Sunday, January 06, 2013

625. தோரணம்: I STAND FOR CAPITAL PUNISHMENT





*


 நிறைய இதைப் பற்றி வாசித்தாகி விட்டது; பேசியாகி விட்டது; யோசித்தாகி விட்டது. என் முடிவில் மாற்றமேதுமில்லை.

I STAND FOR CAPITAL PUNISHMENT

என் வரிப்பணத்தில் ஓசிச் சோறு யாருக்கும் போட வேண்டாம். ஆயுள் தண்டனை என்பது ஒரு பெரிய போங்காட்டம். காவல் துறையினர் மேல் ஏதும் தவறு என்றால் அவர்களை suspend செய்து விட்டதாக ஒரு செய்தி தினசரிகளில் வரும். அது மாதிரியான போங்காட்டம் தான் இந்த ஆயுள் தண்டனையும்.

உக்காரவைத்து சில நாய்களுக்குச் சோறு போட்டு வளர்ப்பது தான் ஆயுள் தண்டனை. சமீபத்தில் டெங்கு காய்ச்சலில் இறந்து போன ...ஓ! சாரி ... சாரி ... தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கஜாப்பிற்கு அவனை சிறையில் பத்திரமாக வைத்திருக்க லட்சக் கணக்கில் செலவழித்தார்களாம். நம்ம காசுக்கு இப்படி ஒரு தலைவிதியா?

எவனும் திருந்தப் போவதில்லை.
ஆசிட் ஊற்றும் நாய்களுக்கு மிஞ்சிப் போனால் நாலைந்து வருட தண்டனை என்பது மிகக் கொடூரம்; அநியாயம். கொடூரக்காரர்களை வைத்து அழகு பார்க்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.

போட்டுத் தள்ளு !

 =======================

அருணா என்ற கர்நாடக நர்ஸ் 1973-ம் வருஷம் ஒரு வார்டு பாயினால் கற்பழிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை ஜடமாக கோமாவில் இருக்கிறாள். அவளுக்காக இறஞ்சப்பட்ட Euthanasia-வும் நீதி மன்றத்தால் புறந்தள்ளப்பட்டு விட்டது.

ஆனால் அவளக் கற்பழித்தவன் பெண்டு பிள்ளைகளோடு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

=======================

விஸ்வரூபம் படம் எப்படியிருக்குமோ ...ட்ரைலர் (D.T.H., DISTRIBUTION, THEATRES....) இதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. படம் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கமலின் குணா படம் பார்த்ததும் இதே ஆசை வந்தது. அதற்காகவே ஒரு கட்டுரை அந்தக் காலத்தில் எழுதி ஆ.வி.க்கு அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. அந்தக் கட்டுரையை மறுபடி நினைவிலிருந்து என் பதிவுகளில் எழுத ஆசை.
எழுதணும்.

 ========================

தெய்வமகனில் சிவாஜி செய்த சின்னப் பையன் ரோலை வேறு யார் செய்தாலும் நன்றாக இருக்காது என்பது என் திண்ணிய எண்ணம். கொஞ்சம் மாறுபட்டால் அது ஒரு தவறுதலாக ஆகக்கூடிய கேரக்டர் அது. ஆனால் இப்போது விஸ்வரூபத்தில் கமல் நடன போஸ் ஒன்று கொடுக்கிறாரே .. ஒரு feminine touch-உடன் இருக்கும் அந்த ஸ்டில் பார்க்கும் போது தெய்வமகன் கேரக்டர் நினைவுக்கு வருகிறது.

========================


17 comments:

  1. மரண தண்டனை வேண்டும் என்பது தான் என் கருத்தும். உங்கள் அளவு அடித்து சொல்லாட்டியும், சில நேரங்களாவது அது தேவை என்று நம்புகிறேன்

    ReplyDelete
  2. அப்பாடா .. ஒரு வழக்கறிஞர் என் பக்கம் நிற்கிறார்னு ஒரு தைரியம் வந்திருச்சி ..

    நன்றி

    ReplyDelete
  3. இந்தக் கருத்து வலுத்து வருவது கூட
    நல்ல அம்சம்தான் என நினைக்கிறேன்
    ஒரு நிரபராதி தவறுதலாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது
    என்பதற்காக ஆயிரம் கயவர்களைக் கட்டிக் காப்பது ஏன்
    என ஒரு புது மொழி இனி பிறந்தாலும் பிறக்கலாம்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. தருமி சார் இந்த விஷயத்தில் நானும் உங்கள் பக்கம்தான் என்பதை நினைவில் கொள்க

    ReplyDelete
  6. மரண தண்டனை - குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண்ணமா? அல்லது பிறர் அக் குற்றத்தை தொடர கூடாது என்ற எண்ணமா?

