்து மகிழ்கிறார்களாம் உங்க 12வது படத்தில் வரும் 5வது ஒழுங்கை என்று மூன்று மொழிகளில் மட்டுமே பெயர்பலகை இருக்க வேண்டும்.இலங்கை அரசும் இவர்கள் எப்போதும் அரசை ஆதரிப்பதால் இதை கண்டுக்காம விட்டுவிட்டது.

    ReplyDelete
  5. படங்களும் குறிப்புகளும் சுவாரஸ்யம். தொடருங்கள்.

    ReplyDelete
  6. இன்னொன்று சு.பி.
    புலிகளால் பாதிக்கப்பட்டார்கள் என்றால் புலிக்கு எதிராகத் திரும்பலாம். ஆனால் தமிழர்களுக்கு எதிராகவா திரும்புவது.

    ஆனாலும் ‘எல்லாமே’ உங்களுக்கு நியாயம் தான்!

    ReplyDelete
  7. அருமையான நியாயம் நிறைந்த ஒரு கேள்வியை சுபியிடம் கேட்டீர்கள் ஐயா. அவர்களுக்கு தான் நியாயமா சிந்திக்க அனுமதியில்லையே.

    ReplyDelete
  8. யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு, திருகோணமலை போகவில்லையா?

    ReplyDelete
  9. எஸ் சக்திவேல்

    போக ஆசை தான்,. ஆனால் முடியாது போயிற்று. இழப்பு தான்.

    ReplyDelete
  10. இலங்கை முஸ்லீம்களும் தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தமிழர்கள் அல்ல.

    அவர்கள் அரபியாவிலிருந்து இங்கே வந்து தங்கியவர்கள். முதலில் அரபி பேசியவர்கள். ஆனால், தமிழே அன்றைய வணிக மொழியாக இருந்தமையால், தமிழும் பேசியவர்கள். (இன்றைக்கு ஆங்கிலம் இருப்பது போல) அவர்கள் பிறகு அரவி என்று மொழியை (அரபியும் தமிழும் கலந்த மொழி) தங்கள் பள்ளிகளில் சொல்லித்தந்தார்கள். பிறகு அது வழக்கொழிந்துவிட்டது.

    இலங்கை, தமிழ்நாடு, கேரளா ஆகிய பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்கள் அரபி வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

    http://www.missionislam.com/knowledge/srilanka.htm

    அதனால், இலங்கை முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று தனியே பிரித்துகொள்வது சரியானதுதான். ஆனால், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் செய்வது தக்கியா.

    தமிழ்நாட்டு முஸ்லீம்களில் மரைக்காயர்கள் லெப்பைகள் ஆகியோர் அரபிகள். ராவுத்தர்கள் எனப்படுபவர்கள் மதுரையை ஆக்கிரமிக்க வந்தவர்களின் வழித்தோன்றல்கள். இவர்கள் துருக்கிய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate

    ReplyDelete
  11. இலங்கை முஸ்லீம்களும் தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தமிழர்கள் அல்ல
    தமிழ்நாட்டு முஸ்லீம்கள் செய்வது தக்கியா
    ராவுத்தர்கள் எனப்படுபவர்கள் மதுரையை ஆக்கிரமிக்க வந்தவர்களின் வழித்தோன்றல்கள்

    நிறையவே சிந்திக்கவைத்துள்ளீர்கள். நன்றி நிலா நிலவன்.

    ReplyDelete