    தொடர கூடாது என்ற எண்ணமாயிருந்தால் .............

    தில்லி சம்பவத்திற்கு பிறகு அவ்வகையான குற்றங்கள் பெருகி வருகின்றன, அல்லது ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன விழிப்புணர்வால். ஆனால் அவ்வகை குற்றங்கள் குறையவில்லையே.

    அதே சமயம் அப்படிபட்டவர்கள் குடும்பம், பிள்ளைகள் என வாழ வேண்டும் என்பதல்ல. மக்கள் வரிபணத்தில் வாழ வேண்டும் என்பதல்ல.

    உயிர் மட்டும் இருக்கட்டும், உழைத்து வாழட்டும் ஆனால் கண்காணிப்பில்

    மிருகங்கள் காடுகளில் இருக்கின்றன. இவர்களும் அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்

    ReplyDelete
  7. //குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண்ணமா? அல்லது பிறர் அக் குற்றத்தை தொடர கூடாது என்ற எண்ணமா?//

    இரண்டும் இல்லை. எந்தக் குற்றத்திற்கும் தண்டனை உண்டு. தண்டனைகள் யாரையும் திருத்துவதில்லை என்பதையும் உணர்க.

    //அவ்வகை குற்றங்கள் குறையவில்லையே.//

    எப்படி குறையும்? அருணா கேஸ் பற்றிச் சொன்னேனே .. அதிலேயே பதில் இருக்கிறதே! மூணு வருஷம் நாலுவருஷம் தண்டனை ..ப்பூ... போற போக்குல போய்றாது? ஆனால் வெகு கடும் தண்டனை என்றால் .... நிச்சயம் குற்றங்கள் குறையும்.

    ஒரு அரசுப் பேருந்தில் ஓட்டுனரால் ஒரு விபத்து. கைப்பேசி வைத்து பேசிக்கொண்டு எங்கேயோ மோதுகிறான். அவனுக்கு தண்டனை இல்லையென்பது தான் இப்போதுள்ள நிலை. இது தேவையில்லை. எந்தக் குற்றத்திற்கும் தண்டனை தேவை.

    //அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்//

    சைபீரியாவில் இப்படிப்பட்ட தண்டனை உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இங்கே நடப்பது அப்படியா? என் சிறை வாசத்தில் நான் பார்தது - பணக்காரக் குற்றவாளிக்கு எல்லாம் கிடைக்கிறது.

    ReplyDelete
  8. ஜெயிலில் போடுகிறார்கள் குற்றங்களுக்காக. இதில் என்ன A class ... B class ...!

    ReplyDelete
  9. அருணா......மறுக்கவில்லை நானும் குற்றம் புரிந்தவன் குடும்பம் என்ற சூழலில் வாழ வேண்டும் என சொல்லவில்லை.

    ஆனால் டில்லி சம்பவத்திற்கு பிறகு அசாமில் காங்கிரஸ் கட்சியின் கிழவன் வீடு புகுந்து கற்பழிக்கிறான்.

    மிருகங்கள் மாறப் போவதில்லை என்பதால்தான் காட்டில் வாழட்டும் என்றேன்.

    கட்டிய மனைவியை கொலை செய்ய நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நாலு வருடமா நாற்பது வருடமா என்பதை காட்டிலும்

    வாழ்க்கை முழுவதும் குடும்பம், நண்பர்கள் என்ற அமைப்பு சாராமல் வாழுகின்ற தண்டணையோடு வாழ வைக்க வேண்டும்

    என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    அது அந்தமான் சிறையாகவும இருக்கலாம் அல்லது சைபீரிய பனி பிரதேசமாகவும் இருக்கலாம். எங்கிருந்தாலும் உழைத்தால்தான் உணவு என்றிருக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  10. பணக்கார குற்றவாளி எல்லாம் கிடைக்கிறது..

    உண்மைதான்.

    தவறு செய்யும் போலீஸை 12 வருடம் உள்ளே வைத்து பாருங்கள். ஆனால் இந்த அமைப்பில் இது சாத்தியமில்லை.

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா,
    நான் மரண தண்டனை தேவையில்லை என்ற கருத்துக் கொண்டு இருந்தாலும், மாற்று தண்டனைகள் சரியாக நம் நாட்டில் பாரப்டசமாக நிறைவேற்றப் படுவது என் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

    மரண தண்டனை வேண்டாம் என்றால் நீண்ட கால தண்டனையும் பாரப்ட்சமின்றி ,கடுமையாக வழங்கும் சூழல் இருந்தால் மட்டுமே சாத்தியமோ!!

    அந்தமான் சிறைக்கு சென்றால் முன்பு அவ்வளவுதான்.ஆனால் சிறை செல்லும் பணம் உள்ளவர்களுக்கு
    " குறை ஒன்றும் இல்லை..." எனப் பாடாத குறைதான்.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நன்றி!!

    ReplyDelete
  12. நான் உங்கள் பக்கம் தருமி. அந்தப் பெண் கேட்டதும் அதுதான்.

    தன்னைக் கொல்லவரும் எதையும் கொல்ல நமக்கு உரிமை உண்டு.

    ReplyDelete
  13. //அமைப்பு சாராமல் வாழுகின்ற தண்டணையோடு வாழ வைக்க வேண்டும்.//
    //இவர்களும் அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்//

    இவை எல்லாம் நடக்கப் போவதில்லை. அதனால் தான் கடும் தண்டனை அவசியம என்கிறேன்.

    //எங்கிருந்தாலும் உழைத்தால்தான் உணவு என்றிருக்கவும் வேண்டும்.//

    ஆஹா ... இதற்கு என் முழு ஆதரவு.

    ReplyDelete
  14. வல்லியம்மா,

    நீங்கள், ஒரு வழக்கறிஞர், அவர்கள் உண்மைகள், ரமணி

    கருத்துக்கு உரம் சேர்த்தமைக்கு நன்றி

    ReplyDelete
  15. வல்லி சிம்மன்

    தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு

    ஆனால் இங்கே தூக்கு என்பது சட்டத்தால் தரப்பட வேண்டும் என்பதால்தான் எனது ஆட்சேபனை.

    பாதிக்கப்பட்ட பெண் எதிர்த்து தாக்கி எதிரி மரணமடைந்திருந்தால் மகிழும் நபர்களில் நானும் ஒருவன் ஆனால் அத்தகைய வாய்ப்பு இல்லையே, மேலும் குழு தாக்குதல் வேறு.

    உச்ச நீதி மன்றம் ஒரு கற்பழிப்பு வழக்கில் வழங்கிய தீர்ப்பு, குற்றம் சுமத்தப்பட்ட நபர் வெள்ளையாக இருக்கிறார், பணக்காரராக இருக்கிறார் அவர் அந்த குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்று அவரை விடுதலை செய்கிறது.

    பாதிக்கப்பட்ட நபராக நீங்கள் இருந்தால் யாரை கொல்ல வேண்டும் என நினைப்பீர்கள்.

    சார்வாகனுக்கும் உடன்பாடில்லை, அதாவது இந்த அமைப்பில் இதெல்லாம் சாத்தியமில்லை.

    அமைப்பைதான் மாற்ற வேண்டும்

    யார் செய்வது?...........

    தருமி அய்யா

    மேற்கண்ட கூற்றுகளின்/பின்னுட்டங்களின் படி தங்கள் எண்ணம் எண்ணமாகதான் இருக்கும் செயலாக்குவது கடினம்

    அப்படியே எனது கருத்துக்களும்

    செயலாக்குவது எப்படி, பின்னுட்டம் இடுங்கள் மக்களே

    ReplyDelete
  16. அ.மார்க்ஸ் ஐயாவுக்கு இந்த லிங்க் பார்சேல்...

    என்னை கேட்டால் மரண தண்டனையை விடவும், ஆயுள் முழுக்க சிறை + ரசாயன முறையில் ஆண்மை பறிப்பு என்பதே சரி என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  17. s.selvaraj writes,

    தண்டனை கொடுத்தால் ... ஒன்று திருந்த வேண்டும் அல்லது குற்றம் குறைய வேண்டும்...

    இதற்கு தங்கள் பதில் அழகாய் உள்ளது...

    குற்றத்திற்கு தண்டனை அவ்வளவுதான்.....

    Hanging is the most economical punishment both for the criminal and society..(for crimes such as happened in Delhi)

    and the juvenile should be determined by the acts... not the date of birth.. he should be punished the same way.

    another thing in our country is that these criminals get medical certificate and say they are mentally ill etc...
    All these non sense should stop... They should be hanged without exception... in fact expeditiously...

    s.selvaraj

    ReplyDelete